Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரபாகரனும், மாத்தையாவும் எமது பள்ளித் தோழர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனும், மாத்தையாவும் எமது பள்ளித் தோழர்கள்!

Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி 
 
 Published: 09 July 2014 
 
 Hits: 2585

எனக்கு அப்போது பதினைந்தோ, பதினாறோ வயதிருக்கலாம். எனக்கு அரசியலில் ஈடுபாடுகள் தொடங்கிய நேரம். எங்கடை வாசிகசாலையில் இருந்து சில பேர் கழுத்திலேயும் சில பேர் தலையிலும் சிவப்புத் துணிகளைக் கட்டிக் கொண்டு, சில தோழர்கள் சிவத்தக் கொடியையும் தூக்கிக் கொண்டு ஏற வான் புறப்படும். புறப்பட்ட வான் அயல் கிராமங்களிலிருந்தும் பல தோழர் தோழியர்களையும் ஏற்றிச் கொண்டு ஊர்வலம் நடக்கும் இடத்தைச் சென்றடையும்.

அப்படிப் போய் வந்தவர்களில் நெருங்கிய தோழன் சிவநாதன் அவர்கள். இன்று அவர் இந்த உலகத்தை விட்டு சென்று விட்டார். அந்தத் தோழனின் துணைவியைக் காணும் போதெல்லாம் என் நினைவுக்கு வருவதெல்லாம் அந்த மேதின ஊர்வலங்களும் அங்கு போட்ட கோசங்களும் தான். எத்தனையோ மேதின ஊர்வலங்கள் எத்தனையோ வெகுஜனப் போராட்டங்கள் எத்தனையோ தேசிய எதிர்ப்புப் போராட்டங்கள். தன்னுடைய கணவனுடன் தோழோடு தோழாய் நின்று பல பணிகளில் துணைபுரிந்த தோழி திருமதி சாந்தா சிவநாதனுடன் சில நிமிடங்கள்...

மேதினம் என்றதும் தங்கள் நினைவில் வருவது....?

முதலில் வருவது தோழர்கள் சண்முகதாஸன், இக்பால், சலீம, கே.டானியல் போன்றவர்களும் மற்றும் அடிக்கடி வந்து பழகிப்போன சிங்களத் தோழர்களும் தான. உண்மையில் அது ஒரு வசந்த காலம். மேதின ஊர்வலத்துக்குப் போகிறோம் என்ற உணர்வை விட ஏதோ ஒரு பெருவிழாவுக்குப் போகின்றோம் என்ற உணர்வே மேலோங்கி நிற்கும். எனது கணவரும் அவரது தோழர்களும், முதற்கிழமையே எல்லா ஆயத்த வேலைகளையும் ஆரம்பிக்க எல்லாம் களைகட்டிவிடும்.

எங்கள் வள்ளத்தில் வந்து வேலை செய்த சிங்களத் தோழர்களும் எம்மோடு சேர்ந்து களத்தில் இறங்கி விடுவார்கள். அத்தோடு அயல் கிராமத்து தோழர் தோழியர்களை பார்க்கப் போகின்றோம் சந்திக்கப் போகின்றோம் என்ற உணர்வு மேலோங்கி நிற்கும்.

யார் அந்தத் தோழர்கள்...?

எனது கணவனின் கட்சியில் இருந்த சில சிங்களத் தோழர்கள் எங்கள் வள்ளத்தில் வந்து வேலை செய்தவர்கள். எப்போதாவது கிடைக்கும் லீவு காலங்களில் மாத்திரம் ஊர் போய் வருவார்கள். அரசியல் வேலை நிமித்தம் காரணமாக எங்களோடு குடும்பமாகவே வந்து வாழ்ந்தவர்கள். இக்பால், சலீம் போன்ற முஸ்லீம் தோழர்களும் எம்மோடு வந்து அரசியல் வேலை செய்தவர்கள்.

பின்னர் தமிழ் இயக்கங்கள் வளரத் தொடங்க, சிங்கள தமிழ் முரண்பாடுகளும் மேலோங்க அந்தத் தோழர்கள் இருக்க முடியாத சூழல் உருவாக..... இப்ப தெரியும் தானே இன்று இந்த இருண்ட நிலைக்கு எல்லோரும் தள்ளப்பட்டிருக்கிறம்.

அன்றிருந்த தமிழ் சிங்கள உறவுகள், இன்றிருக்கும் தமிழ் சிங்கள உறவுகள் பற்றி இப்ப என்ன நினைக்கின்றீர்கள்....?

இனிமேல் இந்த இரண்டு இனங்களும் சேர்ந்து வாழ முடியாது என்றவொரு மாயத் தோற்றத்தை சிங்களத் தலைமைப்பீடங்களும் அன்றிருந்த தமிழ்த் தலைமைப்பீடங்கள் தொடக்கம் அழிந்து போன தமிழ் இயக்கங்கள் வரை இந்த மாயையை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால் உண்மை அதுவல்ல.

காலம் காலமாக இந்த அரசுகள் எப்படி இந்த தமிழ் மக்களை ஒடுக்கி நசுக்கி அடக்கி ஆளுகின்றனவோ அப்படித்தான் சிங்கள மக்களையும் அடக்கி ஆண்டு கொண்டிருக்கின்றன. எனக்கு இப்பவும் நல்ல ஞாபகம் இருக்கின்றது. அன்று ஒரு நாள் ஜே.ஆரின் ஆட்சியை எதிர்த்து யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய தின எதிர்ப்புக் கூட்டத்தில் பேசிய பல தமிழ் தலைவர்கள் ஜே.ஆர் அரசின் விலைவாசி ஏற்றத்தினால் தமிழ் மக்கள் மிகவும் கஸ்டப்படுகின்றார்கள் என்றும் தமிழ் மக்கள் பட்டினியால் துன்புறுகிறார்கள் என்றும், அரசானது தமிழ் மக்களுக்கு எதிரானது என்ற கருத்துப்பட பேசிய போது, தோழர் சண்முகதாஸன் அவர்கள் தான் இந்த விலையேற்றமும் பசி, பட்டினிக் கொடுமைகளும் சிங்கள மக்களுக்கும் தான் என்று பேசிய போது அந்தக் கூட்டமே அதிரும்படி எழுந்த சிரிப்பொலியும் கரகோசமும் என்னால் இன்றும் மறக்க முடியாது.

அதேநேரத்தில் விடுதலைப்புலிகளின் திண்ணைவேலித் தாக்குதலின் காரணத்தினால் தான் 83 இனக்கலவரம் ஏற்பட்டது என்று பலர் பேசிய போது அதற்கு முன்னர் நடைபெற்ற கலவரங்களுக்கு யார் காரணம் என்று கேட்டு முன்னர் நடந்த இனக்கலவரங்களுக்கெல்லாம் எங்கே விடுதலைப்புலிகள் தாக்கினார்கள் என்ற கேள்வியை எழுப்பியதோடு மட்டுமல்லாது இலங்கைக்கு ஆயுதப் போராட்டம் தான் சிறந்த வழி என்ற கருத்தையும் பகிரங்கமாகவே தெரிவித்தார்.

இலங்கையில் நடைபெற்ற கலவரங்களின் போதெல்லாம் பல சிங்கள மக்கள் தான் தமிழ் மக்களை காப்பாற்றி பாதுகாத்து அனுப்பி வைத்தார்கள் என்பதை மறந்து விட முடியாது. அவ்வளவும் நடைபெற்ற பிறகும் திரும்பவும் தமிழ் மக்கள் போய் தெற்கில் மீண்டும் வாழ்கின்றனர் தானே. காரணம் என்ன... நாங்கள் சேர்ந்து வாழலாம் என்ற அந்த நம்பிக்கை தான்.

நிட்சயமாக நாங்கள் சேர்ந்து வாழலாம். நானொரு கேள்வியை உங்களிடம் கேட்கிறேன். தமிழர்கள் எல்லாம் ஒற்றுமையாய் இருக்கிறீர்களா.......? என்று அவர் என்னைப் பார்த்துக் கேட்டார்.

பதிலொன்றும் பேசாது சிரித்துக் கொண்ட நான் இதையேன் என்னிடம் கேட்கிறீர்கள்....,? என்று நானே அவரிடம் திருப்பிக் கேட்டேன்.

இல்லை, தமிழ்ப் போராட்டம் என்று ஒன்று உருவாகுவதற்கு முன்னர் என்னுடைய கணவனும் அவரது பல தோழர்களும் ஆயுதம் எடுத்துப் போராடியது எனக்கு நன்றாகவே தெரியும். தமிழருக்கு எதிராக போராடிய போராட்டம் அது. எப்போதாவது கூட்டம் என்றும் சந்திப்புக்கள் என்றும் போய்விடுவார்.... சில நாட்கள் கழித்துத் தான் வருவார். வரும் போது சில தோழர்களும் வந்து தங்குவார்கள். அது பற்றி எனக்கு முதலில் தெரியாது பின்னர் தான் அந்த ரகசியங்கள் எனக்குத் தெரிந்தன.

தமிழர்கள் மத்தியில் திறக்கப்படாத பல கோவில்கள் திறக்கப்பட்டன, பல தேநீர் கடைகள் எல்லாம் திறக்கப்பட்டதற்கு அந்தப் போராட்டங்கள் தான் காரணம். ஆனால் இன்று வரையும் அந்தப் பிரச்சினைகள் முடியவில்லை...... ஏன் இந்தப் புலம்பெயர் சமூகத்தில் கூட இந்தச் சாதிகளைக் கொண்டு வந்து தமிழ்ச் சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது தானே. இன்று இவ்வளவும் நடைபெற்ற பிறகும் கூட நான் பெரிது நீ பெரிது என்று நினைக்கும் இந்த தமிழ் சமூகத்தை நினைக்கும் போது கவலைப்படுவதை விட அதிகம் வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கிறது.

இன்று அந்தக் கம்யூனிஸக் கட்சியும் அதன் போராட்டங்களும் பெரிதாக முன்னிலைக்கு வராமல் இல்லாதழிந்து போனது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்.

முதலில் எங்கள் கிராமத்திலும் மற்றைய அயல் கிராமங்களிலும் உள்ள பெரும்பான்மையானவர்கள் மத்தியில் இந்தக் கம்யூனிசவாதிகள் என்றால் கடவுளுக்கும் மதங்களுக்கும் எதிரானவர்கள், தெய்வங்கள் இல்லையென்பவர்கள், கோவில்களுக்கு எதிரானவர்கள் போன்ற தப்பான அபிப்பிராயங்கள் சாதாரண பொது மக்களிடத்தில் இருந்தது. வழிக்கு வழி தெருவுக்குத் தெரு வழிபாட்டுத்தலங்கள் நிறைந்து காணப்படும் எம்மவர் மத்தியில் இவர்களது செயற்பாடுகளும் வேலைமுறைகளும் எடுபடுவது கஸ்டமான காரியம்தான்.

இரண்டாவதாக யாழ் மண்ணிலே வேரோடியிருக்கும் சாதிய பிரச்சினைகளுக்கு எதிராகப் போராடும் போது அடித்தால் திருப்பி அடிப்போம் என்ற கொள்கையை முன்னெடுத்த கட்சியை எப்படி இந்த யாழ் மேட்டுக்குடியினர் ஏற்றுக் கொள்வார்கள். இது ஒரு மிக முக்கிய காரணமாய் இருந்தது.

அடுத்ததாக தமிழீழ இயக்கங்களின் வளர்ச்சி. அமிர்தலிங்கம் போன்ற தலைவர்கள் அகிம்சை மூலம் தான் தமிழீழம் எடுத்துத் தருவோம் என்ற போது ஆயதப்போராட்டத்தை முன்னெடுத்த தமிழ் இளைஞர்கள் அந்த நேரங்களில் பொலிசையும் ஆமியையும் சுட வெளிக்கிட, எங்கள் எதிரிகள் கொல்லப்படுகிறார்கள் என்று மக்களும் நம்பி அவர்களை ஆதரிக்க தமிழ் இயக்கங்கள் வளர இந்தக்கட்சியின் ஆதரவுகள் குறைந்தது உண்மை தான்.

இந்த மாற்றம் சிங்கள மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை உண்டு பண்ணவில்லை, ஆனால் சர்வதேசப் பிரச்சினைகளால் கட்சிகளில் நிகழ்ந்த மாற்றங்களும் சண் அவர்களின் மறைவும் பெரிய காரணங்களாய் இருந்தது என்று நினைக்கின்றேன்.

தமிழீழ விடுதலை இயக்கங்கள் பற்றிய உங்கள் கருத்து....?

இயக்க ஆரம்ப காலங்களில் பல இயக்கத்தினர், என் கணவனுடனும் அவரது மற்றைய தோழர்களுடனும் வந்து கதைப்பார்கள், பல விவாதங்களை நடத்தியிருக்கிறார்கள். அப்போது எங்கள் தோழர்கள் இந்தத் தமிழீழப் போராட்டம் பிழையானது என்றும் இது ஒரு பாரிய அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும் என்றும் எடுத்துக் கூறினார்கள். ஆனால் எனக்கு அது அந்த நேரத்தில் விளங்கவில்லை. காலம் அதை இப்போது எல்லோருக்கும் உணர்த்தியிருக்கிறது.

அவர்கள் இந்தியாவில் சென்று பயிற்சி எடுத்த தருணங்களில் இந்தியா எமக்கு நட்பு நாடெல்ல என்றும் இவர்கள் தான் இந்த தமிழினத்துக்கே எதிரியாக இருப்பார்கள் என்றும் அடித்துக் கூறியது மட்டுமல்ல 1971 களில் ஜே.வீ.பியை அழித்தொழிக்க சிறிமா அரசுக்கு எவ்வாறு இந்திய அரசு பக்கபலமாக நின்றதோ அதே போல் இந்திய அரசும் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு தனி அரசை உருவாக விடாது என்று சொன்ன பொது ஒருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை.

தலைவர் பிரபாகரன் அவர்கள் எனது கணவனின் பள்ளித் தோழன், மாத்தையா எனது பள்ளித் தோழன். ஒரு நாள் மாத்தையா அவர்களும் அவரது தோழர்கள் சிலரும் எங்கள் வீட்டில் நடைபெற்ற சந்திப்பின் போது சமுதாயத்தில் அந்த நேரங்களில் இடம்பெற்ற சமூகத்துரோகிகள் ஒழிப்பு என்ற பெயரில் இடம்பெற்ற அநியாய கொலைகள் பற்றியும் அவையெல்லாம் போராட்டத்திற்கு, மக்கள் மத்தியில் ஆதரவை ஏற்படுத்தாது என்று எனது கணவர் கூறிய போது தனித்தமிழன் இருக்கும் வரை போராடியே தீருவோம் என்று ஆவேசப்பட்டார் மாத்தையா.

அதே காலகட்டத்தில் இவரது தம்பியார் உட்பட வேறு சிலர் ஏற்கனவே தோன்றிய தமிழ் அமைப்புக்கள் பிழையென்று புதிய இயக்கத்தை ஆரம்பித்த போது அதுவும் பிழையான பாதைக்கே கொண்டு செல்லும் என்று அவரது தம்பியாருடன் வாதிட்டது எனக்குத் தெரியும்.

நடந்து முடிந்த முள்ளிவாய்க்கால் பிரச்சினைகளுக்குப் பிறகு இன்று என்ன நினைக்கின்றீர்கள்.....?

ஊரில் இருந்த நேரத்தில் எனது கணவனும் இவரது சில தோழர்களும் இயக்கப் போராளிகளுக்கு தங்களால் முடிந்த சகல உதவிகளையும் அந்த நேரத்தில் வழங்கிக் கொண்டு தான் இருந்தார்கள். இறுதிக் காலங்களில இருக்க முடியாத சூழல் உருவான போது அவரை இயக்கத்தினர் தான் இந்தியா கொண்டு வந்து விட்டார்கள். இந்தியாவிலும், பிறகு வெளிநாடு என்று வந்த பின்னரும் இயக்கத்தை ஆதரிக்க வேண்டிய நிலை எங்களுக்குள் இருந்தது.

சில காலங்களின் பின்னர் வெளிநாடு வந்த எனது கணவரும் இறந்து விட்டார். இப்ப இயக்கப் பிரச்சினைகளும் முடிந்து விட்டது. மீண்டும் முன்பு தமிழ் தலைவர்களும் இயக்கங்களும் மக்களை ஏமாற்றியது போல் அடுத்த பொங்கலுக்கு தமிழீழம் எடுத்துத் தருவோம். புலம்பெர் தமிழர் இருக்கும் வரை எமது தமிழினத்துக்கு அழிவேயில்லை என்று பசப்பு வார்த்தைகளை கூறி; தமிழ் மக்களைப் பேக்காட்டி மேலும் மேலும் ஏமாற்றாமலும் சீமானும் வைக்கோவும் நெடுமாறனும் வந்து தமிழீழம் எடுத்துத் தருவார்கள் என்று நம்பி இன்னொரு அழிவுப்பாதைக்கு மக்களை இட்டுச் சொல்லாமலும் ஏற்கனவே சண்முகதாசன் போன்ற தலைவர்கள் முன்வைத்த கருத்துக்களை மனதிற் கொண்டு இலங்கையில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் சேர்ந்து வாழ ஒரு அரசை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது தான் சாலச்சிறந்தது.

வேறு பல விடையங்களும் கதைத்து முடிந்தவுடன் இன்று இந்தப் புலம்பெயர் மண்ணில் சிங்கள தமிழ் உறவுகளும் ஒற்றுமைகளும் கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்து வருவதை எண்ணி மனம் மகிழ்வதாக திருமதி சாந்தா சிவநாதன் குறிப்பிட நன்றியுடன் விடைபெற்று வந்தேன்.

முற்றும்.

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=9077:2014-07-09-13-15-58&catid=320&Itemid=238

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 1/8/2020 at 19:31, கற்பகதரு said:

பிரபாகரனும், மாத்தையாவும் எமது பள்ளித் தோழர்கள்!

Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி 
 
 Published: 09 July 2014 
 
 Hits: 2585

எனக்கு அப்போது பதினைந்தோ, பதினாறோ வயதிருக்கலாம். எனக்கு அரசியலில் ஈடுபாடுகள் தொடங்கிய நேரம். எங்கடை வாசிகசாலையில் இருந்து சில பேர் கழுத்திலேயும் சில பேர் தலையிலும் சிவப்புத் துணிகளைக் கட்டிக் கொண்டு, சில தோழர்கள் சிவத்தக் கொடியையும் தூக்கிக் கொண்டு ஏற வான் புறப்படும். புறப்பட்ட வான் அயல் கிராமங்களிலிருந்தும் பல தோழர் தோழியர்களையும் ஏற்றிச் கொண்டு ஊர்வலம் நடக்கும் இடத்தைச் சென்றடையும்.

அப்படிப் போய் வந்தவர்களில் நெருங்கிய தோழன் சிவநாதன் அவர்கள். இன்று அவர் இந்த உலகத்தை விட்டு சென்று விட்டார். அந்தத் தோழனின் துணைவியைக் காணும் போதெல்லாம் என் நினைவுக்கு வருவதெல்லாம் அந்த மேதின ஊர்வலங்களும் அங்கு போட்ட கோசங்களும் தான். எத்தனையோ மேதின ஊர்வலங்கள் எத்தனையோ வெகுஜனப் போராட்டங்கள் எத்தனையோ தேசிய எதிர்ப்புப் போராட்டங்கள். தன்னுடைய கணவனுடன் தோழோடு தோழாய் நின்று பல பணிகளில் துணைபுரிந்த தோழி திருமதி சாந்தா சிவநாதனுடன் சில நிமிடங்கள்...

மேதினம் என்றதும் தங்கள் நினைவில் வருவது....?

முதலில் வருவது தோழர்கள் சண்முகதாஸன், இக்பால், சலீம, கே.டானியல் போன்றவர்களும் மற்றும் அடிக்கடி வந்து பழகிப்போன சிங்களத் தோழர்களும் தான. உண்மையில் அது ஒரு வசந்த காலம். மேதின ஊர்வலத்துக்குப் போகிறோம் என்ற உணர்வை விட ஏதோ ஒரு பெருவிழாவுக்குப் போகின்றோம் என்ற உணர்வே மேலோங்கி நிற்கும். எனது கணவரும் அவரது தோழர்களும், முதற்கிழமையே எல்லா ஆயத்த வேலைகளையும் ஆரம்பிக்க எல்லாம் களைகட்டிவிடும்.

எங்கள் வள்ளத்தில் வந்து வேலை செய்த சிங்களத் தோழர்களும் எம்மோடு சேர்ந்து களத்தில் இறங்கி விடுவார்கள். அத்தோடு அயல் கிராமத்து தோழர் தோழியர்களை பார்க்கப் போகின்றோம் சந்திக்கப் போகின்றோம் என்ற உணர்வு மேலோங்கி நிற்கும்.

யார் அந்தத் தோழர்கள்...?

எனது கணவனின் கட்சியில் இருந்த சில சிங்களத் தோழர்கள் எங்கள் வள்ளத்தில் வந்து வேலை செய்தவர்கள். எப்போதாவது கிடைக்கும் லீவு காலங்களில் மாத்திரம் ஊர் போய் வருவார்கள். அரசியல் வேலை நிமித்தம் காரணமாக எங்களோடு குடும்பமாகவே வந்து வாழ்ந்தவர்கள். இக்பால், சலீம் போன்ற முஸ்லீம் தோழர்களும் எம்மோடு வந்து அரசியல் வேலை செய்தவர்கள்.

பின்னர் தமிழ் இயக்கங்கள் வளரத் தொடங்க, சிங்கள தமிழ் முரண்பாடுகளும் மேலோங்க அந்தத் தோழர்கள் இருக்க முடியாத சூழல் உருவாக..... இப்ப தெரியும் தானே இன்று இந்த இருண்ட நிலைக்கு எல்லோரும் தள்ளப்பட்டிருக்கிறம்.

அன்றிருந்த தமிழ் சிங்கள உறவுகள், இன்றிருக்கும் தமிழ் சிங்கள உறவுகள் பற்றி இப்ப என்ன நினைக்கின்றீர்கள்....?

இனிமேல் இந்த இரண்டு இனங்களும் சேர்ந்து வாழ முடியாது என்றவொரு மாயத் தோற்றத்தை சிங்களத் தலைமைப்பீடங்களும் அன்றிருந்த தமிழ்த் தலைமைப்பீடங்கள் தொடக்கம் அழிந்து போன தமிழ் இயக்கங்கள் வரை இந்த மாயையை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால் உண்மை அதுவல்ல.

விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன் அவர்களின் மனைவியே ஒரு சிங்களவர்தான் 
மக்கள் இணைந்து வாழ்வதில் இந்த உலகத்தில் எப்போதும் பிரச்சனை இருந்ததில்லை. இரு வேறு தத்துவங்கள் 
இரு வேறு முரண்பாடுகள் இணைந்து வாழ்வதில்தான் போர்கள் ஆயிரம் ஆண்டுகளாக நடக்கின்றது. 
மக்களின் மனங்களை உருவாக்குவதே ஆதிக்க சக்திகள்தான். ஆதிக்க சக்திகள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதுதான் தேவையானது .......மக்களின் மனங்கள் எந்த மாற்றத்தையும் கொண்டுவருவதில்லை. 

காலம் காலமாக இந்த அரசுகள் எப்படி இந்த தமிழ் மக்களை ஒடுக்கி நசுக்கி அடக்கி ஆளுகின்றனவோ அப்படித்தான் சிங்கள மக்களையும் அடக்கி ஆண்டு கொண்டிருக்கின்றன.

இதை முதலில் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். ஏன் எதற்கு என்ற தெளிவும்  வேண்டும்.

எனக்கு இப்பவும் நல்ல ஞாபகம் இருக்கின்றது. அன்று ஒரு நாள் ஜே.ஆரின் ஆட்சியை எதிர்த்து யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய தின எதிர்ப்புக் கூட்டத்தில் பேசிய பல தமிழ் தலைவர்கள் ஜே.ஆர் அரசின் விலைவாசி ஏற்றத்தினால் தமிழ் மக்கள் மிகவும் கஸ்டப்படுகின்றார்கள் என்றும் தமிழ் மக்கள் பட்டினியால் துன்புறுகிறார்கள் என்றும், அரசானது தமிழ் மக்களுக்கு எதிரானது என்ற கருத்துப்பட பேசிய போது, தோழர் சண்முகதாஸன் அவர்கள் தான் இந்த விலையேற்றமும் பசி, பட்டினிக் கொடுமைகளும் சிங்கள மக்களுக்கும் தான் என்று பேசிய போது அந்தக் கூட்டமே அதிரும்படி எழுந்த சிரிப்பொலியும் கரகோசமும் என்னால் இன்றும் மறக்க முடியாது.

அதேநேரத்தில் விடுதலைப்புலிகளின் திண்ணைவேலித் தாக்குதலின் காரணத்தினால் தான் 83 இனக்கலவரம் ஏற்பட்டது என்று பலர் பேசிய போது அதற்கு முன்னர் நடைபெற்ற கலவரங்களுக்கு யார் காரணம் என்று கேட்டு முன்னர் நடந்த இனக்கலவரங்களுக்கெல்லாம் எங்கே விடுதலைப்புலிகள் தாக்கினார்கள் என்ற கேள்வியை எழுப்பியதோடு மட்டுமல்லாது இலங்கைக்கு ஆயுதப் போராட்டம் தான் சிறந்த வழி என்ற கருத்தையும் பகிரங்கமாகவே தெரிவித்தார்.

இலங்கையில் நடைபெற்ற கலவரங்களின் போதெல்லாம் பல சிங்கள மக்கள் தான் தமிழ் மக்களை காப்பாற்றி பாதுகாத்து அனுப்பி வைத்தார்கள் என்பதை மறந்து விட முடியாது.

அவ்வளவும் நடைபெற்ற பிறகும் திரும்பவும் தமிழ் மக்கள் போய் தெற்கில் மீண்டும் வாழ்கின்றனர் தானே. காரணம் என்ன... நாங்கள் சேர்ந்து வாழலாம் என்ற அந்த நம்பிக்கை தான்.

சிங்கள மக்களுடன் இனிது வாழலாம் என்று யாரும் போகவில்லை வேறு தெரிவு இல்லாமல்தான் போனார்கள்.
ஒரு முதலை வாழும் குளத்தில் மீன்கள் பெருக்க பெருக்க அந்த முதலை கொன்று உணவாக்கினாலும் மீன்கள் அங்குதான் வாழவேண்டும் பஸ் பிடித்த்து வேறு குளத்துக்கு போகமுடியுமா?  இன்னமும் உள்நோக்கி பார்த்தால் விமான குண்டு வீச்சு செல் வீச்சு என்று உயிராபத்து இங்குதான் அதிகமாக இருந்தது. பொருளாதார முடக்கம் கல்வி முடக்கம் என்ற இன படுகொலையின் வடிவம் இங்குதான் இருந்தது. அதில் இருந்து தற்காலிக பாதுகாப்பு தேடி போனார்களே தவிர சிங்களவருடன் உறவாடலாம் என்ற எண்ணத்தில் போனார்கள் என்பது தவறானது 

நிட்சயமாக நாங்கள் சேர்ந்து வாழலாம். நானொரு கேள்வியை உங்களிடம் கேட்கிறேன். தமிழர்கள் எல்லாம் ஒற்றுமையாய் இருக்கிறீர்களா.......? என்று அவர் என்னைப் பார்த்துக் கேட்டார்.

தமிழர்களுக்கு இடையேயான முரணப்பாடும் ஒற்றுமையும் வேறு தளம் அது இருந்தாலும் இல்லாவிட்டாலும் 
தமிழ் குடி இருக்கும். சிங்களவரின் முரண்பாடே தமிழ் குடியை அழிப்பதில் தொடங்குகிறது. 

பதிலொன்றும் பேசாது சிரித்துக் கொண்ட நான் இதையேன் என்னிடம் கேட்கிறீர்கள்....,? என்று நானே அவரிடம் திருப்பிக் கேட்டேன்.

இல்லை, தமிழ்ப் போராட்டம் என்று ஒன்று உருவாகுவதற்கு முன்னர் என்னுடைய கணவனும் அவரது பல தோழர்களும் ஆயுதம் எடுத்துப் போராடியது எனக்கு நன்றாகவே தெரியும். தமிழருக்கு எதிராக போராடிய போராட்டம் அது. எப்போதாவது கூட்டம் என்றும் சந்திப்புக்கள் என்றும் போய்விடுவார்.... சில நாட்கள் கழித்துத் தான் வருவார். வரும் போது சில தோழர்களும் வந்து தங்குவார்கள். அது பற்றி எனக்கு முதலில் தெரியாது பின்னர் தான் அந்த ரகசியங்கள் எனக்குத் தெரிந்தன.

தமிழர்கள் மத்தியில் திறக்கப்படாத பல கோவில்கள் திறக்கப்பட்டன, பல தேநீர் கடைகள் எல்லாம் திறக்கப்பட்டதற்கு அந்தப் போராட்டங்கள் தான் காரணம். ஆனால் இன்று வரையும் அந்தப் பிரச்சினைகள் முடியவில்லை...... ஏன் இந்தப் புலம்பெயர் சமூகத்தில் கூட இந்தச் சாதிகளைக் கொண்டு வந்து தமிழ்ச் சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது தானே. இன்று இவ்வளவும் நடைபெற்ற பிறகும் கூட நான் பெரிது நீ பெரிது என்று நினைக்கும் இந்த தமிழ் சமூகத்தை நினைக்கும் போது கவலைப்படுவதை விட அதிகம் வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கிறது.

உண்மைதான் 

இன்று அந்தக் கம்யூனிஸக் கட்சியும் அதன் போராட்டங்களும் பெரிதாக முன்னிலைக்கு வராமல் இல்லாதழிந்து போனது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்.

முதலில் எங்கள் கிராமத்திலும் மற்றைய அயல் கிராமங்களிலும் உள்ள பெரும்பான்மையானவர்கள் மத்தியில் இந்தக் கம்யூனிசவாதிகள் என்றால் கடவுளுக்கும் மதங்களுக்கும் எதிரானவர்கள், தெய்வங்கள் இல்லையென்பவர்கள், கோவில்களுக்கு எதிரானவர்கள் போன்ற தப்பான அபிப்பிராயங்கள் சாதாரண பொது மக்களிடத்தில் இருந்தது. வழிக்கு வழி தெருவுக்குத் தெரு வழிபாட்டுத்தலங்கள் நிறைந்து காணப்படும் எம்மவர் மத்தியில் இவர்களது செயற்பாடுகளும் வேலைமுறைகளும் எடுபடுவது கஸ்டமான காரியம்தான்.

இரண்டாவதாக யாழ் மண்ணிலே வேரோடியிருக்கும் சாதிய பிரச்சினைகளுக்கு எதிராகப் போராடும் போது அடித்தால் திருப்பி அடிப்போம் என்ற கொள்கையை முன்னெடுத்த கட்சியை எப்படி இந்த யாழ் மேட்டுக்குடியினர் ஏற்றுக் கொள்வார்கள். இது ஒரு மிக முக்கிய காரணமாய் இருந்தது.

அடுத்ததாக தமிழீழ இயக்கங்களின் வளர்ச்சி.

அமிர்தலிங்கம் போன்ற தலைவர்கள் அகிம்சை மூலம் தான் தமிழீழம் எடுத்துத் தருவோம் என்ற போது

அவருடைய மகனை வைத்து இயக்கம் உருவாக்கியது என்ன வகையான அகிம்சை? 

ஆயதப்போராட்டத்தை முன்னெடுத்த தமிழ் இளைஞர்கள் அந்த நேரங்களில் பொலிசையும் ஆமியையும் சுட வெளிக்கிட, எங்கள் எதிரிகள் கொல்லப்படுகிறார்கள் என்று மக்களும் நம்பி அவர்களை ஆதரிக்க தமிழ் இயக்கங்கள் வளர இந்தக்கட்சியின் ஆதரவுகள் குறைந்தது உண்மை தான்.

இந்த மாற்றம் சிங்கள மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை உண்டு பண்ணவில்லை, ஆனால் சர்வதேசப் பிரச்சினைகளால் கட்சிகளில் நிகழ்ந்த மாற்றங்களும் சண் அவர்களின் மறைவும் பெரிய காரணங்களாய் இருந்தது என்று நினைக்கின்றேன்.

தமிழீழ விடுதலை இயக்கங்கள் பற்றிய உங்கள் கருத்து....?

இயக்க ஆரம்ப காலங்களில் பல இயக்கத்தினர், என் கணவனுடனும் அவரது மற்றைய தோழர்களுடனும் வந்து கதைப்பார்கள், பல விவாதங்களை நடத்தியிருக்கிறார்கள். அப்போது எங்கள் தோழர்கள் இந்தத் தமிழீழப் போராட்டம் பிழையானது என்றும் இது ஒரு பாரிய அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும் என்றும் எடுத்துக் கூறினார்கள். ஆனால் எனக்கு அது அந்த நேரத்தில் விளங்கவில்லை. காலம் அதை இப்போது எல்லோருக்கும் உணர்த்தியிருக்கிறது.

அவர்கள் இந்தியாவில் சென்று பயிற்சி எடுத்த தருணங்களில் இந்தியா எமக்கு நட்பு நாடெல்ல என்றும் இவர்கள் தான் இந்த தமிழினத்துக்கே எதிரியாக இருப்பார்கள் என்றும் அடித்துக் கூறியது மட்டுமல்ல 1971 களில் ஜே.வீ.பியை அழித்தொழிக்க சிறிமா அரசுக்கு எவ்வாறு இந்திய அரசு பக்கபலமாக நின்றதோ அதே போல் இந்திய அரசும் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு தனி அரசை உருவாக விடாது என்று சொன்ன பொது ஒருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை.

தலைவர் பிரபாகரன் அவர்கள் எனது கணவனின் பள்ளித் தோழன், மாத்தையா எனது பள்ளித் தோழன். ஒரு நாள் மாத்தையா அவர்களும் அவரது தோழர்கள் சிலரும் எங்கள் வீட்டில் நடைபெற்ற சந்திப்பின் போது சமுதாயத்தில் அந்த நேரங்களில் இடம்பெற்ற சமூகத்துரோகிகள் ஒழிப்பு என்ற பெயரில் இடம்பெற்ற அநியாய கொலைகள் பற்றியும் அவையெல்லாம் போராட்டத்திற்கு, மக்கள் மத்தியில் ஆதரவை ஏற்படுத்தாது என்று எனது கணவர் கூறிய போது தனித்தமிழன் இருக்கும் வரை போராடியே தீருவோம் என்று ஆவேசப்பட்டார் மாத்தையா.

அதே காலகட்டத்தில் இவரது தம்பியார் உட்பட வேறு சிலர் ஏற்கனவே தோன்றிய தமிழ் அமைப்புக்கள் பிழையென்று புதிய இயக்கத்தை ஆரம்பித்த போது அதுவும் பிழையான பாதைக்கே கொண்டு செல்லும் என்று அவரது தம்பியாருடன் வாதிட்டது எனக்குத் தெரியும்.

நடந்து முடிந்த முள்ளிவாய்க்கால் பிரச்சினைகளுக்குப் பிறகு இன்று என்ன நினைக்கின்றீர்கள்.....?

ஊரில் இருந்த நேரத்தில் எனது கணவனும் இவரது சில தோழர்களும் இயக்கப் போராளிகளுக்கு தங்களால் முடிந்த சகல உதவிகளையும் அந்த நேரத்தில் வழங்கிக் கொண்டு தான் இருந்தார்கள். இறுதிக் காலங்களில இருக்க முடியாத சூழல் உருவான போது அவரை இயக்கத்தினர் தான் இந்தியா கொண்டு வந்து விட்டார்கள். இந்தியாவிலும், பிறகு வெளிநாடு என்று வந்த பின்னரும் இயக்கத்தை ஆதரிக்க வேண்டிய நிலை எங்களுக்குள் இருந்தது.

சில காலங்களின் பின்னர் வெளிநாடு வந்த எனது கணவரும் இறந்து விட்டார். இப்ப இயக்கப் பிரச்சினைகளும் முடிந்து விட்டது. மீண்டும் முன்பு தமிழ் தலைவர்களும் இயக்கங்களும் மக்களை ஏமாற்றியது போல் அடுத்த பொங்கலுக்கு தமிழீழம் எடுத்துத் தருவோம். புலம்பெர் தமிழர் இருக்கும் வரை எமது தமிழினத்துக்கு அழிவேயில்லை என்று பசப்பு வார்த்தைகளை கூறி; தமிழ் மக்களைப் பேக்காட்டி மேலும் மேலும் ஏமாற்றாமலும் சீமானும் வைக்கோவும் நெடுமாறனும் வந்து தமிழீழம் எடுத்துத் தருவார்கள் என்று நம்பி இன்னொரு அழிவுப்பாதைக்கு மக்களை இட்டுச் சொல்லாமலும் ஏற்கனவே சண்முகதாசன் போன்ற தலைவர்கள் முன்வைத்த கருத்துக்களை மனதிற் கொண்டு இலங்கையில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் சேர்ந்து வாழ ஒரு அரசை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது தான் சாலச்சிறந்தது.

வேறு பல விடையங்களும் கதைத்து முடிந்தவுடன் இன்று இந்தப் புலம்பெயர் மண்ணில் சிங்கள தமிழ் உறவுகளும் ஒற்றுமைகளும் கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்து வருவதை எண்ணி மனம் மகிழ்வதாக திருமதி சாந்தா சிவநாதன் குறிப்பிட நன்றியுடன் விடைபெற்று வந்தேன்.

முற்றும்.

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=9077:2014-07-09-13-15-58&catid=320&Itemid=238

இவருடைய கருத்துக்களையும் எண்ணங்களையும் எதிர்ப்பது எனது நோக்கமல்ல 
இது ஒரு காலம் கடந்த ஞானம் போல இறுதியில் இவ்வாறு ஆகியிருந்தால்? என்று எண்ணி தேடும் ஒரு ஆறுதல்தான். ஆனால் திட்டமிட்ட இன அழிப்பு நீங்கள் யாரும் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் நடந்துகொண்டுதான் இருக்கும். இனி சிங்கள அரசுகள் ஒருவேளை அசோகனாகி அமைதி வேண்டினாலும் 
பிராந்திய ஆதிக்க போட்டி அரசுகளுக்கு தாம் அடைய வேண்டியதை அடைவதுக்கு சிங்கள அரசுகளுக்கு தடவி கொடுப்பதுபோல  இன அழிப்பை எவ்வாறு பக்காவாக செய்வது என்று திட்டம் கொடுத்துதான் தங்களை சிங்கள அரசின் நண்பர்கள் என்று அறிமுகமாகும் வரை தமிழ் இருப்புக்கு அழிவுதான். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.