Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் வெற்றிகண்ட நாடுகளில் இலங்கை!

Featured Replies

3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

வருகிறது செய்திகள்  தாதிகளாலும் வைத்தியர்களாலும் சிங்களத்திலும் , தமிழிலும் 

1. 23 மில்லியன்கள் மக்கள் உள்ள நாட்டில், பெரும்பாலான மக்களுக்கு வைத்திய சேவை இல்லை. 
2. பெருமைப்பாலானவை ஆதார வைத்தியசாலைகள். பல வைத்தியசாலைகள் இயங்கு நிலையில் இல்லை. 
3. அப்படி யாரவது நோயாளர்கள் வந்தாலும், அவர்களை எதை வைத்து பரிசோதித்து அவ்ரக்ளுக்கு தொற்று உள்ளதா இல்லையா என இலங்கையில் கூறுகிறார்கள்? 
4. அப்படி வசதிகள் உள்ள பெரிய வைத்தியசாலைகள் எத்தனை ? 
5. அந்த வைத்தியசாலைகளில் எவ்வாறான பரிசோதனை வசதிகள் உள்ளன? அந்த பரிசோதனைகளின் முடிவுகள் எவ்வளவு தூரம் நம்பிக்கை தருவன? 

இந்த கேள்விகளுக்கு வைத்தியர்ககளாலும் தாதிமார்களாலும் கூட பதில் சொல்ல முடியாது. அது அவர்கள் தவறும் இல்லை. இந்த தொற்றும் அதன் தாக்கமும் அவ்வாறு உள்ளது. 

ஆக, வீட்டில் முடிந்தளவு இருப்பதே எமது மக்களை காக்கும். 

  • Replies 67
  • Views 5.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
4 hours ago, Rajesh said:

அது தான் BCG முக்கூட்டு தடுப்பு என்டு நினைக்கிறன்.

காச நோய்க்கு எதிராக போடப்படுவது BCG.

  • தொடங்கியவர்

இலங்கையின் தேசிய நோய்த்தடுப்பு மருந்தேற்றல் நிகழ்ச்சித்திட்டம்

1798 ஆம் ஆண்டு எட்வேட் ஜென்னர் அவர்கள் முதல் தடவையாக சின்னமுத்து வைரஸ் (poxvirus varialae) என்பதற்கு எதிராக மனிதனின் நோய் எதிர்ப்புக்காக மாட்டு அம்மையை (poxvirus bovis) அவர் பயன்படுத்தினார். பல பக்றீரியாக மற்றும் நோய்களின் சுமைகளைக் குறைப்பதற்காக தடுப்பூசிகளின் பாவனை தொடர்ந்து வருகிறது.

சின்னமுத்தானது முற்றாக அழிக்கப்பட்டதுடன் போலியோவானது அழிவின் எல்லையில் இருக்கிறது. இலங்கையிலே வைரசியல் ரீதியாக உட்படுத்தப்பட்ட போலியோவுடைய இறுதி நோயாளி 1993 ஆம் ஆண்டிலே அறிக்கையிடப்பட்டிருந்தார்.

இலங்கையிலே வழமையான நோய்த்தடுப்பின்அறிமுகமானது பல தடுப்பூசியால் தடுக்கக்கூடிய நோய்கள் ஏற்பப்படும் சம்பவங்களைப் பொதுவாகக் குறைத்துள்ளது. பல வேறு நாடுகளிலும் நோய்க்குறைப்பின் இதேவாறான வெற்றியானது, நோய்த்தடுப்பு மருந்தேற்றல் நிகழ்ச்சத்திட்டங்கள் மூலமாக உலக சுகாதார ஸ்தாபனமானது நோய்த்தடுப்பு மருந்தேற்றல் நீர்ப்பீடன நிகழ்ச்சித்திட்டங்களை ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) மற்றும் ஏனைய கொடைவழங்குனர்களின் உதவியுடன் அதிகரித்துள்ளதுடன் அபிவிருத்தியடையும் இந் நன்மைகளை விஸ்தரிக்கச் செய்வதற்கு பல படிகளை எடுத்துள்ளது. இந் நீர்ப்பீடன நோய்த்தடுப்பானது சின்னமுத்து, மேலும் அதைப்போன்ற போலியோ மற்றும் ஏனைய நோய்களை உலகிலிருந்து இல்லாதொழிக்க அனுமதித்துள்ளது.

ஒரு குழந்தைக்கு நீர்ப்பீடனம் அளிப்பது அக் குழந்தையைப் பாதுகாப்பது மாத்திரம் அல்லாமல், பொதுவான நீர்ப்பீடன மட்டத்தை அதிகரிப்பதன் மூலம் ஏனைய சிறுவர்களையும் பாதுகாப்பதுடன் நோய் தொற்றுப் பரவுகையைக் குறைக்கின்றது..

இலங்கையில் நீர்ப்பீடனத் தடுப்பூசி ஏற்றலின் வரலாறு

இலங்கையில் நீர்ப்பீடனத்தடுப்பூசியின் வரலாறானது 19 ஆம் நூற்றாண்டிலிருந்து வரலாற்றைக் கொண்டுள்ளது. 1886 ஆம் ஆண்டு தடுப்பூசி ஏற்றல் கட்டளைச் சட்டத்தில் சின்னமுத்துவுக்கு எதிராக கட்டாய தடுப்பூசி ஏற்றலின் சட்டமானது குறிப்பிடப்படுகிறது.
1978 இல் நிறுவப்பட்ட நீர்ப்பிட தடுப்பூசி ஏற்றலின் விரிவுபடுத்தப்பட்ட நிகழ்ச்சித்திட்டமானது கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக சிறந்த முன்னேற்றங்களை அடைவதற்கு தொடர்ந்து இருப்பதுடன் உயர் மட்ட அளவிலான நீர்ப்பீடன தடுப்பு ஊசி ஏற்றலை உள்ளடக்கியதாகவும் நோய்க்கட்டுப்பாட்டை உயர்மட்ட அளவிலான, நீர்ப்பீடன தடுப்பு ஊசி ஏற்றலை உள்ளடக்கியும் மற்றும் நோய்க்கட்டுப்பாட்டையும் சாதிக்கும் விடயத்தில் மிகவும் அவதானிக்கத்தக்க முன்னேற்றத்தை காணும் விதத்தில் அது தொடர்ந்து ஆற்றப்பட்டுள்ளது. இலங்கையில் நீர்ப்பீடன தடுப்பூசி போடலில் உள்ள சில முக்கிய கட்டங்கள் கீழே தரப்பட்டுள்ளது.

1886

நீர்ப்பீடன தடுப்பூசி கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட்ட சின்னமுத்துக்கு எதிரான தடுப்பூசி

1949

காசநோய்க்கு எதிராக அறிமுகம் செய்யப்பட்ட BCG காசநோய் தடுப்பூசி

1961

தொண்டைக்கரப்பன், குக்கல் மற்றும் ஈர்ப்புவலிக்கு எதிராக முக்கூட்டு ஊசி அறிமுகம் செய்யப்பட்டது.

1962

போலியோ வாய்மூல சொட்டு மருந்து அறிமுகப்படுத்தப்பட்டது.

1963

புதிதாகப்பிறந்த பிள்ளைகளுக்கான BCG தடுப்பு மருந்து அறிமுகப்படுத்தப்பட்டது.

1969

கர்ப்பிணித் தாய்மாருக்கான ஈர்ப்புவலி ரொக்சைட் தடுப்பூசி நிர்வாகம் அறிமுகம் செய்யப்பட்டது.

1978

நீர்ப்பீடனம் நோய்த்தடுப்பு மீதான விரிவுபடுத்தப்பட்ட நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

1984

பொக்கிளிப்பான் தடுப்புஊசி அறிமுகப்படுத்தப்பட்டது.

1991

ஈர்ப்பு வலி தடுப்புமருந்து ரொக்சைட்டின் அட்டவணை மீளமைக்கப்பட்டது

1995

முதலாவது தேசிய நீர்ப்பீடன நோய்த்தடுப்பு நாட்கள் நடாத்தப்பட்டது.

1996

ருபெல்லா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது.

2001

MR மற்றும் ATd Iஉடனான மீளமைக்கப்பட்ட தேசிய நோய்த்தடுப்பு அட்டவணை அறிமுகப்படுத்தப்பட்டது.

2003

கட்ட அடிப்படை மீதான செங்கமாரி B தடைமருந்து அறிமுகம்

2008

ஐந்து வலுவுள்ள மருந்தைக் கொண்டுள்ள எச்ஐவியின் அறிமுகம்

நீர்ப்பீடன நோய்த்தடுப்பு அட்டவணை

1978 இல் EPI நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்பத்தோடு அதனது கவனிப்பானது குழந்தைப்பருவ கசரோகம், ஈர்ப்புவலி, குக்கல், தொண்டைக்கரப்பன், போலியோ மற்றும் கைக்குழந்தைகளின் ஈர்ப்புவலி என்பனவற்றைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. 1988 இலே நோய்களை இல்லாமல் செய்வதிலே கவனம் செலுத்தப்பட்டது. 1991 இல் போலியோ இல்லாதொழிப்பு செய்வதற்காக பாடசாலை நுழைவின் பொழுது OPV யின் ஐந்தாவது மருந்துக்கொடுப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. ருபெல்லா, செங்கமாரி B மற்றும் ஐந்து வலுள்ள எச்ஐவி கொண்டுள்ள தடுப்பு மருந்து என்பன கடந்த வருடங்களிலே படிப்படியாக நிகழ்ச்சித்திட்டத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டன. தற்போதைய EPI நோய்த்தடுப்பு அட்டவணை ஆனது கீழே தரப்பட்டுள்ள பின்னிணைப்பில் கொடுக்கப்படுகிறது. 1987 இலே உயர்ந்த இடருள்ள விடயங்களுக்காக JE மருந்து அறிமுகப்படுத்தப்பட்டது, JE க்கு எதிரான அடிப்படை நீர்ப்பீடன நோய்த்தடுப்பானது 3 மருந்துக் கொடுப்புக்களைக் கொண்டுள்ளது. முதலாவது மற்றும் இரண்டாவது மருந்துக்கொடுப்புக்களுக்கு இடையில் 2-4 வாரங்கள் இடைவெளியும் இரண்டாவது மற்றும் மூன்றாவது மருந்துக்கொடுப்புகளுக்கிடையில் ஒருவருட இடைவெளியும் ஒரு ஊக்குவிப்பு மருந்துக் கொடுப்பானது ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு ஒரு தடவையும் அடிப்படை நீர்ப்பீடன தடைமருந்துக்கு பின்பு வழங்கப்படுகிறது. இனங்காணப்படாத உயர் இடர்ப்பகுதிகளில் வாழும் பத்து வயதுக்கு குறைந்த பிள்ளைகளுக்கு JE நீர்ப்பீடன தடைமருந்து வழங்கப்படுகிறது.

நீர்ப்பீடன நோய்த்தடுப்பு அட்டவணையின் தீர்மானிப்புக்கான கொள்கைகள்

  • வயது – நோயின் விசேடித்த இடர்
  • வயது – கொடுக்கும் மருந்தின் நீர்ப்பீடனவியல் ரீதியான விசேடித்த பதிற் செயற்பாடு
  • சாந்தமாக பரிமாற்றப்பட்ட தாய்வழி உடல்பொருள் எதிரியால் நீர்ப்பீடன பதிற்செயற்பாட்டுடன் காட்டப்படக்கூடிய தலையீடு
  • வயது - சிக்கல்களுடன் தொடர்புடைய ஒரு மருந்தின் விசேடித்த இடர்
  • நிகழ்ச்சித்திட்ட ரீதியிலான இயலக்கூடிய சாத்தியத்தன்மை
  • பொதுவாக நோயை விருத்தியாக்குவதற்கான இடரின்பொழுது இளம் வயதுக் குழுவினரிடமே தடுப்பு மருந்துகள் நிர்வகிக்கப்பட வேண்டும்.

தேசிய நீர்ப்பீடன நோய்த்தடுப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் இலக்குகள்

  • போலியோவை இல்லாதொழித்தல்
  • கைக்குழந்தைகள் ஈர்ப்புவலி, தொண்டைக்கரப்பான், கொப்புளிப்பான் மற்றும் ருபெல்லாக் காய்ச்சலை இல்லாதொழித்தல்
  • குக்கல் ஆரம்பிப்பதைத் தடுப்பதன் ஊடாக இறப்பையும் சீரழிவையும் குறைத்தல்
  • செங்கண்மாரி B நிமித்தமான இறப்பையும் சீரழிவையும் குறைத்தல்
  • ஜப்பானிய Encephalitis நிமித்தமான இறப்பையும் சீரழிவையும் குறைத்தல்
  • Haemophilias செல்வாக்கு B வருத்தங்கள் நிமித்தமான இறப்பையும் சீரழிவையும் குறைத்தல்

மேற்படிநோய்களை உருவாக்கும் விசேடித்த அங்கிகளுக்கு எதிராக இயலுமையுள்ள தடுப்பு மருந்துகளை சரியான அளவில் சரியான நுட்பங்களுடன் தேசிய நீர்ப்பீடன அட்டவணையின் பிரகாரம் நிர்வகிப்பதன் மூலமாக விசேடித்த அங்கிகளுக்கு எதிராக மக்களின் நீர்ப்பீடனத்தை உருவாக்குதல்.

http://www.epid.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=137&Itemid=426&lang=ta

On 11/4/2020 at 10:25, போல் said:

அனைத்து நாடுகளுமே கொரோனா  வைரஸ் பரவ ஆரம்பித்த பின்னரே தமது நாட்டினை பாதுகாக்க நடவடிக்கை எடுத்த நிலையில் இலங்கை அவ்வாறு அல்லாது கொரோனா வைரஸ் நாட்டுக்குள் பரவ முன்னரே முன்னாயத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

46.jpg

 

v03.jpg

44.jpg

  • கருத்துக்கள உறவுகள்

திரும்ப திரும்ப சொல்வது கண்ணுக்கு தெரியாத வில்லனுடன் மல்லுக்கட்டுவது அந்த வில்லனை வென்றுவிட்ட ம்  என்று கூப்பாடு போடுவது புலம்பெயர்ஸ்  நாங்களும் தட்டிக்கொடுப்பது எல்லாம் நல்லாய்த்தான் இருக்கும் நாளைக்கு கோத்தா எனும் கிறுக்கு தேர்தல் முடிந்தபின் விடும்  சிறு பிழை கூட யுத்தத்தினால் இனவழிப்பு மூலம் அழிந்த இனத்தின் எஞ்சியோருக்கு பெரும் பாதிப்பை உருவாக்கி விடும் .இன்னைவரைக்கும் தங்களின் நாடு விடுமுறையில் திரும்பிய சைனீஸ் மூலம் தொத்து  ஏட்படவில்லை என்பதை மூடி மறைப்பதில் வல்லவராய் இருக்கினம் தொத்து  இத்தாலியில் இருந்து வந்தவர்களால் என்றே காட்டப்படுகின்றது அங்கிருந்தே பொய்கள் அடுக்கடுக்காய் பிறக்கின்றன கொரோனோ  விடயத்தில் .

4 hours ago, பெருமாள் said:

இன்னைவரைக்கும் தங்களின் நாடு விடுமுறையில் திரும்பிய சைனீஸ் மூலம் தொத்து  ஏட்படவில்லை என்பதை மூடி மறைப்பதில் வல்லவராய் இருக்கினம்

Tanzanian President rejects Chinese deal says Chinese loans can only be accepted by mad people.

As The Bulletin Eagle, we believe it’s a blow below the belt to his counterparts south of his country.

Tanzania’s Dr John Magufuli is set to renegotiate a deal his country made with a Chinese Company to build a port in one of his many seashores as he said the deal settled for in 2013 is equivalent to selling their country to China.
 

Image

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் கொரோனா நோயாளர்கள் திடீரென அதிகரிப்பதற்கான காரணம் என்ன?

Report us Vethu 3 hours ago

இலங்கையில் திடீரென கொரோனா நோயாளர்களின் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமையினால் மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் மக்கள் அது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டவர்கள் என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக கண்டுபிடிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அல்லது அவர்களுக்கு அருகில் பழகியவர்கள் என அவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் நோயாளிகள் அருகில் இருந்தவர்களை தேடி செல்வதற்கு பாதுகாப்பு பிரிவு மற்றும் புலனாய்வு பிரிவு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.tamilwin.com/security/01/244102?ref=home-imp-parsely

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இலங்கையில் கொரோனா நோயாளர்கள் திடீரென அதிகரிப்பதற்கான காரணம் என்ன?

ஏப்பிரல் 21, 2019 அன்று நடந்த நிகழ்வினால் சிங்கள அரசைக் கைப்பற்றுவதற்கு, இன்று அரசியல்செய்யும் காடையர்களுக்கு என்னென்ன அநுகூலங்கள் கிடைத்தனவோ... அதே அநுகூலங்கள், இந்தக் கொரோனா நோயாளர்கள் தொகை அதிகரித்துள்ளதுபோல் காட்டிப் பின் தாங்களே மக்களை அதனின்றும் மீட்டெடுத்தோம் என்ற பிம்பத்தைப் பரவச்செய்து, அதே காடையர்கள் திரும்பவும் அரசில் நீடிப்பதற்கான ஒரு காரணமாகவும் இருக்கலாம். 🤔

  • கருத்துக்கள உறவுகள்

அடி தூள்..இந்தியாவை காப்பாற்றிய சூரிய பகவான்..!! அமெரிக்கா விஞ்ஞானிகளை அதிர வைத்த அறிவியல் உண்மை..!!

summer-01-jpg_1200x630xt.jpg

35 டிகிரிக்கு மேலான வெப்பநிலை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தலாம் என அமெரிக்க  வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . கொரோனா வைரஸ் குறித்து வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.  

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இயக்குனரகம் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.  இது இந்தியாவுக்கு ஒரு நல்ல செய்தியாக இருக்கலாம் என்றும் அமெரிக்க சுகாதாரத்துறை கூறியுள்ளது. 

உலகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அமெரிக்கா ஐரோப்பா ஆசியா என அனைத்துக் கண்டங்களும் மோசமான பாதிக்கப்பட்டுள்ளன

இந்நிலையில்  இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில்  கோடைக்காலம் உச்சத்தை அடைந்து வருகிறது .  இந்நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அந்நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் செய்தியாளர்கள் சந்தித்தனர் , அதில்  உள்நாட்டு பாதுகாப்பு துறையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இயக்குனரகம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளையும் அவர்கள் வெளியிட்டனர் . 

அதில், சூரிய ஒளியின் வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகியவை வைரஸ் பரவலை குறைப்பதற்கான சாதகமான சூழ்நிலையை உருவாக்க கூடுமென்று தெரிவித்துள்ளனர் .

அதிக வெப்பமும் அதிக ஈரப்பதமும் கொரோனா நோய் பரவல் சங்கிலியை பலவீனப்படுத்தும் என்றும் சூரிய ஒளியில் இருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்கள் கொரோனாவை பலவீன படுத்தி அழிப்பதாக தெரிவித்துள்ளனர்.

75 டிகிரி முதல் 80 டிகிரி வரை சூரிய ஒளி வெளிப்படும்போது சில நிமிடங்களில் வைரஸ்  இறக்க கூடும் என தெரிவித்துள்ளனர்.  குறிப்பாக சூரிய ஒளி 95 டிகிரி பாரன்ஹீட் அல்லது 38 டிகிரி செல்சியஸ் இக்கும் போதும்,  80 சதவீதம் அளவுக்கான ஈரப்பதமும்  18 மணிநேரம் என்ற கொரோனாவின்  ஆயுட்காலத்தை பாதியாக குறைக்கிறது.

அதாவது  6 மணி நேரமாக குறைக்க வாய்ப்புள்ளது என அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் பில் பிரையன் தெரிவித்தார்.

சூரிய ஒளியில் உள்ள  ஐசோபிரைல் 30 விநாடிகளில் கொரோனாவை கொல்லும் என தெரிவித்துள்ளார். அதிக வெப்பமும் அதிக ஈரப்பதமும் கொரோனா வைரஸ் பரவுவதை வேகமாக தடுக்கிறது குறிப்பாக சூரிய ஒளியில் உள்ள  ஐசோபிரைல்  மற்றும் ஆல்கஹாலில் கொரோனா வைரஸ் 30 வினாடிகளில் அழிவதை பார்க்க முடிகிறது.

சூரிய ஒளி பூமியின் மீது படும்போது தரை தளத்திலும் காற்று மண்டலத்திலும் அது வேகமாக பரவுவது கட்டுப்படுத்தப்படுகிறது அதன் விரியம் குறையவும் செய்கிறது.

குறிப்பாக இந்தியாவில் கோடை காலம் என்பதால் இந்தியாவிற்கு இது மிக சாதகமாக உள்ளது, என தெரிவித்துள்ளனர். ஆனாலும் சமூக விலகளும் முகம் கவசம் அணிவதும் எந்த விதத்திலும் கைவிடக் கூடாது என பிரையன் எச்சரித்துள்ளார்.

இந் நிலையில் அமெரிக்க வானிலை சேனல் வெளியிட்டுள்ள தகவலில் புது தில்லியில் வெள்ளிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது. எனினும் அறையில் அதிக வெப்பநிலையிலும் இந்த வைரஸ்க்கு உயிர் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .

https://tamil.asianetnews.com/world/sun-light-and-hot-weather-will-destroying-corona-american-research-says-q9a3qm

On 21/4/2020 at 23:51, பெருமாள் said:

கொரோனா வைரஸ் நோயாளிகள் அருகில் இருந்தவர்களை தேடி செல்வதற்கு பாதுகாப்பு பிரிவு மற்றும் புலனாய்வு பிரிவு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

தேடி சென்று நாடெல்லாம் பரப்பும் முட்டாள்கள் 

தம்மிடம் ஒரு வகையான பலம் இருப்பதாயும் , தம்மை யாரும் அசைக்க முடியாது என்ற நம்பிக்கையும் கொண்டவர்கள் இந்த கொலையாளிகள்.

3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இந் நிலையில் அமெரிக்க வானிலை சேனல் வெளியிட்டுள்ள தகவலில் புது தில்லியில் வெள்ளிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது. எனினும் அறையில் அதிக வெப்பநிலையிலும் இந்த வைரஸ்க்கு உயிர் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .

பூமித்தாய் வெப்பமடைந்தாள் 
பாரத மாதாவை காப்பாற்றினாள் 

On 24/4/2020 at 18:59, ampanai said:

பூமித்தாய் வெப்பமடைந்தாள் 
பாரத மாதாவை காப்பாற்றினாள் 

மோடி கை தட்டினதை பாத்து தான் கொரோனா உஷாராயிட்டு என்டு சொல்றாங்கள். 😀

சடலங்களை அகற்றும் 1000 உறைகளை கோரியது இலங்கை

சடலங்களை அகற்றுவதற்காக பயன்படுத்தப்படும் 1000 உறைகளை செஞ்சிலுவை சங்கத்திடம் இலங்கை சுகாதார அமைச்சு கோரியுள்ளது.

சடலங்களை அகற்றும் 1000 உறைகளை கோரியது இலங்கை

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சுனில் டி அல்விஸின் கையெழுத்துடன் இந்த உறைகளுக்கான கோரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சடலங்களை பொதி செய்யும் 1000 உறைகள் கோரப்பட்ட நிலையில், இலங்கை மக்கள் மத்தியில் பாரிய அச்ச நிலைமையொன்று இன்று ஏற்பட்டது.

கொவிட் வைரஸ் தாக்கம் காரணமாக பெருமளவானோர் உயிரிழந்துள்ளார்களா என்ற அச்ச நிலைமை ஏற்பட்டதை அடுத்து பிபிசி தமிழ், டொக்டர் சுனில் டி அல்விஸை தொடர்புக் கொண்டு வினவியது.

கொவிட் காரணமாக அவ்வாறான அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை என அவர் உறுதிப்படுத்தினார்.

ஏதேனும் உயிரிழப்புக்களில் சந்தேகங்கள் நிலவும் பட்சத்தில், அவ்வாறான பூதவுடல்களை பாதுகாப்பான உறைகளில் பொதி செய்தே அவற்றை அடக்கம் செய்வது வழக்கம் என அவர் சுட்டிக்காட்டினார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-52431992

அவ்வாறான நிலையில், இலங்கையில் சந்தேகத்திற்கிடமான உயிரிழப்புக்கள் பதிவாகும் பட்சத்தில் அவற்றை அகற்றுவதற்கான உறைகள் பற்றாக்குறை நிலவியமையினால் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், இந்த உறைகளை பெற்றுத் தருமாறு செஞ்சிலுவை சங்கத்திடம் கோரியுள்ளதாகவும் டொக்டர் சுனில் டி அல்விஸ் குறிப்பிட்டார்.

சுகாதார அமைச்சு கோரிக்கை கடிதமொன்றை கையளிக்கும் பட்சத்தில், அந்த உறைகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என செஞ்சிலுவை சங்கம் அறிவித்த பின்னணியிலேயே தான் இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக டொக்டர் சுனில் டி அல்விஸ் பிபிசி தமிழுக்கு கூறினார்.

கொவிட் - 19 உயிரிழப்புக்கள் மாத்திரமன்றி, அனைத்து விதமான சந்தேகத்திற்கிடமான சடலங்களை பொதி செய்து, அகற்றுவதற்காக இந்த உறைகள் பயன்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.

நியூயோர்க், பாரிஸ், ரோம், மாட்ரிட் மற்றும் ஜேர்மானிய நகரங்கள் எல்லாம் கிழமைக்கு பல மில்லியன் வெளிநாட்டவர்கள் வந்து போகின்ற இடம். அது மட்டுப்படுத்தப்பட்டாலும் மிக சிறிய பிரதேசங்களில் பெரும் தொகையான மக்கள் நெருக்கமாக வாழ்கின்ற பிரதேசங்கள்.

அந்த நகரங்கள் உள்ள நாடுகள் எல்லாமே தரைவழி எல்லைகளை மற்ற நாடுகளுடன் கொண்டுள்ள பிரதேசங்கள். நகரங்களே பெரிதாகவும் தரைவழித்தொடர்பிலும் இருப்பதால் தனிமைப்பபடுத்த கடினமான பிரதேசங்கள். இலங்கையை போன்று சிறிய தீவு அல்ல. இலங்கைக்கு வெளிநாட்டவர்கள் மேற்குலகளவுக்கு வருவதுமில்லை

எடுத்துக்காட்டுக்கு  இலங்கையின் வடமாகாணபிரதேசத்தை எடுத்தால் வவுனியாவில் இருந்து கிழக்கு மேற்காக கீறப்படக் கூடிய நேர் கோட்டைத்தாண்டி வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டால் அதுவும் முதல் தொற்று பாதிரி காலத்தில் ஏற்படமுன் நிறுத்தப்படிருந்தால் அங்கு ஊரடங்கு கூட போடவேண்டிவந்திராது.

மக்கள் இயல்பு வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம். ஏனெனில் கொறோனா உள் நுளைய வாய்பற்றிருக்கும்.

அதைப் போன்றே மலையகப் பிரதேசங்களுக்குமான முழுப்பாதைகளும் அடைக்கப்பட்டு எல்லையோர பிரதேசங்கள் கண்காணிக்கப்பட்டிருந்தால் மலையகம் கூட இலகுவாக தனிமைப்படுத்தபட்ட உள்ளே இயல்பு வாழ்க்கை வாழ விடப்பட்டிருக்க கூடிய பிரதேசம்.

இவ்விரு பிரதேசங்களும் கட்டுப்பாட்டில் வந்தால் பொலநறுவை கிழக்குமான எல்லை மற்றும் அம்பாறை எல்லைகள் இறுக்கமாக்கப்பட கிழக்கும் இயல்புபிரதேசமாக மாறியிருக்கும்.

இந்த முயற்சி சரிவந்தால் இந்த மாகாணங்களுக்கு இடையான பாதைகள் திறக்கப்பட்டு இந்த 3 பிரதேசங்களும் இணைந்து இயல்பு வாழ்க்கை வாழக் கூடியபிரதேசமாக வந்திருக்கும். ஏனைய பிரதேசங்கள் எனக்கு தெளிவில்லாவிட்டாலும். உண்மையில் கொழும்பையும் அதை சூழ உள்ள பிரதேசங்களையும் தாண்டி கொறோனா போகாமல் பாதுகாத்திருந்திருக்கலாம். இது சிறிய தீவு என்பதால் சாத்தியமாகிறது. இப்படி மேற்குலகின் நிலை இலகுவானதல்ல.

- முகநூல் - 

வெற்றி கண்ட நாட்டில் (?) இன்று பாடசாலைகள் மற்றும் வாழ்வியல் இடங்களில் இராணுவ முகாம்கள். 

சுய  தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டிய மக்கள் வீதிகளில் போராடுகிறார்கள். 

உலகில் வேறு  எந்த நாட்டிலும் இவாறு நடப்பதாக தெரியவில்லை. 
 

  • 3 weeks later...

இன்று, வைகாசி 18, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 964 ஆக அதிகரித்துள்ளதாக, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கை எவ்வளவு தூரம் சரியானது மற்றும் இலங்கையில் பரிசோதனை வசதிகள் இல்லை மற்றும் இறந்தவர்களில் எத்தனை பேர் கொவிட் 19னால் இறந்தார்கள் என்பதற்கு அப்பால், நாம் அனைவரும் ஒன்றினை ஏற்றுக்கொள்ளலாம் - இலங்கையில் தொற்றின் தாக்கம் இன்னும் முடிவிற்கு வரவில்லை என்பதினை. 

இலங்கையில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இந்த நோயின் தாக்கம் குறையவேண்டும் என நாம் அனைவரும் வேண்டுவதே. 

ஆனால், இலங்கையில் வைகாசி 19, ஆயிரத்தை கடக்கும் தொற்றாளர்களின் உத்தியோகபூர்வமான எண்ணிக்கை எவ்வளவு நாட்களில் இரண்டாயிரத்தை தொடும் என்பதில் கட்டுப்படுத்தும் முயற்சி வெற்றிப்பாதையிலா செல்கின்றது என்பது தெரியவரும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.