Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றியது பாரிய மனித உரிமை மீறல்: பல அமைப்புக்கள் கண்டனம்.

Featured Replies

கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றியது பாரிய மனித உரிமை மீறல் - பல அமைப்புக்கள் கண்டனம்.

கொழும்பில் தங்ககங்களில் தங்கியிருந்த சுமார் 800 வரையிலான தமிழர்கள் சிறீலங்காப் படையினரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு, ஒரு தொகுதியினர் தமிழர் தாயகப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கை பற்றி கருத்துத் தெரிவித்த மனித உரிமை அமைப்புக்கள், தொண்டு நிறுவனங்கள், ஊடக இயக்கங்கள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் தமது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, மேலக மக்கள் முன்னணி உட்பட பல கட்சிகளும், அமைப்புகளும் சிறீலங்கா அரசைக் கண்டித்திருப்பதுடன், ஹிட்லர் பாணியில் தமிழ் மக்கள் அடிமைகள்போன்று நடத்தப்பட்டிருப்பது, அரசியல் யாப்பிற்கு முரணானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இன்று அதிகாலை கொழும்பிலுள்ள தங்ககங்களைச் சுற்றி வளைத்த சிறீலங்காப் படையினரால் கைது செய்யப்பட்ட சுமார் 800 தமிழர்களில் 500 பேர் மட்டுமே இதுவரை மட்டக்களப்பு, வவுனியா மாவட்டங்களுக்கு பலவந்தமாக காவல்துறை பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

எஞ்சிய தமிழர்களில் 300 பேர் போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படாத நிலையில் தொடர்ந்தும் புறக்கோட்டை காவல் நிலையத்தில் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு புறக்கோட்டை, கொட்டாஞ்சேனை, வெள்ளவத்தை, வத்தளை பகுதிகளிலுள்ள தங்ககங்களில் மருத்துவம், வெளிநாட்டு பயணம், வெளிநாட்டிலிருந்துவரும் குடும்பத்தவரைச் சந்திப்பதற்கு, கல்வி, தொழில்வாய்ப்பு போன்ற பல்வேறு காரணங்களுக்காக இந்த மக்கள் தங்கியிருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தவிர மேலும் சில தங்ககங்களில் தங்கியுள்ளவர்கள் அடுத்த 3 நாட்களுக்குள் வெளியேறவில்லை என்றால், அவர்களும் கைது செய்யப்பட்டு கொழும்பைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் எனவும், சிறீலங்கா காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிறீலங்கா அரசின் திடீர் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு, மட்டக்களப்பிற்கு 5 பேரூந்துகளிலும், வவுனியாவிற்கு 3 பேரூந்துகளிலும் பலவந்தமாகக் கொண்டு செல்லப்பட்ட மக்களிற்குரிய மனிதாபிமானப் பணிகளைச் செய்வதற்கு அங்குள்ள தொண்டு நிறுவனங்கள் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.

வவுனியா காமினி மகாவித்தியாலயத்தை சென்றடைந்துள்ள பேரூந்துகளில் பயணித்த மக்களிற்குரிய அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை அகதிகளுக்கான நிறுவனம் முன்னேற்பாடுகளைச் செய்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

-Pathivu-

  • கருத்துக்கள உறவுகள்

இது எங்களுக்கு சாதகமான ஒரு முன்னேற்பாடாகத் தோன்றுகின்றது.

இதன் விளைவுகள் பாரதூரமானவை, சிங்களவன் அனுபவித்துத் தான் ஆகவேண்டும்.

  • தொடங்கியவர்

மட்டக்களப்பில் யசூசி அகாசி படைத்தளபதியுடன் ஆலோசனை.

யப்பானின் சிறப்பு சமாதானத் தூதுவர் யசூசி அகாசி இன்று மட்டக்களப்பு சென்று மட்டக்களப்பு இராணுவத் தளபதியைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அகாசி இன்று காலை 9 மணியளவில் மட்டக்களப்பு கோட்டை படைத்தளத்திற்கு சென்றடைந்தார்.

கோட்டைப் படைத்தளத்தில் யசூசி அகாசியை படைத்தளபதி மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டி மற்றும் படை அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

சந்திப்பில் வாகரை மற்றம் படுவான்கரை தெற்கில் இடம்பெற்ற படை நடவடிக்கைகள் குறித்தும் தற்போது முன்னெடுக்கும் குடும்பிமலை பகுதி நோக்கி படைநடடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்குச் சென்ற யப்பானின் சிறப்பு சமாதானத் தூதுவர் மாவட்ட துணை அரச அதிபர் மகேசன் அவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இதேநேரம் யசூசி அகாசி மட்டக்களப்பில் இடம்பெறும் மீள்குடியேற்ற நடவடிக்கையையும் பார்வையிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

-Pathivu-

யசூசி ஏன் வந்தவர்? அவர் நிற்கும் போதே இவளவு கொடுமைகளும் நடக்கின்றது.

யசூசி ஏன் வந்தவர்? அவர் நிற்கும் போதே இவளவு கொடுமைகளும் நடக்கின்றது.

japanenvoimeet_06062007.jpg0206060630.jpg

  • தொடங்கியவர்

afpsi2.jpg

afp1le5.jpg

(Photos: AFP, BBC English)

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கத் தூதுவருக்கு தெரியாமல் அடித்த ஷெல்ல இவருக்குத் தெரிந்து அடித்திருக்கலாம்.

ஜப்பான் தூதர் நிற்கும் பேதே இவ்வளவு அட்டகாசம் செய்கின்றார்கள். தமிழருக்கு பேரவலம் நிகழும் போது குரல்கொடுக்க முடியாதவாறு தமிழக்தை மீனவர் கடத்தல் மூலமும் வேறு பல சைக்கிள் போள்ஸ் கடத்தல் நாடகம் மூலம் குழப்பிவிட்டிருக்கின்றார்க

Edited by sukan

தமிழ் மக்களின் சுயநிர்னய உரிமையை இன்று உலகமே கண்கூடாக காணும் நிலமை.

சொந்த நாட்டில் ஒரு பிரதேசத்தில் இருக்க முடியவில்லை எண்டால் மக்களின் அடிப்படை மனித உரிமையே மீறப்பட்ட நிலமை.

"கேட்பார் யாரும் இல்லை"

இந்தியத் தழிழர்களே வெட்கித் தலை குனியுங்கள்

  • தொடங்கியவர்

கொழும்பு சம்பவம் சிங்கள இனவாதத்தின் பெரும் அராஜக செயல்: அமைச்சர் சந்திரசேகரன் கண்டனம்.

கொழும்பில் தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமையானது சிங்கள இனவாதத்தின் பெரும் அராஜக செயல் என்று மகிந்த அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கை:

கொழும்பிலுள்ள லொட்ஜிகளில் தங்கியிருந்த தமிழர்களைப் பலவந்தமாக வாகனங்களில் ஏற்றி வெளியிடங்களுக்குக் கொண்டு சென்றிருப்பது அடிப்படை மனித உரிமைகளுக்கும் தனிமனித சுதந்திரத்திற்கும் விடப்பட்ட சவாலாகும்.

மனித உரிமைகளுக்கு தனி மதிப்பு தருகின்ற நவீன உலகத்தில் எமது நாட்டில் இன்று நடந்திருப்பது சிறுபான்மைத் தமிழர்களுக்கு எதிரான அநாகரிக செயலாகும்.

ஆப்பிரிக்க கறுப்பினத்தவர்களை மிருகங்களைப்போல நடத்திய சம்பவத்திற்கும் அவுஸ்திரேலிய பழங்குடியினருக்கு எதிராக இழைக்கப்பட்ட மாபெரும் அநீதிக்கும் நிகரான ஜனநாயக விரோத செயலாகவே இச்சம்பவம் நடந்திருக்கின்றது.

தமிழர்கள் வடக்கு கிழக்கிற்கு வெளியே வாழத் தகுதியற்றவர்கள் என்பதையும், அவர்களின் சுதந்திரமும் பாதுகாப்பும் தமிழர்களின் சொந்த மண்ணில் மட்டுமே இருக்க முடியும் என்பதையும் உலகத்திற்கு உணர்த்தும் செயலாகவே இச்சம்பவத்தை மலையக மக்கள் முன்னணி பார்க்கின்றது

இலங்கையில் தலைவிரித்தாடும் இனவாத போக்கும் இனவிரோத அடக்கு முறையும் இன்னுமொரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கின்றத

Edited by யாழ்வினோ

தெரிந்திருந்தும் செய்கிறர்கள்.......... :lol:

நாட்டை பேய்கள் ஆட்சி செய்தால் இப்படித்தான், இதை எல்லாம் இவர்கள் அறுவடை செய்யும் காலம் வெகு தொலைவில் இல்லை :angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பு சம்பவம் சிங்கள இனவாதத்தின் பெரும் அராஜக செயல்: அமைச்சர் சந்திரசேகரன் கண்டனம்.

சந்திரசேகரன் தன் பதவியை ஏன் இன்னமும் ராஜினாமா செய்யவில்லை? இவரும் அரசாங்கத்தில் ஒருவர் தானே

  • கருத்துக்கள உறவுகள்

birdflyingwithlettermdwbl0.gif

இங்கு அரசியலும், மதமும் இணைகின்றதா???????????????????

தமிழ்ஈழத்தில் இருந்து விரைவில் சிங்களவர் வெளியேற்றப்படும் போதும் இந்த அமைப்புகள் வெறும் கண்டன அறிக்கைகளுடன் நிறுத்திக்கொண்டால் நல்லது.

அகாசிக்கும் அமரசிங்கவுக்கும் 6 வித்தியாசங்கள் கூறமுடியுமா?

japanenvoimeet_06062007.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு சம்பவம் சிங்கள இனவாதத்தின் பெரும் அராஜக செயல்: அமைச்சர் சந்திரசேகரன் கண்டனம்.

கொழும்பில் தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமையானது சிங்கள இனவாதத்தின் பெரும் அராஜக செயல் என்று மகிந்த அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கை:

கொழும்பிலுள்ள லொட்ஜிகளில் தங்கியிருந்த தமிழர்களைப் பலவந்தமாக வாகனங்களில் ஏற்றி வெளியிடங்களுக்குக் கொண்டு சென்றிருப்பது அடிப்படை மனித உரிமைகளுக்கும் தனிமனித சுதந்திரத்திற்கும் விடப்பட்ட சவாலாகும்.

மனித உரிமைகளுக்கு தனி மதிப்பு தருகின்ற நவீன உலகத்தில் எமது நாட்டில் இன்று நடந்திருப்பது சிறுபான்மைத் தமிழர்களுக்கு எதிரான அநாகரிக செயலாகும்.

ஆப்பிரிக்க கறுப்பினத்தவர்களை மிருகங்களைப்போல நடத்திய சம்பவத்திற்கும் அவுஸ்திரேலிய பழங்குடியினருக்கு எதிராக இழைக்கப்பட்ட மாபெரும் அநீதிக்கும் நிகரான ஜனநாயக விரோத செயலாகவே இச்சம்பவம் நடந்திருக்கின்றது.

தமிழர்கள் வடக்கு கிழக்கிற்கு வெளியே வாழத் தகுதியற்றவர்கள் என்பதையும், அவர்களின் சுதந்திரமும் பாதுகாப்பும் தமிழர்களின் சொந்த மண்ணில் மட்டுமே இருக்க முடியும் என்பதையும் உலகத்திற்கு உணர்த்தும் செயலாகவே இச்சம்பவத்தை மலையக மக்கள் முன்னணி பார்க்கின்றது

இலங்கையில் தலைவிரித்தாடும் இனவாத போக்கும் இனவிரோத அடக்கு முறையும் இன்னுமொரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கின்றத

  • கருத்துக்கள உறவுகள்

பதிவில் மேலதிக படங்கள், தொடர்புகள் உள்ளவர்கள் யு டியூப் போன்ற தளங்களில் தரவேற்றி விடுங்கள் தயவு செய்து..

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

இது எல்லாத்திற்கும் ஒரு விலை இருக்கு பாருங்கோ.

அதை இவயள் விரைவில் செலுத்துகிற காலம் ஒன்று வரத்தான் போகுது.இன்னும் எவ்வளவு காலத்திற்கு

எங்கட இனத்தோட விளையாடுவினம் என்று பார்ப்பம்

பலவந்த வெளியேற்றம் மனிதத் தன்மையற்றதுதான். தொழில்லற்ற காரணங்களுக்காவும் சரியான காரணங்கள் தெரிவிக்காமையும் இதன் காரணமாகக் கூறப்படுகின்றது. ஆனால் யோசித்துப் பாருங்கள். வடக்குக் கிழக்கில் தமது சொந்த இருப்பிடங்களைவிட்டுத் துரத்தப்பட்டபோதும் இதே கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. ஆனாலும் நடந்தது என்ன? எதுவுமேயில்லை. இன்னும் சிறிது காலத்திற்கு இது சூடான செய்தியாகவிருக்கும். பிறகு மறக்கப்பட்டுவிடும். முடிவான முடிவு ஒன்றுதான். இறுதிப் போரின் மூலம் இலக்கையெட்டுதல். இதைத் தவிர வேறு முடிவுகளிருந்தால் கூறுங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

பி.பி.ஸி. யில்

Police evict Tamils from Colombo

Police in Sri Lanka have forced hundreds of the minority Tamil community out of the capital Colombo for what they say are security reasons.

They launched overnight raids in Tamil areas of the city and forced guests staying in budget hotels onto buses.

Police said that Tamils who were in the capital "without valid reasons" were made to board buses bound for the north and east of the island.

Police said that the move was necessary amid fears of renewed civil war.

'Bad example'

They said that the crackdown was part of continuing efforts to stop the Tamil Tigers infiltrating the city of 600,000 people.

They also said the measure was being taken for the safety of the Tamil community amid a rash of abductions across Colombo blamed on the rebels and the security forces.

A statement released by the government said that the evictions were made "without communal considerations".

It said they were directed at anyone occupying lodgings or temporary residences in Colombo and cannot provide valid reasons for doing so.

"There have been instances where some 'lodgers' have lived in the Colombo area for over six months without making any progress, on the pretext that someone has to obtain his or her identity card or passport," the statement said.

"The resulting action by the police is required considering security demands such as the recent Tamil Tiger bomb explosions resulting in several innocent lives lost, and severe damage to property.

"Investigations have also confirmed that those responsible for these brutal killings have hatched their brutal plans and executed them from these lodgings," the statement said.

It said that a total of 376 persons - 291 males and 85 females - have left in seven buses for destinations in the north and east.

The Tamil Tigers have so far not commented on the evictions, but mainstream Tamil political leaders have condemned it.

"This operation is a very bad example," Tamil political leader Dharmalingam Sithadthan told the AFP news agency.

"It is OK for the Tamil Tigers to indulge in this sort of ethnic cleaning because they have no moral responsibility, but a government can't behave like this," he said.

'Serious violation'

Colombo Inspector General of police Rohan Abeywardene told Reuters that some people who had no valid reasons to be in Colombo were "just hanging around".

"They have been requested to leave and told they had better get back to their own villages," he said.

Correspondents say that hundreds of Tamils, many from impoverished rural areas, live in boarding houses in Colombo while they seek work at home or abroad.

Many ethnic Tamils complain they have been deliberately targeted by the security forces, detained and searched.

One man forced to board one of the buses called the private local radio station Sirisa FM from a mobile phone.

"The police came and took us and put everyone on the bus," he said, saying the bus was about 32km (20 miles) outside the capital, heading northeast.

"We don't know where we are being taken."

Human rights campaigners and other observers say they are shocked at what they say is a serious violation of human rights.

"This is almost like a variation of ethnic cleansing," Paikiasothy Saravanamuttu of the independent Centre for Policy Alternatives think-tank told Reuters.

"It is quite appalling."

http://news.bbc.co.uk/2/hi/south_asia/6729555.stm

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி 08-06-2007 02:35 மணி தமிழீழம் [தாயகன்]

hacgeemvb9.jpg

கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டது 83 ஐவிட மோசமான செயல் - முஸ்லீம் கொங்கிரஸ்

கொழும்பில் தங்ககங்களில் தங்கியிருந்த தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை 1983ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கலவரத்தைவிட மோசமான நடவடிக்கை என சிறீலங்கா முஸ்லீம் கொங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று இது தொடர்பாக இடம்பெற்ற விவாதத்தில் பேசிய சிறீலங்கா முஸ்லீம் கொங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இந்தக் கண்டனத்தை வெளியிட்டார்.

தமிழ் மக்கள் முறையான காரணமின்றி அரசினால் கொழும்பிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் எனவும் இதேபோன்று கொழும்பில் தங்கியுள்ள முஸ்லீம்களையும் சிங்கள மக்களையும் அரசு வெளியேற்ற முடியுமா? எனவும் ஹக்கீம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் சந்தேகத்திற்கு இடமானவர்கள் தங்கியிருந்தால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முறையான ஒழுங்குகள் இருப்பதாகவும் அந்த சட்ட ஒழுங்கினை எவரும் மீற முடியாது என்றும் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.

கஸ்ரப்பட்ட மக்களும் மருத்துவ தேவைகள் உறவினர்களை வெளிநாடு அனுப்புவதற்கு தங்ககங்களில் தங்கியிருந்தவர்களுமே அரசின் நேற்றைய நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஹக்கீம் கண்டனம் தெரிவித்தார்.

சிறீலங்கா அரசில் இணைந்துள்ள முஸ்லீம் கொங்கிரஸ் கட்சி பல அமைச்சுப் பொறுப்புக்களையும் ஏற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

நன்றி

பதிவு

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி 08-06-2007 03:50 மணி தமிழீழம் [தாயகன்]

கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டதற்கு ஜே.வி.பியும் அரசைக் கண்டித்துள்ளது

கொழும்பிலுள்ள தமிழ் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை தமிழ்-சிங்கள மக்கள் மத்தியில் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தி இருப்பதாக ஜே.வி.பியும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அரசின் இந்த செயற்பாட்டை ஒரு முட்டாள்தனமான செயல் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க கண்டனம் தெரிவித்தார்.

அதிகாரப் பசியுடைய தலைவர்கள் முன்னைய காலத்தில் செய்த தவறினால் 83 கலவரம் ஏற்பட்டது எனவும் அதேபோன்ற நிலைக்கு தற்போதைய அரசும் நாட்டை இட்டுச்செல்வதாகவும் திஸாநாயக்க கூறினார்.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் எனவும் ஆனால் அந்த நடவடிக்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் பாதிக்கப்படக் கூடாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார தெரிவித்திருக்கின்றார்.

அரசு மூவின மக்களிற்கும் பொதுவானது எனவும் சிறீலங்கா ஒரே நாடு என்றால் இந்த மக்களை எந்த நாட்டை நோக்கி திருப்பி அனுப்புகின்றீர்கள் எனவும் மற்றொரு நாட்டிற்கா அனுப்புகின்றீர்கள் எனவும் திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறீலங்கா அதிபரின் சொந்த ஊரான ஹம்பாந்தோட்டையில் இருந்தும் பலர் கொழும்பிற்கு வந்து பணி நிமித்தம் தங்கியுள்ளனர் எனவும் அவர்களையும் நீங்கள் திருப்பி அனுப்பப் போகின்றீர்களா எனவும் திஸாநாயக்க அரசிடம் கேட்டிருக்கின்றார்.

சிறீலங்கா ஒரு நாடு எனவும் இந்த நாட்டில் எங்கும் பயணிப்பதற்கும் தங்குவதற்கும் அனைவருக்கும் உரிமை இருக்கின்றது எனவும் யாரும் விரும்பிய இடத்தில் பணி புரிய முடியும் என்றும் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ அரசு சிங்களவர்களை எப்போது வெளியேற்றப்போகிறது

Edited by suthaharan

சிங்கள பேரினவாதத்தை உலகிற்கு அறியச்செய்யும் ராஜபக்ஸ சகோதரர்களுக்கு நன்றி

கொழும்பில் தமிழர்களை வெளியேற்றியதானது ஹிட்லரின் நடவடிக்கையை ஒத்தது: ரணில்

"இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் அரசு மேற்கொண்ட நடவடிக்கை மற்றும் தென்னாபிரிக்க அரசு கறுப்பின மக்கள் மீது மேற்கொண்ட நடவடிக்கைகள் போன்றது மகிந்த ராஜபக்சவின் நடவடிக்கைகள்."

கொழும்பில் உள்ள விடுதிகளில் இருந்து தமிழர்களை பலவந்தமாக அரசு வெளியேற்றியது தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை உரையாற்றிய போதே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

யூதர்களும், ஆபிரிக்கா கறுப்பின மக்களும் ஜேர்மனிய மற்றும் வெள்ளை இன அரசுகளினால் இதே போன்றதொரு துன்பத்தை அனுபவித்திருந்தனர். அரசின் இந்த நடவடிக்கை அரசியல் யாப்பை மீறும் செயல்.

எல்லா மக்களும் சுதந்திரமாக வாழும் உரிமை இங்கு உண்டு. அவர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களையும் தெரிவு செய்யும் உரிமை உள்ளது. நாம் நாட்டின் பாதுகாப்பிலும் அக்கறை கொண்டுள்ளோம். ஆனால் அரசுக்கு யார் மீது சந்தேகம் இருப்பினும் அவரை நீநிமன்றத்தில் நிறுத்தி தடுப்புக்காவலில் வைக்க வேண்டுமா அல்லது விடுதலை செய்ய வேண்டுமா என முடிவெடுக்க வேண்டும்.

மக்களை எழுந்தமானமாக விடுதிகளில் இருந்து வெளியேற்றுவது அவர்களிடம் கோபங்களை உண்டு பண்ணி மேலும் குண்டு வெடிப்புக்களுக்கு வழிவகுக்கும். அரசின் இந்த நடவடிக்கை ஐரோப்பிய நாடாளுமன்றக் கூட்டத்தில் எமக்கு அபகீர்த்தியை விளைவிக்கும். அரசு, ஏன் நாட்டுக்கு இப்படியான ஒரு சிக்கலை தோற்றுவித்துள்ளது எனவும் கேள்வி எழுப்பினார்.

http://www.eelampage.com/

நாங்கள் வடக்கு-கிழக்கிற்கு செல்லுகின்றோம் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

கொழும்பில் தங்கியிருந்த தமிழர்களை பலவந்தமாக அரசு வெளியேற்றியதைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தாமும் வடக்கு கிழக்கிற்கு செல்லவிருப்பதாகக் கூறினர்.

நாடாளுமன்றத்தைவிட்டு வெளியேறி வடக்கு-கிழக்கிற்கு செல்வதாகவும், அதேபோன்று வடக்கு-கிழக்கிலுள்ள படையினர் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் எனவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்தார்.

அரசின் இந்த நடவடிக்கை பாரிய மனித உரிமை மீறல் எனவும், ஆடு-மாடுகள் போன்று தமிழர்கள் பேரூந்துகளில் பலவந்தமாக அனுப்பி வைக்கப்பட்டமை அடிப்படை மனித உரிமை மீறல் செயல் என, இரா சம்மந்தன் கடுமையான கண்டனத்தை வெளியிட்டார்.

சிறீலங்கா அரசின் அடக்குமுறை மாற்றான்தாய் செயற்பாடு காரணமாக கொதிப்படைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரன் சிறீலங்காவின் அரசியல் யாப்பை கிழித்தெறிந்து தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தினார்.

நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த நேரம் ஒதுக்கித் தருமாறு கோரிக்கை விடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஐக்கிய தேசியக் கட்சி, மேலக மக்கள் முன்னணி என்பன ஆதரவு தெரிவித்திருந்தன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பு நடவடிக்கையால் 10.35 அளவில் சபாநாயகர் லொக்கு பண்டார நாடாளுமன்ற அமர்வுகளைக் கலைத்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

http://www.pathivu.com/

கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டதற்கு ஜே.வி.பியும் அரசைக் கண்டித்துள்ளது

கொழும்பிலுள்ள தமிழ் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை, தமிழ்-சிங்கள மக்கள் மத்தியில் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தி இருப்பதாக, ஜே.வி.பியும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அரசின் இந்த செயற்பாட்டை ஒரு முட்டாள்தனமான செயல் என, ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க கண்டனம் தெரிவித்தார்.

அதிகாரப் பசியுடைய தலைவர்கள் முன்னைய காலத்தில் செய்த தவறினால் 83 கலவரம் ஏற்பட்டது எனவும், அதேபோன்ற நிலைக்கு தற்போதைய அரசும் நாட்டை இட்டுச்செல்வதாகவும் திஸாநாயக்க கூறினார்.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் எனவும், ஆனால் அந்த நடவடிக்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் பாதிக்கப்படக் கூடாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார தெரிவித்திருக்கின்றார்.

அரசு மூவின மக்களிற்கும் பொதுவானது எனவும், சிறீலங்கா ஒரே நாடு என்றால் இந்த மக்களை எந்த நாட்டை நோக்கி திருப்பி அனுப்புகின்றீர்கள் எனவும், மற்றொரு நாட்டிற்கா அனுப்புகின்றீர்கள் எனவும் திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறீலங்கா அதிபரின் சொந்த ஊரான ஹம்பாந்தோட்டையில் இருந்தும் பலர் கொழும்பிற்கு வந்து பணி நிமித்தம் தங்கியுள்ளனர் எனவும், அவர்களையும் நீங்கள் திருப்பி அனுப்பப் போகின்றீர்களா எனவும் திஸாநாயக்க அரசிடம் கேட்டிருக்கின்றார்.

சிறீலங்கா ஒரு நாடு எனவும், இந்த நாட்டில் எங்கும் பயணிப்பதற்கும், தங்குவதற்கும் அனைவருக்கும் உரிமை இருக்கின்றது எனவும், யாரும் விரும்பிய இடத்தில் பணி புரிய முடியும் என்றும், ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://www.pathivu.com/

கொழும்பில் தமிழர்கள் பலவந்த வெளியேற்றம் - மகேஸ்வரன் மேற்சட்டையை கழற்றி எறிந்தார்

கொழும்பிலிருந்து தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டது பற்றிய விவாதம் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றபோது, கோபமடைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் தனது மேற்சட்டையை கழற்றி எறிந்து எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.

அகவை முதிர்ந்தவர்கள், நோயாளர்கள், குழந்தைகள், மற்றும் சிறுவர்களும் சிறீலங்கா அரசின் பலவந்த வெளியேற்றத்தில் உள்ளடங்கியுள்ளதை நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

சிறீலங்கா நாடாளுமன்றத்தில் மேற்சட்டையை கழற்றி எறிந்த இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றது இதுவே முதற்தடவை என்பது நாடாளுமன்ற பதிவேட்டில் பதிவாகியுள்ளது.

http://www.pathivu.com/

கொழும்பில் தமிழர்கள் பலவந்த வெளியேற்றம் - மகேஸ்வரன் மேற்சட்டையை கழற்றி எறிந்தார்

கொழும்பிலிருந்து தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டது பற்றிய விவாதம் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றபோது, கோபமடைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் தனது மேற்சட்டையை கழற்றி எறிந்து எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.

அகவை முதிர்ந்தவர்கள், நோயாளர்கள், குழந்தைகள், மற்றும் சிறுவர்களும் சிறீலங்கா அரசின் பலவந்த வெளியேற்றத்தில் உள்ளடங்கியுள்ளதை நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

சிறீலங்கா நாடாளுமன்றத்தில் மேற்சட்டையை கழற்றி எறிந்த இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றது இதுவே முதற்தடவை என்பது நாடாளுமன்ற பதிவேட்டில் பதிவாகியுள்ளது.

http://www.pathivu.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.