Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு கௌரவக் கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

A5328-B01-22-D8-472-E-B1-F3-EA1-FEB980-C

Hatun Sueruecue 23 வயது நிரம்பிய துருக்கி நாட்டைச் சேர்ந்த இளம் தாய்வாழ்ந்தோம் இறந்தோம் எனும் சாதாரண வாழ்வை என்றுமே அவள் விரும்பியதில்லை. தனது வாழ்வுக்கான தீர்மானங்களை தானே எடுக்க வேண்டும். கற்பனையில் மிதந்து கனவுலகில் பறந்து எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே அவளது விருப்பம். அவளது விருப்பத்துக்கு எதிராக நின்றது அவளது பெற்றோர்களும் சகோதரர்களும்தான். தொன்மையான கலாச்சாரத்துக்குள்ளும் மதக் கட்டுப்பாடுகளுக்குள்ளும் மூழ்கிப் போயிருந்த அவளது குடும்பம் Hatunஐயும் அதற்குள் அழுத்திக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் அவள் தன்மீது விழுந்திருந்த அழுத்தச் சுமைகளை தூக்கி எறிந்து விட்டு வெளியே வந்து விட்டாள். ஆனால் அதற்குள் முற்று முழுதாக ஊறிப் போயிருந்த அவளது குடும்பம் வேறொரு முடிவை எடுத்தது. பெப்ரவரி 2005இல் பதினெட்டு வயதுகூட நிரம்பாத அவளது இளைய சகோதரன்,  பேர்லினில் ஒரு பஸ் தரிப்பிடத்தில் வைத்து Hatun சுட்டுக் கொன்றுவிட்டான்.

அப்பொழுது பெரிதாகப் பேசப்பட்ட இந்தச் சம்பவம் 2019இல் Nur eine Frau என்று திரைப்படமாக வெளிவந்தது.

இளவயதிலேயே Hatunக்குப் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம்  வருகிறது. யேர்மனியில் வாழ்ந்து கொண்டிருந்த அவளை அவளது பெற்றோர் துருக்கிக்கு அழைத்துச் சென்று அவளது 16 வயதிலேயே  அவளது முறைப் பையனுக்கு  கட்பாயத் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள்.

Hatun எதிர்பார்த்த வாழ்க்கை அவளுக்குக் கிடைக்கவில்லை என்பதை அவள் உடனடியாகப் புரிந்து கொள்கிறாள். அவள் எதிர்பார்த்திராத கட்டுப்பாடுகள் அவள் மீது விழ ஆரம்பிக்கிறது. ஒரு மகன் பிறந்து விட்ட நிலையிலும் அவளால் தனது மண வாழ்க்கையை சந்தோசமாகக் களிக்க முடியாமல் திண்டாடினாள். இதற்கு ஒரு முடிவாக கணவனின் கட்டுப்பாடுகள், அடி உதை பேச்சுக்கள் என்ற நரகத்தில் இருந்து வெளியேற அவள் முடிவு செய்தாள். கணவனை விட்டு விட்டு தனது மகனுடன் மீண்டும் யேர்மனிக்கு வந்து, தான் எப்படி எல்லாம் வாழ வேண்டும்  என்று  ஆசைப்பட்டாளோ  அப்படி வாழத் தொடங்கினாள்.

தன்னுடைய வாழ்க்கை மட்டுமல்ல தனது மகனின் வாழ்க்கையும் நன்றாக இருக்க வேண்டும் என்பது அவளது விருப்பமாக இருந்தது. துருக்கியில் இருந்து யேர்மனிக்குத் திரும்பிய உடனேயே மின்சாரத் துறையில் தொழிற் கல்வியைப் படித்து அந்தத் துறையிலேயே வேலையையும் தேடிக் கொண்டாள்

வேலை இடத்தில் Hatunக்கு ஒரு யேர்மனிய இளைஞனின் அறிமுகம் ஏற்பட, அந்த இளைஞன்தான் தனக்கேற்ற துணையாகவும் தனது மகனுக்குப் பாதுகாவலனாகவும்  இருப்பதற்கு  ஏற்றவன் எனத் தீர்மானிக்கிறாள்

இதற்குள் Hatunஇன்  செயல்களில் வெறுப்படைந்து அவளது குடும்பத்தில் இருந்து ஏச்சுக்கள் அச்சுறுத்தல்கள் ஆரம்பிக்கத் தொடங்குகின்றன. ஆனாலும் Hatun அச்சப்படவில்லை. அவள் விரும்பிய வாழ்க்கையில் உறுதியாக நின்றாள் அதனால் அவள் மகிழ்ச்சியாகவும் இருந்தாள்.

ஒரு நாள் தனது தலையில் கட்டியிருந்த துண்டைக் கழட்டி எறிந்து தனது மத அடையாளத்தையும் நீக்கி விட்டாள். அத்தோடு தனது குடும்பத்துக்கான தொடர்பையும் துண்டித்துக் கொண்டாள். Hatunஇனின் இந்தச் செயல் அவளது குடும்பத்துக்கு நிச்சயமாக பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கும்.

7ந்திகதி பெப்ரவரி 2005இல் Hatunஇனது தம்பி Ayhan அவளைச் சந்திக்க வந்தான். Berlin-Tempelhof பஸ் தரிப்பிடத்தில்  தனது தம்பியுடன் கதைத்துக் கொண்டிருக்கும் போது அவன் தான்  கொண்டு வந்த துப்பாக்கியை எடுத்து மூன்று தரம் Hatunஇனது தலையில் சுட அந்த இடத்திலேயே அவள் இறந்து போனாள்.

போலீஸ் Ayhanஐயும் Hatunஇன் மற்றைய இரண்டு சகோதரர்களையும் கைது செய்தது. கொலை செய்ததற்காக Ayhan மீதும் கொலைக்குத் திட்டமிட்டதற்காக அவனது இரண்டு சகோதரர்களின் மீதும் பொலீஸ் வழக்கு பதிவு செய்தது.

கொலை செய்த Ayhanக்கு சிறார்களுக்கான தண்டனையாக ஒன்பது வருடங்களும் மூன்று மாதங்களும் சிறைத் தண்டனையும் விடுதலையின் பின்னர் அவனை துருக்கிக்கு நாடு கடத்தவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. போதிய ஆதாரங்கள் இல்லாததால் Hatunஇன் மற்றைய  இரண்டு சகோதரர்களுக்கும் தண்டனை வழங்க முடியாது என நீதிமன்றம் அவர்களை விடுவித்தது. வெளியே வந்த இருவரும் யேர்மனியில் இருந்தால் பிரச்சினையாகி விடும் என்று துருக்கிக்குச் சென்று விட்டார்கள். ஆனாலும் சட்டமும் பெண்கள் உரிமை அமைப்பும் அவர்களை விடுவதாக இல்லை. அவர்கள் இருவரின் மீதும் துருக்கியில் மீண்டும் வழக்கு பதிவானது. கொலைக்குத் திட்டமிட்டார்கள் என்பது நிரூபிக்கப் பட்டதால் சகோதரர்கள் இருவருக்கும் துருக்கியில் ஆளுக்கு பன்னிரண்டு வருடங்கள்  சிறைத்தண்டனை கிடைத்தது. இப்பொழுது எல்லோரும் விடுதலையாகி இருப்பார்கள். தொன்மையான கலாச்சாரத்தினால் ஒரு தாய் கொல்லப்பட்டு ஒரு சிறுவன் தனியாகிப் போனான் என்பதே முடிவாகிப் போனது.

E0-E139-D8-770-D-4-BAC-B9-BA-8095-C925-C
யேர்மனியில் நடந்த (
நிரூபிக்கப்பட்ட) முதல் கௌரவக் கொலை இதுவானதால் யேர்மனியப் பெண்களுக்கான உரிமைகள் அமைப்பால் அதை எளிதில் மறந்து விட முடியவில்லை. பெண்கள் உரிமைகள் அமைப்பு, பெண்களின் உரிமைகள் மற்றும் சுயநிர்ணய வாழ்க்கைக்காகப் போராடிய Hatun 07.02.2020. இல் நினைவுகூர்ந்திருந்தது அதற்கான சாட்சியாக இருக்கிறது.

Edited by Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் சொல்லுவார்கள் "தானும் படுக்காது தள்ளியும் படுக்காது" என்று 
மதம் பிடித்த லூசு கூட்டங்களும் இப்படித்தான் தாங்களும் வாழதுகள் வாழ போகிறவனையும் 
வாழ விடாதுகள்.

இப்போது மதம் என்பது மிகவும் திட்டம் இட்டு சில அரசுகளின் 
உளவு நிறுவனங்களால் வடிவமைக்க பட்டுதான் பரப்ப படுகின்றன 
இதை புரியாத கூட்டம் அடுத்தவனை அளித்து தாமும் அழிந்து போகின்றன.  
 

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் திட்டமிட்டு தான் 18 வயதிற்கும் குறைவான தம்பியை வெட்ட அனுப்பி உள்ளார்கள் 
 

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் கௌரவக் கொலையை செய்து கொலைகாரர்கள் ஆகியுள்ளார்கள். வெளிப்படையாகத் தெரிகிறது. நம்மவர்கள் கௌரவத்தனிமையைப் பெண்பிள்ளைகளுக்கு உருவாக்கிவிட்டு குற்றமற்றவர்களாகவும் நீதிமான்களாகவும் சமூகவெளியில் வலம் வருகிறார்கள். என்னைக் கேட்டால் அவர்களுக்கும் நம்மவர்களுக்கும் அதிக வித்தியாசம் இல்லை என்பேன். கலகப்போர் தொடுத்தால் பதில் விவாதம் செய்ய நேரம் இல்லை.😶

  • கருத்துக்கள உறவுகள்

யேர்மனியில் உள்ள இலங்கை தமிழ் குடும்பம் ஒன்றும் மகளை கௌரவ கொலை செய்தனர் பொலிசினால் நிரூபிக்க முடியாத காரணத்தால் அவர்களை கைது செய்யவில்லை என்றும் அறிந்தேன்.ஆனால் அங்கே அந்த நாட்டு மக்கள் உட்பட எல்லோருக்கும் உண்மை  தெரியுமாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

அவர்கள் திட்டமிட்டு தான் 18 வயதிற்கும் குறைவான தம்பியை வெட்ட அனுப்பி உள்ளார்கள் 

 உண்மை ரதி, அது நிரூபிக்கப் பட்டதால்தான் அவளது இரண்டு சகோதரர்களுக்கும் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைத்தது

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, வல்வை சகாறா said:

அவர்கள் கௌரவக் கொலையை செய்து கொலைகாரர்கள் ஆகியுள்ளார்கள். வெளிப்படையாகத் தெரிகிறது. நம்மவர்கள் கௌரவத்தனிமையைப் பெண்பிள்ளைகளுக்கு உருவாக்கிவிட்டு குற்றமற்றவர்களாகவும் நீதிமான்களாகவும் சமூகவெளியில் வலம் வருகிறார்கள். என்னைக் கேட்டால் அவர்களுக்கும் நம்மவர்களுக்கும் அதிக வித்தியாசம் இல்லை என்பேன். கலகப்போர் தொடுத்தால் பதில் விவாதம் செய்ய நேரம் இல்லை.😶

எப்ப நேரம் இருக்கும் என்று சொல்லுங்க 
அப்ப வைச்சுக்கலாம் ..... இப்பிடியே எழுதிட்டு போனா 
நாங்கள் எல்லாம் எதோ வேலை வெட்டியோட இருக்கிறம் என்ற எண்ணமா?
அவன் அவன் எப்ப வம்பிழுக்க வருவான் என்று காத்திருக்கோம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 hours ago, வல்வை சகாறா said:

அவர்கள் கௌரவக் கொலையை செய்து கொலைகாரர்கள் ஆகியுள்ளார்கள். வெளிப்படையாகத் தெரிகிறது. நம்மவர்கள் கௌரவத்தனிமையைப் பெண்பிள்ளைகளுக்கு உருவாக்கிவிட்டு குற்றமற்றவர்களாகவும் நீதிமான்களாகவும் சமூகவெளியில் வலம் வருகிறார்கள். என்னைக் கேட்டால் அவர்களுக்கும் நம்மவர்களுக்கும் அதிக வித்தியாசம் இல்லை என்பேன். கலகப்போர் தொடுத்தால் பதில் விவாதம் செய்ய நேரம் இல்லை.😶

தாயே வணக்கம்!
கௌரவ கொலை என்பது 
குடும்பத்துக்குள் நடக்கின்றது
ஊருக்குள் நடக்கின்றது.
இனத்துக்கு இனம் நடத்துகின்றது.
சாதிக்கு சாதி நடக்கின்றது.
நாட்டுக்கு நாடு நடக்கின்றது.

எப்படித்தான் வாதாடி விவாதித்தாலும்...
ஒவ்வொரு மனிதனும் பிறப்பால் அந்த விதிக்குள் நிர்ணயிக்கப்பட்டு விடுகின்றான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.