Jump to content

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்


Recommended Posts

கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிக்கு கொரோனா தொற்று 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கு முதலாவதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட அதிகாரி ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரி ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.

இதையடுத்து ஏனைய அதிகாரிகளை சுய கண்காணிப்பில் ஈடுபடுமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/77973

Link to comment
Share on other sites

  • Replies 1.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

வெளிநாடுகளில் இருந்து வந்தோருக்கு முக்கிய அறிவிப்பு !

வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்குள் வந்தவர்கள் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்குள் வந்திருப்பின் அவர்கள் தொடர்பில் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தெரியப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதையடுத்து மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையில் ஐரோப்பா, ஈரான், தென் கொரியா ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்குள் வந்திருப்பார்களாயின் அவர்கள் தொடர்பில் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/77976

Link to comment
Share on other sites

முகக் கவசங்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்!

முகக் கவசங்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை சுகாதார அமைச்சு நிர்ணயித்துள்ளது.

அதன்படி சாதாரண முகக் கவசங்களுக்கான விலையானது 50 ரூபாவாகும், N95 ரக முகக் கவசங்களின் விலையானது 325 ரூபாவாகும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/77969

Link to comment
Share on other sites

மேலும் 06 பேருக்கு கொரோனா – பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28 ஆக அதிகரிப்பு!

Coronavirus-in-China.jpg

மேலும் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினத்தில் மாத்திரம் கொரோனா தொற்றுக்குள்ளான 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 10 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

http://athavannews.com/மேலும்-06-பேருக்கு-கொரோனா-ப/

Link to comment
Share on other sites

கொரோனாவை கட்டுப்படுத்த 5 பரிந்துரைகளை முன்வைத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர்!

 

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஐந்து பரிந்துரைகளை பரிந்துரைத்துள்ளது.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிற்கு இன்று அனுப்பிவைத்திருக்கும் கடிதத்திலேயே அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறித்த பரிந்துரைகளை உள்ளடக்கியிருப்பதுடன், அவற்றை விரைந்து நடைமுறைப்படுத்துமாறும் கோரியிருக்கிறது.

அந்த பரிந்துரைகள் பின்வருமாறு:

  1. நாட்டிலுள்ள அனைத்துத் துறைமுகங்கள் மற்றும் விமானநிலையங்களின் செயற்பாடுகளையும் இடைநிறுத்துதல்.
  2. ஏற்கனவே வழங்கப்பட்ட பொது விடுமுறையை இவ்வாரம் முழுவதும் நீட்டித்தல் மற்றும் அநாவசியமாக மக்கள் ஒன்றுகூடுவதைத் தடுத்தல்.
  3. அனைத்து பிரதேசங்களுக்குமான கண்காணிப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஒழுங்கமைக்கப்பட்ட வலுவான கட்டமைப்பு முறையொன்றை உருவாக்கல்.
  4. அரச மற்றும் தனியார்துறை சுகாதார சேவை ஊழியர்களுக்கு முறையான தொற்றுத்தடுப்பு பாதுகாப்பு வசதிகளைப் பெற்றுக்கொடுத்தல்.
  5. அரச வைத்தியசாலைகளிலுள்ள அனைத்து அவசரமற்ற சுகாதார சேவை வழங்கல்களையும் பிற்போடுதல்.


கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி கண்டிருக்கும் சீனா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நன்கு ஆராய்ந்த பின்னரே நாம் இந்தப் பரிந்துரைகளை முன்வைத்திருக்கின்றோம்.

எனினும் இந்நடவடிக்கைகளை முறையாக அமுல்படுத்தி, கடைப்பிடிப்பதற்குத் தவறியதால் இத்தாலியால் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாத நிலையேற்பட்டிருப்பதுடன, அந்நாட்டு மக்களும் மிகுந்த ஆபத்தை நோக்கியுள்ளதாகவும் அவர்கள் இந்த கடிதத்தில் சுட்க்காட்டியுள்ளனர்.

https://www.virakesari.lk/article/77966

Link to comment
Share on other sites

ஸ்ரீலங்கன் விமான சேவையின் அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ்

srilankan.jpg

ஸ்ரீலங்கன் விமான சேவையின் அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஸ்ரீலங்கன் விமான சேவையின் ஏனைய ஊழியர்கள் சிலரை தனிமைப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்றுமட்டும் 10 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாக்கியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஸ்ரீலங்கன் விமான சேவையின் அதிகாரியும் ஒருவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ஸ்ரீலங்கன்-விமான-சேவையின/

Link to comment
Share on other sites

’தனிமனித சுகாதாரத்தைப் பேணவும்’

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீள்வதற்கு அரசாங்கத்தின் பங்களிப்புமட்டுமன்றி தனிமனித சுகாதாரத்தை, ஒவ்வொருவரும் பேண வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியுள்ள பதுளை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், பெருந்தோட்ட மக்கள், சுகாதார விடயங்களில் அதிகக் கரிசணைக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர், தொழிற்சங்க அரசியலுக்கு அப்பால், நாம் அனைவரும் ஒரே தொப்புள்கொடி உறவுகள் என்பதை நினைவில்கொள்ள வேண்டும் என்றார்.

இவ்விடயத்தில் அனைவரும் ஒன்றிணைந்து நிதானத்துடனும் அவதானத்துடனும் செயற்பட வேண்டும் என்றும் தொழில்புரியும் இடங்களில் சுகாதாரத்தை முறையாகக் கையாள வேண்டும் என்றும் விசேடமாக வெளிநாடுகளிலிருந்து வருகைதரும் சுற்றுலா பயணிகள்,  வெளிநபர்களிடமிருந்து, சற்றுநாம் அவதானமாகச் செயற்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

கொரோனாத் தொற்று துரதிஷ்டவசமாக, பெருந்தோட்டப் பகுதிகளில் பரவுமாயின் மிக இலகுவில் பெருந்தோட்டப் பகுதி முழுவதும் வியாபித்துவிடும் என்றும் பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள வானிலை, குடியிருப்பு வசதிகள், தொழில்புரியும் ஸ்தலத்தின் நிலைமை இடவசதி போன்றவற்றைக் கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/மலையகம்/தனமனத-சகதரததப-பணவம/76-247033

Link to comment
Share on other sites

கொரோனா சிகிச்சைப் பிரிவுக்கு பொருள்கள் விநியோகம்

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2020 மார்ச் 16 , பி.ப. 04:17 - 0      - 6

image_20a08fb5f2.jpg

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இயங்கும் கிழக்கு மாகாண கொரோனா சிகிச்சைப் பிரிவில் கடமை புரியும் வைத்தியதிகாரிகள், தாதியர்கள், ஊழியர்களின் பாவனைக்காக அத்தியாவசியப் பொருள்கள், நேற்று (15) வழங்கப்பட்டன.

இப்பொருட்களை, மட்டக்களப்பு  போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் டொக்டர் திருமதி கே.கலாரஞ்சனியிடம் அம்கோர் நிறுவன மாவட்டப் பணிப்பாளர் எம்.முரளீதரன் கையளித்தார்.

குறித்த கொரோனா சிகிச்சைப் பிரிவில் கடமை புரியும் உத்தியோகத்தர்களுக்கு வெளியில் சென்று தமது அத்தியாவசிய சேவைகளை நிறைவு செய்ய முடியாத காரணத்தால், அப்பிரிவிலேயே அவர்களது தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்கான உபரணங்களும் இங்கு வழங்கப்பட்டன.

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/கொரோனா-சிகிச்சைப்-பிரிவுக்கு-பொருள்கள்-விநியோகம்/73-247004

Link to comment
Share on other sites

அரசவிடுமுறை நீடிப்பு- அத்தியாவசிய சேவைகள் இயங்கும்

 

இலங்கை அரசாங்கம் அரச விடுமுறையை மேலும் மூன்று நாட்களிற்கு நீடித்துள்ளது.

இன்று முதல் வியாழக்கிழமை வரை அரச விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனினும் வங்கி சுகாதார சேவை உட்பட அத்தியாவசிய சேவைகளை சேர்ந்தவர்கள் தமது பணிகளில் தொடர்ந்தும் ஈடுபடுவார்கள் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரசினை பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக தனியார் துறையினரையும் விடுமுறையை வழங்குமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

https://www.virakesari.lk/article/77979
 

Link to comment
Share on other sites

கனடாவில், சில பல்பொருள் அங்காடிகள், மாலையில் கடை திறந்ததும் முதல் சில மணித்தியாலங்களுக்கு வயது கூடிய நுகர்வோர்களை மட்டுமே அனுமதிக்கின்றனர். 

இதன் மூலம், அவர்கள் மற்றைய பாவனையாளர்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட உதவுகின்றது. அவர்களும், தமக்கு தேவையான பொருட்களை இளையவர்கள் இல்லாதபொழுது வாங்கக்கூடியதாக உள்ளது. 

Link to comment
Share on other sites

புத்தளத்தில் 60 குடும்பங்களுக்கு வீட்டுக் காவல்

இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து வந்து, புத்தளம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வசித்து வருபவர்கள் அடங்கிய 60 குடும்பங்கள், சுகாதாரச் சேவை அதிகாரிகளால், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், அவர்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற முடியாத வகையில், நீதிமன்ற ஆணையும் பெறப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் சந்திரசிறி பண்டார தெரிவித்தார்.

குறித்த நபர்கள், சுகாதாரச் சேவை அதிகாரிகளின் ஆலோசனைகளைக் கேளாது, சுதந்திரமாகச் சுற்றித் திரிந்துள்ளனர் என்றும் இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து வந்த 800க்கும் அதிகமானவர்கள், வென்னப்புவ மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் தங்கியுள்ளனர் என்றும் இவர்கள், தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்றும், மாவட்டச் செயலாளர் கூறியுள்ளார்.

இவர்களில் பலர், புத்தளம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில், பல விருந்துபசாரங்களையும் நடத்தியுள்ளனர் என்றும் தெரியவருவதாக, சுகாதாரச் சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

http://www.tamilmirror.lk/வடமேல்-வடமத்தி/பததளததல-60-கடமபஙகளகக-வடடக-கவல/94-247039

image_8ddfc1e01f.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

14 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் சோதனை..! விரும்பினால் இலங்கைக்குள் நுழையலாம், இல்லையேல் திரும்பி செல்லுங்கள். அறிவித்தல்..

air-cor-air-fo.jpg

கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் இலங்கைக்குள் நுழையும் வெளிநாட்டவர்கள் தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றது. 

குறிப்பாக தனிமைப்படுத்தல் சோதனையில் சுமார் 2 ஆயிரம் வெளிநாட்டவர்களை தங்கவைத்திருப்பதுடன், சோதனைக்குட்படாதவர்களை தேடி கண்டுபிடித்து சோதித்துக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் இலங்கைக்குள் வரும் வெளிநாட்டவர்கள் சிலர் தனிமைப்படுத்தல் சோதனைக்கு மறுக்கும் நிலையில், இன்றைய தினம் விமானம் மூலம் இலங்கைக்கு வந்த வெளிநாட்டவர்களிடம் விமானப்படையினர் ஒரு விடயத்தை மட்டுமே கூறியிருக்கின்றனர்.

அதாவது 14 நாட்கள் தனிமைப்படுத்தல் சோதனை கட்டாயம் உண்டு விரும்பினால் பேருந்தில் ஏறி இலங்கைக்குள் நுழையலாம், இல்லையேல் எங்கிருந்து வந்தீர்களோ அங்கேயே திரும்புங்கள் என்பதாகும்.

https://jaffnazone.com/news/16464

Link to comment
Share on other sites

இலங்கையில் மேலும் ஆறு பேருக்கு கொரோனா தொற்று
J.A. George   / 2020 மார்ச் 17 , பி.ப. 05:02 - 0      - 233

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் ஆறு பேர் இன்று (17) இனங்காணப்பட்டுள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க இதனை தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.

அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இலஙகயல-மலம-ஆற-பரகக-கரன-தறற/150-247112

Link to comment
Share on other sites

இராணுவ தளபதிக்கு புது பதவி

Editorial   / 2020 மார்ச் 17 , பி.ப. 03:36 - 0      - 109
கொவிட்19 வைரஸ் தொற்றினை கட்டுபடுத்துவது தொடர்பிலான தேசிய மத்திய நிலையத்தின் பிரதானியாக இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மத்திய நிலையமானது, இலக்கம் 1090 ஸ்ரீ ஜயவர்தனபுர ராஜகிரிய என்ற முகவரியில் அமைந்துள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/இரணவ-தளபதகக-பத-பதவ/175-247084

Link to comment
Share on other sites

முல்லைத்தீவில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கை

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கொரோனா தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் பிரதேச சபையால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பது தொடர்பாக, உள்ளூராட்சி திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட அறிவித்தல்களை, ஒலிபொருக்கி மூலம் கிராமம் கிராமமாக சென்று மக்களுக்கான அறிவிப்பை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இதன்போது, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் வருபவர்கள் தொடர்பான விவரங்களை, அருகில் உள்ள பிரதேச சபைகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அறியத்தருமாறும் அறிவிக்கப்பட்டு வருகின்றது. 

http://www.tamilmirror.lk/வன்னி/முல்லைத்தீவில்-மக்களுக்கு-விழிப்புணர்வூட்டும்-நடவடிக்கை/72-247064

Link to comment
Share on other sites

இராணுவ அதிகாரியொருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்ட 28 பேரில் ஒரு இராணுவ அதிகாரியும் உள்ளடங்குவதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள அதிகாரி வெளிநாடுகளிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் பயணிகளை தடுப்பு முகாங்களுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறினார்.

குறித்த நபர் தற்போது அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கொரோனா தனிமைப்படுத்தலுக்காக நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள 12 முகாம்களில் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது நாடு முழுவதும் உள்ள தடுப்பு நிலையங்களில் 15 வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தமாக 204 பேர் தடுத்து வைக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/78050

Link to comment
Share on other sites

கிளிநொச்சியில் கொரோனா நோயாளர்களுக்குத் தனி சிகிச்சைப் பிரிவு தயார் ; பொது வைத்திய அதிகாரி

கிளிநொச்சி மவாட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பில் நோயாளர்கள் இனங்காணப்பட்டால் உடனடியாக அவர்களை தங்க வைத்து சிகிச்சை வழங்கக்கூடிய வகையில் இரண்டு கட்டில்கள் கொண்ட இடமொன்று மாவட்ட பொது வைத்தியசாலையில் தயார்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி இராகுலன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரம்பலை தடுக்கும் செயற்பாடுகள் பல்வேறு மட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச சபையினால் முன்னெடுக்கக்கூடிய செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும்பொருட்டு இன்று (17-03-2020) காலை கரைச் சிப்பிரதேச சபையில் இடம்பெற்ற விசேட அமர்வின்போது கலந்துகொண்டு கருத்து தெரிவித்த வைத்திய அதிகாரி,

கிளிநொச்சி வைத்தியசாலையை பொறுத்தவரையில் மக்களுக்கான சேவைகளை வழங்குவதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம். மக்களின் முழுமையான ஒத்துழைப்புக்கள் மிகமிக அவசியமாகும்.

கிளிநொச்சி பொது வைத்தியசாலையை பொறுத்தவரையில் இவ்வாறு வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி யாராவது இனங்காணப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்தி உடனடியாக வைத்திய சேவைகளை வழங்கக்கூடிய வகையில் வசதிகள் இல்லாவிட்டாலும் இரண்டு கட்டில்களை கொண்ட தனிமையான இடம்தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அதில் தங்கவைத்து யாழ்ப்பாணம் அல்லது வவுனியா வைத்தியசாலைகளுக்கு அனுப்பமுடியும். மாறாக மாவட்டத்தில் ஏனைய வைத்தியசாலைகளில் ஒன்றை தெரிவு செய்து இவ்வாறானவர்களை தங்கவைக்கும் போது வசதிகள் இன்மை மேலதிக மருத்துவ தேவைகளுக்கு மாற்றப்படும் போது சிரமங்களை ஏற்படும்என்று குறிப்பிட்ட அவர்,

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருவோர் கைகளை கழுவிவிட்டு வரக்கூடியவாறும் வைத்தியசாலையில் இருந்து வெளியில் போகும் போதும் கைகளை கழுவிவிட்டு செல்லுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

அத்துடன் நோயாளர்களை பார்வையிட வருவோர் நோயாளர்களுடன் இருத்தல் என்பவற்றை இயன்றளவு குறைத்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

இதனைவிட, மாவட்ட பொதுவைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுகள் இரண்டாக பிரிக்கப்பட்டு சுவாசம் தொடர்பான நோயாளர் தனியாகவும் ஏனைய நோயாளர்கள் தனியாகவும் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டுகின்றன.

எது எவ்வாறு இருப்பினும் நோய் தொற்றுக்களை தடுப்பது என்பது பொதுமக்களின் ஒத்துழைப்புக்களிலேயே தங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/78054

Link to comment
Share on other sites

இலங்கை : நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்வு!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p>

இந்நிலையில் சற்று முன்னர் 34 ஆக காணப்பட்ட எண்ணிகை 9 ஆக மேலும் அதிகரித்து 43 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்தோடு நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை வேகமாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/78072

Link to comment
Share on other sites

இலங்கைக்கான பயணிகள் விமான சேவைகள் நாளை முதல் முடக்கம்

இலங்கைக்கு வருகை தரும் அனைத்து பயணிகள் விமான சேவைகளையும் இடைநிறுத்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முடிவெடுத்துள்ளார்

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (17) இடம்பெற்ற கொரோனா வைரஸ் தொடர்பான விசேட கூட்டமொன்றின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதன்படி, நாளை புதன்கிழமை முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு விமான நிலையங்களை மூடுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

இலங்கை வரும் அனைத்து விமானங்களையும் நிறுத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.

இதன்படி, இலங்கையின் பிரதான சர்வதேச விமான நிலையமாகத் திகழும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் நடவடிக்கைகள் நாளை நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படுகின்றன.

பொருட்கள் மற்றும் சேவைகளுடனான விமான சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இறுதியாக திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் கடந்த சில நாள்களுக்கு முன்னர் மூடப்பட்டது.

https://www.bbc.com/tamil/sri-lanka-51926812

Link to comment
Share on other sites

புத்தளம் மாவட்டம் முடக்கப்படுவதற்கான சாத்தியம் - சுகாதார அமைச்சர்

(எம்.எப்.எம்.பஸீர்)
 

சுய தனிமைப்படுத்தலூடான தொற்று நீக்கல் நடவடிக்கைகளை வெளிநாடுகளில் இருந்து வந்தோர் தொடர்ந்து நிராகரிப்பார்களாயின் , கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறித்த அதிக ஆபத்தை எதிர்கொள்ளும் புத்தளம் மாவட்டத்தை முழுமையாக அல்லது பகுதியளவில் முடக்கும் நிலைமை ஏற்படலாம் என சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாரச்சி தெரிவித்தார்.

கொரோனா அல்லது கொவிட் 19 எனப்படும் வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்கான தேசிய நடவடிக்கை மையத்தில் இன்று மாலை இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறுனார்.

ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் நாம் இது குறித்து தீவிரமாக கலந்துரையாடினோம். உண்மையில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள், குறிப்பாக கொரோனா வைரஸ் வேகமாக பரவிய நாடுகளில் இருந்து மார்ச் முதலாம் திகதி முதல் 10 ஆம் திகதிக்குள் வந்த பலர் சுய தனிமைபப்டுத்தலுடன் கூடிய தொற்று நீக்கல் நடவடிக்கைகளுக்கு உட்படாது நடமாடி வருகின்றனர்.

உண்மையில் இது எமது நாட்டு மக்களின் ஒழுக்கம் சார் பிரச்சினை. சுகாதார சேவைகள் அதிகாரிகள்,  அவ்வாறு வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு ஆலோசனை வழங்கியுள்ள நிலையில், அவர்கள் அதனை கணக்கில் கொள்ளாமல் செயற்படுகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கான ஆபத்து அதிகமான இடமாக புத்தளம் மாவட்டம் உள்ளது. இத்தாலியில் இருந்து, மார்ச் முதலாம் திகதிக்கும் 10 ஆம் திகதிக்கும் உட்பட்ட காலத்தில் வந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படாத பலர் புத்தளம் முழுவதும் உள்ளனர்.

அவ்வாறு அவர்கள் தொடர்ந்தும் சுகாதார அலோசனைகளை புறக்கணித்தால் புத்தளம் மாவட்டத்தின் சில பகுதிகளுக்கான போக்கு வரத்து உள்ளிட்டவை முடக்கப்படலாம். அவ்வாறு அவர்கள் தொடர்ந்தும் பொறுப்பற்று செயற்பட்டால் முடக்கல் குறித்த செயற்பாட்டுக்கு நாம் தள்ளப்படலாம் என்றும் கூறினார்.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா
மார்ச் 01 ஆம் திகதி தொடக்கம் 09 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வருகை தந்தவர்கள் தனிமைப்படுத்தப்படவில்லை எனவும் தற்போதைய நிலையில் இவர்களூடாக கொரோனா தொற்று பரவக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகவும் கொரோன தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவர் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்ர சில்வா தெரிவித்தார்.

அக்காலப்ப்குதியில் சுமார் 1500  முதல் 2000 பேர் இவ்வாறு வருகை தந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியதுடன் இவர்களில் 800 பேர் வரை புத்தளம் மாவட்டத்தில் வசிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

view-source:https://www.virakesari.lk/article/78076

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும், இலவசமாக மாஸ்க் விநியோகம்..! மாநகர முதல்வா், உறுப்பினா் புதிய முயற்சி..

Mask-2y.jpg

யாழ்.மாநகர முதல்வா் இ.ஆனல்ட் மற்றும் மாநகரசபை உறுப்பினா் லோக தயாளன் ஆகியோா் தங்கள் சொந்த பணத்தில் முக கவசங்களை தயாாித்து யாழ்.பேருந்து நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விநியோகம் செய்துள்ளனா்.

கொரோனா அச்சம் காரணமாக மாஸ்க் கொள்வனவு செய்வது கடினமாகியுள்ளது. குறிப்பாக மாஸ்க் ஒன்றின் விலை 50 ரூபாவாக விற்பனை செய்யப்படும் நிலையில் சாதாரண மக்களும் பாதுகாப்பாக இருக்கவேண்டும். என்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

https://jaffnazone.com/news/16486

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.