Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெய்வம் - கொரோனா நெருக்கடிக்கால அனுபவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தெய்வம் - கொரோனா நெருக்கடிக்கால அனுபவம்
************

தெய்வத்திற்கு நன்றி
***************************
'தெய்வம்'கதையை கதையாகவே எழுதவேண்டும் என்ற நோக்கம் எனக்கிருக்கவில்லை.
பிரான்ஸ் வைத்தியசாலையில் ஒருவர் கொரோனோ தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவர் அனாதரவாக விடப்பட்ட செய்தியைப் பகிர்வது அவசியம் என்றே கருதினேன். வைத்தியசாலைகளின் யதாரத்த நிலை இப்படித்தானிருக்கிறது. பணியாளர்கள்கூட வெருட்சியான மனநிலையுடன்தான் பணியாற்றுகிறார்கள்.

இந்த கதையில் வரும் சம்பவங்கள் சதீஸ் என்ற பாத்திரமான என் நண்பர் மூலம் பெறப்பட்ட உண்மைச்சம்பவங்களே. 'நான்' என்ற பாத்திரமும் சில மெருகூட்டல்களுமே புனைவு.
கொரோனா என்று உறுதிப்படுத்தப்பட்ட, ஏற்கனவே பயந்த சபாவமுள்ள இளைஞன், தன்னந்தனியனாய் எதிர் கொள்ளும் மனநிலை மிகக்கொடுரமானது. அவனது தனிமையின் ஏக்கமும், துயரும், உணவுக்காக பரிதவித்த நிலையும் உண்மையானவை.

இதனைப் பதிவிடும்போது எனது பதிவுகளில் பத்தோடு பதினொன்றாக இருக்கும் என்பதே எனது கணிப்பாக இருந்தது. ஆனால் இரண்டு நாட்களுக்குள் 527 பகிர்வுகள் என்பது நான் கற்பனையில் கூட எதிர்பாராதது. இதைவிடவும் 444 விருப்புக்குறிகள். 137 பின்னூட்டங்கள். சாதாரண ஒரு மனிதனாக உண்மையில் நெகிழ்ந்தே போகிறேன். ஆனாலும், இந்த கௌரவம் எனக்கானதல்ல. ரஷீத்; என்ற பாத்திரத்திற்கே என்பதையும்  நான் உள்ளுர உணர்கிறேன். ஆயினும் இக்கதைக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றிகள்.

மனோ
7.4.2020

—————

 


இரவு பதினொரு மணியிருக்கும். சதீஸிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. நடுங்கும் குரலில் பேசினான். பேச்சு தெளிவாய் இருக்கவில்லை. வீட்டில் தனியாக இருக்கிறான். என்ன ஆபத்தோ தெரியவில்லை. நானும் போக முடியாது. தடுமாறிக்கொண்டிருந்தேன். 

'என்ன சதீஸ் ஏதாவது பிரச்சினையா?'

ஏதோ சொல்ல முயன்றான். புரியவில்லை. திரும்பவும் அழுத்திக்கேட்டேன்.

திரான்ஸி வைத்தியசாலையில் நிற்பதாகச் சொன்னான்.

'ஏன் அங்க போன்னீங்கள்?'

'எனக்கு ஏலாம வந்து பொம்பியே வந்து கொண்டுபோனது' 

'ஏன்? என்ன பிரச்சினை?'

அவனிடமிருந்து பதிலில்லை. எனக்கு நெஞ்சு படபடத்தது.

'சதீஸ் ஏதாவது பிரச்சினையா?

அவன் ஈனக்குரலில் மெது மெதுவாய் அனுங்கினான்.

'அண்ணை வீட்டை போகவேணும். ஏதாவது உதவி செய்வீங்களா?'

'இப்ப ஏன் உங்க போன்னீங்கள்?'

'அண்ண அதுதானே சொன்னன் ஏலாம வந்து பொம்பியே வந்ததெண்டு..'
அவனது குரலில் மெல்லிய எரிச்சல் கலந்திருந்தது.

'இப்ப எப்பிடி இருக்கு?

'இப்ப ஓகே என்று டொக்ரர் சொல்றார்.'

'அவை ஏதாவது ரெஸ்ற் செய்தவையே?'

'செய்தவை'

'பிரச்சினை ஒண்டும் இல்லைத்தானே!?' ஆர்வமும், பயமும் தொடரக் கேட்டேன்.

'இல்லை பொசிற்றிவ்வாம்'

'என்ன..என்னா!' எனது குரல் உயர்ந்தது.

'இல்ல பொசிற்றாவாம்' அவனது குரல் சோர்ந்திருந்தது.

எனக்குத் திக் கென்றது.

'அப்ப ஏன் வீட்டை.!'

'ஹொஸ்பிற்றல்ல இடமில்லையாம்'

'அப்ப, அவை கொண்ட விடமாட்டினமாமோ!'

'இல்லையாம். நான் தனிய மெல்லமெல்ல போவன். ஆனால் பஸ் எடுத்து, ட்ராம் எடுத்துப்போக  மற்ற ஆக்களுக்கு தொற்றி விடுமே என்று யோசிக்கிறன்.'

இந்த நிலையிலும் அடுத்தவர் மேலுள்ள அவனது அக்கறை என்னைக் கசியச்செய்தது. அதேவேளை இந்தப்பெரிய நாட்டினது அரசு இயந்திரத்தின் பொறுப்பற்ற தன்மையை நினைக்க கோபம் கோபமாக வந்தது.
பிறகு என்ன ......,! தனிமைப்படுத்தல் சங்கிலி உடைத்தல் என்ற வறுத்தெடுத்தல்கள்!. இயலாமை என்பது வேறு பொறுப்பற்ற தனம் என்பது வேறு.

என்னைப் பயம் தொற்றிக்கொண்டது. நோய் இல்லையென்றால் பிரச்சினையில்லை. நோயாளியான சதீஸிற்கு நான் எப்படி உதவுவது? இந்த இடத்தில் நான் எப்படி அவனைத் தவிக்கவிடுவது? அவன் இலகுவில் உதவிகேட்கக்கூடிய ஆள் இல்லை. இப்போ கேட்டுவிட்டான். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
அந்தக்கணத்தில் நான் சதீசுடன் என்ன உரையாடினேன் என்பது நினைவில்லை. சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஏதேதோ அலம்பியிருப்பேன். அவனுக்கு உண்மையில் உதவ விரும்பினேன். ஆனால் பயம் என்னை விரட்டியது. சிறிது நேரத்தில் அவனது தொலைபேசி துண்டித்துக்கொண்டது. விபத்தா அல்லது அவனாக துண்டித்தானா தெரியவில்லை.

குற்ற உணர்வில் நான் துவண்டேன். அன்று இரவு முழுவதும் அவனை மாறி மாறி அழைத்துக்கொண்டிருந்தேன். தொடர்பில்லை.
தொடர்ந்து நான்கு நாட்கள்.

ஐந்தாவது நாள் 'ஹலோ' என்றான்.
கடவுளைக் கண்டதுபோல இருந்தது.

'சதீஸ் என்ன நடந்தது பிறகு அண்டைக்கு' ஆவல் மேலிடக்கேட்டேன்.

இல்லை அண்ணை, உங்கட இடத்தில நானிருந்தாலும் வந்திருக்கமாட்டேன் என்று அவன் சொன்னபோது மெதுவாய் ஆசுவாசம் அடைந்தேன். அவன் யதார்த்தத்தை, நிலமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டிருந்தான்.

'பிறகு எப்பிடி வீட்டை போன்னீங்கள்.'

'றஷீத் திற்கு போன் பண்ணின்னான். அவன் றிஸ்க் எடுத்து வந்தான்' என்றவன் தனது மீதிக்கதையைச் சொல்லத் தொடங்கினான்.

றஷீத் வந்தபோது நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தது.
நான் வைத்தியசாலை வரவேற்பறையில் ஒதுங்கியிருந்தேன். காலில் போட்டிருந்த வீட்டுச்செருப்புடன். நோய்த்தொற்று என்னில் இருக்கும் செய்தி வைத்தியசாலையின் அந்த வட்டதிற்குப் பரவியிருந்தது. எல்லோரும் பயத்தோடும் வெருட்சியோடும் என்னைப் பார்த்தனர். அங்குள்ள தாதிமாரிடம் உதவிகேட்போது அவர்கள் கேளாததுபோல பயத்தில் விலகினர். மூக்கு அடைப்பது போலிருந்தது. சீறினேன். இரத்தம் வந்தது. எழுந்து அந்த கடதாசியை போடப் போகக்கூட பயமாக இருந்தது. மடித்து பொக்கற்றினுள் வைத்தேன்.

றஷீத் அழைத்தான். அவனது கார் பலத்த பாதுகாப்பாக இருந்தது. அவன் கையுறை, முகக்கவசம் எல்லாம் அணிந்திருந்தான். அவனை அடையாளம் காண்பது அவ்வளவு இலகுவானதல்ல. காரின் பின் ஆசனத்தை பொலித்தீனால் கவர் பண்ணியிருந்தான். காரில் தொடாது நான் ஏறுவதற்காக அவன் பின்கதவைத்திறந்து வைத்திருந்தான். தனக்கும் எனக்கும் இடையில் கண்ணாடி மறைப்பொன்றைப் போட்டிருந்தான். வீடு திரும்பியதும் எப்படியும் காரைக்கழுவுவான் என்பதை ஊகித்துக்கொண்டேன்.

கார் பயணத்தின் போது றஷீத் எனக்கு நம்பிக்கைதரும் வார்தைகளைப் பேசிக்கொண்டே வந்தான். அவை எனக்கு மிகுந்த தென்பைத் தந்தன. இந்த வேளை அவன் எனக்குத் தெய்வம் போலவே இருந்தான்.

கார் வீட்டை அடைந்தது. அவன் இறங்கிவந்து மிகக்கவனமாக பின்கதவைத்திறந்துவிட்டான். கேற்றிலிருந்து எனது வீடு 50 மீற்றர் தூரத்தில் இருந்தது. அவன் என்னுடன் உள்ளே வர எத்தனித்தான். நான் அனுமதிக்கவில்லை. அதற்குமேலும்  அவனை தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை. றஷித் நான் நான் போய் கதவு திறக்கும்வரை என்னையே பார்த்தபடி நின்றான். உள்ளே போனதும் கட்டிலில் விழுந்தேன். றஷீத் என் கனவில் சஞ்சரித்துக்கொண்டிருந்தான். என் கண்கள் நனைந்தன.

அடுத்தநாள் காலை எழுந்தேன். பசிப்பது போல இருந்தது. இல்லாவிட்டாலும் சாப்பிடவேண்டும் என்பது எனக்குத் தெரிந்திருந்தது. எழுந்து சமைக்க முடியவில்லை. நான் இருந்த அதே வளவுக்குள் என்வீட்டு உரிமையாளர் இருந்தார். அவரும்; ஒரு தமிழர். நான் வசித்த சிறிய வசிப்பிடத்தின் முன்புறமாக அவரது வீடு இருந்தது. எனது வசிப்பிடத்திற்கும் அவரது வீட்டிற்கும் இடையில் 30 மீற்றர் நடைபாதை இருந்தது. நடுத்தர வயதான அவர் தனது குடும்பத்துடன் வசித்துவந்தார். நான் கூச்சத்தை விட்டு அவரிடம் உதவி கோரினேன்.

இடியப்பமும் சொதியும் சாப்பிட்டால் நல்லது போல இருந்தது. ஆனால் நான் கேட்கவில்லை. எதையாவது தந்தாலும் பரவாயில்லை என்றே தோன்றியது. 

' தம்பி குறைநினைக்காததேயும' என்றார்.

'அங்கிள் நீங்கள் நடுவழியில கொணர்ந்து வைத்துவிட்டுப்போனால் போதும். நான் வந்து எடுத்துக்கொள்கிறேன் என்றேன். பாத்திரங்கள்கூட நீங்கள் பாவிக்கத்தேவையில்லை. ஒரு பொலித்தீன் பைக்குள் போட்டுத் தந்தால் போதும் என்று மேலதிக பாதுகாப்பு ஆலோசனையையும் வழங்கினேன்.

'இல்லை தம்பி, இஞ்ச பிள்ளயைளும் இருக்கினம். நானும் வருத்தக்காரன் வேறை' என்று தெளிவாகவே முடித்துக்கொண்டார்.

'இல்ல பரவாயில்லை அங்கிள். நான் விளங்கிக்கொள்கிறேன்' என்றேன். 
உண்மையில் நான் அவரது நிலையை புரிந்துகொண்டேன். அவரில் எனக்கு கோபம் வரவில்லை. வருத்தமாயிருந்தது. அழுகையழுகையாய் வந்தது. கட்டிலில் புரண்டு புரண்டு படுத்தேன்.

தொலைபேசி அடித்தது.

வாசலில் றஷீத் நின்று கொண்டிருந்தான். அவனது கையில் சாப்பாட்டுப்பார்சல் இருந்தது.
நான் கிட்டப்போய் அவனைக் கட்டி அணைக்கத் துடித்தேன். அவனைக்கட்டி அணைத்து அழவேண்டும் போலிருந்தது. வேகமாய் நடந்து 2 மீற்றர் தொலைவில் சடுதியாய் நின்றேன். எனக்குள் வார்த்தைகள் வரவில்லை. குனிந்தபடி நின்றேன். கண்களிலிருந்து தாரைதாரையாக ஓடியது.

அவன் சிரித்தான். என்னைத் தேற்றினான் ஆறுதல் வாரத்தைகள் பேசினான் அவை எனக்கு மீண்டும் மீண்டும் தென்பைத்தந்தன. கேற்றில் உணவைக் கொழுவிவிடச்சொன்னேன். அவன் விடைபெற்றான்.

அவனது உணவு இரண்டு நாட்களுக்குப்போதுமாயிருந்தது. அவனது தாயார்மூலமாக பக்குவமாகச் சமைத்து, தனினத்தனிப் பாத்திரங்களில் கொணர்ந்திருந்தான். வரண்டுபோன நாவிற்கு அவை அமிர்தமாயிருந்தன. 
அடிக்கடி அவன் தொலைபேசியில் உரையாடி எனது தேவைகளை அறிந்த வண்ணமிருந்தான்.

இப்போது நான் மெது மெதுவாக சமைக்கத் தொடங்கிவிட்டேன். நேற்று முழுகியதிலிருந்து நான் பழைய நிலைக்கு திரும்பிவிட்டதாக உணர்கிறேன் என்றவன் வழமைபோல சிரிக்கத்தொடங்கினான். அவனது சிரிப்பில் கொத்து மலரொன்று சிலிர்த்தது.

04.04.2020
 

 

  • கருத்துக்கள உறவுகள்

றசீத் என்ற கதாபாத்திரம்   முஸ்லிமாக இருந்தால்..... இந்த கதைக்கு பச்சை புள்ளி போட மனம் இடம் கொடுக்கவில்லை....காரணம் சைக்கிள்  கப்பில் தமிழனை இழிவுபடுத்த இருக்கும் இலக்கியவாதிகளில் ஒருவரின் படைப்பு என கடந்து செல்கின்றேன்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

றசீத் என்ற கதாபாத்திரம்   முஸ்லிமாக இருந்தால்..... இந்த கதைக்கு பச்சை புள்ளி போட மனம் இடம் கொடுக்கவில்லை....காரணம் சைக்கிள்  கப்பில் தமிழனை இழிவுபடுத்த இருக்கும் இலக்கியவாதிகளில் ஒருவரின் படைப்பு என கடந்து செல்கின்றேன்..

புத்தன் ஐயா!

தமிழனை இழிவுபடுத்தும் இலக்கியவாதியின் படைப்பு என்பதை வாசித்து உண்மையிலேயே ஷாக் ஆயிட்டேன்😲

இது சில கதைக்கான மெருகூட்டல்கள் உள்ள உண்மைச் சம்பவம் என்றுதானே மனோ சின்னத்துரை சொல்லியுள்ளார். கொரோனா எவ்வளவு தூரம் சமூகத்தில் பாதிப்பை உண்டுபண்ணுகின்றது என்பதைத்தான் கதை சொல்லுகின்றது.

கொரோனா பேதம் பார்ப்பதில்லை என்றாலும், ஷெல்லடிக்குள்ளும் ஊரடங்குக்குள்ளும் கோயிலுக்குள் பதுங்கும்போதும் பேதம் பார்த்த தமிழர், கொரோனாவுக்காக பேதத்தை விட்டுவிடுவார்களா என்ன?!

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைச் சம்பவம் சதீசுகுக்கு மட்டுமல்ல இன்றைய காலத்தில் பெரும்பாலோர்க்கு அதுவும் தனியாக இருப்பவர்களுக்கு மிகவும் வேதனை தரும் விடயம்தான்.....!

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒன்றும் புதிய விடையம் இல்லை. 

பொதுவாக கொரானா தாக்கிய ஒருவரின் மனநிலை இப்படித்தான் இருக்கும். நம்மை சார்ந்தவர்களும் இப்படித்தான் நடந்து கொள்வார்கள் என முன்னமே தீர்மானித்து விட்டால் எல்லாம் இலகுவாக இருக்கு.

மேலும் இங்கு முருக‌னுக்கு , முகமதுவும். அந்தோனிக்கு அகமதுவும் உணவு எடுத்து செல்வது வழமை.

மாசா அல்லா என் சொல்லி இந்த் கதை முஸ்லீமமை நல்லவனாக காட்ட முயற்சி

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

புத்தன் ஐயா!

தமிழனை இழிவுபடுத்தும் இலக்கியவாதியின் படைப்பு என்பதை வாசித்து உண்மையிலேயே ஷாக் ஆயிட்டேன்😲

இது சில கதைக்கான மெருகூட்டல்கள் உள்ள உண்மைச் சம்பவம் என்றுதானே மனோ சின்னத்துரை சொல்லியுள்ளார். கொரோனா எவ்வளவு தூரம் சமூகத்தில் பாதிப்பை உண்டுபண்ணுகின்றது என்பதைத்தான் கதை சொல்லுகின்றது.

கொரோனா பேதம் பார்ப்பதில்லை என்றாலும், ஷெல்லடிக்குள்ளும் ஊரடங்குக்குள்ளும் கோயிலுக்குள் பதுங்கும்போதும் பேதம் பார்த்த தமிழர், கொரோனாவுக்காக பேதத்தை விட்டுவிடுவார்களா என்ன?!

டமிலனா கொக்கா ? 

அவர்களின் வீட்டிற்கு கைக் குத்தரிசி கொண்டுவருபவர் ஒரு வயதான அம்மா. அவரின் காதோ கடுக்கன்/ தோட்டின் (?) (பழைய கால டிசைன்)பாரத்தில்   தோள்வரைநீண்டு தொங்கியபடியிருக்கும். பிளவுஸ் இல்லாத குறுக்குக் கட்டிய சேலை. முகத்தில் மூப்பும் கடின உழைப்பின் மினுமினுப்பும் ரேகைகளாக சுருங்கி ஒட்டியபடியிருக்கும்.    தலையில் அரிசி பையை (உரப் பை / சாக்கு / கடகம் ?) வைத்து பல மைல்கள் வெய்யிலில் நடந்து அவ்வூருக்கு கொண்டு வருவார். அவருடன் பலரும் கூடவே வந்து ஊர் எல்லையை அடைந்தவுடன் பிரிந்து தங்களுடைய பிரத்தியேக வீடுகளுக்குச் செல்வர்.

இந்த அம்மா அரிசியை இந்த வீட்டிற்குத்தான் முதலில் கொண்டு  வருவார். ஏனென்றால் இந்த வீட்டில் ஆட்களின் எண்ணிக்கை அதிகம். பத்து வளர்ந்த பிள்ளைகளும் பெற்றோரும் உள்ளடங்கலாக பன்னிரெண்டு உருப்படிகளைக்  கொண்ட கடின உழைப்பளிகள் குடும்பம். 

இந்த வயதான அம்மா, வீட்டின் படியிலமர்ந்து அரிசியை அளந்து கொடுத்தவுடன் அருந்துவதற்கு தண்ணீர் கேட்பார். வீட்டுக்கார அம்மாவும் மகிழ்வுடன் பித்தளைச் செம்பில் தண்ணீரைக் கொண்டுவந்து சரித்து ஊத்துவார். அந்த வயதான அம்மாவும் இரு கைகளையும் ஏந்தி அருந்துவார். இது ஒரு காலம். 🙂

பின்பு ....

இந்தியன் ஆமி வந்தது. குறிப்பிட்ட காலத்தில் சண்டையும் தொடங்கியது. 😢
 

இந்த வீட்டுக்கார அம்மாவின் குடும்பமும் கையில் கிடைத்தை எடுத்துக்கொண்டு ஊரோடு  ஓடத் தொடங்கியது.

நீண்ட ஓட்டம்.  

அவர்கள் ஓடிக் களைத்து,   எதிர்ப்பட்ட பெரிய மதிலினோரமாக  கேற்ருக்கு  அருகில் நின்ற மரத்தின் கீழ் நின்று தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தனர்.

அந்த நேரம் அவ் வீட்டில் குடியிருந்தோர்  அவர்களை உள்ளே அழைத்து கதிரைகளில் இருத்தி தேனீரும் வழங்கி அவர்களை உபசரித்தனர்.

திரும்பவும் இந்த வீட்டுக்கார அம்மாவின் குடும்பம் அவர்களுக்கு நன்றி கூறி புறப்பட ஆயத்தமானார்கள். அந்த நேரம் பார்த்து  வீடடினுள்ளேயிருந்து சிறிய இருமலுடன் ஒரு வயதான அம்மா இவர்களுக்கு முன்னே வந்தார். இவர்கள் முகத்தில் ஈயாட.........

இந்த விடயத்தில் இந்தியன் ஆமிக்கு நன்றி. 🙂

(இது ஓர் உண்மைச் சம்பவம்)

திரியின் தலைப்பிற்கும் இந்தக் கதைக்கும்  தொடர்பில்லையென்றாலும் கிருபனுக்கு ஒருக்கா  முண்டு கொடுப்போமெண்டு நினைச்சன்.....😀

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் இப்படி ரசித்தை போல வெளிநாடுகளில் இருக்கலாம்  உளநாட்டில் இல்லை கிருபன் 

 

  • கருத்துக்கள உறவுகள்

அவர் இந்த கட்டுரையை எழுதியவர் வேணும் என்றே போனை கட் பண்ணி இருப்பார். அவரை சொல்லியும் குத்தமில்லை ...ஆனால் அந்த வீட்டுக்கார அங்கிள் பேப்பருக்குள்ள கட்டி சாப்பாட்டை வாசலிலாவது வைத்திருக்கலாம் 
 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

புத்தன் ஐயா!

தமிழனை இழிவுபடுத்தும் இலக்கியவாதியின் படைப்பு என்பதை வாசித்து உண்மையிலேயே ஷாக் ஆயிட்டேன்😲

இது சில கதைக்கான மெருகூட்டல்கள் உள்ள உண்மைச் சம்பவம் என்றுதானே மனோ சின்னத்துரை சொல்லியுள்ளார். கொரோனா எவ்வளவு தூரம் சமூகத்தில் பாதிப்பை உண்டுபண்ணுகின்றது என்பதைத்தான் கதை சொல்லுகின்றது.

கொரோனா பேதம் பார்ப்பதில்லை என்றாலும், ஷெல்லடிக்குள்ளும் ஊரடங்குக்குள்ளும் கோயிலுக்குள் பதுங்கும்போதும் பேதம் பார்த்த தமிழர், கொரோனாவுக்காக பேதத்தை விட்டுவிடுவார்களா என்ன?!

தமிழன் மட்டும் தான் பேதம் பார்க்கின்றான் என்று சொல்ல முடியாது ,சகலரும் பேதம் காட்டுகிறார்கள்....உதவிகள் செய்த தமிழர்களும் உண்டு....பல புலம் பெயர் இலக்கியவாதிகள் புலிகளை மட்டம் தட்டி படைப்புக்களை எழுதுவதுமல்லாமல் ....தமிழ்மக்களையும் மட்டம் தட்டித்தான் எழுதுகிறார்கள் .....

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ம்ம் இப்படி ரசித்தை போல வெளிநாடுகளில் இருக்கலாம்  உளநாட்டில் இல்லை கிருபன் 

 

பச்சை முடிந்து விட்டது.....தமிழன் திறம் என்று சொல்லவில்லை அதே நேரம் ரசீத்தின் சமுகம் சுப்பரோ சுப்பர் என நாங்கள் சொல்லமுடியாது...

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

பச்சை முடிந்து விட்டது.....தமிழன் திறம் என்று சொல்லவில்லை அதே நேரம் ரசீத்தின் சமுகம் சுப்பரோ சுப்பர் என நாங்கள் சொல்லமுடியாது...

புத்தன் ஈஸ்டர் தாக்குதலால் புட்டும் தேங்காய்பூவும் என பாலம் கட்டிய ஒருவருக்கும் அவர் நண்பர் ஒருவருக்கும் நட்பு முறிஞ்சு போனது தாக்குதலை நியாயப்படுத்தியதால் கருத்து முற்றி விலகி விட்டார்கள்.

ஒருவர் பிரபலம் மற்றவர் முகநூலுக்காக அவர் பிரபலம்  (முஸ்லீம்) 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 9/4/2020 at 17:05, தனிக்காட்டு ராஜா said:

ம்ம் இப்படி ரசித்தை போல வெளிநாடுகளில் இருக்கலாம்  உளநாட்டில் இல்லை கிருபன் 

 

வெளிநாடுகளிலும் உண்மையில் இருக்கிறார்களா என்று தெரியவில்லை!

கொரோனா வந்தால் உயிரோடு இருக்கிறது லொட்டரி விழுகிற மாதிரி என்ற பயம் எல்லோருக்கும் தொத்தீடுத்து

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.