Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகள் சார்பில் ஒருபோதும் வாதாடவில்லை! தமிழர்களின் போராட்டம் மீது சுமந்திரன் கடுமையான அதிருப்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் அரசியல் மற்றும் ஆயுத அமைப்பை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் மு்னனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

கேள்வி - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது விடுதலைப் புலிகளின் அரசியல் அமைப்பா?.

பதில் - இல்லை. விடுதலைப் புலிகள் அமைப்பு 70 ஆம் ஆண்டுகளில் உருவானது. ஆனால் எமது கட்சி 1949 ஆம் ஆண்டு உருவானது.

கேள்வி -ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதல் கூட்டத்தை வேலுப்பிள்ளை பிரபாகரன் நடத்தினார்.

பதில்- இல்லை.

கேள்வி - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்ப கூட்டத்தை பிரபாகரனே நடத்தினால், அதில் சம்பந்தன் அவர்கள் கலந்துக்கொண்டார்

பதில் - இல்லை.

கேள்வி - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் தேவைக்கு அமைய உருவாக்கப்படவில்லை என நீங்கள் கூறுகிறீர்களா?.

பதில் - இல்லை. 2001 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில், போர் நிறுத்தம் ஒன்று அமுலில் இருந்தது. இதனால், அந்த காலத்தில் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு ஒன்று இருந்தது. அது அரசாங்கமும் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய காலம்.

கேள்வி - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்படும் போது 7 கட்சிகள் இருந்தன. தற்போது மூன்று கட்சிகளே இருக்கின்றன. புளொட், டெலோ மற்றும் இலங்கை தமிழரசு கட்சி ஆகியன மாத்திரமே இருக்கின்றன?

பதில் - தற்போது மூன்று கட்சிகள் இருக்கின்றன. ஆரம்பிக்கும் போது நான்கு கட்சிகள் இருந்தன. அந்த நான்கில் ஒரு கட்சிதான் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளது. காலத்திற்கு காலம் சில கட்சிகள் உள்ளோ வருகின்றன. சில கட்சிகள் வெளியில் செல்கின்றன.

கேள்வி - ஆனந்தசங்கரியும் இதில் இருந்தார். பாசிசவாதிகளுடன் தன்னால் வேலை செய்ய முடியாது என்று அவர் வெளியேறினார்.

பதில் - ஆனந்தசங்கரி தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் அப்போது அந்த கட்சிதான் இருந்தது. தமிழரசு கட்சி இருக்கவில்லை. ஆனந்தசங்கரி வழக்கு தாக்கல் செய்து, செயற்பட்டதன் காரணமாக அவரை வெளியேற்றி விட்டு, தமிழரசு கட்சிக்கு உள்ளே வந்தது.

கேள்வி - விக்னேஸ்வரன் , அனந்தி சசிதரன் ஆகியோர் வெளியேறியுள்ளனர். பல்வேறு தரப்பினர் வெளியேறியுள்ளனர். அவ்வாறு வெளியேறியவர்கள் உங்கள் மீது குற்றம் சுமத்துகின்றனர்.

பதில் - ஆமாம். இரண்டு தரப்பிலும் என் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. தம்மை அடிப்படைவாதிகளாக காட்ட முயற்சிக்கும் விக்னேஸ்வரன், அனந்தி சசிதரன் போன்றவர்களும் என் மீது குற்றம் சுமத்துகின்றனர். தேசிய மட்டத்தில் இருந்து அரசியலில் ஈடுபட வேண்டும் என கூறும் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களும் என் மீது குற்றம் சுமத்துகின்றனர்.

கேள்வி - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நீங்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் வாலில் தொங்கவிட முயற்சிப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

பதில் - அப்படி எதுவுமில்லை. 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை போட்டியிட வேண்டாம் எனக் கூறி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் போட்டியிட நாங்கள் ஆதரவளித்து, கூட்டணி அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த உதவினோம். இதனால், அதனை ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கிய ஆதரவு என எவரும் கூற முடியாது.

கேள்வி - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உண்மையான தலைவர் இரா.சம்பந்தனா அல்லது எம்.ஏ. சுமந்திரனா என்ற உண்மையை தெளிவாக கூறுங்கள்.

பதில் - சம்பந்தனே தலைவர்.

கேள்வி - அதில் வெளியில் தெரியும் விடயம், நான் கேட்பது உண்மையான தலைவர் யார்?.

பதில் - உண்மையான தலைவரும் சம்பந்தன் ஐயா அவர்கள்தான்.

கேள்வி- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இயக்குவது சுமந்திரன் தான் என நான் நேரடியாக கூறினால்.

பதில் - இல்லை நான் அதனை ஏற்க மாட்டேன். அதனை நான் நிராகரிக்கின்றேன்.

கேள்வி - சுமந்திரன் கட்சிக்குள் அழுத்தங்களை கொடுக்கின்றாரா?

பதில் - சம்பந்தன் அவர்கள் என்னுடன் ஆலோசித்து செய்றபட்டு வருகிறார்.

கேள்வி - அப்படியானால் நீங்கள் அதிகாரபூர்வமற்ற தலைவர் என்று என்னால் கூற முடியுமா?.

பதில் - அப்படி கூற முடியாது. சில நேரங்களில் நான் வழங்கும் ஆலோசனைகளை சம்பந்தன் ஏற்றுக்கொள்ள மாட்டார். சம்பந்தன்தான் இறுதியான முடிவுகளை எடுப்பார்.

கேள்வி - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த அனைத்து தலைவர்களும் விடுதலைப் புலிகளுக்கு அஞ்சினர். அதன் காரணமாகதானே புலிகளின் நோக்கங்களுக்காக குரல் கொடுத்தனர் .

பதில் - புலிகளின் நோக்கங்களுக்காக குரல் கொடுத்தனர் என்று என்னால் கூற முடியாது. ஆனால் புலிகளுடன் இணைந்து செயற்பட்டனர். 2001 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை புலிகளுடன் இணக்கத்துடன் பணியாற்றினர். அந்த காலத்தில்தான் ஆட்சியில் இருந்த அரசாங்கமும் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

கேள்வி - சுமந்திரன் ஒரு இனவாதியா?

பதில் - இல்லை இனவாதியல்ல.

கேள்வி - சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைத்து இனங்களும் ஒன்றாக வாழ்வதை நீங்கள் விரும்புகிறீர்களா?.

பதில் - அனைத்து இனங்களும் ஒன்றாக வாழ வேண்டும் என்பது எனது தீவிரமான நிலைப்பாடு.

கேள்வி - உங்களது சில அறிக்கைகளை பார்க்கும் போது நீங்கள் இனவாதி போல் தோன்றுகிறது.

பதில் - அப்படியான அறிக்கைகளும் இல்லை.

கேள்வி - உங்களது அரசியல் தலைவர் யார் ?

பதில் - தற்போது என் அரசியல் தலைவர் சம்பந்தன்

கேள்வி - நீங்கள் 2010 ஆம் ஆண்டு தேசிய பட்டியல் மூலமாக அரசியலுக்கு வந்தீர்கள். சட்டத்தரணியாக விடுதலைப் புலிகளின் கைதிகள், புலிகளின் சார்பில் அல்லது காணாமல் போனவர்கள் சார்பில் வாதாடிய நிலையில் வந்தீர்கள்.

பதில் - விடுதலைப்புலிகள் சார்பில் வாதாடினேன் என்று எவராலும் கூற முடியாது. நான் சிவில் வழக்குகளில் ஆஜராகும் சட்டத்தரணி. இதனால், நான் குற்றவியல் வழக்குகளில் ஆஜராகவில்லை. 90களில் நான் சட்டத்தரணியாக கடமையை ஆரம்பித்த போது சில வழக்குகளில் ஆஜராகினேன். ஜே.வி,பி சார்பில் ஆஜராகியிருந்தேன். புலிகள் சார்பில் ஆஜராகினேன் என்று எவராலும் கூற முடியாது.

கேள்வி - 2015 ஆம் ஆண்டு தேர்தலில் 58 ஆயிரம் வாக்குகளை பெற்றீர்கள். ஜே.வி.பி சார்பில் ஆஜராகி, யாழ்ப்பாணத்தில் இந்தளவு வாக்குகளை பெற முடியாதே.

பதில் - முடியும். அன்று தேர்தல் காலத்தில் ஜே.வி.பியினர் யாழ்ப்பணத்திற்கு வந்து மே தின பேரணியை நடத்தும் போது நானும் சிகப்பு சட்டை அணிந்து அவர்களுடன் யாழ்ப்பாண வீதிகளில் சென்றேன். எமது மக்கள் அப்படி பார்க்க மாட்டார்கள்.

கேள்வி - அப்படியானால், உங்களது அரசியல் கொள்கை ஜே.வி.பியுடன் சம்பந்தப்பட்டதா?.

பதில் - இல்லை.

கேள்வி - அப்படியானால் தவறான இடத்தில் இருக்கின்றீர்கள்.

பதில் - இல்லை. ஜே.வி.பியின் கொள்கையுடன் அல்ல. அப்போது இருந்த அரசாங்கத்துடன் நாங்கள் ஜனநாயக ரீதியான போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது ஜே.வி.பியும் எங்களுடன் கைகோர்த்து செயற்பட்ட மற்றுமொரு அரசியல் அமைப்பு.

கேள்வி - அப்படியானால், அனுரகுமார திஸாநாயக்க உங்களது அரசியல் தலைவரா?.

பதில் - இல்லை. நான் அனைத்து கட்சிகளுடனும் வேலை செய்ய தயாராக இருக்கும் நபர்.

கேள்வி - சுமந்திரன் வாக்குகளை பெற்றரே தவிர யாழ்ப்பாணத்திற்கு வரவில்லை என்று அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.

பதில் - இல்லை. அப்படி யாரும் கூற மாட்டார்கள்.

கேள்வி. - சுமந்திரன் தற்போது அரசியல் கைதிகள், காணாமல் போனவர்கள் மற்றும் காணி விவகாரங்கள் பற்றி பேசுவதை காண முடியவில்லை. கொழும்புக்கு வந்து, தேர்தல் பற்றியும், ஊரடங்குச் சட்டம் பற்றியும் பேசுகிறார்.

பதில் - இவை பற்றி நான்தான் பேசினேன் என்பது அந்த மக்களுக்கு நன்றாக தெரியும். அது மாத்திரமல்ல. அது மாத்திரமல்ல சில அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நான் நடவடிக்கை எடுத்திருந்தேன். காணிகளை விடுவிடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தேன். இதனால், என்னை பற்றி அவர்களுக்கு நன்றாக தெரியும்.

கேள்வி - விடுதலை செய்துக்கொள்ளவதற்கான அரசியல் கைதிகள் இன்னும் இருக்கின்றனரா?.

பதில் - ஆம் இருக்கின்றனர். 70 மேற்பட்டோர் உள்ளனர்.

கேள்வி - காணிகள் விடுவிக்கப்பட்டதில் திருப்தியடைக்கின்றீர்களா?.

பதில் -திருப்தியடையவில்லை. எனினும் 80 வீதத்திற்கும் மேலான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

கேள்வி - காணாமல் போனவர்கள் சம்பந்தமா?

பதில் - அதில் எதுவும் நடக்கவில்லை. காணாமல் போனவர்கள் தொடர்பான செயலகம் அமைக்கப்பட்டது எனினும் எதுவும் நடக்கவில்லை.

கேள்வி - ஏன் எப்போதும் எதனையாவது எடுத்துச் சென்று இலங்கைக்கு எதிராக முறைப்பாடு செய்கின்றீர்கள்?.

பதில் - இலங்கைக்கு எதிராக அல்ல. இலங்கை சிறந்த நாடாக தன்னை வெளிக்காட்ட வேண்டுமாயின் எதனையும் மூடிமறைத்து செயற்பட முடியாது. அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண வேண்டும். இல்லையென்றால், இலங்கையால் முன்னோக்கி செல்ல முடியாது.

கேள்வி - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சுமந்திரனுக்கு தானே புலம் பெயர் புலிகளுடன் அதிகமான தொடர்புகள் உள்ளன?.

பதில் - புலம்பெயர் புலிகளுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை.

கேள்வி - ருத்ரகுமாரனுடன் உங்களுக்கு இருக்கும் தொடர்பு எப்படியானது.

பதி்ல் - அவருடன் தொடர்புகள் இல்லை.

கேள்வி - தொலைபேசி தொடர்புகள்

பதில் - ஓரிரு தடைகள் தொலைபேசியில் பேசி இருக்கின்றோம் தொடர்புகள் இல்லை. ஆனால் புலம் பெயர் அமைப்புகள் சிலவற்றுடன் எனக்கு தொடர்புகள் இருக்கின்றன. GTF,BTF,CTC, ATC ஆகியவற்றுடன் தொடர்புகள் உள்ளன. அந்த அமைப்புகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பணியாற்றும் அமைப்புகள்.

கேள்வி - ருத்ரகுமாரனுடன் எப்போது பேசினீர்கள் நினைவில் உள்ளதா?.

பதில் - நினைவில் இல்லை. 2016 அல்லது 2017 ஆம் ஆண்டு என்னுடன் ருத்ரகுமாரன் தொலைபேசி தொடர்புக்கொண்டு கலிப்போர்னியாவில் உள்ள அவர்களின் நாடாளுமன்றத்தில் உரையாற்றுமாறு கூறினார். நான் அதனை மறுத்து விட்டேன்.

கேள்வி - ருத்ரகுமாரன் என்பவர் இலங்கைக்கு வெளியில் தனிநாடு தொடர்பான அமைப்புடன் தொடர்புடையவர் அவர் போன்ற நபருடன் ஏன் தொடர்புகளை வைத்துக்கொள்கிறீர்கள்?.

பதில் - தொடர்புகள் இல்லை. அவர் தமது நாடாளுமன்றத்தில் கலந்துக்கொள்ளுமாறு கோருகிறார். முடியாது என்ற பதில் அனுப்பினேன் அது மாத்திரம்தான்.

கேள்வி - புலம்பெயர் புலிகளின் நிதி, உங்கள் ஊடாகதானே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வருகின்றது. நீங்கள்தானே நடுவில் இருக்கும் முகவர்?.

பதில் - இல்லை. வெளிநாடுகளில் உள்ளவர்கள் தமது குடும்பங்களுக்கு பணம் அனுப்புகின்றனர். வருமான வசதிகள் இல்லாதவர்கள், வெளிநாடுகளில் இருந்து உறவினர்கள் அனுப்பும் பணத்திலேயே வாழ்கின்றனர். இதனை விடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நிதி தொடர்பான தொடர்புகள் இல்லை.

கேள்வி - நீங்கள் தனிநாடு , பிரிவினைவாத கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளும் நபரா?.

பதில் - எப்போதும் இல்லை.

கேள்வி - ஐக்கியமாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்கிறீர்களா?.

பதில் - ஐக்கியமாக இருக்க வேண்டும். எனினும் அனைத்து இனங்களுக்கும் அரச அதிகாரங்களை கையாளும் அதிகாரம் இருக்க வேண்டும்.

கேள்வி - அப்படியானால், ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டியை கோருகிறது.

பதில் - சமஷ்டியைதான் நாங்கள் கோருகிறோம். சமஷ்டி மூலமே அனைத்து இன மக்களுக்கு அரச அதிகாரங்களை பயன்படுத்த முடியும்.

கேள்வி - அப்படியானால் அது தனி நாடு.

பதில் - இல்லை. சமஷ்டி என்பது தனி நாடு அல்ல.

கேள்வி - சமஷ்டி என்றால் நாடு பிளவுப்பட்டு விடும்

பதில் - அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா, பல ஐரோப்பிய நாடுளில் சமஷ்டி முறையே இருக்கின்றது. அவற்றை நாங்கள் தனி நாடுகள் என்று எப்போதும் கூறுவதில்லை. அவை வலுவான நாடுகள். சமஷ்டி இருப்பதன் காரணமாகவே அந்நாடுகள் வலுவான நாடுகளாக இருக்கின்றன.

கேள்வி - நீங்கள் இந்த நாட்டின் தேசிய கொடியை ஏற்றுக்கொள்கிறீர்களா?.

பதில் - ஆம் அது தற்போது எங்களது தேசிய கொடி அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

கேள்வி - தேசிய கீதம் -

பதில் - ஆம் தேசிய கீதத்தை ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் தேசிய கொடியை ஏற்றுகிறோம். நானும் சம்பந்தனும் மாத்திரமே அதனை செய்கிறோம்.

கேள்வி - யாழ்ப்பாணத்தில் சிலர் தேசிய கொடியை உயர்த்துவதில்லை.

பதில் -வரலாற்றை நோக்கி பார்க்க வேண்டும். 1972 ஆம் ஆண்டு முதலாவது அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட போது எம்மை வெளியில் வைத்து விட்டு அதனை உருவாக்கினர். தமிழ் மக்களை இணைத்துக்கொள்ளாது அவர்களின் யோசனைகளை பெறாது, தமிழ் மக்களை தேசிய ரீதியில் ஒதுக்கி விட்டு, அதனை உருவாக்கினர். இதன் பின்னரே 74, 76 ஆம் ஆண்டுகளில் தனி நாடு வேண்டும் என்ற குரல் எழுப்பபட்டது. அப்போது நிராகரித்த தேசிய கொடியை நாம் எப்படி தற்போது ஏந்துவது என்ற பிரச்சினை சிலருக்கு உள்ளது. எனக்கு அந்த பிரச்சினையில்லை.

கேள்வி - நீங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அரசியல் மற்றும் ஆயுத அமைப்பை ஏற்றுக்கொள்பவரா?.

பதி்ல்- இல்லை. ஏற்றுக்கொள்பவன் அல்ல.

கேள்வி - எந்த வகையிலும் ஏற்றுக்கொள்வதில்லை.

பதில் - ஆம் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்வதில்லை. இதனை நான் யாழ்ப்பாணத்தில் மாத்திரமல்ல அனைத்து இடங்களிலும் கூறுகிறேன். இதன் காரணமாக எனக்கு கடும் எதிர்ப்பு காணப்படுகிறது. எங்களுக்காக போராடியவர்களை ஏன் ஏற்றுக்கொள்வதில்லை என கேட்கின்றனர். ஆயுத அமைப்பை எப்போதும் ஏற்றுக்கொள்வதில்லை என்பதால், புலிகளின் ஆயுத அமைப்பை ஏற்கவில்லை எனவும் சுமந்திரன் கூறியுள்ளார்.

https://www.tamilwin.com/politics/01/245717?ref=imp-news

 

சுமந்திரன் கூறியதை மன்னிக்க முடியாது ! மாவையிடம் அவசர கோரிக்கை

Report us Gokulan 2 hours ago

தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஒட்டு மொத்த ஆயுதப்போராட்டத்தையும் தவறு என்று குறிப்பிட்டு ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்துள்ளமை மன்னிக்க முடியாத தவறு என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவரும் டெலோ கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார் .

அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்....

ஆயுதப் போராட்டத்தின் ஊடாக இலங்கை அரசாங்கத்தை பணிய வைத்து அரசியல் ரீதியாக பேசுவதற்கான ஓர் அங்கீகாரமாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து கொண்டு எம் .ஏ. சுமந்திரன் இப்படியான கருத்துக்களை சொல்வதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அவருடைய கருத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்.

 

அந்த வகையில் ஆயுதப் போராட்டத்தில் பொது மக்கள், போராளிகள் ஒட்டு மொத்தமாக உயிரை அர்ப்பணித்து உள்ளார்கள்.

ஆயுதப் போராட்டத்தின் ஊடாகத்தான் உலகளாவிய ரீதியில் எங்களுடைய இனப்பிரச்சினை வரலாறாக பதியப்பட்டுள்ளது.

ஆயுதப் போராட்டத்தின் ஊடாகத்தான் இனப்பிரச்சினை சார்ந்த விடயங்களை இன்றைக்கு இலங்கை அரசாங்கத்துடன் பேசும் ஒரு வாய்ப்பு கிட்டியுள்ளது.

ஆகவே இந்த ஆயுதப் போராட்டத்தின் ஊடகத்தான் எங்களுடைய இனப்பிரச்சினை தொடர்பான முக்கிய விடயங்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளது என்பதனை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் சுமந்திரனின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறது.

தமிழரசுக் கட்சி இதற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .

தமிழரசுக் கட்சி நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் தமிழிழ விடுதலை இயக்கம் இவ்விடயத்தில் நிச்சயமாக ஒரு சரியான முடிவை எடுக்கும்.

தமது கட்சி சுமந்திரன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் .

ஆயுதப் போராட்டம் அகிம்சை போராட்டம் செய்ய இந்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து அதன் அடிப்படையில் தான் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அப்போராட்டம் வீறு கொண்டு எழுந்து இந்த அரசாங்கத்தை பணிய வைத்த வரலாறுகள் பல உண்டு.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாவதற்கு காரணமான நோக்கத்தை தனது கருத்து ஊடாக எம். ஏ. சுமந்திரன் சீர் குலைத்துள்ளார்.

அந்த வகையிலேயே தமிழரசுக் கட்சி சுமந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் கோரிக்கை முன்வைத்து இருக்கின்றது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.tamilwin.com/srilanka/01/245722?ref=home-imp-parsely

14 minutes ago, பெருமாள் said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் மு்னனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் ஊடகப் பேச்சாளரும் மு்னனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார், அதாவது இன்னொரு முன்னாள் என்ற அடைமொழியையும் சேர்த்துவிட்டால், இவரை சிங்கள ஊடகம் கணக்கில் எடுக்காது. 

ஆரோக்கியமான பல பதில்களை கூறியுள்ளார்.

ஆனால், சிங்கள இனவாதம் தமிழர் கோரிக்கைகளை அதன் நியாயத்தை ஏற்காது என்பது சுமந்திரன் அவர்களுக்கும் தெரியும், தெரிந்தும் ஏன் பேட்டி என்றால் - தன்னை நிலைக்க வைக்க மட்டுமே. தமிழர் இனப்பிரச்சனைக்கு இதனால் பயன் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 இப் பேட்டியின் முழுமையான  காணொளி வடிவம்.

 

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் ஆயுதம் ஏந்தியதை ஏற்கேன்! அனுமதியேன் – இப்படி சொன்னார் சுமந்திரன்

ஆயுதப் போராட்டத்தை ஒருநாளும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஆயுதம் தூக்கியதால் பிரபாகரனையும் நான் ஏற்றுக்கொள்வதில்லை. 5 வயதில் இருந்து சிங்களவர்களுடன் வாழ்ந்து பழகிய நான், அவர்களுடன் வாழ்வதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சியொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இந்த கருத்துக்களை அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தியதை நான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அதை அனுமதிக்கவும் போவதில்லை. அதை நான் யாழ்ப்பாணத்திலும் கூறுவேன். வேறு எங்கும் கூறுவேன். இதை கூறுவதால் எனக்கு அங்கு எதிர்ப்பும் உள்ளது.

அவர் எங்களிற்காக போராடியவர். அவரை ஏன் ஏற்கவில்லை என பலரும் கேட்கிறார்கள். அவர் ஆயுதம் ஏந்தியதை ஒருநாளும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதாலேயே அதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

என்னுடைய 5 வயதில் இருந்து கொழும்பிலேயே வாழ்கிறேன். எனக்கு கொழும்பில் பல சிங்கள நண்பர்கள் இருக்கிறார்கள். அதனால் சிங்கள மக்களுடன் வாழ்வது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றே கருதுகிறேன்.

இலங்கை தேசியக் கொடியை ஏற்றுக்கொள்கிறோம். எமது கட்சியில் நானும் சம்பந்தனும் மாத்திரமே தேசிய கீதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் என நினைக்கிறேன்.

தெற்கில் இதை கூறிவிட்டு, வடக்கில் நான் வேறுவிதமாக பேசுவதில்லை. இதையேதான் அங்கும் பேசுகிறேன். இதனால்தான் ஒரு பகுதியினர் எனக்கு எதிராக செயற்படுகிறார்கள்’. – என்றார்.

 

https://newuthayan.com/புலிகள்-ஆயும்-ஏந்தியதை/

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சுமா அந்த சுமாவோ...

6 hours ago, பெருமாள் said:

கேள்வி - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உண்மையான தலைவர் இரா.சம்பந்தனா அல்லது எம்.ஏ. சுமந்திரனா என்ற உண்மையை தெளிவாக கூறுங்கள்.

பதில் - சம்பந்தனே தலைவர்.

கேள்வி - அதில் வெளியில் தெரியும் விடயம், நான் கேட்பது உண்மையான தலைவர் யார்?.

பதில் - உண்மையான தலைவரும் சம்பந்தன் ஐயா அவர்கள்தான்.

செஞ்சோற்று கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
கர்ணா, வஞ்சகன் கண்ணனடா

  • கருத்துக்கள உறவுகள்

பேட்டிக்கும் தலையங்கத்திற்கும் தொடர்பேயில்லை. உதயனும் தமிழ்வின்னும் திட்டமிட்டே செய்திகளை திரிவுபடுத்துவதுபோல் தெரிகிறது.☹️

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.