Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனி என்ன இறைவன் தமிழரை காப்பாற்றுவான-பா.உதயன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

ஒடுக்குமுறைக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்ட ஈழத் தமிழர் ஒற்றுமையோடு ஒரே இலக்கோடு ஒரே கொள்கையோடு பயணித்திருப்பதற்கு மாறாக. இம் முறையும் தமிழர் தலைமையும் தமிழ் மக்களும் தங்கள் விடுதலைக்கான பாதையில் இருந்து இன்னும் ஒரு முறை தோல்வி கண்டிருக்கிறார்கள்.

ஐக்கியசக்தியோடு (United Force) பயணிக்கும் சிங்கள மக்களிடம் இருந்தும் இந்த சக்தியை ஒன்றுபட வைக்கும் சித்தாந்தங்களில் இருந்தும் இவர்களது தலைமையிடம் இருந்தும் சில பாடங்களை தமிழர்கள் கற்றுக்குகொள்ள வேண்டும்.படித்த தமிழர் என்று பட்டம் வேண்டிய உங்களால் பாதை சரியாகப் போட முடியவில்லையே.ஐக்கியம் என்னும் சக்தியை  எப்பொழுது தமிழர்கள் உணராமல் போனார்களோ அப்பொழுதில் இருந்தே உனக்கான தோல்வியின் ஆரம்பம் என்பதை உணர்ந்துகொள்.

அவிவிருத்தி மட்டுமே போதும் என்ற சொல்லை  மட்டும் நம்பி ஈழத்தமிழரின் இனப்பிரச்சினைக்கான தீர்வும் நீதி அடிப்படையிலான நல்இணக்கத்திற்கான முயற்ச்சிகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்ததுபோல் சிதறிப் போய் வாக்களித்திருக்கிறார்கள் தமிழ் மக்கள். எதிர்காலத்தில் இதற்கான தாக்கத்தினை உணரக்கூடியதாக இருக்கும்.தமிழர்களின் இத்தகையதொரு முடிவானது உளவியல் ரீதியாக புலம் பெயர் தமிழ் மக்களையும் இம் மக்களால் ஈழதமிழருக்காக கொடுக்கப்படுகின்ற தார்மீகக் குரல்களும் வலு இழக்கக் கூடிய ஓர் தொய்வு நிலை ஏற்படுமோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை. 

தேசியம் ,தன்னாதிக்கம் ,சுயநிர்ணய உரிமை என்று ஒரு சித்தாந்த அடிப்படையில் அரைநூற்றாண்டுக்கு மேல் போராடிய இனம் ஒன்று இந்த நிலைக்கு வர காரணமானவர் யார்.நீண்டகாலப் பார்வை இன்றி தமக்குள்ளேயே மோதுண்டு சிதறி உடைந்து போன தமிழ் தலைமைகள் தான் இப்படி ஒரு நிலைமைக்கும் தமிழ் மக்களை இழுத்து சென்றிருக்கிறார்கள்.ஒவ்வொரு தமிழ் தலைமைகளும் தங்கள் சித்தாந்தங்களை தெளிவுற மக்களுக்கு விளக்கி கொண்டு போய் சேர்க்க முடியவில்லை.

அரசு,தேசம்,தேசிசம்,அரசுக்கும் தேசத்துக்கும் இடையிலானா வேறுபாடுகள் இதை அனைத்தையும் மக்களிடத்தில் சேர்ப்பதில் தோல்வி கண்டிருக்கிறார்கள்.எங்கள் பலருக்கு கூட இது சம்மந்தமான ஆழ்ந்த பரந்த அரசியல் அறிவு இல்லாதிருப்பதை பார்க்கக் கூடியதாக இருக்கிறது.மக்கள் கூடக் குழம்பிப் போய் இருக்கும் அளவுக்கு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்கிய பேட்டிகள் ஒரே கட்சியை சேர்த்தவர்கள் ஒருவரை ஒருவர் வசை பாடியபடி எந்தத் பாதையை நேக்கி தாம் பயணிக்கிறோம் என்று கூடத் தெரியாமல் தேசிய அரசியல் என்ற ஐக்கிய மக்கள் சக்தி கப்பலை சரியான மாலுமி இல்லாமல் பெரும் தேசிய அலையோடு அடித்துச் செல்லப்பட்டிருக்கிறது 

இவை எல்லாவற்றுக்கும் மாறாக சிங்கள ஐக்கிய பெரும் தேசியம் திட்டமிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட அதிகாரபலம் அரச பலம் இவைகளோடு புலிகளை வெற்றி கண்டதோர் அடையாளாச் சின்னமாக ஒரு கையில் சீனாவையும் மறு கையில் இந்தியாவையும் கொண்டு கயிற்றில் நடக்கும் வித்தையை கற்றிருக்கும் மஹிந்த என்னும்  முகமும் அதனோடு பயணிக்கும் மக்கள் சக்தியும் அனைத்தையும் தனதாக்கிக் கொண்டது.வட கிழக்கு இணைவு சாத்தியம் இல்லை என தமிழர் வாக்குகளை வைத்தே மக்கள் தீர்ப்புப் போல் நிரூபித்திருக்கிறது ஐக்கிய சிங்களத் தேசிய இராஜதந்திரம்.இனி நிலஅதிகாரமும் போலீஸ் அதிகாரமும் போய் 13 பிளாஸ் 13 மைனஸ் ஆகும்.

ஒரே இலங்கை மக்கள் நாங்கள் என்று அரசு கூறினால் எல்லாப் பிரதேசங்களையும் அரசே அவிவிருத்தி செய்யலாமே ஏன் ஒரு சில அரசியல் வாதிகளை வைத்துக்கொண்டு அபிவிருத்தி என்றும் அவர்கள் மட்டும் தான் அந்த மக்கள் இரட்சகர் போல காட்ட வேண்டும் வட கிழக்கு மாவட்டங்களில் எவ்வளவோ பின் தங்கிய கிராமங்கள் இருக்கின்றன யுத்தம் முடிந்து பல ஆண்டுகள் ஆகி விட்டன இன்றும் அபிவிருத்தியோ அல்லது முழுமையானதோர் வேலத்திட்டமோ இல்லை மாறாகவே தமிழ் பிரதேசத்தின் நில உரிமைகள் பறிக்கப்பட்டன.

இன்று இணக்க அரசியலுக்கோ பேரம் பேசும் பேச்சு வரத்தை அரசியலுக்கோ தமிழ் மக்கள் கொடுத்த தீர்ப்பு அமையவில்லை மாறாக ஒரு சரணாகதி அடையும் தீர்ப்பை வரலாற்றில் எழுதி இருக்கிறீர்கள் .ஏதிர் காலத்தில் மாற்றம் ஏற்படாவிடின் உங்கள் இருப்பே கேள்விக்குறியாகி விடும்.உங்கள் பலவீனத்தை ஆட்சியாளருக்கு காட்டி இருக்கின்றீர்கள் ஏற்கனவே பேரம் பேசும் சக்தியை இழந்து நின்ற உங்களால் இன்றைய நிலைமையானது உங்களை அழைத்து பேச முடியாத நிலைக்கு தள்ளியிருக்கிறது.ஜனாதிபதி தேர்தலின் பின் தனித்தே சிங்கள மக்களின் ஆதரவோடு பதவிக்கு வந்த ஜனாதிபதியின் கதவு அருகே கூட நீங்கள் போக முடியாத அளவுக்கு தள்ளப்பட்ட பின் மீண்டும் இரண்டாவது அடி உங்கள் தலையில் விழுந்திருக்கிறது இனி எந்தக் கதவுகளும் உங்களுக்காக திறந்திருக்கப் போவதில்லை.

தனியவே அவிவிருத்தி அரசியலை மட்டும் சிந்திப்பது அனைத்து உங்கள் அடிப்படை உரிமைகளையும் விட்டுக்கொடுத்து சரணாகதி அடையும் ஓர் ஆபத்தானதோர் அரசில் பாதைக்கு ஒப்பானதாகும்.இனி வரும் சவாலான காலங்களில் எப்படி தமிழர் தலைமை எதிர் கொள்ளப்போகிறார்கள் என்பதே பலரது கேள்வியாகிறது.கடந்த காலங்களில் எப்படி நாம் எமது இலக்குகளை அடையமுடியாமல் சவர்தேச மாற்றங்களுக்கு ஏற்ப இராஐதந்திரக் காய்நகர்தல்களில் தோல்வி அடைந்தோமோ அவற்றில் இருந்து மீண்டும் கற்றுக்கொள்ளாதவரை தோல்வியில் இருந்து நாம் மீண்டெழமுடியாது.

நாம் இப்போ ஒருத்தனை ஒருத்தன் திட்டித் தீர்க்கிறோமே வீட்டிலும் வெளியிலும்.இது பாடசாலைகளில் இருந்து எமது விடுதலை வரை தொடர்கிறதே.அவன் வந்து இவனை தேசியவாதி என்கிறான் இவன் வந்து அவனை  துரோகி என்கிறான்.அன்று சிலர் கையில் துப்பாக்கி இருந்ததது இன்று பலர் வாயில் துப்பாக்கி இருக்கிறதே இரண்டும் சுடக்கூடியது தான்.ஒரு பாலத்தீனியன் போலவோ,ஒரு பொஸ்னியாகாரன் போலவோ ,ஒரு சூடான்காரன் போலவோ,ஒரு எரித்திரியன் போலவோ,எவனுக்குமே எம்மில் ஒற்றுமை பற்றி விளங்கவே இல்லை.சோசலிசம்,சமத்துவம் ,ஜனநாயகம் விடுதலை ,என்று கதைப்பவனும் தன் இனத்தின் விடுதலை வேண்டி நிற்பவன் பக்கம் நிற்காமல் அரசபயங்கரவாத அடக்குமுறையாளன் பக்கம் நிற்கிறானே.அவன் தத்துவம் தான் என்னவென்று தெரியவில்லையே.

தமிழர் தீர்வு,தொலைந்து போனோருக்கான போராட்டம்,ஐ.நா.மனித உரிமை மன்ற தீர்மானங்கள் எல்லாமே நீந்து போனதோர் முடிவு போன்றது போல் உள்ளது தமிழரின் தேர்தல் முடிவுகள்.ஒட்டு மொத்தமாகப் பார்க்கப் போனால் இம் முறை தமிழ் மக்கள் வழங்கிய தீர்ப்பானது ஒரு ஆபத்தான நிலைக்கு தமிழ் மக்களை தள்ளி விடக்கூடியதே.இது ஓர் ஆக்கபூர்வமான வளர்ச்சி இல்லை.இனியும் மிச்சியிருக்கப் போவது வேதனையும் துன்பமும் அதே அடக்குமுறைக்கு உட்பட்ட வாழ்வாய்.இனி என்ன இறைவன் தமிழரை காப்பாற்றுவான.

பா.உதயன் ✍️
 

 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, uthayakumar said:

 

பாடசாலைகளில் இருந்து எமது விடுதலை வரை தொடர்கிறதே.அவன் வந்து இவனை தேசியவாதி என்கிறான் இவன் வந்து அவனை  துரோகி என்கிறான்.அன்று சிலர் கையில் துப்பாக்கி இருந்ததது இன்று பலர் வாயில் துப்பாக்கி இருக்கிறதே இரண்டும் சுடக்கூடியது தான்.ஒரு பாலத்தீனியன் போலவோ,ஒரு பொஸ்னியாகாரன் போலவோ ,ஒரு சூடான்காரன் போலவோ,ஒரு எரித்திரியன் போலவோ,எவனுக்குமே எம்மில் ஒற்றுமை பற்றி விளங்கவே இல்லை.சோசலிசம்,சமத்துவம் ,ஜனநாயகம் விடுதலை ,என்று கதைப்பவனும் தன் இனத்தின் விடுதலை வேண்டி நிற்பவன் பக்கம் நிற்காமல் அரசபயங்கரவாத அடக்குமுறையாளன் பக்கம் நிற்கிறானே.அவன் தத்துவம் தான் என்னவென்று தெரியவில்லையே.

தமிழர் தீர்வு,தொலைந்து போனோருக்கான போராட்டம்,ஐ.நா.மனித உரிமை மன்ற தீர்மானங்கள் எல்லாமே நீந்து போனதோர் முடிவு போன்றது போல் உள்ளது தமிழரின் தேர்தல் முடிவுகள்.ஒட்டு மொத்தமாகப் பார்க்கப் போனால் இம் முறை தமிழ் மக்கள் வழங்கிய தீர்ப்பானது ஒரு ஆபத்தான நிலைக்கு தமிழ் மக்களை தள்ளி விடக்கூடியதே.இது ஓர் ஆக்கபூர்வமான வளர்ச்சி இல்லை.இனியும் மிச்சியிருக்கப் போவது வேதனையும் துன்பமும் அதே அடக்குமுறைக்கு உட்பட்ட வாழ்வாய்.

இனி என்ன இறைவன் தமிழரை காப்பாற்றுவான.

பா.உதயன் ✍️

நல்ல ஆக்கம். உங்களின் ஆதங்கம் விளங்குகின்றது, என்ன செய்ய இதுதான் தமிழனின் விதி,

கடவுள் ஒரு சந்தர்ப்பம் தந்தார் தலைவர் உருவில், அதையும் கைவிட்டுவிட்டோம், இனி கஷ்டம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

நல்ல ஆக்கம். உங்களின் ஆதங்கம் விளங்குகின்றது, என்ன செய்ய இதுதான் தமிழனின் விதி,

கடவுள் ஒரு சந்தர்ப்பம் தந்தார் தலைவர் உருவில், அதையும் கைவிட்டுவிட்டோம், இனி கஷ்டம்

உங்கள் கருத்துக்கு நன்றி உடையார்,மாற்றம் இல்லாமல் உலகு இல்லை.ஒரு காலம் எமக்காகவும் இந்த உலகு பேசும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, uthayakumar said:

தனியவே அவிவிருத்தி அரசியலை மட்டும் சிந்திப்பது அனைத்து உங்கள் அடிப்படை உரிமைகளையும் விட்டுக்கொடுத்து சரணாகதி அடையும் ஓர் ஆபத்தானதோர் அரசில் பாதைக்கு ஒப்பானதாகும்.இனி வரும் சவாலான காலங்களில் எப்படி தமிழர் தலைமை எதிர் கொள்ளப்போகிறார்கள் என்பதே பலரது கேள்வியாகிறது.கடந்த காலங்களில் எப்படி நாம் எமது இலக்குகளை அடையமுடியாமல் சவர்தேச மாற்றங்களுக்கு ஏற்ப இராஐதந்திரக் காய்நகர்தல்களில் தோல்வி அடைந்தோமோ அவற்றில் இருந்து மீண்டும் கற்றுக்கொள்ளாதவரை தோல்வியில் இருந்து நாம் மீண்டெழமுடியாது.

 இளைய தலைமுறையினரையும் சிந்திக்கவிடாமல் போதை வழி செப்பனிடுகிறான் சிங்களன் .. 😢நல்லதோர் ஆக்கம் தோழர் ..👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு அலசல் கட்டுரை.👍🏽

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இளைய தலைமுறையினரையும் சிந்திக்கவிடாமல் போதை வழி செப்பனிடுகிறான் சிங்களன் .. 😢நல்லதோர் ஆக்கம் தோழர் ..👍

 

8 hours ago, குமாரசாமி said:

நல்லதொரு அலசல் கட்டுரை.👍🏽

கருத்திட்டபுரட்சிகரதமிழ்தேசிகனுக்கும்,குமாரசாமியாருக்கும்எனதுநன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, uthayakumar said:

படித்த தமிழர் என்று பட்டம் வேண்டிய உங்களால் பாதை சரியாகப் போட முடியவில்லையே.

படித்த தமிழர் என்று பட்டம் வாங்கியவர்களால் பாதை சரியாகப் போட முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் படிக்காத தமிழர் பலர் பாதை போட முயன்றார்கள். அந்த பாதை முள்ளிவாய்க்கலை நோக்கி போனது வரலாறு. இப்போது நீங்கள் பாதை போடுகிறீர்கள். முயற்சி செய்வது நல்லதே.

23 hours ago, uthayakumar said:

அரசு,தேசம்,தேசிசம்,அரசுக்கும் தேசத்துக்கும் இடையிலானா வேறுபாடுகள் இதை அனைத்தையும் மக்களிடத்தில் சேர்ப்பதில் தோல்வி கண்டிருக்கிறார்கள்.எங்கள் பலருக்கு கூட இது சம்மந்தமான ஆழ்ந்த பரந்த அரசியல் அறிவு இல்லாதிருப்பதை பார்க்கக் கூடியதாக இருக்கிறது.

இலங்கைத் தமிழரின் பிரச்சினையையும், உலகத்தமிழரின் அவாவான, தமிழர் தேசத்துக்கும் முடிச்சு போட்டு, அதை தமிழீழமாக்கி, இலங்கைத் தமிழரின் பிரச்சினையை தீர்க்க முடியாத அளவு சிக்கலாக்கியதில் பலருக்கும் பங்கு உண்டு.

  1. இலங்கைத் தமிழரின் பிரச்சினையை தீர்க்க முதல் படி, அதனை மற்ற பிரச்சினைகளின் சிக்கலில் இருந்து விடுவிப்பது.
  2. இரண்டாவது படி, இலங்கையில் தமிழர் வடக்கு - கிழக்குக்கு வெளியிலும் பெருமளவில் வாழ்கிறார்கள், அவர்களும் தீர்வில் சமபங்கு கொள்ளவேண்டும் என்பதை ஏற்றுக் கொள்வது.
  3. மூன்றாவது படி, என்ன தீர்வு வந்தாலும், சிங்களவர் என்ற பெரும்பான்மை மக்களின் பக்கத்தில் நிம்மதியாக வாழ வேண்டிய தேவையை விளங்கிக் கொள்வது.
  4. நான்காவது படி, தமிழரை போலன்றி, சிங்களவர் இலங்கையிலேயே தோன்றிய இனம் என்பதை வெளிப்படையாகவும், உண்மையாகவும் ஏற்றுக் கொண்டு அதற்குரிய மதிப்பையும் தகமையையும் கொடுப்பது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் பன்மைத்துவத்திற்கு வாக்களித்திருக்கின்றார்கள். எல்லாக் கட்சிக்காரர்களுக்கும் வாக்கு விழுந்து பாராளுமன்றம் போகின்றார்கள் (கருணா அம்மானைத் தவிர).

ஆனால் அபிவிருத்தி என்று இணக்க அரசியல் செய்பவர்களில் மூன்று/நான்காக பிரிவுகள் உள்ளன. ஈபிடிபி, அங்கயன், பிள்ளையான், வியாழேந்திரன், கருணா.

தேசியம் என்று எதிர்ப்பரசியல் செய்பவர்களிலும் மூன்று பிரிவுகள் உள்ளன. கூட்டமைப்பு (ரணிலோடு இணக்க அரசியல் செய்தவர்கள்), முன்னணி, கூட்டணி.

எனவே, ஒற்றுமை என்பது ஒருவரிடமும் இல்லை. இனியும் வராது என்றுதான் நினைக்கின்றேன். தமிழ்த் தேசிய உணர்வு குன்றி, பிரதேச, சாதீய, மதவாத குறுகிய நலன்கள் முன்னுக்கு வந்துவிட்டன. இந்த நிலைக்கு கூட்டமைப்பில் இருந்து அனைத்துக்கட்சிகளும், கட்சிசாரா மக்கள் அமைப்புக்களும், கருத்துருவாக்கிகளும், ஏன் படித்த பல்கலைக்கழகச் சமூகமும் காரணம் என்று சொல்லலாம். 

தூரநோக்கோடு செயல்படக்கூடிய ஒருவரும் இல்லாத வெற்றிடத்தில் உதிரிகளின் களியாட்டம் நடக்கின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

படித்த தமிழர் என்று பட்டம் வாங்கியவர்களால் பாதை சரியாகப் போட முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் படிக்காத தமிழர் பலர் பாதை போட முயன்றார்கள். அந்த பாதை முள்ளிவாய்க்கலை நோக்கி போனது வரலாறு. இப்போது நீங்கள் பாதை போடுகிறீர்கள். முயற்சி செய்வது நல்லதே.

 

 

1 hour ago, கிருபன் said:

தூரநோக்கோடு செயல்படக்கூடிய ஒருவரும் இல்லாத வெற்றிடத்தில் உதிரிகளின் களியாட்டம் நடக்கின்றது.

 

2 hours ago, கற்பகதரு said:
  • இலங்கைத் தமிழரின் பிரச்சினையை தீர்க்க முதல் படி, அதனை மற்ற பிரச்சினைகளின் சிக்கலில் இருந்து விடுவிப்பது.
  • இரண்டாவது படி, இலங்கையில் தமிழர் வடக்கு - கிழக்குக்கு வெளியிலும் பெருமளவில் வாழ்கிறார்கள், அவர்களும் தீர்வில் சமபங்கு கொள்ளவேண்டும் என்பதை ஏற்றுக் கொள்வது.
  • மூன்றாவது படி, என்ன தீர்வு வந்தாலும், சிங்களவர் என்ற பெரும்பான்மை மக்களின் பக்கத்தில் நிம்மதியாக வாழ வேண்டிய

நல்லது கற்பகதரு நீங்களும் ஒன்றல்ல நான்கு பாதைகள் போட்டுத் தந்திருக்கிறீர்கள் முயற்சி செய்வது நல்லது.

கிருபன் இந்தப் பார்வை புலத்திலும் இல்லை நிலத்திலும் இல்லை.இருவரின் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.