Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை மறைத்த கொரோனா தொற்றாளி மீது வழக்கு பதிவு!

இத்தாலியில் இருந்து நாடு திரும்பியதையும் கொரோனா அறிகுறிகளையும் மறைத்து நெஞ்சுவலி என கூறி ராகமை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா தொற்றாளிக்கு எதிராக பொலிஸாரினால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜா-எல பகுதியிலிருந்து நெஞ்சுவலிக்கு சிகிச்சை பெற வந்த குறித்த நோயாளியிடம் கொரோனாவிற்கான அறிகுறிகள் உள்ளனவா, அல்லது வௌிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்களுடன் தொடர்புகள் காணப்பட்டதா என அடிக்கடி வினவிய போதும், அவற்றை அவர் மறுத்துள்ளார்.

இதனால் இருதய நோய்க்கு தேவையான சிகிச்சையை வழங்குவதற்காக அவரை சாதாரண விடுதியில் வைத்தியர் அனுமதித்துள்ளார்.

எனினும், வைத்தியர்கள் அந்நபர் தொடர்பில் உறவினர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது, அவர் இத்தாலியில் இருந்து வருகை தந்தவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியமை தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதன் காரணமாக அவர் தங்கியிருந்த விடுதியிலிருந்த விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், சிற்றூழியர்கள், தாதியர்கள், மருத்துவ உதவியாளர்கள், விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த நோயாளிகள், அவர்களை பார்வையிட வந்தவர்கள் என அனைவரையும் தனிமைப்படுத்த நேரிட்டுள்ளது.

https://newuthayan.com/உண்மையை-மறைத்த1/

  • Replies 1.1k
  • Views 268.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

thumb_covid1.gif

சுய தனிமைப்படுத்தலை முறையாக செய்யாத வெளிநாட்டிலிருந்து வந்த 142 பேருக்கு எதிராக நடவடிக்கை

சுய தனிமைப்படுத்தல், தொற்று நீக்கல் நடவடிக்கைகளை முறையாக செய்யாத வெளிநாட்டிலிருந்து வந்த 142 பேருக்கு, தனிமைப்படுத்தல், தொற்று நீக்கல் நடவடிக்கைகளை சரியான முறையில் முன்னெடுக்குமாறு இரு நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளன.

self-isolation.jpg


ஹட்டன் மற்றும் மாரவில நீதிவான் நீதிமன்றங்கள் இது தொடர்பிலான நீதிமன்ற உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக பொலிஸாரும், பொது சுகாதார பரிசோதகர்களும் தெரிவித்தனர்.

வெளிநாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்தல், தொற்று நீக்கல் நடவடிக்கைகளுக்குட்படாத அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 76 பேருக்கும் மாரவில பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 66 பேருக்கும் எதிராக முறையாக தனிமைப்படுத்தலில் ஈடுபடவில்லை என பொலிஸாரும் பொது சுகாதார பரிசோதகர்களும் தொற்று நோய் தடுப்பு கட்டளை சட்டத்தின் கீழ் அறிக்கை சமர்ப்பித்தனர். அதனை ஆராய்ந்தே நீதிமன்றங்கள் குறித்த 142 பேருக்கும் முறையாக சுய தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நீக்கல் நடவடிக்கையில் ஈடுபட உத்தரவிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/78291

  • தொடங்கியவர்

18 ஆம் திகதி தியத்தலாவை வைத்தியசாலைக்கு சென்றோரை தேடும் சுகாதாரத் துறை!

 

எம்.எப்.எம்.பஸீர்

தியத்தலாவை ஆதார வைத்தியசாலைக்கு கடந்த 18 ஆம் திகதி முற்பகல் வேளையில் வெளி நோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்கு சென்றோரை சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுமாறு ஹப்புத்தலை சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பண்டாரவளையில் வைத்து கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவரிடம் இருந்து பெற்ற தகவலுக்கு அமைய குறித்த தொற்றாளர் கடந்த 18 ஆம் திகதி முற்பகல் 9.00 மணிக்கும் முற்பகல் 11.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் தியதலாவை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இந் நிலையில் அன்றைய தினம் அந்த நேரத்தில் குறித்த வைத்தியசாலைக்கு சென்றவர்கள், 0715125854/ 0711170007 எனும் இலக்கங்கள் ஊடாக தமக்கு அறியத் தருமாரும், அது குறித்த ஆலோசனைகளையும், சுய தனிமைபப்டுத்தல் தொடர்பிலான ஆலோசனைகளையும் தாம் வழங்க தயாராக உள்ளதாகவும் ஹப்புத்தளை சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகம் தெரிவித்தது.

https://www.virakesari.lk/article/78304

 

  • தொடங்கியவர்

கொரோனா தொற்று: ‘தீண்டத் தகாதவர்கள் போல் நடத்த முயலாதீர்கள்’

வி.சுகிர்தகுமார்   / 2020 மார்ச் 19 , பி.ப. 06:13

கொரோனா தொற்றுள்ளவர்களை தீண்டத் தகாதவர்கள் போல் நடத்த முயலாதீர்கள் என்றும் அவ்வாறானவர்களை அடையாளம் கண்டால் அந்நோயிலிருந்து அவர்களை மீண்டெடுப்பதற்கான ஆக்க பூர்வமான நடவடிக்கையை முன்னெடுங்கள் என்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வுக் கூட்டத்தில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

கொரோனா தொடர்பில் உத்தியோகத்தர்களைத் தெளிவூட்டும் விழிப்புணர்வு செயலமர்வு அரச அலுவலகங்களில் இடம்பெற்று வருகின்றன.

இதற்கமைவாக, ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் நேற்று (18) நடைபெற்ற விழிப்புணர்வுக் கருத்தரங்கில், ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் வைத்திய அதிகாரி அகிலன், உதவிப் பிரதேச செயலாளர் சுவாகர் இராணுவ உயர் அதிகாரிகள், அலுவலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

http://www.tamilmirror.lk/அம்பாறை/கரன-தறற-தணடத-தகதவரகள-பல-நடதத-மயலதரகள/74-247286

  • தொடங்கியவர்

உயிா்கொல்லி கொரோனா | விளக்கும் இலங்கை வைத்தியர்

 

  • தொடங்கியவர்

இலங்கையில் ஒரே நாளில் 13 புதிய தொற்றாளர்கள் அடையாளம்

  இலங்கையில் கொவிட் - 19 தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது. கொவிட் - 19 தொற்று பரவுவதை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு பணியகம் இதனைத் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினத்தில் மாத்திரம் 13 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக அந்த பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

17 தனிமைப்படுத்தல் மையங்களில் 2 ஆயிரத்து 738 பேர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 30 பேர் வெளிநாட்டவர்களாவர்.  

 

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றமையினால் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களிலும் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளிலும் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.  பொது சுகாதார பரிசோதகர்களும், பிரதேச சுகாதார அதிகாரிகளும் இந்த நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர்.

முந்தல் காவற்துறையினரால் கடந்த 8 ஆம் தி;கதி வாகன விபத்து தொடர்பில கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அங்கொடை தேசிய தொற்று நோயியல் நிறுவகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதன்காரணமாக சந்தேகநபர் தடுத்துவைக்கப்பட்டிருந்த முந்தல் காவற்துறை மற்றும் நீதிமன்ற கட்டடங்கள் என்பன பிரதேச பொதுசுகாதார பிரிவினால் கிருமி தொற்று நீக்கலுக்கு உட்படுத்தப்பட்டது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றியிருந்த போதும் அதனை வெளி;ப்படுத்தாமல் ராகமை மருத்துவமனையில் மாரடைப்பு சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற நபர் தொடர்பில் காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த பிரதி காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹண, குறித்த நபருக்கு சிகிச்சையளித்த மருத்துவர,; தங்குமிட விடுதி பணியாளர்கள், அருகில் இருந்த நோயாளர்கள் என அணைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக குறிப்பிட்டார். அந்த தங்குமிட விடுதியில் இருந்த நோயாளர்களுக்கு கூட வைரஸ் தொற்று தொடர்பான அவதான மிக்க நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்றைய தினம் குறித்த நபருக்கு எதிராக வத்தளை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவருக்கும், அவருக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கும் அத்துடன் ஏனையவர்களுக்கும் எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பிரதி காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொரேனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் நேரடியாக தொடர்புபட்டுள்ள 24 மருத்துவமனை பணிப்பாளர்கள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் ஆலோசனையின் பேரில் நேற்று கொழும்புக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதன்போது நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த நோய்த்தொற்றானது எல்லா இடத்திலும் பரவி உள்ளது என்ற விடயம் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும், நோய் பரவும் அபாயம் நாட்டில் உள்ளது என்பதை கூறிகொள்வதுடன் குறித்த தரப்பினருடன் தொடர்புகளை கொண்டிராமல் சமூகத்தில் உள்ள பெரும்பாலோனோருக்கு இந்த நோய் தொற்று ஏற்படவில்லை என்றும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.    

http://www.hirunews.lk/tamil/236904/இலங்கையில்-ஒரே-நாளில்-13-புதிய-தொற்றாளர்கள்-அடையாளம்

  • தொடங்கியவர்

thumb_21_03_2020_2.gif

பிரதேசம்               தொற்று     சுகமடைந்தவர்        மரணம்                                  
பொலநறுவை        17                   0                                    0
கொழும்பு                16                   3                                    0
கம்பஹா                 12                   0                                    0
புத்தளம்                   06                   0                                    0
மட்டக்களப்பு          03                   0                                    0
களுத்துறை            03                   0                                    0
இரத்தினபுரி            03                   0                                    0
காலி                         02                   0                                    0
பதுளை                    01                   0                                    0
கண்டி                       01                   0                                    0
கேகாலை               01                   0                                    0
குருநாகல்               01                   0                                    0
வவுனியா               01                   0                                    0
ஏனைய                   05                   0                                    0

மொத்தம்                72                   3                                    0

 

  • தொடங்கியவர்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 ஆயிரம் ரூபா நிவாரணம் வழங்குங்கள்": சம்பிக்க ரணவக்க

கொரோனா வைரஸ் தாக்கத்தை  கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் எவ்வித அறிவித்தலுமன்றி ஊரடங்கு சட்டத்தை அறிவித்து அதனை குறுகிய நேரத்தில் அமுல்படுத்தியதால் பொருளாதர மற்றும் சமூக ரீதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண அடிப்படையில் 10000 ரூபா வழங்கவும்புதிய நாணயத்தாள்களை மக்கள் மத்தியில் அறிமுகம் செய்யவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹெல உறுமய அமைப்பின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

 

யுத்தத்தை வெற்றிகொண்டதை போன்று பரவி வரும் வைரஸையும் கட்டுப்படுத்த முடியும் என்ற மனநிலையில் இருந்து அரசாங்கம் செயற்படுவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். யுத்த வெற்றியை விடுத்து வைத்தியர்களின் ஆலோசனைகளுக்கு அமைய அரசாங்கம் செயற்படுவது அவசியமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பில் அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

அரசாங்கம் ஊடரடங்கு சட்டத்தை அறிவித்தால் பொது மக்கள் பொருளாதார மற்றும் அன்றாட வாழ்க்கை செயற்பாடுகளில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பகல் நேரத்திலேயே ஊரடங்கு சட்டத்தை அறிவித்து அதனை அமுல்படுத்தியிருக்க வேண்டும். அவ்வாறுஅறிவித்திருந்தால் மக்கள் தங்களின் தேவைகளை முன்கூட்டியே செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் நேற்று(வெள்ளிக்கிழமை) மக்கள் அன்றாட செயற்பாடுகளில் ஈடுப்பட்டதன் பின்னரே ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டு அது குறுகிய நேரத்தில் அமுல்படுத்தப்பட்டது.

அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதற்கும் சொந்த இடங்களுக்கு செல்லவும் பொது போக்குவரத்து சேவையினை பயன்படுத்திக் கொள்ளவும் அவசர பொருட்க் கொள்வனவிற்காக நகைகளை அடகு வைக்க வங்கிகள், மற்றும் அடகு நிலையங்களில்நெடுநேரம் வரிசையில் காத்துக் கொண்டிருந்தமை காணக் முடிந்தது. இவ்வாறான செயற்பாடுகளினால் மக்கள் பொருளாதார மற்றும் சமூக ரீதியில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

30வரு ட கால சிவில் யுத்தத்தை  நிறைவுக்கு கொண்டு வந்த எம்மால் பரவி வரும் கொடிய வைரஸ் தாக்கத்தையும் கட்டுப்படுத்த முடியும். என்ற மனோநிலையில் அரசாங்கம் செயற்படுவதால் பொது மக்களே இன்று பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

>நடுத்தர வருமானம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவினை பெறும் பயனாளிகளுக்கு அரசாங்கம் 10,000ம் ரூபாயை நிவாரண அடிப்படையில் வழங்குவதுடன் தற்போது புலக்கத்தில் உள்ள நாணயத்தாளுக்கு பதிலாக புதிய நாணயத்தாள்கள் மற்றும் நாணய குற்றிகளை மக்கள் மத்தியில் அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும். நாணயத்தாள் பாவனை ஊடாக இந்த வைரஸ் தீவிரமாக பரவுவதாக குறிப்பிடப்படுகின்றது.

பரவி வரும் கொரோனா வைரஸ் பூகோள ரீதியில் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளன. இதுவரையில் 3 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர். எமது நாடும் இன்று பாரிய பொருளாதார வீழ்ச்சியினை எதிர்க்கொண்டுள்ளது. பொருளாதாரத்தை துரிதமாக முன்னேற்றமடைய  செய்ய வேண்டுமாயின் முறையாக பொருளாதார திட்டங்களை வகுக்க வேண்டும்.

அரசாங்கம் தற்போது தேர்தல் செயற்பாடுகளுக்காக அரசியலமைப்பிற்கு எதிராக நிதி ஒதுக்கியுள்ளது. இதனை விடுத்து மக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டிய உரிய முறையில் செயற்பட வேண்டும். யுத்த வெற்றி மனோ நிலையினை விடுத்து வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைய அரசாங்கம் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/78338

  • தொடங்கியவர்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

  • தொடங்கியவர்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

 

 

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

  • தொடங்கியவர்

 

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

 

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

 

  • தொடங்கியவர்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

 

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

 

  • தொடங்கியவர்

புகைப்பிடிப்போரை மிக எளிதாக தாக்குகிறதாம் கொரோனா..!: அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

புகைப்பிடிக்கும் பழக்கமுடையோரை நேரடியாக மிக எளிதில் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதால் அவ்வாறானவர்கள் அப்பழக்கத்தை உடனடியாக கைவிட வேண்டும்.

விற்பனையாளர்களும் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி சமூக பொறுப்பினை நிறைவேற்ற வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித தெரிவித்ததாவது :

கொரோனா வைரஸ் பரவலினால் இலங்கையும் அவதான நிலைக்குட்பட்டுள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் மற்றும் தவிர்க்க வேண்டிய விடயங்கள் என்பன பற்றி மக்கள் பல சந்தர்ப்பங்களிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்தோடு அரசாங்கத்தால் சட்ட ரீதியான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனினும் சிகரெட் உள்ளிட்ட புகைத்தல் பொருட்கள் பற்றி எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. புகைக்கும் பழக்கம் உடையவர்களுக்கு மிக எளிதில் வைரஸ் பரவக் கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக நாம் ஏற்கனவே தெரிவித்துள்ளோம். எனினும் இன்றும் சிகரெட் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன. இதனை உடனடியாக நிறுத்த வேண்டும்.

புகைப்பிடிப்பவர்கள் நேரடியாக மிக எளிதில் தொற்றுக்குள்ளாவார்கள். எனவே விற்பனையாளர்கள் சுயநலமாக இன்றி பொது நலத்துடன் செயற்பட வேண்டும். அது மாத்திரமின்றி புகைத்தல் பழக்கம் உள்ள ஒவ்வொரு நபரும் தனது வாழ்க்கை மீதும் உயிர் மீதும் நேசம் கொண்டவராக இருந்தால் புகைப்பிடிக்கும் பழக்கத்தை உடனடியாக கைவிடுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

https://www.virakesari.lk/article/78345

  • தொடங்கியவர்

இலங்கையில் மேலும் 4 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் நான்கு பேருக்கு கொரோன தொற்றுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திராதேவி வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் இலங்கையில் இதுவரை 76 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/78354

  • தொடங்கியவர்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், நிற்கிறார் மற்றும் உரை

  • தொடங்கியவர்

 

thumb_21_03_2020_6.gif

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 77ஆக அதிகரிப்பு!

coronavirus-blood-vial-getty-720x450.jpg

கொரோனா வைரஸால் மற்றுமொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர், மேலும் நால்வருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று மொத்தமாக ஐவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாடு முழுவதும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

http://athavannews.com/கொரோனா-தொற்றாளர்களின்-எ-2/

நாம் நினைப்பதை விட எமது எதிரி பலசாலியாக இருக்கலாம் – மட்டக்களப்பு வைத்தியர் எச்சரிக்கை!

89722621_2772989526309442_6211684902396493824_o.jpg

நாம் நினைப்பதை விட எமது எதிரி பலசாலியாக இருக்கலாம் என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குழந்தைநல மருத்துவ நிபுணர் வைத்தியர் விஷ்ணு சிவபாதம் தெரிவித்துள்ளது.

தனது முகப்புத்தகத்தின் ஊடாகவே அவர் இந்த விடயத்தினைக குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘இன்று இலங்கையிலும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு செல்கின்றது.

ஆனால் பொதுமக்களாகிய நாம் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றுதான் தோன்றுகின்றது. ஏனென்றால் பொது இடங்களில் கூடும் மக்களின் செயற்பாடுகள் இதை காட்டி நிற்கின்றன.

அதைவிடவும் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களினதும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர் உடன் நேரடியாக தொடர்புபட்டவர்களினதும் நடவடிக்கைகள் எம்மை சற்று சிந்திக்க வைத்துள்ளது.

சுகாதார அமைச்சுடன் இணைந்து பொது சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதாரப் பரிசோதகர் ஆகியோர் பொலிஸாரின் உதவியுடன் இவர்களை கண்காணித்து வருகின்றனர்.

ஆனாலும் இந்நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் பொழுது அவர்களின் இந்த நடவடிக்கையின் செயல்திறன் குறையலாம் என்பது தவிர்க்க முடியாததாகும்.

இன்று இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸின் உயிரிழப்புகளின் எண்ணிக்கை சீனாவை விட அதிகரித்துள்ளது. இதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளன.

1. இத்தாலியின் சனத்தொகையில் 27.8 சத வீதமானோர் 60 வயதை தாண்டியவர்கள் (சீனாவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 9.5சத வீதம் மட்டுமே)

2. அதிகரித்துவரும் நோயாளர்களின் எண்ணிக்கையால் வைத்தியசாலைகளும் வைத்தியர்களும் ஏனைய உத்தியோகத்தர்களும் அதிகரித்த வேலைப்பளுவுடன் உள்ளமை.

இலங்கையை போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் இந்த நோய் தீவிர தன்மையை காட்டும் பொழுது வைத்தியசாலை கட்டமைப்பு செயலிழக்கும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.

ஏனென்றால் ஒரு வைத்திய விடுதியில் உள்ள உத்தியோகத்தருக்கு கொரோனா நோய் உறுதிப்படுத்தப்படும் பொழுது அவருடன் வேலை செய்த அனைவருமே குறைந்தது 14 நாட்கள் தனிமைப் படுத்தப்பட்டுவார்கள். அதாவது அந்த வைத்திய விடுதி செயலிழக்கின்றது.

இன்று இலங்கையில் இரண்டு வைத்தியர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் பிழையான தகவல்களை வழங்கும் நோயாளர்களே.

இலங்கையின் சனத்தொகையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 12.3 சதவீதமாக இருந்தாலும், கொரோனா நோய் அபரிமிதமாக பரவும் பொழுது அதனால் ஏற்படும் சுகாதார, பொருளாதார, சமூக கட்டமைப்பில் ஏற்படும் தாக்கங்கள் மிக நீண்ட காலத்திற்கு எம்மையும் எமது எதிர்கால சந்ததியினரையும் பாதிக்கலாம்.

அதைவிட இந்த வைரஸினால் எமது பெற்றோர்கள் இறக்கும்பொழுது அவர்களின் இறுதிச் சடங்குகளை நாம் தன்னந்தனியே செய்ய நேரிடலாம்.

சரி இதை தடுப்பதற்கு நாம் என்ன செய்யலாம்?

அரசாங்கத்தினாலும் சுகாதார அமைசாலும் வழங்கப்படும் அறிவுரைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அதாவது எந்த காரணத்தைக் கொண்டும் சன நெரிசலை ஏற்படுத்தக்கூடாது.
எப்பொழுதுமே மக்களிடமிருந்து ஒரு மீட்டர் தூரத்தை பேணுதல் வேண்டும். வெறுமனவே முகக் கவசங்கள் அணிவதால் நீங்கள் பாதுகாக்கப்படுகிறீர்கள் என்று நம்ப வேண்டாம்.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் வைத்தியர்களிடம் கொரோனா தொற்று பற்றிய உங்களது உண்மையை மறைக்க வேண்டாம். (அண்மையில் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களும் அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்களும்).

வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் கண்டிப்பாக தங்களை 14 நாட்கள் சுய தனிமைப்படுத்திக் கொள்ளவும். இதுதான் நீங்கள் இப்பொழுது உங்கள் தாய் நாட்டுக்குச் செய்யும் மிகப்பெரிய உதவி. இவை நடைபெறுகின்றதா என்பதை அவர்களின் உறவினர்களும் அயலவர்களும் சற்று கண்காணிப்பது சிறந்தது.

கொரோனா நோயாளர் உடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் செய்யவேண்டியவை

1. தங்களை தொடர்பு ஏற்படுத்திய நாளிலிருந்து 14 நாட்கள் தனிமைப் படுத்திக் கொள்ளுதல். இதற்கு உங்கள் வீட்டில் நன்கு காற்றோட்டம் உள்ள ஒரு அறையை பயன்படுத்தலாம்.

2. வீட்டிலுள்ள மற்றவர்களுடன் எந்த ஒரு தொடர்பையும் வைக்க வேண்டாம். முடியும் என்றால் தனியான மலசல கூடத்தை பயன்படுத்தவும். அவ்வாறு இல்லையென்றால் நீங்கள் பயன்படுத்திய பின்னர் மலசல கூடத்தை நன்கு சுத்தப்படுத்தவும்.

3. குளித்தபின் தனியான துவாயை பயன்படுத்தவும்.

4. உங்களது ஆடைகளை பயன்படுத்திய பின்னர் நன்றாக கழுவி வெயிலில் காயவிடவும்.

உங்களுக்கு கொரோனா நோய்க்குரிய அறிகுறிகள் தோன்றும் பொழுது (வறண்ட இருமல், தொண்டை வலி மற்றும் காய்ச்சல்) ஒரு முகக் கவசத்தை அணிந்துகொண்டு தனியான ஒரு வாகனத்தில் வைத்தியசாலைக்கு அறிவித்த பின்னர் கொண்டு செல்லவும். வைத்தியசாலையில் உங்களுக்காக விசேடமாக ஒதுக்கப்பட்ட இடத்திற்கு சென்று வைத்தியரை அணுகவும்.

மூடநம்பிக்கையில் மூழ்கி (பெருங்காயம் அணிவது) எமது எதிரியை குறைத்து மதிப்பிட வேண்டாம்.

நாம் இவ்வாறு செய்யவில்லை என்றால் கொரோனா தொற்றிலிருந்து எமது நாட்டைப் பாதுகாப்பது சற்று சிக்கலாகிவிடும்.

எம்மை பெற்று வளர்த்தெடுத்த பெற்றோருக்கு நாங்கள் செய்ய வேண்டியதை கற்பனை செய்து வைத்திருப்போம் அல்லவா? ஆனால் இந்த கொரோனா வைரஸ் எமது அந்த கடமையை இலகுவாக்கி உள்ளது என்றால் நம்புவீர்களா?

ஆம், நாம் எமது முதியோருக்கு இப்பொழுது செய்ய வேண்டியதெல்லாம் வீட்டில் ‘சும்மா’ இருப்பதுதான். ஒன்றிணைந்து கொறோனாவை எதிர்ப்போம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/நாம்-நினைப்பதை-விட-எமது-எ/

கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தது எப்படி? இலங்கைக்கு சொல்லிகொடுத்தது சீனா

தமது நாட்டில் ஊழித்தாண்டவமாடிய கொரோனா வைரஸ் எவ்வாறு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பான தமது அனுபவ பகிர்வுகளை சீன சுகாதாரத்துறை நிபுணர்கள் இலங்கையுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் சுகாதாரத்துறை நிபுணர்களுடன் கொரோனா தொடர்பான தமது அனுபவங்களையும், நுட்பங்களையும் வீடியோ கலந்துரையாடல் மூலம் அவர்கள் நடத்தியிருக்கிறார்கள்.

இந்த கலந்துரையாடலில் இலங்கை உள்ளிட்ட 18 தெற்காசிய நாடுகளின் பிரதிநிகள் பங்குபற்றிய அதேவேளை இலங்கை சார்பில் சிரேஷ்ட தொற்றுநோய்த் தடுப்பு வைத்திய நிபுணர் சுதத் சமரவீர கலந்துகொண்டார்.

https://www.ibctamil.com/srilanka/80/139501

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரண்டாவது கொரோனா நோயாளி கண்டுபிடிப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்று என்ற சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டவருக்கு அந்நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவருடன் சேர்த்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரண்டாவது கொரோனா தொற்றுக்குள்ளானவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு ரிதிதென்னையில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தவர் எனவும் இத்தாலியில் இருந்து வந்த நிலையில் அங்கு தங்க வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

55 வயதுடைய நபரே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர் பாணந்துறையை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர் நேற்று தனிப்மைப்படுத்தல் முகாமில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பான பரிசோதனைக்காக இரத்த மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/139515

  • தொடங்கியவர்

thumb_21_03_2020_6.gif

  • தொடங்கியவர்

thumb_new5.gif

  • தொடங்கியவர்

மலேரியாவுக்குப் பயன்படுத்திய மருந்தை கொரோனாவுக்கு பயன்படுத்த நடவடிக்கை - அனில் ஜாசிங்க

எம்.மனோசித்ரா

மலேரியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையின் போது வழங்கப்படும் க்லொரோக்வீன் (Chloroquine) என்ற மருந்தினை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தேவையேற்படும் பட்சத்தில் வைத்தியர்களின் ஆலோசனைகளுடன் வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைக்குள் மாத்திரம் இந்த மருந்தினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அனில் ஜாசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மருந்தானது கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதைத் தவிர்த்துக் கொள்வதற்காக வழங்கப்படுவதல்ல. எவ்வாறிருப்பினும் மக்கள் அனைவரும் உரிய சுகாதார ஆலோசனைகளைப் பெற்று வீட்டினுள் பாதுகாப்பாக இருக்குமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/78407

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

  • தொடங்கியவர்

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

  • தொடங்கியவர்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உணவு மற்றும் உரை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், உரை மற்றும் உணவு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், உரை மற்றும் குளோஸ் அப்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.