Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தத்தின் பாதிப்புக்களை மீளக்கட்டியெழுப்புவதற்கு இதய சுத்தியுடன் இணையுமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ஸ் அழைப்பு

Featured Replies

யுத்தத்தின் பாதிப்புக்களை மீளக் கட்டியெழுப்பவும் கடந்த காலங்களில் வடக்கு மாகாண மக்களுக்கு கிடைக்காதவற்றை பெற்றுக் கொடுப்பதற்கு உள்ளங்களில் இருக்கும் அளுத்தங்கள் இறுக்கங்கள் குறைகள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு இதய சுத்தியுடனும் திறந்த மனத்துடனும் குறைகள் தவறுகளை நேரில் சுட்டிக்காட்டுபவர்களாக என்னுடன் இணையுமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ஸ் தெரிவித்தார்.

DSC_0242.JPG

வடமாகாண ஆளுநராக இன்று  உத்தியோக பூர்வமாக கடமை ஏற்றுக் கொண்ட பின்னர் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

வவுனியா மாவட்டத்தில் இருந்து அரசாங்க அதிபராக வெளியேறியபோது லேசான இதயத்துடன் வெளியேறியிருந்தேன். ஏனெனில் எனக்கு அளிக்கப்பட்ட கடமைகளை நிறைவாக செய்தே வெளியேறியுள்ளேன்.பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்திருந்தேன் அதன் மகிழ்ச்சி மனதை இலோசாக்கியிருந்தது. இன்று வவுனியா மாவட்டத்தின் ஆரம்ப இடத்தை மிதித்திருந்தபோது மக்கள் காட்டிய அன்பும் அவர்களின் ஆதங்கமும் மனதில் இருந்த பல கவலைகளும் அவர்கள் காட்டிய ஆதரவும் அதேபோல் ஆளுநர் அலுவலகத்திற்கு வந்தபோது எதிர்பார்த்திருக்காத அளவிற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அவைத்தலைவர் முதல்வர் மற்றும் உங்களது வரவேற்பு என் இதயைத்தை கனமாக்கியுள்ளது. 

ஆளுநர் பதவி இலேசான பதவியல்ல கடந்த ஒன்றரை மாத காலமாக புதிய ஜனாதிபதி பதவியேற்றதில் இருந்து பல போராட்டம் இடம்பெற்று வருகின்றது இதனை ஊடகங்கள் ஊடாக நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள் பலர் தொலைபேசி ஊடாக இது உண்மையாகவா இது நடக்குமா எனக்கேட்டுக்கொண்டிருந்தார்கள். நான் என்னுடைய நிர்வாக சேவையில் இருந்து ஓய்வு பெறவில்லை. அண்மையில் கிடைக்கப்பெற்ற பதவியின் பொறுப்புக்களை ஆரம்பித்திருந்தேன் எனவே ஆளுநர் பதவி என்ற விடயத்தில் அரச அதிகாரியாக நிதானமாக சிந்திக்கவேண்டிய தேவை இருந்தது ஏறக்குறைய 35 வருட அரச சேவையில் இருந்த நான் கடைசிக்காலத்தில் நிறைவேற்றாது வெளியேறுவது என்பது எவ்வாறு இருக்கும் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். 

இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளருடன் கலந்துரையாடியதன் பலனாக எனக்குரிய அத்தனை விடயங்களையும் தாங்கள் கவனத்தில் கொள்வதாக ஜனாதிபதி அமைச்சரவைப் பத்திரத்தின் ஊடாக என்னுடைய சேவைக்கான நன்மைகளைப் பாதுகாத்துக்கொண்டு எனக்கு இந்தப் பதவியை தந்துள்ளார். ஏன் இந்தப் பதவி என்பது எனக்காக மட்டுமன்றி அல்லது நான் பதவியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல வடக்கு மாகாண மக்களின் உணர்வுகளுக்காக மக்களின் தேவைகளுக்காக ஏக்கங்களுக்காக ஜனாதிபதியால் தரப்பட்ட பதவியாகத்தான் இதனைப் பார்க்கின்றேன். 

எனவே நான் பதவியேற்றபோது எனக்குக் கூறப்பட்ட விடயம் வடமாகாண மக்கள் நிறைய வேதனைகளுடனும் வலிகளுடனும் காயங்களுடனும் இருக்கின்றார்கள். அவற்றை ஆற்றுப்படுத்தவேண்டிய தேவைதான் இருக்கின்றது.அந்த மக்களுக்கு என்ன செய்யவேண்டுமோ இது வரை என்ன கிடைக்காமல் உள்ள விடையங்களை அவற்றைஎல்லாம் செய்து முடிப்பதற்கான அதிகாரத்தையும் அதற்கான ஒத்துழைப்புக்களையும் ஜனாதிபதி செயலகம் செய்யும் என்ற உத்தரவாதத்துடன் தான் இங்கு வந்துள்ளேன். பாராளுமன்ற உறுப்பினர் கூறியது போல இந்த மண்ணின் நாடித்துடிப்புக்களை .மக்களின் உள்ளங்களை அறிந்து வைத்துள்ளேன் அரசாங்க உத்தியோகத்தர்களின் சிக்கல்களை அறிந்துள்ளேன்.

வவுனியா மாட்டத்தில் இடம்பெயர்ந்துள்ள மூன்றரை இலட்சம் மக்களையும் வவுனியா மாவட்ட மக்களையும் சேர்த்து நான்கரை இலட்சம் மக்களை அந்நியோன்னியமாகப் பார்த்திருக்கின்றேன். எனவே இந்த மாகாணத்தில் இருக்கின்ற பலருக்கு என்னைத் தெரியும் எனக்கும் பலரைத் தெரியும் அப்படியிருந்தும் கடந்த எட்டரை வருடங்களாக இந்த மாகாணத்திற்கோ அல்லது வவுனியா மாவட்டத்திற்கோ என்னால் வரமுடியாது போய்விட்டது. அதற்கான தேவை இருந்தபோதும் கடமையின் நிமித்தம் வரமுடியாது இருந்தது. சுங்கப் பணிப்பாளர் நாயகமாக நான் விரும்பாமலே அந்தப் பதவி தரப்பட்டது. வருமானத்தின் 67 வீத வருமானத்தை பெறக்கூடிய சுங்கத்திணைக்களத்தில் 2019 ஆம் ஆண்டு சுங்கத்திணைக்களத்தின் வரலாற்றில் 975 பில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டிக்கொடுத்த அதேநேரம் என்னை இடமாற்றுவதற்கு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. 

இதற்கு எதிராக வீதியில் இறங்கிய என்னுடைய உத்தியோகத்தர்கள் நான் தடுத்தும் அதனைக்கேளாது போராட்டங்களில் ஈடுபட்டு கொழும்பு மாநகரையே ஸ்தம்பிதநிலைக்குக் கொண்டு வந்து மீண்டும் அமைச்சரவைப் பத்திரத்தை மீளப்பெற்றுக்கொள்வதற்கு வழிசமைத்து மீண்டும் அப்பதவியில் என்னை அமர்த்தினார்கள் இப்போது இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டபோது உங்களுக்கான பதவி உயர்வு என்பதாலேயே நாங்கள் அமைதியாக உங்களை அனுப்பி வைக்கின்றோம் என்றார்கள். 

பின்னர் அமைச்சின் செயலாளராக பதவி ஏற்ற நிலையில் ஜனாதிபதியின் செயலாளர்களில் எத்தனையோ செயலாளர்கள் இருக்கும் நிலையில் எனக்கேன் இந்தப் பதவியைத் தந்தீர்கள் என்று கேட்டதற்கு அதற்கு சுகாதார அமைச்சில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தேவையான ஆளைத்தான் நியமித்துள்ளார். இதைப்பற்றிக் கதைப்பதற்கு ஒருவரும் இல்லை என்றார்.

குறித்த பதவியை ஏற்று நான் அங்கு சென்றபோது மருத்துவர் சங்கம் ஒரு புறம் தாதியர் சங்கம் ஒரு புறம் என பல பிரச்சினைகளை முன்வைத்தார்கள். சுமார் ஒரு மாத காலத்திற்கு அவற்றில் 70 வீதமான பிரச்சினைகளை தீர்த்து வைத்துவிட்டுத்தான்.இங்கு வந்துள்ளேன் அதில் ஒருரே ஒரு வேதனை தற்போது அமைச்சரவை அனுமதிக்கப்பட்டு அமைச்சரவைப் பத்திரம் தயாரிகக்ப்பட்டுக்கொண்டிருக்கின்ற யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இருதய சிகிச்சைப் பிரிவுக்கான கட்டடப்பிரிவு வவுனியா முல்லைத்தீவு மன்னார் வைத்தியசாலைகளுக்கான கட்டட வசதிகள் போன்றவற்றை முழுமைபெறச் செய்யமுடியாத நிலைக்கு விட்டுவிட்டு வந்துவிட்டேன் 

எனினும் அங்குள்ளவர்கள் நீங்கள் இங்கு இல்லாது விட்டாலும் நாங்கள் இதனை செய்து முடிப்போம் வடக்குமாகாண மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம் எனக்கூறியுள்ளார்கள் ஜனாதிபதியின் செயலாளர் கூறிய முக்கிய விடையம் வடக்கு மாகாணம் மட்டுமன்றி எந்த மாகாணத்தில் ஆவது முதல் நிலையில் இருக்கும் வைத்தியசாலையின் தேவைகள் கல்வித் துறையின் குறைபாடுகள் உட்கட்டமைப்பு வசதிகள் வேலை வாய்ப்பு மற்றும் விவசாயத் தேவைகளை உடனடியாக செய்து கொடுப்பதற்கான பனிப்புரையை விடுத்துள்ளார்கள். குறித்த வேலைத்திட்டங்களை விரைவில் ஆரம்பிப்பதற்கு குறித்த அதிகாரிகளுடன துணையாக இருப்பேன்.

அரசியல் கொள்கைகளுக்கு அப்பால் முரண்பட்ட கொள்கைகளுக்க அப்பால் இன மத மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் வர்க்க முரண்பாடுகளுக்கு அப்பால் ஒரு ஆளுநராக மட்டுமன்றி இந்த மாவட்டத்தின் மாகாணத்தின் ஒருவராக இருந்து செயற்படுவேன்.

இளவாலை பத்தாவத்தையைச் சேர்ந்த நான் பிறந்து வளர்ந்து பெற்றோரின் தொழில் வாய்ப்பு காரணமாக பல்வேறு இடங்களுக்கும் சென்று யாழ்.பல்கலைகக்ழகத்தில் படித்து நிர்வாக சேவையில் இணைந்து கொண்டேன் ஆனால் எனது சேவைக்காலத்தில் எனது சொந்தமாவட்டத்தில் சேவையாற்ற சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அதனை நான் கூறிவருவேன் ஆனால் சேவையைமுடித்துக்கொண்டு சேவையாற்றுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. உங்கள் அத்தனை பேருடனும் இணைந்து எத்தகைய விடையங்கள் செய்வது என்று ஜனாதிபதி செயலகத்துடனும் கலந்துரையாடி அதனை முடித்து வைப்பதற்கு இயலுமான வரை நடவடிக்கைகளை எடுப்பேன். 

உங்களுக்கும் ஜனாதிபதி செயலகத்திற்கும் இங்குள்ள மக்களும் அங்குள்ளமக்களுக்கு ஒருஇணைப்புப் பாலமாக நான் செயற்படுவேன் அங்குள்ள அத்தனை உத்தியோகத்தர்களும் வடக்கு மாகாணத்தில் உங்களுடைய கடமைகளைச் செய்வதற்கு எங்களுடை ஒத்துழைப்பு எப்போதும் கிடைக்கும் என்று கூறியுள்ளார்கள் பெரும்பான்மையின அரச அதிகாரிகள் கவலையுடன் இருக்கின்றார்கள் எப்போது வடக்கு மக்களுக்கு உதவி செய்வோம் என்று அளுத்தங்கள் விமர்சனங்களுக்குஅப்பால் முரண்பாடுகளுக்கு அப்பால் நீங்கள் அனைவரும் என்னுடன் இணைந்து செயற்படுவீர்கள் என உறுதியளித்துள்ளீர்கள் இதைத்தான் நானும் எதிர்பார்க்கின்றேன் 

உள்ளங்களில் இருக்கும் அளுத்தங்கள் இறுக்கங்கள் குறைகள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு இதய சுத்தியுடனும் திறந்த மனத்துடனும் குறைகள் தவறுகளை நேரில் சுட்டிக்காட்டுபவர்களாக என்னுடன் இணையுமாறு கேட்டுக்கொள்கின்றேன் நான் இங்கு வந்திருப்பது யாரையும் குறை செல்வதற்கு யாரையும் எனக்காக மாற்றிக்கொள்ள விமர்சிப்பதற்கும் அல்ல தள்ளி வைப்பதற்கும் அல்ல உங்கள் அனைவரிடமும் ஒரே ஒரு நம்பிக்கை இருக்கவேண்டும் மாகாணத்திற்கு சேவையாற்றத்தான் வந்திருக்கின்றேன்.

பிள்ளைகள் கொழும்பில் படிக்கின்றார்கள் வேலை செய்கின்றார்கள் வயதான தாய் என்னுடன்இருக்கின்றார் இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியில் நான்இ தனை ஏற்றுக் கொண்டுள்ளேன். என்னுடைய குடும்பத்தில் பல சுகங்களை அவர்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துத்தான் இங்கு வந்துள்ளேன் உங்களது ஆலோசனைகள் அறிவுரைகள் ஆதரவு நிச்சயமாகத்தேவை இந்த மாவட்டத்தை நேசிக்கின்றேன் எனது பெற்றோர் உறவினர் பெற்றோரின் பெற்றோர்கள் உறவினர்கள் இந்த மண்ணுக்காக நிறையபோராடியிருக்கின்றார்கள் 

அவர்களின் தியாகங்களுக்கு தலைவணங்கி இந்த மாகாணத்திற்கு என்னால் முடிந்த சேவைகளைச் செய்வேன் இந்த உறவுப் பாலத்தைப் பயன்படுத்தி 30 வருட யுத்த்தில் இழந்தவற்றையும் கடந்தகாலங்களில் அடைந்து கொள்ள முடியாதவற்றை பெற்றுக்கொள்வற்கான சந்தர்ப்பமாக இதனைப் பயன்படுத்தக் கேட்டுக்கொள்கின்றேன் இதற்காகத்தான் ஜனாதிபதி ஒன்றரை மாத காலத்திற்கு பின்னர் இதனைச் செய்துள்ளார் ஆதரவு எங்களுக்குத் தேவை என்றார்.

https://www.virakesari.lk/article/72391

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாணத்தைப் பொறுத்து நெடுங்காலமாகவே வைத்திய துறை தவிர்ந்த ஏனைய துறைகளில் நிர்வாக திறமை இன்மை பிரச்சினையாக உள்ளது. இதனை செம்மைசெய்யக்கூடிய நிர்வாக ஆற்றலை கடந்த   கடந்த மாகாண சபையோ முதலமைச்சரோ வெளிப்படுத்தவில்லை. காலம் காலமாக நிர்வாக திறமையின்மையால் சிக்குப்பட்ட  நூல்பந்துகள் போலவே வடகிழக்கு மாகாணங்கள் அமைந்துள்ளது. இந்த சூழலில் தேர்ந்த நிர்வாகியான உங்கள் வரவு மிகுந்த உங்களை அறிந்த எல்லோருக்கும் அதீத நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 

வடமாகாணத்தில் சமூக நல்லிணக்கம், சமூக பொருளாதார கலாச்சார அபிவிருத்தி, பொருளாதார வளற்சி ,நீராதாரம் மண் மணல் காடு என சூழல் பாதுகாப்பு போன்ற குறை விருத்தி அடைந்த பல்வேறு துறைகளை மீண்டும் முழு அளவில் செயல்பட வைப்பது உங்களைப்போன்ற நிர்வாகி ஒருவருக்கு மட்டுமே சாத்தியமான பணியாகும்.

நமது மாகாண நலன் கருதி  நாமெல்லோரும் அரசியலுக்கு அப்பால் சகோதரி சாள்ஸ் அவர்களை ஆதரிக்க வேண்டும் என விண்ணப்பிக்கின்றேன்.  

  • தொடங்கியவர்

எங்கள் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் ஆளுநராக வருவது வரவேற்கத்தக்க விடயம் : செல்வம் அடைக்கலநாதன்  

(எம்.நியூட்டன்)

எங்கள் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் ஆளுநராக வருவது என்பது வரவேற்கத்தக்க விடையம் அரச நிர்வாக அதிகாரியாக இருந்து எத்தகைய உயர்நிலை பதவிகளில் இருந்தீர்களே அத்தகைய ஆளுமைகளைக் கொண்டு எமது மாகாணத்தையும் முன்கொண்டுவரவேண்டும் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் புதிய ஆளுநரின் வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்

வடக்கு மாகாண ஆளுநரின் வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டமையிட்டு கர்வமும் மகிழ்ச்சியும் அடைகின்றேன். 

எங்களுடைய புதிய ஆளுநர் எங்களுடைய மக்கள் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர் வடமாகாணத்தில் பெண் ஆளுநராக தெரிவு செய்யப்பட்டமையைக் கொண்டு அதனைக் கூறினேன்.

மாகாண மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர் யுத்தம் முடிவுற்ற நிலையில் பாதிக்கப்பட்டிருந்த அத்தனை மக்களையும் வவுனியா வரவேற்றது. அத்தனை மக்களையும் பசி தாகம் இன்றி இருப்பதற்கு முக்கிய கடமையாற்றியவர் மிகவும் துணிச்சலும் சேவை உணர்வும் கொண்டவர்.

எங்கள் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் ஆளுநராக வருவது என்பது வரவேற்கத்தக்க விடையம் அவரை இந்த நேரத்தில் பாராட்டுவதுடன் நாங்களும் உங்களுடன் இணைந்து ஒத்துழைப்புக்களை வழங்குவோம் எங்கள் மக்களுக்குத் தேவையான விடையங்களை சிறப்பாக செய்யவேண்டும்.  உங்கள் பணி பல துறைகளிலுமே சிறப்பாக செயற்பட்டுள்ளீர்கள் அத்தகைய சிறப்பான பணிகளும் இந்த மாகாணத்திற்கு கிடைக்கவேண்டும்.

 பாராளுமன்ற உறுப்பினர்களான நாங்களும் மாவட்டங்களிலுள்ள அரசாங்க அதிபர்களும் அனைவரும் உங்களுக்கான ஒத்துழைப்பை வழங்குவோம் எங்கள் மக்களின் வாழ்வு வளம் பெற அனைத்து விதத்திலும் உதவிகளை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுகின்றோம் என்றார்.

https://www.virakesari.lk/article/72399

  • கருத்துக்கள உறவுகள்

TNA யின் பதிலை இன்னும் காணோம் ? ஏதேனும் குறைபிடிக்க ஆயத்தம் செய்கின்றனரோ ?

  • கருத்துக்கள உறவுகள்

ஆளுனர் சகோதரி சரோஜினி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

வடக்கின் ஆளுனராக உங்கள் முன் உள்ள பணி மிகப் பெரியது, சச்சிதமாகவும் சமயோசித புத்தியுடன் நிறைவேற்றவேண்டியதும்கூட. உங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பை நீங்கள்  தைரியத்துடன் ஏற்று நேர்த்தியாக செய்து முடிப்பவர் என்று செய்திகள் மூலம் அறிகின்றோம். அந்த கோணத்தில் பார்க்கும்போது உங்கள் முன்னால் சென்றவர்கள் சந்தர்ப்பங்களை தவறவிட்டு சென்றுவிட்டதாகவே எண்ணத்தோன்றுகிறது.

மக்கள் தேவைக்காக வடக்கில் புதிதாக நிறுவவேண்டிய வாழ்வாதாரங்கள்  ஒருபுறம் இருக்க அங்கு செப்பனிடவேண்டியவையே மிக அதிகம். மக்களுக்கு சுகாதாரம், பொது வாழ்வு, சட்டதிட்டம் என்பனவற்றிற்கான விழிப்புணர்வை  ஊட்டவேண்டியதும் யாழ் நகரத்தையும் இதர வாழ்விடங்களையும் சுகாதார சீரழிவுகளில் இருந்து காக்கவேண்டியதும் அவசியம். 

இவர் வவுனியா அரச அதிபராக கடமையாற்றிய காலத்தில் அகதியாக வந்த மக்களை பராமரிக்கும் பெரும் பொறுப்பை செய்து முடித்தவர்.

ஜனாதிபதியின் செயலாளர் ஜயசுந்தர இவர் மீது அப்போதே நல்மதிப்பு கொண்டிருந்தார். அதனாலதான் இவருக்கு புதிய அரசில் செயலாளர் பதவியை வழங்கினார்.

இருந்தாலும் இப்போது இவருக்கு பாரிய பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. உங்கள் எதிர்கால நன்மையான செயட்பாடுகளுக்கு எமது வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பெளத்த பேரினவாத மத்திய அரசின் முகவராகச் செயற்படும் ஒருவரால் தமிழர்களின் உண்மையான வேதனைகளை புரிந்துகொண்டு செயற்படக்கூடிய அதிகாரமோ வல்லமையோ இருக்கப்போவதில்லை. அப்படித் தமிழரின் வேதனைகளை உண்மையாகவே புரிந்துகொண்டு செயற்பட விரும்பும் ஒருவரைச் சிங்களமும் தனது ஏஜெண்ட்டாக நியமிக்கப்போவதில்லை.

என்னைப்பொறுத்தவரை, முத்தையா முரளீதரன் எனும் கோடரிக் காம்பிற்கு வழங்கப்பட்ட இப்பதவி, அவன் வேண்டாம் என்று சொன்னதால் இவவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. முரளீக்கும் இவவுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

 

வெறுமனே அபிவிருத்தி அபிவிருத்தி என்று பேசுவதன் மூலம் தாம் செய்த போர்க்குற்றங்களை மறைக்கப் பார்க்கிறான் கோத்தா. அவனுடைய எண்ணத்தைத்தான் இவவும் பழையனவற்றை மறந்து நாட்டை கட்டியெழுப்புவோம் வாங்கோ என்று வழிமொழிந்திருக்கிறா. 

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

சிங்கள பெளத்த பேரினவாத மத்திய அரசின் முகவராகச் செயற்படும் ஒருவரால் தமிழர்களின் உண்மையான வேதனைகளை புரிந்துகொண்டு செயற்படக்கூடிய அதிகாரமோ வல்லமையோ இருக்கப்போவதில்லை. அப்படித் தமிழரின் வேதனைகளை உண்மையாகவே புரிந்துகொண்டு செயற்பட விரும்பும் ஒருவரைச் சிங்களமும் தனது ஏஜெண்ட்டாக நியமிக்கப்போவதில்லை.

என்னைப்பொறுத்தவரை, முத்தையா முரளீதரன் எனும் கோடரிக் காம்பிற்கு வழங்கப்பட்ட இப்பதவி, அவன் வேண்டாம் என்று சொன்னதால் இவவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. முரளீக்கும் இவவுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

 

வெறுமனே அபிவிருத்தி அபிவிருத்தி என்று பேசுவதன் மூலம் தாம் செய்த போர்க்குற்றங்களை மறைக்கப் பார்க்கிறான் கோத்தா. அவனுடைய எண்ணத்தைத்தான் இவவும் பழையனவற்றை மறந்து நாட்டை கட்டியெழுப்புவோம் வாங்கோ என்று வழிமொழிந்திருக்கிறா. 

நீங்கள் கூறுவதைப் பார்த்தால் சட்டத்தரணி உருத்திரகுமாரன்தான் வட மாகாண ஆளுனராக நியமிப்பதற்குத் தகுதியானவர் போல தோன்றுகிறது.😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.