Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சோவியத் தாக்குதல் – Operation Barbarossa - உலகயுத்தம் 2 - பகுதி 10

Featured Replies

large.4960AC78-4A0B-4379-A40F-3B9329DEBEA3.jpeg.d4fca292695b10f4b24e9bd84224d712.jpegசோவியத் மீதான தாக்குதலை தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாக விட்ட நிலையில் தமது ராணுவ வல்லாண்மையில் அவர்கள் வைத்த நம்பிக்கை காரணமாக மூன்று அல்லது நான்கு மாதங்களில் மொஸ்கோவை பிடித்து விடலாம் என்றே நம்பினர்.

 

ஜூன் 22, 1941 அதிகாலை 3 மணி. நாசி போர் விமானங்கள் சோவியத்யூனியனுக்குள் சீறிப்பாய்ந்தன. ஆயிரக்கணக்ககான ஜேர்மன் விமானங்கள் குண்டுகள் வீச ஆரம்பித்தன. ஆயிரக்கணக்கான டாங்கிகளும் பீரங்கிகளும் எல்லைகளை மீறி உள்ளே புகுந்து தாக்க ஆரம்பித்தன.

மூன்று மில்லியனுக்கு மேற்பட்ட ஜேர்மன் துருப்புக்கள் மூன்று சம வரிசையாக சோவியத்திற்குள் பாரியளவான தாக்குதலை முன்னெடுத்தனர்.  இதற்கு முன்னர் இப்படியொரு பிரமாண்டமான படையெடுப்பு நடத்தப்படவில்லை என்று உலகம் சொல்லவேண்டும் என்று ஹிட்லர் தனது படைத் தளபதிகளுக்கு சொல்லியிருந்தார். சோவியத்தின் மேற்கு எல்லைப்பிரதேசம் அதிரத் தொடங்கியது. ஓப்பரேசன் பார்பரொஸா Operation Barbarossa.  இதுவே இந்த தாக்குதலின் சங்கேதப்பெயர். வடபிரிவு ராணுவத்தினர் லெனின்கிராட்டையும், மத்திய பிரிவினர் மொஸ்கோவையும், தென்பிரிவினர் கீவ் மற்றும் ஸ்ராலின்கிராட்டையும் இலக்கு வைத்து நகரத்தொடங்கினர்.

19 டாங்கி டிவிசன்கள், கிட்டதட்ட 3000 டாங்கிகள், 2500 யுத்தவிமானங்கள், 7000 ஆட்டிலரிகள் என்று பாரிய ராணுவ நடவடிக்கை ஆயிரக்கணக்கான கிலோமீற்றர்கள் நீளமான சோவியத் எல்லையை உடைத்துக்கொண்டு நகரத் தொடங்கியது. முழு சோவியத்தையும் மலைப்பாம்பை போல் உயிரோடு விழுங்க ஹிட்லர் காட்டிய துடிப்பை இந்த படைபலத்தை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.

large.1278193071_SovietUnion1941.gif.d9e1e413aa27879d76163253dcd29bc4.gif

பார்த்து பாரத்து தீட்டிய திட்டம். கிட்டத்தட்ட ஒரு வருடமாக இதற்காக தான் உழைத்துக் கொண்டிருந்தார்கள். இதற்காகத்தான் உழைத்துக்கொண்டிருந்தார்கள். இதற்காக தான் காத்துக்கிடந்தார்கள். போலந்தை பிடித்ததும் இதற்காக தான். ரூமேனியாவை பிடித்ததும் இதற்காக தான். பின்லாந்துக்குள் ராணுவத்தை நிறுத்தி வைத்ததும் இதற்காக தான். கிட்ட தட்ட 1800 மைல் (2900 கி.மீ) சோவியத் எல்லை கைக்கு வந்துவிட்டது.

பேர்லின் மட்டுமல்ல, லண்டனும் வாஷிங்ரனும் கூட ஒரே முடிவுக்குத்தான் வந்திருந்தன. இனி சோவியத்தை ஒருவராலும் காப்பாற்றமுடியாது. ஹிட்லர் தனது நீண்டகால விருப்பத்தை பூர்த்தி செய்துகொண்டுவிட்டார். பிரான்ஸே சரிந்துவிட்டபோது சோவியத்தால் மட்டும் என்ன செய்துவிடமுடியும்? இதோ, இன்னும் சில தினங்களில் கம்யூனிசம் அழியப்போகிறது. நாசிகள் கம்யூனிஸ்டுகளை அழித்தொழிக்கப்போகிறார்கள்.

தாக்குதல் தொடங்கிய உடனடியாக சோவித்தின் பாதுகாப்பு அமைச்சர் டிமோஷென்கோ, ராணுவத் தலைமைத் தளபதி ஷுகோவ், துணைத் தளபதி வதூனின் மூவரும் களத்தில் இறங்கினார்கள். எங்கே ஊடுருவியிருக்கிறார்கள்? எங்கே நகர்ந்துகொண்டிருக்கிறார்கள்? தோராயமாக எத்தனை பேர்? என்னென்ன தளபாடங்கள்? எந்த மாதிரியான தாக்குதல்கள்.

காலை 4.30 மணிக்கு ஸ்ராலினின் அலுவலகத்தில் அத்தனை ராணுவ பெரும் புள்ளிகளும் ஆஜர்.

ஸ்ராலின் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து தனது கண்களை மூடிக்கொண்டார். அவர் கலங்கிப் போயிருக்கிறார் என்பதை அதிகாரிகள் புரிந்து கொண்டனர். எதற்கும் கலங்காத இரும்பு மனிதர் முதல் முறையாக சோர்வடைந்திருக்கிறார். தனது நெற்றியை கீறிக்கொண்டே யோசித்துக் கொண்டிருந்தார் ஸ்ராலின். இதோ வாசல் வரைக்கும் போர் வந்துவிட்டது. என்ன செய்வது? இனி ஒரு போர் சோவியத் மண்ணில் நடைபெறக்கூடாது என்று தான் விரும்பினேன். லெனினின் கனவுளைச் சிறிது சிறிதாக மெய்ப்பித்துக்கொண்டிருக்கிறேன். உலகின் முதல் சோஷலிச நாடு தனது நெஞ்சை நிமிர்த்தி எழுந்து நிற்கிறது. இன்னும் அதிக தூரம் செல்லவேண்டும். உலகில் உள்ள அத்தனை தொழிலாளர்களும், ஒடுக்கபட்டவர்கள் அத்தனை பேரும் சோவியத்தை தமது தாய்நாடாகக் கொள்ளவேண்டும். செய்வதற்கு நிறைய உள்ளது. ஆனால், அதற்குள் போர் அழைக்கிறது.

large.1131731685_VierPanzergruppe.jpg.7eb9fe19523fadb46c1b7ae3fd5f0af0.jpg

ஸ்ராலின் நிமிர்ந்து உட்கார்ந்தார். ராணுவ அதிகாரிகளை தீர்க்கமாக பார்த்தார்.

‘போர் தொடங்கட்டும்.’

ஆரம்ப கட்டத்தில் சோவியத் எதிர்பார்த்ததைப் போல் இந்த யுத்தம் அத்தனை சுலபமானதாக இல்லை. தீர்க்கமாகத் தான் போராடினார்கள். தீரமாக எதிர்த்தார்கள். ஆனாலும் நாசிகளின் அச்சுறுத்தும் படை பலத்துடன் சோவியத்தால் போட்டி போட முடியவில்லை. தவிரவும், நாசி தரைப் படைகள் தாக்குதலைத் தொடர்ந்து கொண்டிருந்த அதே சமயம் வான்வழித்தாக்குதல்களும் ஆரம்பிக்கபட்டன. சோவியத் தரைவழித் தாக்குதலுக்கு மட்டுமே தயாராக இருந்தது. ஹிட்லரின் பிரத்தியேக உத்தரவு இது. சோவியத் தடுமாறிக் கொண்டிருக்கும் போது விமானங்கள் சீறிப்பாய வேண்டும். சோவியத்தின் ராணுவத் தளங்கள்  அத்தனையும் குண்டு வீசி அழிக்கபடவேண்டும்.

large.457661994_sovietaircratlost.jpg.747851c8c6ec063e3d81fd9671ebdce0.jpg

முதல் நாள் விமான தாக்குதலில் சோவியத்தின் ஆயிரத்திற்கு மேற்பட்ட விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதானது சோவியத் விமானப்படைக்கு மிக பெரிய அடியாக இருந்தது.  இரண்டாம் நாள் யுத்தத்தில் சில மணிநேரங்களிலேயே 100 மேற்பட்ட ரி26 ரக டாங்கிகளை சோவியத் இழந்தது. மூன்றாம் நாள் 150 என சோவியத்தின் டாங்கிப்படை ஜேர்மனியிடம் பலத்த அடி வாங்கியது.  சோவியத்யூனியனுக்குள் ஜேர்மன் படைகளின் தாக்குதல் தொடங்கி ஒரு வாரத்தில் மின்ஸ் என்ற நகரின் சுற்றுவட்டாரத்தில் ஏறத்தாள 300 000  சோவியத் படையினர் சுற்றிவளைக்கப்பட்டனர். சுற்றிவளைக்கபட்ட சோவியத் செம்படை வீர‍ர்களில் பெரும் பகுதியினர் ஜேர்மன் இராணுவத்தால் கைது செய்யப்பட்டனர்.

கூடுதலாக, ஜேர்மனிக்கு தோள் கொடுக்கும் விதமாக 14 ரூமேனிய பிரிவுகளும் 21 ஃபின்லாந்து பிரிவுகளும் ஆஜர் ஆகியிருந்தன. நாளடைவில், இத்தாலி, ஹங்கேரி, ஸ்பெயின், ஸ்லாவாக்கியா ஆகிய நாடுகளும் தங்கள் சக்திக்குத் தகுந்தாற்போல் சில படைகளை ஜேர்மனிக்கு அனுப்பி வைத்தன. உலகத்தலைவர் ஹிட்லர் அவர்களுக்கு போற்றி, போற்றி! ஏதோ எங்களால் முடிந்த சிறு காணிக்கை. யுத்தம் முடிந்து நீங்கள் பிரபஞ்சத்தை ஆள நினைத்தால், எங்களை மறந்து விடாதீர்கள்.

வாழ்வா? சாவா? போராடப்போகிறாயா? கைகளை மேலே தூக்கி சரணடையப்போகிறாயா? சோவியத் விடையளிக்க வேண்டிய கேள்வி இது தான். யுத்தம் கொல்லைப்புறத்திற்கு வந்துவிட்டது. ராணுவம் எதிர்த்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால், இழப்பு பற்றிய செய்திகள் தைரியமூட்டும்படி இல்லை. இந்த எதிர்ப்பு பத்தாது. இந்தப் படை போதாது. அதிரடியாக ஆயத்தமாக வேண்டும்,

போர் தொடங்கி இரு வாரம் கழிந்த நிலையில் ஸ்ராலின் ரேடியோவில் பேசினார். சோவியத் மக்களே, நடந்து கொண்டிருக்கும் போரில் தற்போது ஜேர்மனி முன்னணியில் இருக்கிறது. கணிசமான பகுதிகளையும் அவர்கள் கைப்பற்றிவிட்டார்கள். நம் தரப்பு எதிர்ப்பு சொல்லிக்கொண்டாகும்படியான வெற்றியை இதுவரை ஈட்டித்தரவில்லை. ஆனால், அதற்காக பயப்படவேண்டாம். அவநம்பிக்கை கொள்ளவேண்டாம். ஜேர்மனி தனது நிஜ முகத்தை அம்பலப்படுத்திவிட்டது. புதிய உத்வேகத்துடன் இந்த போரில் சோவியத் இறங்கப்போகிறது. நமக்காக மட்டுமல்ல, ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள போராடும் மக்களுக்காகவும் இந்தப் போரை நாம் முன்னெடுத்துச் செல்கிறோம்.

கடந்த இரு ஆண்டுகளில் ஜேர்மனி பற்றி ஐரோப்பா புரிந்து கொண்டுவிட்டது என்று ஸ்ராலின் நம்பினார். ஜேர்மனியின் தேசியத் தலைவராக ஹிட்லரைப் பார்த்தவர்கள் திருந்திவிட்டார்கள். ஹிட்லர் ஒரு தீய சக்தி அல்ல என்று நம்பிவந்த பிரிட்டன் மாறிவிட்டது. ஆகா பலம் பொருந்திய ஒரு தலைவர் உதயமாகிவிட்டார் என்று பெருமைப்பட்ட சிறிய, பெரிய ஐரோப்பிய நாடுகள் போதும் போதும் என்னும் அளவுக்கு காயமடைந்துவிட்டன.

ஒட்டுமொத்த சோவியத் தேசமும் தனது கட்டை விரல் நுனியில் எழுந்து நின்றது. ராணுவத்திற்கு ஆட்கள் சேர்க்கும் பணி முழு மூச்சில் தொடங்கப்பட்டது. பிறகு, ஆயுதங்கள். பிரத்தியேக ஆயுதத்தயாரிப்பு தொழிற்சாலைகள் போதாது. ஒவ்வொரு தெருவிலும் உள்ள ஓவ்வொரு சிறிய, பெரிய தொழிற்சாலையும் அவசர கதியில் ஆயுதங்கள் தயாரிக்க வேண்டும். நீ என்ன செய்கிறாய்? இயந்திரங்கள். நீ? ஸ்பேர்பாட்ஸ். இந்த நிமிடம் முதல் நீங்கள் தயாரிக்கவேண்டியது ஆயுதங்களைத்தான். இதோ, இதுதான் துப்பாக்கியின் மொடல். இதே போல் ஆயிரம் துப்பாக்கிகள் வேண்டும். கிட்டத்தட்ட குடிசைத் தொழில் போல் எல்லா சிறிய, பெரிய தொழிற்சாலைகளிலும் ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டன.

போர் எத்தனை காலம் நீடிக்கும் என்று தெரியாது. எவ்வளவு ஆயுதம் தேவைப்படும் என்று தெரியாது. எத்தனை படை வீரர்கள் தேவைப்படுவார்கள் என்று கணிக்க முடியாது. ஆயுதங்கள் வந்துகொண்டே இருக்க வேண்டும். வெட்ட வெட்ட வளர வேண்டும். தீரத் தீர குவிய வேண்டும்.  

பேய்த்தனமாக இயங்கியது ரஷ்யா. 1500 கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இடம் மாற்றப்பட்டன. போர்க்களத்துக்கு அருகே செல்லுங்கள். ஆயுதங்களை தயாரித்து முடிந்து அப்படியே களத்துக்கு அனுப்புங்கள். எதற்கு அநாவசிய நேரத்தை விரயமாக்க வேண்டும்? ஒவ்வொரு வினாடியும் முக்கியம்.

ரேடியோவை திருகினால், ஸராலினின் கரகரத்த குரல், தோழர்களே, மக்களே, அன்பு நண்பர்களே! உங்களுக்காகத்தான் நான் உரையாற்றுகிறேன். நம் எதிரி மிகவும் கொடூரமானவன். ஆபத்தானவன்.Tshar மன்னர் ஆட்சியை மீண்டும் கொண்டுவர அவன் முயற்சிக்கிறான். நமது எண்ணெய் வளங்களை கைப்பற்ற அவன் முயற்சிக்கிறான். ரஷ்யர்களை, பைலோரஷ்யர்களை, லிதுவேனியர்களை, உஸ்பெக்குகளை, அர்மீனியர்களை, அஜர்பைனர்களை அழித்து ஒழிக்க அவன் முயற்சி செய்து கொண்டிருக்கிறான். மீண்டும் அடிமை முறையைக் கொண்டு வர அவன் விரும்புகிறான். நடக்கவிடக்கூடாது. நம் எதிரியை நாம் விரட்டியாகவேண்டும். சுதந்திரமாக வாழப்போகிறோமோ அல்லது அடிமைத்தனத்தில் விழப்போகிறோமோ? இது தான் நம் முன்னால் உள்ள கேள்வி.

மக்கள் முன் வந்தனர். நாங்கள் உதவுகிறோம். போர் முடிவடையும் வரை, சோவியத்  வெற்றி பெறும் வரை, எத்தனை சிரமங்கள் வந்தாலும், எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் அவற்றை நாம் தாங்கிக்கொள்வோம். எங்கள் மன உறுதியை இழக்கமாட்டோம். ஸ்ராலின் எதிர்பார்த்தது இதைத்தான். ஆச்சரியமூட்டும் விதத்தில் சோவியத்தின் திட்டம் நிறைவேறியது. பளபளக்கும் புதிய ஆயுதங்களுடன் புதிய உற்சாகத்துடன் போரில் நுழைந்தது ராணுவம்.

நாசிகள் முதலில் ஆச்சரியமடைந்தனர். பிறகு அதிர்ந்து போயினர். சிறு சிறு அலைகளை அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். வந்ததோ ஆர்ப்பரிக்கும் கடல். எங்கிருந்து இத்தனை பலம் வந்து சேர்ந்தது? இத்தனை ஆயிரம் படை வீரர்கள் எங்கிருந்து முளைத்தார்கள்? இத்தனை நவீன ஆயுதங்களை அவர்கள் எங்கே வைத்து தயாரித்தார்கள்? எங்கிருந்து கற்றார்கள் இந்த போர் யுக்திகளை? யார் இவர்களுக்கு உந்து சக்தி?

அந்த வினாடி தொடங்கி நாசிகள் சரிய ஆரம்பித்தார்கள், மிக ஆக்ரோஷமான எதிர்த்தாக்குதலை சோவியத் படைகள் நடத்த ஆரம்பித்தன. ரஷ்ய நகரமான ஸ்ரொலென்ஸ்க்கில் (Smolensk) நடைபெற்ற இரண்டு மாத யுத்தத்தில் மட்டும் 115,000 ஜேர்மனியர்களின் இழப்பை ஜேர்மனியால் நம்பமுடியவில்லை. ஹிட்லர் கடுகடுப்புடன் ஓவ்வொரு உத்தரவாகப் பிறப்பித்துக் கொண்டிருந்தார். இத்தனை நாடுகளை வென்று எடுத்துவிட்டோம். சோவியத்திடம் இப்படித் தடுமாறலாமா? நாசிகளே, எங்கே போனது உங்கள் பலம்? எங்கே போனது உங்கள் தேசபக்தி? படைகளை வந்து குவிந்தன. இழுத்துப்பிடித்துக் கொண்டு போராடியது ஜேர்மன் படைகள். 1941 ஜுலை 16 அன்று சோவியத் படைகளின் கடுமையான எதிர்த்தாக்குதல்களை முறியடித்து கொண்டு  ஸமொலென்ஸ்க் முழுவதும் ஜேர்மனி வசம் சென்றது. அடுத்து சோவியத்தின் தென்பகுதி கீவ்.

ஜுலை 30, 1941 அன்று அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்டின் பிரதிநிதி ஹாரி ஹப்கின்ஸ் மொஸ்கோ வந்து சேர்ந்தார். ஸ்ராலினை சந்தித்து உரையாடினார். போர் எப்படி நடந்து கொண்டிருக்கிறது? நிலைமை யாருக்கு சாதகமாக இருக்கிறது? புன்னகையுடன் பதிலளித்தார் ஸ்ராலின் நிலைமை சோவியத்துக்கு சாதகமாக இருக்கிறது. ஜேர்மானிய படைகள் அடித்து விரட்டப்படும். இன்னும் எத்தனை எதிரிகள் தோன்றனாலும் அவர்களை வெல்வோம். நேரில் வந்து விசாரித்ததற்கு நன்றி. அமெரிக்காவுக்கு எனது வந்தனங்கள்.

ஹிட்லர் சளைக்காமல் முன்னேறிக்கொண்டிருந்தார். படைகளின் ஆக்கிரோஷம் அதிகரித்திருந்தது. தோல்விகள் பரிசளித்த ஆக்ரோஷம் அது. செப்ரெம்பர் 1941ல் கீவ் சுற்றிவளைக்கபட்டது. அடுத்து பால்டிக் பகுதிகள். அடுத்து லெனின்கிராட். லெனின்கிராட்டை நெருங்குவார்கள் என்று சோவியத் ஏற்கனவே யூகித்திருந்தது. படைகள் தயாராக இருந்தன.

ஸ்ராலின் லெனின்கிராட்டை தகுந்த முறையில் பாதுகாத்திருந்தார். பாரிஸில் ஜேர்மனி நுழைந்தபோது அரசாங்கம் எப்படி அலறியடித்துக்கொண்டு ஓடியது என்பதை அவர் பார்த்திருந்தார். பிரான்ஸின் புகழ்பெற்ற அரண்கள் எப்படி தவிடுபொடியாக உதிர்ந்துபோயின என்பதையும் அவர் கவனித்து குறித்துக் கொண்டார். லெனின்கிராட்டுக்கு அப்படிப்பட்ட ஒரு நிலை என்றும் வந்துவிடக் கூடாது. வர விடமாட்டேன். ஐந்தாண்டு திட்டத்தின் ஒரு பகுதியாக லெனின்கிராட் பாதுகாப்பு பன்மடங்கு பலப்படுத்தப்பட்டிருந்தது.

மனித பலத்தை மிக அதிகமாக நம்பியது சோவியத். அனைவருக்கும் இலவச மருத்துவம். குழந்தை பிறப்பின் போது தாய்க்கும் குழந்தைக்கும் சிறப்பு கவனம், நல்ல ஆகாரம், இளைஞர்களுக்கு உடற்பயிற்சி குறித்தும் விளையாட்டு குறித்தும் தனிக்கல்வி, இப்படி பார்த்து பார்த்து கவனித்து கொண்டது சோவியத். ராணுவத்தில் பணியாற்றுபவர்களின் எடை, மார்பளவு போன்றவை நீடித்த பயிற்சியின் காரணமாக நன்றாக வளர்ச்சியடைந்தன. போர்முறை குறித்து அவர்களுக்கு தனிச்சிறப்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. எந்த வகையான ஆயுதங்களையும் அவர்களால் சமாளிக்க முடிந்தது. எப்படிப்பட்ட கடினமான சவாலையும் எதி்ரகொண்டு முறியடிக்க முடிந்தது.

பொதுமக்களுக்கு தற்காப்பு பயிற்சிகள் அளிக்கபட்டிருந்தன. தேர்ச்சி பெறுபவர்களுக்கு GTO என்ற பதக்கம் அளிக்கபட்டது. உழைப்பதற்கும் தற்காப்பிற்கும் தகுதியானவர் என்னும் பொருள்படும். நிலத்தில பணிபுரிபவர்களுக்கு பிரத்தியேக பயிற்சிகள். ஒவ்வொரு பண்ணையிலும் தலைவர்கள் இருப்பார்கள். இவர்கள் பிற விவசாயிகளுக்கு பயிற்சியளிப்பார்கள். பயிற்சி பெற்ற பெண்கள் பண்ணையிலேயே குழந்தைகளை கூட்டி பாடம் எடுப்பார்கள். எதிர் தாக்குதல் நடைபெற்றால் எப்படி தப்பிப்பது? எப்படி ஒழிந்து கொள்வது போன்றவை கற்றுக்கொடுக்கபடும்.

விவசாயியாக இருப்பவர் பணி முடிந்ததும் அப்படியே போர்க்களத்திற்கு போகவும் தயாராக இருக்கவேண்டும். ஆயுதப்பயிற்சிகள் அவர்களுக்கு ஏற்கனவே அளிக்கபட்டிருக்கும்.

உக்கிரேனில் ஜேர்மன் படைகள் நுழைந்ததுமே, விவசாயிகள் தங்கள் விளைச்சல்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இறங்கிவிட்டார்கள். ஆசிரியர்கள் மாணவர்கள் அலுவலக ஊழியர்கள் அனைவரும் வயலுக்கு ஓடிவந்துவிட்டா்கள். விளைந்த தானியங்களை அவர்கள் அறுவடை செய்தார்கள். ஜேர்மனி உள்ளே நுழைந்தபோது வயல்கள் கிட்டத்தட்ட காலியாக இருந்தன.

கார்கோவ் (Kharkov) நகரத்தில் படைகள் நுழைந்த போது, ஒரு பகுதியினர் தொடர்ந்து தொழிற்சாலைகளில் இயங்கி கொண்டிருந்தனர். அவர்களுக்கு வெளியில் காவல் இடப்பட்டிருந்தது. குண்டுகள் முழங்கிக்கொண்டிருந்த சமயத்திலும், வழக்கம் போல பணியாற்றினார்கள். அவர்கள்  பணியாற்றிக்கொண்டிருந்தது கார்கோவ் டிராக்டர் நிறுவனத்தில். உற்பத்தி செய்து கொண்டிருந்தது டாங்கிகளை. கும்பல் கும்பலாக வேலைக்கு போய்க்கொண்டிருந்த மக்களைக் கண்டு நான் பயந்து போனேன் என்றார் பிடிபட்ட ஒரு ஜேர்மானிய விமானி. எங்கிருந்து இத்தனைத் தைரியம் இவர்களுக்கு கிடைத்தது.

அக்ரோபர் 19 ம் திகதி, ஸ்ராலின் அரசாங்க அலுவலகங்களை மொஸ்கோவில் இருந்து வால்காவுக்கு அருகே உள்ள Kibyshev பகுதிக்கு மாற்றினார். போரில் ஈடுபடாது மக்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தியது சோவியத். குழந்தைகளை அவர்களின் ஆசிரியர்களுடன் உரால் போன்ற தூர பிராந்தியத்திற்கு முன்கூட்டியே அனுப்பி வைக்கபட்டனர். அடுத்த இரு ஆண்டுகளுக்கு அவர்கள் அங்கேயே தங்கியிருக்கலாம். உயிரிழப்புகளைத் தவிர்க்க பொதுமக்களும் இவ்வாறே அனுப்பிவைக்கபட்டனர். மொஸ்கோ மக்கள் நகரத்தில் தங்கியிருந்தனர். அடுப்பு மூட்ட கரி கிடைக்காது. போர் தொழிற்சாலைகளுக்கு கரி தேவை. வீடுகளுக்கு மின்சாரம் கிடையாது ராணுவப்பணிகளுக்காக மின்சாரம் திருப்பிவிடப்பட்டது.

ஜேர்மனிய துப்பாக்கிகள் சீறிப்பாய்ந்து வெடித்துக்கொண்டிருந்த ஸ்ராலின் செஞ் சதுக்கத்தில் இருந்தார். மொஸ்கோவை அண்மித்துவிட்டோம்  கைப்பற்றிவிட்டோம் என்று ஹிட்லர் கூறிய வேளை நவம்பர் 7, 1941 ல் ஸ்ராலின் செம்படை வீர்ர்களுக்கு உத்தரவுகள் பிறப்பித்து கொண்டிருந்தார். நவம்பர் 7, 1941 ல் ஸ்ராலின் மொஸ்கோ  உரை பிரசித்தி பெற்றது.

லெனின்கிராட் யுத்தம்

லெனின்கிராட் மிக கடுமையான நெருக்கடிகளை சந்தித்தது. இரண்டரை ஆண்டுகள் இந்த யுத்தம் நீடித்தது. இடைவிடாத துப்பாக்கிச்சூடு. இடைவிடாத வான்தாக்குதல்கள் இடைவிடாத சிரமங்கள், உயிர் இழப்பு. லெனின்கிராட் சுற்றி வளைக்கபட்டு உணவு பாதைகள் தடுக்கபட்டுவிட்டதால் கடும் பசியால் மக்கள் திண்டாடினர். போதுமான புரோட்டின் சத்து கிடைக்காமல் சிலர் இறந்துபோனார்கள். புகழ்பெற்ற இசையமைப்பாளரான Shostakovich போர்விமானியாக மாறியிருந்தார். இடையிடையே நேரம் கிடைக்கும் போது தனது ஆறாவது சிம்ஃபோனியை அவர் படைத்தார்.

ஆர்ப்பரிக்கும் கடலை நாசிப்படைகள் முன்னரே சந்தித்து விட்டன. இந்த முறை அவர்கள் லெனின்கிராட்டில் சந்தித்தது சுழற்றி அடிக்கும் சூறாவளியை. அவர்கள் எதிர்பார்த்தது போர் வீரர்களை. ஆனால் அவர்கள் போரிட்டது போர் வீரர்களுடன் மட்டுமல்ல, மக்களிடமும் தான். தேசத்தை காக்க ஒரு நகரமே இப்படி போர்முனையில் வந்து குவியும் என்று அவர்கள் எதிர்பாரக்கவில்லை.

 

ஸ்ராலின்கிராட் யுத்தம்

இரண்டாவது ஆண்டு, தென்பகுதிக்கு முன்னேறியது ஜேர்மன் படை, ஸ்ராலின்கிராட், அதை ஒட்டிய பகுதிகள் மீது தாக்குதல் ஆரம்பமானது. வோல்கா ஆற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ள நகரம். இந்த நகரை கைப்பற்ற ஹிட்லர் விரும்பியதன் காரணம் உண்டு. ஸ்ராலின்கிராட் முக்கியமான தொழில் நகரம். கஸ்பியன் கடலையும் வடக்கு ரஷ்யாவையும் இணைக்கும் வர்த்தக வழித்தடம். ஸ்ராலின்கிராட்டை கைப்பற்றிவிட்டால் வடக்குப் பகுதிக்கு எரிபொருள் உள்ளிட்ட சரக்குகள் அனுப்பப்படுவதை தடுத்து நிறுத்திவிடமுடியும்.

ஹிட்லர் உறுமினார். நேற்றுவரை விவசாயிகளாக இருந்தவர்களை உங்களால் எதிர்கொள்ள முடியவில்லை என்று சொல்வது வெட்கக்கேடானது. தாக்குங்கள். தாக்கி அழியுங்கள். ஸ்ராலின்கிராட் சிதறி விட்டது என்னும் செய்தியை நான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

ஒவ்வொரு நாளும் உதவிக்கு புதிய படைகள் வந்து சேர்ந்து கொண்டிருந்தன. ஆயிரக்கணக்கான போர்விமானங்கள் வானில் பறக்க ஆரம்பித்தன. டாங்கிகள் ஆயிரக்கணக்கில் அனுப்பி வைக்கப்பட்டன. ஸ்ராலின்கிராட்டை கைப்பற்றிவிட்டோம் என்று ஒன்றுக்கு மேற்பட்ட முறை ஹிட்லர் அறிவித்தார். உண்மையில் அவர் பெரும்பகுதியை கைப்பற்றியும் இருந்தார். அதாவது பிரதேசத்தை மட்டுமே மக்களை அல்ல. சோவியத் படைகள் ஸ்டாலின்கிராட்டின் புறநகர்ப் பகுதிக்குத் தள்ளப்பட்டதாகக் கேள்விப்பட்டபோது ஸ்டாலின் கோபமடைந்தார்..

இது ஸ்டாலின்கிராட் ஒரு பேரழிவு மட்டுமல்ல என்பதை அவர்கள் உணரவில்லையா? எங்கள் முக்கிய நீர்வழி மற்றும் எண்ணெயையும் இழப்போம்.

இதே வேளை மறுபுறத்தில் மிக விரைவாக மொஸ்கோவை கைப்பற்றி சோவியத்தை ஜேர்மனியின் முழு ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரலாம் என்ற தனது திட்டம் செம்படைகளின் கடுமையான எதிர்த்தாக்குதல் காரணமாக தாமதமாகி கொண்டே செல்வதால் ஹிட்லர் கோபத்தின் உச்சிக்கே சென்றார். ஆனால் ஹிட்லரின் சீற்றத்தில் நூற்றில் ஒரு பங்கு கூட இப்போது நாசிப்படைகளிடம் இல்லை. ஹிட்லருக்கு என்ன உத்தரவுகளை கொடுத்து கொண்டே இருப்பார். வெடவெடக்கும் குளிரில் இந்த பொல்லாத ரஷ்யர்களிடம் மல்லுக்கட்டப்போவது நாம் தானே. குளிர் இந்த ஒற்றை வரிகள் நாசிகளை படுத்திய பாட்டை வார்த்தைகளால் வருணிக்க முடியாது. கடும் குளிர் தெரியும். உறைய வைக்கும் குளிர் தெரியும். ரஷ்யாவில் பரவியிருப்பது கொல்லும் குளிர். வானாகி, மன்னாகி, வளியாகி, உளியாகி அங்கும் இங்குமாய் பரவிக்கிடக்கும் கொலை பாதகக் குளிர்.

 

(தொடரும்)

 

நூல்  இரண்டாம் உலகப்போர்

எழுதியவர்  மருதன்

வெளியீடு கிழக்கு பதிப்பகம்  2009 மே

 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்!

இந்தக் காலப்பகுதியில் உக்ரைனிலும் போலந்திலும் யூதர்களை எப்படி பெருந்தொகையில் குறைந்த முயற்சியோடு கொல்லலாம் என்ற சிறு சிறு ஆய்வு முயற்சிகளும் நடந்தன! இவற்றில் இருந்து தான் பின்னாட்களில் வாயுக் கூடங்களை உருவாக்கினர்! 

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்ரின் உங்களை மீன்டும் கன்டதில் மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

ஜஸ்ரின் உங்களை மீன்டும் கன்டதில் மகிழ்ச்சி.

எமக்கும் மகிழ்ச்சிதான்.
இனிவரும் காலங்களிலாவது மற்றவர்களை குறை/குற்றங்கள் சொல்லாமல் போவதும் வருவதுமாக இருந்தால் நன்று. :cool:

  • தொடங்கியவர்
10 hours ago, Justin said:

தொடருங்கள்!

இந்தக் காலப்பகுதியில் உக்ரைனிலும் போலந்திலும் யூதர்களை எப்படி பெருந்தொகையில் குறைந்த முயற்சியோடு கொல்லலாம் என்ற சிறு சிறு ஆய்வு முயற்சிகளும் நடந்தன! இவற்றில் இருந்து தான் பின்னாட்களில் வாயுக் கூடங்களை உருவாக்கினர்! 

நன்றி. யூத கொலை முகாம் குறித்து  தனியான ஒரு  தலையங்கத்தின் கீழ் அந்த விபரங்கள் இந்நூலில் உள்ளன. அதை பிறகு இணைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

எமக்கும் மகிழ்ச்சிதான்.
இனிவரும் காலங்களிலாவது மற்றவர்களை குறை/குற்றங்கள் சொல்லாமல் போவதும் வருவதுமாக இருந்தால் நன்று. :cool:

உங்களுடைய வழியனுப்பி வைத்த பூச்செண்டுக்கு நன்றியண்ணை!

ஆனால், குற்றம் குறைகள் கண்டு பிடித்து, தவறுகளை நக்கலுடன் சுட்டிக் காட்டியபடி தொடர்ந்து இணைந்திருப்பேன்! 😜

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Justin said:

உங்களுடைய வழியனுப்பி வைத்த பூச்செண்டுக்கு நன்றியண்ணை!

ஆனால், குற்றம் குறைகள் கண்டு பிடித்து, தவறுகளை நக்கலுடன் சுட்டிக் காட்டியபடி தொடர்ந்து இணைந்திருப்பேன்! 😜

உங்கடை குணம் தெரிஞ்சுதானே போய்வாருங்கள் எண்டு பூ தந்தனான். 🤣
 நான் மற்ற ஆக்களை மாதிரி அண்ணா அண்ணா போகாதேங்கோ எண்டு காட்டுக்கத்து  கத்தேல்லையே .....:cool:

  • தொடங்கியவர்
5 minutes ago, குமாரசாமி said:

உங்கடை குணம் தெரிஞ்சுதானே போய்வாருங்கள் எண்டு பூ தந்தனான். 🤣
 நான் மற்ற ஆக்களை மாதிரி அண்ணா அண்ணா போகாதேங்கோ எண்டு காட்டுக்கத்து  கத்தேல்லையே .....:cool:

எமது தேசியத்தின் தோல்விக்கு  இதே போல பூச்செண்டு, பூமாலை போட்டு வழியனுப்பினவர்களும்  ஒரு காரணம் தான். நான் உங்களை சொல்லேல்ல. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, tulpen said:

எமது தேசியத்தின் தோல்விக்கு  இதே போல பூச்செண்டு, பூமாலை போட்டு வழியனுப்பினவர்களும்  ஒரு காரணம் தான். நான் உங்களை சொல்லேல்ல. 

எமது தேசியம் தோல்வியடையவில்லை. மாறாக தவறானவர்களின் கைகளில் அகப்பட்டு விட்டது. விரைவில் விடுதலை பெறும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.