Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதிசடங்குகள் குறித்த உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள் இலங்கை ஜனாதிபதிக்கு ஐநா வேண்டுகோள்- முஸ்லீம்களிற்கு எதிரான குரோத பேச்சுக்கள் குறித்து கவலை

Featured Replies

இறுதிசடங்குகள் குறித்த உரிமைகளை மதிக்குமாறு இலங்கை ஜனாதிபதிக்கு வேண்டுகோள்விடுத்துள்ள ஐநா முஸ்லீம்களிற்கு எதிரான குரோத பேச்சுக்களை கட்டுப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

ஐநாவின் மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரத்திற்கான விசேட அறிக்கையாளர் அஹமட்சஹீட் இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

ahamad_shaheed1.jpg

மார்ச் 31 ம் திகதி இலங்கையின் சுகாதார அமைச்சு கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்கள் தொடர்பாக வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உடலை எந்த காரணத்திற்காகவும் கழுவக்கூடாது,மூடப்பட்ட பையினுள் வைத்து அதனை பிரேதப்பெட்டிக்குள் வைக்கவேண்டும்,உடல்களை எரிக்கவேண்டும்,என தெரிவிக்கப்படுவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட நான்காவது திருத்தங்கள், மார்ச் 31 ம் திகதி 2020 நீர்கொழும்பில் முஸ்லீம் ஒருவரின் உடல் எரிக்கப்பட்ட பின்னர் அறிவிக்கப்பட்டவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பிட்ட நபரின் குடும்பத்தினரின் விருப்பத்திற்கு எதிராகவே அவரது உடல் எரியூட்டப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Gota.jpg

கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவது தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள முக்கிய பரிந்துரைகளை கருத்தில் எடுத்து, இலங்கையின் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில் உள்ள விதிமுறைகளை மீள் பரிசீலனை செய்யவேண்டும், அதற்கேற்றபடி சுற்றுநிரூபத்தினை மாற்றவேண்டும்என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலக அளவிலான தொற்றுநோயினால் ஏற்பட்டுள்ள சவால்கள் காரணமாக, பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய, இலங்கையின் பல்வேறு சமூகத்தினரின் அடிப்படை உரிமைகளிற்கு எதிரானதாக அமையக்கூடிய இலங்கையின் அரசாங்கம் தவிர்த்துக்கொள்வது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்கள் தொடர்பான தன்னிச்சையான முடிவுகள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம்,தங்கள் அன்புக்குரியவர்களிற்கு உரிய இறுதிச்சடங்கினை வழங்க முடியாது அல்லது புதைக்கமுடியாது என்ற அச்சம் காரணமாக அவர்கள் கொவிட் 19 குறித்து தகவல்களை வெளியிட தயங்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தொடர்புபட்ட அனைத்து இன மத சமூகத்தவர்களுடனும் அனைத்து சுகாதார நிபுணர்களுடனும் தொடர்புபட்டவர்களுடனும் கலந்தாலோசனைகளை மேற்கொண்டு புதிய விதிமுறைகளை தளர்த்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

srilanka_corona_virus.jpg

ஐநாவின் விசேட அறிக்கையாளர் இலங்கை ஜனாதிபதிக்கு மேலும் சில வேண்டுகோள்களை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம்;; மாத்திரம் செய்வது என எடுக்கப்பட்ட முடிவிற்கான காரணங்களை தயவு செய்து தெரியப்படுத்துங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான தீர்மானம் பாகுபாடற்றது,அவசியமானது ,உரிய நோக்கத்திற்கு சமாந்திரமானது என்பதை உறுதி செய்வதற்காக உரிய சுகாதார நிபுணர்கள் சிவில் சமூகத்தினர்,மற்றும் சமூக உறுப்பினர்களுடன் கலந்தாலோசானைகள் இடம்பெற்றதா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவதற்காக பயன்படுத்தப்படும் நபர்கள் பயிற்றுவிக்கப்பட்டவர்களா என்பதை தெரியப்படுத்துங்கள் என அவர் கோரியுள்ளார்.

கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்கள் மூடப்படுவதற்கு முன்னர் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் உடல்களை பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றார்களா? உடல் தகனம் செய்யப்படுவது குறித்து அவர்களிற்கு முன்கூட்டியே தகவல்கள் வழங்கப்படுகின்றதாஎன அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல் காரணமாக சிறுபான்மை இனத்தவர்கள் பாரபட்சத்திற்கு உள்ளாவதை தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரியப்படுத்துங்கள் என ஐநாவின் விசேட அறிக்கையாளர் தெரிவித்துள்ளார்.

srilanka_corona1.jpg

மதசுதந்திரத்திற்கான உரிமை இறுதி கிரியைகள் குறித்த நம்பிக்கைகள் மதிக்கப்படுகின்றதா பின்பற்றப்படுகின்றதா என்பதையும் தெரியப்படுத்துங்கள் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

முஸ்லீம்களிற்கும் இலங்கையின் ஏனைய மத இன சிறுபான்மை மக்களிற்கு எதிரான குரோதப்பேச்சு அதிகரிப்பதை கட்டுப்படுத்துவதற்கான என்ன நடவடிக்கை எடுக்கப்படுகின்றது,கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்கள் நோயாளிகளின் அடையாளஙகளை பாதுகாப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்பதை தெரியப்படுத்துங்கள்.

உங்களிடமிருந்து இது தொடர்பாக வெளியாகும் உங்களின் பதில்கள் 4 மணித்தியாலத்தில் குறிப்பிட்ட இணையதளம் மூலமாக வெளியாகும் ,மனித உரிமை ஆணையாளருக்கான அறிக்கையில் அது சேர்க்கப்படும் என விசேட அறிக்கையாளர் தெரிவித்துள்ளார்.
 
https://www.virakesari.lk/article/79925

  • கருத்துக்கள உறவுகள்

https://sptnkne.ws/CbPC

தற்போது வந்த செய்தி

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையைப் போன்ற சிறிய நாட்டிற்கு எரிப்பதே சிறந்தது...ஏனெனில் கிருமித்தடுப்புஎன்பதே அவர்களிடம் சிறந்த்ததாக இல்லை....நோய்த்தொற்றை அறிவதே நூற்றுக்கணக்கில்...இதிலை மார்தட்டல் வேறு..30 நாளுக்குபின்னும் .அறிகுறி தென்படுகிறதென்றால்....இது எங்கு போய் முடியும்..

  • தொடங்கியவர்
1 hour ago, Kapithan said:

https://sptnkne.ws/CbPC

தற்போது வந்த செய்தி

பூட்டினின் பிரச்சார ஊடகம் ? 

படத்தில் இத்தாலிய பிரேத அறை. ஆனால், கதை தாய்லாந்தில் நடந்தது பற்றியது  😃
 
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ampanai said:

பூட்டினின் பிரச்சார ஊடகம் ? 

படத்தில் இத்தாலிய பிரேத அறை. ஆனால், கதை தாய்லாந்தில் நடந்தது பற்றியது  😃
 
அம்பனை,

விடயம் புட்டினின் பிரச்சார ஊடகமோ இத்தாலிய பிரேத அறையோ அல்ல. செய்தி என்ன சொல்கிறது என்பதும் அச் செய்தி உண்மையா என்பதுமே. 🙂

முடிந்தால் செய்தியின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குங்கள். அதுதான் சரியான அணுகுமுறை. 😎

அதை விடுத்து குழந்தைப் பிள்ளை மாதிரி அடம்பிடிக்கக் கூடாது. சரியா ? 👍

  • தொடங்கியவர்
8 hours ago, Kapithan said:

கபிதன்,
உண்மைதான். ஆனால், சராசரி மனிதனுக்கு இவ்வாறான செய்திகளை அவற்றின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் அறிவோ இல்லை நேரமோ இல்லை. 

அதனால் தான் சில ஊடகங்களை மக்கள் நம்புகிறார்கள். ஊடகங்கள் ஒரு பொறுப்பு உள்ளவையாகவும், உண்மையான ஊடகவிளார்களையும் கொண்டவையாகவும் இருக்கவேண்டும். 

பொதுவாகவே உருசிய மற்றும் சீன ஊடகங்கள் நம்பகத்தன்மை அற்றவை. காரணம், அங்கு ஊடக சுதந்திரம் இல்லை. 

ஆக, அடம் பிடிப்போம் 👏
   
Edited by ampanai

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ampanai said:

கபிதன்,
உண்மைதான். ஆனால், சராசரி மனிதனுக்கு இவ்வாறான செய்திகளை அவற்றின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் அறிவோ இல்லை நேரமோ இல்லை. 

அதனால் தான் சில ஊடகங்களை மக்கள் நம்புகிறார்கள். ஊடகங்கள் ஒரு பொறுப்பு உள்ளவையாகவும், உண்மையான ஊடகவிளார்களையும் கொண்டவையாகவும் இருக்கவேண்டும். 

பொதுவாகவே உருசிய மற்றும் சீன ஊடகங்கள் நம்பகத்தன்மை அற்றவை. காரணம், அங்கு ஊடக சுதந்திரம் இல்லை. 

ஆக, அடம் பிடிப்போம் 👏
   
உங்களுக்கு நேரமில்லை என்பதற்காகவோ அல்லது இரஸ்ய சீன ஊடகங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதனாலோ செய்தி / தகவல் நம்பகமற்றதாகிவிடாது. இப்போது புதல்வன் ஒரு இணைப்பை போட்டுள்ளார். இப்போது என்ன சொல்லப் போகிறீர்கள் ? 😀

ஆதலால் தான் திரும்பவும் கூறுகிறேன், செய்தியின் சாரத்தை நோக்குங்கள். அதனை முடிந்தால் கேள்விக்குள்ளாக்குங்கள். 

அதை விடுத்து CNN BBC ABC சொன்னால்தான் நம்புவேன் என்று அடம்பிடிக்காதீர்கள், குழந்தை போல.😂

18 minutes ago, puthalvan said:

நன்றி புதல்வன். தக்க நேரத்தில் உதவியுள்ளீர்கள். 🙏

  • தொடங்கியவர்
Just now, Kapithan said:

உங்களுக்கு நேரமில்லை என்பதற்காகவோ அல்லது இரஸ்ய சீன ஊடகங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதனாலோ செய்தி / தகவல் நம்பகமற்றதாகிவிடாது. இப்போது புதல்வன் ஒரு இணைப்பை போட்டுள்ளார். இப்போது என்ன சொல்லப் போகிறீர்கள் ? 😀

உருசிய ஊடகம் காப்பி அடித்தது என்று உண்மையை சொல்லுவோம் 🙂 🙂 

1 minute ago, Kapithan said:

அதை விடுத்து CNN BBC ABC சொன்னால்தான் நம்புவேன் என்று அடம்பிடிக்காதீர்கள், குழந்தை போல.😂

சமோவா நாட்டில் பதியப்பட்டு உருசியாவில் தலைமை அலுவலகத்தை கொண்ட ஒரு ஏமாற்று ஊடகம். அப்படித்தான் சொல்லுவோம் .. ஏனென்றால் அதுதான் உண்மை 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ampanai said:

உருசிய ஊடகம் காப்பி அடித்தது என்று உண்மையை சொல்லுவோம் 🙂 🙂 

விட்டாக் குடிம்பி இல்லாட்டி மொட்டையா 😂.  

அடம்பிடிக்காதெயுங்கோ அம்பனை 😜

  • தொடங்கியவர்
Just now, Kapithan said:

விட்டாக் குடிம்பி இல்லாட்டி மொட்டையா 😂.  

அடம்பிடிக்காதெயுங்கோ அம்பனை 😜

பிடிச்சே ஆகணும் 😃

நாளைய ஏமாற்று செய்திகளை தவிர்த்தே ஆகணும் 😍

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ampanai said:

பிடிச்சே ஆகணும் 😃

நாளைய ஏமாற்று செய்திகளை தவிர்த்தே ஆகணும் 😍

ஆக பிரித்தெடுக்கப்பட்டு, மிகத் திறம்பட ஒரு பக்கச் சார்பான செய்திகளை மட்டும் , உங்களுக்கு விரும்பியபடி தரும் ஊடகங்களைத்தான் நம்புவீர்களென்றால் நம்புங்கள். அது உங்கள் தெரிவு. 😀

ஆனால் ஆசியாவின் மிகப் பெரும் மக்கள் கூட்டத்தையும் மிகப் பெரும் நிலப்பரப்பையும் ஐரோப்பாவின் பெரும் மக்கள் தொகையையும் மிகப் பெரும் நிலப்பரப்பயும் கொண்ட இரஸ்ய, சீன,  வட கொரிய  செய்திகள் உங்களுக்குத் தேவையில்லை என்று அடம் பிடித்தால் நான் என்ன செய்ய முடியும். 🤥

முடிந்தால் நீங்கள் ஒரு திரியை திறந்து அவ்வாறான செய்திகளை இணையுங்கள் 😜

சவாலை ஏற்க முடியுமா? வசதி எப்படி? ❤️

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, ampanai said:

முடிந்தால் நீங்கள் ஒரு திரியை திறந்து அவ்வாறான செய்திகளை இணையுங்கள் 😜

சவாலை ஏற்க முடியுமா? வசதி எப்படி? ❤️

மன்னிக்கவும். எனக்கு திரியைத் திறந்து அதனை கொண்டு நடாத்துவதற்கான தொழில் நுட்ப அறிவோ பொறுமையோ இல்லை.  எனது தொழிலின் நிமித்தம்,  அன்றோய்ட் / iOS கைபேசிகளை பாவிக்கத் தொடங்கி ஏறக் குறைய 4-5 வருடங்களே. என்னுடைய முதற்றெரிவு Samsung Flip phones தான்.☹️

Edited by Kapithan
இணைப்பு

  • தொடங்கியவர்
Just now, Kapithan said:

மன்னிக்கவும். எனக்கு திரியைத் திறந்து அதனை கொண்டு நடாத்துவதற்கான தொழில் நுட்ப அறிவோ பொறுமையோ இல்லை.  எனது தொழிலின் நிமித்தம்,  அன்றோய்ட் / iOS கைபேசிகளை பாவிக்கத் தொடங்கி ஏறக் குறைய 4-5 வருடங்களே. என்னுடைய முதற்றெரிவு Samsung Flip phones தான்.☹️

அடக்கம் ? 🙂 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ampanai said:

அடக்கம் ? 🙂 

உண்மை 😀

  • தொடங்கியவர்
Just now, Kapithan said:

உண்மை 😀

சிறப்பு 😄

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ampanai said:

சிறப்பு 😄

நன்றி 😀

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவால் எல்லோருமே பாதிக்கபட்டு கொண்டு இருக்கிறார்கள்.உயிரிழந்தவர்களின் உடல்களை எரிப்பது என்று முடிவு எடுத்தால் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு முஸ்லிம் மதம் சொன்ன படி தான் முஸ்லிம்களுக்கு செய்ய வேண்டும் என்கிறது ஐநா.முஸ்லிம்களிடம் உள்ள மதவ அடிப்படைவாதத்தை மேலும் மோசமாக்கி விடுகிறது ஐநா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.