Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெரியார் படமும்.. முரண்பாடுகளும்..!

Featured Replies

பெரியார் எந்த ஒரு மொழியும் ஒரு இனத்தின் மீது திணிக்கப்படுவதை எதிர்த்தார்.

தமிழர்கள் மீது ஹிந்தி திணிக்கப்பட்ட போது அதை எதிர்த்தார்.

ஹிந்தி மீது பெரியாருக்கு எந்த ஒரு வெறுப்பும் இல்லை.

பெரியார் முக்கியமாக கற்றுக் கொடுத்தது "சுயமரியாதை". அவர் தன்னுடைய இயக்கத்தை சுயமரியாதை இயக்கம் என்றுதான் சொன்னார். "சுயமரியாதை" என்ற சொல்லே வடமொழிச் சொல்தான்.

.

அவர் இன வெறியரோ அல்லது மொழி வெறியரோ அல்ல.

இதோ பெரியாரின் மொழித்துவேசத்தின் ஒரு பகுதி அவரின் வார்த்தைகளில் இருந்தே

சென்னை செயின்ட் மேரீஸ் அரங்கில், 17.7.1948 அன்று பெரியார் ஆற்றிய சொற்பொழிவு

இந்தியில் மெச்சத் தகுந்த கலைகளே கிடையாது. அதிலுள்ள கலைகள்யாவும் துளசிதாஸ் ராமாயணமும், கபீர்தாஸ் சரித்திரமுந்தாம்; மநுதர்மமும், பாகவதமும்தான். இவற்றின் தன்மைதான் தெரியுமே உங்களுக்கு. இந்தி மொழி தலைசிறந்த அறிஞர்களைப் பெற்றெடுக்கவில்லை என்று திரு.வி.க. அவர்கள் குறிப்பிட்டார். இந்தி உற்பத்தி செய்த அறிவாளிகள் யார் என்றால், நோகாமல் பதவிக்கு வந்த நேருவையும், அவருடைய அய்யாவையுந்தான் குறிப்பிட வேண்டும். அவர்களது தியாகம் இன்று அந்தக் கூட்டம் குடும்பத்தோடு கொள்ளையடிப்பது (உங்களுக்குத் தெரிந்ததுதான்); வேறு ஆட்களைக் குறிப்பிட முடியாது. தமிழ் மொழியோ எண்ணற்ற கலைகளையும், கலைஞர்களையும், அறிஞர்களையும், சித்தர்களையும், முத்தர்களையும் தோற்றுவித்திருக்கிறது.

இந்தியில் கலை இல்லை; காவியம் இல்லை; நீதி நூல் இல்லை. அம்மொழி மூலம் அறியக் கிடக்கும் விஞ்ஞானத் தத்துவங்களும் இல்லை. ஆகவே, 100க்கு 97 போர் விரும்பாத அம்மொழி ஏன் இங்கு புகுத்தப்பட வேண்டும்? இங்குள்ள பார்ப்பன கோஷ்டியார், இத்திராவிட நாட்டின் கலைகளையும் கலாச்சாரத்தையும் அடியோடு அழித்து, இந்நாட்டை வடநாட்டுக்கு வால் நாடாக்கப் பார்க்கிறார்கள். இதுதான் மர்மமே ஒழிய ‘இந்தி தேசிய மொழி; ஆகவே, எல்லோரும் படிக்க வேண்டும்' என்று கூறுவதெல்லாம் பித்தலாட்ட வார்த்தைகள். இந்தி தேசிய மொழியாயின், எல்லோரும் கட்டாயமாக இந்தியைப் படித்துத்தான் ஆக வேண்டும் என்று வெளிப்படையாகக் கண்டிப்பாகக் கூறிவிடட்டுமே! இந்தி அல்லது சமஸ்கிருதம் படியுங்கள் என்கிறார்களே, அது ஏன்? இந்தி தேசிய மொழியா? அல்லது சமஸ்கிருதம் தேசிய மொழியா? நீங்கள் சற்று அருள் கூர்ந்து சிந்தித்துப் பாருங்கள்.

எமக்கு பிடிக்கிறதோ இல்லையோ இப்படி ஒரேயடியாக ஒரு மொழி பேசுபவர்களிடம் கலை இல்லை, கலாச்சாரம் இல்லை, அவர்களிடம் அறிஞர்களே இல்லை என்று பேசி ஒரு மக்கள் கூட்டத்தின் மேல் துவேசம் வளர்ப்பது தான் இன்றைய் உலக ஒழுங்கில் பாசிசம் எனப்படுகிறது

Edited by vettri-vel

இந்தியில் கலை இல்லை; காவியம் இல்லை; நீதி நூல் இல்லை. அம்மொழி மூலம் அறியக் கிடக்கும் விஞ்ஞானத் தத்துவங்களும் இல்லை. ஆகவே, 100க்கு 97 போர் விரும்பாத அம்மொழி ஏன் இங்கு புகுத்தப்பட வேண்டும்? இங்குள்ள பார்ப்பன கோஷ்டியார், இத்திராவிட நாட்டின் கலைகளையும் கலாச்சாரத்தையும் அடியோடு அழித்து, இந்நாட்டை வடநாட்டுக்கு வால் நாடாக்கப் பார்க்கிறார்கள். இதுதான் மர்மமே ஒழிய ‘இந்தி தேசிய மொழி; ஆகவே, எல்லோரும் படிக்க வேண்டும்' என்று கூறுவதெல்லாம் பித்தலாட்ட வார்த்தைகள். இந்தி தேசிய மொழியாயின், எல்லோரும் கட்டாயமாக இந்தியைப் படித்துத்தான் ஆக வேண்டும் என்று வெளிப்படையாகக் கண்டிப்பாகக் கூறிவிடட்டுமே! இந்தி அல்லது சமஸ்கிருதம் படியுங்கள் என்கிறார்களே, அது ஏன்? இந்தி தேசிய மொழியா? அல்லது சமஸ்கிருதம் தேசிய மொழியா? நீங்கள் சற்று அருள் கூர்ந்து சிந்தித்துப் பாருங்கள்.

பெரியார் ஏன் இந்தி திணிக்கப்படக் கூடாது என்பதற்காக் கூறியது எப்படிப் பாசிசம் ஆகும்.இந்தி புகுத்தப்படுவதற்கான காரணமாக அதில் தமிழில் இல்லாத புதிய விடயங்கள் இருக்கின்றன என்கிற கூற்றிற்க்கு எதிர்மறையாக அதில் ஒன்றுமே இல்லை என்று கூறுவது எப்படிப் பாசிசம் ஆகும்.தமிழ் மொழையை விட கிந்தி சிறந்தது என்று கூறி இந்தியைத் திணிப்பது தான் பாசிசம்.அதனைச் செய்ய முயற்ச்சித்தவர்கள் தான் பாசிஸ்ட்டுக்கள்.தமிழ் மொழி தான் சிறந்தது ஆகவே கிந்தி மொழிக்காரர் எல்லாம் தமிழைப் படியுங்கள் என்று சொல்வது தான் பாசிசம்.தமிழ் மொழி முன்னேற வேண்டும் தமிழ் மொழி சீர்திருத்தப்பட வேண்டும் என்று சொல்வது மொழி வெறியில்லை மொழிப் பற்று.பெரியார் தமிழைத் தூற்றி விட்டார் என்று பொய்மையாக ஓலமிடுவது தான் வெறி.

ஒருதடவை சொல்வீர்கள் பெரியார் தமிழ் மொழியை இகழுகிறார் அவர் கன்னட வெறியர் என்று இன்னொரு தடவை சொல்வீர்கள் அவர் தமிழ்மொழி வெறியர் என்று.மொத்ததில் பெரியாரை எங்கனம் தூற்ற முடியுமோ அத்தனை முறைகளையும் முயர்ச்சிக்கிறீர்கள் இவற்றை எல்லாம் ஒதுக்கி விட்டு நிதானமாக அவர் என்ன சொல்கிறார் என்பதைப் பற்றிச் சிந்தியுங்கள்,அதில் அவர் கூறியதன் உண்மையான அர்த்தம் விளங்கும்.

பெரியார் ஏன் இந்தி திணிக்கப்படக் கூடாது என்பதற்காக் கூறியது எப்படிப் பாசிசம் ஆகும்.இந்தி புகுத்தப்படுவதற்கான காரணமாக அதில் தமிழில் இல்லாத புதிய விடயங்கள் இருக்கின்றன என்கிற கூற்றிற்க்கு எதிர்மறையாக அதில் ஒன்றுமே இல்லை என்று கூறுவது எப்படிப் பாசிசம் ஆகும்.தமிழ் மொழையை விட கிந்தி சிறந்தது என்று கூறி இந்தியைத் திணிப்பது தான் பாசிசம்.அதனைச் செய்ய முயற்ச்சித்தவர்கள் தான் பாசிஸ்ட்டுக்கள்.தமிழ் மொழி தான் சிறந்தது ஆகவே கிந்தி மொழிக்காரர் எல்லாம் தமிழைப் படியுங்கள் என்று சொல்வது தான் பாசிசம்.தமிழ் மொழி முன்னேற வேண்டும் தமிழ் மொழி சீர்திருத்தப்பட வேண்டும் என்று சொல்வது மொழி வெறியில்லை மொழிப் பற்று.பெரியார் தமிழைத் தூற்றி விட்டார் என்று பொய்மையாக ஓலமிடுவது தான் வெறி.

ஒருதடவை சொல்வீர்கள் பெரியார் தமிழ் மொழியை இகழுகிறார் அவர் கன்னட வெறியர் என்று இன்னொரு தடவை சொல்வீர்கள் அவர் தமிழ்மொழி வெறியர் என்று.மொத்ததில் பெரியாரை எங்கனம் தூற்ற முடியுமோ அத்தனை முறைகளையும் முயர்ச்சிக்கிறீர்கள் இவற்றை எல்லாம் ஒதுக்கி விட்டு நிதானமாக அவர் என்ன சொல்கிறார் என்பதைப் பற்றிச் சிந்தியுங்கள்,அதில் அவர் கூறியதன் உண்மையான அர்த்தம் விளங்கும்.

இந்தி மீது பெரியாருக்கு எந்த வெறுப்பும் இல்லை என்ற பொய்களுக்கு பதில் தான் எனது இணைப்பே ஒழிய வேறொன்றுமில்லை. பெரியாரின் முன்னுக்கு பின்னான கருத்துக்களும் குட்டிக் கரணங்களும் இன்னும் நிறைய உள்ளன. தேவை ஏற்படும் போது இணைக்கிறேன்

எமக்கு பிடிக்கிறதோ இல்லையோ இப்படி ஒரேயடியாக ஒரு மொழி பேசுபவர்களிடம் கலை இல்லை, கலாச்சாரம் இல்லை, அவர்களிடம் அறிஞர்களே இல்லை என்று பேசி ஒரு மக்கள் கூட்டத்தின் மேல் துவேசம் வளர்ப்பது தான் இன்றைய் உலக ஒழுங்கில் பாசிசம் எனப்படுகிறது

Fascism means aiming for extreme purity on the basis of mono-race.

Edited by vettri-vel

இந்தி மீது பெரியாருக்கு எந்த வெறுப்பும் இல்லை என்ற பொய்களுக்கு பதில் தான் எனது இணைப்பே ஒழிய வேறொன்றுமில்லை. பெரியாரின் முன்னுக்கு பின்னான கருத்துக்களும் குட்டிக் கரணங்களும் இன்னும் நிறைய உள்ளன. தேவை ஏற்படும் போது இணைக்கிறேன்

எமக்கு பிடிக்கிறதோ இல்லையோ இப்படி ஒரேயடியாக ஒரு மொழி பேசுபவர்களிடம் கலை இல்லை, கலாச்சாரம் இல்லை, அவர்களிடம் அறிஞர்களே இல்லை என்று பேசி ஒரு மக்கள் கூட்டத்தின் மேல் துவேசம் வளர்ப்பது தான் இன்றைய் உலக ஒழுங்கில் பாசிசம் எனப்படுகிறது

Fascism means aiming for extreme purity on the basis of mono-race.

இந்தி புகுத்தப்படுவதற்கான காரணமாக அதில் தமிழில் இல்லாத புதிய விடயங்கள் இருக்கின்றன என்கிற கூற்றிற்க்கு எதிர்மறையாக அதில் ஒன்றுமே இல்லை என்று கூறுவது எப்படிப் பாசிசம் ஆகும்?

மேலே சொனத்தைத் தான் திருப்பிக் கூற வேண்டி உள்ளது.கிந்தி தமிழை விட உயர்ந்தது அதனால் கிந்தியைப் படியுங்கள் என்று கூறப்படும் போது.கிந்தியில் அப்படி ஒன்றும் மேலான விடயங்கள் இல்லை என்று கூறுவது எவ்வாறு பாசிசம் ஆகும்? எந்த மொழையைப் படிக்கவும் எவருக்கும் உரிமை உண்டு.ஆனால் ஒரு மொழி இன்னொரு மொழியை விடச் சிறந்தது அதனால் நீங்கள் எல்லோரும் கட்டயமாக பாடசலையில் கிந்தி படிக்க வேண்டும் என்று கூறுவது தான் பாசிசம்.பெரியார் தமிழ் மொழி வெறியர் என்றால் ஏன் அவர் காட்டு மிரண்டிகளின் மொழி தமிழ் என்று கூற வேண்டும்?

Fascism means aiming for extreme purity on the basis of mono-race.

பச்சைத் தமிழர் என்று கதைப்பவர்களுக்கு மிக நேர்த்தியாகப் பொருந்தும் வரைவிலக்கணம், பாசிசம் என்றால் என்ன என்று ஆங்கிலத்தில் கூறியதற்கு நன்றி.இதைத் தமிழில் மொழி பெயர்த்தால், பாசிசம் என்பது தூய இனம் என்னும் நோக்கிலான ஒற்றை இனத்தை நிறுவுவதற்கான செயற்பாடு.பெரியாரைக் கன்னடர் என்று சொல்பவர்களுக்கு மிகச் சரியாகப் பொருந்தும் வரைவிலக்கணம்.

Fascism means aiming for extreme purity on the basis of mono-race.

பச்சைத் தமிழர் என்று கதைப்பவர்களுக்கு மிக நேர்த்தியாகப் பொருந்தும் வரைவிலக்கணம், பாசிசம் என்றால் என்ன என்று ஆங்கிலத்தில் கூறியதற்கு நன்றி.இதைத் தமிழில் மொழி பெயர்த்தால், பாசிசம் என்பது தூய இனம் என்னும் நோக்கிலான ஒற்றை இனத்தை நிறுவுவதற்கான செயற்பாடு.பெரியாரைக் கன்னடர் என்று சொல்பவர்களுக்கு மிகச் சரியாகப் பொருந்தும் வரைவிலக்கணம்.

நான் ஒருநாளும் பெரியாரை கன்னடர் என்று விளித்ததில்லை. கொள்கை முரண்பாடுகளுக்காக எவரையும் மரியாதை குறைவாக நான் அழைப்பதில்லை. கருத்துப்பரிமாற்றங்கள் அறிவை வளர்க்க பயன்பட வேண்டுமே ஒழிய இரத்த அழுத்தத்தை அதிகரித்துக் கொள்வதற்காக அல்ல. :icon_idea: Theory of pure dravidianism sometimes considered as Fascism by some analysts

Edited by vettri-vel

நான் ஒருநாளும் பெரியாரை கன்னடர் என்று விளித்ததில்லை. கொள்கை முரண்பாடுகளுக்காக எவரையும் மரியாதை குறைவாக நான் அழைப்பதில்லை. கருத்துப்பரிமாற்றங்கள் அறிவை வளர்க்க பயன்பட வேண்டுமே ஒழிய இரத்த அழுத்தத்தை அதிகரித்துக் கொள்வதற்காக அல்ல. :lol: Theory of pure dravidianism sometimes considered as Fascism by some analysts

வெற்றி வேல் உங்கள் விளக்கத்திற்க்கு நன்றி.தூய இனம் என்பது அறிவியலுக்குப் பொருந்தாத ஒன்று.இங்கு திராவிடர் என்னும் கருத்தாக்கம் எழுந்த அரசியற் சூழ் நிலையை நீங்கள் கருத்தில் எடுக்க வேண்டும்.இந்திய உப கண்டத்தில் பல சுய அடையாளம் உடைய தேசிய இனங்கள் உண்டென்பது வரலாறு.

கைபர் கணவாயினூடாக வந்த வெளியார் ,தமது மேலான்மையை இந்த இனக் குழுக்களின் மேல் நிறுவினர் என்பதுவும் வரலாறு.அந்த மேலாண்மைக்கு எதிராக எழுந்ததே திராவிட அரசியற் கோட்பாடு.பெரியார் இதனை ஒரு தூய இனத்தை உருவாக்குவதற்கான ஒரு அரசியற் செயற்பாடாக முன் எடுக்கவில்லை.அன்றைய சமூக பொருளாதாரச் சூழ் நிலைகளை மையமாக வைத்தே அரசியல் இயக்கத்தைக் கட்டினார்.எந்த அரசியற் கோட்பாடும் இருக்கும் யதார்த்தை வைத்தே அரசியற் சக்தியாக பரிணமிக்கிறது.ஆரியர் என்பதுவும் பார்ப்பனரின் மேலாண்மை என்பதுவும் இல்லாவிடின் அவ்வாறான ஒரு இயக்கம் கட்டப்படிருக்க முடியாது.எவ்வாறு சிங்களப் பேரினவாதம் இல்லாமல் தமிழீழதில் தமிழ்த் தேசியம் என்னும் அரசியற் சக்தி தோன்றியிருக்காதோ அவ்வாறே.

நான் பலமுறை சொல்லி இருப்பதைப் போல பார்ப்பனீயம் என்னும் சாதிய அடுக்கு மானத்திற்க்கும் அதனைத் தக்கவைக்க போராடும் இந்திய இந்துத்துவ தேசிய வாததிற்க்கும் எதிராகவே திராவிடம் என்னும் அரசியல் இயக்கம் செயற்படுகிறதே ஒழிய தூய திராவிட இனத்தை உருவாக்கும் நேக்கத்தில் அல்ல. அவ்வாறான தேசிய வெறியர்கள் தமிழ் நாட்டில் இல்லாமலும் இல்லை.பெரியாரை நான் படித்த அளவில் அவரின் நோக்கம் தேசிய இன வெறி அல்ல.பார்ப்பனீயம் என்னும் அடக்குமுறைக்கு எதிரான தேசிய இன விடுதலை.

பெரியாருடைய கருத்துக்களில் சில பகுதிகளை மட்டும் எடுத்துக் கொண்டு பார்ப்பனர்கள் செய்கின்ற திரிபு வேலைகளில் ஏமாந்து போய்விடாதீர்கள்.

பெரியார் ஹிந்தி மொழி மீது சொன்ன குற்றச்சாட்டுக்கள் எப்பொழுது, எதற்காக சொன்னார் என்பதை நாரதர் தெளிவு படுத்தி உள்ளார்.

தமிழை விட ஹிந்தி உயர்ந்தது என்று சொல்லி தமிழர்களிடம் ஹிந்தியை திணிக்கின்ற போது, ஹிந்தி அப்படி ஒன்று உயர்ந்த மொழி அல்ல என்று வாதிடுவது இனவாதம் அல்ல.

பெரியார் இதே குற்றச்சாட்டுகளை தமிழ் மொழி மீது தெரிவித்திருக்கிறார். தமிழில் அறிவியல் நூல்கள் இல்லை என்றும் மூட நம்பிக்கைகளை வளர்க்கின்ற குப்பைகளையே எழுதி வைத்திருக்கிறார்கள் என்றும் பெரியார் கண்டித்திருக்கிறார்.

அவர் எந்த மொழி மீதும் வெறியோ, வெறுப்போ கொண்டிருந்தவர் அல்ல.

மனிதனாக பிறந்தவர்கள் ஒருவரை ஒருவர் அடக்காது சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்பதே அவருடைய போராட்டமாக இருந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெரியார் இதே குற்றச்சாட்டுகளை தமிழ் மொழி மீது தெரிவித்திருக்கிறார். தமிழில் அறிவியல் நூல்கள் இல்லை என்றும் மூட நம்பிக்கைகளை வளர்க்கின்ற குப்பைகளையே எழுதி வைத்திருக்கிறார்கள் என்றும் பெரியார் கண்டித்திருக்கிறார்.

உலக மகா சமூகவியலாளர்களே வியக்கத்தக்க சமூகவியல் நூலாக திருக்குறள் விளங்குகிறதே..??! அது தமிழ் மொழியில் இல்லையா..??!

உலகம் வியக்கத்தக்க மொழி இலக்கணத்தை வரையறுத்த நூல்கள் தமிழில் உள்ளன.. அவை மொழியாக்கத்தின் அறிவியல் வடிவம் இல்லையா..??!

மனித இனத்தின் அறிவியல் என்பதே மொழியின் பிறப்பு வளர்ப்பு செழிப்பில் தான் தங்கி இருக்கிறதே தவிர.. அதைத் தவிர்த்தல்ல.

தமிழ் மொழி எப்போதும் காட்டுமிராண்டி மொழியென்றில்லை.

எல்லா மொழிகளிலும் சில பிற்போக்கான விடயங்கள் உண்டு. சேக்ஸ்பியரின் ஆங்கில இலக்கியத்தில் எத்தனை கட்டுக்கதைகள் உண்டு..! அதனால் ஆங்கில மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்றிடலாமா...!

இன்றும் கூட ஆங்கில மொழியில் கரிபோட்டர் தொடங்கி பல கற்பனை பாத்திரங்கள் சித்தரிக்கப்பட்ட கதைகள் உருவாக்கப்படுகின்றன.. அதற்காக ஆங்கிலம் அறிவியல் சாராத மொழி என்றால் ஆகிடுமா..??!

மொழியின் பயன்பாட்டு வடிவங்கள் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப மாறுபடும். அடிப்படை மொழியறிவற்றவர்கள் தான் மொழியை மக்களைப் பழிப்பார்கள். அறிவியலாளர்கள் மக்கள் உணரக்கூடிய அளவுக்கு மொழியை எளிமையாக்கி அறிவியலை எளிமையாக்கி வழங்குவார்களே தவிர மொழியை மக்களை திட்டித் தீர்த்து எதையும் சாதிக்க முடியும் என்று கனவு காண மாட்டார்கள்..!

இனத்தூய்மை என்பது ஒரு இனத்தின் தேசிய அடையாளத்துக்கு அவசியம் என்றாகும் போது எப்படி இனத்தூய்மை என்பது பாசிசம் ஆகும்..!

அப்படிப் பார்த்தால் திராவிடம் என்பது கூட திராவிடப் பாசிசம்.. ஆரியம் என்பது ஆரியப்பாசிசம்.. தமிழ் தேசியம் என்பது தமிழ் தேசியப் பாசிசம் என்றல்லா வரையறுக்கப்பட வேண்டும்.

அப்படியே நோக்கினால் மக்களின் மத உரிமைகளை மறுப்பது கூட பாசிசமே ஆகும். நாம் மதங்களை மதிக்கிறோமோ இல்லையோ மனிதருக்குரிய உரிமைகளைப் பறிக்க முடியாது. அறிவியல் என்பதை பாகுபாடுகளுக்கு அப்பால் மக்களுக்கு வழங்க வேண்டுமே தவிர பாகுபாட்டை வளர்த்து புறக்கணிப்புக்களை விதைத்து ஊட்டுவதல்ல அறிவியல் என்பது. அந்த வகையில் பெரியார் படத்தில் காண்பிக்கப்பட்ட சில மத ரீதியான கீழ்நிலைச் சித்தரிப்புக்கள் அறிவார்த்தமான நடவடிக்கைகளோ அல்லது அடிப்படை மனித உரிமைகளை மதித்து எடுக்கப்பட்டதோ இல்லை..!

இந்தியாவைப் பொறுத்தவரை திராவிடம் என்பது அரசியல் மொழி என்பதைத் தவிர அது ஹிந்திய தேசிய வல்லாதிக்கத்துக்கு எதிரானதாக வளர்க்கப்படவில்லை என்பதை திராவிட இயக்கம் வளர்த்த ஈவே ராமசாமி என்பவரே காங்கிரஸிடம் அரசியல் தஞ்சம் கோரியதைக் காட்டலாம்..! :P :lol:

Edited by nedukkalapoovan

அப்படி எண்றால் , இந்தியை நல்ல மொழி எண்ற பெரியார், அதே மொழியில் சொல்லாடல்கலையும் செய்து கொண்டே தமிழர் நாடு தமிழருக்கே எண்றார்.... 28 நாள் களித்து அதே கொள்கையை திராவிட நாடு திராவிடர்கே எண்றார்... தெலுங்கர்களையும், கன்னடர்களையும், மலையாளிகளியும் திருப்தி படுத்துவதற்காக..... தூரநோக்கே இல்லாத தலைவர் என்பதை ஹிந்தியை ஆதரித்து அதன் திணிப்பின் சாத்தியம் அறியாமல் இருந்த அரசியல் ஞானம் புலப்படுத்தியது...! இவர் எப்படி தமிழர் தேசிய தலைவராக முடியும்....????

பெரியார் பெரிய சமத்துவ வாதி எண்று இங்கு சொல்லப்பட்டது... பெரியார் சமத்துவம் கொள்கையை பார்ப்பணரை எதிர்க்க சாதியத்தில் மட்டும் தான் கொண்டிந்தார்( அதுவும் உருப்படியாக இல்லை)) . பொருளாதாரத்தில் இல்லை. மக்களை மேதினம் கொண்ண்டாட சொன்னதுதான் அவரின் சமத்துவம் ( பொதுவுடமை) எண்ண்று ஆகமாட்டாது... முதலாளித்துவ நாடுகள்ள் கூட மேதின ஊர்வலம் போகிறார்கள்.. எண்றுமே பெரியார் தன்னிப்படையாக ஏழை மக்கள் பொருளாதாரத்தில் உயர்வதை, சமனாவதை ஆதரிக்க வில்லை.... !

Edited by தயா

பெரியாருடைய கருத்துக்களில் சில பகுதிகளை மட்டும் எடுத்துக் கொண்டு பார்ப்பனர்கள் செய்கின்ற திரிபு வேலைகளில் ஏமாந்து போய்விடாதீர்கள்.

பெரியார் ஹிந்தி மொழி மீது சொன்ன குற்றச்சாட்டுக்கள் எப்பொழுது, எதற்காக சொன்னார் என்பதை நாரதர் தெளிவு படுத்தி உள்ளார்.

ஒரு மொழி வேண்டாம் என்பதானால் அந்த மொழி உள் நுழைவதால் தமிழருக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை ஆணித்தரமாக தெளிவுபடுத்த வேண்டுமே ஒழிய, ஒரு கலாச்சாரத்தின் மீதே காழ்ப்புணர்வை கக்கி துவேசத்தை வளர்த்து ஒரு பல்லின நாட்டு கட்டமைப்பில் மக்கள் ஒருவரை ஒருவர் கடித்து குதறச்செய்து துவேசத்தை தூண்டுவது புரட்சி அல்ல. சுயனலத்தால் வந்த புரட்டு.

ஏற்கனவே காதலிக்கும் ஒருவனை, வேறு ஒரு பெண்ணை பார்க்க பெற்றோர் வற்புறுத்தி அழைத்து சென்று விட்டால், எனக்கு ஒரு காதலி இருக்கிறாள், அவளோடு தான் என் வாழ்வு சிறக்கும் என்று பெற்றோரிடம் சொல்ல வேண்டுமே ஒழிய, பெற்றோர் காட்டிய பெண்ணை, அவள் ஒரு பரத்தை, பல பேருடன் தொடர்பு கொண்டவள், அவள் குடும்பமே அப்படித்தான் என்று அவதூறு சொல்லக் கூடாது.

பசுவின் கன்றிற்காக தன் மகனையே தேர்க்காலில் சிதைத்தான் சோழன் என்று அவ்வளவு உயர்வாகத் தான் தமிழர் பண்பை பற்றி வரலாறு சொல்கிறது. எதிரிகளை கூட நாம் தரக் குறைவாக நடத்துவதில்லை.

தமிழருக்கு தமிழறிவையும் தமிழ் பற்றையும் வளர்த்து விட்டால், எந்த மொழி புகுந்து என்ன செய்து விட முடியும். தமிழருக்கு தமிழ் மொழிக் கல்வியை கட்டாயப் படுத்தும் வேலைத்திட்டங்களை திட்டமிடாது வெறும் அரசியல் லாபத்திற்காக மொழி எதிர்ப்பு என்னும் ஆயுதத்தை பாவித்ததால் தான், இன்று தமிழ் ஆங்கிலத்துடன் கலந்து தமிழ்நாட்டில் அல்லோலகல்லோலப் படுகிறது. தமிழகத்தின் ஆங்கிலக்கல்வி மோகத்தால் இன்று அரைவாசி தமிழ் குழந்தைகளுக்கு தமிழ் வாசிக்கவே தெரிவதில்லை. தமிழ் சினிமாவையும், சன் தொ(ல்)லை காட்சியையும் பார்த்தாலே தெரியுமே தமிழகத்தில் தமிழின் நிலை என்னவென்று.

பகுத்தறிவு பாசறை சிங்கங்கள் எத்தனை பேர் தங்கள் குழந்தைகளுக்கு சிறப்பான இந்திக் கல்வி வழங்கினார்கள் என்று பட்டியல் இட்டால் மிக நீண்டு விடும்

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

quote name='nedukkalapoovan' date='May 25 2007, 10:09 AM' post='306959']

அண்மையில் வெளியான...பெரியார்.. படம்.. பெரியார் போலவே...முரண்பாடுகளுடன்....

1. ராமசாமியாகி நாயக்கர் ஆகிய பெரியாரின் பூர்வீகம் மறைக்கப்பட்டு ஈரோட்டுக்கே சொந்தமாக்கிக் காட்டி உள்ளார்கள்.

2. நாயக்கர் என்ற சாதியக் கூறை தூக்கி எறிவதாகச் சொல்லும் பெரியார்.. ராமர் + சாமி என்பதை தூக்கி எறியாமலே கட்டிக்காத்திட்டத்தை சுயமரியாதைக்க அடக்கிட்டாங்க.

3. நாகம்மையின் தாலியைக் கழற்றியவர்.. தான் மட்டும் புலிப்பல்லுப் போட்ட சங்கிலி சகிதம்..நாகம்மைக்கு இடஞ்சல் இல்லாம இருக்க விரும்பாம.. சுயநலத்தோட இருக்கிறார்.

4.பெண்களை சுயசிந்தனையின் வழி அறிவுபூர்வமா வழிநடத்தாம.. அவங்களை ஏமாளியாக் காட்டி ஏமாற்றுக் கதை சொல்லி.. ஏமாற்றி அவர்களில் மாற்றங்களை காட்டிறது பெண்களை ராமசாமி எந்தளவுக்கு அளவிட்டுள்ளார் என்பதை தெளிவாகக் காட்டியுள்ளனர். அவர் பெண்களை ஏமாளிக்கூட்டமாக கருதி கருத்துக்களை விளங்க முடியாத முட்டாள்களாக எண்ணி நடந்துள்ளதை படம் முழுவதும் அவதானிக்க முடிகிறது. பெண்களின் உணர்வுகளுக்கு பெண்கள் தேட வேண்டிய தீர்வை ராமசாமி பெண்களின் உணர்வுகளை தான் உணர்ந்து அவர்களுக்கு தீர்வு தேடித் தரும் தொண்டனாக தன்னைக் காட்டிக்க முயல்கிறார். இதில் எங்கு சுயசிந்தனைக்கும் சுயமுடிவெடுத்தலுக்கு சுய அறிவூட்டலுக்கும் பெண்கள் ஆண்களை ஒத்து இடம் பெற வழிகாட்டப்படுகிறது..??!

5.ரஷ்சியா போன இடத்தில கண்டதை தமிழகத்துக்குள்ளும் புகுத்த முனைந்தமை..முற்போக்கல்ல.. கொப்பி அடித்தல் என்பதை தெளிவாகக் காட்டி இருக்கிறது.

6.காங்கிரஸில் தனது கருத்தியல் ஆதிக்கத்துக்கு படித்த பிராமணர்கள் எதிர்ப்பு என்ற காரணத்திற்காக பிராமணர்களின் கல்வி மற்றும் இதர தொழில்துறைகளில் அவர்களின் சுயமுயற்சியை பாராட்டாமல்.. அவற்றை உதாரணமாக்கி மற்றைய சமூகங்களை விழிப்புணர்வு படுத்தாமல்... பிராமண சமூகத்தை குற்றவாளியாக்கி இட ஒதுக்கீடு என்று முயற்சிகள் இல்லாமலே ஏனைய சமூகத்தவர்களுக்கு சமத்துவமும்.. சமூக ஏற்றத்தாழ்வுகளைப் போக்க முடியும் என்று ஒரு தவறான கருத்தைக் காட்டுகிறார்கள்..இதில் எப்படி பகுத்தறிவும் கல்வி அறிவும் பெருகும்.. இட ஒதுக்கீடு மட்டும் தானே பெருகும். இது தரப்படுத்தலுக்கு நிகரானது. பிராமணன், தாழ்த்தப்பட்டவன் என்பதை தொடர்ந்து கட்டிக்காக்கத்தான் உதவுமே தவிர.. அனைவருக்கும்.. அனைத்தும் என்ற நிலையை ஏற்படுத்த ஏதுவாகுமா..??!

7. இந்துமத அடையாளங்களை எதிர்க்கும் பெரியார்.. மலேசியா போன இடத்தில் முஸ்லீம்களின் உடையலங்காரம் வசதி என்று சொல்லி அதை நாகம்மையிடம் திணிக்க முற்படுவதுடன்.. கூந்தலைக் கத்தரிப்பதுவும்.. குறுகிய ஆடை போடுவதும்.. பெண்களுக்கு இலகுவானது என்று சொல்ல முனைகின்றார். அப்ப ஏனாம் அவர் மட்டும் வேட்டையை சுத்திட்டு திரியுறார்..! கதரில.. சிறிய துணியை சுத்திட்டு திரிஞ்சிருக்கலாமே..??!

8. சுயமரியாதை பகுத்தறிவு வேண்டும் என்ற பெரியார்.. தாலியைக் கழற்றவும் சேலையைக் கழற்றவும் வழி சொல்பவர்..பொன்னாடைக்கும் பூமாலைக்கும் கழுத்தை நீட்டுவது ஏன். அதில் அவர் என்ன சுயமரியாதைப்.. பகுத்தறிவைப் பெற்றார். பொன்னாடையும் பூமாலையும் வெட்டிதானே...வேஸ்டுதானே. அதை ஏழைகளுக்கு உடை தைக்கவும்.. பூக்களைக் கொண்டு நறுமண திரவியங்களை தயாரித்து விற்கவும் வழிகாட்டி இருக்கலாமே..??! இதில பகுத்தறிவு..??!

9. இந்துமதக் கடவுள்களை சிலையாகக் காண்பவர்.. புத்தனின் சிலையைக் காண மட்டும்.. மாநாட்டைச் சாட்டு வைச்சு பர்மா வரைக்கும் ஏன் போக வேண்டும். புத்தனின் கொள்கைகளை இந்தியாவில் வைச்சே பரப்பிக்கலாம் தானே.

10. இந்துமதம் மிகவும் நெகிழ்வானது என்பதை பெரியார் தன் வாயாலேயே ஒத்துக் கொண்டார். புத்தத்துக்கு மாற விரும்பம் இருந்தும்.. இந்துமதத்துக்குள் இருந்தால் தான் அதற்குள் இருந்தே அதை ஏய்கலாம்.. மற்றைய மதங்களைத் தழுவி விட்டால் தன் ஏய்தலுக்கு அவை இடமளிக்காது என்பதை அறிந்து நசூக்காக புத்தத்துக்கு மாற மறுக்கும் பெரியார்.. பகுத்தறிவில் புத்த மதத்துக்கு தாவுதலை முன்னிறுத்துகிறார். சோக்கிரட்டிசை கடவுளாக வரிந்து ஒரு மதத்தைப் படைச்சிருக்கலாமே.. புத்தனை வைச்சு உருவாக்கிய மதத்தை ஆதரித்த பெரியார்..??! அவரை ஒருவர் ஏன் நீங்கள் புதிய மதத்தை ஸ்தாபிக்கக் கூடாது என்று கேட்க.. அதற்கு அசிங்கத்தை காரணம் காட்டுபவர்.. பெளத்த மத அசிங்கத்தை தழுவச் சொன்னதில் என்னையா நியாயம்..??!

11.பெண்களின் பாலுணர்வுகளுக்கு மதிப்பளிச்சு மறுமணம் செய்து வைத்தவர்.. நாகம்மையை கைவிட்டு காசிக்குப் போகும் போதும்.. மணியம்மையை மணம் முடிச்சு.. தனக்கு சேவகம் செய்ய அடிமையாக வைச்சிருக்கும் போதும்.. அந்த உணர்வுகளை ஏன் மதிக்கல்ல..??! அவர்களை தன் மனைவியாக்கிய பின் அவங்க பாலுணர்வுகளைக் கருத்தில் கொண்டு ஏன் வேறு ஆண்களோட அவங்க உடலுணர்வுகளை தீர்க்க அனுமதிக்கல்ல.. குழந்தைக்கு ஏங்கும் நாகம்மையை ஏன்.. இன்னொரு ஆண் கூட சேர்ந்து குழந்தை பெற்றுக்கச் சொல்லேல்ல.. சா.. ஏன் மறுமணம் முடிச்சு வைக்கேல்ல..! கண்றாவியா இருக்கப்பா.. உதுகளில எழுதிற.. என்ன பெரியார் சமாச்சாரமாச்சே எழுதித்தானே ஆக வேண்டி இருக்குது..!

12.உடலுறவுக்கு கல்யாணம் ஏன் விலங்குகள் போல அதைக் கண்டபடி செய்யலாம் என்பவர்.. தேவதாசிகள் விடயத்தில்... ஒருவனுக்கு ஒருத்தி என்பதை வலியுறுத்தி கருத்துச் சொல்வது முன்னுக்குப் பின் முரணா இருக்கே..!

13. கொள்கை அளவில் காங்கிரஸ் தனது கொள்கைகளை ஏற்காது என்று தெரிந்தும் இவரின் கொள்கைகளைப் பின்பற்றுவதாகச் சொன்ன திமுகவை எதிர்க்கவும்..காங்கிரசோடு தொடர்புகளைப் பேணவும்.. தனது திராவிடக் கட்சியை முழுமூச்சோடு முன்னெடுக்கவும் முடியாமல்.. திணறியது ஏன்..??! காங்கிரஸின் மத சாதி எதிர்ப்பற்ற ஒருவரை தனது நண்பனாகவே கடைசிவரைக் காத்தவர்.. ஏன் அண்ணா போன்ற தன் கொள்கைவாதிகளை அந்தளவுக்கு முதன்மைப்படுத்தல்ல..??!

14.நாகம்மையிடம் மலே உடையைத் திணித்தவர்.. மணியம்மையிடம் ஏன் கூந்தலைக் கத்தரிக்கவும்.. மலே உடை போடவும் பரிந்துரைக்கல்ல.

15. பெண்களின் கல்வி அறிவில அக்கறைகாட்டுபவராகச் சொல்பவர்.. ஏன் நாகம்மையையும் மணியம்மையையும் அரசியலுக்க கொண்டு வரல்ல. ஏன் அவங்களுக்கு அரசியல் கல்வி ஊட்டல்ல..! அவங்களை ஏன் அரசியலில ஆண்களுக்கு நிகரா நிறுத்தல்ல..??! அவங்களை தன் ஏவலுக்கு பணி செய்பவங்களாகத்தானே பாவிச்சிருக்கிறார்...!

16.பெண்கள் மீது அதிகாரம் கூடாது என்பவர்.. அவர்களின் உணர்வுகளுக்கு கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பவர்.. ஏன் மாட்டுத் தொழுவத்தில் அந்த துர்நாற்றம் மத்தியில் தன்னால் உணவருந்த முடியல்ல என்ற மணியம்மையை சாப்பாட்டுக்கையால் முகத்தில் தாக்கி.. அவரை உணவுன்ன வலியுறுத்த வேண்டும். பதிலாக.. உனக்கு உண்ணப் பிடிக்கல்லை என்றால் பறுவாயில்லை.. அவர்களின் விருப்பத்துக்காக நான் உண்கிறேன் மணியம்மை என்று அவரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் அதேவேளை அவரை சிந்திக்க தூண்டவும்.. சுயமுடிவெடுக்கவும் விட்டிருக்கலாமே. அங்கு ஆணாதிக்கத்தை பெரியார் பிரயோகிச்சத்தை அப்பட்டமா காணக் கூடியதா இருக்கிறது..!

17.சிலைகளின் கடவுளைக் காண்பவங்களை மதிக்க மறுப்பவர்.. கதர் நெய்த்தறிக்குரிய கருவியை மட்டும் சுமந்து கொண்டு காந்தி போல தன்னைப் பாவனை செய்வது மட்டும் ஏன்..??! இதில எங்க சுயமரியாதையும் பகுத்தறிவும் வெளிப்படுகிறது..???! காந்தி மரியாதையும் கதர் பற்றும் தானே வெளிப்படுகிறது..??!

18.தாலி இல்லாத பொண்ணை காலிப்பசங்க.. தாசின்னு நினைச்சு நாகம்மையை தப்பாப் பார்கேக்க.. கடவுளைக் குற்றம் சொல்பவர்.. தான் தாலியைக் கழற்றி எறிஞ்சதாலதான் அது நிகழ்ந்ததென்ற உண்மையை உணராமல் போனாரே..இதில எங்க பகுத்தறிவு இருக்குது. சமூகத்தில் பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை அவங்களா தங்களுக்கு என்று உருவாக்காத வரைக்கும்... இப்படிச் சின்னங்கள் பாதுகாக்க உதவும்.. என்ற நிலையை ஏன் அவரால புரிஞ்சுக்க முடியல்ல..??! தாலிக்கு மதிப்பளிக்கும் வழமை.. சமூகத்தில் தாலி அணியும் பெண்களுக்கு ஒரு தற்காப்பு அவங்க தங்க பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் வரை வழங்கும் என்றதை ஏன் உணரல்ல..!

19.பிராமண அடையாளங்களை பிராமண சாதியை அழிக்கப் பாடுபடுபவர்.. ஏன் தாழ்ந்த சாதி மக்களை தன்னைப் போல உடை உடுத்தவும்.. வசதியோட வாழவும்.. வழிகாட்டல்ல..! அவங்க தொழிலை நிறுத்த முயல்பவர்... அதற்கு ஈடா எதை செய்யச் சொன்னார்..??!

20. பெரியார் கேரளா போய் வாங்கிக் கட்டிய பின் அங்காலப் பக்கமே போனதில்ல. கர்நாடகா.. ஆந்திரா பக்கம் போனதும் இல்ல..! திராவிடம் என்பதை தமிழ்நாட்டுக்க மட்டும் ஏன் வரையறுத்த வேண்டும்.... தன் காங்கிரஸ் விசுவாச அரசியலில் தன் எதிர்பார்ப்பு நிறைவேறாத ஏமாற்றத்தில்..தமிழகளின் பலவீனங்கள அரசியலாக்கி செல்வாக்குத் தேடினார் பெரியார். இதுதான் பகுத்தறிவா..??! சுயமரியாதையா.. திராவிட விசுவசமா...?! இல்ல தமிழர்களைக் காட்டுமிராண்டிகளாகக் காட்டும் செயலா..??!

21. கோயிலை வெறுத்தவர்.. கோயில் தர்மகர்த்தாவா மட்டும் இருக்க சம்மதித்தது மட்டுமன்றி.. கோயில் ஒரு பொதுஸ்தாபனம் என்றும் பிரகடனம் செய்கிறார். அதைத்தானே மதங்களும் சொல்கின்றன. கடவுள் எல்லோருக்கும் உரித்தானவர்.. கோயில் எல்லோருக்கும் பொதுவானது..எவரும் வரலாம் வணங்கலாம் என்று. நந்தனார் விடயம் வந்த போது அதை நக்கலடித்தவர்..காந்திஜி ஒரு நல்ல பிராமணரை அடையாளம் காட்டிய போது அதை ஏற்றுக் கொள்கிறார்..! அப்புறம் காந்திஜியையே அரசியலுக்காக தனது கருத்தை காங்கிரஸ் ஏற்கல்ல என்றதுக்காக எதிர்கிறார்..! எல்லாம் முன்னுக்குப் பின் சுத்த சாக்கடை அரசியலாவே நடந்து முடிஞ்சிருக்கு. அப்படி இருக்க அந்த போலி மனிதர் எப்படிப் பெரியாரா இருக்க முடியும்..??! ஒருவேளை தமிழக சாக்கடை திராவிட (திமுக, அதிமுக) அரசியலுக்கு அவர் பெரியாரோ இருக்கலாம்...! ஆனால் அவர் மனித சமூகத்துக்கு பெரியாரா இருக்க தகுதியுடையவரா என்பதை நீங்களே தீர்மானியுங்க...!

22. பெண்களின் சுதந்திரத்தை திருமணம் பறிக்கிறது என்றவர் தானே முன்வந்து சுயமரியாதைத் திருமணமும் செய்து வைக்கிறார்.

23. உதவி செய்ய வந்த மணியம்மையை தள்ளாடும் வயதில் திருமணத்துக்கு சம்மதிக்க வைத்துத் தானே திருமணமும் செய்கிறார்..!

24. பெண்களுக்கு குழந்தைகள் அவர்களின் வளர்ச்சிக்குத் தடை என்றவர்.. குழந்தைகளோடு சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொள்கிறார்..!

25. நாகம்மைக்கு சாமி சிலையிடம் பாதுகாப்பை எதிர்பார்த்து நக்கலடித்தவர்.. சோக்கிரட்டிஸின் சிலைக்கு முன்னால் தானே புலம்பி.. தானே தனக்கு தனது நிலைப்பாட்டுக்கு அங்கீகாரம் தேடுவது..இதைத்தான்.. சாமி சிலையின் முன் மற்றவர்களூம் செய்கின்றனர் என்பதை உணராத நிலையில் பெரியார்.. என்பவர்..! :)

  • கருத்துக்கள உறவுகள்

24. பெண்களுக்கு குழந்தைகள் அவர்களின் வளர்ச்சிக்குத் தடை என்றவர்.. குழந்தைகளோடு சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொள்கிறார்..!

கிழக்காசியா நாடு ஒன்றில் முன்பு கொமுரூன்(சரியா தெரியவில்லை) என்ற பெயரில் நாட்டில் பரியோசமில்லாதவர்களை அழிப்போம் என்று முதியோர்களையும், ஊனமுற்றவர்களையும் இலட்சக்கணக்கில் கொன்று புதைத்தார்கள்.

ஏனென்றால் நாட்டின் வளர்ச்சிக்கு முதியவர்களும், பயன்படாதவர்களும் தடையாக இருந்தார்கள் என்பதே அவர்களின் கருதுகோள். இக்கருத்தையும் பார்க்க அப்படித் தோன்றுகின்றே. அல்லது அதன் பாதிப்பா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.