Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்க்கட்சித் தலைவராக சஜித்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்க்கட்சித் தலைவராக சஜித்

9 ஆவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவை ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.

புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு இன்று (20) முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமாகியது. 

இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவை ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் அறிவித்தார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/எதரககடசத-தலவரக-சஜத/175-254539

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் ஐயா,   இருக்க வேண்டிய 🪑    கதிரையிலை... சஜித் இருக்கிறார். 🥱

😤 ஹ்ம்ம்.... எல்லாம் சாணக்கிய அரசியல் செய்ய வெளிக்கிட்டதாலை, வந்த வினை.  😁 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

எழுபது வருடங்களாக தன் மந்தையை தானே மேய்ஞ்சு கொண்டிருந்தார், அந்த விலங்குகளை இப்ப காட்டு விலங்குகள் கவ்வியதால் மந்தையுமில்லை, கதிரையுமில்லை. உன்னிடம் தரப்பட்டதை சரியாக கையாளாவிட்டால், அது உன்னிடமிருந்து பறித்தெடுக்கப்பட்டு வேறொருவருக்கு அளிக்கப்படும். 

29 minutes ago, தமிழ் சிறி said:

சம்பந்தன் ஐயா,   இருக்க வேண்டிய 🪑    கதிரையிலை... சஜித் இருக்கிறார். 🥱

😤 ஹ்ம்ம்.... எல்லாம் சாணக்கிய அரசியல் செய்ய வெளிக்கிட்டதாலை, வந்த வினை.  😁 😂

தமிழ் சிறீ சாணக்கிய அரசியல் செய்து சம்பந்தர் என்ற தனி மனிதரின்  பதவி போனதை நக்கல் செய்து சிரித்து சந்தோசப்படும்  நீங்கள்  2005 ல் மகிந்த வந்தால் யுத்தம் வரும். சமாதானத்தை விட யுத்தம் செய்தால் தான் எமது பலத்தை நிரூபிக்கலாம் என்று தப்பு கணக்கு போட்டு ரணில் என்ற தனிமனிதரை பழிவாங்க   மகிந்தவை  பதவிக்கு கொண்டுவரும் சாணக்கிய அரசியல் செய்ய புறப்பட்டு அதன் விளைவாக  தமிழ் தேசியத்தின் இருப்பையே இழந்து லட்சக்கணக்கான மக்களை அழிந்து முள்ளிவாய்கால் பேரழிவால்  தமிழ் தேசியத்தை பல தலைமுறைகளுக்கு பின்தள்ளிய வரலாற்றை மிக விரைவாகவே மறந்து விட்டீர்கள்.  தமிழ் தேசியத்தின் முக்கிய பலவீனமே இது தான்.

டக்லசையும், சுமந்திரனையும். சம்பந்தனையும், கருணாவையும் இணையத்தில் திட்டி தீர்ப்பது தான் தமிழ் தேசிய எழுச்சி அல்ல. எமது தலைமைகளின் கடந்த கால தவறுகளை அடையாளம் கண்டு நிகழ்காலத்தின் ஜதார்த்தை உணர்ந்து அரசியல் செய்து மக்களின் இருப்பையும் அவர்களின் கல்வி பொருளாதாரத்தை பாதுகாக்கும் வளர்த்தெடுக்கும்  நடவடிக்கைகளை எடுப்பது தான் இப்போதய நிலையில்   தமிழ் தேசியம் எழுச்சி.  அதை செய்பவரே உண்மையான  தமிழ்த்தேசியவாதி. அதையே புதிய தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி  செய்ய வேண்டும்.  அவர் எந்த கட்சி என்பது தற்போது முக்கியமல்ல. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Quote

தமிழ் சிறீ சாணக்கிய அரசியல் செய்து சம்பந்தர் என்ற தனி மனிதரின்  பதவி போனதை நக்கல் செய்து சிரித்து சந்தோசப்படும்  நீங்கள்  2005 ல் மகிந்த வந்தால் யுத்தம் வரும். சமாதானத்தை விட யுத்தம் செய்தால் தான் எமது பலத்தை நிரூபிக்கலாம் என்று தப்பு கணக்கு போட்டு ரணில் என்ற தனிமனிதரை பழிவாங்க   மகிந்தவை  பதவிக்கு கொண்டுவரும் சாணக்கிய அரசியல் செய்ய புறப்பட்டு அதன் விளைவாக  தமிழ் தேசியத்தின் இருப்பையே இழந்து லட்சக்கணக்கான மக்களை அழிந்து முள்ளிவாய்கால் பேரழிவால்  தமிழ் தேசியத்தை பல தலைமுறைகளுக்கு பின்தள்ளிய வரலாற்றை மிக விரைவாகவே மறந்து விட்டீர்கள்.  தமிழ் தேசியத்தின் முக்கிய பலவீனமே இது தான்.

ரனில்  வந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

18 minutes ago, nunavilan said:

ரனில்  வந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

நிச்சயமக தமிழீழம் கிடைத்திருக்காது என்பதை  ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் பேச்சுவார்ததை தந்திரோபயத்தின் மூலம்  தீர்வு காணப்பட்டிருந்தால் தமிழ் தேசியம் என்பது இன்றய  நிலையை விட எவ்வளவோ மடங்கு  மேலான நிலையில்  இருந்ருக்கும்  என்பதை உறுதியாக கூற  பெரிய அரசியல் அறிவு ஒன்றும் தேலையில்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, tulpen said:

பேச்சுவார்த்தை ஏற்கவே ரனிலின் காலத்தில் தோல்வி அடைந்து விட்டது.  புலிகளை அழிக்க கங்கணம் கட்டி சோனியா அரசு காத்து இருந்தது. அதே போல் மேற்கு நாடுகளும்.கொலை வெறியுடன் அதே  சிறிலங்கா இராணுவம் இருந்தது. மகிந்த செய்ததை ரனில் செய்திருக்க மாட்டார் என்பதை எதை வைத்து சொல்கிறீர்கள்?

48 minutes ago, tulpen said:

சமாதானத்தை விட யுத்தம் செய்தால் தான் எமது பலத்தை நிரூபிக்கலாம் என்று தப்பு கணக்கு போட்டு ரணில் என்ற தனிமனிதரை பழிவாங்க   மகிந்தவை  பதவிக்கு கொண்டுவரும் சாணக்கிய அரசியல் செய்ய புறப்பட்டு அதன் விளைவாக  தமிழ் தேசியத்தின் இருப்பையே இழந்து லட்சக்கணக்கான மக்களை அழிந்து முள்ளிவாய்கால் பேரழிவால்  தமிழ் தேசியத்தை பல தலைமுறைகளுக்கு பின்தள்ளிய வரலாற்றை மிக விரைவாகவே மறந்து விட்டீர்கள்.  

சிங்களம் பேச்சுவார்த்தை மூலம் ஒரு தீர்வை ஒருபோதும் தருவதற்கு தயாராக இருந்ததில்லை. சமாதான காலத்தில் நடந்த பல்வேறு சம்பவங்களை மீட்டிப்பார்த்தால் புலிகள் ஏன் சண்டையை தேர்ந்தெடுத்தார்கள் என்பதை அடையாளம் காணலாம். நீங்கள் சொல்லும் ரணிலின் ஆட்சியில் புலிகளும் மக்களும் பெரும் அவமானப்படுத்தப்பட்டு படிப்படியாக இல்லாது ஒழிக்கப்பட்டிருப்பர். 

சாணக்கியமும் இராசதந்திரமும் பலத்திலிருந்து பிறப்பவை. அது இல்லாது விடத்து எதுவும் சாத்தியப்படாது. நடைமுறை உலகு எமக்கு இது தொடர்பான பல கற்பிதங்களை அன்றாடம் எமக்கு தந்து கொண்டிருக்கின்றது. புலிகள் அதனை தெட்டனவே உணர்ந்திருந்தனர்.

12 minutes ago, nunavilan said:

பேச்சுவார்த்தை ஏற்கவே ரனிலின் காலத்தில் தோல்வி அடைந்து விட்டது.  புலிகளை அழிக்க கங்கணம் கட்டி சோனியா அரசு காத்து இருந்தது. அதே போல் மேற்கு நாடுகளும்.கொலை வெறியுடன் அதே  சிறிலங்கா இராணுவம் இருந்தது. மகிந்த செய்ததை ரனில் செய்திருக்க மாட்டார் என்பதை எதை வைத்து சொல்கிறீர்கள்?

4 minutes ago, manimaran said:

சிங்களம் பேச்சுவார்த்தை மூலம் ஒரு தீர்வை ஒருபோதும் தருவதற்கு தயாராக இருந்ததில்லை. சமாதான காலத்தில் நடந்த பல்வேறு சம்பவங்களை மீட்டிப்பார்த்தால் புலிகள் ஏன் சண்டையை தேர்ந்தெடுத்தார்கள் என்பதை அடையாளம் காணலாம். நீங்கள் சொல்லும் ரணிலின் ஆட்சியில் புலிகளும் மக்களும் பெரும் அவமானப்படுத்தப்பட்டு படிப்படியாக இல்லாது ஒழிக்கப்பட்டிருப்பர். 

சாணக்கியமும் இராசதந்திரமும் பலத்திலிருந்து பிறப்பவை. அது இல்லாது விடத்து எதுவும் சாத்தியப்படாது. நடைமுறை உலகு எமக்கு இது தொடர்பான பல கற்பிதங்களை அன்றாடம் எமக்கு தந்து கொண்டிருக்கின்றது. புலிகள் அதனை தெட்டனவே உணர்ந்திருந்தனர்.

உங்கள் இருவரதும் கருத்துப்படி பேச்சுவார்த்தையிலும் தீர்வு கிடைக்காது. சண்டையிலும் தீர்வு கிடைக்காது.( அது நிரூபிக்கபட்டுவிட்டது)  அப்படியான நிலையில் பேச்சுவாரத்தையை தேர்த்தெடுத்திருந்தால்  பல ஆளுமைமிக்க புலிகளின் உறுப்பினர்கள் இன்று உயிருடன் இருந்து அரசியலை கொண்டு நடத்தி  எதிர்காலத்திலாவது வெற்றிகரமான அரசியலை நடத்தி இருக்க முடியும்.  சண்டையை தேர்த்தெடுத்த‍து ஏன்?  உங்கள் கூற்றுபடி உலக நாடுகள் எல்லாம் எமக்கு எதிராக இலங்கை அரசின் பக்கம் இருந்ததால் எம்மால் சண்டையில் தாக்குபிடிக்க முடியாது என்பதை உணராத‍து எமது தவறு இல்லையா?  

இன்று அரசியல்வாதிகளை திட்டி தீர்த்து கொண்டிருப்பதை விட புலிகளில் இருந்த யோகி, பாலக்குமாரன் போன்ற ( உதாரணத்திற்கு மட்டும் தான் இவர்களின் பெயரை குறிப்பிட்டேன்) இன்னும் பல திறமையான அனுபவம் மிக்க ஆளுமைகள் இன்றைய அரசியல்வாதிகளை பிரதியீடு செய்திருப்பார்களே. அது இன்றய நிலையை விட பலமாகதானே இருந்திருக்கும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, tulpen said:

கருணாவை பிரித்து புலிகளை பலமிழக்க செய்த ரனில் ஆளுமை மிக்க புலிகளை விட்டிருப்பார்கள் என்பது எங்கோ இடிக்கிறதே

இப்படியான மனோநிலையில்  உள்ள ரனில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வை தந்திருப்பார் என்பது நம்பும்படியாக அவரின் செயல்கள் இருக்க்வில்லை. மாறாக கழுத்தறுப்பதிலேயே குறியாக இருந்தார். அது கூட்டமைப்பு வரை தொடர்ந்திருக்கிறது,

Quote

உங்கள் கூற்றுபடி உலக நாடுகள் எல்லாம் எமக்கு எதிராக இலங்கை அரசின் பக்கம் இருந்ததால் எம்மால் சண்டையில் தாக்குபிடிக்க முடியாது என்பதை உணராத‍து எமது தவறு இல்லையா?  

இத்தனை ஆயிரம் உயிர்களை இழந்து கொள்கைக்காக இறந்தவர்களுக்கு துரோகம் செய்ய புலிகள் செய்ய விரும்பவில்லை என்பது தெரியவில்லையா உங்களுக்கு?
பேச்சுவார்த்தை மூலம் ஏதாவது தீர்வை மக்களுக்கு எடுக்கலாம் என்றே நாடு நாடாக தெரிந்தார்கள். அதுவும் வெற்றி அளிக்கவில்லை. 

வேறு என்ன தேர்வுகள் எஞ்சி இருந்தன என சொல்லுங்கள்?

21 minutes ago, nunavilan said:

கருணாவை பிரித்து புலிகளை பலமிழக்க செய்த ரனில் ஆளுமை மிக்க புலிகளை விட்டிருப்பார்கள் என்பது எங்கோ இடிக்கிறதே

இப்படியான மனோநிலையில்  உள்ள ரனில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வை தந்திருப்பார் என்பது நம்பும்படியாக அவரின் செயல்கள் இருக்க்வில்லை. மாறாக கழுத்தறுப்பதிலேயே குறியாக இருந்தார். அது கூட்டமைப்பு வரை தொடர்ந்திருக்கிறது,

இத்தனை ஆயிரம் உயிர்களை இழந்து கொள்கைக்காக இறந்தவர்களுக்கு துரோகம் செய்ய புலிகள் செய்ய விரும்பவில்லை என்பது தெரியவில்லையா உங்களுக்கு?
பேச்சுவார்த்தை மூலம் ஏதாவது தீர்வை மக்களுக்கு எடுக்கலாம் என்றே நாடு நாடாக தெரிந்தார்கள். அதுவும் வெற்றி அளிக்கவில்லை. 

வேறு என்ன தேர்வுகள் எஞ்சி இருந்தன என சொல்லுங்கள்?

நுணாவிலான் விடுதலை புலிகளின் போராட்ட அர்ப்பணிப்பை, அவர்களின் வீரத்தையோ குறைத்து மதிப்பிட வில்லை. அதில் உங்களைப் போலவே என்க்கும் மிகுந்த மரியாதை உண்டு.  நான் பேசிக்கொண்டிருபது ஜதார்த்த அரசியல் பற்றியது.

விட்டதை பிடிக்க போராடும் மனநிலை என்பதே தவறானது என்பதே எனது எண்ணம். அது போராட்டத்திற்கு உரியதல்ல. எத்தனை ஆயிரம் உயிர்கள் இழந்தாலும்  நடைமுறை உலக அரசியலை மீறி எம்மால் எதுவும் செய்ய முடியாது என்பதே  கசப்பான உண்மை. இறுதியில் புலிகள் கூட கசப்பான முடிவு (Bitter End) என்று கூறியே ஆயுதங்களை மெளனித்திருந்தனர். 

விடுதலை புலிகள் நினைத்திருந்தால் ஒரு சில நெகிழ்வு தன்மையை காட்டி இறுதி யுத்த அழிவை தடுத்து நிறுத்தியிருக்க முடியும். தமிழரின் துரதிஷ்ரம் அவர்களால் அந்த முடிவை எடுக்கு விடாது தடுத்திருக்கிறது என்பதே எனது அபிப்பிராயம். அதன் மூலம் நாம் நினைத்த அரசியல் தீர்வை அடைந்திருக்க முடியாது என்பதை ஏற்றுக்கொள்ளுகிறேன்.ஆனால் இன்று இருக்கும் நிலையை விட மேலான நிலை இருந்திருக்கும் என்பதே உண்மை. 

ரணிலை பற்றி கூறியிருந்தீர்கள். நாம் ரணிலை மட்டும் நம்பி பேச்சுவாரத்தைக்கு செல்லவில்லை. எதிர் தரப்பில் இருக்கும் ரணில் எமக்கு எதிராக செய்ய முடிந்தால் செய்வார் என்பது இயல்பானதே. 

இப்போது அது பற்றி பேசுவது விடுதலை புலிகளின் அன்பு செலுத்துகிறோம் என்பதற்காக அவர்களின் தவறுகளுக்கு நியாயம் கற்பிக்கும் சிலரின்  தவறான அரசியல் சித்தாந்ந்தம் இன்றும் சரியான வழியில் செல்லவிடாமல் தடுக்கும் எனபதாலேயே. விடுதலை புலிகள் போன்ற உண்மையான போராட்ட இயக்க வரலாறு போற்றி பாதுகாக்கப்படவேண்டியது என்பதில் எனக்கு மறு கருத்து இல்லை. ஆனால்  அதை விமர்சனம் செய்ய மக்களுக்கு உரிமை உண்டு. 

மேலும் நுணா உங்கள் முதல் கருத்தில் தெரிவித்திருந்தீர்கள் உலகநாடுகள் எல்லாம் எமக்கு எதிராக இருந்தது என்று. அது உண்மை என்றால் உலக நாடுகளை எதிர்த்து எம்மால் ஒரு நாட்டை உருவாக்க முடியுமா? அப்படியானால் நெகிழ்வு தன்மையை காட்டினால் தானே உலக நாடுகளின் ஒத்துளைப்புடன் ஏதாவது ஒரு தீர்வுக்கு வர முடியும். முடிவற்ற யுத்தம் என்பது அழிவுக்கே வழிவகுக்கும் என்பது எமது தரப்பில் நிருப்பிக்கபட்டு விட்டது. 

Edited by tulpen

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Quote

ரணிலை பற்றி கூறியிருந்தீர்கள். நாம் ரணிலை மட்டும் நம்பி பேச்சுவாரத்தைக்கு செல்லவில்லை. எதிர் தரப்பில் இருக்கும் ரணில் எமக்கு எதிராக செய்ய முடிந்தால் செய்வார் என்பது இயல்பானதே. 

இதை தான் ஆரம்பத்தில் சொன்னேன். மகிந்த, ரனில் யாரெனினும் ஒரே முடிவு தான் என. இருவரும் இரண்டு விதமான சிங்கள இனவாதிகள் . ஒரு வேளை மகிந்தவை தெரிந்தால் (ஏற்கனவே ரனில் பற்றி தெரிந்ததால்) வேறு ஏதாவது வழிகள் புலப்படலாம் என புலிகள் எண்ணி இருக்கலாம். மற்றது புலிகளால் ரனில் தோற்றார் என்ற பாடமும் உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, nunavilan said:

ரனில்  வந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

நாங்கள் எப்பவும் எங்கையும் எதிலும் எதிர்ப்பக்கம் தான் நிப்பம்.

2 hours ago, nunavilan said:

இதை தான் ஆரம்பத்தில் சொன்னேன். மகிந்த, ரனில் யாரெனினும் ஒரே முடிவு தான் என. இருவரும் இரண்டு விதமான சிங்கள இனவாதிகள் . ஒரு வேளை மகிந்தவை தெரிந்தால் (ஏற்கனவே ரனில் பற்றி தெரிந்ததால்) வேறு ஏதாவது வழிகள் புலப்படலாம் என புலிகள் எண்ணி இருக்கலாம். மற்றது புலிகளால் ரனில் தோற்றார் என்ற பாடமும் உள்ளது.

ஒரு தரப்பு மற்ற தரப்புக்கு எதிராக இருப்புது இயல்பு. என்றுமே சிங்கள இனவாதி என்று கூறப்படும் ஒருவருடன் தான் எதிர்காலத்திலும் பேச்சுவார்தை செய்ய வேண்டிய நிலை. ரணில் புலிகளால் தோற்றார் என்பதில் எமக்கு என்ன பெருமை. புலிகளுக்கும் அதில் எந்த பெருமையும் இல்லை. அதில் இலாமடைந்திருந்தால் சந்தோசப்படலாம்.  இவ்வாறு என்னால் நீ தோற்றாய் என்ற தமிழரின் பாரம்பரிய  ஈகோவை விட அதில் எந்த பெருமையும் இல்லை.  புலிகளால் ரணில் தோற்றார் என்று ஒன்றுமில்லாத விடயத்தை பெரிதுபடுத்தி  மகிழும் நீங்கள்  விட மகிந்தவால் புலிகள் தோற்றதால் எமது இனமே தோற்றது என்ற பெரிய விடயத்தை  சிறிய விடயமாக எடுக்கிறீர்கள். 

இனவாதி என்று எளிதாக பட்டம் கொடுத்துவிடலாம். எமது தேசிய  வரலாற்றில் அரசியல் வாதிகளால் கூறப்பட்டது.  டி. எஸ் சேனநாயக்கா இனவாதி,பண்டாரநாயக்கா இனவாதி, ட்ட்லி இனவாதி, சிறிமாவோ இனவாதி, ஜே. ஆர இனவாதி, பிரேமதாசா இனவாதி, சந்திரிகா இனவாதி, மகிந்த இனவாதி, ரணில் இனவாதி,  இப்படி தொடர்ச்சியாக கூறி பேச்சுவாரத்தைகளை எல்லாம்  நிராகரிக்க நிராகரிக தமிழ் தேசியம் மேலும் மேலும் பலவீனமானதை தவிர வேறென்ன நடந்த‍து. எதிர்காலத்திலும் இப்படி இனவாதி என்று கூறி  எதிர்ப்பு அரசியல் செய்வதானால்  முதல் எம்மை உலக மட்டத்தில் பலப்படுத்த வேண்டும். அதற்கும் உலக நாடுகள் எல்லாம் எமது எதிரி என்று நாமே நிர்ணயம் செய்து கொண்டு அங்கும் எதிர்ப்பு நிலை அரசியலையே செய்கிறோம்.  நாங்கள் நினைக்கும் விரும்பும் தேசியம் என்பது குறுகிய காலத்தில் நடக்கப்போவதில்லை என்ற ஜதாரத்த‍த்தை உணர்ந்து புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின்  வாழ்வை, கல்வியை, பொருளாதாரத்தை, வர்த்தகத்தை  உயர்த்த சிங்கள அரசின் ஆதரவுடனாவது  ஏதாவது செய்வதே தற்போது நிஜம். 

நுணா போராட்டம் என்பது இதுவரை இவ்வளவு பணத்தை இழ்ந்ந்துவிட்டோம் இனி விட்க்கூடாது என்று தொடர்ந்து விளையாடும் சூதாட்டம் இல்லை.  அதை உணராதால் இவ்வளவு இழப்பு வந்தும் இன்றும் அதை ஏற்றுக்கொள்ளாத‍தே எமது ஈகோ பலவீனம் தான். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

இவர் எதிர்கட்சி தலைவராகி வெறுவாயை மெல்ல வேண்டியான். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, tulpen said:

இனவாதி என்று எளிதாக பட்டம் கொடுத்துவிடலாம். எமது தேசிய  வரலாற்றில் அரசியல் வாதிகளால் கூறப்பட்டது.  டி. எஸ் சேனநாயக்கா இனவாதி,பண்டாரநாயக்கா இனவாதி, ட்ட்லி இனவாதி, சிறிமாவோ இனவாதி, ஜே. ஆர இனவாதி, பிரேமதாசா இனவாதி, சந்திரிகா இனவாதி, மகிந்த இனவாதி, ரணில் இனவாதி,

நிரூபித்திருக்கிறார்களே.

2005ம்ஆண்டு திடீரென இந்த முடிவு எடுப்பதற்கு இருந்த காரணம் தேர்தல் கூட்டத்தில் நவீன் திஸாநாயக்கவும், மிலிந்த மொறகொடவும் பேசிய பேச்சுக்கள் ரணிலின் நரிதிட்டத்தை அப்படியே வெளிப்படுத்தியது. அதே வேளை தான் காட்டுக்கு சென்று புலிகளுடன் பேசி பிரச்சனையை தீர்ப்பேன் என்று மஹிந்தா அறிவித்தார். அதனால் மஹிந்தவுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்க புலிகள் நினைத்திருக்கலாம். ந மது அரசியல் வாதிகளை சிங்களம் விலைக்கு வாங்குமட்டும், நம்மவர் விலை போகுமட்டும் இந்தப் பிரச்சனை தீராது. புலிகள் திறந்த பாதையை தொடர தெரியாமல் சிங்களத்துக்கு வக்காலத்து வாங்கி தடை போடுகிறார்கள். இதற்கெல்லாம் ம மனச்சுத்தி, இன உணர்வு வேண்டும்.  சும்மா கடந்துபோனவர்களை குற்றம் சொல்லுவதே சிலருக்கு வேலை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.