Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டன 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் உபகரணங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டன 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் உபகரணங்கள்

 

 

   by : Benitlas

021-10.jpg

கொரோனா பரிசோதனைக்கான 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் உபகரணங்கள் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு தோன்றி உலக நாடுகளுக்கு பரவியது. இந்தியாவிலும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. இதனை தடுக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. தொடர்ந்து மக்களிடையே கொரோனா பாதிப்பு பற்றி பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

எனினும், உடனடியாக முடிவுகள் தெரிவதற்கு போதிய மருத்துவ பரிசோதனை உபகரணங்கள் இந்தியாவில் இல்லை. இதனால் உபகரணங்கள் வாங்குவதற்கு சீனாவிடம் இந்தியா கோரியது. முதற்கட்டத்தில் தயாராக இருந்த உபகரணங்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு விட்டன என கூறப்பட்டது.

இதனால் இந்தியாவுக்கு உபகரணங்கள் வர காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், ஆன்டிபாடி பரிசோதனை உபகரணங்கள் மற்றும் ஆர்.என்.ஏ. பரிசோதனை உபகரணங்கள் உள்ளிட்ட கொரோனா பரிசோதனைக்கு தேவையான 6.5 இலட்சம் மருத்துவ உபகரணங்கள், சீனாவின் குவாங்சூ விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து கொரோனா பரிசோதனைக்கான 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் உபகரணங்கள் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வந்துள்ளன. இந்த ரேபிட் டெஸ்ட் உபகரணங்கள் மூலம் கொரோனா சோதனை முடிவுகளை விரைவாக அறிய முடியும் என சுகாதார துறை தெரிவித்துள்ளது.

http://athavannews.com/தமிழகத்திற்கு-கொண்டுவரப/

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கருவிகளையும் சீனாக்காரன்  இந்தியன் Election counting machine மாதிரி pre_ set பண்ணி வச்சிருந்தால்??

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ்: தமிழகம் வாங்கிய 'ரேபிட் டெஸ்ட் கிட்'டின் விலை அதிகமாக இருப்பது ஏன்?

கொரோனா வைரஸ் தாக்குதல் இருக்கிறதா என்பதைத் துரிதமாகக் கண்டறிய உதவும் 'ரேபிட் டெஸ்ட் கிட்'கள் இன்று தமிழகத்தை வந்தடைந்திருக்கும் நிலையில், அவற்றின் விலை அதிகமாக இருப்பது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

கொரோனா நோய் தடுப்பு முயற்சியில், பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு வேகமாக சோதனை செய்ய உதவும் 'ரேபிட் டெஸ்ட் கிட்கள்' இன்று தமிழகத்தை வந்தடைந்துள்ளன. தமிழ்நாடு சுகாதாரத் துறை ஆர்டர் செய்த 5,00,000 கிட்களில் 24,000 கிட்களும் மத்திய அரசுக்கு வந்த கிட்களில் 12 ஆயிரம் கிட்களும் இன்று தமிழகத்தை வந்தடைந்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த கிட்களை வைத்து உடனடியாக சோதனைகளும் துவங்கப்பட்டன. இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பில் இந்த ரேபிட் டெஸ்ட் கிட்களின் விலையைச் சொல்வதில் அதிகாரிகள் காட்டிய தயக்கம், 600 ரூபாய் விலைக்கு ஒரு கிட்டை வாங்கியிருப்பது ஆகியவை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.

மத்திய அரசு நிர்ணயித்த 600 ரூபாய்க்கு ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட்டது என்றும் தமிழக அரசு முன்கூட்டியே ஆர்டர் செய்துவிட்டதால் நாம் அதிக பணம் செலவிட நேர்ந்தது என்றும் தமிழக அரசு சார்பில் பிபிசி தமிழிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று குறித்த தகவல்களை அளிக்கும் தினசரி செய்தியாளர் சந்திப்பு சனிக்கிழமையன்று நடந்தபோது, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அப்போது தமிழகத்திற்கு வந்தடைந்திருக்கும் ரேப்பிட் டெஸ்ட் கிட் ஒன்றின் விலை என்ன என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். சட்டீஸ்கர் மாநிலத்தில் ஒரு கிட் 337 ரூபாய்க்கு வாங்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் என்ன விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறது என செய்தியாளர்கள் கேட்டனர்.

 

இது தொடர்பான கேள்விகளுக்கு, தமிழ்நாட்டில் மருத்துவ உபகரணங்களைக் கொள்முதல் செய்யும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் நிர்வாக இயக்குநர் உமாநாத் பதிலளிப்பார் என விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உமாநாத், "ஆன்டி - பாடி அடிப்படையில் இந்த சோதனையைச் செய்யும் ரேபிட் டெஸ்ட் கிட்களுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஏப்ரல் 2ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இதற்கு அடுத்த நாள் அவர்கள் இந்த கிட்களை வாங்குவதற்கான முயற்சிகளை எடுத்தார்கள். அதற்கு அடுத்த நாளே, மத்திய அரசு ஒப்புதல் அளித்த விலையில், அதே நிறுவனத்திற்கு நாங்கள் ஆர்டர் கொடுத்தோம்" என்று தெரிவித்தார்.

பிறகு செய்தியாளர்கள் மீண்டும் விலை குறித்த கேள்வியை எழுப்பினர். அதற்கு பதிலளித்த உமாநாத், "மத்திய அரசு 15 லட்சம் கிட்களை ஆர்டர் செய்திருப்பதாகத் தெரிகிறது. தமிழக அரசு 5 லட்சம் ஆர்டர் செய்திருக்கிறோம். இந்தியாவிற்கு வந்த முதல் பேட்சில், 3 லட்சம் கிட்கள் இருந்தன. அதில் தமிழகத்திற்கான 24 ஆயிரம் கிட்கள் வந்திருக்கின்றன. மத்திய அரசின் பங்கிலிருந்து 12 ஆயிரம் கிட்கள் வந்திருக்கின்றன. மீத கிட்கள் விரைவில் வரும்" என்றார்.

இதற்குப் பிறகு மீண்டும் விலை குறித்து கேட்டபோது, மத்திய அரசு எங்கு வாங்கியதோ, அதே விலையில், அதே நிறுவனத்தில்தான் வாங்கினோம் என்று தெரிவித்தார். மீண்டும் விலை குறித்து கேட்டபோது, "மத்திய அரசு நிர்ணயித்த விலையை மத்திய அரசிடம்தான் கேட்க வேண்டும்" என்று தெரிவித்தார் உமாநாத்.

மத்திய அரசு ஏப்ரல் 3 ஆம் தேதி ஆர்டர் கொடுத்தது. இதற்குப் பிறகு பல மாற்றங்கள் நிகழ்ந்தன. நாம் ஆர்டர் செய்தபோது இருந்த நிறுவனங்கள் மிகக் குறைவு. ஏழு நிறுவனங்கள்தான் இருந்தன. சட்டீஸ்கர் மாநிலம் ஆர்டர் செய்திருக்கும் கம்பெனிக்கு, அந்தத் தருணத்தில் ஒப்புதலே இல்லை. நாமும் மத்திய அரசும் ஆர்டர் செய்த பிறகு, இந்த கிட்களுக்கான சுங்கவரி, சுகாதார சிறப்பு வரி ஆகியவை நீக்கப்பட்டன. ஆகவே அதற்குப் பிறகு வாங்கியவர்களுக்கு விலை குறைவாகத்தான் இருக்கும். ஆகவே தமிழக அரசு கூடுதல் விலைக்குக் கொள்முதல் செய்தது என்று சொல்வது தவறான கருத்து. மத்திய அரசு எந்த நிறுவனத்திடமிருந்து, எந்த விலைக்கு வாங்கியதோ அந்த நிறுவனடமிருந்து அதே விலைக்குத்தான் நாம் வாங்கியிருக்கிறோம். மத்திய அரசு கொள்முதலுக்கு நிர்ணயித்த விலையை மற்றொரு மாநிலம் வாங்கிய விலையோடு ஒப்பிடுவது சரியாக இருக்காது. நாங்கள் புதிதாக வாங்குவதற்கு ஒரு டெண்டர் விட்டால், சட்டீஸ்கர் வாங்கியதைவிட குறைந்த விலைக்கு வாங்க முடியும். அந்தத் தருணத்தில் சட்டீஸ்கர் வாங்கியது கூடுதல் விலை என ஆகிவிடாது. காரணம் வரி விகிதம், நிறுவனங்கள் மாறியிருக்கின்றன" என்று தெரிவித்தார் உமாநாத்.

விலையைச் சொல்வதில் என்ன தயக்கம் என்றும் ஒரு கிட்டை 600 ரூபாய்க்கு வாங்கியதாக சொல்லப்படுகிறதே அது சரியான தகவலா என்றும் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்குப் பதிலளித்த உமாநாத், "நீங்களே விலையைக் குறிப்பிட்டு கேள்வியெழுப்பியிருக்கிறீர்கள். நாம் விலையை நிர்ணயிக்காதபோது, மற்றொரு மாநிலம் குறைந்த விலைக்கு வாங்கியிருக்கும் நிலையில், அந்த அமைப்பைக் குறைசொல்லக்கூடாது" என்று தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பு முடிந்த பிறகு, தமிழக அரசு ஒரு கிட்டை 600 ரூபாய் விலைக்கு வாங்கியிருப்பது தொடர்பான ஆவணங்களைச் செய்தியாளர்களிடம் காண்பித்தார் உமாநாத்.

நேற்று காலையில் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்த சட்டீஸ்கர் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் டிஎஸ் சிங் தியோ, "75,000 உயர் ரக டெஸ்ட் கிட்களை ரூ. 337 + ஜிஎஸ்டி என்ற விலையில் தென்கொரிய நிறுவனம் ஒன்றிடமிருந்து வாங்கியிருக்கிறோம். இந்தியாவிலேயே இது மிகக் குறைந்த விலை. இந்தியாவில் உள்ள தென்கொரியத் தூதர், தென்கொரியாவில் உள்ள இந்தியத் தூதர் ஆகியோருடன் நடத்திய பேச்சுவார்த்தையால் இது சாத்தியமானது. வெல்டன் டீம்!" என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையெடுத்தே, தமிழக அரசு என்ன விலைக்கு இந்த ரேபிட் டெஸ்ட் கிட்களை வாங்குகிறது என்ற சர்ச்சை எழுந்தது.

தமிழக அரசின் பதில் என்ன?

ரேபிட் டெஸ்ட் கிட் வாங்குவதற்கு தமிழக அரசு செலவிட்ட பணம் அதிகமாக இருப்பது குறித்த சர்ச்சை பற்றி பிபிசி தமிழிடம் பேசிய, பெயர் வெளியிட விரும்பாத சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் மத்திய அரசு நிர்ணயித்த 600 ரூபாய்க்கு ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட்டது என்றார். ''தமிழக அரசு முன்கூட்டியே ஆர்டர் செய்துவிட்டதால் நாம் அதிக பணம் செலவிட நேர்ந்தது. அதோடு, வாங்குவதற்கு நாம் தயாராக இருந்தாலும் பொருட்கள் கிடைப்பதற்கு காலம் தேவைப்படுகிறது என்பது மற்றொரு பிரச்சனை,'' என்றார்.

முகக்கவசம் மற்றும் தெர்மல் ஸ்கேனர் உபகரணங்களை பொறுத்தவரை, மத்திய அரசு நிர்ணயம் செய்தவிலையைவிட குறைந்தவிலைக்கு தமிழக அரசு வாங்கியது என்றார்.

''முகக்கவசத்திற்கான மூலப்பொருள் சீனாவில் இருந்து நேரடியாக வரவேண்டிய தேவை இருந்தது. அதாவது, மத்திய அரசு ஒரு முகக்கவசத்திற்கு ரூ.13 என முடிவு செய்திருந்தது. தமிழக அரசு முகக்கவசம் வாங்க ரூ.9 என விலை நிர்ணயம் செய்து, அதனை பெற்றது. அதேபோல தெர்மல் ஸ்கேனர் வாங்கும்போது, ரூ.4,000 என்பது சாதாரண நாட்களில் விற்கப்படும் விலை. ஆனால் கொரோனா தொற்று சமயத்தில் அதே தெர்மல் ஸ்கேனரின் விலையை ரூ.15,000 என தனியார் நிறுவனம் உயர்த்திவிட்டது. முதலில், கொரோனா பரவலை குறைக்கவேண்டும் என்ற எண்ணத்தில், முதலில் ஆர்டர் செய்துவிட்டோம், பின்னர் அவர்களிடம் பேசி விலையை குறைத்துவாங்கினோம்,'' என்றார் அந்த அதிகாரி.

 

https://www.bbc.com/tamil/india-52339519

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் மோடி - முதல்வர் பழனிசாமி தொலைபேசியில் பேச்சு: தமிழகத்துக்கு கூடுதல் ரேபிட் பரிசோதனைக் கருவிகள் வழங்கக் கோரிக்கை

 

தமிழகத்துக்கு அதிகமாக ரேபிட் பரிசோதனைக் கருவிகள வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி தொலைபேசியில் பேசும்போது கோரிக்கை வைத்தார்.

கரோனா வைரஸின் பரவல் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை கரோனாவுக்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,477 ஆக அதிகரித்துள்ளது

கரோனா வைரஸ் தொற்றை உறுதி செய்ய தற்போது பிசிஆர் பரிசோதனை நடத்தப்படுகிறது. இதற்குத் தேவையான பரிசோதனைக் கருவிகள் சீனா, சிங்கப்பூர், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

தமிழகத்தில் 17 அரசு மருத்துவமனைகள், 10 தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படுகிறது. பிசிஆர் கருவி மூலம் செய்யப்படும் இந்தப் பரிசோதனை முடிவுகள் வருவதற்கு 6 மணிநேரத்தில் இருந்து 2 நாட்கள் வரை ஆகிறது.

ரேபிட் பரிசோதனைக் கருவி மூலம் 30 நிமிடங்களில் முடிவுகளைத் தெரிந்துகொள்ள முடியும். இதையடுத்து, ரேபிட் கிட் மூலம் பரிசோதனைகளை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக சீனாவில் இருந்து தமிழக அரசு முதற்கட்டமாக 24 ஆயிரம் ரேபிட் பரிசோதனைக் கருவிகளை வாங்கியது. மத்திய அரசும் 12 ஆயிரம் துரிதப் பரிசோதனைக் கருவிகளை (ரேபிட் கிட்) தமிழகத்திற்கு வழங்கியுள்ளது.

முதல்கட்டமாக, சீனாவில் இருந்து 24 ஆயிரம் ரேபிட் பரிசோதனை கருவிகள் நேற்று முன்தினம் சென்னை வந்தன. இந்தக் கருவிகளை மருந்து கிடங்குக்கு எடுத்துச் சென்ற அதிகாரிகள், இரவோடு இரவாக தமிழகம் முழுவதும் 17 அரசு மருத்துவமனைகளுக்குப் பிரித்து அனுப்பினர்.

1587315400751.jpg

இந்நிலையில் தமிழகத்துக்கு அதிகமாக ரேபிட் பரிசோதனைக் கருவிகள வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி தொலைபேசியில் பேசும்போது கோரிக்கை வைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை சுமார் 7.30 மணி அளவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது தமிழகத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்துக் கேட்டறிந்தார்.

தமிழக முதல்வர் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து விளக்கமாகத் தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் அதிகமாக பரிசோதனை செய்ய வேண்டியுள்ளதால் எங்களுக்கு அதிகமாக ரேபிட் பரிசோதனைக் கருவிகள வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். பிரதமர் மோடியும் முதல்வரின் கோரிக்கையை ஏற்று ரேபிட் பரிசோதனைக் கருவிகளை வழங்குவதாகத் தெரிவித்தார்'' என்று குறிப்பிட்டுள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/550396-pm-modi-chief-minister-palanisamy-on-telephone-demands-additional-rapid-test-equipment-to-tamil-nadu-2.html

 

 

மாநில உத்தியோகபூர்வ மொழி - தமிழ் 
ஆனால் அரை ஆங்கில தலையங்கமும் சூப் தமிழும் கலந்து எழுதுகிற அளவுக்கு ஊடக கலா(விப)ச்சாரம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு  தமிழ் ஊடகங்களில் !

ரேபிட் - விரைவு 
டெஸ்ட் - பரிசோதனை 
ரேபிட் டெஸ்ட் உபகரணங்கள் - விரைவு பரிசோதனை உபகரணங்கள்
 

  • கருத்துக்கள உறவுகள்

தரமற்ற ரேபிட் கருவிகள் கொள்முதல்; பிரதமர் அலுவலகத்தில் குவிந்துள்ள அதிகாரப் பரவலால் சுகாதாரத்துறை தடுமாற்றம்: கே.எஸ்.அழகிரி விமர்சனம்

உலகத்தின் பல நாடுகள் சீனாவிடமிருந்து கொள்முதல் செய்யப்பட ரேபிட் டெஸ்ட் கருவிகளைத் திருப்பி அனுப்பியதை அறியாமல் அதே நிறுவனத்திடமிருந்து ரேபிட் டெஸ்ட் கருவிகளை இந்திய அரசு கொள்முதல் செய்தது ஏன்? கொள்முதல் செய்வதற்கு இந்திய சுகாதாரத்துறை பொறுப்பா? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பொறுப்பா? என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கை:

இந்தியாவில் கரோனா தொற்று கடுமையாக பாதிக்கப்பட்டதும் அதைப் பரிசோதனை செய்வதற்கு உரிய கருவிகளும், ஆய்வகங்களும் இல்லாத நிலை ஏற்பட்டது. நிதிநிலை அறிக்கையில் சுகாதாரத்துறைக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.8 சதவீதம் மட்டுமே மத்திய பாஜக அரசு நிதி ஒதுக்கியதால் பெருகிவரும் மக்கள் எண்ணிக்கையை ஈடுகட்டுகிற வகையில் மருத்துவர்களையோ, கட்டமைப்பு வசதிகளையோ பெருக்கிக்கொள்ள முடியவில்லை.

கரோனா தொற்றுநோயை துல்லியமாக சோதனை செய்து கண்டறிய போதிய பிசிஆர் ஆய்வகங்கள் இல்லாத நிலையில் பெருகிவரும் நோயாளிகளைப் பரிசோதிக்க முடியவில்லை. உலக நாடுகளிலேயே மிகக் குறைவான எண்ணிக்கையில் சோதனை செய்யும் நாடாக இந்தியா இருந்தது. இந்நிலையில் துரிதப் பரிசோதனைக் கருவி மூலம் அரை மணிநேரத்தில் கரோனா தொற்றை எதிர்கொள்ளக்கூடிய எதிர்ப்பு சக்தி உடலில் உள்ளதா என்பதை முதலில் கண்டறிந்துவிட்டு பிறகு பிசிஆர் சோதனை செய்யலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முடிவெடுத்தது.

அதன் ஒப்புதலின் பேரில் அரை மணிநேரத்தில் சோதனை செய்யக்கூடிய 7 லட்சம் துரித சோதனைக் கருவிகள் சீனாவில் உள்ள தனியார் நிறுவனத்திடமிருந்து இந்திய அரசு கொள்முதல் செய்தது. அதேபோல தமிழக அரசும் 4 லட்சம் கருவிகளுக்கு கொள்முதல் ஒப்பந்தம் போட்டு 24 ஆயிரம் கருவிகளை முதல் தவணையாகப் பெற்றுள்ளது. மத்திய அரசு மூலமாக 12 ஆயிரம் கருவிகள் தமிழகத்திற்கு கிடைத்தன.

இந்நிலையில் மத்திய அரசு வழங்கிய கருவிகளை ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை நோயாளிகளிடம் சோதனை செய்ததில் 5 சதவீதம்தான் சரியான முடிவு வெளிவந்தது. அந்தக் கருவியின் துல்லியத்தன்மை கேள்விக்குறியாக்கப்பட்டது. நீண்ட சோதனைகளுக்குப் பிறகு துரித பரிசோதனைக் கருவிகள் மூலம் துல்லியமாக சோதனைகளைச் செய்ய முடியவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் ராஜஸ்தான் அரசு முறையிட்டது.

இதைப்போல கேரளாவும், தமிழ்நாடும் கருவிகளின் துல்லியத்தன்மை குறித்து புகார் தெரிவித்துள்ளன. இதையொட்டி ரேபிட் டெஸ்ட் கருவி சோதனைகளை ஐ.சி.எம்.ஆர். இரண்டு நாட்களுக்குத் தடை செய்தது.

சீனாவிடமிருந்து இந்தியா ரேபிட் டெஸ்ட் கருவிகளை கொள்முதல் செய்ததைப் போல ஓரிரு மாதங்களுக்கு முன்பே ஸ்பெயின் நாடு 6 லட்சம் கருவிகளையும், செக்கோஸ்லோவாகியா 3 லட்சம் கருவிகளையும், பிரிட்டன் அரசு 1 லட்சம் கருவிகளையும் கொள்முதல் செய்தது. ஆனால் அவை நோயாளிகளின் சோதனைக்குத் தகுதியற்றவை என்று அறிந்த பிறகு சீனாவுக்கே திருப்பி அனுப்பிவிட்டன.

அதற்காக ஏற்கெனவே செலுத்திய பணத்தையும் அந்தந்த அரசுகள் திரும்பப் பெற்றுக்கொண்டன. இதுகுறித்த செய்திகள் ஊடகங்களில் பரவலாக வெளிவந்தன. இதை இந்திய அரசு அறியாதது வினோதமாக இருக்கிறது.

உலகத்தின் பல நாடுகள் சீனாவிடமிருந்து கொள்முதல் செய்யப்பட துரித சோதனைக் கருவிகளின் தரத்தை தெரிந்துகொண்டு திருப்பி அனுப்பியதை அறியாமல் அதே நிறுவனத்திடமிருந்து ரேபிட் டெஸ்ட் கருவிகளை இந்திய அரசு கொள்முதல் செய்தது ஏன் என்று தெரியவில்லை. இந்தக் கருவிகளை கொள்முதல் செய்வதற்கு இந்திய சுகாதாரத்துறை பொறுப்பா? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பொறுப்பா? என்பது புரியாத புதிராக உள்ளது.

ஆனால், பிரதமரின் அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள அதிகாரக்குவியலின் காரணமாக மத்திய சுகாதாரத்துறை எந்த முடிவுகளையும் தன்னிச்சையாக எடுக்க முடியவில்லை. சீன நாட்டிலுள்ள குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திடமிருந்து அதிக விலை கொடுத்து ரேபிட் டெஸ்ட் கருவிகள் மத்திய அரசு வாங்கியதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.

ஏனெனில் தரமும் துல்லியத்தன்மையும் மிக்க 75 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கருவிகளை சத்தீஸ்கர் மாநில அரசு இந்தியாவிலுள்ள தென்கொரியா நிறுவனத்திடமிருந்து ரூபாய் 337 விலைக்கு கொள்முதல் செய்துள்ளது. அந்தக் கருவிகளின் துல்லியத்தன்மையில் எந்த குறைபாடும் இல்லை.

ஆனால் இந்த நிறுவனத்திடம் கருவிகளை வாங்காமல் ரூபாய் 600 அதிக விலை கொடுத்து சீனாவில் உள்ள தனியார் நிறுவனத்திடம் தரம் குறைந்த ரேபிட் டெஸ்ட் கருவிகளை இந்திய அரசு கொள்முதல் செய்தது ஏன்? இதற்கான விளக்கத்தை நாட்டுமக்களுக்கு வழங்கவேண்டிய பெரும் பொறுப்பு பிரதமர் மோடிக்கும், சுகாதாரத்துறைக்கும் இருக்கிறது.

எனவே, கரோனா நோயாளிகளை தரம் குறைந்த துல்லியமாக சோதிக்க முடியாத துரித சோதனைக் கருவிகளைப் பயன்படுத்துவது குறித்து உரிய ஆலோசனைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மத்திய, மாநில அரசுகளுக்கு வழங்கவேண்டும். இந்த உபகரணங்கள் மூலம் நோயாளிகளை துல்லியமாக சோதனை செய்யமுடியுமா என்பதை ஆய்வு செய்ய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கொண்ட குழுவை அமைத்து ஆய்வு செய்யவேண்டும்.

அத்தகைய ஆய்வுகளின் முடிவுகள் வரும் வரை ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலமாக நோயாளிகளைப் பரிசோதிப்பதை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன்”.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/551136-procurement-of-non-quality-rapid-instruments-decentralized-power-in-the-prime-minister-s-office-3.html

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சோதனை கருவிகள் குறித்து புகார்; இந்தியாவுடன் விசாரணைக்கு ஒத்துழைக்க தயார் - சீன நிறுவனங்கள் அறிவிப்பு

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட துரித சோதனை கருவிகள் துல்லியமாக இல்லை என்ற புகார் இங்கு எழுந்துள்ளது. இது குறித்த விசாரணையில் இந்தியாவுடன் ஒத்துழைக்க தயார் என அவற்றை ஏற்றுமதி செய்த சீன நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
 
வளர்ந்த உலக நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடுகையில் இங்கு கொரோனா வைரஸ் தாக்கத்தின் அளவு குறைவாகவே இருக்கிறது. அதே நேரத்தில் இங்கு பரிசோதனை வசதிகளும் குறைவாகவே இருக்கின்றன. இதனால் அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு பரிசோதனை நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
 
அந்த வகையில் விரைவான முதல் கட்ட சோதனைக்கு உதவுகிற ரேபிட் டெஸ்ட் கிட் என்று அழைக்கப்படுகிற 5½ லட்சம் துரித சோதனை கருவிகளை சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்தது.
 
சீனாவின் குவாங்சோ வோண்ட்போ பயோடெக் நிறுவனம் 3 லட்சம் கருவிகளையும், லிவ்சான் டயாக்னஸ்டிக்ஸ் நிறுவனம் 2½ லட்சம் கருவிகளையும் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்தன.
 
ஆனால் இந்தக் கருவிகள் துல்லியமாக செயல்படவில்லை, அவை முழுமையாக செயல்படவும் இல்லை என பரவலாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து துரித சோதனை கருவிகளை பயன்படுத்துவதை நிறுத்தி வைக்குமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஐ.சி.எம்.ஆர். கேட்டுக்கொண்டது.
 
இந்த நிலையில்தான் தாங்கள் வினியோகம் செய்த துரித சோதனை கருவிகளின் தரம் தொடர்பாக இந்திய விசாரணை அமைப்புகளுடன் ஒத்துழைக்க தயார் என சீன நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
குவாங்சோ வோண்ட்போ பயோடெக் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
 
70-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு துரித சோதனை கருவிகளை நாங்கள் ஏற்றுமதி செய்துள்ளோம். எங்கள் தயாரிப்பை புனே தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் மூலம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மதிப்பிட்டு ஏற்றுக்கொண்டது.
 
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணியில், எங்கள் நிறுவனம் ஒவ்வொரு நாட்டின் தொடர்புடைய சுகாதார அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைக்கிறது. இநதியாவுடனும் ஒத்துழைக்க தயார். எங்கள் தயாரிப்புகளின் உணர்திறன் மற்றும் தனித்தன்மை பற்றி பல்வேறு சரிபார்ப்புகளை நாடுகள் மேற்கொள்கின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
மற்றொரு நிறுவனமான லிவ்சான் டயாக்னஸ்டிக்ஸ் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
 
எங்கள் துரித சோதனை கருவிகளின் முடிவுகள் துல்லியமாக இல்லை என்று இந்தியாவில் இருந்து வந்துள்ள புகார்களைக் கண்டு அதிர்ச்சி அடைகிறோம். இதில் நாங்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளோம். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையின் விசாரணைக்கு நாங்கள் ஒத்துழைக்க விருப்பம் கொண்டுள்ளோம். எங்கள் கருவிகளைப் பொறுத்தமட்டில் அவற்றை 2 டிகிரி முதல் 30 டிகிரி செல்சியசுக்குள் வெப்ப நிலை உள்ள இடத்தில் வைக்க வேண்டும். அவை உறையக்கூடாது. கருவிகளை வைக்கிற அறையின் வெப்ப நிலை மிக அதிகளவில் இருந்தால், அது பரிசோதனையின் துல்லியத்தில் பாதிப்பை உண்டாக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
இந்த அறிக்கைகளை டெல்லியில் உள்ள சீன தூதரகம் நேற்று வெளியிட்டுள்ளது.
 

 

  • கருத்துக்கள உறவுகள்

60% கொமிசன் கேட்டிருப்பார்கள். 😜

இதில் தரத்தை எப்படி எதிர்பார்க்கலாம் 😜😜

  • கருத்துக்கள உறவுகள்
On 26/4/2020 at 10:07, Kapithan said:

60% கொமிசன் கேட்டிருப்பார்கள். 😜

இதில் தரத்தை எப்படி எதிர்பார்க்கலாம் 😜😜

எப்படி இப்படி யோசித்தீர்கள் 😃

துல்லியம் இல்லாத சீன கொரோனா சோதனை கருவிகளுக்கு மத்திய அரசு இரண்டு மடங்கு விலை கொடுத்ததா?
 
துல்லியம் இல்லாத சீன கொரோனா சோதனை கருவிகளுக்கு மத்திய அரசு இரண்டு மடங்கு விலை கொடுத்ததா?
 
 
துல்லியம் இல்லாத சீன கொரோனா சோதனை கருவிகளை மத்திய அரசு இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்கியதா? இது குறித்து டெல்லி ஐகோர்ட் என்ன உத்தரவிட்டது?
பதிவு: ஏப்ரல் 27,  2020 11:57 AM
புதுடெல்லி:
 
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்து உள்ளது. கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 872 ஆக உயர்ந்து உள்ளது.
 
கொரோனா பரிசோதனையை விரைவாக நடத்த சீனாவிடம் இருந்து 30 லட்சம் ரேபிட் கிட்டுகளை இந்தியா வாங்கியது. அந்த ரேபிட் கிட்கள் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் சீனாவின்ரேபிட் கிட்டுகளில் பரிசோதனை முடிவுகள் துள்ளியம் இல்லை என புகார் எழுந்தது. இதை தொடர்ந்து  அந்த சோதனைகளை நிறுத்திவைக்க இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டது.
 
சீனாவில் இருந்து வாங்கிய ரேபிட் கிட்டுகளுக்கு இந்திய இரண்டு மடங்கு பணம் அளித்து உள்ளது என தற்போது தெரியவந்து உள்ளது. கொரோனா சோதனை கருவிகள் இந்திய விநியோகஸ்தரால் அதிக விலைக்கு அரசிற்கு விற்கப்பட்டு  உள்ளது.
 
கொரோனா பரிசோதனை கருவி விநியோகஸ்தருக்கும் இறக்குமதியாளருக்கும் இடையிலான சட்ட மோதலில் இருந்து இது வெளிப்பட்டுள்ளது. இந்த வழக்கு டெல்லி ஐகோர்ட்டிற்கு சென்று உள்ளது என என்டிடிவி செய்தி வெளியிட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
 
மத்திய அரசு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) மூலம் மார்ச் 27 அன்று சீன நிறுவனமான வோண்ட்ஃபோவிடம் இருந்து ஐந்து லட்சம் விரைவான ஆன்டிபாடி சோதனை கருவிகளை ஆர்டர் செய்திருந்தது.
 
ஐ.சி.எம்.ஆர் மற்றும் ஆர்க் பார்மாசூட்டிகல்ஸ் இடையே கையொப்பமிடப்பட்ட கொள்முதல் உத்தரவு நகலை என்டிடிவி வெளியிட்டு உள்ளது.
 
 
ஏப்ரல் 16 ம் தேதி, சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி, விரைவான கொரோனாஆன்டிபாடி சோதனை கருவிகள் மற்றும் ஆர்.என்.ஏ பிரித்தெடுத்தல் கருவிகள் உட்பட 650,000 கிட்டுகள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டதாக டுவீட் செய்துள்ளார்.
 
 
சோதனைக் கருவிகளை இறக்குமதியாளர் மேட்ரிக்ஸ் சீனாவிலிருந்து ரூ.245 க்கு வாங்கி உள்ளார். ஆயினும் கூட, விநியோகஸ்தர்களான ரியல் மெட்டபாலிக்ஸ் மற்றும் ஆர்க் பார்மாசூட்டிகல்ஸ் ஆகியவை ஒரு கிட்டை அரசாங்கத்திற்கு தலா 600 ரூபாய்க்கு விற்று உள்ளன.
 
 
அதே இறக்குமதியாளரான மேட்ரிக்ஸிடமிருந்து மற்றொரு விநியோகஸ்தர் ஷான் பயோடெக் மூலம் தமிழக அரசு சீன கிட்களை தலா ரூ .600 க்கு வாங்கியபோது சிக்கல் தொடங்கியது. தமிழகத்திற்கும் ஷான் பயோடெக்கிற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட கொள்முதல் ஆணையை என்டிடிவி வெளியிட்டு உள்ளது.
 
202004271157262761_nictamilnadu._L_styvp
 
மேட்ரிக்ஸ் இறக்குமதி செய்த கருவிகளுக்கான பிரத்யேக விநியோகஸ்தர் என்று கூறி ரியல் மெட்டபாலிக்ஸ் டெல்லி ஐகோர்ட் சென்றது.ஒப்பந்தத்தை மீறி தமிழகத்திற்கு மற்றொரு விநியோகஸ்தரை (ஷான் பயோடெக்) ஈடுபடுத்தியதாக குற்றம் சாட்டி உள்ளது.
 
இது குறித்து விசாரணை நடத்திய டெல்லி ஐகோர்ட் விலை உயர்வு அதிகம் இருப்பதைக் கண்டறிந்து, ஒரு கிட்டின் விலையை ரூ .400 ஆகக் குறைக்க உத்தரவிட்டது.
 

"கடந்த ஒரு மாதமாக பொருளாதாரம் கிட்டத்தட்ட ஸ்தம்பித்து நிற்கிறது. கொரோனா தடிப்பு போரில் ஈடுபடும் ஏஜென்சிகள் மக்களை பாதுகாப்பதற்கு உறுதியளிக்க வேண்டும். மக்களின் உடல்நலம், நாடு முழுவதும் விரிவான சோதனைகளை மேற்கொள்வதற்காக, மிகக் குறைந்த செலவில் அதிக கருவிகள் / சோதனைகள் கிடைக்க வேண்டும். பொது நலன் தனியார் ஆதாயத்தை விட அதிகமாக இருக்க வேண்டும். கட்சிகளுக்கு இடையிலான லிஸ் (சர்ச்சை) பெரிய பொது நன்மைக்கு வழிவகுக்க வேண்டும். மேற்கூறியவற்றைப் பார்க்கும்போது, கிட்ஸ் / டெஸ்ட் ஜிஎஸ்டி உட்பட ரூ .400 க்கு மேல் இல்லாத விலையில் விற்கப்பட வேண்டும், ”என்று உத்தரவிட்டது

https://www.dailythanthi.com/News/TopNews/2020/04/27115726/India-Overpaid-For-Chinese-COVID19-Test-Kits-What.vpf

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.