Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Minneapolisல் பொலிசாரால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்ட மனிதன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


The National Guard has been activated in Washington D.C. to help protect the White House
From CNN’s Greg Clary and Cat Gloria
The National Guard has been activated in Washington, D.C. to assist police handling protests around the White House, according to a statement from the DC National Guard on Facebook.

The DC National Guard (DCNG) ultimately reports to the President but was activated at the direction of the Secretary of the Army, according to the statement.

https://www.cnn.com/us/live-news/george-floyd-protests-05-30-20/index.html

image.gif

image.gif

image.gif

image.gif

image.gif

image.gif

image.gif

image.gif

image.gif

image.gif

image.gif

image.gif

image.gif

image.gif

image.gif

image.gif

image.gif

image.gif

image.gif

image.gif

image.gif

image.gif

image.gif

image.gif

https://www.cnn.com/us/live-news/george-floyd-protests-05-30-20/h_14f63a8756d1020cf821227fba10b8ad

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மினியாபொலிஸ் | கொலையாளியான பொலிஸ்காரரின் மனைவி விவாகரத்துக் கோருகிறார்!

 
 

மினியாபொலிஸ் நகரத்தில் வெள்ளை இனப் பொலிசார் ஒருவர் கறுப்பினத்தவர் ஒருவரைக் கைதுசெய்யும்போது கழுத்தை நெரித்ததில் அவர் இறந்துபோனதைத் தொடர்ந்து கடந்த மூந்று நாட்களாகப் பல நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேற்று மினியாபொலிஸ் நகர பொலிஸ் நிலையம் தாக்கி எரியூட்டப்பட்டிருந்தது.

ஃபுளோயிட் கைதாகும்போது
ஃபுளோயிட் (இடது) , ஷோவின் காலில்
மிதிபட்டிருக்கும் ஃபுளோயிட் ( வலது)

கைது செய்யும்போது மரணமடைந்த ஜோர்ஜ் ஃபுளோயிட் தொடர்பான காணொளி நாடெங்கும் ஏற்படுத்திவரும் எதிர்ப்பலைகளின் காரணமாக ஃபுளோயிட்டைக் கைது செய்த பொலிஸ்காரரான டெறெக் ஷோவின் மீது மூன்றாம் நிலைக் கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இன் நிலையில் பொலிஸ்காரர் டெறெக் ஷோவினின் மனைவி கெலி, அவரது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக ஃபொக்ஸ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

“திரு ஃபுளோயிட் அவர்களின் மரணத்தினால் கெலி ஷோவின் மனமுடைந்துபோயுள்ளார். ஃபுளோயிட்டின் மரணத்தால் துன்புறும் அவரது குடும்பம், அவரை நேசிப்பவர்கள், அவரது இழப்பையுற்றுக் க்வலைகொண்டிருக்கும் அத்தனை பேருக்கும் தனது ஆழ்ந்த அஞ்சலியை அவர் தெரிவிக்கிறார்” என கெலி ஷோவினின் வழக்கறிஞர்கள் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின்போது டெறெக் ஷோவினுடன் கடமையில் ஈடுபட்டிருந்த மூன்று பொலிஸ்காரர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் எதுவும் இதுவரை பதியப்படவில்லை.

https://marumoli.com/மினியாபொலிஸ்-கொலையாளிய/?fbclid=IwAR0w6nQbTqSA8lvUxZAY1__loOFeuL4hmA6Y9Cl2YSaBa8-zxF94sRI63k0

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nunavilan said:

 

இன் நிலையில் பொலிஸ்காரர் டெறெக் ஷோவினின் மனைவி கெலி, அவரது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக ஃபொக்ஸ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

நல்லதொரு முடிவு. ஒரு மிருகத்திடமிருந்து தூர விலகியிருப்பது நல்லது

  • கருத்துக்கள உறவுகள்

போலீஸ் காவலில் இறந்த கறுப்பரினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட்:  எதிர்ப்பில் பற்றி எரியும் அமெரிக்கா

protests-over-george-floyd-s-death-tear-gas-and-burning-cars-in-u-s-cities-as-unrest-continues  

போலீஸ் அதிகாரி ஒருவர் கருப்பரினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவரின் கழுத்தில் 8 நிமிடங்களுக்கு மேலாக தன் பூட்ஸால் மிதித்த காட்சி வைரலாக ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணச் செய்தி அமெரிக்காவை தட்டி எழுப்பிவிட்டது.

ஜார்ஜ் ஃபிளாய்ட் போலீஸ் வன்முறைக்குப் பலியானார் என்று வன்முறைகள் ஆங்காங்கே வெடிக்கத் தொடங்கியுள்ளன. இந்த ஒரு சம்பவம் மட்டும் காரணமல்ல அமெரிக்காவில் தலைவிரித்தாடும் நிறவெறிகளுக்கு எதிரான போராட்டமாகவும் அங்கு மக்கள் கொதித்தெழுந்துள்ளனர். மினியாபொலீசில் துவங்கிய ஆர்ப்பாட்டம், நியூயார்க், துல்சா, லாஸ் ஏஞ்சலஸ் ஆகிய இடங்களிலும் பல போலீஸ் வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டன.

கரோனா லாக்டவுன் காலக்கட்டத்திலும் கருப்பரின் இறப்பு பெரிய போராட்டங்களை அங்கு கிளப்பியுள்ளது. போலீஸ் ஒருவர் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பரின மனிதனின் கழுத்தை தன் பூட்ஸ் காலினால் நெரித்த காட்சி வைரலானதையடுத்து மினியாபொலிசில் வன்முறை வெடித்து ஆங்காங்கே கடைகள் சூறையாடப்பட்டன. கட்டிடங்களின் கண்ணாடி ஜன்னல்கள் உடைத்து எறியப்பட்டு கண்ணாடிச் சில்லுகள் சாலைகள் முழுதும் சிதறிக்கிடந்தன.

 

1590898042298.jpg

பல ஆண்டுகளாக கருப்பரினத்தவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் என்ற குரல் ஓங்கத் தொடங்கி அமெரிக்காவின் தேசிய விவகாரமாக இது பூதாகாரம் எடுத்துள்ளது.

மக்கள் எதிர்ப்பெனும் பூகம்பம் வெடித்த வெள்ளிக்கிழமை இரவு பலதரப்பட்ட மக்களும் தெருவில் இறங்கி அமைதிவழியில் எதிர்ப்பைக் காட்டினர். முதல் நாள் போராட்டமும் அமைதியாகத்தான் தொடங்கியது, ஆனால் திடீரென வன்முறைகள் தொடங்கின.

நகரங்கள் வாரியாகத் தகவல்கள்

வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகிலேயே புலனாய்வு அமைப்புக்கு எதிராகவும் அதிபர் ட்ரம்புக்கு எதிராகவும் கடும் கோஷங்கள் எழுந்தன. பாதுகாப்பு தடுப்புகளையும் அவர்கள் தள்ளிவிட்டு உள்ளே நுழைய முயன்றனர். ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் ஏவு நிகழ்ச்சியில் பங்கேற்ற ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்பி பத்திரிகையாளர்களிடம் பேசாமலேயே உள்ளே சென்றார்.

பிலடெல்பியாவில் அமைதி போராட்டம் வன்முறையாக மாற 13 போலீஸார் படுகாயமடைந்தனர். 4 போலீஸ் வாகனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. பல இடங்களிலும் ஆங்காங்கே தீவைப்பு வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.

ஓக்லஹாமாவின் துல்சா கிரீன்வுட் மாவட்டத்தில் உள்ள 1921 கறுப்பர்கள் படுகொலை நிகழ்ந்த இடத்தில் ஆர்ப்பாட்டம் கடுமையாக நடைபெற்றது. இங்கு 2016-ல் போலீஸ் அதிகாரியினால் கொல்லப்பட்ட கருப்பர் கிரட்சர் என்பவர்பெயரைக் குறிப்பிட்டு மக்கள் கோஷம் எழுப்பினர்.

லாஸ் ஏஞ்சலஸில் ‘கருப்பர் உயிர்கள் முக்கியம்’ என்ற கோஷங்கள் விண்ணைப்பிளந்தன. போலீஸார் தடியடி மற்றும் ரப்பர் புல்லட்களை பிரயோகித்தனர். அதே இடத்தில் போலீஸ் காரின் முன் கண்ணாடி உடைக்கப்பட்டது, ஒரு கார் எரிக்கப்பட்டது.

இந்தப் போராட்டம் தீ போல் பரவ 13 அமெரிக்க நகரங்களில் ஊரடங்கு அமலாகியுள்ளது. 16 நகரங்களில் இதுவரை 1400 பேர் கைது செய்யப்படனர். இதில் லாஸ் ஏஞ்சலஸில் மட்டும் 500 பேர் கைது.

https://www.hindutamil.in/news/world/557151-protests-over-george-floyd-s-death-tear-gas-and-burning-cars-in-u-s-cities-as-unrest-continues-2.html

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் போராட்டக்காரர்களுக்கு நடுவே லாரியை செலுத்திய நபர்: அலறியடித்து ஓடிய மக்கள்

truck-in-florida-drives-through-people-protesting-black-man-s-killing

கருப்பரினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் என்ற நபர் போலீஸ் காவலில் இறந்ததையடுத்தும் போலீஸ் அதிகாரி ஒருவர் அவரது கழுத்தில் தன் பூட்ஸ் காலால் அழுத்திததும் கருப்பரின மக்களை மட்டுமல்லாது பலரையும் தட்டி எழுப்பியுள்ளது.

அமெரிக்காவின் 16 நகரங்கள் பற்றி எரிகின்றன. நிறைய கைதுகள், வன்முறைகள், தீவைப்புச் சம்பவங்கள், பல நகரங்களில் ஊரடங்கு என்று அமெரிக்காவில் இயல்பு வாழ்க்கை மேலும் பாதிப்படைந்து கிடக்கிறது.


இந்நிலையில் புளோரிடா மாகாணம் டாலஹஸ்ஸீ என்ற இடத்தில் பொதுமக்கல் ஆர்ப்பாட்ட நடத்திக் கொண்டிருக்கும் போது வேகமாக லாரியை ஒரு நபர் கூட்டத்தினிடையே லாரியை செலுத்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடிய காட்சி அங்கு கடும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது லாரி மீது பாட்டில் ஒன்று வந்து விழுந்ததாகவும் அதனால் ட்ரைவர் ஆத்திரமடைந்து லாரி மக்களிடையே வேகமாகச் செலுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த லாரி தப்பிச் செல்ல பார்த்தது, ஆனால் மக்கள் அதை விரட்டிப்பிடித்து நிறுத்திய பிறகு போலீஸார் அவரைக் கைது செய்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

இதில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

லாரி ஓட்டுநனருக்கு காப்பு மாட்டிய போலீஸார் அவர் பெயரை வெளியிட மறுத்ததோடு அவர் மீது வழக்கு உண்டா என்ற கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை.

கருப்பரினத்தைச் சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர், “எங்கள் நாடு கரோனா நோயில் உள்ளது, ஆனால் நாங்கள் தெருவுக்கு வந்திருக்கிறோம், ஆர்ப்பாட்டம் இல்லாமல் எங்கள் குரல்கள் அவர்களுக்குக் கேட்கவே கேட்காது” என்றார்.

மொத்தத்தில் கொந்தளிப்பில் அமெரிக்க மக்கள் என்பதையே இந்தச் சம்பவங்கள் பறைசாற்றுகின்றன.

https://www.hindutamil.in/news/world/557156-truck-in-florida-drives-through-people-protesting-black-man-s-killing-1.html

 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎29‎-‎05‎-‎2020 at 17:20, உடையார் said:

இதற்கு இன்னும் பதில்லையா நிர்வாகத்திடம்? சாமனியன் அப்படி என்னதான் எழுதிவிட்டார் தூக்குமளவுக்கு🙄. தப்பாக இதுவரை கருத்து எழுதியதை பார்க்கவில்லை

புரிந்துணர்வுக்கு நன்றிகள் பல உடையார் …

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, உடையார் said:

நல்லதொரு முடிவு. ஒரு மிருகத்திடமிருந்து தூர விலகியிருப்பது நல்லது

உடையார்! இதெல்லாம் சனத்தை அமைதிப்படுத்துறதுக்கான நாடகம் எண்டு நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

கருப்பு இனத்தவர் சாவுக்கு நீதிகேட்டு இங்கிலாந்திலும் போராட்டம் வலுக்கிறது

கருப்பு இனத்தவர் சாவுக்கு நீதிகேட்டு இங்கிலாந்திலும் போராட்டம் வலுக்கிறது

 

அமெரிக்காவில் கருப்பர் இனத்தினர், வெள்ளை இன போலீசாரால் கொல்லப்படுவது தொடர்கதை ஆகி வருகிறது.

 
அந்த வரிசையில், மின்னசோட்டா மாகாணம், மின்னபோலிஸ் நகரத்தில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற 46 வயதான கருப்பர் போலீஸ் காவலில் கொல்லப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

அவரது மரணத்துக்கு நீதி கேட்டு நாடு மின்னசோட்டா, நியூயார்க், அட்லாண்டா என பல பகுதிகளிலும் கருப்பர் இன மக்கள் திரண்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டங்களின்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஆங்காங்கே மோதல்கள் வெடித்தன.
 
லாஸ் ஏஞ்சல்ஸ், பிலடெல்பியா மற்றும் அட்லாண்டா உள்பட 25 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவை தொடர்ந்து இங்கிலாந்திலும் ஜார்ஜ் பிளாய்டு சாவுக்கு நீதி கேட்டு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மத்திய லண்டனில் உள்ள டிரபால்கர் சதுக்கம் மற்றும் பட்டார்சியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் வெளிப்புறத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், ஜார்ஜ் பிளாய்டுக்கு நீதி வேண்டுமென கோஷமிட்டனர்.

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/06/01035513/1565106/Black-Lives-Matter-protests-spread-to-UK.vpf

  • கருத்துக்கள உறவுகள்
கருப்பின நபருக்கு ஆதரவாக அமெரிக்காவின் 25 நகரங்களுக்கு பரவிய கலவரம்

கருப்பின நபருக்கு ஆதரவாக அமெரிக்காவின் 25 நகரங்களுக்கு பரவிய கலவரம்
 

வாஷிங்டன்

அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட கருப்பின நபருக்கு ஆதரவாக நியூயார்க் முதல் லாஸ் ஏஞ்சல்ஸ் வரை முக்கியமான 25 நகரங்களில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரும்பாலான நகரங்களில் ஆர்ப்பாட்டம் கலவரமாக வெடித்துள்ளதுடன், போலீஸ் வாகனங்கள், கட்டிடங்கள் என ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.கலவரங்களை கட்டுப்படுத்த இந்த நகரங்களில் ஊரடங்கு அமுலுக்கு கொண்டுவந்துள்ளதுடன், ராணுவமும் தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 1992 ஆம் ஆண்டு இதேபோன்ற ஒரு கலவரத்திற்கு பின்னர் தற்போது தேசிய பாதுகாப்பு படையினரை களமிறக்கியுள்ளனர்.மட்டுமின்றி மாகாண ஆளுநர் கலவரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அவசர நிலையை பிரகடப்படுத்தியுள்ளார்.

மொத்தம் 11 மாகாணங்களும், கொலம்பியா மாவட்டமும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலைக்குள் தேசிய பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் தேசிய பாதுகாப்பு படையினரின் உதவிக்கு அழைப்பு விடுக்கும் மாகாணங்களில் கலிபோர்னியா, ஜார்ஜியா, மினசோட்டா, மிசோரி, நெவாடா, ஓஹியோ, டென்னசி, டெக்சாஸ், உட்டா மற்றும் வாஷிங்டன் மாகாணமும் அடங்கும்.இதனிடையே உத்தரவு பிறப்பிக்கப்படும் 4 மணி நேரத்தில் ராணுவம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் வகையில் தயார் நிலையில் இருக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் பல கலவரத்திற்கு இலக்காகியுள்ளன.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/01074101/George-Floyd-protests-spread-far-and-wide-at-least.vpf

வெள்ளைமாளிகையை முற்றுகையிட்டு போராட்டம்:பதுங்கு குழிக்கு அழைத்துச் செல்லப்பட்ட டிரம்ப்
வெள்ளைமாளிகையை முற்றுகையிட்டு போராட்டம்:பதுங்கு குழிக்கு அழைத்துச் செல்லப்பட்ட டிரம்ப்
 

அமெரிக்காவின் மின்னபொலிஸ்  நகரில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் போலீஸ் அதிகாரியால் கொலைசெய்யபட்டார். இந்தவிவகாரத்தில் பல்வேறு மாகாணங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் கலவரம் வெடித்துள்ளது. 

அமெரிக்கா முழுவதும் 40 நகரங்களுக்கு மேல் கலவரம் பரவி உள்ளது. 40 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.


கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜனாதிபதி டிரம்பின் உத்தியோகப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது, மிகவும் கொடூரமான நாய்களை ஏவியிருப்பேன் எனவும், அவர்களை துப்பாக்கி குண்டுகள் பதம் பார்த்திருக்கும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.ஆனால் வெள்ளை மாளிகையில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தவில்லை எனவும்,
அவர்கள் மிக சாமர்த்தியமாக ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்கொண்டதாகவும் டிரம்ப் பாராட்டி இருந்தார்.

வெள்ளிக்கிழமை இரவு போராட்டக்காரர்கள் வெள்ளை மாளிகைக்கு வெளியே கூடியிருந்தபோது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையின் நிலத்தடி பதுங்கு குழிக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டார் என நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மெலனியா டிரம்ப் மற்றும் பரோன் டிரம்ப் ஆகியோரும் அவருடன் அழைத்துச் செல்லப்பட்டார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

 

https://www.w3newspapers.com/india/tamil/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Jerry resists arrest.
Jerry steals officers baton.
Beats cops with their batons.
Steals their police car.
Police never fire a single shot at Jerry.
No stun gun. Nothing.
American police know how to use restraint. They do.
For some reason it’s just always with Jerry.
Never with Rayshard.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.