Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கெர்சன்பழமே?எனிக்கிடைக்குமா எங்கள் பழம்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று(25.06.20) எங்கள் வீட்டில் இருந்து (நெதர்லாந்து) 20 கிலோமீற்றர் தூரத்தில்அமைந்துள்ள கெர்சன்பழமரத்தோட்டம் (நெதர்லாந்து மொழியில்  Kers ஆங்கிலத்தில்Cherry) 

போய் நாங்களே புடுங்கி பழத்துக்கான பணம் கொடுத்து வந்தோம். வரும்போது  ஊரின் பழய நினைவுகள் வந்து என்னை வாட்டியது

கெர்சன்பழமே?எனிக்கிடைக்குமா எங்கள் பழம்..!

🍒

கைப்பான வேம்பதிலும் 

கனி மஞ்சல் 

பழம் இனிக்கும் 

வெய்யில் எரிகையிலும்

வேம்பேறிப் பழம் தின்ற..

அக்கால நினைவு வந்து

அழுகிறேன் இவ்வேளை.

கரும்பனையின் 

பனம் பழத்தை

காடியினில் 

குளைத் தெடுத்து

விரல் இடுக்கில் 

தேன் வடிய

விரும்பி உண்ட..

அக்கால நினைவு வந்து

அழுகிறேன் இவ்வேளை.

ஈச்சம் பழக் காலம் 

இனிப்பொழுக

எறும்பு மொய்க்கும்

கூசாமல் கை விட்டு 

கூரிய முற்கள் குத்தி

உதிரம் வடிந்தாலும் 

உணர்வினிக்க பழம் தின்ற..

அக்கால நினைவு வந்து

அழுகிறேன் இவ்வேளை.

இரும்பாக.. 

வளர்ந்து நிற்க்கும் 

பாலை மரம் கூட

பாலொட்ட தேனினிக்கும்.

கிளிநொச்சி பாதையிலே 

கிளை முறித்து பழம் தின்ற..

 அக்கால நினைவு வந்து

அழுகிறேன் இவ்வேளை.

நவராத்திரி விழாக்காலம்

நாவல் பழுத்துதிரும்

வன்னிமண்னில்

மரம் வளைத்து

வாயூற உண்ட பழம்..

அக்கால நினைவு வந்து

அழுகிறேன் இவ்வேளை.

 -பசுவூர்க்கோபி-

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பசுவூர்க்கோபி said:

நேற்று(25.06.20) எங்கள் வீட்டில் இருந்து (நெதர்லாந்து) 20 கிலோமீற்றர் தூரத்தில்அமைந்துள்ள கெர்சன்பழமரத்தோட்டம் (நெதர்லாந்து மொழியில்  Kers ஆங்கிலத்தில்Cherry) 

போய் நாங்களே புடுங்கி பழத்துக்கான பணம் கொடுத்து வந்தோம். வரும்போது  ஊரின் பழய நினைவுகள் வந்து என்னை வாட்டியது

 Kirschen plus Wasser = Durchfall und Bauchschmerzen ...

Kirschen - hofreiter - Beeren Selberpflücken München BeerenCafé ...

பசுவூர்  கோபி.... இந்த வெக்கைக்கு, "கெர்சன்பழ" தலைப்பில் ஆரம்பித்து...
ஊர் பழங்களையும், கொண்டு வந்து நினைவூட்டிய, உங்கள் கவிதையை மிக ரசித்தேன். :)

ஜேர்மனியிலும் ...  Kirschen பழங்கள், இப்போ பழுக்கின்ற நேரம்.
அந்த நேரம்.. எல்லா மரங்களும், ஒரேயடியாக பழங்களை தந்து விட்டு, 
அமைதியாக... மிகுதி கோடைக் காலத்துக்கு, 
நிழலை தரும், அழகிய மரமாக   இருக்கும். 

வீட்டில் எல்லோரும்... விரும்பி உண்ணும் பழம் என்பதால்...
இந்தக் கிழமை.... இரண்டு கிலோ பழம் கடையில் வாங்கி வந்தேன்.
இங்கு... ஒரு கிலோ, 4 ஐரோ விற்கிறார்கள்.
நெதர்லாந்தில்,  என்ன விலை விற்கிறார்கள்என அறிய ஆவலாக உள்ளது. 😄

டிஸ்கி: ஒறிஜினல் தமிழன்... விலையை விசாரிப்பதில், ஆர்வம் உள்ளவன் கண்டியளோ.... :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

கோடைகாலத்துக்குரிய பழம் . பழத்துடன் ஊர் நினைவைக்  மீட்டும்  கவிதை மிகமிக அழகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

எனது கவிதை பார்த்து மிகரசித்தீர்கள் எனும்போது மகிழ்வுடன் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா

நெதர்லாந்து கடைகளில் கெர்சன் பழம் கிலோ 6ஐரோ புடுங்குமிடத்தில் நல்ல பழங்கள் சாப்பிடலாம் கொண்டுவரும் பழத்திற்கு 4ஐரோ (தற்போது) கவிதைக்குள் படங்கள் போடமுடியாதுள்ளது  விபரம் தருவீர்களா  உங்கள் ஆதரவுக்கு மீண்டும் நன்றிகள்  ஐயா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நிலாமதி said:

கோடைகாலத்துக்குரிய பழம் . பழத்துடன் ஊர் நினைவைக்  மீட்டும்  கவிதை மிகமிக அழகு

எனது கவிதை பார்த்து ஊக்கம் தரும் போது மகிழ்சியடைகிறேன் கவியே எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.🍒

  • கருத்துக்கள உறவுகள்

பழைய நினைவுகளை கவிதை மூலம் மீட்டிவீட்டீர்கள், இனி எப்ப வருமோ அந்த காலம் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பசுவூர்க்கோபி said:

எனது கவிதை பார்த்து மிகரசித்தீர்கள் எனும்போது மகிழ்வுடன் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா

நெதர்லாந்து கடைகளில் கெர்சன் பழம் கிலோ 6ஐரோ புடுங்குமிடத்தில் நல்ல பழங்கள் சாப்பிடலாம் கொண்டுவரும் பழத்திற்கு 4ஐரோ (தற்போது) கவிதைக்குள் படங்கள் போடமுடியாதுள்ளது  விபரம் தருவீர்களா  உங்கள் ஆதரவுக்கு மீண்டும் நன்றிகள்  ஐயா

பசுவூர்க்கோபி அவர்களே.... 
படங்களை இணைப்பது பற்றி... இன்னும் கொஞ்ச நேரத்தில், 
இங்கிலாந்தில் இருந்து... ஒராள் வந்து, அழகிய விளக்கம் கொடுப்பார்.
இப்படியான விடயங்களுக்கு, அவர் தான்.... மிகச் சிறந்த ஆள்.

அதுவரை.. அவர் பெயரை, உங்கள் ஊகத்திற்கு விட்டு விடுகின்றேன். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, பசுவூர்க்கோபி said:

நவராத்திரி விழாக்காலம்

நாவல் பழுத்துதிரும்

வன்னிமண்னில்

மரம் வளைத்து

வாயூற உண்ட பழம்..

அக்கால நினைவு வந்து

அழுகிறேன் இவ்வேளை.

எனக்கு இந்த பழத்தை பார்த்தால் ஊர் நாவல்பழம்தான் ஞாபகத்துக்கு வரும்.

15 hours ago, தமிழ் சிறி said:

பசுவூர்  கோபி.... இந்த வெக்கைக்கு, "கெர்சன்பழ" தலைப்பில் ஆரம்பித்து...
ஊர் பழங்களையும், கொண்டு வந்து நினைவூட்டிய, உங்கள் கவிதையை மிக ரசித்தேன். :)

ஜேர்மனியிலும் ...  Kirschen பழங்கள், இப்போ பழுக்கின்ற நேரம்.
அந்த நேரம்.. எல்லா மரங்களும், ஒரேயடியாக பழங்களை தந்து விட்டு, 
அமைதியாக... மிகுதி கோடைக் காலத்துக்கு, 
நிழலை தரும், அழகிய மரமாக   இருக்கும். 

வீட்டில் எல்லோரும்... விரும்பி உண்ணும் பழம் என்பதால்...
இந்தக் கிழமை.... இரண்டு கிலோ பழம் கடையில் வாங்கி வந்தேன்.
இங்கு... ஒரு கிலோ, 4 ஐரோ விற்கிறார்கள்.
நெதர்லாந்தில்,  என்ன விலை விற்கிறார்கள்என அறிய ஆவலாக உள்ளது. 😄

டிஸ்கி: ஒறிஜினல் தமிழன்... விலையை விசாரிப்பதில், ஆர்வம் உள்ளவன் கண்டியளோ.... :grin:

சிறித்தம்பி நான் ஜேர்மனிக்கு வந்த புதிசிலை கிர்சன் பழம் சம்பளத்துக்கு புடுங்கப்போறனான்.அவர்கள் தரும் கூடையை நிரப்பிக்குடுத்தால் 10 ஈரோ தருவார்கள்.புடுங்குற சாட்டிலை வாய்க்குள்லை போட்டதும் எக்கச்சக்கம்.😎
போன செவ்வாய்க்கிழமை ஏர்ப்சன் புடுங்க போனனான். 2ஈரோ குடுத்துட்டு ஒருசட்டி பழம். கெமிக்கல் இல்லாதது.

er.jpg

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பசுவூர்க்கோபி said:

கவிதைக்குள் படங்கள் போடமுடியாதுள்ளது  விபரம் தருவீர்களா 

கவிதை நன்றாக உள்ளது😀

—-

இணையத்தில் உள்ள படங்கள் என்றால் அவற்றைக் கொப்பி பண்ணிவிட்டு, கருத்து எழுதும் பெட்டியின் அடியில் உள்ள Insert other media ஐ கிளிக் பண்ணி Insert Image from URL ஐ கிளிக் பண்ணி, வரும் பெட்டியில் paste செய்தால் படத்தின் direct link இடப்படும். HTML என்பதால் படமாகவே காட்டும்.

சொந்தப்படம் என்றால் கருத்துக்களத்தின் மேலே உள்ள + ஐ கிளிக் செய்து Gallery Image ஐ தெரிவு செய்து ஒரு அல்பம் உருவாக்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள அல்பத்தைப் பாவிக்கலாம் அதில் வேண்டிய படங்களை தரவேற்றலாம்.

பின்னர் கருத்து எழுதும் பெட்டியில் Insert other media ஐ கிளிக் பண்ணி Insert existing attachment  ஐ கிளிக் பண்ணி படங்களை உள்ளிடலாம்.

—-
உதாரணத்திற்கு:

செர்ரி பழத்தை கூகிளில் தேடியபோது பல படங்கள் காட்டியது. நான் தெரிவு செய்தது

https://www.bbcgoodfood.com/howto/guide/health-benefits-cherries

ஸ்மார்ட்ஃபோன் என்றால் படத்தில் தொடர்ந்து அழுத்தினால் (3D touch) , copy என்ற தெரிவு வரும். அதை சொடுக்கினால் படத்தின் இணைப்பு clipboard இல் வரும்.

பின்னர் cursor ஐ படம் போடவேண்டிய இடத்திற்கு நகர்த்திவிட்டு, கருத்து எழுதும் பெட்டியின் அடியில் உள்ள Insert other media ஐ கிளிக் பண்ணி Insert Image from URL ஐ கிளிக் பண்ணி, வரும் பெட்டியில் paste செய்தால் படத்தின் direct link இடப்படும். HTML என்பதால் படமாகவே காட்டும்.

spacer.png

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, உடையார் said:

பழைய நினைவுகளை கவிதை மூலம் மீட்டிவீட்டீர்கள், இனி எப்ப வருமோ அந்த காலம் 

நன்றிகள் கவியே எங்கிருந்தாலும் ஊரின் நினைவே இனிக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

large.0-02-0a-0b7184562006c37203d5a3a9b720c26083379ef3528031df926109f432484c87_1c6d9da8abe9de.jpg.e3b046fdb708421fc92793beb990b61d.jpglarge.Large-Cherry-12x12_w1-1024x1024.jpg.afc7242cc4bb77dc88d40a17bb137b68.jpg

நேற்று(25.06.20) எங்கள் வீட்டில் இருந்து (நெதர்லாந்து) 20 கிலோமீற்றர் தூரத்தில்அமைந்துள்ள கெர்சன்பழமரத்தோட்டம் (நெதர்லாந்து மொழியில்  Kers ஆங்கிலத்தில்Cherry) 

போய் நாங்களே புடுங்கி பழத்துக்கான பணம் கொடுத்து வந்தோம். வரும்போது  ஊரின் பழய நினைவுகள் வந்து என்னை வாட்டியது

கெர்சன்பழமே?எனிக்கிடைக்குமா எங்கள் பழம்..!

🍒

கைப்பான வேம்பதிலும் 

கனி மஞ்சல் 

பழம் இனிக்கும் 

வெய்யில் எரிகையிலும்

வேம்பேறிப் பழம் தின்ற..

அக்கால நினைவு வந்து

அழுகிறேன் இவ்வேளை.

கரும்பனையின் 

பனம் பழத்தை

காடியினில் 

குளைத் தெடுத்து

விரல் இடுக்கில் 

தேன் வடிய

விரும்பி உண்ட..

அக்கால நினைவு வந்து

அழுகிறேன் இவ்வேளை.

ஈச்சம் பழக் காலம் 

இனிப்பொழுக

எறும்பு மொய்க்கும்

கூசாமல் கை விட்டு 

கூரிய முற்கள் குத்தி

உதிரம் வடிந்தாலும் 

உணர்வினிக்க பழம் தின்ற..

அக்கால நினைவு வந்து

அழுகிறேன் இவ்வேளை.

இரும்பாக.. 

வளர்ந்து நிற்க்கும் 

பாலை மரம் கூட

பாலொட்ட தேனினிக்கும்.

கிளிநொச்சி பாதையிலே 

கிளை முறித்து பழம் தின்ற..

 அக்கால நினைவு வந்து

அழுகிறேன் இவ்வேளை.

நவராத்திரி விழாக்காலம்

நாவல் பழுத்துதிரும்

வன்னிமண்னில்

மரம் வளைத்து

வாயூற உண்ட பழம்..

அக்கால நினைவு வந்து

அழுகிறேன் இவ்வேளை.

 -பசுவூர்க்கோபி-

  • கருத்துக்கள உறவுகள்

கெர்சன் பழத்துக்கு  ஒரு கெத்தான கவிதை கோபி ........!   👍

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு ஒன்றுதானே, ஏன் திருப்பி பதிந்தீர்கள்.. 🤔

படம்தான் புதுசாக இருக்கு. மேலுள்ள நான்கு பழங்களை நினைத்தாலே வாயுறுது இப்பவும் 

உங்கள் படமா? நன்றாக இருக்கு பழ மரத்துடன்

சுற்றுலா போகும் போது, நானும் இப்படிதான் சேட் போடுவது வழக்கம் 😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, உடையார் said:

இரண்டு ஒன்றுதானே, ஏன் திருப்பி பதிந்தீர்கள்.. 🤔

படம்தான் புதுசாக இருக்கு. மேலுள்ள நான்கு பழங்களை நினைத்தாலே வாயுறுது இப்பவும் 

உங்கள் படமா? நன்றாக இருக்கு பழ மரத்துடன்

சுற்றுலா போகும் போது, நானும் இப்படிதான் சேட் போடுவது வழக்கம் 😎

நன்றிகள் கவியே இது எனது படம்தான்.இன்றுதான் படங்கள் போடமுயன்றேன் தெரியாமல் திரும்பவும் கவிதை பதிவாகிவிட்டது அழிப்பது சற்று கடினமாகவுள்ளது

30 minutes ago, suvy said:

கெர்சன் பழத்துக்கு  ஒரு கெத்தான கவிதை கோபி ........!   👍

உங்கள் வாழ்த்துக்கு உளமார்ந்த நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பசுவூர்க்கோபி said:

நன்றிகள் கவியே இது எனது படம்தான்.இன்றுதான் படங்கள் போடமுயன்றேன் தெரியாமல் திரும்பவும் கவிதை பதிவாகிவிட்டது அழிப்பது சற்று கடினமாகவுள்ளது

உங்கள் வாழ்த்துக்கு உளமார்ந்த நன்றிகள்.

மோகண்ணாவிற்கு பெரிய மனது, ஒன்றாக சேர்த்துவிட்டார் ; தொடர்ந்து பகிருங்கள் உங்கள் கவிதைகளை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

மோகண்ணாவிற்கு பெரிய மனது, ஒன்றாக சேர்த்துவிட்டார் ; தொடர்ந்து பகிருங்கள் உங்கள் கவிதைகளை. 

நன்றிகள். மோகன் அண்னாவுக்கும் உளமார்ந்த நன்றிகள்.தொடர்ந்து எழுதுவேன் உங்கள் அனைவரின் ஆதரவோடு... 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பசுவூர்க்கோபி said:

நன்றிகள். மோகன் அண்னாவுக்கும் உளமார்ந்த நன்றிகள்.தொடர்ந்து எழுதுவேன் உங்கள் அனைவரின் ஆதரவோடு... 

கோபி, உங்களுக்கு யாழ் கள உறவுகளின் ஆதரவு என்றுமே உண்டு, தொடர்ந்து பகிருங்கள், பல வாசகர்கள் உங்கள் கவிதையின் அடிமைகள்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பிள்ளையின் கண்களில் தெரியும் உணர்ச்சி வேற Level, சிறந்த எதிர் காலமுண்டு👍👍👍. மனதார பாரட்டுகின்றேன், நன்றாக வருவார் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 27/6/2020 at 12:39, கிருபன் said:

கவிதை நன்றாக உள்ளது😀

—-

இணையத்தில் உள்ள படங்கள் என்றால் அவற்றைக் கொப்பி பண்ணிவிட்டு, கருத்து எழுதும் பெட்டியின் அடியில் உள்ள Insert other media ஐ கிளிக் பண்ணி Insert Image from URL ஐ கிளிக் பண்ணி, வரும் பெட்டியில் paste செய்தால் படத்தின் direct link இடப்படும். HTML என்பதால் படமாகவே காட்டும்.

சொந்தப்படம் என்றால் கருத்துக்களத்தின் மேலே உள்ள + ஐ கிளிக் செய்து Gallery Image ஐ தெரிவு செய்து ஒரு அல்பம் உருவாக்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள அல்பத்தைப் பாவிக்கலாம் அதில் வேண்டிய படங்களை தரவேற்றலாம்.

பின்னர் கருத்து எழுதும் பெட்டியில் Insert other media ஐ கிளிக் பண்ணி Insert existing attachment  ஐ கிளிக் பண்ணி படங்களை உள்ளிடலாம்.

—-
உதாரணத்திற்கு:

செர்ரி பழத்தை கூகிளில் தேடியபோது பல படங்கள் காட்டியது. நான் தெரிவு செய்தது

https://www.bbcgoodfood.com/howto/guide/health-benefits-cherries

ஸ்மார்ட்ஃபோன் என்றால் படத்தில் தொடர்ந்து அழுத்தினால் (3D touch) , copy என்ற தெரிவு வரும். அதை சொடுக்கினால் படத்தின் இணைப்பு clipboard இல் வரும்.

பின்னர் cursor ஐ படம் போடவேண்டிய இடத்திற்கு நகர்த்திவிட்டு, கருத்து எழுதும் பெட்டியின் அடியில் உள்ள Insert other media ஐ கிளிக் பண்ணி Insert Image from URL ஐ கிளிக் பண்ணி, வரும் பெட்டியில் paste செய்தால் படத்தின் direct link இடப்படும். HTML என்பதால் படமாகவே காட்டும்.

spacer.png

எனக்கு தேவையான விபரங்களை தந்ததிற்கு மிக்க நன்றிகள் கவியே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.