Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் பொக்கிசம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழும் கிரந்தமும் சேர்ந்து மலையாளம் உருவான காலத்தில்தான் 
துளு மொழியும் தமிழும் கிரந்தமும் கலந்துதான் உருவானது 

  • Replies 204
  • Views 26.2k
  • Created
  • Last Reply

மலையாளம் = மலை + ஆழம்
அதாவது, மலை அடிவாரம், மலையோரம், மலைச்சரிவு என்பதாகும்.

மலை, ஆழம் என்பன தமிழ்ச்சொற்கள்.  இவற்றை பழந்தமிழ், புதுத்தமிழ் எங்கும் காணலாம். 

மலையாளம் என்று ஒரு இடத் திற்குப் பெயரிட முதலே இச் சொற்கள் இருந்த படியால்தான், அவ்விடத் திற்கு இவ்விரு சொற்களையும் பாவித்து பெயர் வந்தது.

சொல் வந்தது முன்னம்,  இடம் கண்டது பின்னர், பெயரிட் டது அதற்குப் பின்னரேதான்.

பெயர் வந்தது பிறகே. பின்னர் அது வேறு நாடாகியது அதற்கும் வெகு பிறகே.

மலையாள மொழி வேறு நடையிலிருந்திருக்கும், பிரதேச வழக்கு மொழி.

இதை வைத்து, வந்தேறிகளான களப்பிரர் காலத் து நம்பூதிரிகள் பிரித்தாள பாவித்தார்கள். கருணாவை பிரித்தது போல.
நம்பூதிரிகள் பிரித்தாள உருவாக்கியதே கன்னடம், தெலுங்கு, மலயாளம், சிங்களம். அது மட்டுமல்ல, வடக்கே குஜராத்தி, பஞ்சாபி, வங்காளம் போன்றவையும் இப்படியேதான் உருவானது, ஆனால், அது நம்பூதிரிகளாலல்ல.  அது, சிந்துவெளியை அழித்த பின்னர் படிப்படியாக நடந்தது.

1 hour ago, Maruthankerny said:

தமிழும் கிரந்தமும் சேர்ந்து மலையாளம் உருவான காலத்தில்தான் 
துளு மொழியும் தமிழும் கிரந்தமும் கலந்துதான் உருவானது 

கிரந்தம் என்பது ஆதித் தமிழின் ஒரு பரிணாமமே.

துளு என்பதும் ஆதித் தமிழின் ஒரு வடிவமே. அதனால் தான் அங்கு தமிழ் போன்ற சொற்கள் உள் ளன.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Inkirunthae Vanthaan said:

மலையாளம் = மலை + ஆழம்
அதாவது, மலை அடிவாரம், மலையோரம், மலைச்சரிவு என்பதாகும்.

மலை, ஆழம் என்பன தமிழ்ச்சொற்கள்.  இவற்றை பழந்தமிழ், புதுத்தமிழ் எங்கும் காணலாம். 

மலையாளம் என்று ஒரு இடத் திற்குப் பெயரிட முதலே இச் சொற்கள் இருந்த படியால்தான், அவ்விடத் திற்கு இவ்விரு சொற்களையும் பாவித்து பெயர் வந்தது.

சொல் வந்தது முன்னம்,  இடம் கண்டது பின்னர், பெயரிட் டது அதற்குப் பின்னரேதான்.

பெயர் வந்தது பிறகே. பின்னர் அது வேறு நாடாகியது அதற்கும் வெகு பிறகே.

மலையாள மொழி வேறு நடையிலிருந்திருக்கும், பிரதேச வழக்கு மொழி.

இதை வைத்து, வந்தேறிகளான களப்பிரர் காலத் து நம்பூதிரிகள் பிரித்தாள பாவித்தார்கள். கருணாவை பிரித்தது போல.
நம்பூதிரிகள் பிரித்தாள உருவாக்கியதே கன்னடம், தெலுங்கு, மலயாளம், சிங்களம். அது மட்டுமல்ல, வடக்கே குஜராத்தி, பஞ்சாபி, வங்காளம் போன்றவையும் இப்படியேதான் உருவானது, ஆனால், அது நம்பூதிரிகளாலல்ல.  அது, சிந்துவெளியை அழித்த பின்னர் படிப்படியாக நடந்தது.

கிரந்தம் என்பது ஆதித் தமிழின் ஒரு பரிணாமமே.

துளு என்பதும் ஆதித் தமிழின் ஒரு வடிவமே. அதனால் தான் அங்கு தமிழ் போன்ற சொற்கள் உள் ளன.

122617-16-Sanskrit-Linguistics-Language-Hinduism.gif

மேலே இருப்பது சமஸ்கிரதம் தமிழ் எழுத்துக்கள் சரிந்து இருக்கிறது 

Modern%2Bgrantha%2Bconsonants.jpg

மேலே இருப்பது கிரந்தம்  தமிழ் எழுத்தும் வட எழுத்தும் கலந்து இருக்கிறது 
இதுதான் பல்லவர்களின் ஏடுகளிலும் கல்வெட்டுகளிலும் இருக்கிறது 

46fddd9d32778b18a5aef47791c349ce.gif

இது தற்போதைய கம்போடியா  கெமர்களின் மொழி 
தமிழ் எழுத்து வடிவம் ஆங்காங்கே சிதறி இருக்கிறது 
ய வரிசை ல வரிசை மாறாமல் இருக்கிறது 

Tigalari-sanskrit-manuscript.jpg

மேலே இருப்பது ஒரு துளு மொழி ஓலை 

  • கருத்துக்கள உறவுகள்

புறநானுற்று காலத்து ஓலைகளில் வட எழுத்து இல்லை 
கிரந்தம் கிறிஸ்துவுக்கு பின்னான காலத்தில்தான் தோன்றி இருக்கவேண்டும் 

ஒவையாரின் ஏடுகளில் தனி தமிழ்தான் உண்டு 
இரண்டாம் ஒவையரின் காலம் ஆதி சோழர்கள் காலம் சங்கம் வைத்து  தமிழ் வளர்த்த காலம் 

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்திசூடி 

தமிழ் எழுத்து தமிழ் வாக்கியம் English Translation
அறம் செய்ய விரும்பு Intend to do right deeds
ஆறுவது சினம் Control Anger
இயல்வது கரவேல் Help others as much as you can
ஈவது விலக்கேல் Do not stop or avoid charitable deeds
உடையது விளம்பேல் Do not brag about your possessions - wealth, skills, knowledge, etc.
ஊக்கமது கைவிடேல் Never lose hope or motivation
எண் எழுத்து இகழேல் Do not despise numbers and letters (maths; or arts, science, and literature)
ஏற்பது இகழ்ச்சி Begging is disgraceful
ஐயமிட்டு உண் Share with the needy before you eat
ஒப்புரவு ஒழுகு Adapt to your changing world
ஓதுவது ஒழியேல் Never stop learning
ஒள ஒளவியம் பேசேல் Do not speak ill about others (esp. behind their back)
அஃகம் சுருக்கேல் Do not hamper development or creativity
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி,மருது,எங்கிருந்தோ வந்தான்

முதலில் மூவருக்கும் மிகவும் நன்றி.
இவ்வளவு துல்லியமான தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
ஒரு தடவை படிக்கும் போது தலையை சுற்றுகிறது.எங்கிருந்து இவ்வளவு தரவுகளையும் எடுத்து இணைக்கிறீர்கள் என ஆச்சரியமாக இருக்கிறது.
நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி  ...இன்னும் பார்க்கவில்லை ...நேரம் கிடைக்கும் போது பார்க்கிறேன் 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

                               2049 இல் உலகை ஆளப் போகும் சீனா.

ஐயா மருது, சமஸ்கிர்தம் தோன்றியதே கி.பி தான். அசோகனின் கல்தூணில் (Ashoka’s Pillar) சமஸ்கிர்தம் இல்லை. அதாவது அசோகனின் காலத்தில் சமஸ்கிர்தம் தோன்றவில்லை. தூணில், பிராமி( தமிழ் பிராமி), பண்டைய கிரேக்கம், அறமேயம் (Aramaic) என்பவைதானுள்ளன.

பண்டைய கிரேக்கம், அறமேயம் (Aramaic) என்பவைதான் அக்காலத்து சர்வதேச வியாபார மொழிகள். பிராமி( தமிழ் பிராமி) அன்றைய இந்தியாவின் உத்தியோக மொழி (Linqua Franka – a bridge language). அதையே அசோகனும் கல்லில் பொறித்தார்.

Vedic Sanskrit (c. 1500 – 500 BCE) என்று அவர்கள் சொல்வது அந்தக் காலத்தில் இந்தியா முழுவதும் பரவலாகப் பேசப்பட்ட, சிந்துவெளிக் காலத்திலிருந்து வளர்ச்சியடைந்த பழந்தமிழின் பிரதேச வடிவமே. Vedic Sanskrit என்னும் சொல் வெகு கிட்டத்தில் உருவாக்கப்பட்ட சொல்லே. தற்போது ஹிந்தி உருவாக்கப்பட்டது போலவே, அப்போதைய ஆட்சியாளர்களால் சமஸ்கிர்தமும் உருவாக்கப்பட் டது. தேவநாகரி எழுத்து ௭ழாம் நூற்றாண்டளவில்தான் பாவனைக்கே வந்தது.

நீங்கள் சொல்லும் எழுத்துக்கள் உருவாகப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முதலே பேச்சுமொழி பல கட்டங்களாக உருவானது. தமிழ்ச்ச்ங்கங்களே சான்று. தமிழ்ச்ச்ங்கங்களின் காலத்தை, தமக்குச் சார்பாகக் கணித்தவர்களும் அவர்களே.  

நீங்கள் சொல்லும் தமிழ், நாங்கள் பேசும் தமிழ் - சொல்லமைப்பு தொல்காப்பியத்துக்குப் பிந்திய தமிழ் சொல்லமைப்பு.

உதாரணத்திற்கு, தொல்காப்பியம் கல்வீடு என்றால், களிமண் வீடு, ஓலைக் குடிசை, தழைகுழை வீடு, கற்குகை, மலை மேல் வெறுந்தரையில் வீடு என்பவை எங்கே, யாருடயவை. தொல்காப்பியம் என்பது பரிணாமத்தின் உச்சியின் ஒரு கட்டமே.

நீங்கள் கொடுத்த எழுத்துக்கள் (script) வெறும் 2000 ஆண்டுக்குட்பட்டவையே.

மொழி ஆய்வில் இரண்டு வகை உண்டு (கூடவும் இருக்கலாம்). சொல்லாய்வு ஒன்று, எழுத்தாய்வு  (script) மற்றது, இரண்டையும் வேறு வேறாகவே ஆய்வு செய்ய வேண்டும்.

தேவநாகரி எழுத்து ௭ழாம் நூற்றாண்டளவில்தான் பாவனைக்கே வந்தது. அதன்படி பார்த்தால் தமிழ் எழுத்தின் ஏதோ ஒரு வடிவத்திலிருந்தே தேவநாகரி உருவாக்கப்பட்டிருக்க வேண்டும், வட்டெழுத்து உருக்கப்பட்டது போல, என்பது எனது கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Inkirunthae Vanthaan said:

இதைத்தானே நானும் எழுதி இருக்கிறேன்?

தொல்காப்பிய காலத்தில் அதுக்கு ஈடாக எந்த மொழியும் 
இன்னமும் வளர்ச்சி பெறவில்லை என்பதுக்கு யாரிடமும் 
எந்த மொழியிலும் இன்னமும் எந்த சான்றும் இல்லை.

இதில் இனொன்றையும் பார்க்க வேண்டும் 
தொல்காப்பியத்துக்கு பல காலம் முந்தி  அகத்தியம் இருந்து இருக்கிறது 
அகத்தியம் முற்றாக அழிந்துவிட்டது ... அல்லது வந்தேறு ஆரிய பார்ப்பனனால் 
அழிக்கப்பட்டவைகளில் அதுவும் ஒன்றாகி விட்டது. 
 
5 hours ago, Maruthankerny said:

ஐயா, உங்களை ஆதரித்தே எழுதினேன்.
நல்ல தரவுகளை இணைத்துள்ளீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Maruthankerny said:

46 minutes ago, Inkirunthae Vanthaan said:

ஐயா, உங்களை ஆதரித்தே எழுதினேன்.
நல்ல தரவுகளை இணைத்துள்ளீர்கள்.

உங்கள் இருவரிடமும் ஒரு கேள்வி....

கறி தமிழருடையது என்பது தெளிவு.

கறி என்ற சொல், தமிழ் இலக்கியத்தில் புறநானூற்றில் உள்ளது. யவனர்கள் கப்பல்கள் 'மதுவுடன் வந்து கறியுடன் போம்' என்று உள்ளது.

வேறு ஒரு இலக்கியத்தில் கறிவேல்பிலை குறித்து சொல்கின்றது. 'கறிவேல்பிலை கலந்து சமைத்த ஊன்' என்று வருகிறது. (இலக்கியத்தின் பெயர் மறந்து விட்டது).

எனது கேள்வி, கறி என்ற சொல், புறநூறுக்கு முன்னர் வந்த தொல்காப்பியம் போன்ற ஏதாவது பழம் தமிழ் நூல்களில் உள்ளதா என்பதே? 

திருக்குறளில், ஆத்திசூடியில் உள்ளதோ தெரியவில்லை. (நான் முழுமையாக படிக்கவில்லை) ஆனாலும் வள்ளுவர், உணவளித்த வாசுகி குறித்து சொல்லும் போது, நூல், ஊசியுடன் இருப்பார் என்று சொல்கிறது.... கறி குறித்து சொன்னதாக தெரியவில்லை...

உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் பகிருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழ் பொக்கிசம்."  என்ற தலைப்பை பதிந்த... ஈழப்பிரியனுக்கு நன்றி.
இந்தத் தலைப்பில்... யாழ்.கள உறுப்பினர்களின் மிக அருமையான பதிவுகள் உள்ளன.
அவை.. பல எமக்கு தெரியாத புதிய தகவல்களாகவும், 
எமது முன்னோர் பற்றிய சான்றுகளையும் அறியக் கூடியதாக உள்ளது.

இப்படி ஒரு தலைப்பு, "செய்தி திரட்டி" பகுதியில் இருப்பது, 
எனக்கு உசிதமாக தெரியவில்லை.
அதனை.... "பொங்கு தமிழ்" பகுதிக்கு நகர்த்தினால், 
சிறப்பாக... இருக்கும், என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Nathamuni said:

உங்கள் இருவரிடமும் ஒரு கேள்வி....

கறி தமிழருடையது என்பது தெளிவு.

கறி என்ற சொல், தமிழ் இலக்கியத்தில் புறநானூற்றில் உள்ளது. யவனர்கள் கப்பல்கள் 'மதுவுடன் வந்து கறியுடன் போம்' என்று உள்ளது.

வேறு ஒரு இலக்கியத்தில் கறிவேல்பிலை குறித்து சொல்கின்றது. 'கறிவேல்பிலை கலந்து சமைத்த ஊன்' என்று வருகிறது. (இலக்கியத்தின் பெயர் மறந்து விட்டது).

எனது கேள்வி, கறி என்ற சொல், புறநூறுக்கு முன்னர் வந்த தொல்காப்பியம் போன்ற ஏதாவது பழம் தமிழ் நூல்களில் உள்ளதா என்பதே? 

திருக்குறளில், ஆத்திசூடியில் உள்ளதோ தெரியவில்லை. (நான் முழுமையாக படிக்கவில்லை) ஆனாலும் வள்ளுவர், உணவளித்த வாசுகி குறித்து சொல்லும் போது, நூல், ஊசியுடன் இருப்பார் என்று சொல்கிறது.... கறி குறித்து சொன்னதாக தெரியவில்லை...

உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் பகிருங்கள்.

கறி என்பது தமிழ் சொல்லு இல்லை என்றும் 
அது பின்னாளில் தமிழில் வந்து கலந்தது என்றும் 
நான் முன்பு ஒருமுறை எங்கோ வாசித்து இருக்கிறேன் 
(கறி என்பதே தமிழ் இல்லை என்றும் "றி" தமிழ் உச்சரிப்பு இல்லை என்றும் அதன் வாதம் இருந்தது. ஆனால் பன்றி எப்போதோ தோன்றிய தமிழ் சொல்)  

புறநானுற்றில் இப்படி இருப்பதே நீங்கள் இணைத்த பின்புதான் 
நான் தெரிந்து கொள்கிறேன் 

துரதிஷ்டவசமாக நாம் பல ஆதாரமற்ற பொய்களை 
காலம் காலமாக நம்பி வந்து இருக்கிறோம் 
இப்போதான் ஓரளவு என்றாலும் எமக்கு வேண்டியதை தேடுவதை 
கண்டறிந்து வாசிக்க கூடியதாக இருக்கிறது.

இது பற்றி இனிதான் தேடுதல் செய்ய வேண்டும். 

மருதர்,

பறி, உறி, ஊறி, முறி, எறி, ஏறி என்று பல சொற்கள் உள்ளனவே.... எப்படி அந்த சந்தேகம் வந்தது? 

கறி தமிழ் சொல் என்பது oxford dictionary குறிக்கிறது. ஆகவே அதில் தடுமாறுதல் இல்லை.

எமது கறியை வட இந்தியர்கள், பெங்காலிகள், பாகிஸ்தானிகள் உரிமை கொண்டாடும் கொடுமை..... ரத்தம் கொதிக்கிறது.

இந்த லிங்கில் சில வெள்ளயர்களும், வட இந்தியர்களும் பண்ணும் அலம்பறைகளை பாருங்கள்.

https://www.quora.com/Is-curry-a-British-invention

இவர்கள் பலர் ஐரோப்பியர் காலத்துடன், அதுவும் பிரிட்டிஷ்காரர் தான் எங்களது கறியை, நாகரிக்கப்படுத்தியதாக கதை அளந்து கொண்டுள்ளனர்... 

இவர்களுக்கு தெரியாத ஒரு விடயம், 2000 ஆண்டுகள் முந்திய யவனர்கள் - தமிழர்கள் - சீனர்கள் வியாபார தொடர்பு.

யவனர்கள் என்று பழம் தமிழ் இலக்கியங்கள் குறிப்பது வெள்ளை தோல் மனிதர்களை... இது யூதர்கள், ரோமர்கள், கிரேக்கர்கள்களை குறிக்கும். அரபிகளை சோனகர் என்றே அழைத்தனர். வட இந்தியாவில் துலுக்கர்கள் என்பர் (துருக்கியர்கள் மருவி துலுக்கர் ஆனது)

இன்னும் ஆர்வமூட்டும் விடயம், கறுப்பு யவனர்கள் என்று பழம் தமிழ் இலக்கியங்கள் குறிப்பது கிழக்காபிரிக்காவில் இருந்து வந்த கறுப்பர்களை என தமிழ் இலக்கிய அறிஞர்கள் கருதுகின்றனர்.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

கறி தமிழ் சொல் என்பது oxford dictionary குறிக்கிறது. ஆகவே அதில் தடுமாறுதல் இல்லை.

எமது கறியை வட இந்தியர்கள், பெங்காலிகள், பாகிஸ்தானிகள் உரிமை கொண்டாடும் கொடுமை..... ரத்தம் கொதிக்கிறது.

கறி எப்படி ஆங்கிலத்தில் வந்தது?

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஈழப்பிரியன் said:

கறி எப்படி ஆங்கிலத்தில் வந்தது?

oxford அகராதியில் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.

Curry a Tamil word, ('kari)' came into English language via Portuguese.

இந்த போர்த்துக்கேயர் நம்ம கஞ்சியை congee என்றும் கொண்டுபோய் சேர்த்துள்ளனர்.

அதுமட்டுமா, பப்படம், மொளக்குத்தண்ணி, ரசம்.... கட்டுமரம்....

நாம வெள்ளி பார்த்துக் கொண்டிருக்க.... கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து UK வந்த குஜராத்தி, பதக் என்பான், கறி பேஸ்ட் செய்து 400 மில்லியனுக்கு உலகம் முழுக்க விக்கிறான்.

மெட்ராஸ் கறி பவுடர் என்ற கருமாந்திரத்தினை அவனே வேறு ஆள் வைத்து தரமின்றி செய்து, அதிலும் பார்க்க கறி பேஸ்ட் அருமையானது எண்டு வியாபாரம் செய்கிறான்...

மிச்சத்தை பெருமாள் சொல்லுவார்.
 
Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

                                        INDIA 4 SALE

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

                          வரப் போகிறது செயற்கை இறைச்சி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

                                 சீனா ரசியா கூட்டணி தயார்.

On 26/4/2020 at 23:10, பையன்26 said:

நானும் இவ‌ரின் காணொளிக‌ள் பார்த்து இருக்கிறேன் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா / இவ‌ர் சொல்லுவ‌து எல்லாம் ந‌டைமுறைக்கு வ‌ரும் என்று ந‌ம்ப‌ வேண்டாம் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 😉

வணக்கம் பையா
இவரை நம்ப வேண்டும் என்று சொல்லவில்லை.இவரும் தானே யோசித்து  எதுவும் சொல்லவில்லை.
உலக பத்திரிகைகள் இணைய தளங்களில் வரும் செய்திகளை உடனே தொகுத்து ஆதாரத்துடன் தருகிறார்.
நன்றி பையா. 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

                     ஐந்து கண்களுக்கு கிடைத்தது ஆதாரம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

             மிக விரைவில் விண்வெளியில் 12000 செயற்கைக் கோள்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
On 30/4/2020 at 16:49, Nathamuni said:

oxford அகராதியில் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.

Curry a Tamil word, ('kari)' came into English language via Portuguese.

இந்த போர்த்துக்கேயர் நம்ம கஞ்சியை congee என்றும் கொண்டுபோய் சேர்த்துள்ளனர்.

அதுமட்டுமா, பப்படம், மொளக்குத்தண்ணி, ரசம்.... கட்டுமரம்....

நாம வெள்ளி பார்த்துக் கொண்டிருக்க.... கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து UK வந்த குஜராத்தி, பதக் என்பான், கறி பேஸ்ட் செய்து 400 மில்லியனுக்கு உலகம் முழுக்க விக்கிறான்.

மெட்ராஸ் கறி பவுடர் என்ற கருமாந்திரத்தினை அவனே வேறு ஆள் வைத்து தரமின்றி செய்து, அதிலும் பார்க்க கறி பேஸ்ட் அருமையானது எண்டு வியாபாரம் செய்கிறான்...

மிச்சத்தை பெருமாள் சொல்லுவார்.
 
மேலும் இரண்டு தமிழ் சொற்கள்

கயிறு, காசு.... (Coir, Cash)

காசு தமிழ் சொல்லோ என்று ஆய்ந்த போது, பொற்காசுகள் என்ற சொல் தமிழ் இலக்கியத்தில் உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

                            விசாகப்பட்டணத்தில் கசிந்த விஷவாயு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.