Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீன தூதரகத்தை மூடுமாறு அமெரிக்கா அதிரடி உத்தரவு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீன தூதரகத்தை மூடுமாறு அமெரிக்கா அதிரடி உத்தரவு!

 

 

     by : Litharsan

US-orders-China-to-close-Houston-consula

அமெரிக்காவின் ரெக்ஸாஸ் மாநிலம், ஹூஸ்ரனில் உள்ள சீன துணைத் தூதரகத்தை வரும் வெள்ளிக்கிழமைக்குள் மூடுமாறு அமெரிக்கா சீனாவுக்கு உத்தரவிட்டுள்ளது

அமெரிக்க அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த உத்தரவு மூர்க்கத்தனமான மற்றும் நியாயமற்றது என சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்காவை சீனா வலியுறுத்தியுள்ளது.  அத்துடன், தவறான பாதையில் செல்லவேண்டும் என வலியுறுத்தினால் சீனா உறுதியான எதிர்விளைவுகளுடன் செயற்படும் என்று அந்நாடு அமெரிக்காவுக்கு எச்சரித்துள்ளது.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே சில காலமாக பதற்றம் அதிகரித்து வருகிறது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், வர்த்தகம் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பாக சீனாவுடன் பலமுறை மோதிக்கொள்ளும் நிலை காணப்படுகிறது.

குறிப்பாக அண்மையில் ஹொங்கொங்கில் சர்ச்சைக்குரிய புதிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா விதித்துள்ளமை அமெரிக்காவை சீற்றமடையச் செய்துள்ளது.

இதனைவிட அமெரிக்க நீதித்துறை, கொவிட்-19 தடுப்பூசிகளை உருவாக்கும் ஆய்வகங்களை குறிவைத்து சீன ஹக்கர்கள் ஊடுருவல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அமெரிக்க நீதித்துறை கண்டறிந்துள்ளது.

இவ்வாறு, கொரோனா ஆய்வுகளை மேற்கொள்ளும் அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனங்களுக்குள் ஊடுருவி தரவுகளைத் திருடுவதற்கு இரண்டு சீன ஹக்கர்களுக்கு சீன அரசு உதவி செய்துள்ளதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் அமெரிக்காவால் ஹூஸ்ரனில் உள்ள சீன துணைத் தூதரகத்தை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

https://athavannews.com/சீன-தூதரகத்தை-மூடுமாறு-அ/

 

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிகாவுக்கும், சீனாவுக்கும் இடையே... பிரச்சினை நல்லாய் முத்தப் போகுது போலை கிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அமெரிகாவுக்கும், சீனாவுக்கும் இடையே... பிரச்சினை நல்லாய் முத்தப் போகுது போலை கிடக்கு.

டிரம்ப்பர், போனை போட்டு, சீனாக்கார பாஸ்சுடன் கதைச்சு.... அப்படி, இப்படி செய்வன், கண்டுக்க கூடாது... எல்லாம்நவம்பர் தேர்தல் வரை தான்... எண்டு சொல்லி இருப்பார்.

வர, வர நம்மூர் தேர்தல் மாதிரியே போகுது.... அமெரிக்க தேர்தல் நிலவரம்.

அரசியல்வாதி இல்லாத ஒரு சுஜநல  யாவாரி.... அமெரிக்க ஜனாதிபதியாக வந்தது, அமெரிக்காவின் கேவலம் தான்.
 

  • கருத்துக்கள உறவுகள்

அவசர அவசரமாக எரிக்கப்பட்ட ஆவணங்கள் சீன தூதரகத்தை மூட உத்தரவிட்ட அமெரிக்கா

அவசர அவசரமாக எரிக்கப்பட்ட ஆவணங்கள் சீன தூதரகத்தை மூட உத்தரவிட்ட அமெரிக்கா

 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள சீன தூதரகத்தை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஆவணங்கள் அனைத்தும் தூதரக அதிகாரிகளால் எரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை தொடர்ந்து ஹூஸ்டன் நகரில் அமைந்துள்ள சீன தூதரகத்தையே டிரம்ப் நிர்வாகம் மூட உத்தரவு பிறப்பித்துள்ளது.


ஹூஸ்டனில் உள்ள சீனத் துணை தூதரகத்தை 72 மணி நேரத்துக்குள் மூட அமெரிக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. சீனா அறிவுசார் உடைமைகளை திருடியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

ஆனால் இது மூர்க்கத்தனமானது மற்றும் நியாயமற்றது என்று சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறியுள்ளார்.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே சில காலமாக பதற்றம் அதிகரித்து வருகிறது.ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் வர்த்தகம் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பாக சீனாவுடன் பலமுறை மோதிக்கொண்டதுடன், ஹாங்காங்கில் சீனா விதித்துள்ள சர்ச்சைக்குரிய புதிய பாதுகாப்புச் சட்டத்தையும் எதிர்த்து வருகிறது.

இதனிடையே, செவ்வாயன்று, கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கும் ஆய்வகங்களை குறிவைத்து ஹேக்கர்களுக்கு சீனா நிதியுதவி அளிப்பதாக அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியது.

மேலும், அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனங்களை உளவு பார்த்ததாகவும், மற்ற திருட்டுகளுக்கு அரசு முகவர்களிடமிருந்து உதவி பெற்றதாகவும் கூறப்படும் இரண்டு சீனர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/23103007/Urgently-burned-documents-Ordered-to-close-the-Chinese.vpf

  • கருத்துக்கள உறவுகள்

அறிவுசார் திருட்டில் ஈடுபடும் சீனா 50 ஆண்டு கால வர்த்தக கொள்கை முடிவுக்கு வரும் அமெரிக்கா...!

அறிவுசார் திருட்டில் ஈடுபடும் சீனா 50 ஆண்டு கால வர்த்தக கொள்கை முடிவுக்கு வரும் அமெரிக்கா...!

வாஷிங்டன்

அமெரிக்காவின் அறிவுசார் வளங்களைக் திருடுவது, அமெரிக்காவை உளவு பார்ப்பது போன்ற தீவிரமான குற்றச்சாட்டுகளை சீனா மீது அமெரிக்கா சாட்டியுள்ளது. ஹூஸ்டன் நகரில் உள்ள சீனத் துணைத் தூதகரகத்தை மூட ஜனாதிபதி  டிரம்ப் உத்தரவிட்டுள்ளதையடுத்து இருநாடுகளிடையே விரிசல் மேலும் அதிகரித்துள்ளது. மேலும் சில தூதரகங்களை மூடப்போவதாகவும் டிரம்ப் அறிவித்துள்ளார்.


சீன ராணுவத்தைச் சேர்ந்த பெண் அதிகாரி டாங் யுவான் என்பவர் ஆய்வு மாணவி என்ற போலியான காரணத்துக்காக விசா விண்ணப்பம் செய்திருப்பதை கண்டுபிடித்து எப்பிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.

ஹூஸ்டனில் இருந்த துணைத் தூதரகம்தான் அமெரிக்காவின் அறிவுசார் திருட்டில் ஈடுபட்ட மையமாக இருந்ததாகவும் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக ஜனநாயக ரீதியான நிர்வாகமுறைகளில் சீனாவுக்கான வாசல்களை அமெரிக்கா திறந்து வைத்தது

அந்நாட்டுடன் வர்த்தகம் நடத்தப்பட்டது. பல்வேறு சர்வதேச அமைப்புகளில் இருநாடுகளும் பங்கேற்றன. ஆனால் இத்தகைய அமெரிக்க அரசின் கொள்கையில்  மாறுதல் ஏற்பட்டிருப்பதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சீனாவுடன் நம்பகத்தன்மையற்ற சரிபார்க்க வேண்டிய புதிய கொள்கை வகுக்கப்படும் என்றும் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ அறிவித்துள்ளார்

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/24105743/New-US-policy-on-Beijing-Distrust-and-verify-ends.vpf

  • கருத்துக்கள உறவுகள்

பதிலுக்கு பதில் செங்டு அமெரிக்கா துணைத் தூதரகத்தை மூடுமாறு சீனா உத்தரவு

பதிலுக்கு பதில் செங்டு அமெரிக்கா துணைத் தூதரகத்தை மூடுமாறு சீனா உத்தரவு

 

பீஜிங்

வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் முதல் கொரோனா வைரஸ், தென் சீனக் கடலில் சீனாவின் பிராந்திய உரிமைகோரல்கள் மற்றும் ஹாங்காங்கின் மீதான அதன் இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் அமெரிக்கா-சீனா இடையிலான உறவுகள் மோசமடைந்து வருகின்றன.


இந்த வார தொடக்கத்தில் ஹூஸ்டனில் உள்ள சீன துணைத் தூதரகத்தை மூடுமாறு உத்தரவிடப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனா இன்று செங்டு நகரில் உள்ள அமெரிக்கா துணைத் தூதரகத்தை மூடுமாறு உத்தரவிட்டு உள்ளது.

அமெரிக்கா நடவடிக்கை சர்வதேச சட்டம், சர்வதேச உறவுகளின் அடிப்படை விதிமுறைகள் மற்றும் சீனா-அமெரிக்கா விதிமுறைகளை தீவிரமாக மீறி உள்ளது. சீனா-அமெரிக்க உறவுகளுக்கு மிகவும் தீங்கு விளைவித்தது என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சீன வெளியுறவு அமைச்சகம் சீனாவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு, செங்டுவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை நிறுவுவதற்கும் செயல்படுவதற்கும் தனது ஒப்புதலை வாபஸ் பெறுவதற்கான முடிவை அறிவித்தது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/24134859/China-orders-US-consulate-in-Chengdu-to-close-as-tensions.vpf

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க காவலில் உள்ள சீன பெண் விஞ்ஞானி திங்களன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்

அமெரிக்க காவலில் உள்ள சீன பெண் விஞ்ஞானி திங்களன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்

 

வாஷிங்டன்

அமெரிக்காவின் அறிவுசார் வளங்களைக் திருடுவது, அமெரிக்காவை உளவு பார்ப்பது போன்ற தீவிரமான குற்றச்சாட்டுகளை சீனா மீது அமெரிக்கா சாட்டியுள்ளது.

அமெரிக்க- சீன உறவுகள் மோசமடைந்து வருகிறது.  சீனா தனது ஹூஸ்டன் தூதரகத்தை மூட வேண்டும் என்ற அமெரிக்க உத்தரவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக செங்டுவில் உள்ள தனது துணைத் தூதரகத்தை மூடுமாறு சீனா வெள்ளிக்கிழமை அமெரிக்காவிற்கு உத்தரவிட்டது.


சீன ராணுவத்தைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி ஜுவான் டாங்  என்பவர் ஆய்வு மாணவி என்ற போலியான காரணத்தை கூறி விசா விண்ணப்பம் செய்திருப்பதை கண்டுபிடித்து எப்பிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள சீனாவின் துணைத் தூதரகத்தில் அமெரிக்கா அதிகாரிகளிடம் தஞ்சம் புகுந்த சீன விஞ்ஞானி இப்போது அமெரிக்கக் காவலில் உள்ளார், திங்களன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று அமெரிக்க நீதித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வாரம் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தகவல்களின்படி, 

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த ஜுவான், சீன இராணுவத்தில் பணியாற்றவில்லை என்று தனது விசா விண்ணப்பத்தில் பொய்யாகக் கூறினார். அவர் மீது ஜூன் 26 அன்று விசா மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.இந்த வழக்கு குறித்து சீன தூதரகம் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

வியாழக்கிழமை இரவு ஜுவான் தடுத்து காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் ஒரு தூதரக அதிகாரியாக அறிவிக்கப்படாததால் தூதரகத்திடமிருந்து எந்த எதிர்ப்பும் இல்லை என்றும் நீதித்துறை மூத்த அதிகாரி தெரிவித்தார்.

விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது தங்களது இராணுவ உறவை மறைத்த குழுவின் ஒரு பகுதியாக டாங் இருப்பதாக அந்த அதிகாரி கூறினார்.

கலிபோர்னியாவின் கிழக்கு மாவட்டத்தில் உள்ள அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் லாரன் ஹார்வுட், டாங் சாக்ரமென்டோவில் திங்களன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று கூறினார்.
 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/25125201/The-Chinese-woman-scientist-in-US-custody-is-due-to.vpf

 

 

  • கருத்துக்கள உறவுகள்

US-officials-force-their-way-into-Chinese-consulate-in-Houston-after-it-is-shut-down-amid-accusations-Beijing-used-it-as-base-to-steal-medical-research-4.jpg

ஹூஸ்டன் சீன தூதரக கதவை உடைத்து சோதனையில் ஈடுபட்ட அமெரிக்க அதிகாரிகள்!

அமெரிக்காவின், ஹூஸ்டனில் உள்ள சீனத் தூதரகத்தின் கதவு உடைக்கப்பட்டு அமெரிக்க அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டது.

குறித்த தூதரகத்தை மூன்று நாட்களுக்குள் மூடுவதற்கு அமெரிக்கா உத்தரவிட்டதைத் தொடர்ந்து நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் தூதரகம் மூடப்பட்டகையோடு அதிகாரிகளால் இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மருத்துவ மற்றும் அறிவியல் ஆராய்ச்சி தரவுகளைத் திருடுவதாகவும் சீனாவின் உளவு செயற்பாட்டிலும் இந்த தூதரகம் ஈடுபட்டுவந்துள்ளதாகத் தெரிவித்து இதனை மூடுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து, நேற்று பிற்பகல் தூதரகம் அதிகாரபூர்வமாக மூடப்பட்டு இராஜதந்திரிகள் வெளியேறினர். இதையடுத்து சில மணிநேரங்களுக்குப் பின்னர் அமெரிக்க அதிகாரிகளால் தூதரகத்தின் பின்கதவு உடைக்கப்பட்டு ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தூதரகத்தை மூடுமாறு அமெரிக்கா உத்தரவிட்ட சிறிது நேரத்தில், தூதரக ஊழியர்கள் ஆவணங்கள் போன்று பலவற்றை தீயிட்டு எரித்ததாக்த தெரிவிப்பட்ட நிலையில் தீயணைப்புப் படையினர் தூதரகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறுதான், அமெரிக்க அதிகாரிகளால் நுழைய முடியாத அளவு இரும்புக் கோட்டையாக தூதரக அலுவலகம் இருந்துள்ளதாகவும், பல முக்கிய உளவு வேலைகளை ஒருங்கிணைத்து செயற்படுத்தும் தகவல் தொடர்பு மையமாக இந்த தூதரணகம் இருந்துள்ளதாகவும் அமெரிக்க தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தூதரகத்தை மூடுவதங்கான உத்தரவை அமெரிக்கா மீளப்பெற வேண்டுமென சீன கோரியிருந்தது. இதையடுத்து அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனாவின் செங்குடுவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை 72 மணி நேரத்துக்குள் மூட சீனா உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

US-officials-force-their-way-into-Chinese-consulate-in-Houston-after-it-is-shut-down-amid-accusations-Beijing-used-it-as-base-to-steal-medical-research-2.jpg

US-officials-force-their-way-into-Chinese-consulate-in-Houston-after-it-is-shut-down-amid-accusations-Beijing-used-it-as-base-to-steal-medical-research-3.jpg

US-officials-force-their-way-into-Chinese-consulate-in-Houston-after-it-is-shut-down-amid-accusations-Beijing-used-it-as-base-to-steal-medical-research-7.jpg

US-officials-force-their-way-into-Chinese-consulate-in-Houston-after-it-is-shut-down-amid-accusations-Beijing-used-it-as-base-to-steal-medical-research-6.jpg

https://athavannews.com/ஹூஸ்டன்-தூதரக-கதவை-உடைத்/

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவிற்கு பதிலடியாக சீனாவில் கீழிறக்கப்பட்ட அமெரிக்க கொடி

அமெரிக்காவிற்கு பதிலடியாக சீனாவில் கீழிறக்கப்பட்ட அமெரிக்க கொடி

 

சீனத் தூதரகத்தை மூடுவதற்கான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிரான சீனாவின் பதிலடியால் செங்டுவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் அந்நாட்டுகொடி கீழிறக்கப்பட்டது.
பதிவு: ஜூலை 27,  2020 14:54 PM
பீஜிங்,

உலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்கா, இந்த வைரசை சீனா வேண்டுமென்றே உலக நாடுகளுக்கு பரப்பியதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

வெறும் குற்றச்சாட்டுடன் நிற்காமல் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள சீன தூதரகத்தை உடனடியாக மூட ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் திடீரென உத்தரவு பிறப்பித்தது.

அமெரிக்காவின் அறிவு சார் சொத்துகள் மற்றும் தனியார் தகவல்களை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்தது.

இதனிடையே அமெரிக்காவில் உள்ள மேலும் சில சீன தூதரகங்களை மூட உத்தரவிட வாய்ப்பு உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தூதரக மூடல் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு பதிலடி தரும் விதமாக சீனாவின் செங்டு நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூட சீனா உத்தரவிட்டது.

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தின் தலைநகரான செங்டுவில் இயங்கி வரும் அமெரிக்க துணைத் தூதரகம் செயல்படுவதற்கான தனது ஒப்புதலை வாபஸ் பெறும் முடிவை சீன அரசு அறிவித்தது.

இந்நிலையில் சீனத் தூதரகத்தை மூடுவதற்கான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிரான சீனாவின் பதிலடியால் செங்டுவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் அமெரிக்கக் கொடி இன்று காலை கீழ் இறக்கப்பட்டது.

சீனத் தூதரகத்தை மூடுவதற்கான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிராக சீனாவில் அமெரிக்க துணைத் தூதரகம் செயல்படுவதற்கான தடையை சீனா வெள்ளிகிழமை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, சீனா இடையேயான இந்த மோதல் சர்வதேச அளவில் பரபரப்பைக் ஏற்படுத்தி உள்ளது.

https://www.dailythanthi.com/News/World/2020/07/27145425/American-Flag-Lowered-At-US-Consulate-In-Chengdu.vpf

 

  • கருத்துக்கள உறவுகள்

1595851772116240-720x430.jpg

அமெரிக்கத் தூதரகத்தில் பொறிக்கப்பட்டிருந்த ஆங்கில வாசகங்களை மறைத்த சீன அதிகாரிகள்

சீனாவின் செங்டூ நகரில் செயற்பட்டு வந்த அமெரிக்கத் தூதரகம் மூடப்பட்டதை தொடர்ந்து, தூதரக வளாகத்தை கையகப்படுத்திய சீன அதிகாரிகள், அங்கு பொறிக்கப்பட்டிருந்த ஆங்கில வாசகங்களை சுவரொட்டிகளால் மறைத்துள்ளனர்.

அமெரிக்காவுக்கு சொந்தமான அறிவுச் சொத்துகளை சீனா திருடுவதாக குற்றஞ்சாட்டிய அமெரிக்கா, ஹூஸ்டனில் உள்ள சீனத் துணைத் தூதரகத்தை மூட உத்தரவிட்டது.

இதற்கு பதிலடியாக தென்மேற்கு நகரமான செங்டூவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை மூட சீனா உத்தரவிட்டது.

மேலும் இதன்போது 72 மணிநேர காலக்கெடு வழங்குவதாகவும் அதற்குள் தீர்மானத்தை மறு ஆய்வு செய்யுமாறும் சீனா தெரிவித்தது.

இந்நிலையில், நேற்று குறித்த காலக்கெடுவுக்கு முன்னர், அங்கு பணியாற்றிய அமெரிக்கர்கள் வெளியேறிய பின்னர், முழு கவச உடையில் களமிறங்கிய சுகாதாரத்துறை பணியாளர்கள், கிருமி நாசினியால் வளாகத்தை சுத்தம் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, தூதரகத்துக்கு வெளியே போக்குவரத்தை தடை செய்த காவலர்கள், சீன கொடி ஏந்தி முழக்கங்கள் எழுப்பிய நபரை அங்கிருந்து வெளியேற்றினர்.

அத்தோடு, அமெரிக்கத் தூதரகத்தில் பொறிக்கப்பட்டிருந்த ஆங்கில வாசகங்களை சுவரொட்டிகளால் மறைத்துள்ளனர்.

https://athavannews.com/அமெரிக்கத்-தூதரகத்தில்-ப/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.