Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீபாவளி பற்றி சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளடக்கம்:-  தீபாவளி ஏன் கொண்டாடுகின்றோம் என தெரியாமல் கொண்டாடும் இழிவான இனம். மனிதனின் மரணத்தை எப்படி கொண்டாட முடிகின்றது. உழைக்காமல் சோறு திண்ட தேவர்களை அடைத்து வைத்தான். பாயில் நின்று கிட்டு பாயை சுருட்ட முடியுமா?

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளடக்கம்: "தீபாவளி" தமிழர் பண்டிகையா.!?நரகாசுரன் தமிழன்.! கலையரசி நடராசன்

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு வருஷமும் தீபாவளி வரும்போது இது தமிழர் பண்டிகை இல்லை என்று சொல்வது வழக்கம். இதை பெரியார் காலத்தில் இருந்து அவர் பாசறையில் வளர்ந்தவர்கள் (அண்ணன் சீமானும் பெரியாரின் கொள்கைகளுக்குப் பின்னால் போனவர்தான்) சொன்னாலும் மக்கள் பெரிதுபடுத்துவதில்லை.

வெடி கொளுத்துவதும், புத்தாடை அணிவதும், புதுப் படம் பார்ப்பதும், ஆடுவெட்டி, குடித்து வெறித்து மகிழ்வதும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. முகப்புத்தகம், வாட்ஸப் உள்ள இந்தக் காலத்தில் தீபாவளி வாழ்த்துக்கள் வந்துகொண்டே இருக்கின்றன. மக்களின் பண்பாட்டை மாற்றமுடியாதபோது, அது பிற்போக்காக இல்லாமல் மற்றவர்களுக்கு தீங்காக இல்லாமல் இருக்கும்போது அதனை ஏற்றுக்கொள்வதுதான் பொதுமக்களை மதிக்கும் செயல். 

——

தீ நாள்! : பெரியார்

 


spacer.png

என்றைக்கோ ஒரு காலத்தில் ஒரு அசுரன் இருந்தானாம். அந்த அசுரன் ஒரு பன்றிக்கும் பூமிக்கும் பிறந்தவனாம். இந்த விசித்திரப் பிறவியான அசுரன் தேவர்களை – பூலோகப் பிராமணர்களை எல்லாம் கொடுமைப்படுத்தினானாம். இதனால் தன் பெண்சாதியின் சகாயத்தைக் கொண்டு மகாவிஷ்ணுவானவர் அந்த அசுரனைக் கொன்றொழித்தாராம்.

செத்துப் போனதைப் பூலோக மக்கள் எல்லாரும் கொண்டாடிக் களிப்படைய வேண்டுமென்று செத்துப்போன அந்த அசுரன் கேட்டுக் கொண்டானாம். அந்தப்படியே ஆகட்டும் என்று மகாவிஷ்ணு திருவாய் மலர்ந்தாராம். ஆகவேதான் தீபாவளிப் பண்டிகையை நாம் கொண்டாடுகிறோம்; கொண்டாட வேண்டும் என்று இன்றைக்கும் சொல்லப்பட்டு வருகிறது.

தீபாவளி பண்டிகைக்கு ஆதாரமான இந்தக் கதையின் பொய்த் தன்மையையும், இதனால் இந்த நாட்டு மக்களுடைய மானம் – சுயமரியாதை எவ்வாறு அழிக்கப்பட்டு வருகின்றன என்பதையும், இந்த அர்த்தமற்ற பண்டிகையால் நாட்டுக்கு எவ்வளவு பொருளாதாரக்கேடும் சுகாதாரக்கேடும் உண்டாகிறது என்பதைப் பற்றியும் சுயமரியாதை இயக்கம் தோன்றிய நாளிலிருந்தே விளக்கப்பட்டு வருகிறது.

சுயமரியாதைக்காரர்கள் – திராவிடர் கழகத்தார்களுடைய இந்த விளக்கம், தவறானது என்றோ, நியாயமற்றதென்றோ, உண்மைக்கு அப்பாற்றட்டதென்றோ எப்படிப்பட்ட ஒரு பார்ப்பனன் கூட இன்றுவரை மறுத்தது கிடையாது. ஆனால் எல்லாப் பார்ப்பனர்களும் கொண்டாடத்தான் செய்கிறார்கள். பார்ப்பனர் அல்லாதவர்களிலும் பலர் கொண்டாடத்தான் செய்கிறார்கள். ஏன்?

பூமியைப் பாயைப்போல் சுருட்டி எடுத்துக்கொண்டு கடலுக்குள் ஒருவன் நுழைந்துகொள்ள முடியும் என்பதை எந்தப் பஞ்சாங்கப் புரோகிதன்கூட ஏற்றுக்கொள்ளமாட்டான். ஆனால் பஞ்சாங்க நம்பிக்கையுடையவன் மட்டுமல்ல, பஞ்சாங்கத்தையே பார்க்காத – நம்பாத பார்ப்பனரிலிருந்து பூகோளத்தைப் பற்றிப் போதனைசெய்யும் பேராசிரியர்கள் வரை கொண்டாடி வருகிறார்களே ஏன்?

மகாவிஷ்ணு (?) பன்றியாக வேஷம் போட்டுக் கொண்டுதான் கடலுக்குள் நுழைய முடியும்! சுருட்டியிருந்த பூமியை அணைத்து தூக்கிவரும் போதே மகாவிஷ்ணுக்கு காமவெறி தலைக்கேறி விடும்! அதன் பலனாக ஒரு குழந்தையும் தோன்றிவிடும்! அப்படிப் பிறந்த குழந்தை ஒரு கொடிய அசுரனாக விளங்கும்! என்கிற கதையை நம் இந்துஸ்தானத்தின் மூலவிக்கிரகமான ஆச்சாரியாரிலிருந்து ஒரு புளியோதரைப் பெருமாள் வரை யாருமே நம்பமாட்டார்கள் – நம்ப முடியாது.

ஆனால் இப்படி நம்பாத விஷ்ணு பக்தர்கள் முதல், விஷ்ணுவுக்கு எதிர் முகாமிலுள்ளவர்கள் வரை இந்த நாட்டில் கொண்டாடி வருகிறார்கள். ஏன்? சுயமரியாதை இயக்கத்தின் தீவிரப் பிரசாரத்தினால், இன்று திராவிட நாட்டிலுள்ள பல ஆயிரக்கணக்கான திராவிடத் தோழர்கள் இந்த மானமொழிப்புப் பண்டிகையைக் கொண்டாடுவதில்லை என்றாலும், படித்தவன் – பட்டதாரி – அரசியல் தந்திரி – மேடைச் சீர்திருத்தவாதி என்பவர்களிலேயே மிகப் பலபேர் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றார்கள் என்றால், இந்த அறிவுக்குப் பொருத்தமற்ற கதையை ஆதாரமாகக் கொள்கிறார்கள் என்றால் இவர்களுடைய அறிவுக்கும் அனுபவத்துக்கும் யார்தான் வயிற்றெரிச்சல்படாமல் இருக்கமுடியும்? ஆரியப் பார்ப்பனர்கள், தங்களுக்கு விரோதமான இந்நாட்டுப் பழங்குடி மக்களை – மக்களின் தலைவர்களை அசுரர்கள் – அரக்கர்கள் என்கிற சொற்களால் குறிப்பிட்டார்கள் என்பதையும், அப்படிப்பட்ட தலைவர்களுடைய பிறப்புகளை மிக மிக ஆபாசமாக இருக்கவேண்டும் என்கிற ஒன்றையே கருத்தில் கொண்டு புழுத்துப்போன போக்கினின்றெல்லாம் எழுதிவைத்தார்கள் என்பதையும், இந்த நாட்டுச் சரித்திரத்தை எழுதிவந்த பேராசிரியர்களில் பெரும்பாலோரால் நல்ல முறையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இருந்தும் அந்த உண்மைகள் எல்லாம் மறைக்கப்பட்டுப்போக, இந்த நாட்டு அரசாங்கமும் – அதன் பாதுகாவலரான தேசியப் பார்ப்பனர்களும் இன்றைக்கும் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்கிறார்கள் என்றால் அதை எப்படித் தவறு என்று சொல்லிவிட முடியும்? திராவிடப் பேரரசன் (வங்காளத்தைச் சேர்ந்த பிராக ஜோதிஷம் என்ற நகரில் இருந்து ஆண்டவன்) ஒருவனை, ஆரியர் தலைவனான ஒருவன், வஞ்சனையால், ஒரு பெண்ணின் துணையைக் கொண்டு கொன்றொழித்த கதைதான் தீபாவளி.

இதை மறைக்கவோ மறுக்கவோ எவரும் முன்வர முடியாது. திராவிட முன்னோர்களில் ஒருவன், ஆரியப் பகைவனால் அழிக்கப்பட்டதை, அதுவும் விடியற்காலை 4 மணி அளவுக்கு நடந்த போரில் (!) கொல்லப்பட்டதை அவன் வம்சத்தில் தோன்றிய மற்றவர்கள் கொண்டாடுவதா? அதற்காக துக்கப்படுவதா?

திராவிடர் இன உணர்ச்சியைத் தொலைக்க, ஆரிய முன்னோர்கள் கட்டிய கதையை நம்பிக்கொண்டு, இன்றைக்கும் நம்மைத் தேவடியாள் பிள்ளைகள் எனக் கருதும் பார்ப்பனர்கள் கொண்டாடுவதிலாவது ஏதேனும் அர்த்தமிருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும், மானமுள்ள திராவிடன் எவனாவது இந்த பண்டிகையைக் கொண்டாடலாமா? என்று கேட்கிறோம்.

தோழர்களே! தீபாவளி திராவிடனின் மானத்தைச் சூறையாடத் திராவிடனின் அறிவை அழிக்கத் திட்டமிடப்பட்ட தீ நாள்! இந்தத் தீ நாள் திராவிடனின் நல்வாழ்வுக்குத் தீ நாள். இந்தத் தீயநாளில் நீங்கள் செய்ய வேண்டிய வேலை என்ன? தன் தலையில் தானே மண்ணையள்ளிப் போட்டுக் கொள்வதா? யோசியுங்கள்!

– குடிஅரசு –15.10.1949
 

http://inioru.com/periyaar-on-deepavali/

  • கருத்துக்கள உறவுகள்

வருடா வருடம் இதே ரோதனையாப் போட்டுது.எல்லா மதம் சார்ந்த மற்றும் மதம சாரா பண்டிகைகளும் வியாபாரம் சம்பந்தமானவையே.மனப்பாரத்தை குறைக்க பண்டிகை விழாக்ள் உதவும்.(சிலருக்கு ஏறும்)😄

  • கருத்துக்கள உறவுகள்

தீபாவளியும் தமிழர்களும்
====================


எனது சிறுவயதில் ஒவ்வொரு வருடமும் மகிழ்ச்சியாகக் கொண்டாடும் நாட்களுள் தீபாவளியும் ஒன்று. அந்த நாட்களில் பல சாதாரண, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில், பிள்ளைகளுக்குப் புதுவருட நாளின் பின்னர் புது உடுப்பு கிடைக்கும் நாள் தீபாவளியாகும். ஆனாலும் நான்  வளரும்போது தீபாவளி கொண்டாடுவது தொடர்பான சர்ச்சையும் நான் வாழும் சூழலில் வளர்ந்தது. நாட்கள் செல்லச் செல்ல, இது தமிழ் மன்னன் நரகாசுரனை ஆரியர் கொன்ற நாள். நாமே அதைக் கொண்டாடுவது முட்டாள்தனமானது என்ற வாதம் வலுபெற்றது. 

ஆனாலும் பொதுவாக அஞ்ஞான இருள் அகன்று அறிவொளி பரப்பும் நாள், தீமை அழிந்து நன்மை உருவாகும் நாள் என்ற குறியீடாக தீபங்கள் ஏற்றி வழிபடும் நாள் என்றே தீபாவளி குறிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனாலும் தீபாவளி கொண்டாடப்படுவதற்கு தமிழர்கள் மத்தியில் ஒரு புராண கதையும் இந்தியாவில் பல பகுதிகளிலும் பல கதைகளும் சொல்லப்படுகின்றன. 

1. தமிழர்கள் மத்தியில் நரகாசுரனை விஷ்ணு சங்காரம் செய்த நாள் என்று சொல்லப்படுகிறது.
2. வடஇந்தியாவில், இராமன் இலங்கையிலிருந்து அயோத்தி திரும்பிய நாள் என்று கொண்டாடப்படுகிறது. 
3. அதேநேரத்தில் ஆசீவகத்தின் (தமிழ் மெய்யியல் கொள்கையும் துறவு வாழ்க்கையும்) நம்பிக்கையில் தீபாவளி இராவணனை வழியனுப்பும் நாள் என்றும் சொல்லப்படுகிறது. 
4. மகாவீரர் நிர்வாணம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து,  இத்தினத்தைச் இந்தியாவின் வடக்கில் சமணர்கள் கொண்டாடுகின்றனர் (ஜைன சமயம்). மாவீரர் கி.மு. 500 ஆண்டளவில் வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
5. கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதாரகௌரி விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று 'அர்த்தநாரீசுவரர்' உருவமெடுத்த நாள் என்று சொல்லப்படுகிறது.
6. 1577-இல் இத்தினத்தில், பொற்கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர். அவர்களுடைய ஆறாவது குருவான குரு. கர்கோபிந்தும் 52  இளவல்களும் 1619 ம் ஆண்டு விடுவிக்கப்பட்டபோது பொற்கோவிலில் தீபமேற்றி வழிபட்டதாகவும் அந்தப் பாரம்பரியம் இன்றுவரை தொடர்வதாகச் சொல்லப்படுகிறது. 

இவ்வாறாக இந்தியாவின் பல பகுதிகளிலும் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. அதே நேரத்தில் வட இந்தியாவில் கொண்டாடப்படும் அளவிற்கு தென்னிந்தியாவில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை. ஆனால் தெலுங்கானாவில் (ஹைதராபாத்) தீபாவளி அதிகம் கொண்டாடப்படுகிறது. மேற்கு வங்கம், கல்கத்தாவில் தீபாவளி காலத்தில் காளி வழிபாடே முன்னுரிமை பெறுகிறது.

இனி சர்ச்சையாக பேசும் விடயத்துக்கு வருவோம். இன்று பல தமிழ் உணர்வாளர்கள் ஆரியர்கள் தமிழ் மன்னனான நரகாசுரனைக் கொன்ற நாளை தந்திரமாக தமிழர்களே கொண்டாட வைத்துவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள்.  இதற்கு ஆதாரமாக இவர்கள் சொல்வது விஷ்ணு – நரகாசுரன் கதையைத்தான். 

இந்து சமயத்தில் அறநெறிகளைக் கற்பிக்க கற்பனையான புராணக் கதைகளைச் சொல்வதுண்டு. இந்தக் கதை உண்மையென்றே வைத்துக் கொண்டாலும், கதையின்படி விஷ்ணுவுக்கும் அவரது இரண்டு மனைவியருள் ஒருவரான பூமாதேவிக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த பிள்ளைதான் பவுமன் (பலமானவன்). அவனது தீய நடத்தையினாலேயே நரகாசுரன் என்று அழைக்கப்பட்டான். தன் தாயால் மட்டுமே கொல்லப்பட வரம் பெற்றதால், பூமாதேவி சத்தியபாமாவாகவும்  விஷ்ணு கிருஷ்ணராகவும் பிறந்து, அந்தப் பிறப்பில் நரகாசுரன் அவனது பெற்றோரால் கொல்லப்படுகிறான். இதுதான் கதை. 

இந்தக் கதையின்படி பார்த்தாலும் எப்படி தாய், தந்தை ஆரியராகவும் பிள்ளை திராவிடனாகவும் இருந்திருக்க முடியும்? அதைத்தவிர, பூனைக்கண், வெள்ளைத்தோல் அற்ற கரிய நிறக் கிருஷ்ணன் எப்படி ஆரியனானான்? நரகாசுரன் திராவிடனா இல்லையா என்பதற்கும், அவன் தமிழன் என்பதற்கும் இவர்கள் முன்வைக்கும் ஆதாரம் என்ன?

அடுத்ததாக, இவர்கள் முன்வைப்பது தீபாவளியைத் தமிழர்கள் கொண்டாடியதில்லை, இப்போது ஏன் கொண்டாட வேண்டும் என்ற கருத்து.

சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்ட தென்னகத்தில் ஆரம்ப காலத்தில் சைவ சமயமே செழித்தோங்கியிருந்தது. அதேபோல முருகன் வழிபாடும் தென்னிந்தியாவில் வலுவாக இருந்துள்ளது. அதேநேரம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் தோற்றம் பெற்ற சமண சமயமும் தமிழகத்தில் பரவியிருந்தது. சைவ, வைணவ சண்டைகளும் நடைபெற்று வந்தது. சமணத்திற்கு எதிரான சைவ நாயன்மார்களின் எதிர்ப்பும் இருந்த காலம் இது. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங்கரர், சைவம், வைணவம், சாக்தம், காணபத்தியம், சௌரம், கௌமாரம் ஆகிய ஆறு பிரிவுகளை இணைத்து ஒரு குடைக்கீழ் கொண்டு வந்தார்.

வைணவ, சக்தி வழிபாடுகளில் ஈடுபட்டவர்கள் அதனோடு இணைந்த தீபாவளியை, அந்த காலங்களில் கொண்டாடியிருக்க சந்தர்ப்பம் உள்ளது. ஆனால் மன்னர்கள் அதிகம் பின்பற்றிய சைவ சமயத்துக்கு கொடுத்த முக்கியத்துவம் இந்த இரண்டு சமயங்களுக்கும் கொடுபடாது இருந்திருக்கலாம். அக்காலப் பகுதியில் தீபாவளி கொண்டாடியதற்கான சான்றுகள் இல்லாதபோதும், கி.பி.16ஆம் நூற்றாணடு முதல் கோயில்களில் தீபாவளி விழா கொண்டாடப்பட்டு வருவதற்கான சான்றுகள் திருப்பதி திருமலை வேங்கடவன் கோயிலில் உள்ள ஒரு தமிழ்க் கல்வெட்டிலும், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு செப்பேட்டிலும் காணப்படுகின்றன. 

இந்தக் காலப் பகுதியில்தான் தமிழ்நாட்டின் பெரும்பகுதி விஜயநகர பேரரசின்  ஆட்சியின்கீழ் இருந்தது. விஜயநகர பேரரசு தோற்றம் பெற்ற தெலுங்கு பிரதேசத்தில் காளியை முன்னிறுத்தி தீபாவளி மிக நீண்ட காலமாக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. இன்று தெலுங்கு தேசம் என்று சொல்லப்படும் அன்றைய கீழைச் சாளுக்கிய தேசம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பெரும் அதிகாரத்துடன் ஆண்ட சோழர்களுடன் நட்புடன் இருந்தவர்கள், அதேநேரம் சோழர்களுடன் திருமண உறவும் வைத்திருந்தவர்கள் என்பதை இங்கு குறிப்பிடலாம். 

எமது முப்பாட்டன் முருகன் என்று சொல்லி பெருமைப்படும் தமிழர் முருகனால் கொல்லப்பட்ட சூரபத்மனை அசுரன் என்கிறார்கள். அது உண்மையென்றால் தமிழ் கடவுள் முருகனால் கொல்லப்பட்ட அசுரனான சூரன் தமிழனாக இருக்க முடியாது. சூரபத்மன் அசுரன்தான், தமிழன் இல்லையென்றால், இன்னொரு அசுரனான நரகாசுரனும் தமிழனாக இருக்க முடியாது. 

புராண கதைகளின்படியும் நரகாசுரன் அஸ்ஸாம் பகுதியில் இருந்ததாக நம்பப்படுகிறது. அப்படியானால், இன்றும் அஸ்ஸாமில் உள்ள பழங்குடியினர் தமிழ் பேச வேண்டுமே? ஏன் பேசுவதில்லை?

உண்மையில் தீபாவளியை நாங்கள் கொண்டாடக்கூடாது என்று சொல்லுவதற்கு வலுவான வரலாற்று சான்று இவர்களிடம் இல்லை. எல்லாமே வெறும் வார்த்தையாடல் மூலமான விவாதங்கள்தான். தகுந்த ஆதாரங்கள் கிடைக்கும்வரை இந்த விவாதமும் ஓயப்போவதில்லை.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, மக்கள் இன்னமும் தீபாவளியை தமது பாரம்பரிய முறைகளிலும், சிறிது நவீனம் கலந்தும் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள், இனியும் கொண்டாடுவார்கள். உழைத்துக், களைத்து, சலித்த மனிதர்களுக்கு புத்துணர்ச்சி கொடுப்பதே இவ்வாறான கொண்டாட்டங்கள்தான். 

உறுதிப்படுத்தாத தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எதற்காக தமிழ் மக்களின் சின்னச் சின்ன சந்தோசங்களில் கல்லெறிய வேண்டும். விரும்பினால் நரகாசுரன் கதையைத் தூக்கிவிட்டு “அஞ்ஞான இருள் அகன்று அறிவொளி பரப்பும் நாள், தீமை அழிந்து நன்மை உருவாகும் நாள் என்ற குறியீடாக தீபங்கள் ஏற்றி வழிபடும் நாள் தீபாவளி” என்று சொல்லிக் கொடுங்கள். 

இறுதியாக ஒரு கேள்வி: தீயவனாக மாறிய மகனையே கொன்று மக்களைக் காப்பாற்றிய நாள் என்பது ஒரு சமூக நீதியைச் சொல்லும் கதைதானே?
 

https://www.facebook.com/101881847986243/posts/214816616692765/?d=n

 

  • கருத்துக்கள உறவுகள்

வில்லன்களை கதாநாயகர்களாகப் போற்றும் கலிகாலமிது! எனவே கற்பனையானாலும் அசுரனுக்கு ஆதரவாக குரல் எழுவது ஆச்சரியமில்லை!
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Justin said:

வில்லன்களை கதாநாயகர்களாகப் போற்றும் கலிகாலமிது! எனவே கற்பனையானாலும் அசுரனுக்கு ஆதரவாக குரல் எழுவது ஆச்சரியமில்லை!
 

சாத்தான்களை தெய்வமாக வணங்கும் காலத்தில் தானே வாழ்கின்றோம்-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.