Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுமந்திரனின் நாக்கு கரி நாக்கு! கட்சியில் இருந்து தூக்கி எறியுங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சுமந்திரனின் நாக்கு கரி நாக்கு! கட்சியில் இருந்து தூக்கி எறியுங்கள்: மறவன்புலவு க. சச்சிதானந்தன்
[

1961 அறப்போர் காலத்திலிருந்து இன்றுவரை தமிழ்த் தேசியம் ஈழத்தமிழர் நலம் எனத் தமிழரசுக் கட்சி சார்ந்து பணிபுரிந்து கொண்டிருக்கிற மறவன்புலவு க. சச்சிதானந்தன் கோருகிறேன்
சுமந்திரனைத் தமிழரசுக் கட்சியை விட்டுத் தூக்கி எறியுங்கள் என 2018 நவம்பர் 6இல் நான் திரு மாவை சேனாதிராஜா அவர்களுக்கு எழுதினேன்.

 

 

 

 

 

 

 

 

 

1961 அறப்போர் காலத்திலிருந்து இன்றுவரை தமிழ்த் தேசியம் ஈழத்தமிழர் நலம் எனத் தமிழரசுக் கட்சி சார்ந்து பணிபுரிந்து கொண்டிருக்கிற மறவன்புலவு க. சச்சிதானந்தன் கோருகிறேன் சுமந்திரனைத் தமிழரசுக் கட்சியை விட்டுத் தூக்கி எறியுங்கள் என 2018 நவம்பர் 6இல் நான் திரு மாவை சேனாதிராஜா அவர்களுக்கு எழுதினேன்.

    

சுமந்திரனின் நாக்கு , கரி நாக்கு. தமிழை தமிழரை தமிழ் தேசியத்தை உணராத அறியாத புரியாத தெரியாத விரும்பாத ஒருவரின் நாக்கே சுமந்திரனின் நாக்கு என நான் அன்று கூறினேன்.

எனவே தமிழரசுக் கட்சியில் இருந்து நீக்குங்கள் எனத் தலைவருக்குக் கடிதம் எழுதினேன்.

அதற்கு முன்பு 30.12.2015இல் வட மாகாணசபையை முடக்குவதற்கு அக்காலப் பிரதமர் இரணில் விக்கிரமசிங்கர் எடுத்த முயற்சிக்கு சுமந்திரன் கைகொடுத்தார் எனக் குற்றம்சாட்டி எழுதினேன்.

சென்னையில் 100 அடி சாலையில் அமர்ந்திருந்த உயர்தர விடுதியொன்றில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டுக் கிளையினர் 2015இல் நடத்திய கருத்தரங்கில் முதல் முதலாகச் திரு சுமந்திரனைச் சந்தித்தேன். ஈழத்தமிழரின் சார்பில் அவர் அங்கு பேசினார்.

அங்கே அவரின் பேச்சைக் கேட்டேன். இவருக்கும் தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ்த் தேசியத்திற்கும் என்ன தொடர்பு? இத்தகைய கரிநாக்கராக இருக்கிறாரே என மனத்துள் சினந்தேன்.

1961 முதலாக தமிழ் தமிழர் தமிழ் தேசியம் ஈழத்தமிழரின் நன்மை என்பவற்றுக்காக தமிழகத்தில் நானும் இணைந்து சிறிது சிறிதாகக் கட்டியெழுப்பிய ஈழத்தமிழர் ஆதரவுக் கொள்கையைப் போட்டு உடைத்தார் 2015இல் சென்னையில் சுமந்திரன்.

சிங்களத் தொலைக்காட்சி பேட்டியில் சுமந்திரன் கொடுத்த விடைகள் கரிநாக்கராக அவரை உறுதி செய்துள்ளன.

தமிழர் இயல்பிலேயே அறநெறியாளர். ஆயுதங்களை 400 ஆண்டுகளாக அறியாதவர். அவர்களை ஆயுதம் தூக்குமாறு தூண்டியோர் 1948இல் விடுதலைக்குப் பின் வந்த சிங்கள அரசுகள். சிங்கள அரசுகளும் சிங்களக் குண்டர்களும் தொடர்ச்சியாக 1952இல் 56இல் 58இல் 61இல் 72இல் 74இல் 77இல் 82இல் 83 நடத்திய தமிழர் மீதான கொடும் பயங்கரவாதத்தை அரச பயங்கரவாதத்தை நினைவுகூரச் சுமந்திரன் தவறிவிட்டார்.

அப்பாவிகளாக இருந்த தமிழ் இளைஞர்களை ஆயுத தாரிகள் ஆக்கிய அரச பயங்கரவாதத்தை, சிங்களத் தலைவர்கள் பலரையும் ஒப்புக்கொண்ட எதார்த்த நிலையை சுமந்திரன் அடிக்கோடிட்டுக் கூறாமல் விட்டார்.

ஏனெனில் அவர் தமிழ் தமிழர் தமிழ்த்தேசியம் என்பவற்றைக் கிஞ்சித்தும் அறியாதவர் கொஞ்சமும் உணராதவர்.

இப்பொழுதும் காலம் கடந்து விடவில்லை.

தமிழரசுக் கட்சியின் தலைவர் திரு மாவை சேனாதிராஜா அவர்களே முதற்கட்டமாக அவரைக் கட்சியிலிருந்து இடை நிறுத்துங்கள். விசாரணையைத் தொடங்குங்கள். அவர் வேட்பாளர் இல்லை என்பதை மக்களுக்குத் தெரிவியுங்கள்.

அவருக்கு வாக்களிக்க வேண்டாம் எனத் தமிழ் மக்களிடம் கூறுங்கள்.

வரலாற்றை அறியாத தமிழ் தேசியத்தில் ஊறாத தமிழ்த் தேசியத்தில் ஈடுபாடற்ற ஒருவரை,

அகத்தே முரட்டுக் குணத்துடன் கொடிய நோக்கத்துடன் ஓநாயாகிப் புறத்தே ஆட்டுத்தோல் போர்த்திய பொய்யர்களான போலிகளை அடையாளம் கண்டு ஒதுக்குங்கள் என இயேசுபிரான் கூறியதாக மத்தேயு 7:15இல் கூறியதை இங்கு நினைவு கூர்வது பொருத்தம்

https://www.seithy.com/breifNews.php?newsID=245842&category=TamilNews&language=tamil

அடேயப்பா  பைபிள்  வசனத்தை  கூறியே  நீங்கள் அவரை தூக்க வைக்க சொன்னது என்னை ஆச்சரியப்படுத்தியது. அது அவரைபற்றியது அல்ல உங்களைப்பற்றியது.

அவர் ஒரு கிறிஸ்தவர் அவரை அகற்றுங்கள் என்று சொல்லியிருந்தால் மக்கள் சில வேளைகளில் அதை ஏற்றுக்கொண்டிருப்பார்கள். ஏன் என்றால் நீங்கள் யார் என்றும் , உங்கள் கொளகை என்ன என்றும் மக்கள் அறிந்திருக்கிறார்கள்.

இப்போது சுமந்தரன் என்னும் அவல் கிடைத்திருக்கிறது வாயை மெல்லுவதட்கு. அவர் மலசல கூடம் செல்வதும் செய்தியாக வந்தால் ஆச்சரியப்படுவதட்கில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனிண் கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை என்பது உண்மை.. ஆனால் இதைக் கூறுவதற்கு சச்சியர் தகுதியற்றவர் என்பது அதைவிட உண்மை. 😂

4 hours ago, nunavilan said:

தமிழர் இயல்பிலேயே அறநெறியாளர். ஆயுதங்களை 400 ஆண்டுகளாக அறியாதவர். அவர்களை ஆயுதம் தூக்குமாறு தூண்டியோர் 1948இல் விடுதலைக்குப் பின் வந்த சிங்கள அரசுகள். சிங்கள அரசுகளும் சிங்களக் குண்டர்களும் தொடர்ச்சியாக 1952இல் 56இல் 58இல் 61இல் 72இல் 74இல் 77இல் 82இல் 83 நடத்திய தமிழர் மீதான கொடும் பயங்கரவாதத்தை அரச பயங்கரவாதத்தை நினைவுகூரச் சுமந்திரன் தவறிவிட்டார்.

சச்சிதானந்தன் ஐயாவும் சுமந்திரனின் நரிக்குணத்தை பல இடங்களில் நேரில் அறிந்தவர் என்ற வகையில் சுமந்திரனின் நரிக்குணத்தை போட்டுடைத்துள்ளார்.

ஆனா தமிழர் உரிமைகளை அடகு வைச்சு பெட்டிபெட்டியா அன்பளிப்புகளை சொறிலங்கா அரசிடம் வாங்கியவங்கள், சொறிலங்கா அரசிடம் கிடைத்த சொகுசு மாளிகையில் வாழ்பவங்கள், இன்னமும் பலதை தங்களுக்கு எதிர் பார்ப்பவங்கள் சொறிலங்கா முகவர்களிடம் அடங்கியே போக விரும்புவாங்கள்.

21 hours ago, Kapithan said:

சுமந்திரனிண் கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை என்பது உண்மை.. ஆனால் இதைக் கூறுவதற்கு சச்சியர் தகுதியற்றவர் என்பது அதைவிட உண்மை. 😂

இவர் முதலில் தன்னை திருத்தினால் உலகம் தானாகவே திருந்தும். கருத்து சொல்லுவதட்கும் ஒரு தகுதி வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Vankalayan said:

இவர் முதலில் தன்னை திருத்தினால் உலகம் தானாகவே திருந்தும். கருத்து சொல்லுவதட்கும் ஒரு தகுதி வேண்டாம்.

யார் என்னையா கூறுகிறீர்கள் 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Vankalayan said:

இவர் முதலில் தன்னை திருத்தினால் உலகம் தானாகவே திருந்தும். கருத்து சொல்லுவதட்கும் ஒரு தகுதி வேண்டாம்.

 

1 hour ago, Kapithan said:

யார் என்னையா கூறுகிறீர்கள் 😂😂

அட... வலிய வந்து, தொப்பியை 🤠 எடுத்துப்  போட்ட, கபிதனை   நினைக்க பாவமாக உள்ளது. :grin:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

 

அட... வலிய வந்து, தொப்பியை 🤠 எடுத்துப்  போட்ட, கபிதனை   நினைக்க பாவமாக உள்ளது. :grin:

திரியில் கடி Kஞ்சம் குறைந்து விட்டது. ஒரு சிறிய முயற்சி அவ்வளவுதான் 😂

  • கருத்துக்கள உறவுகள்

இனி சுமத்திரனின் பிரச்சனையை அங்குள்ள சனம்  முடிவெடுக்கும் அவ்வளவுக்கு அவரின் சுத்துமாத்துக்கள் சனத்துக்கு விளங்கி விடும் ஆனால் செத்த பாம்பை அடிக்குமாம்போல் கோமாவில் இருந்து எழும்பியதை போல் சச்சியர்  அறிக்கை விடுவது .

என்னிக்கு வேட்டியை கழட்டி சபையில் அமர்ந்தாரோ அன்றே அவரின் சுய ரூபம் அனைவருக்கும் விளங்கும் . இவர் உண்மையில் தமிழர்களில் கரிசனை உள்ளவர் என்றால் கிழக்கில் உடைக்கப்படும் கோவில்களுக்கு குரல் கொடுக்கணும்  கண்ணியாவில்  உடைக்கப்பட்ட பிள்ளையார் கோவிலை மறுபடியும் கட்டிவிக்கணும்  அது முடியாது இவரால் டெல்லி கூட்டத்தின் ஏவல்களுக்கு ஏட்ப  சவுண்டு விடும் ஆள் முக்கியமாய் வடகிழக்கு தமிழர்களுக்குள் பிரிவினையை உருவாக்க கொண்டுவரப்பட்டவர். 

23 hours ago, Kapithan said:

யார் என்னையா கூறுகிறீர்கள் 😂😂

ஐயோ உங்களை இல்லை அப்பா. அந்த காவியை சொன்னேன். உங்கள் கருத்துக்கு உருவேற்றினேன். சில வேளைகளில் எனது தமிழ் பிழையாகிவிடுகின்றது. மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Vankalayan said:

ஐயோ உங்களை இல்லை அப்பா. அந்த காவியை சொன்னேன். உங்கள் கருத்துக்கு உருவேற்றினேன். சில வேளைகளில் எனது தமிழ் பிழையாகிவிடுகின்றது. மன்னிக்கவும்.

அட நான் நகைச்சுவையாகத்தான் குறிப்பிட்டேனய்யா. நீர்தான் பிழையாக விளங்கிக் கொண்டீர். 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Vankalayan said:

ஐயோ உங்களை இல்லை அப்பா. அந்த காவியை சொன்னேன். உங்கள் கருத்துக்கு உருவேற்றினேன். சில வேளைகளில் எனது தமிழ் பிழையாகிவிடுகின்றது. மன்னிக்கவும்.

 

9 minutes ago, Kapithan said:

அட நான் நகைச்சுவையாகத்தான் குறிப்பிட்டேனய்யா. நீர்தான் பிழையாக விளங்கிக் கொண்டீர். 😂

ஹி... ஹீ.. ஹி ....  🤣  வங்காலையானுக்கும், கபிதனுக்கும்..... 
இந்தத் திரியை, அணைய விடாமல் பார்த்துக் கொள்ளும்... பொறுப்பு வழங்கப் படுகின்றது.  :grin:

21 hours ago, தமிழ் சிறி said:

 

ஹி... ஹீ.. ஹி ....  🤣  வங்காலையானுக்கும், கபிதனுக்கும்..... 
இந்தத் திரியை, அணைய விடாமல் பார்த்துக் கொள்ளும்... பொறுப்பு வழங்கப் படுகின்றது.  :grin:

அண்மைக்காலமாக உறைப்பான செய்திகள் ஒண்டையும் காணவில்லை. இருந்தாலும் பொழுது போக வேண்டும்தானே.

அநேகமாக இனி நேரம் கிடைக்காதுபோல தெரிகின்றது. இருந்தாலும் காலையில் 6 : 30 இட்கும் 8 :00 மணிக்கும் இடையில்தான் இங்கு வருவேன். இன்னும் கொழும்பில் ஊரடங்கு உத்தரவு நீக்கப்படவில்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.