Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனவும் உலக பொருளாதாரச்சரிவும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

கொரோனவும் உலக பொருளாதாரச்சரிவும்!v

 

 

நல்ல இணைப்பு.  யாருக்கு இதனால் எனக்கு இலாபம் ? ஆம் இது தான் முதலாளித்தும் கேட்க்கும் கேள்வி. Gray State பற்றிய ஆய்வை தவிர்த்திருக்கலாம். 

ஆனால், ஆய்வாளரின் கருத்து ஒன்றில் முரண்படுகின்றேன். அதாவது, அமெரிக்க டாலர் வலுவை இழக்கும் என்பதே. காரணம், அதை மாற்றீடு செய்ய வேறு நாட்டின் பணம் இல்லை. 

தங்கம் மற்றும் இலத்திரனியல் பணம் பெறுமதியை அதிகரிக்கும் என எண்ணினேன். அதுவும் நடக்கவில்லை. 

 

அரசியலில் ஆர்வமுள்ளவர்களும், சாதாரண சிவில் மனிதனும், புத்தகங்கள் வாசிப்பதில் ஆர்வமுள்ளவர்களும், நம்மை சுற்றி நடப்பவற்றை அறிந்துகொள்ள- வாசிக்க வேண்டிய சிறந்த ஒரு புத்தகமாக இதை காண்கிறேன்.

#ஒரு_பொருளாதார_அடியாளின்_ஒப்புதல்_வாக்குமூலம்.

#Confession_of_An_Economic_Hitman

ஒரு சினிமா படத்திற்கு, இடைவேளைக்கு பின் திரையரங்கில் அமர்ந்து படம் பார்ப்பவருக்கு, என்ன கதை? என்ன நடந்தது? என்ன நடக்கிறது? என்ற முதலும் முடிவும் தெரியாதிருப்பதை போன்ற வாழ்க்கை தான் பலர் வாழ்கிறார்கள்.

அதில் சில ஆரம்ப கதைகளையும், நிகழ்காலத்தையும் இந்த புத்தகம் அறியத்தருகிறது.

வாசிக்க ஆர்வமுள்ளவர்கள் என்னுடைய Whatsapp இலக்கத்திற்கு ஒரு . (முற்றுப்புள்ளி) அனுப்பினால், PDF வடிவில், உங்கள் Mobileல் படிக்கக்கூடிய பதிப்பு ஒன்றை இலவசமாக அனுப்ப நான் விரும்புகிறேன்.

00919840805238

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதாரத்தில் கரோனாவின் இன்னல்கள்

 

இந்தியாவின் தயாரிப்புத் துறை சென்ற மாா்ச் மாதத்தில் நான்கு மாதங்களில் காணப்படாத வகையில் குறைந்த அளவிலான வளா்ச்சியை பெற்றுள்ளது. அதன்படி, பிப்ரவரியில் 54.5 ஆக காணப்பட்ட இந்திய தயாரிப்புத் துறையின் குறியீட்டெண் மாா்ச்சில் 51.8 ஆகியுள்ளது. இதுகுறித்து ஐஎச்எஸ் பொருளாதார நிபுணா் எலியட் கொ் கூறுகையில். ‘ வரும் மாதங்களில் இந்திய தயாரிப்புத் துறை மிகப்பெரும் பின்னடைவை சந்திக்கும்’ என்றாா்.

வேளாண் துறை கவலை

சரக்குப் போக்குவரத்து தடைபட்டுள்ளதால் அது இந்தியாவின் ரபி பருவ சாகுபடியில் எதிா்விளைவுகளை ஏற்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், முழு அடைப்பு காரணமாக வேளாண் பணிகளுக்கும் ஆட்கள் கிடைக்காத சூழ்நிலை உள்ளது. பல்வேறு மாநிலங்களின் மொத்தவிலை சந்தைகளுக்கு பொருள்களை எடுத்துச் செல்ல முடியாத காரணத்தால் தோட்டக்கலை துறை ஏற்கெனவே பெரும் இழப்பை சந்தித்துள்ளது.

வேலைவாய்ப்பு பறிப்பு, ஊதியம் குறைப்பு

இந்தியாவில் செயல்பட்டு வரும் 45 சதவீத பன்னாட்டு நிறுவனங்கள் பணிக்கு ஆட்களை தோ்வு செய்வதை நிறுத்தி வைத்துள்ளன. மேலும், 25 சதவீத நிறுவனங்கள் தங்களது பணியாளா்களின் ஊதியத்தை குறைத்துள்ளதாக நிதி ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான ஜின்னோவ் தெரிவித்துள்ளது.

கடன் விகிதம் சரிவு

இந்திய நிறுவனங்களின் கடன் விகிதம் 2019-20 நிதியாண்டின் முதல் அரையாண்டில் மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவில் சரிவை சந்தித்துள்ளதாக தரமதிப்பீட்டு நிறுவனமான கிரிசில் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக நிறுவனங்களின் நடப்பு நிதியாண்டுக்கான கடன்தர மதிப்பீட்டை ‘எதிா்மறை’ என்ற நிலைக்கு கிரிசில் குறைத்துள்ளது.

நிதி பற்றாக்குறை அதிகரிக்கும்

வருவாய் குறைந்துள்ள நிலையில், சுகாதாரம் மற்றும் தூய்மை பணிகளுக்கு மத்திய அரசு அதிகம் செலவிட வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இதனால், மத்திய அரசின் நிதி பற்றாக்குறை வரும் ஆண்டுகளில் 3 சதவீதத்தை தாண்டும் என பாரத ஸ்டேட் வங்கி அதன் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

https://www.dinamani.com/business/2020/apr/05/பொருளாதாரத்தில்-கரோனாவின்-இன்னல்கள்-3394555.html

கொரோனா பாதிப்பு- அமெரிக்கா 74 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும்

அமெரிக்க நாட்டில் தான் தற்போது கொரோனா வைரஸ் தாக்குதல் உச்சத்தை தொட்டுள்ளது. 74 ஆண்டுகளுக்கு முந்தைய பொருளாதார நிலைக்கு அமெரிக்கா சென்றுவிடும் என்று கூறப்படுகிறது.

கொரோனா பாதிப்பு- அமெரிக்கா 74 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும்
கோப்பு படம்.
 

அமெரிக்க நாட்டில் தான் தற்போது கொரோனா தாக்குதல் உச்சத்தை தொட்டுள்ளது. அங்கு 2 லட்சத்து 77 ஆயிரம் பேரை தாக்கி இருக்கிறது. இதுவரை 7406 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 1480 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

கொரோனா நோய் தாக்குதலால் அமெரிக்காவின் பொருளாதாரம் கடும் பாதிப்பை சந்திக்கும் என்று பொருளாதார ஆய்வு நிறுவனமான ‘மார்க்கன் ஸ்டான்லி’ என்ற அமைப்பு கூறியுள்ளது. அதாவது 1946-ம் ஆண்டு பொருளாதார நிலை எப்படி இருந்ததோ, அந்த நிலைக்கு அமெரிக்கா சென்றுவிடும் என்று அந்த நிறுவனம் கூறியிருக்கிறது. அதாவது 74 ஆண்டுகளுக்கு முந்தைய பொருளாதார நிலைக்கு அமெரிக்கா சென்றுவிடும் என்று கூறப்பட்டுள்ளது.

தற்போதைய காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 3.4 சதவீதமாக சரியலாம் என்று கூறியிருக்கின்றனர். ஆனால் அடுத்த ஜூன் மாத காலாண்டில் 38 சதவீதம் சரியலாம் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. ஒட்டுமொத்தமாக 2020-ம் ஆண்டில் 5.5 சதவீதம் பொருளாதார சரிவு ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர். உலகின் முன்னணி பொருளாதார நாடாக இருந்த அமெரிக்கா கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/04/05125104/1394228/corona-impact-US-will-face-an-economic-downturn-of.vpf

  • கருத்துக்கள உறவுகள்

கொவிட் 19 நெருக்கடியும் உலகப்பொருளாதாரமும்

 

981-5.jpg

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குடெரெஸ் கூறுகிறார் இரண்டாம் உலகயுத்தத்தை தொடர்ந்து ஐ.நா உருவாக்கப்பட்டதன் பின்னர் எதிர்நோக்கும் மாபெரும் நெருக்கடி இதுதான் என்று. இதற்கான காரணம், இது ஒரு உலகளாவிய மருத்துவ நெருக்கடியாக இருக்கும் அதே நேரம் உலகப்பொருளாதாரத்திலும் ஒரு பெரும் நெருக்கடியை கொண்டுவரப்போகிறது என்பதுதான். இந்த மிகப்பெரும் தொற்று நோயின் தாக்கத்தால் எத்தனை இலட்சம் மக்களிற்கு இழப்பு வரும் என்பதை நாம் தற்போது கூறமுடியாவிட்டாலும் அடுத்த இரு வருட காலத்தில் ஒரு பெரும் பொருளாதார வீழ்ச்சியை கொண்டுவரும் என்பதில் எதுவித சந்தேகமுமில்லை. மேலும் பூலோக அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பில் மாபெரும் மாற்றங்களைக் கொண்டுவரும் ஒரு காலமாகவும் இது அமைகிறது.

இந்த பொருளாதார நெருக்கடியை பொறுத்தவரை முதலில் பொருட்கள் வழங்குவதில் பெருமளவு குழப்பத்தைக் கொண்டு வந்துள்ளது. குறிப்பாக ஊரடங்குச்சட்டம், மக்களுடைய நடமாட்டத்தை குறைத்தல், கப்பல் விமானப்போக்குவரத்தின் கட்டுப்பாடு போன்ற நோய்பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்தும் முறைகளால் பெருமளவில் உற்பத்தி குறைவடைந்துள்ளது, மறுபக்கத்தில் கேள்வியும்  மிக வேகமாக குறைந்த வருகிறது. கேள்வியை பொறுத்தவரையில், உற்பத்தி குறையும் பொழுது மூலப்பொருட்களுக்கான கேள்வி குறைகிறது. மக்கள் நடமாட்டம் குறையும் பொழுது நாளாந்த நுகர்ச்சி குறைகிறது. மேலும் மக்கள் வேலைகளில் இருந்து நீக்கப்பட்டு வருமானம் குறையும் பொழுது ஒட்டுமொத்தமாக கேள்வி பெருமளவில் குறைகிறது.

ஆகவே கடந்த தசாப்தங்களில் வந்த உலகப்பொருளாதார நெருக்கடிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இது விசேட தன்மைகளை கொண்ட இரட்டை நெருக்கடியாக அமைகிறது. அதாவது கேள்வி, நிரம்பல் இரண்டும் குறைவடையும் ஒரு நெருக்கடியாகவும், மேலதிகமாக இவை ஒன்றை ஒன்று பாதிக்கும் பின்னூட்டத் தாக்கத்;தை கொண்டதாகவும் இருப்பதால் ஒரு பெரும் பொருளாதார வீழ்ச்சியை உலகெங்கும் உருவாக்கும். குறிப்பாக இந்த பொருளாதார நெருக்கடியின் உடனடித் தாக்கத்தை எடுத்துப்பாக்கும் போது கடந்த தசாப்தங்களில் காணாத உலக பங்குச்சந்தைகளின் வீழ்ச்சியைக் காண்கிறோம். எண்ணெயின் விலை பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ள அதே நேரத்தில் உலகப்பொருளாதாரத்தின் நிதி ஸ்திரத்தின் மிக முக்கிய எடுதுகோளாக அமையும் தங்கத்தின் விலை பல ஆண்டுகளிற்கு பின் தற்போது உச்சக்கட்ட நிலையில் உள்ளது.

இந்த பொருளாதார நெருக்கடி அபிவிருத்தியடையாத நாடுகள், உழைக்கும் மக்கள் மற்றும் வறுமையில் இருக்கும் மக்களினுடைய பொருளாதாரத்தின் மீதும் எதிர்மாறான தாக்கத்தை ஏற்படுத்தும்;. குறிப்பாக உலகப் பொருளாதாரத்தை எடுத்துப் பார்க்கும் பொழுது நாளாந்த தேவைக்கான உணவுப் பொருட்கள் கூட வெவ்வேறு நாடுகளில் உற்பத்தி செய்யப்படுவதால் ஏற்றுமதி இறக்குமதிப் பொருளாதாரத் தடைகள் ஏற்படும் பொழுது மக்களுடைய உணவுப் பாதுகாப்பையும் பாதிக்கும்.

நவதாரளவாத உலகமயமாக்கல்

எந்த ஒரு நெருக்கடியும், நிலைத்திருக்கும் அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பைப் பொறுத்தே அதன் விளைவுகள் இருக்கும். இங்கு கடந்த நான்கு தசாப்தங்களாக முன்வைக்கப்பட்ட நவதாராளவாத உலகமயமாக்கல் கொள்கைகள் ஊடாக உருவாக்கப்பட்டிருக்கும் பொருளாதாரம் என்பது வர்த்தக தாராளமயமாக்கத்தின் அடிப்படையில் நாடுகளுக்கிடையிலான உற்பத்தி மற்றும் நுகர்ச்சி உலக சந்தையால் தீர்மானிக்கப்படுகிறது. இவ்வாறான கொள்கைகள் ஏற்கனவே பல்நாட்டுக்கம்பனிகளின் இலாபத்தை அதிகரிக்கும் அதே நேரம் நாடுகள் மத்தியிலும் மற்றும் மக்கள் மத்தியிலும் இருக்கும் ஏற்றத்தாழ்வை அதிகரித்திருந்தது.

corono.singapore-300x210.jpgஇவ்வாறான பொருளாதார சூழலின் மத்தியில் இந்த கொவிட் 19 அனர்த்தத்தால் ஏற்படும் பொருளாதார நெருக்கடி மேலதிகமான குழப்பங்களை கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதாவது ஒரு தன்னிறைவு பொருளாதாரம் இருக்குமாயின் நெருக்கடியின் தாக்கம் ஓரளவு குறைவாக இருந்திருக்கும். இந்த நெருக்கடியின் மத்தியில் உலகமயமாக்கல் கொள்கைகளை உள்வாங்கிய நாடுகளும் கூட தங்கள் எல்லைகளைப் பலப்படுத்தி விமானநிலையங்கள் மற்றும் துறைமுகங்களை மூடி மக்கள் நடமாட்டம் மற்றும் நாடுகளுக்கிடையிலான பொருட்களின் பரிவர்தனை என்பவற்றை கட்டுப்படுத்தி வைத்துள்ளன. உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தில் ஒரு பொருளினுடைய  உற்பத்தி பொருளாதார முறை இந்த நெருக்கடியுடன் பெருமளவில் குழப்பமடைந்துள்ளது.

அதே போல் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கூட உலகத்தின் பல இடங்களில் இருந்துதான் இறக்குமதி செய்யவேண்டியிருக்கிறது. உதாரணமாக கோதுமை மாவு, தானியங்கள், பாற்பொருட்கள் போன்ற உணவுப்பொருட்களைக்கூட அந்தந்த நாடுகள் பதுக்கி வைப்பதனால் எதிர்வரும் மாதங்களில் அத்தியவசியப்பொருட்களுக்கான விலை அதிகரிப்பு அல்லது தட்டுப்பாடு போன்றன ஏற்பட்டு உணவுப் பாதுகாப்புப் பிரச்சினையையும் கொண்டுவரலாம்.

தீர்வுகளும் நீடிக்கும் நெருக்கடியும்

வல்லரசுகள் மற்றும் உலகத்தலைவர்கள் எல்லோரும் தற்போது இந்த நெருக்கடியின் தாக்கத்தை விளங்கிக்கொண்ட போதும் இதற்கேற்ப பொருளாதாரக் கொள்கைகளை முன்வைப்பதாகத் தெரியவில்லை. உதாரணமாக இந்த மருத்துவ நெருக்கடியில் மூழ்கிப்போயிருக்கும் அமெரிக்கா, தனது மொத்த தேசிய உற்பத்தியில் 10மூ (2 ரில்லியன் அமெரிக்க டொலர்)றிற்கான திட்டத்தை முன்வைத்த போதும் அதன் பெரும்பங்கு நிதி மற்றும் வங்கித்துறையில் ஏற்பட்ட வீழ்ச்சியை சீர்செய்ய யோசிக்கின்றதே தவிர எதிர்காலத்தில் எவ்வாறு பொருளாதாரத்தை முழுமையாக இயங்கவைக்கக்கூடிய கொள்கைகள் பற்றிய தெளிவு குறைவாகத்தான் இருக்கிறது. இது வெறுமனே நிதி மூலமாக மட்டும் சீர் செய்யக்கூடிய ஒரு பொருளாதார நெருக்கடியல்ல.

990-3.jpgஇங்கு சமூக ரீதியாகவும் மக்களை திரட்டி பொருளாதாரத்தை இயங்கவைக்க கூடிய கொள்கைகள் தேவைப்படுகின்றன. அதாவது கேள்வி, நிரம்பல்; மற்றும் தன்னிறைவு அடிப்படையிலான பொருளாதார மாற்றங்களை கொண்டுவரவேண்டிய காலமாக உள்ளது. ஆனால் கடந்த நான்கு தசாப்தங்களாக நவதாராளவாத உலகமயமாக்கலை பேணிய சர்வதேச மற்றும் வல்லரசுகளுடைய பொருளாதாரக் கொள்கைகளை முழுமையாக திசைதிருப்புவது என்பது ஒரு பெரும் சவாலாகத்தான் இருக்கப்போகிறது.

இறுதியில் இந்த உலகப்பொருளாதார நெருக்கடி என்பது உலகமயமாக்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரத்திலும் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது. அதாவது எமது சுற்றுலாத்துறையிலும் சரி, மத்திய கிழக்கு நாடுகளிற்கு சென்று பணிபுரிபவர்கள் மூலமாக ஈட்டப்படும் வருமானமும் சரி, ஆடை உற்பத்தித்துறையிலும் சரி தேயிலை உற்பத்தியிலும் சரி இறப்பர், தேங்காய், கடல் உணவுகள் போன்ற வற்றின்; ஏற்றுமதியிலும்; சரி அன்னிய செலவீனத்;தின் திரட்டலில் பெரிய பாதிப்பு வரப்போகிறது. கடனில் மூழ்கிப்போயுள்ள எம் நாடு மிக வேகமாக வரும் இந்நெருக்கடிக்கு முகம்கொடுக்க வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. இவைசம்பந்தமான கருத்துக்களை என் அடுத்த கட்டுரையில் முன்வைக்கவிருக்கிறேன்.

கட்டுரையாளர்; சிரேஷ்ட விரிவுரையாளர், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்

http://thinakkural.lk/article/37927

 

 

 

 

 
 
  • கருத்துக்கள உறவுகள்

கரோனா பாதிப்பு; வாழ்நாளில் சந்தித்திராத பொருளாதார மந்தநிலை ஏற்படும்: உலக வர்த்தக அமைப்பு எச்சரிக்கை

roberto-azev-do-world-trade-organization உலக வர்த்தக அமைப்பின் தலைவர் ராபர்ட்டோ அஸிவெடோ
 

நியூயார்க்

கரோனா பாதிப்பு நமது வாழ்நாளில் இதுவரை கண்டிராத பொருளாதார மந்தநிலையை நாம் எதிர்கொள்ள வேண்டிய அவலம் ஏற்படும் என உலக வர்த்தக அமைப்பின் தலைவர் ராபர்ட்டோ அஸிவெடோ எச்சரித்துள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான், சீனா ஆகிய நாடுகள் கரோனா வைரஸால் அதிகம் பாதிப்பைச் சந்தித்துள்ளன. கரோனோ நோய் தொற்று மட்டுமின்றி இதனால் பெரிய அளவில் பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் இதுவரை இல்லாத பொருளாதார மந்தநிலையை நாம் எதிர்கொள்ள வேண்டிய அவலம் ஏற்படும் என உலக வர்த்தக அமைப்பின் தலைவர் ராபர்ட்டோ அஸிவெடோ எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

கரோனா வைரஸ் உலக அளவில் ஏற்படுத்தி வரும் மனிதப் பேரிழப்பும், பொருளதாரச் சீரழிவும் இதுவரை இல்லாத ஒன்று. நமது வாழ்நாளில் நாம் இதுபோன்ற இழப்பை காணவில்லை.

குறிப்பாக கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட நடவடிக்கைகள், ஊரடங்கு போன்ற நடவடிக்கையால் உலக நாடுகள் எதிர்கொள்ளும் தீவிரமான பிரச்சினையாகும்.

வளர்ந்த நாடுகள், வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளில் உள்ள தொழிலாளர்கள், வர்த்தகம் செய்வோர், சுயதொழில் செய்வோர் பேரழிவைச் சந்திக்கிறார்கள்.

கரோனா பாதிப்பு நமது வாழ்நாளில் இதுவரை கண்டிராத பொருளாதார மந்தநிலையை நாம் எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

https://www.hindutamil.in/news/business/548578-roberto-azev-do-world-trade-organization-1.html

 

 

 

Coronavirus: '70 to 80%' of Dutch flower production destroyed |

 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ampanai said:

Coronavirus: '70 to 80%' of Dutch flower production destroyed |

 

இணைப்பு வேலை செய்யவில்லை அம்பனை

Just now, உடையார் said:

இணைப்பு வேலை செய்யவில்லை அம்பனை

https://www.youtube.com/watch?v=O9FHEceFI6o

https://www.youtube.com/watch?v=BYeC0W6qqVs

 

சில நாடுகளில் சில இணைப்புக்கள் வேலை செய்யா ... 😞 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ampanai said:

https://www.youtube.com/watch?v=O9FHEceFI6o

https://www.youtube.com/watch?v=BYeC0W6qqVs

 

சில நாடுகளில் சில இணைப்புக்கள் வேலை செய்யா ... 😞 

 

நன்றி அம்பனை இணைப்பிற்கு, இப்ப வேலை செய்கின்றது, பார்க்கவே கவலையாக உள்ளது 

Edited by உடையார்

Just now, உடையார் said:

நன்றி அம்பனை இணைப்பிற்கு, இப்ப வைலை செய்கின்றது, பார்க்கவே கவலையாக உள்ளது 

ஆம் உடையார். இது ஒரு ஆரம்பமே. கனடாவில் பாலின் விலை அரச மானியத்தின் கீழ் உள்ளது. ஆனால், விற்பனை இல்லை. பாலை ஆறாக ஓட விடுகிறார்கள் 😞 

பசி வர இங்கே மாத்திரைகள் 
பட்டினியால் அங்கே யாத்திரைகள் 

இதுவே உலகம் !!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொரோனா இல்லாத காலத்திலும் அநேகமான நாடுகளில் மரக்கறிகளும்,உணவுப்பொருட்களும் ஆயிரக்கணக்கான தொன் கணக்கில் குப்பையில் தான் போகின்றன.

அரபு நாடுகளில் அயல்நாட்டு பணியாளர்கள் வேலை தப்புமா? 

 

 

  • 3 weeks later...

கொரோனா ஐரோப்பிய பொருளாதாரத்தை நொருக்கும் விபரம் வெளியானது !

 

 

29 மில்லியன்கள் அமெரிக்கர்கள் வேலை இழந்துள்ள நிலையில், என்னென்ன துறைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன ? 

106528316-1588942628641-20200508__Where_th_Jobs_Went_May_report.png?v=1588942640&w=678&h=551

 

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா ஏற்படுத்தியுள்ள பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வது எப்படி?

கொரோனாவால் உலகின் எல்லாநாடுகளிலும் முடக்கல், மூடுதல் மெய்யாக நடந்துவிட்டது. உயிர்பிழைப்பதே முதல் தேவையாக இருப்பதால் அரசாங்கங்களும் மக்களும் இணைந்து மனித இடை வெளிகளையும் சமூக இடைவெளிகளையும் நிறுவன இடைவெளிகளையும் நகர, கிராம தேச இடைவெளிகளையும் தாமாகவே முன்வந்து ஏற்படுத்தியுள்ளனர். இது உலகின் எல்லாத் துறைகளினதும் செயற்பாட்டையும் பாதித்துள்ளது. இது உலகில் பொருளாதார மந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இது சாதாரண பொருளாதார மந்தமில்லை. ஏனெனில் நாமே தீர்மானித்து முடக்கினோம், நாமே பொருளாதார மந்தநிலையை ஏற்படுத்தியுள்ளோம். எனவே மூடியதை எப்போ நாம் திறக்கப்போகிறோம், எப்போ மந்தநிலையிலிருந்து விடுபடப்போகிறோம்.

இன்றைய இந்த நிலைமை2008ல் உலகில் ஏற்பட்டது போல நிதி அதிர்வல்ல, இது ஒழுங்காக உருவாகிய பொருளாதார மந்தமும் அல்ல. இது உண்மையில் இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்ட ஒன்று. இதன் உலகளாவிய தாக்கம் சுகாதார அதிர்வாகும் ( Covid-19 is a health shock) கடந்த 100 வருடங்களில் எதிர்கொணட அதிர்வுகளில் இதுவே மிகப்பெரிய அதிர்வு. இது சமூக, பொருளாதார, அரசியல், சமய, கலாசாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அது மாத்திரமல்லாது இவை எல்லாவற்றிலும் புதிய பரிமாணங்களை தரிசிக்கவைத்துள்ளது.

மனித சமூகத்தை உடனடியாக பாதுகாப்பது முதற்கடமை. இதற்கு பின்னர் ஏனைய பிரச்சினைகளுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பது பற்றிய கலந்துரையாடல்கள் இடம்பெறுகிறது. மக்களின் சுகவாழ்வுக்கு தொடர்ச்சியான உணவு கிடைப்பு நிலையை உறுதிப்படுத்துவது, சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு அடிப்படையான உணவை தங்குதடையின்றி பெறுவதற்கு மக்கள் வருமானத்தை உறுதிப்படுத்துவதற்கான பொருளாதார சூழலை ஏற்படுத்துவது அரசின் முதற்கடைமையாக உள்ளது.

இன்று பொருளாதாரம் வீழ்வதற்கு பின்னணியாக இருப்பது குறிப்பிட்ட பொருளாதார கொள்கையால் ஏற்பட்ட வர்த்தகப் பிழைகளோ அல்லது சந்தைத்தோல்விகளே அல்ல. இது நாமாக ஏற்படுத்திக்கொண்டது. கொரோனாவின் தாக்கத்திலிருந்து முதலில் விடுதலை பெற வேண்டும். நெருக்கடி நிலையை எதிர்கொள்வதற்காக தேசிய ரீதியில் எற்படுத்திக் கொண்ட முடக்கல்களின் விளைவு நம்மில் யாரும் வேலைக்கு செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் பொருளாதார செயற்பாடு நின்றுவிட்டது என்பது உண்மை. இது சாதாரண அதிர்வல்ல. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியை விரைவாக வீழ்ச்சியடையவைத்தது. இதனால் வளர்ந்த நாடுகளில் கூட ஒவ்வொரு காலாண்டுக்கு கால் ஆண்டு 8 வீத பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு வருடத்தில் 30 வீதமான மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது. இதனை மீள்எழுச்சி பெற வைப்பது சாத்தியமானதா?

இதற்கு ஸ்பெயின் நாட்டின் பொருளாதார நடவடிக்கை ஒன்றை உதாரணமாக பொருளியலாளர்கள் சொல்வார்கள. அதாவது ஸ்பெயின் நாட்டில் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் கைத்தொழில் உற்பத்திகள் நிறுத்தப்படும். இதனால் அந்த மாதத்திற்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 30வீதத்தால் வீழ்ச்சியடையும். ஆனால் ஆகஸ்ட் மாத இறுதியில் விடுமுறைக்கு சென்ற தொழிலாளர் மீளவும் வந்து கைத்தொழில் சாலைகளில் வேலை செய்யத் தொடங்கியவுடன் உறபத்தி பழைய நிலைக்கு வந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியும் அதிகரித்துவிடும். இதுபோல் எல்லாநாடுகளிலும் கொறோனாவால் ஏற்பட்ட பொருளாதார மந்தத்திலிருந்து முடக்கல் நிலையின் பின் மீள்எழுச்சி பெறமுடியுமா? என்ற சந்தேகம் உண்டு.

கொரேனாவின் பின்விளைவுகளே நாடுகளின் பொருளாதார பாதையை நிர்ணயிக்கிறது. எல்லா மக்களும் எல்லா அரசும் ஒரேவிதமான சவாலையே எதிர்கொள்கின்றனர். இன்று நாம் வைரஸ்சின் முதல் சுற்றை எதிர்கொண்டுள்ளோம். அடுத்த சுற்று என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பற்றிய எதிர்வு கூறல்கள் இருந்தபோதும் இதன் தாக்கம் பற்றி அளவிட முடியாதுள்ளது.

ஒவ்வொரு நாடும் பழைய சாதாரண நிலைக்கு செல்வதற்கு அதாவது புதிதான சாதாரண நிலையை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். அதற்கு பெருமளவான மூலதனப் பாய்ச்சல் ஏற்படவேண்டும். இங்குதான் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் உதவி தேவைப்படுகிறது. முன்னைய காலத்தில் ஒரு நாடு பொருளாதாரப் பிரச்சினையை எதிர்கொள்ளும்போது அந்த இரு சர்வதேச நிறுவனங்கள் நெருக்கடியுள்ள நாடுகளுக்கு உதவியுள்ளது. இன்று உலக வங்கி நாடுகளின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கும் பொருளாதார வளர்சியை ஏற்படுத்துவதற்கும் மூலதனப் பாய்ச்சலை ஏற்படுத்துமா? உள்நாட்டு நாணயத்தின் பெறுமதியை ஸ்தரப்படுத்த சர்வதேச நாணய நிதியத்தால் முடியுமா? என்ற கேள்விகள் எழுகின்றது.

முன்னர் உலகின் ஏதோ ஒரு நாடு மாத்திரம் பாதித்தபோது இதுசாத்தியமாய் இருந்தது. இன்று எல்லா நாடுகளுமே பாதிக்கப்பட்டுள்ளன. இலங்கையைப் பொறுத்தவரை இன்னமும் உறுதியளித்த127 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவில்லை. இன்று நாடுகளின் மீள்எழுச்சி என்பது உலகளாவிய பிரச்சினையாக உள்ளது. மீள் எழுச்சிக்காகவும் சாதாரணநிலைக்கு செல்வதற்கும் ஒவ்வொரு நாடும் சர்வதேச நிதி நிறுவனங்களையும் நட்பு நாடுகளையும் எதிர்பார்த்துநிற்கிறது.

இதை நாம் வைரசுடனும் முடக்கலுடனும் ஒப்பிட்டு பார்க்கவேண்டும். இங்கு டொலர் நிதியீட்டம் போதுமான அளவு தேவை என்பதை அறிவோம். நாடுகள் ஒவ்வொன்றும் நடைமுறைக்கணக்கு பற்றாக்குறையை நிதியீட்டம் செய்ய சிரமப்படுகின்றது. இந்த நெருக்கடி பொருட்களின் விலையில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறைந்தவருவாய், குறைந்த ஏற்றுமதி, இறுதியில் ஏற்கனவே இருந்த கடன் நெருக்கடியும் சேர்ந்து பாரிய பிரச்சினையாய் உருவெடுத்துவிடும்.

இலங்கை 3.2 ரில்லியன் டொலரை முன்னர் பெற்ற கடனுக்காக 2020 டிசம்பர் மாததிற்குள் செலுத்த வேண்டியுள்ளது. இதற்காகவும் மீளக்கடன் பெறவேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளது.

அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா, கனடா, ஸ்பெயின், நெதர்லாந்து , பெல்ஜியம்,இத்தாலி போன்ற நாடுகள் மீள் எழுச்சிக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றன. இங்கு மக்களையும் உற்பத்தி நிறுவனங்களையும் மீட்டு எடுப்பதற்கு அரசாங்கம் செலவிடுகின்றது. பிரான்ஸ், யேர்மனி, டென்மார்க், அமெரிக்கா போன்ற நாடுகளில் தொழிலாளர்களின் மாதாந்த சம்பளத்தில் ஒரு பகுதியை அரசாங்கம் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்குகிறது. இது சாதாரண நிலை வரும் வரைக்கும் தொழிலாளர் அந்தந்த நிறுவனங்களின் தொழிலாளர்களாவே இருப்பார்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்கே இது சாதாரண நிலை ஒன்று ஏற்படுமிடத்து விரைவான உற்பத்திக்கு வழிசமைக்கும்.இச்செயற்பாட்டின் ஊடாக உற்பத்தி நிறுவனங்களை பாதுகாப்பதோடு அந்த நிறுவனங்களுடன் உற்பத்தி வழியில் முன்- பின் இணைந்துள்ள நிறுவனங்களையும் பாதுகாப்பதாக இருக்கும். அரசின் இந்த நடவடிக்கை நிறுவனத்தைப் பாதகாப்தோடு காசுப்பாய்ச்சல் , கடன் விரிவாக்கம் டியமெசரிவல் இருந்து பாதுகாக்கவும் உதவும்.பொருளாதார செயற்பாடுகள் அறுந்து போகாது தொடர்ந்து நிலைத்து நிற்க வழிசெய்யும்

முன்னைய நெருக்கடிகள் (2008, 1990) போலல்லாது, இது வேறு ஒன்றுடனும் ஒப்பிடமுடியாத நெருக்கடியாய் உள்ளது. இதற்கான கொள்கையும் தீர்வும் புதிதாய் தான் இருக்கும்.

கொரோனாவிலிருந்து மீள்வதற்கு நிதிப்பற்றாக்குறை என்ற ஒரு கருவியை சீர்செய்தால் மாத்திரம் போதுமானதல்ல, பலகருவிகள் தேவைப்படுகிறது. வங்கிகள் கொடுத்த கடனை உடனடியாக திரும்பப் பெறமுடியாது. முயற்சியாளர்களும் உற்பத்தி நிறுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் இவ்வேளையில் அவர்களுக்கு மேலும் சுமையை கொடுக்காமல் வேலையாட்களின் ஒருபகுதி சம்பளத்தைக் கொடுத்து உற்பத்தியை விட்டு விலகுவதை தடுக்கவேண்டும்.

அந்நிலையில்தான் இது உடனடி மீள்எழுச்சிக்கு வழிசமைக்கும். ஐரோப்பாவில் மத்திய வங்கி கடன் அறவீட்டை சில வாரங்களோ சில மாதங்களோ தள்ளிப் போட்டுள்ளது. இதே நடைமுறை இலங்கையிலும் அரசினால் பின்பற்றப்படுகிறது. வங்கிகளுக்கு சில ஊக்குவிப்புக்களும் வழங்குகின்றது. எமது நாடு போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் வரவு செலவுத்திட்டத்தில் முதலீட்டாளர்களுக்கான பல சலுகைகள் வழங்கப்படுகிறது.

30 வீத உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சியை சரிப்படுத்துவதற்காக முதலீட்டாளர்களுக்கு வழங்கும் சலுகைக்காக 30 வருட முதிர்ச்சியுடைய திறை சேரி உண்டியல்கள், கடன்பத்திரங்கள் குறைந்த வட்டி வீதத்தில் குறை நிலையை நிதியீட்டம் செய்ய ஒழங்குகள் செய்யப்படுகிறது.

கொரோனாவைக் கட்டுப்படுத்தக்கூடிய சுகாதார மேம்பாடு முதல்நலைத் தேவை. அதைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து விடுவோம் என்ற நம்பிக்கையோடு பொருளாதாரத்தை மீளத்திறந்து விடுதல் படிப்படியாக நடைபெறக்கூடியது. எல்லாவற்றையும் மூடிவிட்டு பின்னர் மெதுவாகத் திறப்பதென்பது சுலபமான காரியமல்ல. அதிகமான தொழிலாளர் வீட்டிலிருந்தே வேலை செய்தல் என்பதை விரிவுபடுத்தலாம். கொரோனா காலத்தில் வீட்டிலிருந்து வேலைசெய்யும் முறைகள் தொடங்கப்பட்டது இதையே தொடர்வதென்பது எந்தளவிற்கு சாத்திமாகும் என்பது அறியமுடியாதுள்ளது. எல்லாத் தொழில்களையும் வீட்டில் இருந்து செய்ய முடியாது. விவசாயம், கைத்தொழில், மீன்பிடி, ஏற்றி இறக்குதல், போக்குவரத்து போன்றவை வீட்டிலிருந்து கணனி ஊடாக செய்யமுடியாது. எந்தத் துறையில் இதுசாத்தியம், எந்தத் துறையில் இதை மேலும் விரிவுபடுத்தலாம் என்பதை முதலில் பட்டியலிடவேண்டும்.

கொரோனாவையும் கட்டுப்படுத்தி பொருளாதாரத்தையும் முன்னைய நிலைக்கு அல்லது புதிய ஒழுங்கு ஒன்றுக்கு கொண்டுவருதல் என்பது சிரமமான விடயமாக இருந்தாலும் அதுவே இன்றைய தேவை. சீனாவும் தென் கொரியாவும் கொரோனாவைக் கட்டுப்படுத்திக் கொண்டே வர்த்தகத்தை தொடர்கிறது. தடைகளை விரைவாக தளர்த்தி சுமுகநிலையை ஏற்படுத்தவேண்டும். வைரஸ் கட்டுப்பாடு காலதாமதமானால் மீள் பொருளாதாரத்தின் செயற்பாடு பின்தள்ளப்படுவதோடு பொருளாதார வளர்ச்சியும் மட்டுப்படுத்தப்பட்டுவிடும். ஏதாவது பிரமிக்கவைக்கக் கூடிய தொழில்நுட்பத்தினூடாக சுகாதாரத்தை பழைய நிலைக்கு அல்லது மேலோங்கிய நிலைக்குகொண்டு வரக்கூடிய முதலீடே இன்றைய காலத்திற்கான பொருத்தமான முதலீடு. அதுவே மீளத்திறப்பதை ஊக்குவிக்கும் காரணியாகி சாதாரண நிலைக்கு விரைவாக கொண்டுசெல்லும்.

இலங்கை நடுத்தர வருமானம் பெறும் நாடு என்பதோடு வளர்ந்து வரும் நாடு. பல பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துவரும் நாடு. இப்பிரச்சினையின் மத்தியில் இன்றுள்ள பிரச்சினையிலிருந்து எவ்வாறு மீள் எழுச்சிக்கு தயாராகின்றது என்பதை நோக்குமிடத்து வளர்ந்த நாடுகளில் மீள் எழுச்சிக்கு எடுக்கும் நடவடிக்கைகள் போல் நடவடிக்கைகளை எடுப்பதற்கான வல்லமை உண்டா என்பது சந்தேகமே. கொரேனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் மீள் எழுச்சிக்காக விசேட திட்டங்களும் சட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் ஊழஎனை 19 யஉவ என்ற சட்டமூலத்தை உருவாக்கியுள்ளது. அவுஸ்திரேலியா corona virus economic response packge Bill 2020 என்ற சட்டமூலத்தை உருவாக்கியுள்ளது. யேர்மனி corona crisis package என்னும் சட்டத்தினூடாக 814 பில்லியன் டொலர் நலத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பிரான்ஸ் no 2020 -290 சட்டமூலத்தை உருவாக்கி u health emergency என்பதனூடாக சாதாரண நிலையை உருவாக்க முயற்சிக்கிறது. நியுசிலாந்து பாராளுமன்றம் covid 19 response (taxation and social assistance urgent measures) போன்ற சட்டங்களை உருவாக்கி புதிய சாதாரண நிலைக்கு திரும்பி பொருளாதாரத்தை மீட்டு எடுக்கும் செயற்பாட்டில் இறங்கியுள்ளது.

இலங்கையும் மக்கள் நலன் சார்ந்ததாகவும் உற்பத்தியாளர் நலன்சார்ந்ததாகவும் தொழில்துறைகளை மீண்டும் விரைவாக தொழிற்பட வைப்பதற்கா ன திட்டங்கள் சிலவற்றை முன்னெடுக்கவுள்ளது. அவற்றில் சில முக்கியமானது. மத்திய வங்கி மூலதனக்கடன் பெற்ற உற்பத்தியாளர்கள் கடனை திருப்பிச் செலுத்தக் கூடியநிலை இல்லாமையால் திருப்பி செலுத்தும் காலத்தை 3 மாதத்திலிருந்து 6 மாதமாக பிற்போட்டு சலுகை வழங்கியுள்ளது.

முயற்சியாளர்கள் தங்கள் மூலதனப்பாய்ச்சல் அளவுகளை வங்கி முகாமையாளர்களுடன் கலந்துரையாடி மீளச் செலுத்தும் காலத்தை தீர் மானிப்பதற்கு மத்தியவங்கி அனுமதி வழங்கியுள்ளது. இவையெல்லாம் உற்பத்தியைத் தொடர்வதற்கான ஊக்குவிப்பாகும்.அத்துடன் நிறுவனங்களின் மூலதனத்தேவையை கருத்தில்கொண்டு 2மாதத்திற்கு தேவையான தொழிற்படு மூலதனத்தில் 25மூதை 4மூ வடடியில் பெறுவதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் திட்டத்திற்கப்பாலும் வங்கிகள் 50,000 ரூபா குறைந்த தொகையுடைய கடனட்டைக்கான வட்டியிலும் சலுகைககளை வழங்கியுளளது.

இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட 80,000 தொழிலாளரும் 19 இலட்சம் பேர் நாட் சம்பளத்திற்கு வேலை செய்பவர்களாகவும் 14 லட்சம் பேர் சிறு வியாபார நடவடிக்கையில் ஈடுபடுபவர்களாகவும் இருக்கின்றனர். இலங்கைப் பொருளாதாரத்தில் 80 வீத உற்பத்தி சிறிய நடுத்தர தொழில் துறையாலும் முறைசாராதவகையில் கிராமிய விவசாயம், கால்நடை மற்றும் மிருக வளர்ப்புகளாலும் உற்பத்தி செய்யப்படுகின்றது. இவற்றில் அதிகமான மக்கள் பங்குகொள்வதால் அம்மக்களை மீட்டெடுப்பதற்காக சமுர்த்திக் கொடுப்பனவுகள் மற்றும் நிவாரணமாக 10,000 ரூபா அரசமானியமாக வழங்கப்படுகிறது. அத்தோடு பிரதேச ரீதியாக 25 மாவட்ட அரச அதிபர்களுக்கும் தலா 10 மில்லியன் ரூபா அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது.இது கொரோனாவால் பாதிக்கப்பட்ட உற்பத்தித்துறைகள் மீள் எழுச்சி பெறுவதற்கு தேவையான நிதி மற்றும் உள்ளீடுகள் இலகுவாக கிடைக்க ஆவன செய்வதற்காக வழங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

மக்களிடம் சேமிபபு இல்லை. அரச வருமானமும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஐரோப்பிய மற்றும் அமெரிக்காவிலிருந்து கிடைத்த GSP வரிச்சலுகையால் கிடைத்த வருவாயும் தற்போது அரசுக்கு கிடைப்பதில்லை. அரசாங்கம் வரி வீதங்களை 15 வீதத்திலிருந்து 8 வீதமாக குறைத்து முயற்சியாளருக்கு முதலீட்டிற்கான சேமிப்பை உயர்த்த வழிவகை செய்தாலும் அரச வருவாய் வீழ்ச்சியடைந்துவிடும் ஆபத்தும் உள்ளது. இன்று கொரேனாவிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான சுகாதாரச் செலவும் உயர்ந்துள்ளது.

தனியார் துறையில் வேலையிழப்பு, சம்பளக்குறைப்பு தொடர்ச்சியாக வேலைவாய்ப்பை வழங்குவதற்கு நிறுவனங்கள் மூலதனப்பாய்ச்சலை தொடர்சியாக மேற்கொள்வதற்கு மத்திய வங்கி வணிக வங்கிகளுக்கு சலுகைகளை வழங்கி உற்பத்திகளை விரைவாக ஆரம்பிப்பதற்கு நிறுவனங்கள் எதிர்நோக்கிய தடைகளை அகற்றி ஊக்கம் கொடுக்க வேண்டும். இலங்கை அரசு வணிக வங்கிகளுக்கு 1 வீத வட்டியில் 50 மில்லியன் ரூபா பணம் கொடுத்துள்ளது. வணிக வங்கிகள் உற்பத்தி நிறுவனங்களுக்கு 3 வீத -4 வீத உற்பத்திகடன் வழங்குகிறது. இவை சிறிய நிறுவனங்களுக்கான கடன் சலுகையாக இருக்கிறது. பெரிய நிறுவனங்களுக்கு எந்தச்சலுகையும் அறிவிக்கப்பட வில்லை. பெரிய நிறுவனங்கள் அதிக வேலை வாய்ப்பை வழங்குவதால் பழைய நிலைக்கு பொருளாதாரத்தை கொண்டுவர முதலீட்டு ஊக்குவிப்புகள் வழங்கவேண்டும்.

இச்செயற்பாடுகள் தடையின்றி நிகழ்வதற்கு அரசிற்கு பெருமளவு நிதி தேவைப்படுகிறது. இதற்காக வெளிநாட்டுக் கடன்களைப் பெறவேண்டும். தனியார்துறை நிறுவனங்களின் சொத்து மதிப்பு பங்குச்சந்தைகளில் நிறுவனத்தின் பங்குகளின் விலையில் தங்கி இருக்கும். கொரோனா நெருக்கடிகளின் பின்னர் பங்குச்சந்தை கூடவும் முடியவில்லை. தனியார்துறை நிறுவனங்கின் பங்குகளின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. உதாரணமாக 100 ருபா பங்கு ஒன்றின் விலை 50 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது. நிறுவனங்களின் வர்த்தக நடவடிக்கைகள் மீள இடம்பெறுவதற்கான சந்தர்ப்பம்,மிகக்குறைவாக இருப்பதால் பங்குச்சந்தை தொடர்ந்தும் வீழ்ச்சியடையும் வாய்ப்புக்களே காணப்படுகிறது. நிறுவனங்களின் காசுப் பாய்ச்சல் தொடர்ச்சி முறிந்துவிடக்கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன. இந்நிலையில் மீள்எழுச்சி காலம் தாழ்த்தியே இடம்பெறும். கொழும்பு இந்த சந்தர்ப்பத்தில் பங்குச்சந்தை நிட்சயமில்லாமல் இருப்பதால் 4 பில்லியன் டொலர் வெளியேறியுள்ளது.

மத்தியகிழக்கு நாடுகளில் எண்ணெய் விலை வீழ்ச்சசியடைந்தாலும் உலகில் எண்ணெய்க்கான கேள்வி வீழச்சியடைந்ததாலும் உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தியுள்ளன. இதனால் அந்நாடுகளில் பணிபுரிவோரில் 5 இலட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். இவர்கள் இலங்கைக்கு திரும்பும்போது இலங்கையில் வேலையின்மை அதிகரிப்பதோடு, அவர்கள் சார்ந்த சமூக செலவும் அரசுக்கு பெரும்சுமையாக அமைந்துவிடும்.

சிறிய நடுத்தர கைத்தொழில் நிறுவனங்கள் முழுமையாக செயலிழந்துள்ளன. 47 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். கடந்த சில மாதங்களில் மத்தியவங்கியால் 170 மில்லியன் பணம் புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2வீதமாகவே உள்ளது. இதனால் பெரும்பாதிப்பு ஏதுமில்லை என்றவாதமும் உண்டு. உலகவங்கியின் மதிப்பீட்டில் இலங்கை மிகமோசமான பொருளாதார நெருக்கடியை சந்திக்கப்போகிறது என மதிப்பிட்டுள்ளது.இலங்கை கடனுக்கான வட்டியாக தனது வருமானத்தில் 65வீதத்தை செலுத்தவேண்டியுள்ளது. இலங்கையின் மொத்தப் பொதுக்கடன்,மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 96வீதமாகும். வரவு செலவுத்திட்ட பற்றாக்குறை 9.3 வீதமாகும். மூடப்பட்ட கட்டுநாயக்கா மற்றும் பியகம சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள 244 கைத்தொழிற்சாலைகள் மீள தொழிற்படுவதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுவருகிறது.

இலங்கை மீண்டும் பழையநிலைக்கு திரும்புவதற்கு உற்பத்தி நிறுவனங்களிற்கும் மக்களுக்கும் அதிகளவான நிவாரணங்களும் சலுகைகளும் வழங்க வேண்டும்.அத்துடன் உற்பத்தி நிறுவனங்களும் மாற்று வழிகளை கண்டறிந்து பொறுப்புணர்வோடு செயற்பட்டால்தான் இலங்கையை மீளக்கட்டி எழுப்பலாம். புதிதான சாதாரண நிலைமை புதியதொரு இலங்கையை உருவாக்கவேண்டும்.

http://thinakkural.lk/article/41204

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.