Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா வைரசின் மோசமான விடயங்கள் இனிமேல்தான் நிகழப்போகின்றன- உலக சுகாதார ஸ்தாபனம்

Featured Replies

கொரோனா வைரஸ் நெருக்கடியின் மிக மோசமான விடயங்கள் இனிமேல்தான் இடம்பெறப்போகின்றன என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்டிரோஸ் அட்ஹனோம் கெப்ரெயேசஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எங்களை நம்புங்கள் ,மோசமான விடயங்கள் இனிமேல் தான் இடம்பெறப்போகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

இது இன்னமும் பலர் புரிந்துகொள்ளாத வைரஸ் என தெரிவித்துள்ள அவர் இந்த துயரத்தினை தடுத்துநிறுத்வோம் என குறிப்பிட்டுள்ளார்
இதுஆபத்தான கூட்டு,நூறுவருடங்களிற்கு பின்னர் இது மீண்டும் இடமபெறுகின்றது என தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கொரோனா வைரசினை 1918 இல் மில்லியன் கணக்கானவர்களை பலிகொண்ட ஸ்பானிஸ் காய்ச்சலுடன் ஒப்பிட்டுள்ளார்.

ஆனால் தற்போது எங்களிடம் தொழில்நுட்பம் உள்ளது ,எங்களால் இந்த பேரழிவை தடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைரசிற்கு எதிரான போராட்டத்தை தொடர்வதற்கும்  உயிரிழப்புகளை தடுப்பதற்கும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் உலகளாவிய ஒற்றுமை மற்றும் தேசிய ஒற்றுமையையும் அவசியம் எனவலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச சமூகம் வைரசினை மனித குலத்திற்கு எதிரான பொது எதிரி என கருதவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/80407

  • தொடங்கியவர்
12 minutes ago, ampanai said:

எங்களை நம்புங்கள் ,மோசமான விடயங்கள் இனிமேல் தான் இடம்பெறப்போகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

இது இன்னமும் பலர் புரிந்துகொள்ளாத வைரஸ் என தெரிவித்துள்ள அவர் இந்த துயரத்தினை தடுத்துநிறுத்வோம் என குறிப்பிட்டுள்ளார்

"பலர் புரிந்துகொள்ளாத வைரஸ்" , "எங்களை நம்புங்கள்"  - இதைத்தான் மத குருமார்களும் சொல்கிறார்கள் 🙂 

 

  • கருத்துக்கள உறவுகள்

சைனாகாரன்  அவனுடைய விடுமுறை முடிந்து தொத்து  நோயுடன்  உலகமெங்கும் போய்  சேர்ந்த பின் ஆசுவாசமாய் பண்டமிக் என்று அறிவித்தவர்கள்   இந்த நோயை யார் உருவாக்கினார்கள் என்பதுவோ அல்லது பரப்பினார்கள் என்பதுவோ பிரச்சனை அல்ல சரியான நேரத்தில் முவுனமாக இருந்தது நவீன  மனித குலத்துக்கு செய்த தீங்கு இவர்களால்  நிகழ்த்தப்பட்டு உள்ளது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
50 minutes ago, ampanai said:

ஆனால் தற்போது எங்களிடம் தொழில்நுட்பம் உள்ளது ,எங்களால் இந்த பேரழிவை தடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மண்ணாங்கட்டி.
இப்பவும் ஆயிரக்கணக்கிலை போய்க்கொண்டிருக்கு.....இன்னும் மருந்து கண்டு பிடிக்கேல்லை......

இதுக்கை செவ்வாய்க்கிரகத்திலை தண்ணி இருக்கோ எண்டு ஆராய்ச்சி வேறை......விண்வெளியிலை கீரைப்புட்டும் அவிக்கப்போயினமாம்.😁


 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

..

இதுக்கை செவ்வாய்க்கிரகத்திலை தண்ணி இருக்கோ எண்டு ஆராய்ச்சி வேறை......விண்வெளியிலை கீரைப்புட்டும் அவிக்கப்போயினமாம்.😁


 

மீன் குழம்பும் சேர்த்து செய்யினமாம்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.