Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெட்கக் கேடான விடயம்..ஸ்ரீலங்கா குறித்து அமெரிக்க தூதுவர்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெட்கக் கேடான விடயம்..ஸ்ரீலங்கா குறித்து அமெரிக்க தூதுவர்.!

us.jpg

ஸ்ரீலங்காவின் வேண்டுகோளுக்கு இணங்கவே அமெரிக்கா எம்.சி.சி உதவித் திட்டத்தை வழங்க முன்வந்தது. எனினும் அது இவ்வளவு தூரம் அரசியலமயமாக்கப்பட்டமை வெட்கக் கேடான விடயம் என்று அமெரிக்க தூதுவர் அலைனா பி. டெப்பிளிட்ஸ் சாடியுள்ளார்.

எம்.சி.சி உடன்படிக்கை தொடர்பில் ஆங்கில இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்,

ஸ்ரீலங்காவின் வேண்டுகோளை தொடர்ந்தே அமெரிக்கா எம்.சி.சி உதவிதிட்டத்தை வழங்க முன்வந்தது. வறுமையை ஒழிப்பதும் அனைவரையும் உள்வாங்கிய பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தும் இலக்கை நோக்கமாக கொண்டே இந்த வேண்டுகோளை ஏற்றோம் என்று அமெரிக்காவின் அபிவிருத்தி முகவர் அமைப்பான எம்.சி.சியின் ஸ்தாபன சாசனம் தெரிவித்துள்ளது.

0a523799-891ca863-us-srilanka-edited-_85

உத்தேச எம்.சி.சி உடன்படிக்கையை தொடர்ந்து முன்னெடுப்பதா என்பதை தீர்மானிக்கவேண்டியது அரசாங்கமாகும். அரசியல் நோக்கமற்று, தரவுகளை அடிப்படையாக கொண்டு கலந்தாய்வு கட்டமைப்புகளை அடிப்படையாகக்கொண்டு அபிவிருத்தி திட்டங்கள் உருவாக்கப்படுவதை கருத்தில் கொள்ளும்போது எம்.சி.சி உடன்படிக்கை மிக அதிகளவிற்கு அரசியல் மயப்படுத்தபட்டுள்ளமை மிகவும் வெட்கக்கேடான விடயமாகும்.

உத்தேச 480 மில்லியன் நன்கொடை-(கடனில்லை), போக்குவரத்து நெருக்கடியை குறைத்தல் மூலமும், வேளாண் பொருட்களை சந்தைக்கு கொண்டுசெல்வதற்கான வசதிகள் மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை வழங்குதல் போன்றவற்றின் மூலம் 11 மில்லியன் இலங்கையர்களுக்கு நேரடி நன்மைகளை வழங்குகின்றது.

பத்திரிகைகளில் நாளாந்தம் வெளியாகும் விடயங்கள் இவை இலங்கை மக்களின் நலன்களுடன் தொடர்புபட்ட விடயங்கள் இவை என்றார்.

https://vanakkamlondon.com/world/srilanka/2020/10/86567/

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

வெட்கக் கேடான விடயம்..ஸ்ரீலங்கா குறித்து அமெரிக்க தூதுவர்.!

தன் சொந்த குடிமக்களை ஊரைக் கூட்டிக்கொன்று குவித்து விட்டு, கூடி வெற்றி விழா கொண்டாடுறவனுக்கு வெட்கம் இருக்கா? அவனது வெட்கக் கேட்டை பயன்படுத்தியே பல நாடுகள் அவன் நாட்டை சுரண்டுகின்றன. புரியாத மாதிரி இவா நடிக்கிறா.

  • கருத்துக்கள உறவுகள்

அனேகமாக சிறீலங்காவின் பொருளாதார நிலை கைமீறிப்போய்விட்டது.

உள்ளுர் உற்பத்தி என்பது நீண்டகாலமாக இல்லை உணவு உற்பத்தியும் கேள்விக்குறியே, தவிர சிறீலங்காவின் பொதுமக்களது நுகர்வுக் கலாச்சாரத்தில் நிறைய மாற்றங்கள் நடந்துவிட்டது. நாம் வாழும் காலத்தின் உணவுப்பழக்கங்களில் அரைவாசிக்குமேல் இல்லாதுபோய்விட்டன அவர்களில் அனேகமானவை உள்ளூர் உற்பத்திய அண்டிய உணவுகள்.

ஊரெல்லாம் கடன்வாங்கிப்பழக்கப்பட்ட அரசு இப்போ குரோணா காலத்தில் எங்கேயு கடன் கிடைக்காமல் அல்லாடுகிறது குரோணாகாரணமாக பொருதளது விலை அதிகம் எனக்கூறினாலும் குரோணா இல்லாவிடிலும் இதுவே நடந்திருக்கும்.

யோசிச்சுப் பாருங்கள் உல்லாசப்பயணத்துறை பூச்சியம், யாழ் மக்களுக்கு வருடம் ஒரு தரம் கிடைக்கும் சீசன் அதாவது புலம்பெயர் தமிழர்களது வரவால் கிடைக்கும் வருமானம் பூச்சியம் எல்லாம் போய்விட்டது இனிமேல் சும்மா கடதாசிக்காசை அச்சடிக்கவேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Elugnajiru said:

யாழ் மக்களுக்கு வருடம் ஒரு தரம் கிடைக்கும் சீசன் அதாவது புலம்பெயர் தமிழர்களது வரவால் கிடைக்கும் வருமானம் பூச்சியம் எல்லாம் போய்விட்டது இனிமேல் சும்மா கடதாசிக்காசை அச்சடிக்கவேண்டியதுதான்.

உண்மையில் இப்படி நடந்து இருந்தால் நன்மையே.

கிழக்கு மக்கள் நீண்ட, மத்திம  கால அடிப்படையில் கொடுத்து வைத்தவர்கள்.

வடக்கு, குறிப்பாக யாழ் சமூகதிற்கு  நல்ல பாடம். 

நேரமும் பொருளும் (வெளிநாட்டில் உழைப்பவர்கள் தம்மை தேய்த்து அனுப்பும் பணமும்)  இருந்தும், எப்போதும் அப்படியே இருக்கலாம் என்று இருந்தவர்களுக்கு (அப்படி இல்லாதவர்களை, அதாவது வெளி நாட்டில் இருந்து வரும் பணத்தை கொண்டு தாமாக அங்கேயே வருமான வழிகளைத் தேடியவர்கள், விரல் விட்டு  எண்ணலாம்) பிடரியிலும், நெத்தியிலும் (சிலவேளைகளில் அவர்கள் அனுபவித்த வாழ்க்கையை பொறுத்து வயிற்றிலும்) ஒரே நேரத்தில் அடி.

covid 19 ஆள் வளைந்த நன்மை. இனியாவது விழிக்கட்டும்.

இங்கே வந்தவர்களிலும் தவறு உண்டு,  முன்பு கொழும்பு சென்று money order பொருளாதாரத்தை உருவாக்கியது போல, இப்பொது புலம் பெயர்ந்து  உண்டியல் அல்லது money transfer பொருளாதாரத்தை உருவாக்கி உள்ளார்கள்.

இங்கே புலத்தில் இருந்து பணம் அனுபவர்கள், இப்பொது அங்கெ தொண்டு சேவைகளின் உதவியில்  தங்கி இருப்பவர்களின் சமூகத்தில் விளிம்பு  நிலையில் இருப்பவர்களை தம்மால் இயன்ற அளவு பொறுப்பு எடுப்பது நலம்.

  • கருத்துக்கள உறவுகள்

19 Emoji Like Stunning Face Reactions of Vadivelu | Vadivelu memes, Comedy  memes, Meme faces

ஸ்ரீ லங்கா>>>> வெட்கமோ ஹி...ஹி...ஹி. நீதான் பெரிய அப்பாடாக்கர் ஆச்சே நீ என்னதான் கழுவிக்கழுவி ஊத்தினாலும் நாங்கள் சிரித்தபடியே இருப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, theeya said:

19 Emoji Like Stunning Face Reactions of Vadivelu | Vadivelu memes, Comedy  memes, Meme faces

ஸ்ரீ லங்கா>>>> வெட்கமோ ஹி...ஹி...ஹி. நீதான் பெரிய அப்பாடாக்கர் ஆச்சே நீ என்னதான் கழுவிக்கழுவி ஊத்தினாலும் நாங்கள் சிரித்தபடியே இருப்போம். 

நீங்க கழுவி ஊத்தினா நாங்கள் சைனா பக்கம் போய்யிடுவம் என்ன செய்வாய்  என்ன செய்வாய்  என்ன செய்வாய்  😂🤣

Edited by உடையார்
எழுத்து பிழை

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Elugnajiru said:

அனேகமாக சிறீலங்காவின் பொருளாதார நிலை கைமீறிப்போய்விட்டது.

உள்ளுர் உற்பத்தி என்பது நீண்டகாலமாக இல்லை உணவு உற்பத்தியும் கேள்விக்குறியே, தவிர சிறீலங்காவின் பொதுமக்களது நுகர்வுக் கலாச்சாரத்தில் நிறைய மாற்றங்கள் நடந்துவிட்டது. நாம் வாழும் காலத்தின் உணவுப்பழக்கங்களில் அரைவாசிக்குமேல் இல்லாதுபோய்விட்டன அவர்களில் அனேகமானவை உள்ளூர் உற்பத்திய அண்டிய உணவுகள்.

ஊரெல்லாம் கடன்வாங்கிப்பழக்கப்பட்ட அரசு இப்போ குரோணா காலத்தில் எங்கேயு கடன் கிடைக்காமல் அல்லாடுகிறது குரோணாகாரணமாக பொருதளது விலை அதிகம் எனக்கூறினாலும் குரோணா இல்லாவிடிலும் இதுவே நடந்திருக்கும்.

யோசிச்சுப் பாருங்கள் உல்லாசப்பயணத்துறை பூச்சியம், யாழ் மக்களுக்கு வருடம் ஒரு தரம் கிடைக்கும் சீசன் அதாவது புலம்பெயர் தமிழர்களது வரவால் கிடைக்கும் வருமானம் பூச்சியம் எல்லாம் போய்விட்டது இனிமேல் சும்மா கடதாசிக்காசை அச்சடிக்கவேண்டியதுதான்.

ஐஎம்வ் ப்ரெசிடென்ட் IMF President கீதா கோபிநாத் இரண்டு கிழமை முன்பு எதோ வாழைப்பழம் 
விழுங்கின மாதிரி ஸ்ரீலங்கா பற்றி முணுமுணுத்தாள் பார்த்தீர்களா?

கொரோனா கடன் வழங்கும் திட்டங்களை ஐஎம்வ் தயாரித்து வருகிறது. 

ப்ளூம்பெர்க் நியூஸில் பார்த்தேன் 

  • கருத்துக்கள உறவுகள்

ராஜதந்திர காம அம்மணத்தில்  வெட்கமா?

உங்களுக்கு ராஜதந்திர காம இச்சை காணாது.

சிங்களம் எதிர்பார்ப்பது முழுமையாக திறந்து விட்டு வரும்  படி,   நீங்கள்  மூடிக் கொண்டு வந்து சிங்களத்தை வெட்கம் என்கிறீர்கள், mcc கொடையை பொறுத்தவரையில்.

சிங்களம் எக்காளமிட்டு சிரிக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.