Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிம் ஜாங் உன் வதந்தி: வட கொரிய வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிம் ஜாங் உன் வதந்தி: வட கொரிய வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது என்ன?

மைக்கேல் மேடன் வடகொரிய வல்லுநர்
Kim Jong-un and the brutal North Korea rumour millReuters

கடந்த வாரம் சர்வதேச ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்தான் இடம் பெற்றிருந்தார். கிம்மின் உடல்நிலை மோசமாக இருக்கிறது, கிம் இறந்துவிட்டார் என்ற பல வதந்திகள் பரவின. 

அதையெல்லாம் பொய்யாக்கி மிகுந்த உற்சாகத்தோடு உரத் தொழிற்சாலை ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார் கிம் ஜாங் உன். மிகவும் கவனமாக திட்டமிடப்பட்டு இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன. 

இப்படி இவர் திடீரென காணாமல் போய் திரும்பி வந்தது இது முதல் முறையல்ல. இப்படி பல முறை நடந்திருக்கிறது. கடந்த கால நிகழ்வுகளில் இருந்து நாம் என்ன கற்றுக் கொள்ள முடியும். 

என்ன நடந்தது?

பல பத்திரிகைகளில் கிம்மின் உடல்நிலை மோசமாக இரு்பபதாக செய்தி வெளியாளது. TMZ என்ற செய்தி நிறுவனம் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டார் என்று செய்தி வெளியிட்டது. 

கிம்முக்கு சிகிச்சை அளிக்க சீன மருத்துவக்குழு வட கொரியா சென்றதாகவும், அதற்கு முன்பே கிம் இறந்துவிட்டார் என்றும் சீன சமூக ஊடகங்களில் ஒரு செய்தி பரவியது.

ஆனால், இவ்வாறு கிம் திடீரென பொது வெளியில் இருந்து காணாமல் போவது இது முதல் முறையல்ல என்று ஏற்கனவே கூறியிருந்தேன். 

கடந்த பிப்ரவரி மாதம் சுமார் மூன்று வாரங்களுக்கு கிம் பொது வெளிக்கு வரவில்லை. இதேபோல 2014ஆம் ஆண்டில் 40 நாட்கள் அவர் எங்கும் தென்படாமல் இருந்தார். ஓர் அரசியல் சதியால் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக வதந்தி பரவியது.

ஆனால், திடீரென ஒரு நாள் கைத்தடி ஒன்றோடு வெளியில் காட்சி தந்தார். அவருக்கு மூட்டில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக பின்னர் தென் கொரிய உளவுத்துறை தகவல்கள் தெரிவித்தன. 

ஆனால், அது உண்மையா என்பது குறித்து வட கொரியா எதுவும் கூறவில்லை. ஏதும் நடக்காதது போல சாதாரணமாக பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வது, புகைப்படங்களை வெளியிடுவது என்று அன்றாட வேலைகளை தொடர்ந்தது வட கொரியா. தற்போது கூட அப்படித்தான. 

கிம் இறந்துவிட்டார் என ஊகிக்கப்பட்டது ஏன்?

எந்த வதந்திகளையும் பொருட்படுத்தாது வழக்கமாக செயல்படுகிறது வட கொரியா. சரி. இந்த முறை கிம் ஜாங் உன் வெளியில் தோன்றாமல் இருந்ததை தொடர்ந்து, அவர் இறந்துவிட்டார் என ஊகிக்கப்பட்டது ஏன்?

இதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன.

ஒன்று, கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி கிம் ஜாங்-உன்னின் தாத்தாவும் வட கொரியாவின் நிறுவனத் தலைவருமான கிம் இல் சங்கின் பிறந்த தின கொண்டாட்டம் நடந்தது. இதில் கிம் ஜாங்-உன் கலந்து கொள்ளவில்லை. 

இதுவரை இந்த பிறந்த தின கொண்டாட்டத்தில் கிம் கலந்து கொள்ளாமல் இருந்ததில்லை. இது பலருக்கு சந்தேகத்தை எழுப்பியது.

இரண்டாவது காரணம் டெய்லி என்.கே வெளியிட்ட செய்தி. அமெரிக்க நிதி உதவி பெறும் இந்த நிறுவனம், வட கொரியா குறித்த நம்பத்தகுந்த தகவல்களை வெளியிடுதற்கு பெயர்போனது. 

அப்படி சமீபத்தில் வெளியிடப்பட்ட செய்தியில், வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அவர் அதிலிருந்து குணமடைந்து கொண்டிருப்பதாகவும் செய்தி வெளியிட்டது.

அந்த செய்தியை அடிப்படையாக வைத்து, மற்ற செய்தி நிறுவனங்கள், புலனாய்வு வட்டாரங்கள் கூறியதாக குறிப்பிட்டு கிம் மோசமான உடல்நிலையில் இருக்கிறார் அல்லது இறந்துவிட்டார் என செய்தி வெளியிட்டன. இதுவே மூன்றாவது காரணம்.

எந்த அசாதாரண சூழலும் வட கொரியாவில் நிலவவில்லை என்றும், கிம் ஜாங் உன் இறக்கவில்லை என்று தென் கொரியா கூறியும், இந்த வதந்திதகள் அதிகமாகிக் கொண்டே இருந்தன. இதில் சீன சமூக ஊடகங்கள் மிகப்பெரிய பங்கு வகித்தன. 

வடகொரியாReuters

இதெல்லாம் எங்கிருந்து தொடங்கியது. நெருப்பு இல்லாமல் புகையாது என்று கூறுவார்கள். வட கொரியாவில் இருந்துதான் இந்த செய்திகள் தொடங்கி இருக்க வேண்டும்.இதுபோன்ற வதந்திகள் பரப்புவதற்கு வட கொரியாவில் சில இடங்கள் இருக்கின்றன. 

இதற்கு 30 ஆண்டுகால வரலாறும் உண்டு. கடந்த காலத்தில் வட கொரியத் தலைவர்கள் குறித்த வதந்திகள் பரவியதற்கு அந்நாட்டின் அந்நிய வர்த்தகத்துறை காரணமாக இருந்ததாக கருதப்பட்டது. 

The secretive Office 39 என்று அழைக்கப்படும் அத்துறை, வட கொரிய தலைவர்களுக்கு பணம் மற்றும் ஆடம்பரப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து கொண்டு சேர்க்கும். 

அங்கிருந்துதான் பல தகவல்கள் கசிவதாக கூறப்பட்டது. அந்த செய்தி ஜப்பான் மற்றும் தென் கொரிய ஊடகங்களுக்குதான் முதலில் சென்று சேரும். எனினும், இந்தத் தகவல்கள் எல்லாம் ஒரு வதந்திதான் என்பதை மறுக்க முடியாது.

வட கொரியத் தலைமையின் அமைப்பில் அங்கம் வகிக்கும் ஒருவர் பணி தவிர வேறு ஏதேனும் சாதாரணமாக பேசுவது வழக்கமாக இருக்கும். மேலும் கிம் குடும்பத்தின் மீது அனைவருக்கும் ஆர்வம் அதிகமே.

அப்படி சாதாரணமாக பேசியதுகூட, வட கொரியாவிற்கு வெளியே சென்று பல்வேறு ஊகங்களுக்கு வழி வகுக்கலாம் சர்வாதிகார அமைப்புகளில் இதுபோன்று வதந்திகள் எப்போதும் அதிகமாகவே இருக்கும்.

அங்கிருந்து எந்த தகவல்களும் முறைப்படி வராத பட்சத்தில், கிடைக்கும் சிறிய தகவல்கூட ஒரு செய்தி ஆகிறது. இதற்கு வேறு வழியும் இல்லை. உலகெங்கும் செயல்படும் புலனாய்வு அமைப்புகளும், தகவலுக்காக காத்திருப்பார்கள். அது உண்மையா இல்லையா என்பதையும் தங்களது முறைகளில் சரிபார்ப்பார்கள்.

வட கொரியாவை கண்காணிக்க தென் கொரியாவில் பல வழிகளை கையாள்கிறார்கள. சில சமயம் செயற்கைக்கோள்களின் உதவியோடு கண்காணிப்பதும் உண்டு. 

வட கொரியாவில் எந்த அசாதாரண சூழலும் நிலவவில்லை என்று தென்கொரியா கூறியது குறிப்பிடத்தக்கது. வட கொரியாவுக்கு அமெரிக்கா கண்காணிப்பு விமானங்களை அனுப்பி கண்காணிக்கிறது என்பது வெளிப்படையாக தெரிந்த ரகசியமாகும். 

வதந்திகளை கட்டுப்படுத்த முடியுமா?

2008ல் கிம் பற்றிய பேச்சுகள் எல்லாம் அங்கங்கே ஓரிரு அறைகளில் நடக்கும். ஆனால், தற்போது உள்ள மொபைல் போன் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி அதையெல்லாம் மாற்றிவிட்டது. வட கொரிய தலைவர் குறித்து வதந்தி பரப்புபவர்களின் மொபைல் போன்கள் கண்காணிக்கப்படுகின்றன. 

ஆனால், தேவை ஏற்பட்டால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவல் பரிமாற்றத்தை கிம்மால் கட்டுப்படுத்துவது கடினம். ஆனால், அவருக்கு நெருங்கியவர்கள் இந்த வதந்திகளை பரப்புகிறார்கள் என்பது தெரிய வந்தால், அதற்கான விளைவுகள் பெரிதாக இருக்கும்.

வட கொரியாReuters

வட கொரியாவில் உள்ள பல மக்களுக்கு தங்களை சுற்றி நடக்கும் எதுவுமே தெரியாது என்பதை கவனிக்க வேண்டியது முக்கியம். வட கொரியாவில் இருந்து தப்பித்து அமெரிக்கா வந்த ஒரு முக்கிய நபரான தே யொங் ஹோ, 2017ல் அமெரிக்க நாடாளுமன்றம் முன்பு சாட்சியம் அளித்தபோது, பல வட கொரியர்களுக்கு கிம் ஜாங் உன் சுவிட்சர்லாந்தில் படித்ததுகூட தெரியாது என்று கூறினார்.

உண்மையில் கிம்மின் உடல்நிலை குறித்த சரியான தகவல்கள் ஒருசில நபர்களுக்கு மட்டுமே தெரிய வாய்ப்புள்ளது. ஆனால், அதற்காக வதந்திகள் பரவாது என்று அர்த்தமில்லை. அப்படியே அது பரவினாலும், அது உண்மையாக இருக்கும் என்பதையும் நாம் உறுதியாக கூற முடியாது.

1986ல் கிம் இரண்டாம் சாங்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக வதந்தி பரவியது. ஆனால், அது உண்மையாக இருக்கவில்லை.

1990- 1992ல் கிம் இரண்டாம் சுங் மற்றும் கிம் ஜாங் இல் ரயில்வே நடைமேடையில் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்று வதந்தி பரவியது. அதுவும் உண்மையாக இருக்கவில்லை.

2003ல் கிம் ஜாங் இல் இறந்துவிட்டதாகவும், அவரைப் போலவே இருக்கும் மற்றொருவர் நாட்டை ஆட்சி செய்து வருவதாகவும் வதந்தி பரவியது குறிப்பிடத்தக்கது.

உலகின் வேறு எந்த நாட்டிலும் நடப்பதைப்போல, வதந்திகள் பரவிக் கொண்டேதான் இருக்கின்றன. ஆனால், மற்ற நாடுகளைப் போல, வதந்தி உண்மையா அல்லது பொய்யா என்பதற்கான பதிலை வட கொரியாவிடம் இருந்து எதிர்பார்கக முடியாது.

 

https://www.bbc.com/tamil/global-52513798

7 hours ago, கிருபன் said:

இப்படி இவர் திடீரென காணாமல் போய் திரும்பி வந்தது இது முதல் முறையல்ல. இப்படி பல முறை நடந்திருக்கிறது. கடந்த கால நிகழ்வுகளில் இருந்து நாம் என்ன கற்றுக் கொள்ள முடியும். 

ஒன்றில் இவர் அணு ஏவுகணையை விடுவதை நிற்பாட்ட வேண்டும். இல்லை, ஆளை கொல்லவேண்டும்.

அதுவரை, இவர்மீதான "காதல்" ஒரு தீராத காதலாக தொடரும்.  

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ampanai said:

ஒன்றில் இவர் அணு ஏவுகணையை விடுவதை நிற்பாட்ட வேண்டும். இல்லை, ஆளை கொல்லவேண்டும்.

அதுவரை, இவர்மீதான "காதல்" ஒரு தீராத காதலாக தொடரும்.  

வந்ததுமே வேலையை காட்டிய கிம் ஜாங் உன்... கொரிய எல்லையில் உச்சக்கட்ட பரபரப்பு..!...

weird-laws-of-north-korea-11-jpg.jpg

வடகொரிய அதிபர் உடல்நிலை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் 20 நாட்களுக்குப்பின் பொதுவெளியில் தோன்றிய நிலையில், கொரிய எல்லையில் குண்டுமழை பொழிந்த சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

அணு ஆயுத சோதனை என்ற பெயரில் வடகொரியா உலக நாடுகளை அவ்வப்போது மிரட்டி வருகிறது. அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்னின்  அதிரடி நடவடிக்கைகள் உலக தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்துவதும் அடிக்கடி நடப்பதுதான்.

அந்த வகையில் உலக நாடுகள் கொரானோ அச்சத்தில் உறைந்து கிடக்கும் இன்றைய சூழலில், கடந்த 3 வாரங்களாக கிம்மை காணவில்லை என்று ஊடகங்களில் செய்தி வெளியானது. 

 எந்த பொது நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்காததால், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு தரப்பினரும், கிம் இறந்து விட்டார் என்று மற்றொரு தரப்பினரும் வதந்தி பரப்பி வந்தனர்.இந்த நிலையில் கிம் ஜாங் உன் நேற்று வடகொரியாவில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டார்.

இதன் மூலமாக அவரது உடல்நிலை தொடர்பாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவர் உயிருடன் இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்பும் தெரிவித்தார். ஆனால் வெளியில் வந்தவுடன் கிம், தனது அதிரடி வேலையை மீண்டும் தொடங்கியுள்ளார். 

நேற்று கொரிய எல்லையில் வடகொரியா வீரர்கள் குண்டுமழை பொழிந்தனர். துப்பாக்கியாலும், சிறிய வகை பீரங்கியாலும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதை சற்றும் எதிர்பார்க்காத தென் கொரியா, பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என தென்கொரியா அரசு தெரிவித்துள்ளது.

https://tamil.asianetnews.com/world/north-and-south-korea-exchange-gunfire-q9r9gm

டிஸ்கி :

roflphotos-dot-com-photo-comments-201709

  • கருத்துக்கள உறவுகள்

கற்றுக்கொள்ள வேண்டியதென்னவெனில்,

1) ஊடக அறம் என்றொன்றில்லை. அது எப்போதே காலவதியாகி விட்டது. ☹️

2)மெயின் ஸ்ரிம் மீடியா எப்போதுமே தங்கள் நாட்டு அரசியல் பொருளாதாரக் கொள்கைகளுக்கு மாத்திரமே விசுவாசமாக இருக்கும். 👍

3) மெயின் ஸ்ரிம் மீடியா மூலம் வெளிவரும் தகவல்களை உடனே நம்பவேண்டிய அவசியமில்லை. மாற்று ஊடகங்கள் ஊடாகவும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.🙂

4) மெயின் ஸ்ரிம் மீடியா எங்கள் எல்லோரையும் மூளைச் சலவை செய்துள்ளன. எந்தக் காரணமுமின்றி ஒருவரின் மரணத்தைக் கொண்டாடும் மனனிலைக்கு எம்மை இட்டுச் சென்றது இதற்கு  மிகச் சிறந்த உதாரணம். 😡

5) மெயின் ஸ்ரிம் மீடியாக்கள் பொய்யும் சொல்லும். அவற்றை நம்ப வேண்டிய கட்டாயமில்லை. 👍

6) எங்களை மிகவும் இலகுவாக ஏமாற்றலாம்.   ஏனென்றால் நாங்கள் எங்கள் விருப்பத்திற்கேற்ற செய்திகளை மாத்திரம் விரும்பிப் வாசிப்போம். அது மெயின் ஸ்ரிம் மீடியாவுக்கு மிக நன்றாகத் தெரியும். ☹️

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.