Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதலிரவு

Featured Replies

:P அவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தேன். என் நேரம், கதவு திறக்கும் சத்தம் கேட்டதாலும், இனிமேல் முடியாது என உணர்ந்ததாலும், மடிக்கணினியை மூடும் வேலையை செய்யத் தொடங்க...

கொலுசுச் சத்தம், அவள் நெருங்கிவருகிறாள் என்பதை உணர்த்த, திரும்பிப் பார்த்தேன். எங்கள் வீட்டில் கொலுசுச் சத்தம் கேட்பதில்லை; பெண் குழந்தை இல்லாத காரணமோ என்னமோ, தெரியாது. அம்மா அணிந்திருக்கும் கொலுசு சத்தம் தராது. ஆனால் அதற்காக வருபவளை குற்றம் சொல்ல முடியுமா? திருமணம் முடிந்த முதல்நாள் அன்று, என்பதற்காக மட்டும் கிடையாது. ஒருவேளை அவளுக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களில் ஒன்றாகக் கூட கொலுசு இருக்கலாம்.

அவளைப் பற்றி எனக்கு என்ன தெரியும்? யோசித்துப் பார்க்கிறேன். பெயர் அலமேலு, படித்தது ஹோலிகிராஸ் கல்லூரியில் முது அறிவியல் கணிப்பொறி பயன்பாட்டியல், அவ்வளவுதான். இதற்கு முன்னர் வெகுசில சமயந்தான் அவளைப் பார்த்திருக்கிறேன்; ஒரு முறை நிச்சயதார்த்தத்தின் பொழுதும் பிறகு கல்யாணப் புடவை எடுக்க வந்தபொழுதும். பின்னர் இன்று கல்யாண மேடையிலும் பின்னர் திருமணம் முடிந்தபின்னர் கோவிலிலும்.

இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை, இடையில் வந்து பரிசளித்த என் பக்கத்து உறவினர்களை நானும் அவள் பக்கத்து உறவினர்களை அவளும் அறிமுகம் செய்து வைத்ததைத் தவிர. அவர்கள் வீட்டில் கேட்டுக்கொண்டதற்காக திருமணம் அவர்களுடைய சொந்த ஊரில், திருவிளையாட்டத்தில் நடைபெற்றது. ஆனால் எங்கள் பக்கத்தில், முதலிரவு எங்கள் வீட்டில்தான் நடைபெற வேண்டுமென உறுதியாக இருந்ததால், அங்கிருந்து காரில் திருச்சிக்கு மீண்டும் பயணம். நான் தனிக் காரில் என் குடும்பத்துடன்; அவள் வேறொரு காரில் அவளது குடும்பத்துடன்.

அன்றிரவு தான் வரமுடியும் என முன்பே தீர்மானித்துவிட்டதால் வரவேற்பு அடுத்தநாள் மாலைதான். இடையில் வீட்டிற்கு வந்து சேரும் நேரம், நல்ல நேரமாக இல்லாத காரணத்தால் நேராக மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு போகச்சொல்லி என் பாட்டி சொல்ல மறுமொழியில்லாமல் கார்கள் மலைக்கோட்டைக்கு நகர்ந்தன.

அதற்குப் பிறகுதான் வீட்டிற்கு வந்தது. கல்யாணத்திற்காக நினைத்த நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதியளித்த அலுவலகம், ஒரேயொரு கட்டளையிட்டிருந்தது; அது மின்னஞ்சலில் அனுப்பப்படும் பிரச்சனை சார்ந்த கேள்விகளுக்கு உடனடியாக பதிலளிக்க வேண்டும்மென்பது. திருமணத்திற்கு முந்தைய நாள் வரை அமைதியாக இருந்த அம்மா, திருமண நாளன்று என் மடிக்கணினியை பிடுங்கி வைத்துக்கொண்டது தான் சோகமே. ஒரு நாள் முழுக்க வந்த அஞ்சல்களைப் படிக்க வேண்டித்தான் நான் முதலிரவு என்றுகூட பார்க்காமல் மடிக்கணினியை உபயோகித்துக் கொண்டிருந்தேன்.

நினைவு தெரிந்ததிலிருந்தே நான் உபயோகப்படுத்திய அறைதான், சினிமாவில் காண்பிப்பதைப் போன்று பூத்தோரணங்களால் அலங்கரிக்கப்படாத நான் உபயோகப்படுத்திய அதே பழைய கட்டில், ஒரேயொரு வித்தியாசம் ஒன்றிற்கு இரண்டாய் தலையணைகளும், சற்றே பெரிய படுக்கை விரிப்பும்.

உள்ளே வந்தவள், மிருதுவாய் அலங்கரிக்கப்பட்டிருந்தாள். பயணக் களைப்பு அவள் முகத்தில் தெரிந்தது; கல்யாணப்புடவைதான் அணிந்திருந்தாள்; இது என் அம்மாவின் வேண்டுகோளாயிருக்குமென்று நினைக்கிறேன். அவள் முகத்தைப் பார்த்ததிலிருந்தே மணியம் செல்வத்தின் ஒர் ஓவியம் உருக்கொண்டு வந்ததைப் போன்ற உணர்வுதான் ஏற்பட்டது. நீண்ட கண்கள், செழுமையான புருவங்கள், அளவான நெத்தி, நீண்ட சடை, கானலை போலில்லாமல் காணும்படியான இடைகள் ஒன்றுதான் வித்தியாசம் அந்த ஓவியங்களுக்கும் இவளுக்கும்.

"உங்களுக்கு வேலையிருந்தால் முடித்துவிடுங்கள். பரவாயில்லை." ஓவியம் அசைந்து பேசுவதுபோல் தான் இருந்தது. பின்னர் நினைவிற்கு வந்தவனாய், "இல்லை முடிஞ்சிருச்சு. நிக்கிறியே உட்காரு!" சொன்னவனாய் மடிக்கணினியை மடியில் இருந்து பிரித்து அந்தப் பக்கம் வைத்தேன்.

"இல்லை கொஞ்சம் எந்திருச்சி நின்னீங்கன்னா..."

நான் அவசரமாய், "இங்கப்பாரு இன்னிக்கின்னு மட்டுமில்லை, என்னிக்குமே நீ என் காலில் விழணும் அப்பிடின்னு அவசியம் இல்லை. எனக்கு பிடிக்காத ஒருவிஷயத்தில இதுவும் ஒன்னு. பரவாயில்லை உட்காரு."

"இல்லை அம்மா சொல்லியிருக்காங்க..."

"உங்கம்மாவா, பரவாயில்லை நாளைக்கு கேட்டாங்கன்னா விழுந்தேன்னு சொல்லு, என்கிட்ட கேட்டாங்கன்னா நானும் சொல்றேன்." சொல்லிவிட்டு அவளைப் பார்த்தேன். குழப்பமாய் இருப்பதாய்ப் பட்டது, மெதுவாக கட்டிலில் என் அருகில் உட்கார்ந்தவளிடம், "இன்னிக்கு உன்கிட்ட நிறைய பேசணும், பேசலாமா?"

எனக்கு அவள் எப்படிப்பட்ட பெண் என்று தெரியாது, அதுமட்டுமில்லாமல், பெண்களுடனான என் அறிமுகமும் மிகக்குறைவே, என் அம்மாவைத்தவிர நான் பெண்களிடம் நெருக்கமாய்ப் பழகியதில்லை. ஆரம்பத்திலிருந்தே இருபாலரும் படிக்கும் பள்ளி, கல்லூரியில் படித்தாலும் கூடப்படிக்கும் பெண்களுடன் சண்டை போட்டிருக்கிறேனே ஒழிய, சாதாரணமாய் பழகியதில்லை. அந்தப் பெண்களிடம் எதிரி போன்ற ஒரு உருவகத்தையே பெரிதும் எடுத்திருக்கிறேன்.

"ம்ம்ம்..." அவ்வளவுதான் பதில் வந்தது.

"எனக்கு உன்னைப்பத்தி எல்லாம் தெரியணும், உனக்கு என்னென்ன பிடிக்கும், பிடிக்காது, எதைப் பத்தியெல்லாம் தெரிஞ்சிக்க ஆசைப்படுற, என்னைப் பத்தி என்ன தெரியணும். இன்னிக்கு உன்னைப் பத்தி நானும் என்னைப் பத்தி நீயும் தெரிஞ்சிக்கணும். அதுதான் முக்கியம்."

"நான் உங்களை சில கேள்விகள் கேட்கலாமா?" கேட்டுவிட்டு என்னையே பார்த்தாள். அந்தக் கண்களின் உள்ளே சென்று பார்க்க நினைத்தேன், அந்தக் கண்கள் எனக்கு எதையுமே தனியாக விளக்கவில்லை.

"நிச்சயமா, கேளு!"

"உங்களுக்கு எதாவது கெட்ட பழக்கம் இருக்கா?" எனக்கு இந்தக்கேள்வி ஆச்சர்யத்தை அளிக்கவில்லை. எதிர்பார்த்ததுதான், ஆனால் முதல் கேள்வியாக இருக்குமென நினைக்கவில்லை.

"புரியலை, நீ கெட்ட பழக்கம்னு எதைச் சொல்லவர்ற? சிகரெட் பிடிக்கிறது, இல்லை தண்ணியடிக்கிறதப் பத்தி கேக்கறன்னா, கிடையாது. வேற எதையாச்சும் பத்தின்னா குறிப்பா கேட்டாத்தான் சொல்ல முடியும்." சொல்லிவிட்டு சிரித்தேன், ஏனென்றே தெரியாமல்.

"இல்லை நீங்க குறிப்பிட்டதைத்தான் கேட்டேன், ஏன் நீங்க அந்த தப்பையெல்லாம் பண்ணலை?"

ஆச்சர்யமான கேள்வி! பலர் இந்தக்கேள்வியை என்னிடம் கேட்டதில்லை, இந்தக் கேள்விக்கான பதில் எனக்குத் தெரிந்துதான் இருந்தது,

"உண்மையைச் சொல்லவா?"

"அது உங்கள் விருப்பம்." சிரித்தாள். முதல்முறை இப்பொழுதுதான் விகல்பமில்லாமல் அவள் சிரிப்பதாய்ப் பட்டது. கல்யாண மண்டபத்தில் பரிசுப்பொருள்கள் கொடுத்துக்கொண்டிருந்த பொழுது இருந்த அவளுடைய சிரிப்பில் இருந்து தற்போதைய சிரிப்பு வித்தியாசமாய் இருந்தது. அந்தச் சிரிப்பில் ஒரு செயற்கைத்தன்மையிருந்தது.

"சரி சொல்றேன், உண்மையா இல்லையான்னு நீதான் முடிவு பண்ணணும். எங்கப்பா தண்ணியடிப்பாரு, சொல்லப்போனா தினமும்; அதனால் ஏற்படும் பிரச்சனைகளை நேரில் இருந்து பார்த்தவன்ங்கிறதால தண்ணியடிக்க முடியலை. சிகரெட் பத்தி கேட்டீன்னா, என் மாமா சிகரெட் குடிப்பான்; அவன் அதை நிறுத்த முடியாம தவிக்கிறதை நேரில் பார்த்திருக்கேன். இதெல்லாம் ஆரம்பத்தில் நான் தவறு செய்யாம இருந்ததுக்கு காரணம்; இப்ப வரைக்கும் அது தொடருதுன்னா அதுக்கு காரணம்..." நான் அங்கே நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தேன். அவள் மிகவும் ஆர்வமாய் நான் சொல்லப் போகும் பதிலுக்காகக் காத்திருந்தாள்.

"எனக்கு நெத்தி கொஞ்சம் பெரிசுங்கிறதால, ஆரம்பத்திலிருந்தே ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டு. அதனால என்னைக் கல்யாணம் பண்ணிக்கப்போற அழகான பொண்ணுக்கு பரிசா எதையாவது கொடுக்கணும்னு ஆசைப்பட்டேன். அதுதான் இன்னிவரைக்கும் தொடர்ந்துட்டு வர்றேன். இனிமேலும் என்னை நல்லவனா காப்பாதிக்க வேண்டியது உன் பொறுப்பு." சொல்லிவிட்டு நான் சிரிக்க அவள் சிரிக்காமல் என் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

"நம்ப முடியலையா?"

அவள் அதற்கு பதில் சொல்லாமல் அடுத்த கேள்வியில் இறங்கினாள்.

"நீங்க யாரையாவது காதலிச்சீங்களா?" அவள் வாய்தான் பேசியதேயொழிய கண்கள் என் கண்களையே உற்று நோக்கிக் கொண்டிருந்தன; உண்மையை மட்டும் உறிஞ்சக் கூடிய அன்னங்களாய்.

"உண்மையைச் சொல்லணும்னா, இந்தக் கேள்விக்கு பதிலளிக்க சில விளக்கம் வேணும், காதலிச்சீங்களான்னு கேட்டா ரொம்ப பொதுவான விஷயம். சின்ன வயசிலேர்ந்தே எனக்கு நிறைய இனக் கவர்ச்சி இருந்திருக்குது, எட்டாவது படிக்கும் பொழுது பக்கத்தில் பரிட்சை எழுதிய ஆறாவது படிக்கிற பொண்ணு, முதல் முதல்ல பாப் அடிச்சு நான் பாத்த எதிர்த்த மாடிவீட்டுப்பொண்ணு, அந்த பொண்ணு வீட்டுக்கு எதிர் வீட்டில் இருந்த, உன்னை மாதிரியே ஓவியமா தெரிந்த, ஒருகை இல்லாத ஆன்ட்டி, பன்னிரெண்டாம் வகுப்பு படிச்சப்ப கூட வாலிபால் விளையாண்ட பொண்ணு, இப்படி பல பெண்ணுங்களை எனக்கு பிடிச்சிருந்தது; இன்னிக்கு வரைக்கும் பிடிக்கும்; ஆனா ஒன்னு ரெண்டு வார்த்தைகளைத் தவிர அதிகமா இவங்க யார்கிட்டையுமே நான் பேசினது கிடையாது. இல்லை, நான் உண்மையிலேயே யாரையாவது காதலிச்சேனான்னு கேட்டீன்னா இல்லைன்னுதான் சொல்வேன்; அதுக்கும் என்னோட தாழ்வு மனப்பான்மைதான் காரணம்னு வைச்சுக்கோயேன்."

நான் சொல்லச் சொல்ல அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தவளின் முகத்தில் உணர்ச்சியே இல்லையாகையால், "ஏய் என்ன நான் சொன்னதை நம்ப முடியலையா?"

"இல்லை இதைப் பத்தி எனக்கு முன்னாடியே தெரியும்; நீங்கதான்னு நிச்சயமான பிறகு என்கிட்ட தொலைபேசலை; எனக்கு ஏன்னு தெரியாது, நான் நினைச்சேன் ஒருவேளை உங்களுக்கு என்னை பிடிக்கலையோன்னு. உங்கம்மாகிட்ட நான் பேசிக்கிட்டுத் தான் இருந்தேன். அவங்க நீங்க சொன்ன அத்தனையையும் சொன்னாங்க, ஒருவரி விடாம. இன்னோன்னும் சொன்னாங்க."

"என்ன சொன்னாங்க?"

"நீங்க இனிமேலும் தண்ணியடிக்காம, சிகரெட் பிடிக்காம இருக்கிறதுக்கு உத்திரவாதம் தர்றதாகவும் ஆனால் இன்னொரு பொண்ணு பின்னாடி போக மாட்டீங்கங்கறதுக்கு உத்திரவாதம் தரமுடியாதுன்னும், நான்தான் காப்பாதிக்கணும்னும் சொன்னாங்க." சொல்லிவிட்டுச் சிரித்தாள்.

எனக்கும் தெரியும் எங்கம்மா இதை சொல்லியிருப்பார்கள்தான்; அக்கா என்ற ஒருத்தி இல்லாத காரணத்தால் என் சம்மந்தப்பட்ட அத்துனை நிகழ்ச்சிகளும் அம்மாவிற்குத் தெரியும். அதுமட்டுமில்லாமல் நான் அம்மாவை வம்பிழுக்க சில சமயங்களில் அதிகமாகவே என்னை பாதித்த பெண்களைப்பற்றி சொல்லியது கூட காரணமாக இருக்கலாம்.

"நமக்கு நிச்சயம் ஆகியிருந்தாலும், திருமணம் முடிந்தபிறகுதான் பேசவேண்டும் அப்பிடின்னு நினைச்சிக்கிட்டிருந்தேன். அது என் கொள்கை சார்ந்த ஒரு முடிவு. சரி என்னைப் பத்தியே கேட்டுக்கிட்டிருக்கியே, உன்னைப்பத்தி ஏதாச்சும் சொல்லு." நான் கேட்க,

"என்னைப் பத்தி சொல்றதுன்னா, உங்களமாதிரித்தான் எனக்கும் தண்ணியடிக்கிற, தம்மடிக்கிற கெட்ட பழக்கம் கிடையாது. இன்ஃபேக்சுவேஷன், உங்களமாதிரி தூயதமிழ்ல சொல்லணும்னா இனக்கவர்ச்சி இருந்ததுண்டு, அதுவும் உங்கள மாதிரிதான், ஆனா எனக்கு தாழ்வு மனப்பான்மை கிடையாது. மற்றபடிக்கு நிறைய கோவில் குளமுன்னு ஊர் சுத்துவேன், நிறைய கதையடிப்பேன், புஸ்தகம் படிப்பேன். எனக்குன்னு தனியா கொள்கை எதுவும் கிடையாது; அதேமாதிரி கொள்கையைப் பிடிச்சுக்கிட்டு தொங்கமாட்டேன். எனக்காகத்தான் கொள்கை, கொள்கைக்காக நான் கிடையாது. இன்னிக்கு நீளமான தலைமுடியோட இருக்கிறது பிடிக்குதுங்கறதுக்காக வைச்சிருக்கேன், நாளைக்கே தலைவலிக்கிற மாதிரி இருந்ததுன்னா பாப் அடிச்சிட்டு வந்து நிப்பேன்..." அவள் சொல்லிவிட்டு என்னையே பார்த்தாள். நான் இதற்கு பதில் என்ன சொல்றதுன்னு தெரியாம யோசித்துக் கொண்டிருந்தேன்.

"இதுக்கு நீங்க பதில் சொல்லணும் அப்பத்தான், உங்களைப்பத்தி நான் புரிஞ்சிக்க முடியும்." அவள் கேட்டும் நான் யோசித்துக்கொண்டிருந்ததால் தொடர்ந்தவள், "நிச்சயம் ஆன நாள்ளேர்ந்து காத்துக்கிட்டிருந்தேன்; நம்மாளுக்கிட்ட கடலை போடலாம்னு. நீங்க தொலைபேசாததால், காதல் தோல்வி போலிருக்கு, நம்ம தலையில கட்டிவைக்கிறாங்கன்னுதான் நினைச்சேன். இப்படி லூசுத்தனமான கொள்கையிருக்கும்னு நினைக்கலை." அவள் சொல்லிவிட்டுச் சிரித்தாள்.

நானும் லேசாய் சிரித்துவைத்தேன்,

"இங்கப்பாரு நீ இப்படி வெளிப்படையா பேசுறது ரொம்ப பிடிச்சிருக்கு. நீ உன் முடியை பாப் வெட்டிக்கிட்டு வந்தாலும் சரி, இல்லை நான் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்தான் போடுவேன்னு சொன்னாலும் சரி, அது உன்னோட விருப்பம். அதில் எக்காரணம் கொண்டும் நான் தலையிடமாட்டேன். எனக்கு நீ பண்ணவேண்டியதெல்லாம் ஒன்னே ஒன்னுதான்."

அவள் முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒன்று என்பதால் கவனிக்கிறாளா என்று பார்த்துக்கொண்டேன்.

"எங்கம்மா பத்தி நான் சொல்லணும், நான் இன்னிக்கு இந்த நிலைமையில் இருக்கேன்னா அதுக்கு ஒரே காரணம் அம்மாதான்; அடுத்தநாள் உயிரோட இருப்பனான்னே தெரியாத நாட்கள் என்னோட வாழ்கையிலே இருந்திருக்கு, அதிலேர்ந்தெல்லாம் மீண்டு நானும் எங்க குடும்பமும் வந்திருக்குன்னா அதுக்கு ஒரேயொரு காரணம் அம்மாதான். அதனால அம்மாவை மட்டும் நீ அனுசரிச்சுப் போகணும். அதுமட்டும்தான் நான் உன்கிட்ட கேக்குறது, எனக்கும் இந்த பெண்சுதந்திரம் அப்பிடிங்கிற விஷயத்தில் எல்லாம் நம்பிக்கையுண்டு."

நான் சொல்லிமுடித்ததும் பலமாகச் சிரித்தாள்.

"நான் நினைச்சேன், நீங்க சரியான அம்மா புள்ளையாத்தான் இருப்பீங்கன்னு; சரியாத்தான் இருக்கு. இங்கப் பாருங்க எனக்கும் ஒரு அண்ணன் உண்டு; அவனுக்கு கல்யாணம் ஆகி அண்ணி எங்க வீட்டிலையும் இருக்காங்க. அதனால நீங்க பயப்படாதீங்க; நிறைய கதை கட்டுரையெல்லாம் படிச்சு பயந்து போயிருக்கிறீங்கன்னு நினைக்கிறேன். பயப்படாதீங்க உங்கம்மாவை நான் கடிச்சி தின்னுடமாட்டேன். பிரச்சனையே வராதுன்னு சொல்லமாட்டேன், வந்தாலும் நம்ம இரண்டு பேரும் சேர்ந்து சரி பண்ணிடலாம்.

இன்னோன்னு, இந்த பெண் சுதந்திரம் இதிலெல்லாம் உங்களுக்கு நம்பிக்கையிருக்கிறது சந்தோஷமா இருக்கு. கதை கட்டுரையெல்லாம் எழுதுவீங்க போலிருக்கு. ஆனா எனக்கு நம்பிக்கை கிடையாது. நான் பாப் அடிப்பேன்னு சொன்னா, நீங்க உங்க பக்கத்து எதிர்பார்ப்பைச் சொல்லணும், இல்லை என் பொண்டாட்டி பாப்பெல்லாம் அடிக்ககூடாதுன்னோ இல்லை பரவாயில்லை அடிச்சுக்கோன்னோ; அதெல்லாமில்லாம அது உன்னோட விருப்பம்னு சொல்றது எனக்குப் பிடிக்காது. உரிமை எடுத்துக்கணும் என்கிட்ட, அதேபோல்தான் நானும், பெர்முடாஸ் போட்டுக்கிட்டு ரோட்டில் ஆம்பளைங்க நடக்கிறது எனக்கு பிடிக்கலைன்னா, உங்களை நடக்க விடமாட்டேன். அந்த உரிமையை நீங்களும் எடுத்துக்கலாம்.

எனக்கு இந்த விவாகரத்து பண்றதுல எல்லாம் நம்பிக்கையே கிடையாது, இனிமே எனக்கு நீங்கதான், நீங்க மட்டும்தான். அதேமாதிரிதான் உங்களுக்கும் நான் மட்டும்தான், உங்கம்மா சொன்னாங்கறதுக்காக எல்லாம் மணியம் செல்வம் ஓவியம் மாதிரியிருக்குறா இல்லை அஜந்தா ஓவியம் மாதிரியிருக்குறான்னு சொல்லிக்கிட்டு வேறபொண்ணை சைட் அடிக்கலாம்னு நினைச்சீங்க அவ்வளவுதான் சொல்லிட்டேன், பின்னிடுவேன்.

கடைசியா ஒன்னு, நீங்க குறிப்பிட்டதால சொல்றேன். எனக்கு ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போடுறது பிடிக்காது." சொல்லிவிட்டு விழுந்து விழுந்து சிரித்தாள்.

ஆச்சர்யமாய் இருந்தது, வந்தவுடன், "இல்லை கொஞ்சம் எந்திருச்சி நின்னீங்கன்னா..." அப்பிடின்னு திருதிருன்னு முழிச்சிக்கிட்டே கேட்ட பொண்ணா இவள்னு யோசிச்சேன். சந்தேகமாய் இருந்தது; ஆனால் சந்தோஷமாயும் இருந்தது; மனதில் பட்டதை வெளிப்படையாய் பேசிவிடுகிற பெண்கள் எப்பொழுதுமே பிரச்சனையில்லாதவர்கள், என் அம்மாவைப்போல்.

நான் யோசித்துக்கொண்டிருக்க, "என்ன பலத்த யோசனை?"

"இல்லை, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, நல்ல பொண்ணா, கொஞ்சம் எழுந்திருச்சி நிக்கிறீங்களா அப்பிடின்னு கேட்ட பொண்ணா இதுன்னு யோசிச்சேன்." சொல்லிவிட்டு சிரித்தேன்.

"கால்ல விழுறதப் பத்தி கேக்குறீங்கன்னா, இப்பவும் கேக்குறேன் எந்திரிச்சு நில்லுங்கோ நமஸ்காரம் பண்ணிக்கிறேன். எங்கள் வீட்டில் நல்லநாள் பெரியநாள்னா பெரியவங்க காலில் விழுவது சம்பிரதாயம் தான், நானும் ஏன் என் அண்ணணுமே இன்னமும் எங்க மாமா, அத்தை காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது உண்டு, அதனால் புருஷனான உங்கள் காலில் விழுவதிலும் எனக்கு பிரச்சனை கிடையாது. இல்லை நான் அதிகமா பேசுறேன்னு நினைச்சீங்கன்னா, எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை, பழக்கதோஷம்னு வேண்ணா வைச்சுக்கோங்கோ." முகம் லேசாக வாடத் தொடங்கியிருந்தது. நான் அவள் பக்கத்தில் நெருங்கி உட்கார்ந்து கொண்டு, "இல்லம்மா, நான் வேடிக்கையாத்தான் சொன்னேன், நீ உங்கவீட்டில் எப்படி இருப்பியோ அப்படியே இங்கையும் இருக்கலாம். அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் குழந்தைகளைப் பற்றி நீ எதாச்சும் யோசிச்சு வைச்சிருக்கியா, வேலைக்கு போறாப்புல எதுவும் ஐடியா இருக்கா?"

"எனக்குத் தெரிஞ்ச டாக்டர் ஒருத்தங்க கல்யாணத்துக்கு வந்திருந்தாங்க; அவங்க சொன்னாங்க, நம்ம இரண்டுபேருக்கும் குழந்தை பெத்துக்குறதுக்கு இதுதான் நல்ல வயசாம். அதனால தள்ளிப்போடாம பெத்துக்கச் சொன்னாங்க. எங்கம்மாவும் இதைத்தான் சொன்னாங்க; மற்றபடிக்கு நீங்க வேற ஏதாச்சும் யோசிச்சு வைச்சிருந்தா சொல்லுங்க, அதேமாதிரி வேலைக்கு போறாப்புல ஐடியாயெல்லாம் கிடையாது, லட்சியமே அதுதான், நீங்கத்தான் பெரிய கம்பெனியில வேலை பார்க்குறீங்கல்ல. வாங்கிக் கொடுங்க." சொல்லிவிட்டு நக்கலாய்ச் சிரித்தாள்.

"எனக்கும் நாம் சீக்கிரமா குழந்தை பெத்துக்குறதுதான் நல்லதா படுது, உன் வேலையைப் பத்தி கவலைப் படாதே, உனக்கு ஆர்வமிருந்தா போதும், படிப்பு முடிந்தவுடன் வாங்கிரலாம். வேற ஏதாச்சும் கேக்கணும்னா கேளு, இல்லைன்னா ஒரே ஒரு வேண்டுகோள், எனக்கு கொஞ்சம் மின்னஞ்சல் எல்லாம் பாக்க வேண்டியிருக்கு, பத்து நிமிஷம் கொடுததேன்னா பார்த்திடுவேன்." கெஞ்சலாய்ப் பார்த்தேன்.

"அப்பவே சொன்னேன்ல பார்த்துக்கோங்கன்னு, ஆனா ஒன்னு உங்க அம்மா சொன்னாங்க லேப்டாப் உங்க முதல் பொண்டாட்டி மாதிரின்னு; அப்பிடியிருக்காதுன்னு நினைக்கிறேன். அப்பிடித்தான்னா உங்க லாப்டாப்புக்கு நேரம் சரியாயில்லைன்னு அர்த்தம், உங்களை நீங்களே மாத்திக்கோங்க." சொல்லி விட்டு மீண்டும் நக்கலாய்ச் சிரித்தாள்.

"அம்மா தாயே லாப்டாப்பை ஒன்னும் பண்ணீராதம்மா, இனிமே இந்த ரூமிற்குள்ளேயே எடுத்துட்டு வரமாட்டேன். இன்னிக்கு ஒருநாள் மன்னிச்சிரு." இரண்டு கைகளையும் கூப்பி நானும் நக்கலடித்தேன்.

"சரி சரி பொழச்சுப்போங்க, முதல் நாள்னு மன்னிக்கிறேன், நான் இந்த புடவையை கழட்டிவைச்சிட்டு நைட்டி போட்டுட்டு வருவேன்; அதுக்குள்ள பாத்து முடிச்சிருக்கணும். என்ன புரியுதா?" அவள் கேட்டுவிட்டு அங்கிருந்த குளியலறைக்குள் நுழைய, நான், 'ஆகா, சகாக்கள் எல்லாம் சொன்னதையும் மீறி கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்போ?!' என்று யோசிக்க ஆரம்பித்தேன்

http://www.paraparappu.com/latestnews.php/...html?mode=story

Edited by priyan_eelam

அடடா என்னை மாதிரி இருக்கானே...

கதை..கதையம்சம்..வர்ணணை எல்லாம் ஓ.கே..

ஆனால் எனக்கு ஒரு சந்தேகம்..என் கணிப்பில் முதலிரவில் என்னதான் அறிவாளி தெளிவு மிக்கவனாய் இருந்தாலும்..அதிக கேள்விகள்..அறிமுகங்கள்..எல்லா

  • தொடங்கியவர்

பேட்டி எல்லாம் குறைவென எண்ணுகிறேன்..

நீங்க எண்ண சொல்றீங்க...

நீங்க எண்ண சொல்றீங்க என்டு விலங்கவில்லை????

அவர் சொன்னது உங்களுக்கு விளங்காமல் இருகிறது நல்லது...

மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோய்ல் என்று கதையில் ஒன்று வருகிறது. அது தமிழ்நாட்டில் - சென்னை? - இல் இருக்கும் கோயிலா?

நான் 12 வயதில் அங்கு போயுள்ளேன். படி படியாக போய்க்கொண்டே இருக்கும். உச்சத்தில் நின்று பார்க்க நல்லா இருக்கும். ஒவ்வொரு தட்டிலும் ஏராளமான கோயில்கள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடா என்ற எக்ஸ் மாதிரி இருக்காங்களே..... :P :P :P :P :huh::o:mellow:

Edited by chumma....

அடடா என்ற எக்ஸ் மாதிரி இருக்காங்களே..... :P :P :P :P :blink::unsure::blink:

y?

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சொன்னது உங்களுக்கு விளங்காமல் இருகிறது நல்லது...

மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோய்ல் என்று கதையில் ஒன்று வருகிறது. அது தமிழ்நாட்டில் - சென்னை? - இல் இருக்கும் கோயிலா?

நான் 12 வயதில் அங்கு போயுள்ளேன். படி படியாக போய்க்கொண்டே இருக்கும். உச்சத்தில் நின்று பார்க்க நல்லா இருக்கும். ஒவ்வொரு தட்டிலும் ஏராளமான கோயில்கள்...

மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருச்சியில் இருக்கிறார்.

தவறாகச் சொல்லிவிட்டேன் என நினைக்கின்றேன். நான் அப்போது திருச்சி, சென்னை, திருவனந்தபுரம், மற்றும் டெல்கி போய் இருந்தேன். நீங்களும் அங்கு இருந்துள்ளீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

தவறாகச் சொல்லிவிட்டேன் என நினைக்கின்றேன். நான் அப்போது திருச்சி, சென்னை, திருவனந்தபுரம், மற்றும் டெல்கி போய் இருந்தேன். நீங்களும் அங்கு இருந்துள்ளீர்களா?

நான் திருச்சியில் 11 வருடங்கள் குப்பை கொட்டியிருக்கிறனாக்கும்..! :lol:

நீங்க எண்ண சொல்றீங்க என்டு விலங்கவில்லை????

எனக்கும் விளங்கவில்லை உங்களுக்கு யாரும் சொன்னா எனக்கு சொல்லுங்கோ பிரியன்,மாப்பி எனக்கு டவுட் வந்து கிளியர் பண்ணுங்கோ

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக உள்ளது.விகடகவி சொன்ன குளப்பங்கள் படபடப்பு போன்றவற்றை தவிர்ப்பதக்காக இந்தப்பேட்டிகள் இருந்துருக்கலாம் அல்லவா :unsure:

கதை நன்றாக இருக்கிறது.

இந்த விசயத்தில் நான் விகடகவியின் பக்கம்.

Edited by கர்ணன்

ஆகா நான் சொன்னதை ஒருவராவது புரிந்து கொண்டாரே..

அவருக்கு மட்டும்தான் அனுபவம் இருக்கு... :wub:

  • கருத்துக்கள உறவுகள்

பிரியன் ஈழம் அவர்களே இந்த முதலிரவு என்கிற கதை பரபரப்பு கொம் என்கிற தளத்தினில் படித்தேன் அந்த தளம் உங்களினதா அல்லது அந்த தளத்திற்கு நீங்கள் எழுதிய கதையா இந்த கதை இல்லவிடில் கதைறை எடுத்த மூல தளத்தை தயவு செய்து தவறாமல் இணைத்து விடவும். ஏனெனில் ஒருவனின் படைப்பில் மற்றவர்கள் பெயர் வாங்கும் போது அதை படைத்தவனிற்கு என்னவலி இருக்குமென்பது எனக்கு அனுபவத்தில் தெரிந்தது நன்றி

http://www.paraparappu.com/latestnews.php/...html?mode=story

குந்தவை வந்தியத்தேவன்தான் இவரோ..என்னமோ.. :lol:

  • தொடங்கியவர்

பிரியன் ஈழம் அவர்களே இந்த முதலிரவு என்கிற கதை பரபரப்பு கொம் என்கிற தளத்தினில் படித்தேன் அந்த தளம் உங்களினதா அல்லது அந்த தளத்திற்கு நீங்கள் எழுதிய கதையா இந்த கதை இல்லவிடில் கதைறை எடுத்த மூல தளத்தை தயவு செய்து தவறாமல் இணைத்து விடவும். ஏனெனில் ஒருவனின் படைப்பில் மற்றவர்கள் பெயர் வாங்கும் போது அதை படைத்தவனிற்கு என்னவலி இருக்குமென்பது எனக்கு அனுபவத்தில் தெரிந்தது நன்றி

http://www.paraparappu.com/latestnews.php/...html?mode=story

Naan eluthuvathillai, vaasaitthen, naalajirunthathu,,, ningalum vaasikalame endu ninaitthen. nanri.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.