Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்ஸில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டிய விரிவுரையாளர் படுகொலை!

Featured Replies

16 minutes ago, Ellam Theringjavar said:

சிவத்தையாகச் சொன்னால் விட்டிருப்பார்களா?

ஒன்றுக்குப் பின்னால் ஒன்றாக ஐரோப்பியன் உலகநாடுகளுக்குப் போய் நூற்றாண்டுகளாய் ஆட்சிசெய்து கொள்ளையடித்து தாம் ஆடம்பரமாக வாழ்ந்தது போக மீதியை தத்தம் நாடுகளுக்கு அனுப்பி தம்பிரசைகளை வழமாக வாழவைத்து மீதியை சேமித்தார்கள்.

இங்கே குறிப்பாக இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் இவர்களின் ஆக்கிரமத்தை எதிர்த்தவர்களை பயங்கரவாதிகளெனவும் தீவரவாதிகளிகளெனவும் முத்திரைகுத்தி வகைதொகையாக கைது செய்து செய்து அதிஉச்ச சித்திரவதை செய்து தூக்கிலிட்டு கொலை செய்தார்கள். மைதானங்களில் கூடுயோரை ஈய்வு இரக்கமின்றி சுட்டுக்கொன்றார்கள்.

இவற்றையெல்லாம் அப்படியே இப்பவும் இலங்கையும் இந்தியாவும் தம்நாட்டுப் பிரைசைகளுக்கு செய்தகொண்டிருக்கிறார்கள்.

எங்கேயாவது ஒரு ஐரோப்பிய நாடு தன் நாட்டுப் பிரசைகை இப்படி தண்டிக்கிறார்களா?

மற்றய நாடுகளிலிருந்து வந்து அரசியல் தஞ்சம் கோரி பின்னர் அந்தந்த நாட்டுப் பிரசைகளானவர்கைத் தவிர.

மதமும் விஞ்ஞானமும். போருக்கு ஆணையிடுவதற்கு முன் அரச தலைவர்கள் வேதப்புத்தகத்தை தூக்கிக்கொண்டு தேவாலயத்துக்குப் போய்வருகறார்களே. ஏன்?

நவீன ஆயுதங்களில் நம்பிக்கை இல்லாமலா?

மற்றைய இனங்களைப்போல் இசுலாமியரும் ஒரு ஆண்ட இனம்தான்.

அதுசரி இது பச்சையா? காஞ்சதா?

யாழில் எழுதும் மதவாதிகளுக்கு சமர்ப்பணம்.

 

 

  • Replies 82
  • Views 8.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Ellam Theringjavar said:

யாழில் எழுதும் மதவாதிகளுக்கு சமர்ப்பணம்.

 

 

இதை நீங்கள் முதலில் பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன் 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துருக்கியர்களுக்கு பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்க ஜனாதிபதி எர்டோகன் அழைப்பு!  | Athavan News

துருக்கியர்களுக்கு பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்க ஜனாதிபதி எர்டோகன் அழைப்பு!

தீவிர இஸ்லாமியம் குறித்த பிரான்ஸின் கடுமையான நிலைப்பாடு தொடர்பாக துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன், துருக்கியர்களுக்கு பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளார்.

தொலைக்காட்சி உரையில் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் கூறுகையில், ‘பிரான்ஸில் முஸ்லிம்களுக்கு எதிராக ஒடுக்குமுறை இருந்தால் முஸ்லிம்களைப் பாதுகாக்க உலகத் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும்’ என அவர் கேட்டுக்கொண்டார்.

முகமது நபியின் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரத்தை வகுப்பறையில் காட்டிய காரணத்திற்காக, பிரான்ஸில் கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி வரலாற்று விரிவுரையாளரான 47 வயதான சாமுவேல் பேட்டி என்பவர், அப்துல்லாக் அன்சோரோவ் என இளைஞரால் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தினால் ஆத்திரமடைந்த பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், இஸ்லாமியவாதிகள் நமது எதிர்காலத்தை பறிக்க நினைப்பதால் ஆசிரியர் சாமுவேல் பேட்டி கொல்லப்பட்டார். ஆனால் பிரான்ஸ் கேலிச்சித்திரங்களை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது’ என கூறினார்.

இந்த பின்னணியில் மத்திய கிழக்கு நாடுகளில் பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, குவைத், ஜோர்தான் மற்றும் கட்டார் உள்ளிட்ட நாடுகளிலுள்ள சில அங்காடிகளில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பொருட்கள் நீக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், பிரான்ஸ் ஜனாதிபதியின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து லிபியா, சிரியா, காசாவில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

http://athavannews.com/துருக்கியர்களுக்கு-பிரா/

  • கருத்துக்கள உறவுகள்

துருக்கி ஜனாதிபதியை படுமோசமாக சித்தரித்து, அட்டை படம் வெளியிட்ட பிரான்ஸ் பத்திரிகை

Turkey president rips Charlie Hebdo mag for 'disgusting' cartoon

mail?url=https%3A%2F%2F1.bp.blogspot.com%2F-Ait3GcIdQnk%2FX5lW_KqVsvI%2FAAAAAAAFtTo%2FHJR8w2sOYCA8KrhYwx3UvPwwEM4xgoUaQCLcBGAsYHQ%2Fw400-h250%2FJKTZ6BEB6QN67K53OPYWBVGNJQ.jpg&t=1603961185&ymreqid=13fa43f7-e755-4382-1c36-b4009201e100&sig=5tdvPPlIzRB1dWmP7uTzow--~D


பிரான்சின் பிரபல பத்திரிகை துருக்கி ஜனாதிபதியை எர்டோகனை படுமோசமாக சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்டுள்ள சம்பவத்திற்கு அந்நாட்டு அதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் முகமது நபியின் கார்ட்டூனை வகுப்பறையில் காட்டியதற்காக வரலாற்று ஆசிரியர் பாட்டி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இஸ்லாம் மதம் உலகம் முழுவதும் நெருக்கடியில் உள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்தார்.

மக்ரோன் கருத்திற்கு துருக்கி ஜனாதிபதி எர்டோகன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில், பிரான்சின் பிரபல பத்திரிக்கையான சார்லி ஹெப்டோ தனது அட்டை படத்தில் துருக்கி ஜனாதிபதியை படுமோசமாக சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்டுள்ளது.

இதற்கு துருக்கி அதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக இரு நாடுகளிடையே நிலவி வந்த பதற்றம் தற்போது அதிகரித்துள்ளது.

-Jaffnamuslim.com

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் அரசிற்கு எதிராக ஈரானில் வலுக்கும் போராட்டம்

 
1-116.jpg
 61 Views

இஸ்லாம் மதத்துக்கு எதிராக கருத்துத் தெரிவித்த பிரான்ஸுக்கு எதிராக ஈரானில்   போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு பிரான்ஸ் அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன்களை மாணவர்களிடத்தில் காட்டி, ‘பேச்சு, கருத்து சுதந்திரம்’ பற்றி வகுப்பறையில் விவாதத்தை நடத்திய பிரெஞ்சு வரலாற்று ஆசிரியர் பள்ளிக்கு வெளியே பத்து நாட்களுக்கு முன்னர்  படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பிரான்ஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் அன்றே பொலிஸாரால் கொல்லப்பட்டார். அவர் ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடையவர் என்றும் கூறப்பட்டது. மேலும், இந்தக் கொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலை  பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன், “இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல்” என்று கடுமையாக சாடியிருந்தார்.

இந்த நிலையில் மக்ரோன் மற்றும் பிரான்ஸ் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள  பிரான்ஸ்  தூதரகத்தின் முன்  மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ரெசா அலாவி கூறும்போது, “அவர்கள் தொடர்ந்து இதனைச் செய்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் தொடர்ந்து புறக்கணித்துக் கொண்டு இருந்தோம். ஆனால், இதுதான் அவர்களுக்குப் பாடம் புகட்டுவதற்குச் சரியான நேரம். இஸ்லாமிய வெறுப்புக்கு எதிராக உலகில் உள்ள அனைத்து முஸ்லிகளும் ஒன்றுசேர வேண்டும்”  என்றார்.

https://www.ilakku.org/பிரான்ஸ்-அரசிற்கு-எதிராக/

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் நபிகள் நாயகம் கார்ட்டூன் - நிச்சயம் பதிலடி கொடுக்கனும்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துருக்கி ஜனாதிபதியை சர்ச்சைக்குரிய வகையில் சித்தரித்த பிரான்ஸ் பத்திரிக்கை!  | Athavan News

சார்லி ஹேப்டோாவின் சர்ச்சைக்குரிய புகைப்படம் வெறுக்கத்தக்க தாக்குதல்: எர்டோகன் கண்டனம்

தீவிர இஸ்லாமியம் குறித்த பிரான்ஸின் கடுமையான நிலைப்பாடு தொடர்பாக, துருக்கிக்கும் பிரான்சுக்கும் இடையே பதற்றம் நிலவிவருகின்ற நிலையில், பிரான்ஸின் சார்லி ஹேப்டோ பத்திரிக்கை துருக்கி ஜனாதிபதியை சர்ச்சைக்குரிய வகையில் சித்தரிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கேலிச்சித்திரத்திற்கு ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இது ஒரு வெறுக்கத்தக்க தாக்குதல் என்று அவர் விமர்சனம் செய்துள்ளார்.

எர்டோகன் மீதான சார்லி ஹேப்டோவின் கேலிச்சித்திரத்தை கண்டித்தும், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கு எதிராகவும் துருக்கியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

முன்னதாக துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன், துருக்கியர்களுக்கு பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்க அழைப்பு விடுத்ததன் பின்னணியில் இந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபல பத்திரிக்கையான சார்லி ஹேப்டோ பல ஆண்டுகளுக்கு முன் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த கேலிச்சித்திரங்கள் வெளியிடப்பட்ட பின்னர் 2011ஆம், 2015ஆம் மற்றும் 2020ஆம் ஆகிய ஆண்டுகளில் அந்த பத்திரிக்கை அலுவலகம் மீது பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது.

குறிப்பாக 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் சார்லி ஹேப்டோ பத்திரிக்கையின் கார்ட்டூனிஸ்ட் உட்பட பத்திரிக்கை ஊழியர்கள் 12பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையில், முகமது நபியின் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரத்தை வகுப்பறையில் காட்டிய காரணத்திற்காக, பிரான்ஸில் கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி வரலாற்று விரிவுரையாளரான 47 வயதான சாமுவேல் பேட்டி என்பவரை அப்துல்லாக் அன்சோரோவ் என்ற இளைஞர் படுகொலை செய்தார்.

ஏற்கனவே கிரேக்கம்- துருக்கி கடல்பரப்பு விவகாரம், அர்மீனியா-அசர்பைஜான் விவகாரத்தில் துருக்கி-பிரான்ஸ் இடையே மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், விரிவுரையாளரின் படுகொலைக்கு பிறகு பிரான்ஸ் ஜனாதிபதி கூறிய கருத்துக்கள் இருநாடுகளுக்கிடையேயான மோதலை அதிகரிக்க செய்துள்ளது.

http://athavannews.com/துருக்கி-ஜனாதிபதியை-சர்ச/

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் ஆசிரியர் தலைவெட்டிக்கொலை: 17 வயது இளம்பெண் உட்பட மூன்றுபேர் கைது

பிரான்சில் ஆசிரியர் தலைவெட்டிக்கொலை: 17 வயது இளம்பெண் உட்பட மூன்றுபேர் கைது

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில்  ஆசிரியர் சாமுவேல் பட்டி, செசான்ய பயங்கரவாதியான அப்துல்லா அன்சோரவ்  (18) என்பவரால் கொல்லப்பட்டார். வரலாற்று ஆசிரியரான சாமுவேல் தனது வகுப்பறையில் முகமது நபியின் கேலிச்சித்திரங்களை காட்டியதால் உருவான பிரச்சினையால் கோபமடைந்த இஸ்லாமியர்களில் ஒருவரான அப்ட்துல்லா அவரை தலையை வெட்டிக் கொலை செய்தார்.

இதனால் பிரான்ஸ் நாடே கொதிப்படைந்தது, ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் இஸ்லாமிய பயங்கரவாதம் மற்றும் வன்முறைக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாக உறுதியேற்றுக்கொண்டார்.

இதை தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.இப்போதைக்கு இந்த வழக்கில், 14 மற்றும் 15 வயதுடைய சிறுவர்கள் உட்பட, பத்து பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அப்துல்லாவுடன் தொடர்பிலிருந்ததாக சந்தேகத்தின்பேரில் பிரான்ஸ் நாட்டு இளைஞர் ஒருவரும், செசன்ய நாட்டு இளைஞர் ஒருவரும், கடந்த செவ்வாயன்று கைது செய்யப்பட்டனர்.

அந்த இளைஞர்களில் ஒருவருடன் அந்த 17 வயது இளம்பெண் தொடர்பு வைத்திருந்திருக்கிறார். ஆகவே, அந்த இளம்பெண்ணும் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

https://www.dailythanthi.com/News/World/2020/11/07141831/Teenager-Charged-In-France-For-Hailing-Teachers-Beheading.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.