Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆகா.. நானும் ஒரு சமையல் விற்பன்னர்..!

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Paanch said:

அரிசியை முன்று நான்கு தடவை நன்றாகக் கிளைந்து கழுவி, அளவான தண்ணீருடன் பொங்கினால் சோறு பூப்போல் பொங்கி வந்து..... ஆகா அதன் சுவையோ சுவை.

9 hours ago, ஈழப்பிரியன் said:

அதற்குள் சிறிய பட்டர் துண்டையும் போட்டால் ஒட்டவும் மாட்டாது.சுவையாகவும் இருக்கும்.

8 hours ago, suvy said:

இதைத்தானே நானும் சொன்னேன்......!    😪

400cbabbb86ffa873c054783af5a3b1b.gif

காமடி, கீமடி பன்னலையே..? vil-coucou2.gif

  • Replies 70
  • Views 10.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனுங்க மதுரைக்காரரே! 
வீட்டிலை சும்மாதானே இருக்கிறியள்....பருத்தித்துறை வடை சுட்டுப் பார்க்கலாமே?:cool:

Vadivelu GIF by Tamil Memes - Find & Share on GIPHY

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, குமாரசாமி said:

ஏனுங்க மதுரைக்காரரே! 
வீட்டிலை சும்மாதானே இருக்கிறியள்....பருத்தித்துறை வடை சுட்டுப் பார்க்கலாமே?:cool:

ஏன் சார், நானே இப்பொழுதுதான் தட்டுத் தடுமாறி வெந்நீர் போடுவதிலிருந்து முன்னேறி, சோறு சமைக்கவும், இட்லி அவிக்கவும், தேங்காய் சட்னி தயாரிக்கவும் கற்றுக்கொண்டுள்ளேன்..! :)

திடீரென இவ்வளவு மாவு,மளிகை பொருட்களை கலந்தடித்து வடை சுட சொன்னால் எப்படி..? 🙄

ஆனால் கொரானா ஊரடங்கு இன்னும் ஆறேழு மாசம் தொடர்ந்தால் இதையும் கற்றுக்கொள்ள நேரும் போலிருக்கு..!

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ராசவன்னியன் said:

உங்களுக்கு ரொட்டி பிடிக்கும் என்றால் அது செய்யப் பழகுங்கள்.அது செய்வதும் சுலபம்.....அது தேநீரோடும் சாப்பிடலாம்.குழம்பு கறிகளோடும் சாப்பிடலாம் ,   மெல்லிய துண்டுகளாக சீவி கறிகளோடு பிரட்டி கொத்து ரொட்டியாகவும் சாப்பிடலாம்.....!   👍

U tube இருக்கு பார்த்தாலே போதும் பூந்து விளையாடலாம் கனக்க முந்திரிகைபழம் இப்ப மலிவா கிடைக்கும் வாங்கி ஜூஸ் ஆக்கி  கொஞ்சம் ஈஸட் போட்டால் சோம்பானமும் ரெடி மயக்கத்தில ருசியும் தெரியாது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மார்த்தாண்டன் said:

U tube இருக்கு பார்த்தாலே போதும் பூந்து விளையாடலாம் கனக்க முந்திரிகைபழம் இப்ப மலிவா கிடைக்கும் வாங்கி ஜூஸ் ஆக்கி  கொஞ்சம் ஈஸட் போட்டால் சோம்பானமும் ரெடி மயக்கத்தில ருசியும் தெரியாது

7deea12a7d62a0c0d941d8f21c37bb78.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ராசவன்னியர்!
சமையல் சாப்பாடு எல்லாம் எப்பிடி போகுது? கூப்பன்மா ரொட்டியும் சம்பலும் செய்து அனுப்பி விடட்டே? இண்டைக்கு அனுப்பினால் திங்கட்கிழமை மத்தியானம் துபாய்க்கு வந்துடும். ரொட்டியெண்டால் பத்து நாளைக்கு வைச்சு சாப்பிடலாம்.இட்டலி பொங்கல் எல்லாம் சரிவராது கெதியிலை பழுதாய்ப்போகும் எல்லோ....! 😎

சுற்றுலா உணவு: மசாலா ரொட்டி ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், திரு.கு.சா..

சமையல் நல்லா போகுது.. ஆனால் அப்பப்போ சிறு சிறு விழுப்புண்கள் ஏற்படுது..!

இன்று காலை நூடில்ஸ் செய்து அடுப்பிலிருந்து இறக்கி வைக்கும்போது இடுக்கியிலிருந்து பாத்திரம் உருவி நூடில்ஸ் கீழே கொட்டிவிட்டது.. மறுபடியும் இன்னொரு முறை செய்ய வேண்டியதா போச்சுது..:oO:

இப்படி சிறு சிறு சம்பவங்கள்.. எல்லாத்தையும் சொல்ல வெட்கமாயிருக்கு..:innocent:😋

தங்களின் அன்பான கரிசனைக்கு நன்றி..! 🙏

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ராசவன்னியன் said:

இன்று காலை நூடில்ஸ் செய்து அடுப்பிலிருந்து இறக்கி வைக்கும்போது இடுக்கியிலிருந்து பாத்திரம் உருவி நூடில்ஸ் கீழே கொட்டிவிட்டது.. மறுபடியும் இன்னொரு முறை செய்ய வேண்டியதா போச்சுது..:oO:

அங்கால இஞ்சால பார்த்துட்டு அள்ளிப் போட வேண்டியது தானே?

சரி நுhடுல்ஸ் தானே 5 நிமிடத்தில் ரெடி.
இதற்கு கிடக்கிற மரக்கறிகளை கொஞ்சம் வாட்டி வதக்கி மிக்ஸ் பண்ணினா கதையே வேற சார்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ராசவன்னியன் said:

வணக்கம், திரு.கு.சா..

சமையல் நல்லா போகுது.. ஆனால் அப்பப்போ சிறு சிறு விழுப்புண்கள் ஏற்படுது..!

இன்று காலை நூடில்ஸ் செய்து அடுப்பிலிருந்து இறக்கி வைக்கும்போது இடுக்கியிலிருந்து பாத்திரம் உருவி நூடில்ஸ் கீழே கொட்டிவிட்டது.. மறுபடியும் இன்னொரு முறை செய்ய வேண்டியதா போச்சுது..:oO:

இப்படி சிறு சிறு சம்பவங்கள்.. எல்லாத்தையும் சொல்ல வெட்கமாயிருக்கு..:innocent:😋

தங்களின் அன்பான கரிசனைக்கு நன்றி..! 🙏

இதுக்கெல்லாமா வெட்கப்படுவார்கள் ....யாரிட்ட  சொல்கிறீர்கள்....தம்பி தங்கைகளிடம்தானே .....எப்போதும் அடுப்பில் இருந்து சூடான சாமான்களை இறக்கும்போது "பனால்டி அடிக்கும் போது நிக்கும்  கோல் கீப்பரின் பொசிசனில்" நிக்கவும்.அப்போதுதான் உடலுக்கு சேதாரம் இருக்காது....!   😁

Soccer reflexes GIF - Find on GIFER

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கு.சா, ஈழப்பிரியன் மற்றும் சுவி ஆகியோருக்கு மிக்க நன்றி..!

நீங்கள் கொடுக்கும் ஊக்கமும், என் இல்லாள் தரும் குறிப்புகளும், அறிவுறுத்தல்களும் நிச்சயம் பயனளிக்கும்.

விழுப்புண்கள் பட்டாலும் ஓரளவாவது சமையல் கற்று தேறாமல் விடக்கூடாது என்று தீர்மானித்துள்ளேன்.

இட்லி, தேங்காய் மற்றும் தக்காளி சட்னியுடன் இன்னைக்கு ஒரு பிடி..!

Things.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

அங்கால இஞ்சால பார்த்துட்டு அள்ளிப் போட வேண்டியது தானே?

சரி நுhடுல்ஸ் தானே 5 நிமிடத்தில் ரெடி.
இதற்கு கிடக்கிற மரக்கறிகளை கொஞ்சம் வாட்டி வதக்கி மிக்ஸ் பண்ணினா கதையே வேற சார்.

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு கூடையில் அள்ளி போட்டுவிட்டேன் சார். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறேன்.

1 hour ago, suvy said:

...எப்போதும் அடுப்பில் இருந்து சூடான சாமான்களை இறக்கும்போது "பனால்டி அடிக்கும் போது நிக்கும்  கோல் கீப்பரின் பொசிசனில்" நிக்கவும்.அப்போதுதான் உடலுக்கு சேதாரம் இருக்காது....!   😁

கவனமாகத்தான் இருந்தேன் சூடான நூடில்ஸ் கொஞ்சம் பாதத்தில் கொட்டி விழுப்புண் ஏற்பட்டுவிட்டது.

பர்னால் இருக்க பயமேன்..? :)

4 hours ago, குமாரசாமி said:

... கூப்பன்மா ரொட்டியும் சம்பலும் செய்து அனுப்பி விடட்டே? இண்டைக்கு அனுப்பினால் திங்கட்கிழமை மத்தியானம் துபாய்க்கு வந்துடும். ரொட்டியெண்டால் பத்து நாளைக்கு வைச்சு சாப்பிடலாம்.இட்டலி பொங்கல் எல்லாம் சரிவராது கெதியிலை பழுதாய்ப்போகும் எல்லோ....! 😎

உண்மைதான் கு.சா..

ரெடிமேட் சப்பாத்தி பாக்கெட் ரெண்டு வாங்கி வந்துள்ளேன்.. வேகவைத்து பார்க்கிறேன். ஒரே மாதிரி உணவு செய்து சாப்பிடுவது சலிப்பு ஏற்படுத்துகிறது.. அதனால் வித்தியாசமாக செய்து சாப்பிட உள்ளேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ராசவன்னியன் said:

வணக்கம், திரு.கு.சா..

சமையல் நல்லா போகுது.. ஆனால் அப்பப்போ சிறு சிறு விழுப்புண்கள் ஏற்படுது..!

இன்று காலை நூடில்ஸ் செய்து அடுப்பிலிருந்து இறக்கி வைக்கும்போது இடுக்கியிலிருந்து பாத்திரம் உருவி நூடில்ஸ் கீழே கொட்டிவிட்டது.. மறுபடியும் இன்னொரு முறை செய்ய வேண்டியதா போச்சுது..:oO:

இப்படி சிறு சிறு சம்பவங்கள்.. எல்லாத்தையும் சொல்ல வெட்கமாயிருக்கு..:innocent:😋

தங்களின் அன்பான கரிசனைக்கு நன்றி..! 🙏

இஞ்சை பாருங்கோ ராசவன்னியர்! நான்  பத்து வருசத்துக்கு கிட்ட தனித்தவில் தான்.இப்ப இருக்கிற வசதியெல்லாம் ஐரோப்பாவிலையே இல்லை. அரிசி,பருப்பு தூள் ஏசியன் மரக்கறியெல்லாம்  இப்ப இருக்கிற மாதிரி அப்ப இல்லை. எல்லாம் இருக்குறதை கிடைக்கிறதை வைச்சு சமாளிச்சதுதான். :(

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வன்னியன் சார்.
                 இலங்கையில் நெல்லியடி வடமராட்சியில் விருந்துக்கு பெயர் போனது கோழிப் புக்கை.இதுவரையில் இதை சாப்பிட்டுப் பார்த்ததில்லை.ஆனால் கோழிச் சட்டிக்குள் சோறு புட்டு எதுவானாலும் பிரட்டி சாப்பிடுவதில் எனக்கு மிகவும் பிரியம்.
                 இந்த முறையான சாப்பாடு எப்படி செய்வதென்று இப்ப தான் ஒரு காணொளி பார்த்தேன்.நீங்களும் விரும்பினால் சுவையான சுலபமான கோழிப் புக்கையை செய்து சாப்பிட்டு பார்த்து பிடித்திருந்தால் உங்கள் மனைவிக்கும் ஒரு வகுப்பு எடுங்கள்.
                 என்ன மனைவிக்கே வகுப்பெடுக்க சொல்கிறான் என்று யோசிக்கிறீர்களா?ஒரு வாத்தியாரிடம் பாடம் கற்று பொறியியலாளராக வாற மாதிரி தான் இதுவும்.
                 மாணவனைப் பார்த்து வாத்தியார் பொருமைப்படுவது போல மனைவியும் பெருமையடையட்டும்.
                                               நன்றி.

3 hours ago, ராசவன்னியன் said:

விழுப்புண்கள் பட்டாலும் ஓரளவாவது சமையல் கற்று தேறாமல் விடக்கூடாது என்று தீர்மானித்துள்ளேன்.

எந்த ஒரு விடயத்தையும் சுலபமாக கற்றுக் கொண்டால் நாளடைவில் மறந்து போகலாம்.கற்றுக் கொண்ட பாடம் கடினமாக இருந்திருந்தால் வாழ்நாளில் மறக்க மாட்டோம்.

எனக்கும், என்னுடைய அம்மாவுக்கும் மிகவும் பிடித்த youtube cooking channel.

எங்களுடைய அம்மா ஒவ்வொரு விடீயோவையும் பார்த்துவிட்டு ஞாயிற்று கிழமையில் அதேமாதிரி சமைத்து ஒரு பெரிய அலுமினிய தட்டில் சப்பாடடை போடுதருவ நாங்கள் எல்லோரும் சுத்திருந்து சாப்பிடுவோம், இதிண்டை சுவையே தனிதான்.

இவர்களுடைய சமூகப்பொறுப்புணர்வும் போற்றத்தக்கது .
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

இஞ்சை பாருங்கோ ராசவன்னியர்! நான்  பத்து வருசத்துக்கு கிட்ட தனித்தவில் தான்.இப்ப இருக்கிற வசதியெல்லாம் ஐரோப்பாவிலையே இல்லை. அரிசி,பருப்பு தூள் ஏசியன் மரக்கறியெல்லாம்  இப்ப இருக்கிற மாதிரி அப்ப இல்லை. எல்லாம் இருக்குறதை கிடைக்கிறதை வைச்சு சமாளிச்சதுதான். :(

அப்போ சமையலில் நல்ல அனுபவம் இருக்கிறது போல..! :innocent:

சுலபமா சமைக்கும் குறிப்புகளை சொல்லுங்கோ, சார்.

5 hours ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் வன்னியன் சார்.
இலங்கையில் நெல்லியடி வடமராட்சியில் விருந்துக்கு பெயர் போனது கோழிப் புக்கை.இதுவரையில் இதை சாப்பிட்டுப் பார்த்ததில்லை.ஆனால் கோழிச் சட்டிக்குள் சோறு புட்டு எதுவானாலும் பிரட்டி சாப்பிடுவதில் எனக்கு மிகவும் பிரியம்.
இந்த முறையான சாப்பாடு எப்படி செய்வதென்று இப்ப தான் ஒரு காணொளி பார்த்தேன்.நீங்களும் விரும்பினால் சுவையான சுலபமான கோழிப் புக்கையை செய்து சாப்பிட்டு பார்த்து பிடித்திருந்தால் உங்கள் மனைவிக்கும் ஒரு வகுப்பு எடுங்கள்.
என்ன மனைவிக்கே வகுப்பெடுக்க சொல்கிறான் என்று யோசிக்கிறீர்களா?ஒரு வாத்தியாரிடம் பாடம் கற்று பொறியியலாளராக வாற மாதிரி தான் இதுவும்.
மாணவனைப் பார்த்து வாத்தியார் பொருமைப்படுவது போல மனைவியும் பெருமையடையட்டும்.
நன்றி.

எந்த ஒரு விடயத்தையும் சுலபமாக கற்றுக் கொண்டால் நாளடைவில் மறந்து போகலாம்.கற்றுக் கொண்ட பாடம் கடினமாக இருந்திருந்தால் வாழ்நாளில் மறக்க மாட்டோம்.

வணக்கம் ஈழப்பிரியன்.

கோழிப்புக்கை என்பது கோழி பிரியாணியா..? காணொளியை பார்த்து மனதில் இறுத்திக்கொள்கிறேன்..

முதலில் இந்த சாம்பார் வைக்க கற்றுக்கொள்ளணும்.. ஏனென்ல் அதுதான் தினமும்

தேவை.

சமையல் கற்றுக்கொள்ள முதலில் அசிரத்தையாக வேண்டா வெறுப்பாக வேறு வழியில்லாமல் ஆரம்பித்தேன். இப்பொழுது பரவாயில்லை, கொஞ்சம் ஆர்வம் வந்துள்ளது.

ஊரடங்கு கொஞ்சம் தளர்ந்துள்ளதால் இரவில் மட்டும் உணவகங்கள் பார்சலில் கொடுக்க அனுமதிதுள்ளார்கள்.

நான் தினமும் சாப்பிடும் உணவகத்தின் உரிமையாளரை இரண்டு நாட்கள் முன் சாலையில் சந்தித்தேன்.

"என்ன சார் கடைப்பக்கம் ஆளையே காணோம்..? இப்போ கடை திறந்தாகிவிட்டது..வாங்கோ.." என்று உரிமையோடு அழைத்தார்.

"இல்லை தம்பி.. நான் இப்போ சமைக்க ஆரம்பித்துவிட்டேன் இவற்றை பாருங்க..!" என கையில் வாங்கிவந்த மளிகை பொருட்களை காட்டினேன்.

"சமையலில் சலிப்பு ஏற்பட்டால் உணவகத்துக்கு வாரேன் தம்பி.." என சமாளித்தேன்.

அவருக்கு 'அடடா ரெகுலர் கஸ்டமரை இழந்துவிட்டோமே..!' என ஏமாற்றம் முகத்தில் தெரிந்தது.. 😉

"சரி, சார்.." என சிரித்துக்கொண்டே போய்விட்டார்.

5 hours ago, Kaalee said:

எனக்கும், என்னுடைய அம்மாவுக்கும் மிகவும் பிடித்த youtube cooking channel.

எங்களுடைய அம்மா ஒவ்வொரு விடீயோவையும் பார்த்துவிட்டு ஞாயிற்று கிழமையில் அதேமாதிரி சமைத்து ஒரு பெரிய அலுமினிய தட்டில் சப்பாடடை போடு தருவ. நாங்கள் எல்லோரும் சுத்திருந்து சாப்பிடுவோம், இதிண்டை சுவையே தனிதான்.

இவர்களுடைய சமூகப்பொறுப்புணர்வும் போற்றத்தக்கது .
 
காணொளிக்கு நன்றி காளி.

அவசியம் பார்க்கிறேன். இது கல்யாண சாப்பாடுக்கு தயார் செய்வது மாதிரியல்ல்லோ இருக்கு..!

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Update:

இன்று வெள்ளிக்கிழமை விடுமுறை..

ரொம்ப நாள் திட்டமிட்டிருந்த(???)  'தக்காளி குழம்பு மற்றும் முட்டை ஆம்லெட் போட்டு சாப்பிட்டே தீருவது..!' என முயற்சித்தேன்.

மனைவியின் ஜூம் காமிரா கண்காணிப்பில் ஒரு வழியா சமைத்து முடித்துவிட்டேன்.. :)

Kuzhambu.jpg   Omlet.jpg

சோறு, தக்காளி குழம்பு, சீனியவரக்காய் வத்தல், ஆம்லெட், தயிர், ஊறுகாய் என சாப்பாடு ஜமாய்த்துவிட்டேன்..

( சாம்பார் மட்டும் சரவணா பவன் உபயம்..! 😉 )

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ராசவன்னியன் said:

Update:

இன்று வெள்ளிக்கிழமை விடுமுறை..

ரொம்ப நாள் திட்டமிட்டிருந்த(???)  'தக்காளி குழம்பு மற்றும் முட்டை ஆம்லெட் போட்டு சாப்பிட்டே தீருவது..!' என முயற்சித்தேன்.

மனைவியின் ஜூம் காமிரா கண்காணிப்பில் ஒரு வழியா சமைத்து முடித்துவிட்டேன்.. :)

Kuzhambu.jpg   Omlet.jpg

சோறு, தக்காளி குழம்பு, சீனியவரக்காய் வத்தல், ஆம்லெட், தயிர், ஊறுகாய் என சாப்பாடு ஜமாய்த்துவிட்டேன்..

( சாம்பார் மட்டும் சரவணா பவன் உபயம்..! 😉 )

Madhavan And Vivek Comedy Collection | Ethiri Comedy Scenes | Part ...

அந்தம்மாவின் கையில இவரை உயிரோட ஒப்படைக்கும் வரை நாங்கள் படுகிற பாடு இருக்கே ....ஸ்......சப்பா முடியல்ல.தக்காளி சட்டிக்குள் புகை எழும்பி அடிப்பிடிக்குது போல் இருக்கு வன்னியர்......!   🥺

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, suvy said:

.... இவரை உயிரோட ஒப்படைக்கும் வரை நாங்கள் படுகிற பாடு இருக்கே ....ஸ்......சப்பா முடியல்ல..

பின்னே களத்துல நம்ம பங்குக்கு ஏதேனும் செய்யனும்லே..? :)

இதுக்கே அசந்தா எப்படி..?

நேற்று கடையில் "வடை மிக்ஸ்" பாக்கெட் ஒன்று பார்த்தேன்..

இனி மெது வடை செய்து பழகணும்..! 😉

test.jpg

44 minutes ago, suvy said:

...தக்காளி சட்டிக்குள் புகை எழும்பி அடிப்பிடிக்குது போல் இருக்கு வன்னியர்......!   🥺

அது குழம்பு கொதிக்கும்போது எடுத்த படம்..! :innocent:

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Update:

ரமலான் பண்டிகை மற்றும் கொரானா ஊரடங்கால் 5 நாட்கள் விடுமுறை கிட்டியது.

இணையத்தில் தொழிற் நுட்ப புதினங்களை படித்துவிட்டு ஓய்வு நேரத்தி சமையலை கற்று தேறலாமென முன்னெடுத்ததில் மூன்று வகை குழம்புகளை (வழிகாட்டல்: வீட்டம்மணி) வெற்றிகரமாக செய்து சாப்பிட்டாகிவிட்டது..!

சமையல் எனக்கு சிரமம்தான்..ஆனால் வேறு வழியில்லை.

படங்கள் கீழே..! :)

Puli.jpg

புளிக் குழம்பு

Tomotto.jpg

தக்காளி குழம்பு

Payaru.jpg

பயத்தம் பருப்பு குழம்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.