Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் வீடு புகுந்து மூர்க்கத்தனமாக தாக்கிய பொலிஸார்; மூவர் படுகாயம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் வீடு புகுந்து மூர்க்கத்தனமாக தாக்கிய பொலிஸார்; மூவர் படுகாயம்!

IMG_20200501_130711.png?189db0&189db0

யாழ்ப்பாணம் – குடத்தனை, மாளிகை திடல் கிராமத்தில் இன்று காலை வீடு ஒன்றுக்குள் நுழைந்து பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் பெண் உட்பட மூவர் படுகாயம். கள்ள மணல் அகழ்வு தொடர்பில் நேற்று பொலிஸாருடன் ஏற்பட்ட முரண்பாட்டின் பின்னணியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

https://www.facebook.com/watch/uthayan.print/

 

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, குடத்தனை, மாளிகைதிடல் கிராமத்தில் இன்று (01) காலை வீடு ஒன்றுக்குள் நுழைந்த பொலிஸாரின் கண்மூடித்தனமான தாக்குதலில் மூவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு 1990 காவு வண்டி ஊடாக அனுப்பப்பட்டுள்ளனர்.

அத்துடன் பலர் சிறிய காயங்களுடன் மருத்துவமனைக்குச் செல்ல பயந்த நிலையில் தமது வீடுகளில் தங்கி இருக்கிறார்கள் எனத் தெரிய வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இருந்து மேலும் தெரியவருவதாவது,

“நேற்றைய தினம் (30) பொலிஸார் தம்மிடம் வந்ததாகவும், தங்களுடைய கன்டர் வாகனத்தின் உரிமையாளர் யார் என்று கேட்டதாகவும், அதற்கு அந்த வீட்டுக்காரர் வாகன உரிமையாளர் யாழ்ப்பாணத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ஏன் இவ்வாறு விசாரிக்கின்றீர்கள் என்று பொலிஸாரிடம் வாகன பயன்பாட்டாளர் கேட்டிருக்கின்றார். அதற்கு, உங்களுடைய கன்டர் வாகனத்தில் கள்ள மணல் அகழ்ந்ததாக யாரோ அறிவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டிருக்கின்றனர்.

இதற்கு பதிலளித்த வாகன பயன்பாட்டாளர், சேர் நீங்கள் எங்களது வாகன எஞ்சின் சூடாக இருக்கின்றதா என தொட்டுப் பாருங்கள் என்றுள்ளார்.

இந்நிலையில் பொலிஸார் இவ்வாறு தர்க்கப்படுவதை சிறுவன் ஒருவன் ஒளிப்பதிவு செய்து இருக்கின்றான்.

இதனை அவதானித்த பொலிஸார் சிறுவனிடம் இருந்த கைபேசியை பறித்து எடுத்திருக்கின்றார்கள. இதனை தம்மிடம் ஒப்படைக்குமாறு கைபேசியை உரிமையாளர் கேட்டபோது அதனை ஏற்க பொலிஸார் மறுத்த நிலையில் உறவுகள் ஒன்று கூடி பொலிஸாருடன் முரண்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து குறித்த நபரின் தொலைபேசியை ஒப்படைத்து சென்றிருக்கிறார்கள்.

இந்நிலையில் இன்றைய தினம் (0) மீண்டும் குறித்த கிராமத்திற்கு வருகைதந்த பொலிஸ் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் தொலைபேசியில் மேற்குறித்த நபரின் வீட்டுக்கு சென்று ஔிப்படம் எடுத்த சிறுவன் உட்பட பலரை சரமாரியாக தாக்கியிருக்கின்றனர்.”

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த பெண் உட்பட மூவார் 1990 நோயாளர் காவு வண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை பொலிஸார் ‘கஞ்சா, கசிப்பு போன்றவற்றை வைத்து தங்களை கைது செய்யப்போவதாக மிரட்டியிருக்கிறார்கள்’ என்று அங்குள்ளவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்க்கும் தொலைபேசி ஊடாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் தற்போது மாளிகைத்திடல் கிராமத்தில் ஒரு பதட்டமான சூழல் காணப்படுகின்றது என்று எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

  • IMG_20200501_130711.png?189db0&189db0
  • IMG_20200501_130701.png?189db0&189db0
  • IMG_20200501_130648.png?189db0&189db0
 
 

 

கள்ள மண்கடத்தல்காரர் இந்தப் பகுதியில் அதிகமென்றாலும் அதனை முறையாக விசாரிக்கும், விசாரித்து பின்னணியில் உள்ள குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் அடிப்படை அறிவற்ற, அடிப்படைத் திறனற்ற ஒரு காடையர் கும்பலாகவே சிங்கள-பௌத்த  அரச பயங்கரவாதிகளின் போலீஸ் உள்ளது.

வடமராட்சிக் கிழக்கில் பொலிஸாரின் தாக்குதலில் மூவர் காயம்- அங்கு சிறிது பதற்ற நிலை!

யாழ்ப்பாணம், வடமராட்சிக் கிழக்கு குடத்தனை மாளிகைத் திடல் கிராமத்தில் பொலிஸாரின் தாக்குதலில் மூவர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் மூலம் அவர்கள் அனுப்பப்பட்டிருப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, குறித்த மாளிகைத் திடல் கிராமத்தில் வீடொன்றுக்கு நேற்று சென்றிருந்த பொலிஸார், கன்ரர் வாகனம் ஒன்றின் உரிமையாளர் தொடர்பாக விசாரித்ததாக அந்த வீட்டுக்காரர் தெரிவித்துள்ளார்.

இதன்போது, வாகன உரிமையாளர் யாழ்ப்பாணத்தில் இருப்பதாகவும் உரிமையாளரை கொண்டுவர முடியாது எனவும் உரிமையாளரை ஏன் அழைத்துவர வேண்டும் என்றும் தற்போதைய கன்ரர் வாகன பாவனையாளர் பொலிஸாரிடம் கேட்டுள்ளார்.

இதற்கு குறித்த கன்ரர் வாகனத்தில் கள்ள மணல் அகழ்ந்ததாக யாரோ அறிவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டிருக்கின்றனர்.

இதற்குப் பதிலளித்த வாகனப் பயன்பாட்டாளர், ‘சேர் நீங்கள் எங்கள் வாகன எஞ்சின் சூடாக உள்ளதா என்று தொட்டுப் பாருங்கள் எனக் கேட்டுள்ளார்.

இதன்போது, பொலிஸார் வாகன பாவனையாளருடன் பேசுவதை அங்கிருந்த சிறுவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனை அவதானித்த பொலிஸார் அந்த கைத்தொலைபேசியை பறித்து எடுத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் தொலைபேசியை திரும்ப ஒப்படைக்குமாறு உரிமையாளரால் கேட்கப்பட்டபோதும் பொலிசார் கொடுக்க மறுத்த நிலையில் உறவினர்கள் ஒன்றுகூடி பொலிஸாருடன் முரண்பட்ட நிலையில் தொலைபேசியை ஒப்படைத்துவிட்டுச் சென்றதாக குறிப்பிடப்படுகிறது.

இதையடுத்து இன்று மீண்டும் குறித்த கிராமத்திற்குச் சென்ற பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் தொலைபேசியில் படம் எடுத்த சிறுவன் உட்பட அங்கிருந்த சிலரை தாக்கியுள்ளதாகவும் காயமடைந்த மூவர் அம்பியூலக்ஸ் மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிலர் காயங்களுக்கு உள்ளான நிலையிலும் பொலிஸாருக்குப் பயந்து வீடுகளிலேயே தங்கியுள்ளனர்.

இதேவேளை, இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு தொலைபேசி ஊடாக முறைப்பாடு செய்துள்ள நிலையில் தற்போது மாளிகை திடல் கிராமத்தில் ஒரு பதற்றமான சூழல் காணப்படுகிறது.

Jaffna-vadamaratchi-East-Kudaththanai-Pe

Jaffna-vadamaratchi-East-Kudaththanai-Pe

Jaffna-vadamaratchi-East-Kudaththanai-Pe

வடமராட்சியில் பதற்றம்! பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினரின் கண்மூடித்தனமான தாக்குதல்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகை திடல் கிராமத்தில் பொலிசாரின் கண்மூடித்தனமான தாக்குதலில் மூவர் படுகாயம் அடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் காயமடைந்தவர்கள் 1990 என்ற நோயாளர் காவு வண்டி மூலம் அனுப்பப் பட்டிருக்கிறார்கள். இந்நிலையில், பலர் மருத்துவமனைக்கு செல்ல பயந்த நிலையிலேயே தமது வீடுகளிலேயே தங்கி இருக்கிறார்கள்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்றைய தினம் குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் ஒரு வீட்டில் தரித்து நின்ற கன்ரர் வாகனத்தின் உரிமையாளர் யார் என்று கேட்டுள்ளனர். அதற்கு அந்த வீட்டுக்காரர் வாகன உரிமையாளர் யாழ்ப்பாணத்தில் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

ஏன் இவ்வாறு விசாரிக்கின்றீர்கள் என்று பொலிசாரிடம் குறித்த வாகனத்தை பயன்படுத்துபவர் கேட்டிருக்கின்றார். உங்களுடைய கன்ரர் வாகனத்தில் கள்ள மணல் அகழ்ந்ததாக யாரோ அறிவித்ததாக பொலிசார் குறிப்பிட்டிருக்கின்றனர்.

இதற்கு பதிலளித்த வாகன பயன்பாட்டாளர் சேர் நீங்கள் எங்கள் வாகன ஏஞ்சினைத் தொட்டுப் பாருங்கள் சூடாகவா இருக்கு என்று கேட்டுள்ளார். இதன் போது குறித்த நபருடன் பொலிசார் தர்க்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தர்க்கப்படுவதை சிறுவன் ஒருவன் ஒளிப்பதிவு செய்து இருக்கின்றான். இதனை அவதானித்த பொலிசார் அந்த கைத்தொலைபேசியை பறித்து எடுத்திருக்கின்றார்கள். இதனை தம்மிடம் ஒப்படைக்குமாறு கைத்தொலைபேசி உரிமையாளர் கேட்டபோது அதனை கொடுக்க பொலிசார் மறுத்த நிலையில் உறவுகள் ஒன்று கூடி பொலிசாருடன் முரண்பட்டதையடுத்து தொலைபேசியை ஒப்படைத்து சென்றிருக்கிறார்கள்.

அத்துடுன் இன்றைய தினம் மீண்டும் குறித்த கிராமத்திற்கு சென்றிருந்த பொலிஸ் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் தொலைபேசியில் புகைப்படம் எடுத்த சிறுவன் உட்பட பலரை சரமாரியாக தாக்கியிருக்கின்றனர். தற்போது மூவார் 1990 நோயாளர் காவு வண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு அனுப்பப்பட்டிருக்கின்றனர்.

பலர் தலை பல் பிடரி உட்பட உடலின் பல பாகங்களிலும் தாக்கப்பட்டு பொலிசாருக்கு பயத்தில் வீடுகளில் தங்கியுள்ளனர். இதேவேளை பொலிசார் குறித்த மக்களை கஞ்சா கசிப்பு போன்றவற்றை வைத்து உங்களை கைது செய்வதாகவும் மிரட்டியிருக்கிறார்கள்.

இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் தொலைபேசி ஊடாக முறைப்பாடு செய்திருக்கிரதார்கள். தற்போது மாளிகை திடல் கிராமத்தில் ஒரு பதட்டமான சூழல் காணப்படுகிறது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வடமராட்சி கிழக்கில் பொலிஸார் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி வழங்கத் தயார் -வி.மணிவண்ணன்

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மாளிகை திடலில் பொது மக்கள் மீது கண்மூடித்தனமாக பொலிஸார் தாக்குதல் நடாத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. குறிப்பாக கடும் குற்றவாளிகளை கூட தாக்குவதற்கு பொலிஸாருக்கு அனுமதியோ அதிகாரமோ கிடையாது.அப்படி இருக்கையில் ஊரடங்கு வேளையில் பொலிஸார் வீடு புகுந்து பெண்கள் மீது தாக்குதல் நடாத்தியமை ஏற்றுக் கொள்ளப்பட முடியாத காட்டு மிராண்டித்தனமான செயல். இந்த செயலை மிக வன்மையாக கண்டிக்கின்றேன் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.அத்துடன் வடமராட்சி கிழக்கு, மாளிகை திடலில் பொது மக்கள் மீது பொலிஸார் நடாத்திய தாக்குதலைக் கண்டித்துள்ள அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட உதவி வழங்கத் தயராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.(15)
 

http://www.samakalam.com/செய்திகள்/வடமராட்சி-கிழக்கில்-பொலி/

4 hours ago, கிருபன் said:

வடமராட்சி கிழக்கில் பொலிஸார் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி வழங்கத் தயார் -வி.மணிவண்ணன்

தமிழ் மக்கள் பிரதிநிதிகள் ஏதோ சாப்பாடு கடைக்காரன் சாப்பாடு தயார் என்டு போர்ட் மாட்டி வைக்கிற மாதிரி இருக்கு.

உங்கட போர்டை குறைஞ்சது அந்த வீட்டுக்கு முன்னால ஆவது கொழுவி விடுங்கோ.

யாழில் பொலிஸாரின் தாக்குதல்: பாரபட்சமற்ற விசாரணைக்கு அரசாங்கத்திடம் கோரிக்கை!

In இலங்கை     May 2, 2020 10:45 am GMT     0 Comments     1353     by : Litharsan

Jaffna-vadamaratchi-East-Kudaththanai-Peoples-Issue-Police-Attack.jpg

வடமராட்சி கிழக்கில் பொதுமக்கள் மீது பொலிஸார் நடத்திய தாக்குதலைக் கண்டிப்பதுடன் பாரபட்சமற்ற விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென ரெலோ அமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ் அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

இவ்விடயம் குறித்து அவர் தெரிவிக்கையில், “நாட்டின் சட்ட ஒழுங்குகளைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறை மக்களின் குடியிருப்புப் பகுதிகளில் மக்களின் நண்பர்களாக நடந்து கொள்ளாமல் வன்முறையாளர்களாக செயற்பட்டு பெண்கள் மீது அடிதடிப் பிரயோகங்களை மேற்கொண்டமை மக்கள் மத்தியில் அச்சத்தையும் பயத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பொலிஸார் இவ்வாறு நடந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லாத போதும், எதேச்சதிகாரிகள் போன்று சட்டத்தை தங்களது கையில் முழுமையாக எடுத்துக்கொண்டமை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டுடியதாகும்.

இச்சம்பவம் தொடர்பான பாரபட்சமற்ற விசாரணை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி கிடைப்பதுடன் இவ்வாறான சம்பவங்கள் மீள நடைபெறாது என்பதை நீதித்துறை உறுதிசெய்ய வேண்டும்.

கொவிட்-19 பாதிப்பு ஒருபுறம் இருக்க, இவ்வாறான மேலதிக பாதிப்புக்கள் மக்களின் அமைதி வாழ்வுக்கு ஆரோக்கியமானது இல்லை. எனவே அரசாங்கம் உரிய விசாரணைகளை மேற்கொண்டு நியாயத்தை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும்” என்றார்.

http://athavannews.com/யாழில்-பொலிஸாரின்-தாக்கு/

குடத்தனை விவகாரம்; நான்கு பெண்களுக்கும் பிணை வழங்கிய நீதிமன்றம்

வடமராட்சி கிழக்கு, குடத்தனை - மாளிகைத் திடலில் அரச உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் ஊரடங்குச் சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 4 பெண்களையும் பிணையில் விடுவித்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.

வடமராட்சி கிழக்கு, குடத்தனை - மாளிகைத் திடலைச் சேர்ந்த ஒரு சாரார் சட்டத்துக்குப் புறம்பாக மணல் கடத்தலில் ஈடுபடுவதாக கிராம மக்களால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

அதுதொடர்பில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸாருக்கு சம்பந்தப்பட்ட தரப்பால் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

அதனால் நேற்று வெள்ளிக்கிழமை சம்பவ இடத்துக்குச் சென்ற சிறப்பு பொலிஸ் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் சட்டத்துக்கு புறம்பாக மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முற்பட்ட போது, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் ஒன்று திரண்டு கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். பொலிஸார் கைது செய்ய முற்பட்டவரை தடுத்து பெண்கள் கடும் எதிர்ப்பைக் காட்டினர்.

இதன் போது பொலிஸார் கண்மூடித்தனமாக பெண்களைத் தாக்கி சந்தேக நபர்களைக் கைது செய்ய முற்பட்டனர். இதன்போது நிலமை மோசமாகியதும் பொலிஸார் அங்கிருந்து வெளியேறினர்.

சம்பவத்தில் பொலிஸாரின் தாக்குதலுக்குள்ளான மூன்று பெண்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சேர்க்கப்பட்டனர்.

அவர்களில் இருவரும் அந்தப் பெண்களுக்கு வைத்தியசாலைக்கு உணவு எடுத்துச் சென்ற இருவரும் பருத்தித்துறை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் நால்வரும் பருத்தித்துறை நீதிமன்றில் நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் இன்று சனிக்கிழமை மாலை முற்படுத்தப்பட்டனர்.

அரச ஊழியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பெண்கள் இருவரும் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் வைத்தியசாலைக்கு உணவு எடுத்துச் சென்ற பெண்கள் இருவரும் பொலிஸாரால் முற்படுத்தப்பட்டனர்.

அவர்கள் நால்வருக்கும் பிணை வழங்குவதற்கு பொலிஸார் கடும் ஆட்சேபனையை முன்வைத்தனர்.

சந்தேக நபர்கள் நால்வர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கனகரட்னம் சுகாஷ், பிணை விண்ணப்பத்தை முன்வைத்து மன்றில் சமர்ப்பணத்தை முன்வைத்தார்.

“மணல் கடத்தல் கும்பல்களை நாம் ஆதரிக்க முடியாது. அவர்கள் சட்டத்தினால் தண்டிக்கப்படவேண்டியவர்கள். ஆனால் எந்தக் குற்றமும் செய்யாத பெண்களைத் தாக்க பொலிஸாருக்கும் உரிமை இல்லை.

இந்த விடயம் பாரதூரமான மனித உரிமை மீறல். அத்துடன், ஊரடங்குச் சட்ட வேளையில் பருத்தித்துறை வைத்தியசாலை “பாஸ்” உடன்தான் இரண்டு பெண்கள் வைத்தியசாலைக்கு உணவு எடுத்துச் சென்றனர். அதன்போதே அவர்கள் கைது செய்யப்பட்டனர்” என சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் நீண்ட சமர்ப்பணத்தை நீதிவான் முன்னிலையில் முன்வைத்தார்.

இரு தரப்பு விண்ணப்பங்களை ஆராய்ந்த நீதிவான் காயத்திரி சைலவன், சந்தேக நபர்களை பிணையில் விடுவித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

https://www.ibctamil.com/srilanka/80/142358

  • கருத்துக்கள உறவுகள்

மண்ணை கடத்திறது ...பொலீஸ் விசாரணைக்கு போனால் பெண்களை முன்னுக்கு விட்டுட்டு ஆண்கள் ஓடி ஒளியிறது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.