Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“க” ஏன் தமிழின் முதலெழுத்தானது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வியக்க வைக்கும் ஆராய்ச்சி பல மொழி ஓப்பிட்டுடன் அகத்தான்.

நக்கீரன் - இதுவரை இதன் பொருளை அறிவில்லை

தின்னு - நினைத்தேன் ஊர் வழக்க பேச்சு என, நல்ல விளக்கம் கொடுத்துள்ளீர்கள்

ஓகம் - எத்தனை ஒப்பிடுகள் இந்த சொல்லிற்கு,

நன்றி பகிர்வுக்கு🙏, புதுசு புதுசாக பல சொற்கள், தமிழில் கற்றது ஒரு கைபிடியே

On 25/7/2020 at 03:11, அகத்தான் said:

“க” ஏன் தமிழின் முதலெழுத்தானது. Part 8:

 எழுத்து, சுமேரியாவில் எமதுகீறல் மொழி, கிரந்தம், சமஸ்கிர்தம், தேவநாகரி, ஓம், ஓகே(Ok)

இன்னும் பல.

  • Replies 67
  • Views 9.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
On 25/7/2020 at 23:44, உடையார் said:

வியக்க வைக்கும் ஆராய்ச்சி பல மொழி ஓப்பிட்டுடன் அகத்தான்.

நக்கீரன் - இதுவரை இதன் பொருளை அறிவில்லை

தின்னு - நினைத்தேன் ஊர் வழக்க பேச்சு என, நல்ல விளக்கம் கொடுத்துள்ளீர்கள்

ஓகம் - எத்தனை ஒப்பிடுகள் இந்த சொல்லிற்கு,

நன்றி பகிர்வுக்கு🙏, புதுசு புதுசாக பல சொற்கள், தமிழில் கற்றது ஒரு கைபிடியே

உடையார், உங்கள் ஒருவரது பதில், ஆதரவு மட்டுமே போதும், தொடர்வேன்.

நன்றிகள்.

நீங்கள் உடையார் இல்லை மனத்துக்கண் மாசிலன் ஆன "பெருவுடையார்".

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 28/7/2020 at 02:51, அகத்தான் said:

எங்கே உங்கள் பதிவுகளை காணவில்லை கனகாலமாக???.

இங்கு ஒரு சிலரின் காழ்புணர்வால் சொந்த படைப்புகளையும் கேள்விகுள்ளாக்கி தூரத்துவதில்தான் குறி.. இந்த நிலை எப்ப மாறுமோ🤔

தேவநாகரியை தீவு நாகரியாக்கி குமரிக்கண்ட மாயையுடன் கோர்த்த கற்பனை அற்புதம்.

  • தொடங்கியவர்
7 hours ago, உடையார் said:

எங்கே உங்கள் பதிவுகளை காணவில்லை கனகாலமாக???.

இங்கு ஒரு சிலரின் காழ்புணர்வால் சொந்த படைப்புகளையும் கேள்விகுள்ளாக்கி தூரத்துவதில்தான் குறி.. இந்த நிலை எப்ப மாறுமோ🤔

நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம். நுனிப்புல் மேயும் ஒரு சிலருக்காக எழுதப்படவில்லை. கவலைப்படாதீர்கள். 

ஒரு இடைவெளி தேவைப்பட் டது.

விரைவில் அடுத்தது வரும்.

  • தொடங்கியவர்
2 hours ago, இணையவன் said:

தேவநாகரியை தீவு நாகரியாக்கி குமரிக்கண்ட மாயையுடன் கோர்த்த கற்பனை அற்புதம்.

அர்த்தமுள்ள “தீவு” நாகரியை, அர்த்தமேயில்லாத, கற்பனையில் வந்த “தேவ” நாகரியாக்கி, தேவர்களால் அருளப்பட்டது என்று அவர்கள் சொல்ல இவர்கள் கேட்டு, குருட்டுத்தனமாக நம்பி, ஏற்றுக்கொண்டு, 2000  வருடமாக சலாம் போட்டு வாழும் மாயையை என்னென்று சொல்வது.

  • கருத்துக்கள உறவுகள்

அகத்தான்,

உங்களுக்கு தமிழில் மிகுந்த ஆர்வம் உள்ளது. மொழியியல் பற்றி ஆய்வு செய்ய நிறைய முயற்சிக்கிறீர்கள். அதிக நேரமும் செலவிடுகிறீர்கள். உங்களது ஆய்வை பற்றி 12 பேர் மட்டுமே கருத்திட்டிருப்பது பற்றி கவலைப்பட்டு இருக்கிறீர்கள். அது நியாயமான கவலை.

On 25/6/2020 at 18:11, அகத்தான் said:

நன்றி உடையார்.
ஆனால் ஒரு ஆதங்கம், ஆக 12 பேர்தான் கருத்து எழுதியிருக்கிறார்கள். என்ன செய்வது தமிழின் நிலை அப்படியிருக்குது. ஊக்கப்டுத்தினால்தான் எழுத எண்ணம் வரும். 

ஒருவேளை இது போர்த்தேங்காயாக இருக்குமோ  என்று குழப்பமாயிருக்குது. எனக்கு, எனக்கு.

உங்களது ஆய்வு இந்த விதமான அணுகுமுறையிலேயே போகுமாக இருந்தால், மொழியியல் ஆய்வாளர்கள், அதிலும் தமிழ்மொழியின் ஆரம்பம், பரம்பல் போன்ற துறைகளில் நிபுணத்துவம் கொண்டவர்கள்  உங்களது ஆய்வை ஏற்றுக் கொள்ளும் சாத்தியம் குறைவு என்பதே எனது கருத்து. அதனை நிச்சயமாக நீங்கள் மாற்றி அவர்களை உங்கள் ஆய்வை ஏற்றுக் கொள்ள வைக்க முடியும்.

ஏன் தமிழ்மொழியின் ஆரம்பம், பரம்பல் போன்ற துறைகளில் நிபுணத்துவம் கொண்டவர்கள்  உங்களது ஆய்வை ஏற்றுக் கொள்ளும் சாத்தியம் குறைவு?

இதனை ஒரு உதாரணம் மூலம் விளக்குவதே சிறப்பானது. 

On 12/6/2020 at 22:00, அகத்தான் said:

புதியது:  Hydroxychloroquine | Quinine | Siddha Medicine

Chloro என்ற சொல் கிரேக்க சொல்லான Chloris (Khloris) என்ற சொல்லில் இருந்து வந்ததென்ற உலகமே ஏற்றுக் கொண்ட கருத்தை நீங்களும் தெரிவித்து இருக்கிறீர்கள். பின்னர் Khloris என்பது தமிழில் உள்ள குழைகள் (இலைகுழைகள்) என்ற சொல்லில் இருந்து வந்ததென்றும் இலை குழைகள் பச்சை,  Chloris பச்சை நிறத்துக்கான கிரேக்க சொல்லு, ஆகவே, Khloris குழை என்பதில் இருந்தே வந்ததென்பதற்கு இதுவே ஆதாரம் என்று நிறுவி உள்ளீர்கள். இந்த நிறுவுதலில் உள்ள தவறுகளை பார்க்கலாம்.

1. Chloris என்பது பழுப்பு (yellowish green) நிறம் - பச்சை அல்ல.

2. குழைகள் பச்சை நிறம். பச்சையை நாம் தமிழில் “பச்சை” என்கிறோமே அன்றி சிங்களவர் போல කොළ “கொழ” நிறம் என்று சொல்வதில்லை. உங்கள் நிறுவுதல் உண்மையானால் Khloris என்ற சொல் சிங்களத்தில் உள்ள කොළ “கொழ” வில் இருந்தன்றோ வந்திருக்கும் சாத்தியம் அதிகம்? பச்சையில் இருந்தோ அல்லது பழுப்பில் இருந்தோ நிச்சயமாக வரவில்லை.

3. கிரேக்க வரலாற்றில் Chloris எப்படி உருவாயிற்று என்று சொல்கிறார்கள் என்பதை பார்ப்போமா?

கிரேக்க புராணங்களில், மெலிபோயா என்றும் அழைக்கப்படும் "பச்சை-மஞ்சள்", "வெளிர் பச்சை", "வெளிர்", "பாலிட்" அல்லது "புதிய" என்று பொருள்படும் χλωρός க்ளோரோஸிலிருந்து குளோரிஸ் (/ (klɔːrɪs /; கிரேக்க Χλωρίς க்ளாரிஸ்) நியோப் மற்றும் ஆம்பியனின் பதினான்கு குழந்தைகளில் ஒருவர் (நியோபிட்ஸ்).

புராணம்

நியோப் அவர்களின் தாய் லெட்டோவை அவமதித்ததற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆர்ட்டெமிஸ் மற்றும் அப்பல்லோ நியோபிட்களைக் கொன்றபோது மெலிபோயா மட்டுமே தப்பினார். மெலிபோயா மிகவும் பயந்து, நிரந்தரமாக வெளிர் நிறமாகி, தனது பெயரை குளோரிஸ் ("வெளிறிய ஒருவர் ") என்று மாற்றினார். [1] [2] [3]

https://en.m.wikipedia.org/wiki/Chloris_of_Thebes

https://www.coursehero.com/file/p4rmq5r1/The-normal-translation-of-the-Greek-word-chloros-into-English-definitely-should/

தவறான ஆய்வு

உங்களது ஆய்வில் வெளிர் பச்சை, பழுப்பு, பச்சை போன்ற தமிழ்  சொற்களை ஏன் கிரேக்கம் பயன்படுத்தாமல் சிங்களத்தில் உள்ள කොළ “கொழ” என்பதை பயன்படுத்தினார்கள் என்று நீங்கள் விளக்காமல் அதுவே தமிழ் என்று கூறி இருக்கிறீர்கள். 

மேலும், தமது மொழியில் இந்த சொல் எவ்வாறு உருவானது என்று கிரேக்கர் தமது வரலாற்றில் எப்படி பதிவு செய்துள்ளனர் என நீங்கள் ஆய்வு செய்யவில்லை. 

மற்ற ஆய்வாளர்களின் அங்கிகாரத்தை பெற இவ்வாறான ஆய்வுகள் அவசியமானவை. இவ்வாறான ஆய்வுகள் தவிர்க்கப்படும் போது உங்கள் ஆய்வு, உங்கள் கருத்தை மட்டுமே உண்மை என நிறுவ (Confirmation Bias) செய்யப்படும் தவறான ஆய்வாக அடையாளம் காணப்பட்டு தவிர்க்கப்படும்.

Edited by கற்பகதரு

  • தொடங்கியவர்
57 minutes ago, கற்பகதரு said:

அகத்தான்,

உங்களுக்கு தமிழில் மிகுந்த ஆர்வம் உள்ளது. மொழியியல் பற்றி ஆய்வு செய்ய நிறைய முயற்சிக்கிறீர்கள். அதிக நேரமும் செலவிடுகிறீர்கள். உங்களது ஆய்வை பற்றி 12 பேர் மட்டுமே கருத்திட்டிருப்பது பற்றி கவலைப்பட்டு இருக்கிறீர்கள். அது நியாயமான கவலை.

உங்களது ஆய்வு இந்த விதமான அணுகுமுறையிலேயே போகுமாக இருந்தால், மொழியியல் ஆய்வாளர்கள், அதிலும் தமிழ்மொழியின் ஆரம்பம், பரம்பல் போன்ற துறைகளில் நிபுணத்துவம் கொண்டவர்கள்  உங்களது ஆய்வை ஏற்றுக் கொள்ளும் சாத்தியம் குறைவு என்பதே எனது கருத்து. அதனை நிச்சயமாக நீங்கள் மாற்றி அவர்களை உங்கள் ஆய்வை ஏற்றுக் கொள்ள வைக்க முடியும்.

ஏன் தமிழ்மொழியின் ஆரம்பம், பரம்பல் போன்ற துறைகளில் நிபுணத்துவம் கொண்டவர்கள்  உங்களது ஆய்வை ஏற்றுக் கொள்ளும் சாத்தியம் குறைவு?

இதனை ஒரு உதாரணம் மூலம் விளக்குவதே சிறப்பானது. 

Chloro என்ற சொல் கிரேக்க சொல்லான Chloris (Khloris) என்ற சொல்லில் இருந்து வந்ததென்ற உலகமே ஏற்றுக் கொண்ட கருத்தை நீங்களும் தெரிவித்து இருக்கிறீர்கள். பின்னர் Khloris என்பது தமிழில் உள்ள குழைகள் (இலைகுழைகள்) என்ற சொல்லில் இருந்து வந்த தென்றும் இலை குழைகள் பச்சை,  Chloris பச்சை நிறத்துக்கான கிரேக்க சொல்லு, ஆகவே, Khloris குழை என்பதில் இருந்தே வந்ததென்பதற்கு இதுவே ஆதாரம் என்று நிறுவி உள்ளீர்கள். இந்த நிறுவுதலில் உள்ள தவறுகளை பார்க்கலாம்.

1. Chloris என்பது பழுப்பு (yellowish green) நிறம் - பச்சை அல்ல.

2. குழைகள் பச்சை நிறம். பச்சையை நாம் தமிழில் “பச்சை” என்கிறோமே அன்றி சிங்களவர் போல කොළ “கொழ” நிறம் என்று சொல்வதில்லை. உங்கள் நிறுவுதல் உண்மையானால் Khloris என்ற சொல் சிங்களத்தில் உள்ள කොළ “கொழ” வில் இருந்தன்றோ வந்திருக்கும் சாத்தியம் அதிகம்? பச்சையில் இருந்தோ அல்லது பழுப்பில் இருந்தோ நிச்சயமாக வரவில்லை.

3. கிரேக்க வரலாற்றில் Chloris எப்படி உருவாயிற்று என்று சொல்கிறார்கள் என்பதை பார்ப்போமா?

கிரேக்க புராணங்களில், மெலிபோயா என்றும் அழைக்கப்படும் "பச்சை-மஞ்சள்", "வெளிர் பச்சை", "வெளிர்", "பாலிட்" அல்லது "புதிய" என்று பொருள்படும் χλωρός க்ளோரோஸிலிருந்து குளோரிஸ் (/ (klɔːrɪs /; கிரேக்க Χλωρίς க்ளாரிஸ்) நியோப் மற்றும் ஆம்பியனின் பதினான்கு குழந்தைகளில் ஒருவர் (நியோபிட்ஸ்).

புராணம்

நியோப் அவர்களின் தாய் லெட்டோவை அவமதித்ததற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆர்ட்டெமிஸ் மற்றும் அப்பல்லோ நியோபிட்களைக் கொன்றபோது மெலிபோயா மட்டுமே தப்பினார். மெலிபோயா மிகவும் பயந்து, நிரந்தரமாக வெளிர் நிறமாகி, தனது பெயரை குளோரிஸ் ("வெளிறிய ஒருவர் ") என்று மாற்றினார். [1] [2] [3]

https://en.m.wikipedia.org/wiki/Chloris_of_Thebes

https://www.coursehero.com/file/p4rmq5r1/The-normal-translation-of-the-Greek-word-chloros-into-English-definitely-should/

பதிவுக்கு நன்றி.

“1. Chloris என்பது பழுப்பு (yellowish green) நிறம் - பச்சை அல்ல.” 

இங்கு பச்சை, பழுப்பு என்பதல்ல விடயம். குழை என்பதே விடயம். மேலும் இலைகள் எல் லா நிறத் திலும் உள்ளன.

Orange நிறம் என்பது orange பழத்திலிருந்துதான் வந்தது.

chlorophyll பச்சையம்: Ancient Greek χλωρός (khlōrós, “pale green”) and φύλλον (phúllon, “leaf”).

புல்லு => φύλλον (phúllon, “leaf”). 

இயல் தமிழில், கிராமப் புறங்களில் கொழ என்பதை நீங்கள் அறியவில்லையா, இதுவே சிங்களத்திலும் பாவிக்கப்படுகிறது, மேலும் சிங்களமானது தமிழின் ஒரு திரிந்த வடிவமே. சிங்களத்திலும் மற்றைய மொழிகளிலும் இருப்பது கொச்சைத் தமிழே. 90% கொச்சைத் தமிழே. சிங்களவர்களில் பெரும்பான்மையோர் ஆதித் தமிழர்களே.

கொழவிற்கு சிங்களத்தில் மூலக்கருத்து இல்லை. ஓரொலியிலிருந்துதான் பல ஒலிச்சொல் உருவானது. முதலாவது videoவைப் பாருங்கள்.

சிங்களத்திலோ, கிரேக்க மொழியிலோ: கொ, என்றால் என்ன? என்றால் என்ன? அவர்களுக்குத் தெரியாது.

“2. குழைகள் பச்சை நிறம். பச்சையை நாம் தமிழில்பச்சைஎன்கிறோமே அன்றி சிங்களவர் போல කොළகொழநிறம் என்று சொல்வதில்லை.

சிங்களவர்கள் இலை - கொழையைப் பார்த்துத்தான், இலை நிறம் என்றுதான் சொல்கிறார்கள், Orange நிறம் என்பதைப்போல. றத் பாட்ட - இரத்த நிறம்.

நாம் பச்சை என்பதற்கும் ப + ச் + ச என்று விளக்கமிருக்குது, அது இலையைப்பார்த்து இல்லை.

“3. கிரேக்க வரலாற்றில் Chloris எப்படி உருவாயிற்று என்று சொல்கிறார்கள் என்பதை பார்ப்போமா?  கிரேக்க புராணங்களில், “ -

கொ, என்றால் என்ன? என்றால் என்ன என்று சொல்கிறார்களா?

கிரேக்கப் புராணங்கள், சம்ஸ்கிருதப் புராணங்களைப் போலத்தான், புழுகு மூட் டை. புராணக் கதைகள் ஆய்வுக்கு உதவாது, நம்புவது உங்கள் இஸ்டம். 

தனது பெயரை குளோரிஸ் ("வெளிறிய ஒருவர் ") என்று மாற்றினார்”-   ஏன், என்ன காரணத்திற்காகவெளிறியதைகுளோரிஸ் என்று சொன்னார்.

வெளிறியதைக் குறிக்க குளோரிஸ் என்ற சொல்லை ஏன் தெரிவு செய்தார்.

"வெளிர்", "பாலிட்" அல்லது "புதிய" என்று பொருள்படும் χλωρός க்ளோரோஸிலிருந்து குளோரிஸ்…….”-

- Χλωρός = கு+ளோ+ரி+ ஸ் என்பது "வெளிர்", "பாலிட்" அல்லது "புதிய" என்று எப்படி பொருள்படும்?

கிரேக்க மொழியில்: கு என்றால் என்ன?, ளோ என்றால் என்ன?,ரி என்றால் என்ன? , ஸ் என்றால் என்ன? அவர்களுக்குத் தெரியாது. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, அகத்தான் said:

கிரேக்க மொழியில்: கு என்றால் என்ன?, ளோ என்றால் என்ன?,ரி என்றால் என்ன? , ஸ் என்றால் என்ன? அவர்களுக்குத் தெரியாது. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

எனக்கும் தெரியாது அகத்தான். இவை போன்ற கேள்விகளுக்கு பதில் இல்லாத ஆய்வை நீங்கள் வெளியிடும் போது அந்த ஆய்வு ஏற்றுக்கொள்ளப்படும் சாத்தியம் குறைவு. அதைப் பற்றி நீங்கள் அக்கறை கொள்ளாவிட்டால், அது உங்கள் தெரிவு. 

Edited by கற்பகதரு

  • தொடங்கியவர்
19 minutes ago, கற்பகதரு said:

எனக்கும் தெரியாது அகத்தான். இவை போன்ற கேள்விகளுக்கு பதில் இல்லாத ஆய்வை நீங்கள் வெளியிடும் போது அந்த ஆய்வு ஏற்றுக்கொள்ளப்படும் சாத்தியம் குறைவு. 

"கு என்றால் என்ன?, ளோ என்றால் என்ன?,ரி என்றால் என்ன? , ஸ் என்றால் என்னஅவர்களுக்குத் தெரியாது" - “இவை போன்ற கேள்விகளுக்கு பதில்” - தமிழில் இருக்கிறது. அதை வெளிக்கொணர்வதே எனது ஆய்வின் நோக்கம்.

எனது ஆய்வு ஒரு புதிய முயற்சி, ஓரொலி மூலச்சொல்லை அடிப்படையாகக் கொண்டது. இதுவரை யாரும் இப்படி ஆய்வு செய்யவில்லை. ஏற்றுக்கொள்ளும் காலம் வரும்.

இந்த ஆய்வு scientific ஆனது, அதாவது basic elements in chemistry போல, மூல வேர்ச்சொற்களை பற்றியது.

முதலாவது video இல் தெளிவாக விளக்கியுள்ளேன். அது பற்றி கருத்து சொல்லுங்கள், நேரமிருந்தால்.

“உங்களது ஆய்வை பற்றி 12 பேர் மட்டுமே கருத்திட்டிருப்பது பற்றி கவலைப்பட்டு இருக்கிறீர்கள். அது நியாயமான கவலை” -  நன்றி, ஆனால் ஏற்றுக்கொள்ளச் சொல்லவில்லை, கருத்துக் கூறும்படிதான் எதிர்பார்த் தேன்..

“அந்த ஆய்வு ஏற்றுக்கொள்ளப்படும் சாத்தியம் குறைவு” – theory விளங்கினால் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, அகத்தான் said:

நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம். நுனிப்புல் மேயும் ஒரு சிலருக்காக எழுதப்படவில்லை. கவலைப்படாதீர்கள். 

ஒரு இடைவெளி தேவைப்பட் டது.

விரைவில் அடுத்தது வரும்.

உங்களை கண்டதில் மிக்க மகிழ்ச்சி, நேரமிருக்கும் போது உங்கள் ஆய்வை எங்களுடன் பகிருங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அகத்தான் said:

“அந்த ஆய்வு ஏற்றுக்கொள்ளப்படும் சாத்தியம் குறைவு” – theory விளங்கினால் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும்.

உங்களது முதலாவது பதிவையும் பார்த்தேன். குறிப்பாக, "வெள்ளை" என்ற சொல்லுக்கும் கிழக்கு ஐரோப்பிய மொழியில் உள்ள வெள்ளை என்ற சொல்லை அவர்கள் சொல்லும் விதமும் அச்சொட்டாக ஒரே விதம். ஒரே அர்த்தம். ஒலியிலும் நீங்கள் கூகிள் மொழிபெயர்ப்பு எடுத்து போட்டு இருக்கலாம்.

இவ்விதமான ஆய்வுக்கு ஒரு துறையே (Paleolinguistics) இருக்கிறது. பெருமளவு ஆய்வாளர்கள் இப்படியான ஆய்வுகளை செய்து இருக்கிறார்கள். ஆனால் அவை பற்றிய சர்ச்சைகளும் உள்ளன.

https://en.wikipedia.org/wiki/Paleolinguistics

  • தொடங்கியவர்
On 20/9/2020 at 01:09, கற்பகதரு said:

அவர்களது சர்ச்சைக்குக் காரணம்: அங்குஓரொலி மூலம்” அடிப்படையாக இல்லை.
Nostratic family இன் மூலச் சொற்கள் ஓரொலி இல்லை!
  • தொடங்கியவர்
On 20/9/2020 at 01:09, கற்பகதரு said:

உங்களது முதலாவது பதிவையும் பார்த்தேன். குறிப்பாக, "வெள்ளை" என்ற சொல்லுக்கும் கிழக்கு ஐரோப்பிய மொழியில் உள்ள வெள்ளை என்ற சொல்லை அவர்கள் சொல்லும் விதமும் அச்சொட்டாக ஒரே விதம். ஒரே அர்த்தம். ஒலியிலும் நீங்கள் கூகிள் மொழிபெயர்ப்பு எடுத்து போட்டு இருக்கலாம்.

இவ்விதமான ஆய்வுக்கு ஒரு துறையே (Paleolinguistics) இருக்கிறது. பெருமளவு ஆய்வாளர்கள் இப்படியான ஆய்வுகளை செய்து இருக்கிறார்கள். ஆனால் அவை பற்றிய சர்ச்சைகளும் உள்ளன.

https://en.wikipedia.org/wiki/Paleolinguistics

வெள்ளை மட்டுமல்ல, Beauty என்னும் சொல்லும்வெள்ளை” யிலிருந்தே வந்திருக்கிறது. 
Beauty: Latin: bellus (male), bella (female) 
Latin bellus => Old French biau, bel => Middle French beau => English beauty 

Asturian: bellu

Catalan: bell

Chinese: bái

Dalmatian: bial

French: beau

Friulian: biel

Galician: belo

Istriot: biel, bielo

Italian: bello, bella

Norman: bieau

Occitan: bèl, bèu

Portuguese: belo

Romansh: bel, bi

Sardinian: bedhu, bellu

Sicilian: beddu

Spanish: bello

Venetian: beło 

வெள்ளை மட்டுமல்ல, “கருப்பு” வைப் பாருங்கள்:

Tamil: karu

Azerbijani – qara
Belorussian – čorny
Bulgarian – cheren
Catalan – negre
Croatian- crna
Czeck – černá
Italian – nero – (Tamil -niram)
Japanese – Kuro
Macidonian – crna
Mangolian – khar
Polish – czarny
Russian – chernyy
Serbian – crn
Slovak – čerň
Slovenian – črn
Spanish – negro
Turkish- kara
Ukranian – chornyy, сажа
Uzbek – qora

இச் சொற்கள் வணிக மூலமாகப் பரவியிருக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
On 19/9/2020 at 16:45, கற்பகதரு said:

அகத்தான்,

உங்களுக்கு தமிழில் மிகுந்த ஆர்வம் உள்ளது. மொழியியல் பற்றி ஆய்வு செய்ய நிறைய முயற்சிக்கிறீர்கள். அதிக நேரமும் செலவிடுகிறீர்கள். உங்களது ஆய்வை பற்றி 12 பேர் மட்டுமே கருத்திட்டிருப்பது பற்றி கவலைப்பட்டு இருக்கிறீர்கள். அது நியாயமான கவலை.

உங்களது ஆய்வு இந்த விதமான அணுகுமுறையிலேயே போகுமாக இருந்தால், மொழியியல் ஆய்வாளர்கள், அதிலும் தமிழ்மொழியின் ஆரம்பம், பரம்பல் போன்ற துறைகளில் நிபுணத்துவம் கொண்டவர்கள்  உங்களது ஆய்வை ஏற்றுக் கொள்ளும் சாத்தியம் குறைவு என்பதே எனது கருத்து. அதனை நிச்சயமாக நீங்கள் மாற்றி அவர்களை உங்கள் ஆய்வை ஏற்றுக் கொள்ள வைக்க முடியும்.

ஏன் தமிழ்மொழியின் ஆரம்பம், பரம்பல் போன்ற துறைகளில் நிபுணத்துவம் கொண்டவர்கள்  உங்களது ஆய்வை ஏற்றுக் கொள்ளும் சாத்தியம் குறைவு?

இதனை ஒரு உதாரணம் மூலம் விளக்குவதே சிறப்பானது. 

Chloro என்ற சொல் கிரேக்க சொல்லான Chloris (Khloris) என்ற சொல்லில் இருந்து வந்ததென்ற உலகமே ஏற்றுக் கொண்ட கருத்தை நீங்களும் தெரிவித்து இருக்கிறீர்கள். பின்னர் Khloris என்பது தமிழில் உள்ள குழைகள் (இலைகுழைகள்) என்ற சொல்லில் இருந்து வந்ததென்றும் இலை குழைகள் பச்சை,  Chloris பச்சை நிறத்துக்கான கிரேக்க சொல்லு, ஆகவே, Khloris குழை என்பதில் இருந்தே வந்ததென்பதற்கு இதுவே ஆதாரம் என்று நிறுவி உள்ளீர்கள். இந்த நிறுவுதலில் உள்ள தவறுகளை பார்க்கலாம்.

1. Chloris என்பது பழுப்பு (yellowish green) நிறம் - பச்சை அல்ல.

2. குழைகள் பச்சை நிறம். பச்சையை நாம் தமிழில் “பச்சை” என்கிறோமே அன்றி சிங்களவர் போல කොළ “கொழ” நிறம் என்று சொல்வதில்லை. உங்கள் நிறுவுதல் உண்மையானால் Khloris என்ற சொல் சிங்களத்தில் உள்ள කොළ “கொழ” வில் இருந்தன்றோ வந்திருக்கும் சாத்தியம் அதிகம்? பச்சையில் இருந்தோ அல்லது பழுப்பில் இருந்தோ நிச்சயமாக வரவில்லை.

3. கிரேக்க வரலாற்றில் Chloris எப்படி உருவாயிற்று என்று சொல்கிறார்கள் என்பதை பார்ப்போமா?

கிரேக்க புராணங்களில், மெலிபோயா என்றும் அழைக்கப்படும் "பச்சை-மஞ்சள்", "வெளிர் பச்சை", "வெளிர்", "பாலிட்" அல்லது "புதிய" என்று பொருள்படும் χλωρός க்ளோரோஸிலிருந்து குளோரிஸ் (/ (klɔːrɪs /; கிரேக்க Χλωρίς க்ளாரிஸ்) நியோப் மற்றும் ஆம்பியனின் பதினான்கு குழந்தைகளில் ஒருவர் (நியோபிட்ஸ்).

புராணம்

நியோப் அவர்களின் தாய் லெட்டோவை அவமதித்ததற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆர்ட்டெமிஸ் மற்றும் அப்பல்லோ நியோபிட்களைக் கொன்றபோது மெலிபோயா மட்டுமே தப்பினார். மெலிபோயா மிகவும் பயந்து, நிரந்தரமாக வெளிர் நிறமாகி, தனது பெயரை குளோரிஸ் ("வெளிறிய ஒருவர் ") என்று மாற்றினார். [1] [2] [3]

https://en.m.wikipedia.org/wiki/Chloris_of_Thebes

https://www.coursehero.com/file/p4rmq5r1/The-normal-translation-of-the-Greek-word-chloros-into-English-definitely-should/

தவறான ஆய்வு

உங்களது ஆய்வில் வெளிர் பச்சை, பழுப்பு, பச்சை போன்ற தமிழ்  சொற்களை ஏன் கிரேக்கம் பயன்படுத்தாமல் சிங்களத்தில் உள்ள කොළ “கொழ” என்பதை பயன்படுத்தினார்கள் என்று நீங்கள் விளக்காமல் அதுவே தமிழ் என்று கூறி இருக்கிறீர்கள். 

மேலும், தமது மொழியில் இந்த சொல் எவ்வாறு உருவானது என்று கிரேக்கர் தமது வரலாற்றில் எப்படி பதிவு செய்துள்ளனர் என நீங்கள் ஆய்வு செய்யவில்லை. 

மற்ற ஆய்வாளர்களின் அங்கிகாரத்தை பெற இவ்வாறான ஆய்வுகள் அவசியமானவை. இவ்வாறான ஆய்வுகள் தவிர்க்கப்படும் போது உங்கள் ஆய்வு, உங்கள் கருத்தை மட்டுமே உண்மை என நிறுவ (Confirmation Bias) செய்யப்படும் தவறான ஆய்வாக அடையாளம் காணப்பட்டு தவிர்க்கப்படும்.

நீங்கள் ஆட்டுக்கு குழை வெட்டி போட்டதே இல்லையா?

சிங்களமே தமிழை தழுவி வந்தது ... அதை சிங்களவர்களே ஒத்துக்கொள்கிறார்கள் 
நீங்கள் ஏன் சிங்கள மொழி கிரேக்கத்துக்கு மூலமாக இருக்க கூடாது என்கிறீர்கள்.

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

தாய் – தமிழ்த்தாய் | Nostratic Studies |கு.அரசேந்திரன்| மூலமொழி ஆய்வுத்தொடர் -2 | Door – சொல் வரலாறு

தமிழின் “கதவு” என்னும் சொல், ஆங்கிலத்தில் “door” என வழங்கப்படுகிறது. இச் சொல், ஆங்கிலத்தில் மட்டுமின்றி ‘thyra’ in Greek, ‘thur’ in German, ‘tor’ in Old High German, ‘daur’ in Gothic, ‘dvara’ in Sanskrit என்றவாறு  வழங்குவதைக் கால்டுவெல் உறவுபடுத்தியுள்ளார். மேற்குறிப்பிட்ட சொற்கள் அனைத்தையும் ஓர் மொழிக்குடும் பச்  சொல் உறவாகவே கீழை-மேலை இந்தோ-ஐரோப்பிய வேர்ச்சொல் அகராதிகள் காட்டுகின்றன.

வெட்டுதல்  எனப் பொருள் படும் “துமி” என்னும் பழந்தமிழ்ச் சொல்லே இரண்டு எனப் பொருள் படும்  “துவார” என்னும் சமற்கிருதச் சொல்லிற்கும், “door” என்னும் ஆங் கிலச் சொல்லிற்கும் மூலம்  என்பதை விளக்கும் முனைவர் கு.அரசேந்திரனாரின் பொழிவு இது. (2014ஆம் ஆண்டு செம்மொழித் தமிழாய்வு  நடுவண் நிறுவனத்திற்கு முனைவர் கு.அரசேந்திரன் அளித்த ஆய்வேட்டில் இப்பொழிவின் விரிவைக் காண லாம்)

The Tamil word  “கதவு-kathavu” is door in English . According to Robert Caldwell, English word “door”, Greek word “thyra”, German word “thur”, Old high German word “tor”, Gothic word “daur” and Sanskrit word “dvara” are cognate.The East and West Indo-European etymological dictionaries stated that above words were originated from one language fam ily.

An antediluvian Tamil word “tumi – துமி”, denoting  “vettuthal-வெட்டுதல்” cutting✂️ , gave birth to the west Indo-European word tumi-thuvi-tuva denoting “two” and to the East Indo-European word “duvara” denoting door. In this webinar, Dr.G.Arasendiran will be presenting his etymological research findings on the word “door”. (We can see the elaborate comment ary on the word “door” in  Dr.G.Arasendiran’s research project of 2014 submitted to the ‘Central institute of classical Tamil’)

22 ஆகஸ்ட் 2020 அன்று ‘zoom’ செயலி மூலம் இணைய வழி நடந்த கலந்துரையாட லின் சுருக்க வடிவம்.

ஆக்கம்: தாய்-தமிழ்த்தாய்க் குழு

https://www.ilakku.org/தாய்-தமிழ்த்தாய்-nostratic-studies-கு-அர/

  • 2 months later...
  • 1 month later...
  • தொடங்கியவர்

சிவராத்திரி பற்றிய ஒரு பதிவு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.