Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் 600 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன – அரசாங்க அதிபர் மகேசன் தகவல்

November 16, 2020
jaffna-town.600.png

38 Views

யாழ். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் நேரடியாகத் தொடர்புபட்ட, தொற்றுக்குள்ளானவர்களுடன் பயணித்த சுமார் 600 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்தில் நேற்று முன்தினம் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே தனிமைப்படுத்தலில் இருந்தவர். எனினும் அவருடன் நேரடியாகத் தொடர்பு கொண்ட வர்களைத் தொடர்ச்சியாகத் தனிமைப்படுத்தி பி.சி.ஆர்.பரிசோதனையை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை சுகாதாரப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்படுபவர்கள் பி.சி.ஆர். பரிசோதனையின் பின்னர் தனிமைப்படுத்தலிலிருந்து சுகாதாரப் பிரிவினரால் படிப்படியாக விடுவிக்கப்படுகின்றனர். அத்துடன் ஏற்கனவே தொற்று அச்சத்தால் முடக்கல் நிலையிலிருந்த மூன்று கிராமங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. மேலும் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புகளைப் பேணிய சுமார் 600 குடும்பங்கள் நேற்றைய புள்ளிவிவரத்தின்படி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே தனிமைப்படுத்தலில் இருந்தோரின் எண்ணிக்கையை விட சற்று குறைவாகவே இது காணப்படுகின்றது.

இந்துக்களின் கந்தசஷ்டி விரதம் ஆரம்பித்துள்ளதால் பூசகர் மற்றும் திருவிழா உபயகாரர் உட்பட ஐவர் மட்டுமே ஆலயத்துக்குள் செல்ல அனுமதிக்குமாறு ஏற்கனவே சுகாதாரப் பிரிவினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதற்கேற்ப விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

பொதுமக்கள் தொடர்ந்து சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அநாவசியமற்ற பயணங்களைத் தவிர்த்து ஒன்றுகூடல்களையும் தவிர்ப்பதன் மூலமே யாழ்.மாவட்டத்தில் வைரஸ் பரவல் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியும்” என்றார்.

 

 

https://www.ilakku.org/யாழ்ப்பாணத்தில்-600-குடும்/

  • Replies 1.1k
  • Views 268.2k
  • Created
  • Last Reply

கொழும்பு நகரை 3 வாரங்கள் முடக்க வேண்டும் – மாநகர மேயர்

rosy-senanayake.jpg?189db0&189db0

 

கொழும்பு நகரை மூன்று வாரங்கள் பயணக் கட்டுப்பாடுகளுடன் முடக்க வேண்டும் என்று கொழும்பு மாநகர மேயர் ரோஷி சேனநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும்,

“கொழும்பில் கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்படா விட்டால் அது சவாலானதாக மாறும்.

நகரில் முதியோர்கள் அதிகமாக இருப்பதால் அவர்களை தொற்று நோயில் இருந்து பாதுகாக்க முடியுமா என்பது கேள்விக்குள்ளாகி வருகிறது.

தனிமைப்படுத்தலில் உள்ள மட்டக்குளியில் இருந்து நேற்றும் வேலைக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே நகரில் கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் தேவை.

எனவே கொழும்பு நகரை 14 அல்லது 21 நாட்களுக்கு வெளியேற, உள்வரத் தடை விதித்து முழுமையாக முடக்க வேண்டும்” – என மேயர் கோரியுள்ளார்.

https://newuthayan.com/கொழும்பு-நகரை-3-வாரங்கள்-ம/

மேலும் 382 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 382 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் மேலும் 382 பேர் கொரோனா தொற் றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங் கிய தொடர்பு கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி, திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 170 ஆக உயர்ந் துள்ளது.

Coronavirus.COVID19.3-1.jpg

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 674 ஆக உயர்ந் துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 562 பேர் நேற் றைய தினம் குணமடைந்தனர். அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிக் குணமடைந்தவர் களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 806 ஆக அதி கரித்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 5 ஆயிரத்து 807 பேர் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.

இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 464 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்றால் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளமை குறிப் பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/89830

கொரோனாவை விட மிக வேகமாகவும் அதிகமாகவும் மக்களை தாக்கும் சமூக ஊடக போலிச் செய்திகள்

suren-cartoon-01-1024x737.jpegகொரோனாவை விட மிக வேகமாகவும் அதிகமாகவும் சமூக ஊடக போலிச் செய்திகள் மக்களை தாக்குகிறது. இது ஆரோக்கியமற்றது.

கருத்தோவியம் ; ஆர்.சுரேந்திரன்

https://thinakkural.lk/article/89660

நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் 231 பேருக்கு கொரோனா

இலங்கையில் நேற்றைய தினம் பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பெரும் பாலானவர் கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதாக கொவிட் 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நேற்றைய தினம் 387 பேர் கொவிட்-19 கொ ரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள் ளனர் இவர்களில் 231 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந் தவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கம்பஹா மாவட்டத்தில் 42 பேர், களுத் துறை மாவட்டத்தில் 20 பேர் , குருணாகல் மாவட்டத்தில் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

colombo.smog_.jpg

காலி மாட்டத்தில் 02 பேர் , இரத்தினபுரி , கேகாலை, மொன ராகல, யாழ்ப்பாணம் மற்றும் நுவரெலியா ஆகிய மாவ ட்டங்களிலும் தலா ஒரு தொற்றாளர்கள் அடை யாளம் காணப்பட்டுள்ளனர்.

போகம்பர சிறைச்சாலையில் 41 பேர், வெலிகட சிறைச் சாலையில் ஒருவர் , பொலிஸ் அதிகாரிகள் 08 பேர், பொ லிஸ் சிறப்புப் பணிக்குழுவினர் 05 பேர் ஆகியோர் இவ் வாறு கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

https://thinakkural.lk/article/89853

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 124ஆக அதிகரிப்பு

Nov 17, 20200

 

கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 124ஆக அதிகரித்துள்ளது என கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.அத்துடன் கிழக்கு மாகாணத்தில் 9674பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 5091பேர் பி.சி.ஆர்.பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.(15

கொவிட் -19 பாதிப்பில் இலங்கைக்கு 99ஆவது இடம்

கொவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சர்வதேச நாடுகளின் பட்டியலில் இலங்கை 99ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

SL-4-178x300.jpg

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 674 ஆக உயர்வடைந்துள்ளது. இந்த நிலையிலேயே இலங்கை 99 ஆவது இடத்தில் பதிவாகியுள்ளது.

மேலும் 98 ஆவது இடத்தில் பதிவாகியுள்ள பின்லாந்தில் 19 ஆயிரத்து 419 பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

இதேநேரம், 17 ஆயிரத்து 310 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள மடகாஸ்கர் 101 ஆவது இடத்தில் உள்ளது.

குறித்த பட்டியலில் முதல் நூறு நாடுகளின் வரிசையில் ஆகக்குறைந்த மரணங்கள் சிங்கப்பூரில் பதிவாகியுள்ளன. அங்கு இதுவரையில், 28 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதற்கு அடுத்ததாக இரண்டாவது இடத்திலுள்ள இலங்கையில் 61 இறப்புகள் பதிவாகியுள்ளன.

ஏனைய நாடுகளில் நூற்றுக்கும் அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://thinakkural.lk/article/89988

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா : உலகளவில் முன்னேறிய இலங்கை?

 
1-98-696x435.jpg
 74 Views

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சர்வதேச நாடுகளின் பட்டியலில் இலங்கை 99ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

உலகளவில் 54,558,120 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் 1,320,148 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 674 ஆக உயர்வடைந்துள்ளது. 61 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதையடுத்து உலகில் கொரோனா வைரஸ் தொற்று பரவுதலில் இலங்கை 99 ஆவது இடத்தில் பதிவாகியுள்ளது

மேலும் 98 ஆவது இடத்தில் பதிவாகியுள்ள பின்லாந்தில் 19 ஆயிரத்து 419 பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதேநேரம், 17 ஆயிரத்து 310 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள மடகஸ்கார் 101 ஆவது இடத்தில் உள்ளது.

குறித்த பட்டியலில் முதல் நூறு நாடுகளின் வரிசையில் ஆகக்குறைந்த மரணங்கள் சிங்கப்பூரில் பதிவாகியுள்ளன. அங்கு இதுவரையில், 28 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதற்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் உள்ள இலங்கையில் 61 இறப்புகள் பதிவாகியுள்ளன.

ஏனைய நாடுகளில் நூற்றுக்கும் அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளது.

https://www.ilakku.org/sri-lanka-tops-list-of-corona-infected-countries/

இன்று 401 பேருக்கு உறுதியானது தொற்று!

கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை தொடர்பு மற்றும் அதன் தொடர்பால் உருவான துணைக் கொத்தணி அல்லது இரண்டாம் அலை காரணமாக இன்று (17) இதுவரை 401 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை தொடர்பு மற்றும் அதன் தொடர்பால் உருவான துணைக் கொத்தணி காரணமாக தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 14,568 ஆக உயர்ந்துள்ளது.

இன்று வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய மூவருக்கும் தொற்று உறுதியானது.

இதனுடன் இலங்கையின் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 18,075 ஆகும்.

இதேவேளை மொத்தமாக 12,210 பேர் குணமடைந்துள்ளதுடன், இப்போது 5,799 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

https://newuthayan.com/இன்று-401-பேருக்கு-உறுதியான/

இலங்கையில் கெரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 18,402 ஆக உயர்வு

நாட்டில் மேலும் 327 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் திவுலபிட்டிய – பேலியகொட கொத் தணியில் 325 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 893 ஆக உயர்ந் துள்ளது.

PCR-CORONA-COVID.jpg

வெளிநாட்டில் வருகை தந்த கடற்படையினர் இருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 18 ஆயிரத்து 402 ஆக உயர்ந் துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 377 பேர் நேற் றைய தினம் குணமடைந்தனர். அத்துடன் நாட்டில் கொ ரோனா தொற்றுக்குள்ளாகிக் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 587 ஆக அதிகரித் துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மை யங்களில் 5 ஆயிரத்து 746 பேர் சிகிச்சை பெற்று வருகின் றனர்.

இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 489 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்றால் இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ளமை குறிப் பிடத்தக்கது.

 

https://thinakkural.lk/article/90572

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் 127 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு

 
IMG_0245-696x464.jpg
 29 Views

கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் கொரோனா தொற்றுள்ளவர்கள் 127பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

நேற்று மூன்று நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்,

“நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் ஒருவர் அக்கரைப்பற்றில் அடையாளம் காணப்பட்டவர்.இவர் கொழும்பு-அக்கரைப்பற்று தனியார் பஸ் சாரதியாக கடமையாற்றுபவர்.குறித்த சாரதியுடன் நேரடியாக தொடர்புபட்டவர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பேலியகொட மீன்சந்தையுடன் நேரடியாக தொடர்புபட்டவருக்கு தொற்று உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கெனவே சுயதனிமைப்படுத்தலில் உள்ளவர்.

அதேபோன்று ஆரையம்பதி சுகாதார பிரிவின் ஒல்லிக்குளம் பகுதியில் 37வயதுடைய பெண்னொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரும் கொழுப்புக்கு சென்றுவந்தவர். இவருடன் நேரடியாக தொடர்புகொண்டவர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணாத்தில் ஐந்து வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். பேலியகொட கொத்தனியின் பின்னர் இதுவரையில் 881பேர் எங்களால் பராமரிக்கப்பட்டுள்ளனர். ஐந்து வைத்தியசாலையில் இன்றைய நிலவரத்தில் 228நபர்கள் தற்போது சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

இதேபோன்று இன்னும் மேலும் நான்கு வைத்தியசாலைகள் தயார்படுத்தப் பட்டு வருகின்றன. குச்சவெளி வைத்தியசாலை, பெரியகல்லாறு வைத்தியசாலை, பாலமுனை வைத்தியசாலை, தமன வைத்தியசாலை என நான்கு வைத்தியசாலைகள் 450 நோயாளர்களை பராமரிக்ககூடியவாறு தயார் படுத்தப்படடு வருகின்றது.

எதிர்வரும் காலத்தில் அனைத்து வைத்தியசாலைகளிலும் 950 கொரோனா தொற்றாளர்களை தொற்று இருக்கலாம் என சந்தேகிப்பவர்களையும் பராமரிக்கின்ற வைத்தியசாலைகளாக செயற்படவுள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் இருவர் கிழக்கு மாகாணத்திற்கு வெளியே சென்று இங்கு தொற்றினை கொண்டுவந்துள்ளார்கள். யாராவது வெளி மாகாணத்தில் இருந்து எமது மாகாணத்திற்கு வரும்போது தாங்களாகவே தங்களை அடையாளப்படுத்துங்கள். அதன் பின்னர் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் உங்களை தனிமைப்படுத்துவதா இல்லையா என்பதை தீர்மானிப்பார்கள்.

நாங்கள் இந்த கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த வேண்டுமானால் கிழக்கு மாகாணத்தில் காத்திரமான முடிவுகளை கிழக்கு மாகாணத்தில் எடுக்கவேண்டியுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் அனைத்து போக்குவரத்து பாதைகளும் பாதுகாப்பு தரப்பினரின் உதவியுடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் பொதுச்சுகாதார பரிசோதகரின் வழிகாட்டலின் கீழ் ஐந்து நபர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த குழுக்கள் தொடர்ச்சியான கண்காணிப்பில் ஈடுபடுகின்றது.

எங்களால் வழங்கப்படும் அனைத்துவிதமான சுகாதார வழிமுறைகளையும் கண்டிப்பாக கடைப்பிடிக்கவேண்டிய நிலையுள்ளது. கொரோனா தொடர்பில் ஆரம்பத்தில் விழிப்புணர்வுடன் செயற்பட்டாலும் ஆனால் தற்போது மீண்டும் பழைய நிலையில் செயற்படுகின்றனர்.

ஆனால் தொற்றின் தாக்கம் அதிகரித்துச் செல்கின்றது. மேல்மாகாணத்தில் தினமும் அதிகளவில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். குறித்த பகுதியுடன் கிழக்கு மாகாணத்திற்கு தொடர்புகள் காணப்படுகின்றன. தினமும் பிராயணங்கள் நடைபெறுகின்றன. இவற்றினை நாங்கள் நூறுவீதம் தடுக்கமுடியாது.

சரியான சுகாதார வழிமுறைகளையும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளையும் தொடர்ச்சியாக கண்காணிக்கும்போது தொற்றினை கிழக்கில்   தடுக்கமுடியும்” என்றார்.

https://www.ilakku.org/கிழக்கில்-127-பேர்-கொரோனா-தொ/

 

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் 9 கொரோனா தொற்று மரணங்கள்!

Big-News.gif?189db0&189db0

 

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக மேலும் 9 மரணங்கள் பதிவாகியுள்ளது என்று இன்று (21) சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பை சேர்ந்த ஒன்பது பேரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

விபரங்கள்,

  1. கொழும்பு 2ஐ சேர்ந்த 57 வயது ஆண்.
  2. வெல்லம்பிட்டியை சேர்ந்த 65 வயது ஆண்.
  3. வெல்லம்பிட்டியை சேர்ந்த 75 வயது பெண்.
  4. தெமட்டகொடயை சேர்ந்த 89 வயது ஆண். இவர் வீட்டில் மரணமடைந்தார்.
  5. கொழும்பு 10ஐ சேர்ந்த 48 வயது பெண். இவர் வீட்டில் மரணமடைந்தார்.
  6. கொழும்பு 10ஐ சேர்ந்த 72 வயது ஆண். இவர் வீட்டில் மரணமடைந்தார்.
  7. கொழும்பு 13ஐ சேர்ந்த 69 வயது பெண். இவர் வீட்டில் மரணமடைந்தார்.
  8. வெள்ளவத்தையை சேர்ந்த 76 வயது ஆண்.
  9. கொழும்பை சேர்ந்த 76 வயது பெண்.

இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் 83 பேர் மணமடைந்துள்ளனர். இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காணப்பட்ட மூவர் இதுவரை தற்கொலை, விபத்து மற்றும் துப்பாக்கி சூடு காரணமாக மரணமடைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

https://newuthayan.com/மேலும்-9-கொரோனா-தொற்று-மரண/

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தொற்றாளருடன் தொடர்பு – கிளிநொச்சியில் 516 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

 
quarantine-800-696x348.png
 42 Views

கிளிநொச்சி மாவட்டத்தில் 516 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“கிளிநொச்சி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 516 பேரும் ஏற்கனவே தொற்றாளர்களுடன் அல்லது தொற்று அபாயமுடையவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அண்மையில் திருவையாறு பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியான கொழும்பு ஆட்டுப்பட்டித் தெருவிலிருந்து வருகை தந்திருந்தார்.

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசத்திலிருந்து அவர் குறுக்கு வழியைப் பயன்படுத்தியே இவ்வாறு வருகைதந்துள்ளார். அவர்கள் தமது சமூகப் பொறுப்பை உணராத தன்மையும், தங்களுடைய பாதுகாப்பு மற்றும் ஏனையோருடைய பாதுகாப்புப் பற்றி அக்கறையில்லாத வகையிலும் செயல்பட்டுள்ளார் என்றார்.

 

https://www.ilakku.org/கொரோனா-தொற்றாளருடன்-தொடர/

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் 20 ஆயிரத்தைக் கடந்த கொரோனா எண்ணிக்கை

 
covid.600.jpg
 34 Views

இலங்கையில் இன்று மட்டும் 458 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என  அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 20ஆயிரத்து 967ஆக அதிகரித்துள்ளது. 90க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் மருத்துவப் பல்கலைக்கழகமான ஜான்ஸ் ஹாப்கின்ஸ கூறும்போது, “கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவிய கொரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் 5,91,24,016 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,95,519 பேர் கொரோனாவுக்குப் பலியாகி உள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

 

https://www.ilakku.org/இலங்கையில்-20-ஆயிரத்தைக்-க/

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!

 
1-62-696x387.jpg
 48 Views

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை  தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையில் இது வரையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 20ஆயிரத்து 967ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் மருத்துவப் பல்கலைக்கழகமான ஜான்ஸ் ஹாப்கின்ஸ கூறும்போது, “கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவிய கொரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் 5,91,24,016 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,95,519 பேர் கொரோனாவுக்குப் பலியாகி உள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

 

https://www.ilakku.org/இலங்கையில்-அதிகரிக்கும-2/

  • கருத்துக்கள உறவுகள்

Jaffna Muslim

பெரும்பாலானோருக்கு இறக்கும் வரையில் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியாது – மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றினால் இறக்கும் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது மரணிக்கும் வரையில் தெரியாது என்று அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

இதனால் கொரோனா நோய் அறிகுறிகள் காணப்படும் சந்தர்ப்பத்தில் ஆரம்பத்திலேயே வைத்தியசாலைக்குச் சென்று அது தொடர்பிலான சந்தேகத்தை தெளிவுபடுத்திக்கொள்வது மிகவும் பொருத்தமானது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் வீடுகளில் இறப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றன.

இந்த கொரோனா நோய் விசேடமாக நுரையீரலில் ஏற்படுகிறது. நுரையீரலில் இந்த தொற்று ஏற்பட்டு சிலவேளைகளில் அதற்கான அறிகுறிகள் உங்கள் உடம்பில் காணக்கூடியதாக இருக்காது.

இந்த நோயினால் பயங்கரமான நிலைமையில் இருக்கின்றீர்களா? என்பது குறித்து கண்டறிவதற்கு வழியுண்டு. பொதுவாக ஒருவர் உடலில் இரத்தத்தில் ஒட்சிசனின் அளவு 95வீதத்துக்கு மேற்பட்டதாக இருக்கும்.

நுரையீரலில் இந்த தொற்று நோய் ஏற்பட்ட பின்னர் உடம்பில் பரவும்போது உடலில் ஒட்சிசனின் அளவு 93 வீதமாக குறைவடையும். இதனால் ஒட்சிசன் அளவை பரிசோதித்து அறிந்து கொண்டால் இந்த நோயை கட்டுப்படுத்திக்கொள்ள முடியும். சிகிச்சை உண்டு.

நோய் ஏற்பட்டு வைத்தியசாலைக்கு செல்லாமல் இருந்தால் சிலவேளைகளில் ஆரோக்கியமானவராக இருந்தாலும் அல்லது வேறேதும் நோய்தொற்றாளராக இருந்தாலும் விசேடமாக தொற்றா நோயை எதிர்க்கொண்டிருந்தால் ஆரம்பத்திலேயே இந்த நோயை அறிந்துகொள்ளும் சந்தர்ப்பம் இல்லாமல் போய்விடும்.

சில வேளைகளில் மரணத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சுவாசிப்பதில் சிரமம் போன்ற நிலைமைகளின் போது வைத்தியசாலைகளில் சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்படும். இதன் காரணமாக நோய் அறிகுறிகளை சரியாக புரிந்து செயற்பட வேண்டும்.

நோய் தொற்று ஏற்பட்டிருப்பதாக நீங்கள் சந்தேகித்தால் உடனடியாக பிசிஆர் பரிசோதனையை மேற்கொண்டு வைத்தியரின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

சிகிச்சைக்காக வைத்தியசாலைகள் அல்லது வைத்தியசாலை போன்று நாம் தயார்படுத்தியுள்ள இடங்களில் இரண்டு நாளைக்கு ஒருமுறை ஒட்சிசனின் அளவை பரிசோதித்து பார்ப்போம்.

அவ்வாறான சந்தர்ப்பத்தில் ஒட்சிசனின் அளவு குறைவதாக நாம் கண்டறிந்தால் உடனடியாக சிகிச்சையினை மேற்கொள்வதன் மூலம் இந்த நோய் அதிகரிப்பை எம்மால் தடுக்க முடியும்” என்றும் அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன மேலும் தெரிவித்தார்.

http://athavannews.com/பெரும்பாலானோருக்கு-இறக்/

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணத்தில் இதுவரை 144 பேர் கொவிட்-19 தொற்றாளர்களாக அடையாளம் – மருத்துவர் ஏ.லதாகரன்

 

(வ.சக்திவேல்)

கிழக்கு மாகாணத்தில் 144 பேர் இதுவரை கொவிட்-19 தொற்றாளர்களாக அடையாளப் படுத்தப்பட் டுள்ளனர். இந்நிலையில் அக்கரைப்பற்று சுகாதார அலுவலகப் பிரிவு மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.

Dr-2-300x194.jpeg

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் புதிய கொவிட் – 19 தொற்றாளர்கள் 13 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் அக்கரைப்பற்றில் மாத்திரம் 10 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று சந்தையில் எழுமாற்றாக 20 பேருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர்.பரிசோதனையின் போதே இந்த 10 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதையடுத்து அக்கரைப்பற்று சுகாதார அலுவலகப் பிரிவு தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு தொடர் பிசிஆர் பரிசோதனைகள் மற்றும் ஏனைய பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பொது மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

பேலியகொட மீன் சந்தைக் கொத்தணி போன்று இங்கும் சிறிய கொத்தணி ஏற்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, இதிலிருந்து அனைவரையும் பாதுகாக்க சுகாதாரத் துறையில் அதிகாரிகள், பாதுகாப்புத் தரப்பினர் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர். இதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்.

புதன்கிழமை (25) அடையாளப்படுத்தப்பட்ட 13 புதிய தொற்றாளர்களில் அக்கறைப்பற்றில் 10 பேரும், காத்தான்குடியில் இருவரும், சாய்ந்தமருதில் ஒருவருமாவர்.

காத்தான்குடியில் அடையாளப்படுத்தப்பட்டவர்களில் ஏற்கனவே தொற்றுக்குள்ளான பெண்ணுடன் நேரடித் தொடர்புட்ட பெண் ஒருவரும் மற்றும் கொழும்பிலிருந்து வந்த ஒருவரும் அடங்குவர்.
கிழக்கு மாகாணத்தில் 144 பேர் இதுவரை கொவிட்-19 தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதில் வியாழக்கிழமை வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 85 பேரும், திருகோணமலை மாவட் டத்தில் 16 பேரும், அம்பாறை பிராந்தியத்தில் 8 பேரும் கல்முனை பிராந்தியத்தில் 35 பேரும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோன்று டெங்கின் தாக்கமும் அதிகரித்து வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்தவும் பொது மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

 

https://thinakkural.lk/article/92891

  • கருத்துக்கள உறவுகள்

இன்று 559 பேருக்கு தொற்றியது!

கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை தொடர்பு மற்றும் அதன் தொடர்பால் உருவான துணைக் கொத்தணி அல்லது இரண்டாம் அலை காரணமாக இன்று (26) இதுவரை 559 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை தொடர்பு மற்றும் அதன் தொடர்பால் உருவான துணைக் கொத்தணி காரணமாக தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 18,491 ஆக உயர்ந்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய 6 பேருக்கும் இன்று தொற்று உறுதியானது. இதனுடன் இலங்கையின் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 22,028 ஆகும்.

இதேவேளை மொத்தமாக 15,816 பேர் குணமடைந்துள்ளதுடன், இப்போது 6,113 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

https://newuthayan.com/இன்று-559-பேருக்கு-தொற்றியத/

 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் கொரோனா – தனியார் வைத்தியசாலையும் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டன

யாழ்ப்பாணம் மாநகரில் திருநெல்வேலியில் தனியார் வைத்தியசாலையின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் மற்றும் 4 வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பாலமுரளி அறிவுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் – கொழும்பு பயணிகள் மற்றும் பொருள்கள் சேவையில் ஈடுபடும் அதி சொகுசு பஸ் மற்றும் பாரவூர்தி வாடிக்கையாளர் நிலையமும் புடவையகம் ஒன்றும் நாவாந்துறையில் ஒரு வியாபார நிலையமும் இவ்வாறு உடனடியாக மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து காரைநகர் வந்த ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை நேற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் சென்று வந்த இடங்கள் சுகாதாரத் துறையினரால் இனங்காணப்பட்டு தொடர்புடையவர்கள் சுயதனிமைப்படுத்தப்படுகின்றனர்.

இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியே யாழ்ப்பாணம் மாநகர சபை பிரிவில் தனியார் வைத்தியசாலையின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் 4 வர்த்தக நிலையங்கள் மூப்பட்டுள்ளன. தனியார் வைத்தியசாலையின் பணியாளர்கள் மற்றும் வர்த்தக நிலையங்களின் ஊழியர்கள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு முடிவுகள் கிடைத்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

 

https://www.ilakku.org/யாழ்ப்பாணத்தில்-கொரோனா-2/

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா நோயாளி யாழ்நகரில் சென்ற இடங்கள் மூடப்பட்டன

 
1-200.jpg
 43 Views

கொழும்பில் இருந்து யாழ் மாவட்டத்திற்கு அண்மையில் வருகை தந்த ஒருவர் சுகாதார வைத்திய அதிகாரிக்கு எவ்வித தகவலையும் வழங்காது, கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காது மாவட்டத்தின் பல இடங்களுக்கு சென்று வந்ததினால் வட மாகாண மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆ. கேதீஸ்வரன் முக்கிய செய்தி குறிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,“கொழும்பில் இருந்து யாழ் மாவட்டத்திற்கு அண்மையில் வருகை தந்த ஒருவர் சுகாதார வைத்திய அதிகாரிக்கு எவ்வித தகவலையும் வழங்காததுடன், சுயதனிமைப்படுத்தலையும் கடைபிடிக்காது யாழ் மாவட்டத்தில் உள்ள பல நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள், மற்றும் உறவினர்கள், நண்பர்கள் போன்ற தனியார் வீடுகளுக்கும் சென்று வந்துள்ளார்.

பின்னர் அவரைப் பற்றிய தகவல் சுகாதார திணைக்களத்தினருக்கு கிடைத்ததை தொடர்ந்து இவர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு  PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டடுள்ளது.

அதனால் இவர் சென்று வந்த அனைத்து நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கணக்கானவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஒரு தனிமனிதனின் சமூக பொறுப்பற்ற தவறான நடவடிக்கையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழாது தவிர்ப்பதற்கு இவ்வாறு வேறு மாகாணங்களில் இருந்து தமது பிரதேசங்களுக்கு வருகை தந்தோர் பற்றிய தகவல்களை அவர்களோ அல்லது பொதுமக்களோ தமது பிரிவு சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர், குடும்பநல உத்தியோகத்தர் அல்லது வடமாகாண சுகாதார சேவை திணைக்களத்தின் 24மணிநேர அவசர அழைப்பிலுள்ள 021 222 6666 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு விபரங்களை அறியத்தர வேண்டும்.

இதன் மூலம் தங்;களையும் சமூகத்தையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டிய அவசர சேவைகளை எம்மால் வழங்க முடியும். இந்நோய் எமது மாகாணத்தில் பரவாதிருக்க எமக்கு தகவல்களை வழங்கி ஒத்துழைப்பு வழங்கவும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/கொரோனா-நோயாளி-யாழ்நகரில்/

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியை முடக்க வேண்டும்! ரோஸி சேனாநாயக்க  - Tamilwin

கொழும்பில் நிலைமை ஆபத்தில் – ரோஸி சேனாநாயக்க எச்சரிக்கை

கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் அதிகமான மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படுவதால் கொழும்பில் நிலைமை ஆபத்தாக உள்ளது என கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க எச்சரித்துள்ளார்.

அண்மையில் பதிவானாக கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகள் மற்றும் தொற்று உறுதியான நோயாளிகள் பெரும்பாலும் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டனர்.

இந்நிலையில் ஓய்வுபெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் சேவைகளைப் பெற மருத்துவ பீடத்தின் உதவியையும் ரோஸி சேனாநாயக்க நாடியுள்ளார்.

தற்போது கொழும்பில் ஒரு நாளைக்கு மேற்கொள்ளப்படும் 991 பி.சி.ஆர் சோதனைகளில் 249 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியும்போது, அது ஒரு தீவிரமான பிரச்சினை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு கொழும்பின் நிலைமையைக் கட்டுப்படுத்த கொழும்பு மாநகர சபையுடன் இணைந்து அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த கொழும்பு மாநகர சபைக்கு தனியார் மற்றும் வெளிநாட்டு தரப்பினர்களிடம் இருந்து நன்கொடை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

http://athavannews.com/கொழும்பில்-நிலைமை-ஆபத்தி/

  • கருத்துக்கள உறவுகள்

கல்முனையில் மேலும் 14 பேருக்கு தொற்று!

Corona.jpg?189db0&189db0

 

அம்பாறை – கல்முனை பகுதியில் இன்று மேலும் 14 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது.

இதையடுத்து கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ.லதாகரன் தெரிவித்தார்.

https://newuthayan.com/கல்முனையில்-மேலும்-14-பேரு/

 

  • கருத்துக்கள உறவுகள்

118 ஆக அதிகரித்தது கொரோனா மரணம் – மேலும் இருவர் பலி; நேற்றும் 503 பேருக்குத் தொற்று

 
corona-test-02-696x348.jpg
 9 Views

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் 2 பேர் மரணமடைந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி நாட்டில் கொரோனாத் தாக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை நேற்றிரவு 118 ஆக அதிகரித்துள்ளது.

கண்டி – கலஹ பகுதியைச் சேர்ந்த 72 வயதான ஒருவரும், அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த 81 வயதான பெண்ணொருவருமே உயிரிழந்துள்ளனர். கண்டியில் பதிவாகியுள்ள முதலாவது மரணம் இதுவாகும்.

இதேவேளை, இலங்கையில் நேற்றும் 503 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 987 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 17 ஆயிரத்து 560 பேர் குணமடைந்துள்ளனர். 6 ஆயிரத்து 309 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

https://www.ilakku.org/118-ஆக-அதிகரித்தது-கொரோனா-மர/

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு உட்பட இலங்கையின் அதிக ஆபத்தான இடங்களின் விபரம் வெளியானது

இலங்கையில் கொரோனாவால் அதிக ஆபத்துள்ள பகுதிகள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இதை வெளியிட்டுள்ளது.

சுகாதாரப் பகுதிகளின் மருத்துவ அதிகாரிகளின் வகைப்படுத்தல், பதிவான வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களின் விநியோகம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு அலகு ஒரு வரைபடத்தை வெளியிட்டது.

நவம்பர் 25 ஆம் திகதியுடன் முடிவடைந்த கடைசி 14 நாட்களுக்குள் பதிவாகியுள்ள சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது.

 

இதில் வடக்கில் கண்டாவளை, கிளிநொச்சி, நல்லூர் போன்ற இடங்கள் அதிக ஆபத்துள்ள பகுதிகளாக உள்ளன.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

 

https://www.ibctamil.com/srilanka/80/155321?ref=imp-news

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் 1010 குடும்பங்களைச் சேர்ந்த 2220 பேர் சுயதனிமைப்படுத்தலில்

 

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

 
IMG_0244-696x464.jpg
 18 Views

கிழக்கு மாகாணத்தின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 257ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் 32பேரும் அட்டாளைச்சேனையில் 06பேரும் ஆலையடிவேப்பு பகுதியில் ஒருவரும் வாழைச்சேனை பகுதியில் 04பேரும் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர்  கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

அக்கரைப்பற்று பொதுச்சந்தையுடனும் பேலிகொட மீன்சந்தையுடனும் தொடர்புபட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புகொண்டவர்களே அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதுவரையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 138பேர்கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 92பேரும் அம்பாறை சுகாதார பிரிவில் 11பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 16பேரும் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

அக்கரைப்பற்று பொதுச்சந்தையுடன் தொடர்புபட்ட 109பேர் இதுவரையில் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் அக்கரைப்பற்று பொதுச்சந்தையுடன் தொடர்புபட்டவர்கள் தொடர்பான தகவல்களை பொதுச்சுகாதார பிரிவினருக்கு வழங்குமாறும் கொழும்பு உட்பட பிற இடங்களில் இருந்து வருகைதருவோர் தொடர்பிலும் பொதுமக்கள் விழிப்பாக இருந்து சுகாதார மற்றும் பாதுகாப்பு துறையினருக்கு தகவல்களை வழங்கவேண்டும்” என்றார்.

 

https://www.ilakku.org/கிழக்கில்-அதிகரிக்கும்-க/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.