Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவின் பச்சைக் கிளி முத்துச் சரம்

Featured Replies

சாம் (உண்மையான பெயர் அல்ல) என்ற தமிழர் கனடாவின் ரொறன்ரோ பிரதேச பீற்சா உணவகம் ஒன்றின் விநியோகத் தொழிலாளி. ஏதேச்சையாக, தனக்கு நடந்த சம்பவத்தை சாம் எனக்குக் கூறக் கேட்டபோது, இந்தப் பதிவினை இங்கே இடவேண்டும் என்று தோன்றியது. இதோ சாமின் கதை.

ஓரு இரவு, வழமைபோல் சாம் தனது உணவகத்தில் இருந்து தான் விநியோகம் செய்யவேண்டிய பீற்சாவுடன் வெளியேறியபோது ஒரு பி.எம்.டபிள்யூ எக்ஸ்-5 ரக வாகனம் இவரது வாகனத்தை வழிமறித்து அவசரமாக வந்து நின்றதாம். அதிலிருந்து ஒரு இளம் தமிழ் பெண் பதைபதைப்புடன் இறங்கி இவரிடம் நீங்கள் தமிழரா என ஆங்கிலத்தில் வினவினாராம். இவரும் ஆம் என்று கூறவே அந்தப் பெண் தான் ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளதாகவும் தனக்கு உதவமுடியுமா எனவும் மிகுந்த பதைபதைப்புடனும் வெளிப்படையான முகக் கலவரத்துடனும் கேட்டாராம். அந்த இரவில் அந்தத் தமிழ்ப் பெண் அவ்வாறு நடுங்கிக் கொண்டு நிற்பதைப் பாhத்த சாமால் முடியாது என்று கூறிவிட்டுப் போக முடியவில்லையாம். எனவே, அந்தப் பெண்ணின் பிரச்சினை என்னவென்று விரைவாகக் கூறும்படியும் தான் பீற்சாவை நேரத்திற்குள் விநியோகிக்க வேண்டிய தேவை உள்ளமை பற்றியும் சாம் கூறினாராம். பெண்ணும் தனது சிக்கலை விபரித்தாராம்.

அதாவது, தன்னிடம் இரண்டு கார்கள் உள்ளதாகவும். தனது இரண்டாவது காரினை அன்றிரவு இரவல் வாங்கிச் சென்றிருந்த தனது சிநேகிதி, பிறிதொரு வாகனத்தோடு சாதுவாக மோதிவிட்டார் எனவும், மோதப்பட்ட கார் காரர் தனக்கு 1200 டொலர்கள் பணம் தந்தால் காப்புறுதி நிறுவனத்திற்கு அறிவிக்காது செல்வதாகக் கூறுவதாகவும், தன்னிடம் ஆயிரம் டொலர்கள் மட்டும் தான் காசாக உள்ளது எனவும், தனது வங்கியில் இருந்து தான் ஒரு நாளைக்குப் வங்கி அட்டை மூலம் பெறக்கூடிய உச்ச பணத்தை அன்று தான் ஏற்கனவே பெற்றிருந்தமையால் அந்த இரவு நேரத்தில் மேலதிக பணத்தைத் தன்னால் வங்கி இயந்திரத்தில் இருந்து பெற முடியவில்லை எனவும், ஒரு 200 டொலர்கள் இந்த நேரத்தில் ஒரு தமிழர் இன்னுமொரு தமிழரிற்குச் செய்யும் உதவியாக சாம் தனக்குச் தந்துதவினால் தான் காப்புறுதி தொடர்பான சிக்கல்களில் இருந்து தப்பிக் கொள்ளலாம் எனவும் மன்றாடிக் கேட்டாராம். மேலும், தனது கைப்பையினை எடுத்து அதற்குள் தான் வைத்திருந்த 1000 டொலர்களை சாமிற்குக் காட்டியதோடு, குறிப்பிட்ட உணவகத்தின் அருகிருந்த வங்கி இயந்திரத்திற்கு சாமினை மன்றாடி அழைத்துச் சென்று அங்கு தனது வங்கி அட்டையின் நாளாந்த வரையறை ஏற்கனவே அடையப்பட்டு விட்டதனையும் உறுதிப்படுத்தினாராம். மேலும் தனது வாகன ஓட்டுனர்; பத்திரத்தைக் காட்டி அதிலிருந்து தனது உண்மையான பெயர், முகவரி முதலியவற்றையும் மேலும் தனது கைத்தொலைபேசி இலக்கத்தையும் சாமிடம் கொடுத்து மன்றாடினாராம்.

மேற்படி பெண்ணின் நிலைமை கண்டு இரங்கிய சாம், தான் ஒரு விநியோகத்திற்கு வெறும் 2.50 டொலர்களை மட்டுமே ஊதியமாகப் பெற்று ரிப்சை நம்பி பீற்சா விநியோக உத்தியோகம் செய்வதாயும், மிஞ்சி மிஞ்சிப் போனால் தனக்கு ஒரு நாளைக்கு 80 டொலர்கள் தான் வருமானம் வரும் என்றும், தன்னைப் பொறுத்த வரை 200 டொலர்கள் மிகப்பெரிய தொகை என்றும் அந்தப் பெண்ணிடம் தெளிவாகக் கூறி விட்டு, தன்னிடம் வங்கியில் பணமில்லாததால் தனது கடனட்டையில் இருந்து தான் தான் பணம் பெறுவதாக அப்பெண்ணின் முன்னிலையிலேயே பணம் பெற்று அப்பெண்ணிடம் கொடுத்து விட்டு சாம் அவசரஅவசரமாகத் தனது பீற்சாவினை விநியோகிக்கச் சென்றுவிட்டாராம். பெண்ணும், எப்படியும் தான் நாளைக் காலையில் அவரது பணத்தைக் கொண்டு வந்து தருவதாக உறுதி அளித்தாராம். ஓரு பி.எம்.டபிள்யூ எக்ஸ்-5 வாகன ஒட்டுனர் 200 டொலர்கள் பற்றி அளித்த வாக்குறதியை சாமும் ஏற்றுக் கொண்டாராம்.

எனினும் அடுத்த நாள் முழுவதும் அந்தப் பெண் வராததால் அன்றிரவு சாம் அப்பெண்ணிற்கு அவர் தந்த தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டாராம். அந்தத் தொலைபேசி அழைப்பை எடுத்த அந்தப் பெண், தான் அன்று மிகவும் பிசியாக இருந்ததால் வரமுடியவில்லை என்று மன்னிப்புக் கேட்டு நிச்சயம் நாளை வருவதாகக் கூறி, சாமின் வீட்டு முகவரியினைக் கேட்டாராம். வீட்டு முகவரி கொடுக்கத் தயங்கிய சாம் உணவகத்திற்கே வருமாறு அந்தப் பெண்ணிடம் கூறினாராம். ஆனால் நாட்கள் கிழமையான போதும் கூட பணம் மீழவில்லையாம். சாமிற்கும் வாடகை முதலிய சிக்கல்கள் இருந்தமையால் அந்தப் பெண் தந்த அவரது முகவரிக்கு நேரடியாக சாம் சென்றாராம். முகவரியை அடைந்த சாம் அதிர்ந்து போனாராம். அந்த வீட்டில் ஒரு பெரிய அறிவித்தல் ஒட்டப்பட்டிருந்ததாம். யாரேனும் அந்த வீட்டிற்கு வருவதனை அயலவர்கள் கண்டால் உடனடியாகக் காவல் துறைக்கு அறிவிக்கவும் என்பதே அறிவித்தலாம். இதைப் பாhத்த சாம் உடனடியாக அங்கிருந்து சென்று விட்டாராம்.

சாம் அந்தப் பெண்ணைத் தனது வீட்டுத் தொலைபேசியில் இருந்தும் ஒரு நாள் அழைத்திருந்தாராம். இவ்வழியாக, சாமின் வீட்டுத் தொலைபேசி இலக்கத்தைப் பெற்றுக் கொண்ட பெண் சாமின் வீட்டிற்கு பகல் வேளைகளில் தொடர்பு கொண்டு அங்கு அந்நேரத்தில் தனியாக இருக்கும் சாமின் வயதான மாமியாருடன் அன்பாகப் பேசி நட்பினை வளர்க்க முயன்றாராம். எனினும் சாம் உசாரான காரணத்தால் அந்தப் பெண்ணின் மேற்படி முயற்சி பலனளிக்கவில்லையாம்.

இந்நிலையில், சாம், தனது வீட்டின் அயலவரான காவல் துறை அதிகாரியிடம் நட்பு ரீதியில் தனக்கு நடந்த சம்பவத்தைக் கூறி அந்தப் பெண்ணின் வாகன ஓட்டுனர் அனுமதிப்பத்திர இலக்கம் முதலிய விபரங்களைக் கொடுத்தாராம். அவற்றை வைத்து விசாரித்த சாமின் அயல் வீட்டுப் போலிஸ் காரர் அதிர்ந்து போனாராம். குறிப்பிட்ட பெண், இதுவரை அரை மில்லியன் கனேடியன் டொலர்கள் வரை மோசடி செய்துள்ளதாகவும், பல போலிஸ் பதிவுகள் அவர் மீது உள்ளதாகவும் சாமிற்குத் தெரிய வந்ததாம். அந்த வகையில் வெறும் 200 டொலர்களை இழந்த சாம் உண்மையிலேயே அதிர்ஸ்ரசாலி தான் என காவல்துறை நண்பர் சாமிற்குக் குறிப்பிட்டாராம்.

இதுபடி மேலதிகமாக சாம் திரட்டிய தகவல்களின் பிரகாரம், பொதுவாக இந்தப் பெண், பச்சைக் கிளி முத்துச் சரம் திரைப்படத்தில் வருவது போன்று ஆட்களை அடையாளம் கண்டு மோசடி செய்வாராம். ஓரு குறிப்பிட்ட சம்பவத்தில் ஒரு வீட்டில் பாரிச வாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த வயதானவரை படிப்படியாகப் பழக்கம் செய்து, அங்கு சென்று அவரை குளிப்பாட்டிப் பராமரிப்பது முதல் அப்பப்போ பெருந் தொகை பணங்களையும் கட்டாயப்படுத்தி அவரின் செலவிற்குக் கொடுப்பாராம். ஆந்த வயதானவரின் மகன்கள் தலையிட்ட போதும் கூட அந்த வயதானவரைத் தான் தன் தாயாகப் பார்ப்பதாய் ஏகப்பட்ட சென்ரிமென்ராம். அத்தோடு தான் அடிக்கடி கொடுக்கும் பெருந்தொகை பணங்களிற்குக் காரணம் தான் ஈடுபட்டிருக்கும் ஒரு இலாபகரமான வியாபார முதலீடு என்று கூறி, விருப்பமிருந்தால் அந்த வயதானவரின் மகன்களும் அம்முதலீட்டில் பங்கெடுத்துப் பணம் சேர்க்கத் தான் உதவுவதாயும் ஆசை காட்டி, பல மாதங்கள் நடித்து இறுதியில் அவர்களின் நம்பிக்கையைப் பெற்று, அக்குடும்பத்திடமும் அவர்களின் உறவினர்களிடமும் இருந்து தான் அரை மில்லியன் டொலர்களை மோசடி செய்தாராம்.

அதுபோலத் தான் சாமையும் சாம் தொழில் புரியும் உணவகத்தின் முன் மடக்கியதும் எதேச்சையானது அல்லவாம். குறிப்பிட்ட சம்பவத்திற்கு இரண்டு வாரங்களிற்கு முன்னர் அதே உணவகத்திற்கு அதே கதையுடன் அந்தப் பெண் வந்து அங்கிருந்த முகாமையாளரிடம் உதவி கேட்டாராம். அவர் மறுத்த போது அந்த பீற்சா உணவகத்தில் ஆரேனும் தமிழர் விநியோக வேலை செய்கிறார்களா என வினாவினாராம். அப்போது, இரக்கப்பட்ட முகாமையாளர் தற்சமயம் அவ்வாறு ஒருவரும் இல்லை ஆனால் இரவில் உண்டு என்று எதேச்சையாகக் கூறினாராம். அவ்வாறு தான் சாம் கண்காணிக்கப்பட்டு மடக்கப்பட்டாராம்.

மேலும் இந்தப் பெண்ணின் பெயரில் இரண்டு வீடுகள் உள்ளனவாம். ஆந்த வீடுகளை இப்பெண் பெற்றுக் கொண்டதும் சுவாரசியமான விதத்தில் தானாம். இங்கு உள்ள தமிழ் வீடு விற்பனை முகவர்களில் சிலருடன் சிருங்காரத் தொனியில் பேசி, பி.எம்.டபிள்யூ வைக் காட்டி, தனது தந்தை பற்றி பில்டப்புக்கள் செய்து, வீட்டினை பணக்கார இடத்தில் முற்றுச் செய்து. வாங்கும் நாளிற்கு முதல் நாள், பதைபதைப்புடன் முகவரிற்குத் தொலைபேசியில் அழைத்து, தனது தந்தை அனுப்ப வேண்டிய பணம் ஒரு நாள் பிந்தி விட்டது அதனால் வீட்டு ஒப்பந்தத்தை முடிக்க முடியாது என்று அழுது, தனது சுளையான கொமிசன் கைநழுவிப் போகின்றதே என்று வீடு விற்பனை முகவரை ஏங்க வைத்து, அதே முகவர் தனது நண்பர்களிடம் இருந்து இந்தப் பெண்ணின் பணக்கார வெளித்தோற்றத்தை நம்பி ஒரு நாள் கடன் பெற வைத்து, அவ்வழியே வீட்டினைத் தனது பெயரில் பெற்றுக் கொண்டாராம். எனினும் அடுத்த மாதமே வீட்டை றீமோட்கேச் செய்து அதன் மூலம் பணத்தைப் பெற்றுக் கொண்டு வங்கிக்குக் கம்பி நீட்டி விட்டாராம். இவ்வாறே இரு வீடுகளும் தற்போது வங்கியால் பறிமுதல் செய்யப்பட்டு குறித்த பெண் தேடப் படுகின்றாராம். ஏனினும் அந்தப் பெண்ணின் வங்கிக்க கணக்கில் எந்தப் பணமும் வைப்பில் இல்லையாம். அது தான் சாம் சென்ற போது அந்த வீட்டில் ஆரெனும் அங்கு வந்தால் காவல் துறைக்கு அறிவிக்கும் படியான அறிவித்தல் ஒட்டப்பட்டிருந்ததாம்.

சாம் கூறுகின்றார், தான் தற்போது அறிந்துள்ளவற்றின் அடிப்படையில் இந்தப் பெண் வெறும் கருவி மட்டுமே தானாம். அவரிற்குப் பின்னால் ஒரு பெரிய தமிழ் மோசடிப் பட்டாளம் உள்ளதாம். இப்பெண்ணின் தந்தை உண்மையிலேயே இலங்கையில் தற்போதும் ஒரு மதிக்கப்படும் பெரும் புள்ளியாம். கனடாவின் வன்கூவர் பிரதேசத்திற்கு வந்த இந்தப் பெண் சில தவறான பழக்கவழக்கங்களாலும் சில அடிமைத்தனங்களாலும் ஆபத்தான சகவாசங்களை ஏற்படுத்திக் கொண்டாராம். இந்நிலையில், ரொறன்ரோவில் தான் அதிக தமிழர்கள் வாழ்வதனால், ரொறன்ரோ பிரதேச தமிழ் காடையர்கள் சிலரோடு வன்கூவர் காடையர்கள் ஒப்பந்தம் செய்து இந்தப் பெண் குறிப்பிட்ட காடையர்களால் ரொறன்ரோவிற்கு திட்டமிடப்பட்டு மோசடிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளாராம்.

எல்லாம் சரி. ஆனால் இந்த நேரத்தில் எனக்கு ஒரு கேள்வி எழுந்தது. அதாவது, சாமிற்கே இவ்வளவு தரவுகள் இந்த மோசடிக்காரி பற்றித் தெரிந்திருக்கையில்; கனேடிய காவல்துறை ஏன் இன்னமும் அவளை வெளியே விட்டு வைத்துள்ளது என்பது தான் கேள்வி.

எனினும் கேள்வி எழுந்த வேகத்திலேயே பதிலும் கிடைக்கின்றது:

காவல் துறையைப் பொறுத்தவரை, ஒரு வெள்ளையர் அல்லது ஒரு பணக்காரர் அல்லது ஒரு செல்வாக்குடையோர் எவரும் பாதிக்கபடாத வரை (ஒரு வெள்ளை இன நபர் இவளின் பிடியில் அகப்பட்டால் பேர்தும் அடுத்த நாள் அம்மையார் உள்ளே இருப்பார். காவல் துறை பற்றி இந்த முனையில் ஒரு புத்தகமே எழுதலாம்), இந்தப் பெண்ணை வைத்து இயன்ற வரை அவளது மொத்தக் கூட்டத்தையும் கைது செய்வதே நோக்கமாக இருக்கும் ||ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரை...|

குறிப்பு: இந்தப் பெண்ணின் பெயரினை சாம் எனக்குத் தெரிவித்திருந்தார் என்ற போதிலும், பிரத்தியேகமாக என்னால் இந்தச் சம்பவத்தை நான் ஊர்ஜிதப்படுத்தாதனால், அந்தப் பெண்ணின் பெயரினை இங்கு குறிப்பிடுவதைத் தவிர்த்துள்ளேன்.

Edited by Innumoruvan

தகவலுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி

இன்னுமொருவன்,

நீங்கள் விபரிக்கும் சம்பவத்தால் எனக்கு ஒரு இன்னுமொரு சம்பவம் ஞாபகம் வருகிறது. எனக்குத்தெரிந்த தமிழ் வீட்டு முகவர் ஒருவர் இதே போல் ஒரு பெண்ணால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டவர். அவரிடமும் ஏதோ சுத்துமாத்துப் பண்ணி இந்தப் பெண் அவரிடம் கிட்டத்தட்ட ஒரு லட்சம் டொலர்களை அபேஸ் பண்ணிவிட்டார். முகவரோ நொந்து நூலாகி எதிலும் பிடிப்பில்லாமல் இருக்கிறார்.

முகவருக்குப் பெண்பிள்ளையில்லாத குறையிருந்தது. அதைப்பயன்படுத்தி அவருக்கும் அவரது மனைவிக்கும் தூண்டில் போட்டு மகளாக நடித்து பணத்தைக் கறந்துள்ளார். இது முடிந்த பிறகு அவர் வீட்டில் 6 மாதங்களுக்கு முன் திருட்டும் போயுள்ளது. அதிலும் அந்தப்பெண்ணுக்குத் தொடர்புள்ளதோ தெரியாது.

வான்கூவரிலிருந்து இந்தப்பெண் வந்ததையும் கேள்வியுற்றேன். ஒருவேளை நீங்கள் சொல்லும் பெண்ணும் நான் சொல்லும் பெண்ணும் ஒரே ஆளாக இருக்கலாம்.

:icon_idea:

தகவலுக்கு நன்றி.

பெண்களில் இப்படியும் ஆட்களா.... :icon_idea:

  • தொடங்கியவர்

வான்கூவரிலிருந்து இந்தப்பெண் வந்ததையும் கேள்வியுற்றேன். ஒருவேளை நீங்கள் சொல்லும் பெண்ணும் நான் சொல்லும் பெண்ணும் ஒரே ஆளாக இருக்கலாம்.

:icon_idea:

தகவலுக்கு நன்றி.

வெங்கட்,

உங்கள் கருத்துக்கு நன்றி.

Danguvaar,

இது போன்று நன்கு திட்டமிடப்பட்ட சம்பவங்கள் அரிதாகத் தான் இடம் பெறுவதாலும் இதர ஒற்றுமைகளாலும் அநேகமாக நீங்கள் குறிப்பிடும் நபரும் இவரும் ஒருவராகத் தான் இருக்கலாம் என்றே எனக்கும் படுகின்றது.

  • தொடங்கியவர்

பெண்களில் இப்படியும் ஆட்களா.... :icon_idea:

இந்தப் பெண்ணின் பின்னணியில் ஆண்கள் தான் அவரை இவ்வாறு செயற்படுத்துவதாகவும் கூறுகின்றார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களில் இப்படியும் ஆட்களா.... :icon_idea:

விகடகவி,

பெண்களைப் பற்றிய கற்பனை உலகிலிருந்து நிஜ உலகுக்கு வாருங்கள்.! :P :P

பின்குறிப்பு: எல்லோரும் அப்படியல்லர். ஆனால் கவிஞர்கள் போற்றுமளவுக்கு அவர்கள் ஒன்றுமில்லை. :unsure: யாழ் சகபாடிக்கள் மன்னிக்கவும்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல பதிவு.

ஒரு சந்தேகம்,அவர் சாமையும் திட்டம் போட்டு அணுகியிருந்தால் அவரின் 200 ரூபாய்களை உடனே கொடுத்து நல்ல பேர் வாங்கியல்லவா தனது நாடகத்தை தொடர்ந்திருப்பார்?

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு.

ஒரு சந்தேகம்,அவர் சாமையும் திட்டம் போட்டு அணுகியிருந்தால் அவரின் 200 ரூபாய்களை உடனே கொடுத்து நல்ல பேர் வாங்கியல்லவா தனது நாடகத்தை தொடர்ந்திருப்பார்?

சாமிடம் பெரிசா ஒன்றும் தேறாது என்பதைப் புரிந்து கொண்டிருப்பார் என நினைக்கிறேன். அதனால் அந்தத் திட்டத்தை அத்தோடு நிறுத்தியிருப்பார்.

  • தொடங்கியவர்

நல்ல பதிவு.

ஒரு சந்தேகம்,அவர் சாமையும் திட்டம் போட்டு அணுகியிருந்தால் அவரின் 200 ரூபாய்களை உடனே கொடுத்து நல்ல பேர் வாங்கியல்லவா தனது நாடகத்தை தொடர்ந்திருப்பார்?

நான் புரிந்துகொண்ட வகையில், சாமிடம் அவர் 200 பெற்றதன் நோக்கம் அதை வைத்து சாமின் வீட்டிற்குள் புகுவதற்காக மட்டுமே. அந்தவகையில் தான் சாமின் மாமியாருடனான அவரது ஆரம்ப முயற்சி இருந்துள்ளது. எனினும் சாம் உசார் ஆனதால் அதை அவர் தொடரமுடியவில்லை.

மேலும், ஒரு வீட்டின் தொலை பேசி இலக்கத்தை வைத்து விலாசம் கண்டுபிடிப்பது ஒரு நிமிட வேலை என்பதனால், நிச்சயம் அவர் சாமின் வீட்டிற்குச் சென்று பார்த்திருப்பார். டங்குவார் சொல்வது போல் அவரது திட்டத்திற்கு சாமின் நிலை பெரிய கவர்ச்சிகரமாக அவரிற்குப் படாது போயிருக்கலாம். ஏதோ சாம் தப்பிக் கொண்டார்.

இவ்வாறான நிகழ்வுகளால் இவ்வுலகில் எஞ்சியிருக்கும் சொற்ப தொiயினரான இரக்க குணமுள்ளவர்களும் கல்நெஞ்சக் காரராக மாறுவது மிகவும் துரதிஸ்ரவசமானது.

கனடாவில் வெளிவரும் ஒருசில பத்திரிகைகளில் ஒருசுத்துமாத்து பெண்ணின் விடயம் வந்திருந்தது சிலவேளைகளில் இன்னுமொருவன் கூறும் பெண்ணின் கதையாக இருக்கலாம்

ஏமாறுகிறவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருப்பான்(ள்)

என்னப்பா இது!

கேட்கவே பயமாக இருக்கிறது.

யாரைத்தான் நம்புவது?

அதுவும் நம் நாட்டு

பெண்களா ??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது எப்ப நடந்த சம்பவம்?? ஏன் என்றால் 2.50 சம்பளம் கொடுத்து டிரைவரை வைச்சிருந்த காலமெல்லாம் மலையேறிப்போச்சு. அவர் இப்பவும் அப்பிடி வேலை செய்த அவரது அறியாமையாக இருக்கலாம். நீங்கள் சொல்லும் பெண்ணின் விபரங்களை சொன்னால் நாங்களும் எச்சரிக்கையாக இருப்போமல்லவா? இதை விட பல மோசடிகள் "தொழிலதிகள்" என்ற போர்வைக்குள் நடைபெறுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

எந்தப் படத்தின் கதையப்பா இது? எனக்கும் சொல்லுங்கோ கேட்க நல்லாயிருக்குது.

  • தொடங்கியவர்

இது எப்ப நடந்த சம்பவம்?? ஏன் என்றால் 2.50 சம்பளம் கொடுத்து டிரைவரை வைச்சிருந்த காலமெல்லாம் மலையேறிப்போச்சு. அவர் இப்பவும் அப்பிடி வேலை செய்த அவரது அறியாமையாக இருக்கலாம். நீங்கள் சொல்லும் பெண்ணின் விபரங்களை சொன்னால் நாங்களும் எச்சரிக்கையாக இருப்போமல்லவா? இதை விட பல மோசடிகள் "தொழிலதிகள்" என்ற போர்வைக்குள் நடைபெறுகின்றன.

நிதர்சன்,

அவரது சம்பளத் தொகை பற்றி அவர் எனக்குக் கூறியதை நான் அவரது உணவகத்திற்கு அழைத்து உறுதி செய்யவில்லை (அது தேவைப் பட்டதாகவும் நான் கருதவில்லை ஏனெனில் அவர் அந்தப் பெண்ணிற்குத் தான் கூறியதாய் எனக்குக் கூறிய செய்தி மட்டுமே அது. சம்பளத் தொகையை காசின் அருமையினைக் காட்டுவதற்காகக் குறைத்தோ அல்லது ஒரு குறியீடாகவோ கூட அப்பெண்ணிற்குக் கூறியிருக்கலாம்.) அவர் கூறியதை அப்படியே பதிந்துள்ளேன்.

எனினும்இதில் ஒரு வேடிக்கை என்னவெனில் உங்களிற்கு வந்த அதே சந்தேகம் எனக்கும் வந்து அவரிடம் நான் இதே கேள்வியைக் கேட்டிருந்தேன். அதற்கு அவர் கூறினார், 'பீற்சா பீற்சா' நிறுவனத்தில் மணித்தியாலத்திற்கு என்று சம்பளம் கொடுப்பார்களாம் ஆனால் விநியோகம் வராத நேரங்களில் விநியோகத் தொழிலாளர்கள் சமையல் அறையில் தொட்டாட்டு வேலை செய்ய வேண்டுமாம். ஆனால் தான் வேலை பார்க்கும் 'பீற்சா கட் நிறுவனத்தில'; மணிக்கு என்று சம்பளம் இல்லையாம். விநியோம் வந்தால் மட்டும் 2.50 ஒரு விநியோகத்திற்கு என்ற அடிப்படையில் அத்தொழிலாளர்கள் பெறுவார்களாம். இதை விட வாடிக்கையாளர் வழங்குகின்ற "ரிப்ஸ்" தொகையை தான் விநியோகத்தர்கள் பெரிதும் நம்பியிருப்பார்களாம். ஆனால், "பீற்சா பீற்சா" போலில்லாது, 'பீற்சா கட்டில்" விநியோகம் வராவிடின் பீற்சா கட் சமையல் அறையில் தாங்கள் வேறு வேலை எதையும் செய்யத் தேவை இல்லையாம்.

நான் மேற்படி வேலைகள் எதையும் எப்போதும் செய்திராமையால் இது பற்றி என்னிடம் மேலதிக தகவல்கள் எதுவும் இல்லை.

சாம் எனக்குக் கூறியதன் பிரகாரம், இந்த ஆண்டு தை மாதத்தில் இந்தச் சம்பவம் நடை பெற்றதாம் (சாமை நான் சந்தித்தது சென்ற வார இறுதியில் தான் என்பதால் எனது பதிவு இன்று இடப்பட்டது. எனவே ஏன் இவ்வளவு கால தாமதமாய் இட்டேன் என்று கேட்காதீர்கள் :icon_idea: ).

Edited by Innumoruvan

வணக்கம் கருட்த்தாடர்களே!!

அந்த பெண்ணுக்கு அந்த கும்பலிலிருந்து வெளியே வர என்ன வழி இருக்கு என்று சிந்தித்து உதவுங்கள். பிறக்கும் போது யாரும் கெட்டவர் அல்ல, வாழும் போது கயவர்களின் வலையில் சிக்கி பெண்ணிடம் கண்னியமாக நடந்து காபாறுங்கள் உங்களையும்ஆவளையும்.

நன்றி

தமிழ் வளர்ப்போம் தமிழ் கார்ப்போ!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா இது!

கேட்கவே பயமாக இருக்கிறது.

யாரைத்தான் நம்புவது?

அதுவும் நம் நாட்டு

பெண்களா ??

என்ன மருமோன் இப்புடி பெருமூச்சு விடூறீர்?அங்கை ஊரிலை எங்கடை பொண்டுகள் செய்யாத திருக்கூத்தே இஞ்சை நடக்குது?பச்சை மலைவிழுங்கி கள்ளியளப்பா?எங்கடை பொண்டுகளிட்டை ஜோர்ச் புஸ்சும் ரொனி பிளேயரும் பிச்சை வாங்கோணும் தெரியுமோ :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களே உசாராய் இருங்கள்.

பேசாம அந்த பெண் காவியுடுத்தி சாமி வேசம் போட்டு கோயில் கட்டியிருந்தா நிறைய பணமும் வந்திருக்கும்.. எல்லாரும் காலில் விழுந்து காசு குடுத்திருப்பினம்... இந்த பெண்ணுக்கு கொஞ்சம்

கூட புத்தி இல்லப்பா.... :icon_idea:

ஆண்களே உசாராய் இருங்கள்.

ஆண்களிடம் என்றல்ல சுத்தமுடிந்தால் அது ஆண்என்ன பெண்என்ன எல்லோரிடமும் கைவரிசைகாட்டியதாகத்தான் கேள்வி

எனவே எல்லோருமே உஷார்

வணக்கம் கருட்த்தாடர்களே!!

தமிழ் வளர்ப்போம் தமிழ் கார்ப்போ

பார்க்க தெரியுது :P :P :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.