Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்

Featured Replies

  • தொடங்கியவர்

info_14.jpg

  • Replies 1.1k
  • Views 268.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் கொரோனா பரவும் அபாயம்: எச்சரிக்கும் மருத்துவர் கேதீஸ்வரன்

இந்தியாவிலிருந்து இரகசியமாக மீன்பிடிப் படகுகள் மூலம் தமிழ்நாட்டிலிருந்து சிலர் இங்கு வருகை தரலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்களால் இலங்கையில் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இந்தியாவில் தற்பொழுது கொரோனா நோயின் பரம்பல் மிகத் தீவிரமாக அதிகரித்துள்ளது. இதனால் இறப்புக்களும் அதிகரித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் இந்தியாவிலிருந்து இரகசியமாக மீன்பிடிப் படகுகள் மூலம் தமிழ்நாட்டிலிருந்து சிலர் இங்கு வருகை தரலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்களால் இலங்கையில் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது.

இவ்வாறு எமது நாட்டிற்குள் வருகை தருபவர்களை சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி பரிசோதனைக்கு உட்படுத்துவதன் மூலம் எமது நாட்டில் இந்த நோய் பரவுவதை தடுக்கக் கூடியதாக இருக்கும்.

எனவே இவ்வாறு யாராவது இரகசியமான முறையில் இந்தியாவிலிருந்து உங்கள் பிரதேசத்திற்கு புதிதாக வருகை தந்திருந்தால் அவர்கள் பற்றிய தகவல்களை உடனடியாக உங்கள் பிரதேசத்திற்குரிய கிராம சேவையாளர், சுகாதார மருத்துவ அதிகாரி மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர் ஆகியோருக்கு அறியத்தரவும்.

அல்லது மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் 24 மணிநேர அவசர தொலைபேசி இலக்கம் 021 222 6666 என்ற இலக்கத்திற்கு அறியத்தரவும் என கூறினார்.

https://newuthayan.com/மீண்டும்-கொரோனா-பரவும்-அ/

  • தொடங்கியவர்

104033455_1849576285178210_1980894825417727642_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தொற்றுக்குள்ளான 25 பேர் குணமடைந்தனர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 25 பேர் குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 446 ஆக காணப்படுகின்றது.

இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களில் 756 கடற்படை அதிகாரிகள் உள்ளடங்குவதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து தொள்ளாயிரத்து 47 ஆக காணப்படுகின்றது.

https://newuthayan.com/கொரோனா-தொற்றுக்குள்ளான-25/

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் 18 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 18 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1946 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில் 514 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும், 1421 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளதாகவும் குறித்த பிரிவு தெரிவித்துள்ளது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மலம-18-கரன-தறறளரகள-அடயளம/150-252119

  • கருத்துக்கள உறவுகள்

குணமடைந்தோர் எண்ணிக்கை 1500ஐ நெருங்கியது!

இலங்கையில் இதுவரை 1,472 பேர் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

இதன்படி இப்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 467 ஆக குறைந்துள்ளது.

இன்று (20) வெளியிடப்பட்ட தகவலின்படி புதிதாக 26 பேர் குணமடைந்து வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://newuthayan.com/குணமடைந்தோர்-எண்ணிக்கை-1500/

  • கருத்துக்கள உறவுகள்

48 மணிநேரத்தில் தொற்றாளர் எவருமில்லை

கடந்த 48 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை.

இதனை, இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இதுவரை 1950 பேர் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனதுடன், அவர்களில் 1498 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன், 441 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றதுடன், 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

 

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/48-மணநரததல-தறறளர-எவரமலல/150-252190

  • கருத்துக்கள உறவுகள்

சற்றுமுன் அறிவிப்பு; புதிதாக 40 பேருக்கு கொரோனா!

இலங்கையில் இன்று (23) இதுவரை 40 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 1,991 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்களில் 29 பேர் இந்தியாவிலிருந்தும், 11 பேர் அமெரிக்காவிலிருந்தும் அழைத்து வரப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 422 ஆக காணப்படுகிறது.

அத்துடன் 1,559 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://newuthayan.com/சற்றுமுன்-அறிவிப்பு-புத/

  • கருத்துக்கள உறவுகள்
On 22/6/2020 at 13:46, உடையார் said:

இதனை, இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

என்ன கொடுமைடா சரவணா ....
எல்லா நாட்டிலும் உயர் நிலை மருத்துவ வல்லுனர்களும் ,சுகாதார அமைச்சர்களும் தான் இந்த கருத்தை தெரிவிப்பார்கள் 
இந்த தரித்திரம் புடிச்ச நாட்டில் .....?

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, அக்னியஷ்த்ரா said:

என்ன கொடுமைடா சரவணா ....
எல்லா நாட்டிலும் உயர் நிலை மருத்துவ வல்லுனர்களும் ,சுகாதார அமைச்சர்களும் தான் இந்த கருத்தை தெரிவிப்பார்கள் 
இந்த தரித்திரம் புடிச்ச நாட்டில் .....?

😀இராணுவ மயமாக்கல்

ஸ்ரீலங்காவில் சமூகத்திலிருந்து முற்றாக அழிக்கப்பட்ட கொரோனா - சுகாதார அமைச்சர்

தற்போது கொவிட் 19 வைரஸ் இந்நாட்டு சமூகத்திலிருந்து முற்றாக அகற்றக்கூடியதாக உள்ளதாக சுகாதர அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று தொடர்பில் இதுவரை ஒரு லட்சம் PCR பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்று நிலைமைக்கு ஆயத்தமாதல் மற்றும் பிரதிபலிப்பு நடவடிக்கைகளின் கீழ் தேசிய சுகாதார தொகுதியில் நோய் பரிசோதனை அளவை அதிகரிக்கும் நோக்கில் சுகாதார மற்றும் தேசிய வைத்திய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் ஆலோசனைக்கமையவும் சுகாதார மற்றும் தேசிய வைத்திய சேவைகள் அமைச்சின் வேண்டுகோளின்படி திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் முல்லேரியா வைத்தியசாலையில் அதி தொழில்நுட்ப மூலக்கூறு உயிரியல் ஆய்வகம், உபகரணங்களுடன் கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது.

corona-ws.png

விசேட நோய்களை கண்டறியும் மூலக்கூறு உயிரியல் ஆய்வகம் நேற்று(24) சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியினால் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

எம்மிடமுள்ள ஆய்வுகூடங்கள் மூலம் நாளொன்றுக்கு 300 பரிசோதனைகள் மாத்திரமே செய்யக்கூடியதாக இருந்தது. தேவையேற்படின் இந்த ஆய்வுகூடத்தில் நாளொன்றுக்கு 1000 பரிசோதனைகளையும் செய்ய முடியும்.

இச் சந்தர்ப்பத்தில் இந்தப் பொறுப்பை ஏற்றுகொண்டமைக்காக முல்லேரியா வைத்தியசாலைப் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது ஒரு இலட்சம் PCR பரிசோதனைகளை மேற்கொள்ள முடிந்ததையிட்டு நாம் மகிழ்ச்சியடையலாம். PCR பரிசோதனையை மேற்கொள்ள பல உபகரணங்களும், திரவங்களும் தேவையாகும்.

இந்த ஒரு உபகரணங்கள் கூட இல்லாமல் இப்பரிசோதனையை மேற்கொள்ள முடியாது. ஜனாதிபதியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் தட்டுப்பாடின்றி PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் மூலம் நோயாளிகளை அடையாளம் கண்டு சமூகத்திலிருந்து வேறுபடுத்தி இன்று கொவிட்-19 நோயை சமூகத்திலிருந்து முற்றாக அழிக்கக் கூடியதாகவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

 

https://www.ibctamil.com/srilanka/80/145802

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை 2001 ஆக உயர்வு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2001 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் (24) 10 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்களில் 7 பேர் அமெரிக்காவிலிருந்து வருகை தந்துள்ளதுடன், ஏனைய மூவரும் கடற்படை உறுப்பினர்கள் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/கரன-வரஸ-தறறளர-எணணகக-2001-ஆக-உயரவ/150-252363

  • கருத்துக்கள உறவுகள்

தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் இனங்காணப்பட்டுள்ளனரென, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 2007 ஆக அதிகரித்துள்ளது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/தறறளரகளன-எணணகக-மலம-உயரவ/150-252398

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் மேலும் 19 பேருக்கு கொரோனா!

இலங்கையில் இன்று (27) இதுவரை 19 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 2,033 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு தொற்று கண்டறியப்பட்ட 19 பேரும் பங்களாதேஷில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 383 ஆக காணப்படுகிறது.

அத்துடன் 1,639 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

https://newuthayan.com/இலங்கையில்-மேலும்-19-பேருக/

  • கருத்துக்கள உறவுகள்

ஜிந்துப்பிட்டியில் 143 பேர் தனிமைப்படுத்தல்

கொழும்பு – ஜிந்துப்பிட்டி செல்லும் வீதி முடக்கப்பட்டு, 29 குடும்பங்களை சேர்நத 143 பேர் சுய தனிப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து நாடு திரும்பி 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து, கொழும்பு – ஜிந்துபிட்டியிலுள்ள தனது வீட்டுக்கு திரும்பிய நிலையில் மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது.

இந்நிலையிலேயே அவர் இதை தெரிவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் மீண்டும் கொரோனா! மூடப்பட்டது ஜிந்துபிட்டி வீதி..!

625.300.560.350.160.300.053.800.450.160.90-2.jpg?189db0&189db0

 

கொழும்பு − ஜிந்துபிட்டி பகுதியில் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய நிலையில், வீட்டில் 14 நாள் சுயதனிமைப்படுத்தப்பட்ட ஒருவருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அந்த பகுதி தற்காலிகமாக மூடப்பட்டது.

இங்கு 29 குடும்பங்களை சேர்ந்த 143 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

 

https://newuthayan.com/கொழும்பில்-மீண்டும்-கொரோ/

  • கருத்துக்கள உறவுகள்

சிறை கைதியுடன் பழகிய 174 பேருக்கு பிசிஆர் சோதனை!

pcr-exame.jpg?189db0&189db0

 

வெலிக்கடை சிறைச்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளியான கைதியுடன் பழகிய 174 பேரும் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் உள்ளவர்களும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று இராணுவத் தளபதி இன்று (07) சற்றுமுன் தெரிவித்துள்ளார்.

இவர்களது முடிவுகள் இன்று மாலை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://newuthayan.com/சிறை-கைதியுடன்-பழகிய-174-பேர/

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று

PicsArt_06-27-04.30.13.jpg?189db0&189db0

 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 03 பேர் இன்று (08)அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2084 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில், 1967 பேர் குணமடைந்துள்ள நிலையில், 106 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

2020-07-08_1.png?189db0&189db0
 
 
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் மேலும் 56பேருக்கு கொரோனா

கந்தக்காடு பிரசேதத்தில் அமைந்துள்ள போதை பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சையளிக்கும் நிலையத்தில்  56 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்த வெலிகடை சிறைச்சாலை கைதிகள் மற்றும் ஊழியர்கள் 450 பேரிருக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, அவர்களில் 56 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, இன்று (09) காலை மாரவில பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார்.

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்ட பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இலஙகயல-மலம-56பரகக-கரன/150-252980

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தொற்றாளி பஸ்களில் பயணித்தார்!

1587360172-CTB-Bus-2.jpg?189db0&189db0

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பொலனறுவை – கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தின் ஆலோசகர் பஸ்களில் பயணித்துள்ளார் என்று தொற்று நோய் பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார்.

பஸ்களில் பயணித்த குறித்த ஆலோசகருடன் தொடர்புடையோரை கண்டறியும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

https://newuthayan.com/கொரோனா-தொற்றாளி-பஸ்களில்/

  • கருத்துக்கள உறவுகள்

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் மேலும் 196 பேருக்கு கொரோனா!

breakingcorona2-960x540.jpg?189db0&189db0

 

பொலனறுவை – கந்தக்காட்டில் அமைந்துள்ள போதைப் பொருள் பாவனையுடன் தொடர்பு உடைய நபர்களுக்கான புனர்வாழ்வு மையத்தில் மேலும் 196 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று இன்று (10) சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த மையத்தில் இதுவரை 253 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

 

https://newuthayan.com/கந்தக்காடு-புனர்வாழ்வு-2/

 

  • கருத்துக்கள உறவுகள்

காற்றிலும் பரவுதாமே?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

காற்றிலும் பரவுதாமே?

ஆமா கவனமாக இருங்கள்

 

கந்தக்காடு மையத்தில் உள்ளவர்களின் உறவினர்கள் தனிமைப்படுத்தல்

kandhakadu.jpg?189db0&189db0

பொலனறுவை – கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளவர்களின் உறவினர்கள் 119 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த மையத்தில் உள்ள கைதிகளை பார்வையிடுவதற்காக கடந்த மார்ச் முதல் ஜுலை மாதம் வரை வருகைதந்த உறவினர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

 

https://newuthayan.com/கந்தக்காடு-மையத்தில்-உள்/

  • கருத்துக்கள உறவுகள்

கந்தக்காட்டில் சற்றுமுன் மேலும் 87 பேருக்கு கொரோன உறுதி!

பொலனறுவை – கந்தக்காட்டில் அமைந்துள்ள போதைப் பொருள் பாவனையுடன் தொடர்பு உடைய நபர்களுக்கான புனர்வாழ்வு மையத்தில் மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று இன்று (10) மாலை சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த மையத்தில் இன்று மட்டும் 283 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இதுவரை மாெத்தமாக 340 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

https://newuthayan.com/கந்தக்காட்டில்-சற்றுமுன/

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் மேலும் 7 பேர் தனிமைப்படுத்தல்!

யாழ்ப்பாணம் – கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து வந்த ஒருவருடன் பழகியோரே இவ்வாறு தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

முன்னதாக மாநகர சபை பகுதி மற்றும் சண்டிலிப்பாயை சேர்ந்த 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://newuthayan.com/யாழில்-மேலும்-7-பேர்-தனிமை/

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கை இடைநிறுத்தம்; இராணுவத் தளபதி

July 11, 2020

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கை எதிர்காலத்தில் மட்டுப்படுத்தப்படும் என இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 6000 இற்கும் அதிகமானவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

தற்போதைய நிலமையின் அடிப்படையில் தனிமைப்படுத்தல் முகாம்களில் போதியளவு வசதி இல்லாத காரணத்தால் இவ்வாறு மட்டுப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://thinakkural.lk/article/53655

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.