Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

புலவர் சற்று நிதானமாக வாசிக்க வேண்டும். நானும் கொஞ்சம் அசந்து தான் போய்விட்டேன்.

அக்கோய், உங்கள் பிள்ளை நன்றாக தான் நிலைமையை கையாண்டு இருக்கிறார்.

இதுதான், அங்கிருந்து வருபவர்கள் மனவோட்டம். அவர்கள் எல்லாம் அங்கிருந்து தான் பெண் எடுக்கவேண்டும்.

அதேவேளை, பல்கலைகழக வாழ்வில் நமது பெண்பிள்ளைகள், தாய் தகப்பனுக்கு புரியாத வேறு வாழ்வு வாழ்வதும் சகஜம். உதாரணமாக இரண்டு ஆண்கள், மூன்று பெண்களாக வீடு எடுத்து இருப்பார்கள். அதில் ஒருஜோடியாவது ஒரு அறையில் தங்கி குடும்பமே நடாத்துவர். படிப்பு முடிந்ததும், திருமணம் செய்ய விரும்பாவிடில் கிளம்பி விடலாம். வார இறுதியில் ஜரோப்பா போய்வருவர். ஆனாலும் படிப்பிலும் கவனமாக இருப்பர்.

பெற்றோர்கள் இந்த நிதர்சனம் குறித்து புரிந்து கொள்ளவேண்டும். நாம் அங்கு பிறந்தாலும், பிள்ளைகள் இங்கே பிறந்தவர்கள், வளர்ந்தவர்கள் என்ற நிலைப்பாட்டை புரிந்தால், கவலைபடதேவையில்லை.

அதற்காகத்தான் சொல்வது பிள்ளைகளும் இங்கு பிறந்து வளர்ந்த பையனைப் பாருங்கள் என்று. அந்த சம்பவத்துக்குப் பின் இலங்கையில் இருந்து வரும் திருமணப் பேச்சை உடனேயே நிராகரித்துவிடுவது.

  • Replies 405
  • Views 37.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

வாழைப்பழம் மட்டுமே அடிச்சனியள் எண்டதை யாரோ உளவு பார்த்துவிட்டான் என்று புலம்பிய மாதிரி இருக்குதே...

நாதம் அது அடிச்சது முறிய அடிச்சது😬

  • கருத்துக்கள உறவுகள்

முன்பொரு திரியொன்று கிட்டத்தட்ட இதேபோன்றதொரு உரையாடலில் இருந்தாக நினைக்கின்றேன். 

திருமணம் என்பது வெறுமனே இருவரை இணைத்துவிடும் ஒரு சடங்காகவும்  ஒரு கடமையை நிறைவேற்றும் ஒரு அலகாகவும்  பார்க்கப்படும் ஒழுங்கமைவே எமது குமுகாயக் கட்டமைப்பு. இதற்குள் இருக்கும் பிற்போக்குத் தனங்களைக் களைந்து செல்வது குறித்தான குமுகாயச் சிந்தனையுடையோர்  தோன்றாதவரை காலங்காலமாகத் தொடரும்  கட்டமைக்கப்பட்ட  விடயங்கள் மாறுமா என்பது பெரும் வினாவாகும். 

புலத்திலே பிள்ளைகள் மிகத்தெளிவாக இருக்கிறார்கள். ஆனால் ஒரு சில திருமணப்பேச்சுகளை அவதானித்த அடிப்படையில்  திருமணவிடயத்தில் முடிவெடுப்பதில் பெற்றோரின் வாழ்வும் வகிபாகமும் தாக்கம் செலுத்துகின்றது என்றே தோன்றுகின்றது. இன்று பெரும்பலும் காதலாகிப் பின் பெற்றோரின் விருப்போடு  செய்யும் திருமணங்களாக நடக்கின்றன. ஆனால் சில காதல் முறிவு கலியாண முறிவுகளும் இல்லாமல் இல்லை. 

 எமது எதிர்காலச் சந்ததி எப்படித் தன்னைத் தகவமைத்துக் கொள்ளப்போகிறது என்றும் ஒரு பெரும் ஐயமும் எழுகின்றது. திருமணங்கள் என்பது ஒரு குமுகாயக் கட்டமைப்பின் அடிப்படை என்பதை மறுப்பதற்கில்லை என்பதே  எனது பார்வை. ஆனால் இந்தக் கட்டமைப்பின் சிதைவானது எமது இனத்துவ நலன்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்திச் சிதைத்துவிடக் கூடியது. இதனைக் கருத்திற்கொண்டு நாம் ஊர் பிரதேசம் அது இது என்ற பிற்போக்குத் தனங்களைத் துணிவோடு கடந்து ஒரு இனமாகச் சிந்திப்பதன் வழியே கூட நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.  

தலைப்பைப் பார்த்தால் ஒரு அங்கதத் தலைப்புப்போல் தோன்றினாலும்  ஆழமான பல்வேறு விடயங்களைத் தொட்டுச் செல்கிறது.  ஒவ்வொருவருக்கும் தனித்துவமான சிந்தனைகள் இருக்கலாம். ஆனால் ஒரு பொதுத் தளத்தில் கருத்தாடும் விடயம் எல்லோருக்கும் பயனுடையதாக அமைவதே நன்மை பயக்கும்.

மனிதனது கல்வியைத் தீர்மானிப்பதில் அவனது வாழ்வும் சூழலும் தாக்கம் செலுத்தவது இயல்பானது என்பதை ஒவ்வொருவரும் கடந்துவந்த பாதையை  மீட்டிப்பார்த்தால் புரிந்து கொள்ள முடியும். இந்தப் புரிதலோடு புலத்தையும் இணைத்து ஒப்பீடு செய்தால் நிறைய விடயங்கள் சுழியமாகிவிடும். 

நல்லதொரு உரையாடல் வழியே ஏற்படும் குமுகாய மாற்றமே அடுத்தலைமுறைக்கான வழிகாட்டுதலாக அமைய இன்றைய தலைமுறை முயற்சிகுமாயின் அது வெற்றிக்கான முதற்படியாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 3/23/2020 at 6:12 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

திருமணப் பேச்சு 6

ஒரு திருமணப் பேச்சு இலங்கையில் இருந்து வந்தது. பையன் 15 ஆண்டுகளாக லண்டனில் வசிக்கிறார். இலங்கையில் பிறந்த பையன் ஓகேயா என்று மக்களிடம் கேட்டதற்கு இலங்கையில் பிறந்தவர்கள் பலருக்கு குறுகிய மனநிலைதான் அம்மா. இங்கு பிறந்த பிள்ளைகளை வைத்து வாழும் நுணுக்கமும் திறனும் பலரிடம் இல்லை. ஏன் உங்கள் ஆசையைக் கெடுப்பான். எதற்கும் கதைத்துப் பார்க்கிறேன். எனது வற்சப் இலக்கத்தைக் கொடுங்கள் என்றாள். இரண்டு நாட்கள் போன் வந்ததா வந்ததா எனக் கேட்டு எனக்கே டென்ஷனாக்கிவிட, அம்மா அவனுக்கும் என்ன பிரச்சனையோ கொஞ்சம் பொறுமையாய் இருங்கள் என்றாள் மகள்.

பெடியனின் பெற்றோர் கொழும்பில் இருக்கின்றனர். தமிழுக்குத்  தொண்டு செய்த ஒரு நல்ல குடும்பத்தில் இருந்து வந்தவர். பேரனார் போராட்ட காலத்தில் நிறைய தன் பங்கை ஆற்றியது தெரிந்ததனால் இந்தத் திருமணம் சரிவந்தால் நல்லது என நான் நினைத்தேன். பெற்றோர்களும் நன்றாகக் கதைத்துப் பேசுகின்றனர் என எண்ணிக்கொண்டு இருக்க ஐந்தாம் நாளாய்த்தான் அவனிடமிருந்து போன் வந்தது என்றாள் மகள்.போனில் நன்றாகத்தான் கதைக்கிறான். நாளை சிற்றிக்குள் சந்திக்கப் போகிறோம் என்றாள்.

அடுத்தநாள் அவனைச் சந்திக்கச் சென்ற மகள் அவன் எனக்குச் சரிவர மாட்டான் அம்மா. பெற்றோரிடம் சொல்லிவிடுங்கள் என்றாள். எனக்கு மனம் பதைக்க ஏனம்மா என்ன பிரச்சனை என்றேன்?. அவன் ஒரு சைக்கோ. விக்டோரியா ஈஸ்டேஷனில இரண்டுபேரும் சந்தித்சனாங்கள். பக்கத்தில இருக்கிற உணவகம் எதுக்கும் போவோம் என்று நான் கூற மூன்று உணவகங்களைப் பார்த்துவிட்டு தனக்குப் பிடிக்கவில்லை என்று கூறி அரை மணிநேரம் என்னை அலைக்கழித்ததை நான் பொறுத்துக்கொண்டேன். அதன்பின்னர் இரண்டு தடவை டியூப் எடுத்து பின்னர் ஒரு யூனிவேசிற்றியின் காண்டீனுக்கு என்னை அழைத்துச் சென்றான். அவனிடம் பணம் இல்லையோ என்று எண்ணி என்ன உண்கிறாய் என்று கேட்காமலே இரண்டு பேகரை ஓடர் செய்தான். குடிப்பதற்கும் தனக்கு விரும்பியதைச் சொல்லிவிடுவானோ என்ற எண்ணத்தில் எனக்கு கோக் என்றேன். என்று மகள் மூச்சுவிட "உதெல்லாம் ஒரு பிரச்சனையா" என்றேன் நான்.

உதொண்டும் பெரிய பிரச்சனையே இல்லை அம்மா. பிறகு என்ன படிச்சனி ? எங்கே படிச்சனி? என்றெல்லாம் கேட்டுவிட்டு எத்தனை பேருடன் இதுவரை படுத்தனி என்று கூசாமல் கேட்கிறான். நான் ஆனால் கோபப்படவில்லை. ஏனென்றால் அவனுக்கு என்ன உளவியல் பிரச்சனை இருக்கிறதோ என்று எண்ணி, "என்னிடம் யாரும் இதுவரை இப்படிக் கேட்டதில்லை. ஆனாலும் இன்னொரு பெண்ணைப் பார்த்து நீ இப்படிக்கு கேட்டால் உன்னை அவர்கள் திட்டுவார்கள் என்பது ஒன்று. மற்றொன்று நீ பயித்தியம் என்று எண்ணுவார்கள்" என்றவுடன் அவன் என்னைக் கண்டபடி திட்டவாரம்பிக்க நான் அந்த இடத்தை விட்டு எழுந்து வந்துவிட்டேன் என்கிறாள்.

(இதை பற்றி தெளிவாக பேச நிறைய இருக்கு இப்போ நேரம் இல்லை திரும்ப பதிகிறேன்)

இதில் இரண்டு காரணம் இருக்கலாம் 
ஒன்று பையனுக்கு இதில் இஷடம் இல்லாது இருக்கலாம் பெற்றோரின்
(பெற்றோர் இப்போதும் இலங்கையில் இருந்து வந்த பையன்கிட்டயே கற்பனையில் வைத்து இருப்பார்கள்)
நெருடலால் சரி ஒரு முறை போய் கோபப்படுத்தி வந்துவிட்டால் அவர்களே வேண்டாம் என்று விடுவார்கள் 
என்று எண்ணி வந்திருக்கலாம். இனி சுமே ஆன்டி டெலிபோன் எடுத்து அவர்களுக்கு என்ன சொன்னாலும் 
பையன் சுமே ஆண்டியின் மகளை பற்றி என்ன கட்டுக்கதை சொல்கிறான் என்பதைத்தான் அவர்கள் நம்புவார்கள் அவனின் பெற்றோரும் தாயின் பேச்சை டெலிபோனில் கேட்க்கும்போது அப்படி தெரியவில்லையே? தப்பிவிட்டோம் என்றுதான் நினைப்பார்கள். அவனின் பெற்றோரின் பலவீனம் அவனுக்கு தெரிந்திருக்கும்.

இன்னொன்று ஒருவரின் உண்மையான குணத்தை நீங்கள் அறிய விரும்பினால் 
அவர்களை எதிர்பாராத விதமாக கோபப்படுத்தி பார்க்க வேண்டும். கோபத்தில் 
ஒரு சங்கடமான சூழ்நிலையை எவ்வாறு கையாள்கிறார்கள்? அதுதான் ஒருவரின் உண்மையான குணமாக இருக்கும் . மற்றும்படி டேட்டிங் சாட்டிங் எல்லாம் வைத்து ஒருவரையும் எடைபோட முடியாது 
உண்மையை சொன்னபோனால் உண்மையானவர்கழும் அப்பாவிகளும்தான் அதில் கோட்டை விடுவது 
பக்கா கிரிமினலுகளுக்கு எவ்வாறு பேசி நடித்து கவிழ்க்க வேண்டும் என்பது தெரியும். 

எனக்கு ஒருமுறை இவ்வாறு ஒரு நேர்முக தேர்வில் நடந்தது 
அவர் எனக்கு வேலை தருவதை தான் உறுதி செய்த பின்தான் 
எனது பெர்சோனாலிட்டி எப்படி இருக்கும் என்று பார்க்கவே அப்படி கேட்டதாக சொன்னார்.
கேள்வி நேரிடையாக வந்திருப்பின் அது எச் ஆர் வயேல்ஏசென் மாதிரியான கேள்வி 
நானும் மறைமுக நோக்கம் விளங்காத மாதிரி தான் பதில் சொன்னேன் 
வேலை கிடைத்தது ......இது பின்னாளில் நான் அவருடன் பேசி தெரிந்து கொண்டது. 
அன்று வேலை கிடைக்காது போயிருந்தால் ...? 
எனக்கு இப்போதும் ஏன் அவர் அப்படி கேட்டார் எனப்து குழப்பமாகவே இருந்து இருக்கும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/24/2020 at 3:25 PM, nochchi said:

முன்பொரு திரியொன்று கிட்டத்தட்ட இதேபோன்றதொரு உரையாடலில் இருந்தாக நினைக்கின்றேன். 

திருமணம் என்பது வெறுமனே இருவரை இணைத்துவிடும் ஒரு சடங்காகவும்  ஒரு கடமையை நிறைவேற்றும் ஒரு அலகாகவும்  பார்க்கப்படும் ஒழுங்கமைவே எமது குமுகாயக் கட்டமைப்பு. இதற்குள் இருக்கும் பிற்போக்குத் தனங்களைக் களைந்து செல்வது குறித்தான குமுகாயச் சிந்தனையுடையோர்  தோன்றாதவரை காலங்காலமாகத் தொடரும்  கட்டமைக்கப்பட்ட  விடயங்கள் மாறுமா என்பது பெரும் வினாவாகும். 

புலத்திலே பிள்ளைகள் மிகத்தெளிவாக இருக்கிறார்கள். ஆனால் ஒரு சில திருமணப்பேச்சுகளை அவதானித்த அடிப்படையில்  திருமணவிடயத்தில் முடிவெடுப்பதில் பெற்றோரின் வாழ்வும் வகிபாகமும் தாக்கம் செலுத்துகின்றது என்றே தோன்றுகின்றது. இன்று பெரும்பலும் காதலாகிப் பின் பெற்றோரின் விருப்போடு  செய்யும் திருமணங்களாக நடக்கின்றன. ஆனால் சில காதல் முறிவு கலியாண முறிவுகளும் இல்லாமல் இல்லை. 

 எமது எதிர்காலச் சந்ததி எப்படித் தன்னைத் தகவமைத்துக் கொள்ளப்போகிறது என்றும் ஒரு பெரும் ஐயமும் எழுகின்றது. திருமணங்கள் என்பது ஒரு குமுகாயக் கட்டமைப்பின் அடிப்படை என்பதை மறுப்பதற்கில்லை என்பதே  எனது பார்வை. ஆனால் இந்தக் கட்டமைப்பின் சிதைவானது எமது இனத்துவ நலன்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்திச் சிதைத்துவிடக் கூடியது. இதனைக் கருத்திற்கொண்டு நாம் ஊர் பிரதேசம் அது இது என்ற பிற்போக்குத் தனங்களைத் துணிவோடு கடந்து ஒரு இனமாகச் சிந்திப்பதன் வழியே கூட நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.  

தலைப்பைப் பார்த்தால் ஒரு அங்கதத் தலைப்புப்போல் தோன்றினாலும்  ஆழமான பல்வேறு விடயங்களைத் தொட்டுச் செல்கிறது.  ஒவ்வொருவருக்கும் தனித்துவமான சிந்தனைகள் இருக்கலாம். ஆனால் ஒரு பொதுத் தளத்தில் கருத்தாடும் விடயம் எல்லோருக்கும் பயனுடையதாக அமைவதே நன்மை பயக்கும்.

மனிதனது கல்வியைத் தீர்மானிப்பதில் அவனது வாழ்வும் சூழலும் தாக்கம் செலுத்தவது இயல்பானது என்பதை ஒவ்வொருவரும் கடந்துவந்த பாதையை  மீட்டிப்பார்த்தால் புரிந்து கொள்ள முடியும். இந்தப் புரிதலோடு புலத்தையும் இணைத்து ஒப்பீடு செய்தால் நிறைய விடயங்கள் சுழியமாகிவிடும். 

நல்லதொரு உரையாடல் வழியே ஏற்படும் குமுகாய மாற்றமே அடுத்தலைமுறைக்கான வழிகாட்டுதலாக அமைய இன்றைய தலைமுறை முயற்சிகுமாயின் அது வெற்றிக்கான முதற்படியாகும்.

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி நொச்சி. குமுகாய மாற்றம் என்பது உடனடியாக நடந்துவிடாது. அடுத்த தலைமுறையினரின் வாழ்வில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் அவை வாழும் சூழலுக்கேற்பவானதாகத்தான் இருக்க முடியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/24/2020 at 5:47 PM, Maruthankerny said:

(இதை பற்றி தெளிவாக பேச நிறைய இருக்கு இப்போ நேரம் இல்லை திரும்ப பதிகிறேன்)

இதில் இரண்டு காரணம் இருக்கலாம் 
ஒன்று பையனுக்கு இதில் இஷடம் இல்லாது இருக்கலாம் பெற்றோரின்
(பெற்றோர் இப்போதும் இலங்கையில் இருந்து வந்த பையன்கிட்டயே கற்பனையில் வைத்து இருப்பார்கள்)
நெருடலால் சரி ஒரு முறை போய் கோபப்படுத்தி வந்துவிட்டால் அவர்களே வேண்டாம் என்று விடுவார்கள் 
என்று எண்ணி வந்திருக்கலாம். இனி சுமே ஆன்டி டெலிபோன் எடுத்து அவர்களுக்கு என்ன சொன்னாலும் 
பையன் சுமே ஆண்டியின் மகளை பற்றி என்ன கட்டுக்கதை சொல்கிறான் என்பதைத்தான் அவர்கள் நம்புவார்கள் அவனின் பெற்றோரும் தாயின் பேச்சை டெலிபோனில் கேட்க்கும்போது அப்படி தெரியவில்லையே? தப்பிவிட்டோம் என்றுதான் நினைப்பார்கள். அவனின் பெற்றோரின் பலவீனம் அவனுக்கு தெரிந்திருக்கும்.

இன்னொன்று ஒருவரின் உண்மையான குணத்தை நீங்கள் அறிய விரும்பினால் 
அவர்களை எதிர்பாராத விதமாக கோபப்படுத்தி பார்க்க வேண்டும். கோபத்தில் 
ஒரு சங்கடமான சூழ்நிலையை எவ்வாறு கையாள்கிறார்கள்? அதுதான் ஒருவரின் உண்மையான குணமாக இருக்கும் . மற்றும்படி டேட்டிங் சாட்டிங் எல்லாம் வைத்து ஒருவரையும் எடைபோட முடியாது 
உண்மையை சொன்னபோனால் உண்மையானவர்கழும் அப்பாவிகளும்தான் அதில் கோட்டை விடுவது 
பக்கா கிரிமினலுகளுக்கு எவ்வாறு பேசி நடித்து கவிழ்க்க வேண்டும் என்பது தெரியும். 

எனக்கு ஒருமுறை இவ்வாறு ஒரு நேர்முக தேர்வில் நடந்தது 
அவர் எனக்கு வேலை தருவதை தான் உறுதி செய்த பின்தான் 
எனது பெர்சோனாலிட்டி எப்படி இருக்கும் என்று பார்க்கவே அப்படி கேட்டதாக சொன்னார்.
கேள்வி நேரிடையாக வந்திருப்பின் அது எச் ஆர் வயேல்ஏசென் மாதிரியான கேள்வி 
நானும் மறைமுக நோக்கம் விளங்காத மாதிரி தான் பதில் சொன்னேன் 
வேலை கிடைத்தது ......இது பின்னாளில் நான் அவருடன் பேசி தெரிந்து கொண்டது. 
அன்று வேலை கிடைக்காது போயிருந்தால் ...? 
எனக்கு இப்போதும் ஏன் அவர் அப்படி கேட்டார் எனப்து குழப்பமாகவே இருந்து இருக்கும். 

அதுதான் மகள் அடிக்கடி கூறுவாள். அம்மா அவசரப்பட்டு ஒருவரைத் திருமணம் செய்ய முடியாது. கடைசி ஒரு ஆண்டாவது பேசிப்பழகினால் தான் அவரின் குணத்தை ஓரளவேனும் அறிந்துகொள்ள முடியும் என்று. ஒரு ஆண்டல்ல சிலர் திருமணம் ஆகும்வரை நல்லவர் போல் நடித்துவிட்டு திருமணமான பின்னர் தம் சுய புத்தியைக் காட்டுவதும் உண்டுதானே என்பேன் நான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.