Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆறு வாரங்களில் ஒரு கருவி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

D93033-F9-9-B00-4-E97-BADB-987949-FAFD66
ஆறு வாரங்களாக தொடர் சோதனைகளை மேற்கொண்டு யேர்மன் Bosch நிறுவனம் ஒரு கருவியைக் கண்டு பிடித்திருக்கிறது.

அந்தக் கருவி கொரோனா வைரஸிற்கான சோதனை முடிவை உடனடியாகத் தரவல்லது.  கொரோனா வைரஸின் விரைவான பரவலுக்கு எதிரான போராட்டத்தில் இந்தக் கருவி அதி முக்கியமானது என்பதை நிபுணர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

இதுவரையில் மனிதர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட தரவுகளை ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்பி வைத்து விட்டு முடிவுகளுக்காக குறைந்தது ஒன்று முதல் இரண்டு நாட்கள்வரை காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் Bosch நிறுவனம் உருவாக்கிய கருவி இரண்டரை மணி நேரத்திற்குள் சோதனையின் முடிவை வழங்கவல்லது.

“இந்தக் கருவி ஆய்வுக்கூடத்தின் நேரத்தை மிச்சப் படுத்துகிறது. பாவனையாளர்களின் காத்திருப்பை இல்லாமல் செய்கிறது என்பது மட்டுமல்லாமல் மருத்துவர்களின் சுமைகளையும் வெகுவாகக் குறைக்கிறது என்பது  ஏற்றுக் கொள்ளப் படவேண்டியது.  ஆனாலும் இந்தக  கருவிகளை முதலில் அதிகளவில் உற்பத்தி செய்ய வேண்டும் அத்துடன்  பெரிய பரப்பளவில் அவை விநியோகிக்கப்படவும் வேண்டும்என்று யேர்மனிய மருத்துவ நிபுணரான Dr. Christoph தனது கருத்தைச் சொல்லியிருக்கிறார்.

உலக சுகாதார அமைப்பின் தரங்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட இந்தக் கருவி 95 வீதம் சரியான முடிவுகளை வழங்க வல்லது என Bosch நிறுவனத்தின் சுகாதாரப் பிரிவின் பொறுப்புக்கான நிர்வாக இயக்குனர் திரு Marc Meier அறிவித்திருக்கிறார்.

இந்தக் கருவிக்கான சட்டரீதியான ஒப்புதல் ஏப்ரல் மாதத்தில் கிடைக்கலாம் என எதிர்பார்ககப்படுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னதான் கண்டுபிடிக்கிற கருவி வந்தாலும் இன்னும் மருந்து கண்டுபிடிக்காமல் இருக்கிறது ஒரு பெரிய குறைதானே...😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

என்னதான் கண்டுபிடிக்கிற கருவி வந்தாலும் இன்னும் மருந்து கண்டுபிடிக்காமல் இருக்கிறது ஒரு பெரிய குறைதானே...

உண்மைதான்.

உடனடியாக மருந்து வந்தால் பயம் என்பது இல்லாமல் போய்விடும். எதிர்பபு சக்தி உங்களிடம் இருக்கும்வரை கொரோனா மட்டுமல்ல எந்தக் கொம்பனுக்கும்  நீங்கள் பயப்படத் தேவையில்லை. ஆனாலும் சுகாதார அமைச்சு சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.

யேர்மனியில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான பலர் சிகிச்சையில் குணமாகி இருக்கிறார்கள் என்ற செய்திகளும் வருவது ஒரு நம்பிக்கையை தருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

எதிர்பபு சக்தி உங்களிடம் இருக்கும்வரை கொரோனா மட்டுமல்ல எந்தக் கொம்பனுக்கும்  நீங்கள் பயப்படத் தேவையில்லை.

கொரோனா இருக்கிறதா என்று ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே சோதனை செய்துகொள்ளக் கூடிய கருவிகள் விரைவில் யேர்மனியில் உருவாகிக் கிடைக்கும் என நம்பலாம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Kavi arunasalam said:

எதிர்பபு சக்தி உங்களிடம் இருக்கும்வரை கொரோனா மட்டுமல்ல எந்தக் கொம்பனுக்கும்  நீங்கள் பயப்படத் தேவையில்லை.

எனக்கு எதிர்ப்புச்சக்தி எக்கச்சக்கமாய் இருக்கோ எண்டு எங்கை போய் பாக்கிறது? வருத்தம் வந்து மண்டையை போடேக்கை தான் தெரியும் எனக்கு எதிர்ப்பு சக்தி துண்டற இல்லை எண்டு 😂

  • கருத்துக்கள உறவுகள்

அடடா.... என்ன ஒற்றுமை.
கவி அருணாசலம், எட்டு மணித்தியாலத்துக்கு முன்பு பதிந்த பதிவில்.....
ஜேர்மன் நாட்டில் வசிக்கும், ஒரிஜினல் தமிழர்களே.... 
கருத்து... எழுதி உள்ளார்கள். :grin:

இது.... பிரதேச வாதம்  என்று,  ஒரு கோஷ்டி.... வாந்தி எடுக்க வந்தால், நான் பொறுப்பல்ல.   🤣

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுக்காரியிடம் அவங்க பிறந்த வீட்டைப்பற்றி லைட்டா  குறை சொல்லி பார்க்கிறது....உடனே உங்களுக்கு எதிர்ப்பு சக்தி இருக்கா என்பது தெரிந்து விடும்.....!  👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, suvy said:

வீட்டுக்காரியிடம் அவங்க பிறந்த வீட்டைப்பற்றி லைட்டா  குறை சொல்லி பார்க்கிறது....உடனே உங்களுக்கு எதிர்ப்பு சக்தி இருக்கா என்பது தெரிந்து விடும்.....!  👍

வாழ்க்கையிலை எத்தினை தரமெண்டு பரிசோதிக்கிறது???? 😁

upload-item

 

https://thumbs.gfycat.com/GoodnaturedMisguidedChimneyswift-mobile.mp4

Edited by குமாரசாமி

10 hours ago, Kavi arunasalam said:

“இந்தக் கருவி ஆய்வுக்கூடத்தின் நேரத்தை மிச்சப் படுத்துகிறது. பாவனையாளர்களின் காத்திருப்பை இல்லாமல் செய்கிறது என்பது மட்டுமல்லாமல் மருத்துவர்களின் சுமைகளையும் வெகுவாகக் குறைக்கிறது என்பது  ஏற்றுக் கொள்ளப் படவேண்டியது.  ஆனாலும் இந்தக  கருவிகளை முதலில் அதிகளவில் உற்பத்தி செய்ய வேண்டும் அத்துடன்  பெரிய பரப்பளவில் அவை விநியோகிக்கப்படவும் வேண்டும்என்று யேர்மனிய மருத்துவ நிபுணரான Dr. Christoph தனது கருத்தைச் சொல்லியிருக்கிறார்.

யார் குத்தி என்றாலும் இந்த கருவி அரிசி போல தாராளமாக விரைவில் கிடைக்கவேண்டும் !

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

வாழ்க்கையிலை எத்தினை தரமெண்டு பரிசோதிக்கிறது???? 😁

upload-item

 

https://thumbs.gfycat.com/GoodnaturedMisguidedChimneyswift-mobile.mp4

இந்த எதிர்ப்பும் ஆட்டமும் போதுமானது கும்ஸ். நோயும் வராது பேயும் கிட்டே வராது

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Kavi arunasalam said:

இந்தக் கருவிக்கான சட்டரீதியான ஒப்புதல் ஏப்ரல் மாதத்தில் கிடைக்கலாம் என எதிர்பார்ககப்படுகிறது.

சீனாவில் இருந்து நிறைய சாமான்கள் வருகுது வெகுவிரைவில்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

சீனாவில் இருந்து நிறைய சாமான்கள் வருகுது வெகுவிரைவில்.

என்ன உங்கடை ஆள் ரம்பர் வந்த நாளிலையிருந்து சீனாவை திட்டிப்போட்டு இப்ப சீனாவின்ரை கால்லை விழுந்துட்டாராம். 😁

புதிய கருவி கண்டுபிடிப்பு


லண்டன்: பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள், கொரோனா வைரசை கண்டுபிடிக்கும், 'ஸ்மார்ட் போன்' அளவிலான கருவியை உருவாக்கிஉள்ளனர். இதில், தொண்டை பகுதியில் இருந்து எடுக்கப்படும் சளி மாதிரியை வைத்தால், 50 நிமிடங்களில், கொரோனா குறித்த முடிவுகளை வழங்கும் என, கூறுகின்றனர். இந்த கருவியில், ஒரே நேரத்தில், 13 மாதிரிகளை பரிசோதனை செய்யலாம்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2509886

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ampanai said:

லண்டன்: பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள், கொரோனா வைரசை கண்டுபிடிக்கும், 'ஸ்மார்ட் போன்' அளவிலான கருவியை உருவாக்கிஉள்ளனர்.

நல்ல செய்தி

Abbott receives approval for test that can detect coronavirus in 5 minutes

  • Abbott on Friday announced it received approval for a test that is capable of delivering positive results of the coronavirus in as little as five minutes.
  • The company will begin making those tests available to health care providers next week.
  • Abbott plans to ramp up manufacturing so it can deliver 50,000 tests per day.  

https://abbott.mediaroom.com/2020-03-27-Abbott-Launches-Molecular-Point-of-Care-Test-to-Detect-Novel-Coronavirus-in-as-Little-as-Five-Minutes

Abbott

  • கருத்துக்கள உறவுகள்

Informationen über Beatmung - Fachkrankenhaus für neurologische ...

Beatmungsgeräte: Kliniken kämpfen mit Lieferproblemen | tagesschau.de

ஜேர்மனியில்... செயற்கை சுவாசம் அளிக்கும்  கருவிகள், 25´000 மட்டுமே பாவனையில் உள்ளதால்,
அதனை வைத்து... பலருக்கும் சிகிச்சை,  கொடுப்பது வைத்தியசாலைகளுக்கு  சிரமமாக  உள்ளது.

இவ்வளவிற்கும்... இங்கு சில நிறுவனங்கள், இங்கு இதனை தயாரித்து ஏற்றுமதி செய்தாலும்,
தற்போதைய உடனடி தேவைக்கு... அதனை பெருமளவில், அரசுக்கும்,
உலக நாடுகளில் உள்ள தனது வாடிக்கையாளருக்கும்,  விநியோகிக்க முடியாமல் உள்ளது.
சில விண்ணப்பங்களுக்கு.... வருகின்ற ஜூன் மாதம் வரை, 
காத்திருக்க வேண்டும் என்று சொல்லி உள்ளார்கள்.  

அவ்வளவு காலம் பொறுத்திருக்க முடியாது என்றமையால்...
இப்போ, ஐரோப்பாவின் சில நாடுகள்...  சீனாவிலிருந்து கொள்வனவு செய்கிறார்கள். 

சீனா... இந்தச் சந்தர்ப்பத்துக்காகவே.. ஏற்கெனவே, தயாரித்து வைத்திருப்பார்கள் போலுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.