Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவர தொட்ட நீ கெட்ட ஜோதிகாவை நேரடியாக எச்சரித்த இயக்குனர் மோகன்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“இவரை தொட்ட நீ கெட்ட”... ஜோதிகாவை நேரடியாக எச்சரித்த திரெளபதி இயக்குநர்...!

b1uvovxc-jpg_1200x630xt.jpg

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான ஜோதிகா கோவில்கள் பற்றி பேசியுள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. விருது விழா ஒன்றில் பேசிய ஜோதிகா, தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் இங்க பிரபலமானது, அழகாக இருக்கும் கண்டிப்பாக நீங்க பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் ஏற்கனவே அதை பார்த்திருக்கேன்.

உதய்பூர் அரண்மனை மாதிரி நன்றாக பராமரித்து வருகிறார்கள். அடுத்த நாள் என் ஷூட்டிங்கிற்கு போற வழியில் மருத்துவமனை ஒன்றை பார்த்தேன். அது சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது. நான் பார்த்தவற்றை என் வாயால் சொல்ல முடியாது

எல்லாருக்கும் கோரிக்கை

ராட்சசியில் கூட இயக்குநர் கெளதம் சொல்லியிருக்காரு கோவிலுக்காக அவ்வளவு காசு கொடுக்குறீங்க. அவ்வளவு பராமரிக்கிறீங்க. கோவில் உண்டியலில் காசு போடுறீங்க, தயவு செய்து அதே தொகையை  பள்ளிகளுக்கு கொடுங்கள். மருத்துவமனைகளுக்குக் கொடுங்கள்.

இது மிகவும் முக்கியம். எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. நான் அந்த கோவிலுக்குள் போகவில்லை. அந்த மருத்துவமனையைப் பார்த்த பிறகு போகவில்லை. மருத்துவமனைகளும், பள்ளிகளும் அந்த அளவுக்கு முக்கியம். எனவே அவற்றுக்கும் நிதியுதவி செய்வோம் என்று பேசியிருந்தார்.

    ராஜராஜ சோழனை இழிவுபடுத்திய ஜோதிகா அவர்களை கண்டித்து ஒரு பதிவு கூட போடாத அண்ணன் மோகன் ஜி @mohandreamer அவர்களே வருத்தமளிக்கிறது....🙇
    — Mukesh_Manivannan (@EpmMukesh) April 22, 2020

ஜோதிகாவின் இந்த சர்ச்சை கருத்து சோசியல் மீடியாவில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் நெட்டிசன் ஒருவர் ஜோதிகாவின் இந்த சர்ச்சை பேச்சுக்கு திரெளபதி இயக்குநர் பதிலளிக்காதது வருத்தமளிப்பதாக ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.

    "அருள்மொழி வர்மன் ஒரு அதிசய பிறவி.. மாமன்னன்.. ராஜராஜ சோழன்.. அவர் தகுதிக்கு ஏற்றாற்போல் கருத்துகளை பேசுங்கள்.. யார் நினைத்தாலும் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு இவரின் புகழை, இவர் வழிபட்ட ஈசனை, இவர் உருவாக்கிய இந்த அதிசயத்தை அசைத்து கூட பார்க்க முடியாது.. இவரை தொட்டால் கெடுவார்கள்.. " https://t.co/EdTWNLmLuI pic.twitter.com/9CBPYtVDk9

இதையடுத்து ஜோதிகாவின் சர்ச்சை பேச்சை கண்டித்து திரெளபதி இயக்குநர் மோகன் ட்வீட் செய்துள்ளார். அதில், "அருள்மொழி வர்மன் ஒரு அதிசய பிறவி.. மாமன்னன்.. ராஜராஜ சோழன்.. அவர் தகுதிக்கு ஏற்றாற்போல் கருத்துகளை பேசுங்கள்.. யார் நினைத்தாலும் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு இவரின் புகழை, இவர் வழிபட்ட ஈசனை, இவர் உருவாக்கிய இந்த அதிசயத்தை அசைத்து கூட பார்க்க முடியாது.. இவரை  தொட்டால் கெடுவார்கள்.."  என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

https://tamil.asianetnews.com/cinema/draupathi-director-mohan-g-critic-jyothika-temple-issue-speech-q98sgo

டிஸ்கி :

Goundamni-Dialogues105.jpg

  • Replies 116
  • Views 11.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஜோதிகா உட்பட யார் எடுத்தாலும் கோவில்கள் மேல தான் கண் வக்கினம்.. விமர்சனம் செய்யினம். ஏன் இவர்கள் மக்கா.. மதீனா.. வத்திக்கான் என்று அங்கின ஒரு கருத்தும் வைப்பதில்லை. அவற்றையும் வைத்தியசாலைகள்.. பள்ளிக்கூடங்களாக மாற்ற அறிவுரை சொல்லலாம் தானே.

நான் அறிய கோவில்கள் பல நுண்கலைகளை பயில்விக்கும் இடங்களாக பா ஓதலை பயில்விக்கும் இடங்களாக விளங்குகின்றன. அன்னதானங்களை இட்டு வறியோர் பசியாறச் செய்கின்றன.  இது இங்கு இங்கிலாந்தில் கூட முஸ்லீம்கள் கிறிஸ்தவர்கள் என்று பலரும்.. அன்னதானம் என்றால் வரிசையில் நின்று வாங்கிச் செல்லக் காண்கிறோம். ஆனால்.. எந்த மசூதியாவது இல்லை எந்த தேவாலயமாவது கோவில்களைப் போல அன்னதானம் போடுதா..???! பதில் கிடையாது.

சோழ ராஜ்ஜியமே.. கோவில்களைக் கட்டியும்.. கொடைகளாலும் வீழ்ந்தது தான் வரலாறு. 

ஜோதியா கணவருக்கு உதவலாம்.. வறிய பிள்ளைகளின் கல்விக்கு ஊக்கமாக. இப்படி அதிமேதாவித்தனமாகப் பேசித்திரிவதிலும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

நெடுக்ஸ்,

நடிகை ஜோதிகா கோவில்களைப்ப்ற்றி இழிவாகப் பேசவில்லை (மேலேயுள்ள செய்தியின்படி). 

தயவுசெய்து செய்தியினை திரும்பவும் வாசியுன்கள். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

நெடுக்ஸ்,

நடிகை ஜோதிகா கோவில்களைப்ப்ற்றி இழிவாகப் பேசவில்லை (மேலேயுள்ள செய்தியின்படி). 

தயவுசெய்து செய்தியினை திரும்பவும் வாசியுன்கள். 🙂

நாங்களும் சொல்லவில்லையே அவர் இழிவாகப் பேசினார் என்று. கோவில்களை பராமரிப்பதற்கு அரசு வரி அல்லது கட்டணம் செலுத்தப்படுவதில்லை. கோவில்களுக்கு கிடைக்கும் நன்கொடையில் தான் எல்லாம்.

ஆனால் வைத்திய சேவைக்கு அரச வரிப்பணத்தில் குறிப்பிடத்தக்கது போகிறது. கட்டணம் அறவிடப்படுகிறது. நன்கொடைகள் போகின்றன. ஏன் வைத்திய சேவையை சரியாகப் பராமரிக்க முடியவில்லை.. வேண்டிய தரத்தில் என்பதை ஆராயாமல்.. கோவில் பராமரிப்பில் மட்டும்.. ஏன் கருத்துச் சொல்லனும். மசூதிகள் பராமரிப்படுவதில்.. அமைக்கப்படுவதில்.. ஏன் கருத்துச் சொல்லவில்லை. அதேபோல் தேவாலயங்கள்.. அமைக்கப்படுவதில்.. பராமரிக்கப்படுவதில் ஏன் கருத்துச் சொல்லவில்லை.. அதேபோல்.. விகாரைகள் அமைப்படுவதில்.. பராமரிக்கப்படுவதில் ஏன் கருத்துச் சொல்லவில்லை. அவற்றிற்கு ஆகாத செலவா.. கோவில்களில் ஆகிறது.

எல்லா வணக்கத்தலங்களோடு ஒப்பிடும் போதும் கோவில்கள் சமூகத்துக்கு இலவசமாக ஆற்றும் கருமம் மிக அதிகம். அது அன்னதானத்தில் இருந்து.. சமூக சேவைகள் வரை. எந்த மதமாற்ற வற்புறுத்தல்களும் இன்றி கோவில்கள் ஆற்றும் சேவையை ஜோதிகா போன்ற பக்கச்சார்ப்பு அதிமேதாவிகள் புரிந்து கொண்டு பேச வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

ஓ.... ஜோதிகா,

மற்றய மத வணக்கத் தலங்களை இழுக்கவில்லை என்பதா உங்கள்  பிரச்சனை.ஸ்..... ☹️

பாடசாலைகள், வைத்திய சாலைகளை சரிவரப் பராமரிக்கவில்லை என்பதல்ல 😂

நான்தான் உங்களை பிழையாக விளங்கிக்கொண்டேன். ☹️

மன்னித்துவிடுங்கள்.🤥

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

கோவில்கள் மட்டும் கண்ணை உறுத்துவது தான் வேடிக்கையாக உள்ளது. ஜோதியா தான் சார்ந்த இஸ்லாம் மசூதிகளில் செலவு செய்வதை பற்றி மதம் மாற்ற கொட்டும் பணத்தைப் பற்றி மூச்சும் விடத்தயார் இல்லை. அதேபோல் தேவாலயத்தார். அதேபோல் விகாரையத்தார். அதேபோல் அரச வரிப்பணமும்.. நிதி ஒதுக்கீடும் வைத்திய சேவையில் என்னாகிறது என்ற கேள்வி கேட்க வக்கில்லை. அதிகரித்த வைத்தியக் கட்டணம் தனியாரால் அறவிடப்படுவது குறித்து பேச வக்கில்லை.  

எதற்கு எடுத்தாலும் கோவில் தான் பேசு பொருளா..????! நீங்களும் இந்தப் புரிதல் இல்லாத இருப்பது ஆச்சரியமல்ல. 

Image may contain: 4 people, possible text that says 'யார் சிறந்தவர்.....? பூணூல் போட்டவரும் இல்லை. சிலுவை அணிந்தவரும் இல்லை. குல்லா அனிந்தவனும் இல்லை எந்தவித பாரபட்சமுமின்றி எவனொருவன் சக மனிதனை நேசிக்கிறானோ, அவனே மிகச் சிறந்த மனிதன்....!'

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, nedukkalapoovan said:

கோவில்கள் மட்டும் கண்ணை உறுத்துவது தான் வேடிக்கையாக உள்ளது. ஜோதியா தான் சார்ந்த இஸ்லாம் மசூதிகளில் செலவு செய்வதை பற்றி மதம் மாற்ற கொட்டும் பணத்தைப் பற்றி மூச்சும் விடத்தயார் இல்லை. அதேபோல் தேவாலயத்தார். அதேபோல் விகாரையத்தார். அதேபோல் அரச வரிப்பணமும்.. நிதி ஒதுக்கீடும் வைத்திய சேவையில் என்னாகிறது என்ற கேள்வி கேட்க வக்கில்லை. அதிகரித்த வைத்தியக் கட்டணம் தனியாரால் அறவிடப்படுவது குறித்து பேச வக்கில்லை.  

எதற்கு எடுத்தாலும் கோவில் தான் பேசு பொருளா..????! நீங்களும் இந்தப் புரிதல் இல்லாத இருப்பது ஆச்சரியமல்ல. 

உண்மையில் ஜோ கூறியதில் என் மூளைக்குப் புரிந்தது,

கோவில்களுக்கு ஈடாக பாடசாலைகளும் வைத்திய சாலைகளும் பராமரிக்கப் படவேண்டும்

என்பதுவே. 😀

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

என் புரிதலில் என் மூளை கேட்கிறது.. ஏன் கோவில்களுக்கு ஈடாக மட்டும்..ஜோ கருத்துச் சொல்லனும் என்றது.என் மூளை மேலும்.. கேள்வி கேட்கிறது..  பளிங்குகளால் மின்னும்.. பள்ளிவாசல்களுக்கு.. மக்கா.. மதீனா.. வத்திக்கானுக்கு ஈடாக.. மதமாற்றக் கொட்டும் கோடி கோடிகளை கொட்டி.. பாடசாலைகள்... வைத்தியசாலைகள்.. பராமரிக்கப்படக் கூடாது என்பது தான். இவை எப்படி ஜோ வின் கண்களில் பட்டு மூளைக்குள் தெறிக்காமல் விடப்பட்டன என்ற அதிசம் பற்றி தான். கோவில்கள் மட்டும் தான்.. தெறித்ததுவோ..???! 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

மூளை தொடர்பாக..

இந்தக் கேள்விகள் எழாததற்குக் காரணம், சில வேளைகளில் என் மூளை சிறியாதாக இருக்கலாம். ☹️

மத மாற்றம் தொடர்பாக....

மத மாற்றக் கோஸ்ரிகளுக்கு எங்கிருந்து பணம் வருகிறதோ அந்த நாடுகளிலெல்லாம் வைத்திய சாலைகளும் பாடசாலைகளும் கல்லூரிகள் பல்கலைக் கழகங்கள் எல்லாமே மிகவும் நன்கு பராமரிக்கப்படுகின்றன. 👍இது உங்களுக்கு மிக நன்றாகவே தெரியும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான ஜோதிகா கோவில்கள் பற்றி பேசியுள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. விருது விழா ஒன்றில் பேசிய ஜோதிகா, தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் இங்க பிரபலமானது, அழகாக இருக்கும் கண்டிப்பாக நீங்க பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் ஏற்கனவே அதை பார்த்திருக்கேன்.

உதய்பூர் அரண்மனை மாதிரி நன்றாக பராமரித்து வருகிறார்கள். அடுத்த நாள் என் ஷூட்டிங்கிற்கு போற வழியில் மருத்துவமனை ஒன்றை பார்த்தேன். அது சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது. நான் பார்த்தவற்றை என் வாயால் சொல்ல முடியாது

எல்லாருக்கும் கோரிக்கை

ராட்சசியில் கூட இயக்குநர் கெளதம் சொல்லியிருக்காரு கோவிலுக்காக அவ்வளவு காசு கொடுக்குறீங்க. அவ்வளவு பராமரிக்கிறீங்க. கோவில் உண்டியலில் காசு போடுறீங்க, தயவு செய்து அதே தொகையை  பள்ளிகளுக்கு கொடுங்கள். மருத்துவமனைகளுக்குக் கொடுங்கள்.

இது மிகவும் முக்கியம். எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. நான் அந்த கோவிலுக்குள் போகவில்லை. அந்த மருத்துவமனையைப் பார்த்த பிறகு போகவில்லை. மருத்துவமனைகளும், பள்ளிகளும் அந்த அளவுக்கு முக்கியம். எனவே அவற்றுக்கும் நிதியுதவி செய்வோம் என்று பேசியிருந்தார்.

மற்றவர்களுக்கு உபதேசிக்க முன் நான் அதற்கு யோக்கியமானவளா என ஜோதிகா ஒரு கணம் யோசித்திருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
54 minutes ago, Kapithan said:

ஓ.... ஜோதிகா,

மற்றய மத வணக்கத் தலங்களை இழுக்கவில்லை என்பதா உங்கள்  பிரச்சனை.ஸ்..... ☹️

பாடசாலைகள், வைத்திய சாலைகளை சரிவரப் பராமரிக்கவில்லை என்பதல்ல 😂

நான்தான் உங்களை பிழையாக விளங்கிக்கொண்டேன். ☹️

மன்னித்துவிடுங்கள்.🤥

தமிழ்நாட்டில் ஆடம்பரத்தின் உச்சமான சினிமா,சின்னத்திரை தோழர்களுக்கு ஏன் ஜோத்திக்கா அறிவுரை சொல்லவில்லை?
 நடிகர்களின் கட்டவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்யும் போது ஜோத்திகா கோமாவுக்கு சென்றுவிடுவாரா?

லக்கலக்க லக்கலக்கலக்கலக்க லக்கலக்கலக்க லக்கலக்கலக்க ...😎

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

மூளை தொடர்பாக..

இந்தக் கேள்விகள் எழாததற்குக் காரணம், சில வேளைகளில் என் மூளை சிறியாதாக இருக்கலாம். ☹️

மத மாற்றம் தொடர்பாக....

மத மாற்றக் கோஸ்ரிகளுக்கு எங்கிருந்து பணம் வருகிறதோ அந்த நாடுகளிலெல்லாம் வைத்திய சாலைகளும் பாடசாலைகளும் கல்லூரிகள் பல்கலைக் கழகங்கள் எல்லாமே மிகவும் நன்கு பராமரிக்கப்படுகின்றன. 👍இது உங்களுக்கு மிக நன்றாகவே தெரியும். 

உங்கள் மூளையை பற்றிய கதைய விடுவம். அது எப்படியாவது கிடந்திட்டுப் போகட்டும்.

ஹிந்தியாவில்.. மதம் மாற்ற காசு வாங்குபவர்களும்.. அதை பாவிப்பவர்களும்.. உள்ள இடங்களில் வைத்தியசாலைகள் ஒழுங்கா இல்லைத் தானே. அது ஜோதிகாவுக்கும் தெரியும் தானே. அப்படியான நிலையில்.. மதம் மாற்ற வந்து குவியும் கோடிகளை பாடசாலைகளை வைத்தியசாலைகளை மேம்படுத்த பாவிக்கலாம் தானே என்று ஜோதிகா அம்மையார் சொல்லாமல் விட்டது தவறு தானே. கோவில்கள் மீது அவர் சுதந்திரமாக கருத்துச் சொல்ல முடியும் என்றால்.. ஏன் பளிங்குகளால் ஆன பள்ளிவாசல்கள் மீதும்..  பாஸ்டர்களால் மேய்க்கப்படும்.. தேவாலயங்கள் மீதும்.. கருத்துச் சொல்ல முடியவில்லை...???????!

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

தமிழ்நாட்டில் ஆடம்பரத்தின் உச்சமான சினிமா,சின்னத்திரை தோழர்களுக்கு ஏன் ஜோத்திக்கா அறிவுரை சொல்லவில்லை?
 நடிகர்களின் கட்டவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்யும் போது ஜோத்திகா கோமாவுக்கு சென்றுவிடுவாரா?

லக்கலக்க லக்கலக்கலக்கலக்க லக்கலக்கலக்க லக்கலக்கலக்க ...😎

👍😃 நீங்கள் எப்பவுமே வித்தியாசமாகதான் யோசிப்பிர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

உங்கள் மூளையை பற்றிய கதைய விடுவம். அது எப்படியாவது கிடந்திட்டுப் போகட்டும்.

ஹிந்தியாவில்.. மதம் மாற்ற காசு வாங்குபவர்களும்.. அதை பாவிப்பவர்களும்.. உள்ள இடங்களில் வைத்தியசாலைகள் ஒழுங்கா இல்லைத் தானே. அது ஜோதிகாவுக்கும் தெரியும் தானே. அப்படியான நிலையில்.. மதம் மாற்ற வந்து குவியும் கோடிகளை பாடசாலைகளை வைத்தியசாலைகளை மேம்படுத்த பாவிக்கலாம் தானே என்று ஜோதிகா அம்மையார் சொல்லாமல் விட்டது தவறு தானே. கோவில்கள் மீது அவர் சுதந்திரமாக கருத்துச் சொல்ல முடியும் என்றால்.. ஏன் பளிங்குகளால் ஆன பள்ளிவாசல்கள் மீதும்..  பாஸ்டர்களால் மேய்க்கப்படும்.. தேவாலயங்கள் மீதும்.. கருத்துச் சொல்ல முடியவில்லை...???????!

சொன்னதும் பிரச்சனை சொல்லாவிட்டாலும் பிரச்சனை. ☹️

உங்கள் பிரச்சனைதான் என்ன ? 

ஜோ அடிப்படையில் முஸ்லிம், திருமணத்திற்காக மதம் மாறியவர். ஆதலால் அவர் கருத்துச் சொல்லக் கூடாது என்பதா ? ☹️

16 minutes ago, குமாரசாமி said:

மற்றவர்களுக்கு உபதேசிக்க முன் நான் அதற்கு யோக்கியமானவளா என ஜோதிகா ஒரு கணம் யோசித்திருக்க வேண்டும்.

ஜோவும் கணவரும் கல்வி அறக் கட்டளை ஒன்றை நடாத்துவதாக நினைக்கிறேன். 🙂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, Kapithan said:

ஜோவும் கணவரும் கல்வி அறக் கட்டளை ஒன்றை நடாத்துவதாக நினைக்கிறேன். 🙂

நாங்களும் பங்களிப்பு செய்கின்றோம் என்ற மமதையில் தலைக்கனம் பிடித்து தமிழர் வரலாறுகளில் கைவைக்கப்படாது.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

தமிழ்நாட்டில் ஆடம்பரத்தின் உச்சமான சினிமா,சின்னத்திரை தோழர்களுக்கு ஏன் ஜோத்திக்கா அறிவுரை சொல்லவில்லை?
 நடிகர்களின் கட்டவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்யும் போது ஜோத்திகா கோமாவுக்கு சென்றுவிடுவாரா?

லக்கலக்க லக்கலக்கலக்கலக்க லக்கலக்கலக்க லக்கலக்கலக்க ...😎

கோவில்களுக்கு ஈடாக வைத்தியசாலைகளும் பாடசாலைகளும் பராமரிக்கப்பட வேண்டும்

இதில் உங்களுக்கு எங்கே பிரச்சனை வருகிறது ?  🤥

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, Kapithan said:

கோவில்களுக்கு ஈடாக வைத்தியசாலைகளும் பாடசாலைகளும் பராமரிக்கப்பட வேண்டும்

இதில் உங்களுக்கு எங்கே பிரச்சனை வருகிறது ?  🤥

ஜோத்திகா ஏன் சினிமா ஆடம்பரங்களை தவிர்க்க சொல்லவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

நாங்களும் பங்களிப்பு செய்கின்றோம் என்ற மமதையில் தலைக்கனம் பிடித்து தமிழர் வரலாறுகளில் கைவைக்கப்படாது.

கு சா,

கோவில்கள் தொடர்பாக பிழையாக எங்கேனும்  கூறியிருக்கிறாரா ? உயர்வாகத்தானே கூறியுள்ளார் 🤔

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kapithan said:

சொன்னதும் பிரச்சனை சொல்லாவிட்டாலும் பிரச்சனை. ☹️

உங்கள் பிரச்சனைதான் என்ன ? 

ஜோ அடிப்படையில் முஸ்லிம், திருமணத்திற்காக மதம் மாறியவர். ஆதலால் அவர் கருத்துச் சொல்லக் கூடாது என்பதா ? ☹️

நான் மதவாத அடிப்படையில் இதனை நோக்கவில்லை.

கோவில்கள் எமது சமூகக் கட்டமைப்பில் வெறும் மத அமைப்புக்கள் அல்ல. அவை சமூக அமைப்புக்களாக உள்ளமை தான் யதார்த்தம். ஒரு பள்ளிவாசலுக்குள் வேற்று மதத்தினன் போக முடியாது.. உண்ண முடியாது. ஆனால் கோவில்களில் அப்படியல்ல. அதேபோல் தேவாலயத்துக்குள் ஒருவன் போய் ஒருவேளை உணவு உண்ண முடியாது.. அதற்கும் மதம் மாற வேண்டும்.

ஆனால்.. கோவில்கள் எந்த மதமாற்றமும் இன்றி.. பசிக்கிறவனுக்கு சாப்பாடும் போடுகின்றன.. அடைக்கலம் கொடுக்கின்றன. எந்தக் கோவில்களும் கோடி கோடியாகக் கொட்டி.. மதமாற்றம் செய்யவில்லை.

மேலும் கோவில்களை விட அதிகம் செலவில் பராமரிக்கப்படும் இடங்களாக.. பள்ளிவாசல்களும்.. தேவாலயங்களும் விளங்குகின்றன. மதமாற்றத்துக்கு கோடி கோடியாகச் செலவிடப்படுகின்றன. இவை ஜோதிகாவுக்கு நன்கு தெரிந்திருக்க..

வெறுமனவே கோவில்களை மட்டும் மையப்படுத்தி அவர் வைத்திருக்கும் கருத்தில் ஒன்றில் அவராக திருத்தம் செய்துகொள்ள வேண்டும்.. இன்றேல்.. மொத்தக் கருத்தையும் வாபஸ் வாங்க வேண்டும். அதுதான் நியாயம். இங்கு பக்கச்சார்ப்பற்ற கருத்துச் சொல்ல கேட்படுகிறதே தவிர.. ஜோதிகா பக்கச் சார்ப்பாக கருத்துச் சொல்லக் கேட்கப்படவில்லை. அது சமூகத்துக்கான கருத்தாகவும் முடியாது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, Kapithan said:

கோவில்களுக்கு ஈடாக வைத்தியசாலைகளும் பாடசாலைகளும் பராமரிக்கப்பட வேண்டும்

இதில் உங்களுக்கு எங்கே பிரச்சனை வருகிறது ?  🤥

ஆயிரக்கணக்கான கோடிகளில் புரளும் நடிகர்கள் தமிழ்நாட்டில் அதிகம். ஏன் ஏழை எளிய மக்களுக்கு அடிப்படை வசதியான மலசல கூடங்கள் கட்டிக்கொடுக்கவில்லை?

1 minute ago, Kapithan said:

கு சா,

கோவில்கள் தொடர்பாக பிழையாக எங்கேனும்  கூறியிருக்கிறாரா ? உயர்வாகத்தானே கூறியுள்ளார் 🤔

பிழையாக கூறினாலும் கூறாவிட்டாலும் சினிமாவில் தான் ஆயிரம் பிழைகள் இருக்கின்றன. முதலில் அங்கிருந்து ஆரம்பிக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

ஆயிரக்கணக்கான கோடிகளில் புரளும் நடிகர்கள் தமிழ்நாட்டில் அதிகம். ஏன் ஏழை எளிய மக்களுக்கு அடிப்படை வசதியான மலசல கூடங்கள் கட்டிக்கொடுக்கவில்லை?

பிழையாக கூறினாலும் கூறாவிட்டாலும் சினிமாவில் தான் ஆயிரம் பிழைகள் இருக்கின்றன. முதலில் அங்கிருந்து ஆரம்பிக்கட்டும்.

ஆக

(இந்து மதத்தை மனதில் நினைத்தேனும்) ஜோ கருத்துக் கூறக்கூடாது. 

அப்படியானால் யார் கருத்துக் கூறலாம் யார் கூறக் கூடாது ? 😂

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, nedukkalapoovan said:

நான் மதவாத அடிப்படையில் இதனை நோக்கவில்லை.

கோவில்கள் எமது சமூகக் கட்டமைப்பில் வெறும் மத அமைப்புக்கள் அல்ல. அவை சமூக அமைப்புக்களாக உள்ளமை தான் யதார்த்தம்.1)  ஒரு பள்ளிவாசலுக்குள் வேற்று மதத்தினன் போக முடியாது.. உண்ண முடியாது. ஆனால் கோவில்களில் அப்படியல்ல. அதேபோல் தேவாலயத்துக்குள் ஒருவன் போய் ஒருவேளை உணவு உண்ண முடியாது.. அதற்கும் மதம் மாற வேண்டும்.

ஆனால்.. கோவில்கள் எந்த மதமாற்றமும் இன்றி.. பசிக்கிறவனுக்கு சாப்பாடும் போடுகின்றன.. அடைக்கலம் கொடுக்கின்றன. எந்தக் கோவில்களும் கோடி கோடியாகக் கொட்டி.. மதமாற்றம் செய்யவில்லை.

மேலும் கோவில்களை விட அதிகம் செலவில் பராமரிக்கப்படும் இடங்களாக.. பள்ளிவாசல்களும்.. தேவாலயங்களும் விளங்குகின்றன. மதமாற்றத்துக்கு கோடி கோடியாகச் செலவிடப்படுகின்றன. இவை ஜோதிகாவுக்கு நன்கு தெரிந்திருக்க..

2)

வெறுமனவே கோவில்களை மட்டும் மையப்படுத்தி அவர் வைத்திருக்கும் கருத்தில் ஒன்றில் அவராக திருத்தம் செய்துகொள்ள வேண்டும்.. இன்றேல்.. மொத்தக் கருத்தையும் வாபஸ் வாங்க வேண்டும். அதுதான் நியாயம். இங்கு பக்கச்சார்ப்பற்ற கருத்துச் சொல்ல கேட்படுகிறதே தவிர.. ஜோதிகா பக்கச் சார்ப்பாக கருத்துச் சொல்லக் கேட்கப்படவில்லை. அது சமூகத்துக்கான கருத்தாகவும் முடியாது. 

1) தங்கள் அபிப்பிராயம் தவறு. (கருவறைக்குள் நீங்கள்தான் போக முடியாது) பள்ளிவாயலுக்குள் நான் போயிருக்கிறேன். எனது சைவ சமய நண்பர்கள் கிறீத்துவக் கோயில்களில் கொடுக்கப்படும் அப்பத்தயும் நேர்த்திதிக்காக கொடுக்கப்படும் உணவுகளையும் என்னுடன் சேர்ந்து பகிர்ந்துள்ளனர்.😀

2) கோவில்களுக்கு நிகராக பாடசாலைகளும் வைத்தியசாலைகளும் பராமரிக்கப்பட வேண்டும் என்பதில் எங்கே பக்கச் சார்பிருக்கிறது ? 🤔

கோவில்களுக்கு நிகராக, பள்ளிவாயால்களுக்கு நிகராக, தேவாலயங்களுக்கு நிகராக பாடசாலைகளும் வைத்தியசாலைகளும் பராமரிக்கப்படவேண்டும் எனக் கூறவேண்டும் என்பதா உங்கள் நிலைப்பாடு. 😂

(ம்ம்.... அதுவும் சரிபோலதான் படுகுது 🤔)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, Kapithan said:

ஆக

(இந்து மதத்தை மனதில் நினைத்தேனும்) ஜோ கருத்துக் கூறக்கூடாது. 

அப்படியானால் யார் கருத்துக் கூறலாம் யார் கூறக் கூடாது ? 😂

ஜோத்திகா கருத்து கூறலாம். அவர் உதாரணம் காட்டி கருத்து சொல்வதற்கு ஆயிரம்  சம்பவங்கள் இருக்கின்றன. ஏன்  தஞ்சை கோவில் இவரின் உதாரணத்திற்கு வந்தது? ஏற்கனவே தமிழர் வரலாறு சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய கோவில்.
முடிந்தால் பணக்கார திருப்பதி பற்றி கருத்து கூறட்டும் பார்க்கலாம்? ஒட்ட வெட்டிவிடிவார்கள்.😎

8 minutes ago, Kapithan said:

கோவில்களுக்கு நிகராக, பள்ளிவாயால்களுக்கு நிகராக, தேவாலயங்களுக்கு நிகராக பாடசாலைகளும் வைத்தியசாலைகளும் பராமரிக்கப்படவேண்டும் எனக் கூறவேண்டும் என்பதா உங்கள் நிலைப்பாடு.

வந்தவன் போனவன் பஞ்சம் பிழைக்க வந்தவன் கிடந்தவன் எல்லாம் சைவமதத்தை மட்டும் குறைபாடு என கத்தும் போதுதான் சந்தேகமே வருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

ஜோத்திகா கருத்து கூறலாம். அவர் உதாரணம் காட்டி கருத்து சொல்வதற்கு ஆயிரம்  சம்பவங்கள் இருக்கின்றன. ஏன்  தஞ்சை கோவில் இவரின் உதாரணத்திற்கு வந்தது? ஏற்கனவே தமிழர் வரலாறு சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய கோவில்.
முடிந்தால் பணக்கார திருப்பதி பற்றி கருத்து கூறட்டும் பார்க்கலாம்? ஒட்ட வெட்டிவிடிவார்கள்.😎

திரும்பத் திரும்ப ஒன்றையே கூறிக்கொண்டிருக்கிறீர்கள்.🤥

ஜோ கோவில் தொடர்பாக என்கேனும் தரம் தாழ்த்திக் கூறியுள்ளாரா ?  உயர்வாகத்தானே கூறியுள்ளார். குறை கூறியது பாடசாலைகள் வைத்தியசாலைகளின் பராமரிப்பு தொடர்பாக. அப்படியிருக்க ஏன் இதனை ஓர் பிரச்சனையாக நோக்குகிறீர்கள். 🤔

அல்லது கோவில்கள் தொடர்பில் ஒருவரும்  வாயே திறக்கப்படாது😡 என்கிறீர்களா ? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, Kapithan said:

திரும்பத் திரும்ப ஒன்றையே கூறிக்கொண்டிருக்கிறீர்கள்.🤥

ஜோ கோவில் தொடர்பாக என்கேனும் தரம் தாழ்த்திக் கூறியுள்ளாரா ?  உயர்வாகத்தானே கூறியுள்ளார். குறை கூறியது பாடசாலைகள் வைத்தியசாலைகளின் பராமரிப்பு தொடர்பாக. அப்படியிருக்க ஏன் இதனை ஓர் பிரச்சனையாக நோக்குகிறீர்கள். 🤔

அல்லது கோவில்கள் தொடர்பில் ஒருவரும்  வாயே திறக்கப்படாது😡 என்கிறீர்களா ? 

கோவிலை உதாரணம் காட்டி பேசுவதற்கு ஜோதிகாவுக்கு அருகதை இல்லை. சினிமாவில் உச்சத்தில் இருப்பதால் எததையும் இலகுவாக பேசிவிட முடியாது.
முன்னர் குஷ்பு துள்ளிக்கொண்டு திரிந்தார்?
இப்போது இவர்!!!!!😡
தமிழ்நாட்டின் மீது கரிசனைக்கு தமிழ்நாட்டினர் இருக்கின்றார்கள்.பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் பசியாறிவிட்டு போகக்கடவர்.😡

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.