Jump to content

கடற்கரும்புலி லெப். கேணல் அமுதசுரபி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடற்கரும்புலி லெப். கேணல் அமுதசுரபி

Black-Sea-Tiger-Lieutenant-Colonel-Amuthasurabi-1024x576.jpg

எம் மனங்களோடு கலந்து போன கடற்புலி மகளிர் துணைத்தளபதி, கடற்கரும்புலி லெப். கேணல் அமுதசுரபி.

தாயகத்தைக் காப்பதற்காய் கனத்த மடிகளாய் கரையைத் தேட முயலும் படகுகள் இயந்திரப் பிழைகளால் வேகம் குறைய, தொடரணியாய் எம் கடற்பரப்பில் நகரும் எதிரிகளோடு மாட்டுப்பட வேண்டிவரும் பொழுதுகளில், அல்பாவின் குரல் உயர் அலை வரிசைச் சாதனத்தில் ஒலிக்க நம்புவோம் நாங்கள் எங்கள் கரை தூரத்தில் இல்லை என்று.

“இந்த வாறன். இந்தா வாறன்” உயர் அலை வரிசைத்தாளத்தில் எங்களுக்கு நம்பிக்கையூட்டி, “விடாமல் அடியுங்கோ” என்று கட்டடையிட்டு எங்களின் படகுகளுக்கு தனது படகைக் கொண்டு வந்து காப்பிட்டு, பகைக் கலத்தோடு சண்டை பிடித்து எங்களுக்கு இழப்புகளின்றி கரையேற்றிய அந்த செயல்காரியின் துணிச்சலை வார்த்தைகளுக்குள் அடக்கிவிட முடியாது.

சண்டைகளைப் போலத்தான் அல்பா நிர்வாகத்திலும் தனக்கென ஒரு அத்தியாயத்தை உருவாக்கிக் கொண்டிருந்தவள். இயல்பாகவே பெண்கள் என்றால் சமூகத்தில் அவர்களுக்கென்று ஓர் பதிவிருந்தது. அதை அவர்கள் மீறுவதைத் தடுக்குமுகமாக பல கருத்துக்கள் ஒரு திராளாய் உருவாக்கப்பட்டும் இருந்தது. காலகாலமாய் அந்தச் சூழலிற்குள் வாழ்ந்தவர்கள் அக்கட்டுடைத்து வெளிவரும் போது சில தயக்கங்களும் அவர்கள் கூடவே வந்து விட கடலிலும் அதே நிலைதான்.

தலைவர் அவர்களின் ஆழ் நுண்ணிய பார்வையால் உருவாக்கப்பட்ட கடற்புலி மகளீர் அணியின் செயற்பாடுகள் விரிவு படுத்தபடுகின்றன. ஆனால் அதே வேளை எம்மில் பலர் “பெண்கள் கடலில் இயந்திரத் திருத்தினராக போக முடியாது” எனக் கூறப்போனவர்களும் கடலிற்குப் புதியவர்கள் என்பதனால் திறமையாகச் செயற்பட முடியாமல் போக, இக் கூற்று எல்லோரிலும் படிய முயற்சித்துக் கொண்டிருக்க அல்பா விடவில்லை.

சூசை அண்ணாவோடு கதைத்து அவர்கள் எதில் தெளிவில்லாமல் இருக்கிறார்களோ அதை வகுப்புக்கள் மூலமாகத் தெளிவாக்கி, திரும்பவும் அவர்களைக் கடலில் இறக்கி தன்னோடும் கூட்டிக் கொண்டுபோய் பெண்களால் எதுவும் சாதிக்க முடியும் என்ற உண்மையை உணரவைக்கும்வரை அல்பா ஓய்ந்ததேயில்லை. இன்று திறமை மிக்கவர்களாகவும் அனுபவம் வாய்ந்தவர்களுமான பல இயந்திர திருத்துனர்களாக பெண் போராளிகள், “அல்பாக்கா இருந்திருந்தால் நாங்கள் இன்னும் எவ்வளவு சாதிச்சிருப்பம்” என்று சொல்லுமளவிற்கு அல்பா அவர்களோடு வாழ்ந்திருக்கிறாள்.

“அல்பாக்கா ஆசைப்படுகிற மாதிரி எல்லா நிலைகளிலும் நாங்கள் கடலில் வளரவேணும்.” கண்களில் நீர் தேங்க கடலில் செயல்களினூடே வளர்ந்து வரும் இளைய போராளியின் குரலிது.

இந்தக் காலம் அமது தலைவர் அவர்களால் நல்லெண்ண அடிப்படையில் ஒருதலைப் பட்ச்சமான யுத்த நிறுத்தம் நடைமுறைப் படுத்தப்பட்டு இருந்தது. பகைவனைப் போலவே எமது தேவைகளும் உள்ளதால் நாங்களும் கடலோடிக் கொண்ருந்தோம்.

முல்லைத் தீவியிற்குயரே எதிரியின் டோறாவிற்கு எதிரே எங்களது விநியோகப் படகுகள் மாட்டுப்பட்டு விட்டன. நாங்கள் யுத்த நிறுத்தத்தை நடைமுறைப் படுத்திய போது அரச படைகள் எங்களைத் தாக்கினால் எங்களால் முறியடிப்புத் தாக்குதல் மேற்கொள்ளப்டும் என்றும் அறிக்கை விடப்பட்டிருந்தது. எங்களின் பாதை வழியே எங்களது படகுகள் வரமுற்பட்டுக் கொண்டிருந்தன. பகைக் கலங்கள் விடவில்லை. கலைத்துக் கலைத்துச் சுட்டன.

முறியடிப்புத் நடாத்தத் தொடங்கினோம். முறையான போடு, ஒரு டோறா தாண்டு மற்றைய டோறாவை எதிரி கட்டியிழுத்துக் கொண்டு போனான் தாண்டு போகுமளவிற்கு.

இந்தச் சண்டையில் அல்பா நின்றாள். எங்களது படகுகளைக் கரைக்கு வரவிடாமல் வரித்துக் கட்டிக் கொண்டு நின்ற எதிரிக்கு, இது எங்கள் கடல் என்று சொல்லாமல் செயலில்க் காட்டியவாறு:

“அமுதசுரபி தன்னம்பிக்கைக்கு எடுத்துக் காட்டு. அவருக்கு எந்த வேலையைக் கொடுத்தாலும் சிக்கலில்லாமல் நிறைவேற்றிப் போடுவார்.” அமுதசுரபியைப் பற்றி கடற்புலிகளின் மகளீர் விசேட தளபதி விடுதலையின் மனப்பதிவிது.

முல்லைத்தீவிற்குயர நடந்த சண்டையொன்று அல்பாவின் சண்டை ஆளுமைகளாத் தெளிவாக இனங்காட்டியது. சிக்கலான அந்தச் சண்டையில் கூட அல்பா நிதானமாகச் செயற்பட்டு, பாரிய இழப்புக்கள் ஏற்படாமல்ச் செய்தவர். விழுப்புண்ணடைந்த பின்பும் கூட, போராளிகளைப் பத்திரமாகக் கரையேற்றியவள்.

அல்பாவின் கடற் சமர்க் களங்கள் எப்படி விரிவடைந்தனவோ அதைப் போலத்தான் அவளது ஆளுமைகளும் புத்துயிர்ப்பாகிக் கொண்டிருந்தன. எங்களது கடற்பலத்தையும் யாழ். குடாநாட்டிற்கான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியம்பும் களமாக பருத்தித்துறைக்குயர ‘பிறைற் ஓவ் சவுத்’ என்ற கப்பலை வழிமறிக்கும் சண்டை திட்டமிடப்பட்டது. இங்கும் அல்பா நின்றாள். ஒழுங்காக விழுப்புண் மாறாத நிலையிலும் கூட சண்டை பிடிக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் இந்தக் களமுனைக்கான பயிற்சி ஆரம்பமாகியிருந்த வேளை பெண் போராளிகளின் சூட்டு வலு காணாது என்ற போது அல்பா அப்போராளிகளோடு ஒன்றாகக் கடலிற்குள் போனாள். இரவு பகல் பாராது ஒன்றாய் நின்று அவர்களை குறி தவறாது சூட்டார்களாய் மாற்றும் மட்டும் ஒழுங்காகச் சாப்பிடவோ நித்திரை கொள்ளவோ குளிக்வோ இல்லை. எங்களைப் பற்றி எல்லா நிலைகளிலும் ஒருவரும் குறை கண்டு பிடிக்கக் கூடாது எனச் சொல்லியே அவர்களை உயிரப்பாக்கினாள்.

அல்பாவை நாங்கள் ஒருபோதும் பொறுப்பாளராய் கட்டளை அதிகாரியாய் பார்த்ததேயில்லை. எந்தப் பணியில் என்றாலும் தானும் ஒரு ஆளாய் பங்கெடுத்துக் கொண்டேயிருப்பாள்.

நாள் நேரம் எதற்குயர எத்தனை படகுகள் வழிமறித்து ‘பிறைற் ஒவ் சவுத்’ என்ற கப்பலோடு டோறாவையும் தாக்குவது என்ற திட்டங்களும் விளங்கப்படுத்தப் பட்டு படகுகளும் கடலில் இறக்கப்பட்டாயிற்று. எப்போதும் போலவே அல்பா இங்கு வழிப்பாக இருந்தாள். கண்மை மூடியவாறு படுத்திருக்கும் அல்பா, சாதனங்கள் கூப்பிட்டால் எழும்பிக் கதைப்பாள்.

சண்டை முடிந்து வந்த பின்புதான் தெரிந்தது அவள் நித்திரை கொள்ளவில்லை என்று. அவள் கண்களை மூடிக் கொண்டு எதிரிப் படகை எப்படித் தாக்கியழிப்பது எனறும், எதிரிப் படகை எப்படி வழி நடத்துவது என்பதைப் பற்றியும்தான் யோசித்துக் கொண்டிருந்ததாகக் கூறினாள்.

‘பிறைற் ஒவ் சவுத்’ மயிரிழையில் உயிர் தப்பியது பற்றி அவள் வேதனைப் பட்டாள். டோறா தாண்டது காணாது. அடுதத சண்டையில் இதை விட இன்னும் நிறையச் செய்ய வேணும். இது அவளது கனவு. தான் போய்ப் பிடித்த சண்டைகளின் பிழை சரிகளை ஆராய்ந்து அடுத்த சண்டைக்கு தன்னைத் தயார்படுத்தி விடும் சண்டைக் காரி அவள்.

கடற்புலிகளின் விசேட தளபதி கேணல் சூசை அவர்கள் அல்பாவைப் பற்றி நினைவுப் பதிவினை எடுத்துரைக்கையில்,

“அமுதசுரபியைக் கூப்பிட்டு ஒரு வேலையையோ அல்லது ஒரு பொறுப்பையோ எடுத்து நடத்தும்படி கூறினால், அவரால் செய்ய இயலுமென்றால் உடனே ஓமென்று சொல்லிப் பொறுப்பெடுத்து நடத்துவார். அப்படி அந்த வேலை எதுவும் சிக்கல் என்றால் அதற்கான காரணத்தைக் கூறி அதில் தேர்ச்சியடைந்து விட்டு குறுகிய காலத்தினுள்ளே சொன்ன வேலையைப் பொறுப்பெடுத்து திறமையாகச் செய்வார்.”

எவ்வளவு அற்புதமான செயலுக்குரிய போராளியை நாங்கள் இழந்து விட்டோம் என்ற உணர்வு எப்போதும் நம் மனங்களை அரித்துக் கொண்டேயிருக்கிறது.

வருண கிரண நடவடிக்கையால் பகைவன் கடலை இறுக்கிய காலம். எங்களது கடலாதிக்கத்தை பகைவனுக்கு உணர்த்த நாங்கள் வாய்ப்புப் பார்த்திருந்த வேளை…

கடலிலும் நிறம் மாறி உயரக் கடலேறிய நுரை கக்கிக் கொண்டிருந்த காலம். 23-09-2001 முல்லைக் கடலில் எம் தரப்பு வழித்திருந்தது பகைக்கல நகர்வைக் கண்காணத்தவாறு.

பொருது களம் தொடங்கி சொற்ப பொழுதுகள்… பகைவனின் வலிமை அகன்று கொள்ள, எமது படகிற்குப் பாரிய சேதம். இயந்திரங்கள் வெடிபட்ட அசைய மறுக்க, படகை; கைவிட வேண்டிய நிலை.

எதிரிக்கு படகு என்றால் அது பொருள்தான். ஆனால் அது எங்களுக்கோ உயிர். உணர்வும் சதையும், குருதியுமாய் எம் தோழர், தோழிகள் வாழ்ந்த கருவறை. வாய்ப்பேச்சின்றி எமை அரவணைக்கும் தாய். எப்படி அதை எம் கண்ணெதிரே தீ மூட்ட முடியும். அல்பா துடித்துப் போனாள். எப்பாடு பட்டாவது படகைக் கரைக்குக் கொண்டு போகவேண்டும். எங்களத படகுகளின் எண்ணிக்கையோ ஐந்து விரல்களுக்குள்ளடங்க, அவனது படகோ இரட்டைத் தானத்திலிருந்தது.

மனோதிடம் உருக் கொள்ள அல்பாவின் கட்டளைப் படி அவளது படகோடு செயலிழந்த படகு தொடுக்கப்பட்டு அதை அவள் இழுக்கத் தொடங்கினாள். ஏற்கனவே கடல் நிலைமையோ மோசம். இன்னுமொரு படகைக் கட்டியிழுப்பதால் வேகமோ குறைவு. இமைத்துளியில் அண்மிக்கும் எதிரியின் படகைத் திருப்பித்தாக்க தொடுவையைக் கழற்றிவிட்டு அல்பாவின் படகு சண்டை பிடிக்கப் போய்விடும். தூர உதிரிப்படகு வந்து அந்தப் படகை தொடுக்கத் தொடங்க எதிரி கிட்ட வந்து விடுவான். திரும்பவும் போய் அடித்துவிட்டு வந்து படகை நூறு மீற்றர் தொடுத்துக் கொண்டு வந்த பிறகு கிட்ட வாற எதிரிக்குப் போய் நெருப்படி கொடுத்துவிட்டு வந்த அன்று அவ்வளவு இடர் நிறைந்த களத்தில்க் கூட அல்பா பதற்றப்படவில்லை நிதானமாய் கரைக்கு நிலைப்பாட்டை அறிவித்து, அந்தப் படகை கைவிடாமல் கரைக்கு கொண்டுவந்து சேர்க்கும் இறுதிவரை அவள் நிலை குலையவில்லை.

ஆனால் அவளது மனத்திண்மை எதிரியின் ரவைக்குப் பொறுக்கவில்லைப் போலும். எங்கிருந்தோ வந்த வயிற்றைக் கிழித்து கொண்டு நின்று போனது.

அல்பா இப்போது மருத்துவமனையில். போய் வருபவர்களிடம் எல்லாம் தன் வேதனையைப் புறக்கணித்தவாறு சண்டை நிலைப் பாட்டைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தாள். “படகுகள் எல்லாம் கரைக்கு வந்திட்டுதோ…? படகில் நிக்கிற ஆருக்கும் என்ன பிரச்சினையோ…?” இது தான் அல்பாவின் இறுத்திக் கணங்கள் வரை ஒலித்துக் கொண்டிருந்தது.

மாதம் ஒன்றானது மருத்துவ உலகிற்குச் சவால் விட்டாவாறு அல்பா. நாங்கள் போகும் போது புன்னகை உதிர்க்கும் அல்பாவிற்கு இனி ஒரு பிரச்சினையும் இல்லை என்று நாங்கள் நம்பினோம்.

அவள் காயம் மாறி அவள் இல்லாது நடந்த சண்டையின் சரி பிழைகள் கதைக்க அடுத்த கட்ட மகளீரின் வளர்ச்சி பற்றி திட்டம் போட, புதியவர்களைப்; படகில் ஏற்றுவது பற்றி விதாதிக்க, துணைத் தளபதியாய் பொறுப்பேற்கப் போகும் அல்பாவை வாழ்த்தவென பல மனங்கள் தங்களிற்குள்ளேயே பல சிந்தனைத் துளிகளை வைத்திருக்க எதையும் கேட்காமல், எம் கனவுச் சிறகுகளைப் பிடுங்கியவாறு அந்தச் செய்தி 26-10-2001 அன்று எம் செவிகளுக்குள்ளே அறைந்தது. அல்பா, எங்களது கடற்புலி மகளீர் பிரிவின் வாடை வெள்ளியாய், காலமெல்லாம் பலரை வளர்த்தெடுக்கும் தளபதியாய், ஆளுமையானதொரு கட்டளை அதிகாரியாய் உலாவி எம் சுமைகளுக்குத் தோள் கொடுப்பாயெனக் காந்திருந்த நீயோ கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபியாக எம் மனங்களோடு கலந்து போனாய்.

“அமுதசுரபி” பெயர் தாங்கிய ஒரு சண்டைப் படகு தமிழீழ கடற்புலிகள் அணியில் பல வரலாற்றுச் கடற்சமரில் பங்கு பற்றி பல வெற்றிக்கு வழி வகுத்தன பல வீரரின் தியாகத்துடன்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

https://thesakkatru.com/black-sea-tiger-lieutenant-colonel-amuthasurabi/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2001 ஆக்டொபரில் இந்த செய்தி வந்த போது 
உண்மையிலேயே அதிசயித்து நின்றேன் 

இவாறானதொரு திறமையை உள்ளுக்குள் சுமந்துகொண்டு 
சாதரணமாக எங்கள் வீதிகளில் திரிந்தவர் இவர். எமது அயலூரான செம்பியன்பற்றை 
சேர்ந்தவர் 

வீர வணக்கம்! 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • குற்றம் புரியாதவர்களை பொலிஸ் ஏன் தேடி வரபோறான் கோஷான், சுவிசிலும் பொலிஸ் அடியில் பிரபலமான அரோ, செங்காலன் என்று ஒரு சில கன்ரோனுகள் உண்டு   அடி வெளியில் தெரியாது. பிரான்சில் பொலிஸ் போகமுடியாத அடையார் கறுவல்  ஏரியாவுகளுமுண்டு என்று சொல்வார்கள். அடி பின்ன்னி எடுப்பதில் GIGN   எனப்படும் பிரெஞ்ச் பொலிஸ் பிரிவு பெயர் போனது என்றும் சொல்வார்கள்,    எதுக்கும்  GIGN   கிட்ட அந்தகாலத்தில் தவணை முறையில் கேட்டு வாங்கின நம்ம @விசுகு அண்ணா வந்து விளக்கம் தருவார் என்று நம்புகிறேன்,  சும்மா கலாய்க்கிறேன் டென்ஷன் ஆகுறாரோ தெரியல. இஸ்லாமியர்களுக்கு எதிராக உலகம் முழுவதும் வெறுப்புணர்வு தோன்றியதோ அதேபோல இந்தியர்களுக்கெதிராக மேற்குலகில் தோன்றிக்கொண்டிருக்கிறது. இந்த இரு சமூகமும் ஓரிடத்தில் தமது எண்ணிக்கை அதிகமானால் புறசூழல்பற்றி எதுவும் சிந்திக்காது ஒரு நாட்டிற்குள்  தமக்கென்று ஒரு தனிநாடு உருவாக்குவார்கள். அமெரிக்கா கனடாவில் எப்போதோ தோன்றிவிட்டது. இந்தியர்கள் பெரும்பான்மையான இடத்தில் இஸ்லாமியர்களைபோலவே அவர்கள் ஆட்களை தவிர வேறு எவருக்கும் வேலை கொடுக்கமாட்டார்கள் பகுதிநேர வேலைக்குகூட  எடுக்க மாட்டார்கள்,  அதனால் வெள்ளைக்காரர்கள்கூட வேலை வாய்ப்பு பெறமுடியாமல் நடுத்தெருவுக்கு வந்துவிட்டதுதான் சோகம். இந்த சம்பவங்கள் மட்டுமல்ல இந்தியாவில் புளூ பிலிமைபார்த்துவிட்டு  இங்கு வந்து வெள்ளைக்காரிகள் என்றால் எல்லோருமே படுக்கைக்கு உரியவர்கள் என்பதுபோல் நடந்து கொள்வது அவர்களை பார்த்து ஹிந்தி பாட்டு பாடுவது, சில வருடங்களின் முன்பு பாதாள ரயிலில்பயணம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது, எதிரே ஒரு வெள்ளைக்காரி அமைதியாக  புத்தகம் படித்துக்கொண்டிருந்தார் பார்த்தாலே ஏதோபெரிய உத்தியோகத்திலிருப்பதுபோல் தெரிந்தது, சைட் சீட்டில் இருந்த இந்தியர் அவளையே பார்த்துக்கொண்டிருந்தார் அவ கவனிக்கவே இல்லை ,  திடீரென்று எழுந்து நேரம் என்னமேடம் என்று கேட்டார் அவரும் சிரித்தபடியே சொன்னார் ,இத்தனைக்கும் அவனிடமும் போன் இருந்திருக்கும், ரயில் ஒரு ஸ்டேஷனில் நின்றபோது தேங்க்யூ மேடம் என்று சொல்லிட்டு அந்த பெண்ணின் தலையை பிடித்து உதட்டில் அழுத்தி கிஸ் பண்ணிட்டு இறங்கி போனான். கதவை பூட்டிட்டு ரயில் கிளம்பிவிட்டது அந்தபெண் அப்படியே நிலை குலைந்து போனார் இயல்புக்கு வரவில்லை , ரிசு எடுத்து வாயை துடைத்துக்கொண்டே இருந்தார். அடுத்த ஸ்டேஷன் வந்ததும் நான் ஜம்ப் பண்ணி அடுத்த பெட்டியில ஏறிட்டன், அவனில உள்ள கோபத்தில் எனக்கு ஒரு காட்டு காட்டிவிட்டால் என்னாகும் மானம்?   
    • மக்களுக்கு அரசியலில் ஈடுபாடு குறைவடைந்து விட்டது – பெப்ரல் பொதுத் தேர்தலில் 8888 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதிலும் ஆயிரத்திற்கும் குறைவான வேட்பாளர்களே தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர் என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளார் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இது அரசியல் ஈடுபாடு குறைவடைந்துள்ளதை வெளிப்படுத்துவதோடு, மக்களிற்கு அரசியல் ஈடுபாடு குறைவடைவதை காண்பிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களின் அபிப்பிராயங்கள் மாற்றமடைந்துள்ளமையும், பாராம்பரிய கட்சி கட்டமைப்பு குறித்த அதிருப்தியும் இதற்கு காரணம் என ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். வழமையாக வாக்காளர்களை உள்வாங்குவதற்காக 6,00,000 கட்சி அலுவலகங்களை அமைப்பார்கள், ஆனால் இம்முறை 9241 கட்சி அலுவலகங்களே இயங்குகின்றன என அவர் தெரிவித்துள்ளார். பொதுச் சொத்துக்கள் துஸ்பிரயோகம் போன்றவை தற்போதும் காணப்படுகின்ற போதிலும் ஆபத்தான கட்டத்தை அவை நெருங்கவில்லை, 25 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன அவை ஆபத்தான கட்டத்தை அடையவில்லை என குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1407705
    • கிழக்கை மண்ணை காப்பாற்றுவதற்காக மக்களுடன் இனைந்து கடந்த 15 வருடமாக  போராடிவருகின்றோம். எனவே கிழக்கு மாகாணத்தை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் வடக்கில் இருக்கின்ற தமிழ் மக்கள் சைக்கிளுக்கு வாக்களிக்க வேண்டும். அப்போது தான் கிழக்கை காப்பாற்ற முடியும் என இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் கட்சியின் தேசிய அமைப்பாள் தர்மலிங்கம் சுரேஸ் கிழக்கு மண்ணிலிருந்து அறைகூவல் விடுத்துள்ளார். மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை சந்தியில் புதன்கிழமை(06) மாலை சைக்கிள் சின்னதில் தேர்தல் பிரச்சாரத்துக்கான கட்சி காரியாலயம் திறந்துவைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு அறைகூவல் விடுத்தார்.   இந்த தேர்தலை இதுவரைக்கும் நடந்த தேர்தல்போல எங்கள் மக்கள் கையாளக் கூடாது என ஆரம்பத்திலிருந்தே தெரிவித்துவருகின்றோம். இந்த தேர்தல் தமிழ் மக்களுக்குப் பேரம் பேசக்கூடிய இறுதி சந்தர்ப்பமாக அமையப் போகின்ற இந்த தேர்தலுக்குப் பின்னர் தமிழ் மக்களுடைய வாழ்வு  இந்த தீவிலே ஒரு அடிமைத்தனமாக இருக்கப் போகின்றதா? அல்லது சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் சம உரிமையோடு வாழப்போகின்றோமா? என்ற ஒரு கேள்வி எழுப்புகின்ற ஒரு தேர்தல் அமையப் பெற்றிருக்கின்றது. தமிழர்களை பொறுத்தமட்டில் தமிழர்கள் ஒரு நீண்ட நெடிய வரலாற்று ரீதியாகப் போராடி ஒரு மரபுவழியாக தமக்கான ஒரு தனித்துவத்தை பெற்றிருக்கும் ஒரு இனம் அதனடிப்படையில் தமிழர்கள் இந்த தீவிலே சுதந்திரமாக வாழ்வதற்காக அதிக விலை கொடுத்துள்ளனர், உயிர்களைத் தியாகம் செய்துள்ளனர், கோடான கோடி சொத்துக்களை இழந்துள்ளனர் நிலங்களைப் பறிகொடுத்துக் கட்டமைக்கப்பட்ட இனழிப்புக்கு உட்பட்டு வருகின்றனர். எனவே மக்கள் இந்த தேர்தல் தொடர்பாக மிகுந்த ஆர்வத்துடனும் கரிசனையுடனும் கையாளவேண்டும். வடக்கு கிழக்கிலே சைக்கிள் அணி மிகப் பெரும் பலமாக வந்து கொண்டிருக்கின்றது. தென்பகுதியை பொறுத்தமட்டில் ஒரு ஊழல் அற்ற நேர்மையான ஒரு அரச தலைவராக அனுரகுமார திசாநாயக்காவை  ஜனாதிபதியாக அந்த மக்கள் தெரிவு செய்துள்ளனர். ஆனால் வடகிழக்கிலே அவ்வாறான ஒரு தலைவரை இதுவரைக்கும் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை ஆனால் இந்த தேர்தல் அந்த சந்தர்ப்பத்தை மக்களுக்குக் கொடுத்திருக்கின்றது. தமிழ் மக்களின் உரிமைகளைச் சர்வதேச மட்டத்தில் பெற்றுக் கொடுப்போம்  அதற்கு தலமைதாங்க வேண்டும் என்ற அடிப்படையிலே தமிழர்கள் நம்பி யுத்தத்தின் பின்னர் மூன்று தடவைகள் வாக்களித்து அறுதி பெரும்பான்மையான ஆணைகளைப் பெற்று தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட இனழிப்புக்கு சந்தர்பம் கிடைக்கின்ற போதெல்லாம் அதனைத் தட்டிக்களித்து எந்தவொரு தீர்வையும் பெற்றுக் கொடுக்காது தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்ததை தவிர வேறு எந்தவொரு வேலையையும் இந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் செய்யவில்லை. அதனால் நாங்கள் கடந்த 15 வருடங்களாக தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் வடகிழக்கிலே நடைபெறுகின்ற கட்டமைப்புசார் இடம்பெறும் இன அழிப்பை மக்களுடன் இணைந்து தடுத்து நிறுத்தி வருகின்றோம் அப்படிப்பட்ட எங்கள் தலைமைக்கும் அணிக்கும் ஒரு தடவை இந்த தேர்தலில் சந்தர்ப்பம் தாருங்கள். எந்த நோக்கத்தோடு எங்களைச் சிங்கள தேசம் அழித்ததோ அதற்கான பரிகாரத்தை நாங்கள் நாடாளுமன்றத்தில் பேரம் பேசி .நா. மனித உரிமை இனழிப்பு தொடர்பான பொறுப்புக்கூறலை சரியான இடத்துக்கு கொண்டு செல்ல ஆணையை தாருங்கள் மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்காகச் செயற்படுகின்ற சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் இந்த அணியைப் பலப்படுத்தப் போகின்றீர்களா? இல்லை வழமைபோன்று சாராயம் அரிசி மாவுக்கும் வெறும் சலுகைகளுக்கும் நீங்கள் வாக்களித்து இனிமேல் உரிமை என்றால் என்ன என்று கேட்கமுடியாத ஒரு நிலைக்கு இட்டுச் சென்று நிரந்தரமாகத் தமிழர்கள் அடிமையாகப் போகின்றோமா? என்ற கேள்வியைப் பெருவாரியான மக்கள் விளங்கி வடக்கிலும் கிழக்கிலும் சைக்கிள் அணிக்குப் பின்னால் நகர்ந்து கொண்டிருக்கின்றனர். கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களை பாதுகாப்பதற்காக தொடர்ச்சியாக கடந்த 15 வருடங்களாக இந்த மண்ணில் இருந்து போராடி செயற்பட்டு வருகின்றோம் கிழக்கில் மக்கள் நிச்சயமாக ஆணையை தரும் அதேவேளை வடக்கில்; எங்கள் கட்சி மீது மக்கள் திசை திரும்பியுள்ளனர் அதனால் ஏனைய சிங்கள கட்சிகளும் அவர்களுடன் சோந்திருக்கின்ற கட்சிகளும் குழப்புவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்திலே கூடியளவு சாராயம் மற்றும் பணங்களையும் கொடுத்து இந்த மக்களை திசைதிருப்புவதற்கான வேலைத் திட்டங்களை செய்கின்றனர். வீடு, சங்கு, சின்னத்திலே போட்டியிடுகின்ற அந்த அரசியல்கட்சிகளின் கடந்தகால செயற்பாடு பற்றி எங்கள் மக்களுக்கு சொல்லவேண்டிய அவசியம் கிடையாது பிறிந்து செயற்படும் அத்தனை பேரும் இந்த இனத்தை அழிப்பதற்காக 2015ம் ஆண்டு ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கான இடைக்கால யாப்பை உருவாக்கி வைத்துள்ளனர் எனவே  இந்த மண்ணிலே தமிழ் மக்கள் நிம்மதியாக சிங்கள மக்கள் போன்று ஒரு சுபீட்சத்துடன் வாழவேண்டும் என்றால் இந்த தேர்தலை பயன்படுத்த வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/198140
    • மக்களுக்கு அரசியலில் ஈடுபாடு குறைவடைந்து விட்டது – பெப்ரல். பொதுத் தேர்தலில் 8888 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதிலும் ஆயிரத்திற்கும் குறைவான வேட்பாளர்களே தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர் என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளார் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இது அரசியல் ஈடுபாடு குறைவடைந்துள்ளதை வெளிப்படுத்துவதோடு, மக்களிற்கு அரசியல் ஈடுபாடு குறைவடைவதை காண்பிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களின் அபிப்பிராயங்கள் மாற்றமடைந்துள்ளமையும், பாராம்பரிய கட்சி கட்டமைப்பு குறித்த அதிருப்தியும் இதற்கு காரணம் என ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். வழமையாக வாக்காளர்களை உள்வாங்குவதற்காக 6,00,000 கட்சி அலுவலகங்களை அமைப்பார்கள், ஆனால் இம்முறை 9241 கட்சி அலுவலகங்களே இயங்குகின்றன என அவர் தெரிவித்துள்ளார். பொதுச் சொத்துக்கள் துஸ்பிரயோகம் போன்றவை தற்போதும் காணப்படுகின்ற போதிலும் ஆபத்தான கட்டத்தை அவை நெருங்கவில்லை, 25 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன அவை ஆபத்தான கட்டத்தை அடையவில்லை என குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1407705
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.