Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மட்டக்களப்பு மக்கள் கூட்டமைப்புக்கு அளித்த வாக்குகள் வீண் – வியாழேந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு மக்கள் கூட்டமைப்புக்கு அளித்த வாக்குகள் வீண் – வியாழேந்திரன்

மட்டக்களப்பு மாவட்ட மக்களால் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்பட வாக்குகள் வீண் வாக்குகள். அவர்களால் நூற்றுக்கணக்கானவர்களின் வேலைவாய்ப்புக்கள் இல்லாமல் போய்யுள்ளது, பலரின் அடுப்பு எரியும் நிலமை இல்லாமல் போயுள்ளது என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவிதுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலைக் கிராமத்தில் அவரது ஏறாவூர்பற்றுக்கான காரியாலயத் திறந்து விழா (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு காரியாலயத்தை திறந்து வைத்து கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ”எமது பிறப்பின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் என்றால் நமக்கு முன்னால்  400 போர் எழுந்துநின்று மாலைபோடுவதும், கைதட்டுவதுமல்ல எம்மால் 4 போர் வாழ்ந்தார்களா என்பதாகத்தான் இருக்க வேண்டும்.  எனவே எமக்கு மக்கள் தந்துள்ள ஆணையினால் 400 பேரல்ல 4000 இத்திற்கு மேற்பட்டவர்களை வாழ வைப்பதற்கான வேலைத்திட்டங்களை நாங்கள் தற்போது முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

கிழக்கு மாகாணத்தில் எமது மக்களின் அரசில் இருப்பை உறுத்திப்படுத்துவதற்காக மக்களின் நில, வளம், பொருளாதாரம், கல்வி, விளையாட்டு, போன்ற  துறைகள் கட்டியெழுப்பப்படல் வேண்டும். சமத்துவத்துடன் ஏனைய சமூகங்களுக்கு நிகராக எமது சமூகம் தலை நிமிர்ந்து வாழவேண்டும்.  யாருக்கும் கைகட்டி, தலைகுநிந்து வாழக்கூடாது என்பதுதான் எமது அடிப்படை நோக்கமாகும்.

அதற்காகவேண்டி எமது மக்களுக்கு உரிமையுடன் சார்ந்த அரசியலைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். நானும் எதிர்க்கட்சியில் இருந்து செயற்பட்டவர் கடந்த நான்கரை வருடத்தில 20 பேருக்குக்கூட எங்களால் வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுக்க முடியவில்லை.

மட்டக்களப்பு மாவட்ட மக்களால் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்பட வாக்குகள் வீண் வாக்குகள். அவர்களால் நூற்றுக்கணக்கானவர்களின் வேலைவாய்ப்புக்கள் இல்லாமல் போய்யுள்ளது, பலரின் அடுப்பு எரியும் நிலமை இல்லாமல் போயுள்ளது. குறிப்பாக சாணக்கியன் எம்.பி வேலைவாய்ப்பு தொடர்பில் துள்ளிக் குதிக்கின்றார்.

உரிமை பேசி மக்களிடம் வாக்குக் கேட்டு வந்தவர்கள் உரிமையைப் பெற்றுக்கொடுக்கலாம். நாங்கள் அபிவிருத்தியைச் செய்கின்றோம் என்றால் ஏன் அவர்களால் உரிமையைப் பெற்றுக் கொடுக்கலாமே, அதனை அவர்களால் செய்ய முடியாது,  எனவே அபிவிருத்தியும் செய்ய முடியாது, உரிமையையும் பெற்றுக் கொடுக்க முடியாது, நாங்கள் எதுவும் செய்யாமல், அனைத்தையும் குற்றம் சுமத்துகின்றவர்களாகவே இருந்து வருகின்றீர்கள்.

மற்றவரின் சட்டியில் என்ன வேகுது என்று பார்ப்பதைவிட உங்களுடைய சட்டியில் என்ன கருகுது என்று பாருங்கள் என நான் அவ்வாறானவர்களுக்கு ஆலோசனை கூறுகின்றேன். எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு எங்கால் செய்யக்கூடிய வேலைகளை நாங்கள் செய்துகொண்டு போகின்றோம்.

மக்களின் பிரச்சனைகளை உண்மையாக நாடிபிடித்துப்பார்த்து அதனை யார் நிறைவு செய்து கொடுக்கின்றாரோ அவர்தான் மக்களால் தெரிவு செய்யப்படுவார். மாறாக மக்களின் பிரச்சனைகளை வைத்துக் கொண்டு பிளைப்புவாத அரசியல் செய்வாராக இருந்தால் அவர்களை அரசியலில் இருந்து மக்கள் காணாமலாக்கிவிடுவார்கள்.” என அவர் தெரிவித்துள்ளார்

  •  

http://athavannews.com/மட்டக்களப்பு-மக்கள்-கூட்/

உங்களின் நடவடிக்கைகளை பொறுத்தே அடுத்த முறை மக்கள் தெரிவு செய்பவர்கள் வீணானவர்களா இல்லையா என்பது தெரிய வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, nunavilan said:

மற்றவரின் சட்டியில் என்ன வேகுது என்று பார்ப்பதைவிட உங்களுடைய சட்டியில் என்ன கருகுது என்று பாருங்கள் என நான் அவ்வாறானவர்களுக்கு ஆலோசனை கூறுகின்றேன். எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு எங்கால் செய்யக்கூடிய வேலைகளை நாங்கள் செய்துகொண்டு போகின்றோம்.

சரியான செருப்படி பதில் 
உரிமைக்காக குரல் கொடுக்கப்போனவர்கள், உரிமைப்போரில்  எத்தனை  வீதம் முன்னேறியிருக்கினம்  
தங்களால் உருப்படியாக ஏதாவது செய்ய வக்கில்லை அடுத்தவன் செய்யும் ஒரு வீதத்தையும் புடுங்கவேணும் 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, nunavilan said:

அதற்காகவேண்டி எமது மக்களுக்கு உரிமையுடன் சார்ந்த அரசியலைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

உரிமையுடன் சார்ந்த அரசியல்......... சிங்களப் பேரினவாதம் வீசியெறியும் சலுகைகளுக்காக சோரம் போன செயலுக்கு இப்படியொரு பெயரா?. அதுசரி, இவர் பெற்றுக்கொடுக்கவிருக்கும் உரிமை என்னவாக இருக்கும்? 

மட்டக்களப்பு மாவட்டத்திலேயே இன்று நடக்கும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், மேய்ச்சல் நில அபகரிப்புகள், தொல்லியல் திணைக்களத்தின் கையகப்படுத்தல்கள் என்கிற போர்வையில் நடக்கும் பெளத்த மத விரிவாக்கங்களும், தமிழ் கலாசாரா அழிப்புக்களும் இவர் கூறும் அபிவிருத்திக்குள் அடங்குமா என்று கேட்க விருப்பம்? அல்லது இவை கூட இவர் கூறும் உரிமை அரசியலுக்குள் வருகின்றனவா? அல்லது இவற்றுக்கு இன்னும் அவர் பெயர் ஒன்றைக் கண்டுபிடிக்கவில்லையோ என்னமோ? ஆனால், என்னைப்பொறுத்தவரை "உரிமைகளை விற்ற அபிவிருத்தி அரசியல்" என்பதே சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். 

Edited by ரஞ்சித்
paragraph added

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குள் எப்போதும் இருக்கும் ஒரே கேள்வி என்னவென்றால், இவரோ அல்லது பிள்ளையானோ தமிழர்களின் உரிமை என்று கோத்தாவிடமும், மகிந்தவிடம் வாயைத் திறந்து கேட்டாலே என்ன நடக்கும் என்பதுதான்? இவர்கள் உரிமைகள் பற்றிப் பேசும் நிலையிலா அவர்கள் இவர்களை வைத்திருக்கிறார்கள்? வாயை மூடிக்கொண்டு நாங்கள் வீசியெறிவதை சத்தம்போடாமல் கெளவிக் கொண்டு போ என்று எசமானர்கள் சொல்லும்போது வாலைச் சுருட்டிக்கொண்டு தம் முன்னால் கிடப்பதைக் கெளவிக்கொண்டு ஓரமாக இருந்து கடிப்பதைவிட வேறு என்ன செய்யமுடியும்? 

  • கருத்துக்கள உறவுகள்

ரகு நீங்கள்சொல்வது சரி தான்.உரிமையை இவர்கள் மட்டும் இல்லை எவராலும் கேட்டு பெற முடியாது.ஆனால் அபிருத்தி அதாவது சிறு சலுகைகளாவது இவர்க்ள பெற்றுக் கொடுக்கா விட்டால் இவர்களும் அடுதத் தேர்தலில் வீட்டுக்க அனுப்பப் படுவார்கள்.அபிவிருத்தியையும் கை கறை படியாதவர்கள் செய்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் செய்யும் அரசியல் வெளிப்படையாகவே சிங்களப் பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்குவதுதான் . இவர்கள் அதற்கு என்ன பெயர் சொல்லி அழைக்க விரும்பினாலும், இவர்கள் செய்வது என்னவென்பது தமிழர்களுக்குத் தெரியும். இவர்கள் என்ன சொன்னாலும் அதில் மறைந்திருப்பது ஒருவிடயம் தான், தமது சோரம்போதலை நியாயப்படுத்துவது. ஆகவே, தமக்கு  சிங்களப் பேரினவாதிகளால் கொடுக்கப்பட்டிருக்கும் கடமையினைச் செய்வதை விடுத்து, தமிழரின் உரிமை பற்றி இன்றும் பேசிக்கொண்டிருப்பவனையும், அவனுக்கு வாக்களித்த மக்களையும் கேள்விகேட்கவோ அல்லது இகழவோ இவர்போன்றவர்களுக்கு அருகதையில்லை. உங்கள் காலம் முடியும்வரை அவனிட்ட கட்டளையைச் செய்யுங்கள். மக்கள் விரும்பினால் மீண்டும் தெரிவார்கள், இல்லையென்றால் விலகிப் போய்விடுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, சுவைப்பிரியன் said:

 அபிருத்தி அதாவது சிறு சலுகைகளாவது இவர்க்ள பெற்றுக் கொடுக்கா விட்டால் இவர்களும் அடுதத் தேர்தலில் வீட்டுக்க அனுப்பப் படுவார்கள்.அபிவிருத்தியையும் கை கறை படியாதவர்கள் செய்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது.

கட்டாயம் சிலருக்கு நல்ல சலுகைகள் கிடைக்கும், அல்லது சிங்களம் தான் நினைத்ததை செய்ய முடியாது

அபிவிருத்தி என்ற போர்வையில் சிங்கள் ஆக்கிரமிப்பு 5 வருடத்தில் நன்றாக நடக்கும், அதன் ஆரம்பம்தான், மேச்சல் தரை விவகாரம்

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கர் காணிகள் விற்பனைக்கு வந்திருக்கும் செய்தி கேள்விப்பட்டேன். அரசுக்குச் சொந்தமான நிலங்கள் என்கிற போர்வையில் இந்நிலங்கள் விற்பனைக்கு வருகின்றனவாம். எவரும் இக்காணிகளை வாங்கமுடியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அரசு சொல்லவருவது என்னவென்றால், தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்களவரும், முஸ்லீம்களும்கூட இக்காணிகளை வாங்க முடியும் என்பதைத்தான். கிழக்கில் மட்டக்களப்பு நகரினையண்டிய பகுதிகளுக்குள் சுருங்கிவிட்ட தமிழினம் இந்தக் காணி விற்றலின்மூலம், இன்னும் இன்னும் சிறுபான்மையினமாக மாறப்போகிறது. கோத்தாவினது எடுபிடிகளான சில அரசியல்ப் பிரமுகர்கள் இந்த காணிவிற்றல் தொடர்பாக என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார்கள்? சிலவேளை ஒவ்வொரு காணிக்கும் தமக்கான கொமிஷன் எவ்வளவு என்பதைக் கணக்குப் பார்த்துக்கொண்டிருக்கிறார்களா? மன்னிக்கவேண்டும், இதுகூட அவர்கள் கூறும் அபைவிருத்தி அரசியலாக இருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

அபராஜிதன்

  • Advanced Member
  •  
  • கருத்துக்கள உறவுகள்
  • 717
  • 2,249 posts
  • Gender:Male
  • Author
  • கருத்துக்கள உறவுகள்
  •  

வடக்கு மாகாணம் யாழ்ப்பாணம்.கிளிநொச்சி.முல்லைத்தீவு.வவுனியா.மன்னார்.மாவட்டங்களின் இளைஞர் யுவதிகளின் கவனத்துக்கு மிகவும் அவசரம் அனைவரும் பகீரவும்

******************************************************
அருமையான வாய்ப்பும் பின்னணியில் உள்ள அரசியலும்!!
இலகுவாக என்ன செய்யலாம்??

ஒரு லட்சம் ஏக்கர் காணித்துண்டுகளை இளைஞர்களுக்கு வழங்கி விவசாய உற்பத்தி உள்ளிட்ட சுய தொழில் வாய்ப்புகளை மேம்படுத்த அரசாங்கம் முடிவெடுத்து விண்ணப்பங்கள் கோரியது!! கடந்த செப்டெம்பர் 28 இல் இது பற்றி பகிர்ந்திருந்தேன்..
ஆனால் எங்கள் இளைஞர்கள் பலர் இதில் அக்கறை எடுப்பதாக தெரியவில்லை!! மிகக்குறுகிய விண்ணப்பங்களே கிடைத்ததால் விண்ணப்ப முடிவு திகதி 15.11.2020 வரை நீடிக்கப்பட்டுள்ளது!!

நம் இளைஞர்கள் அக்கறை காட்டவில்லை என்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தது!!
காணி கிடைத்தால் முழுநேர விவசாயம் தான் செய்யவேண்டியதில்லை!!! காணியில் வெறுமனே விவசாயம் மட்டும் தான் செய்ய முடியும் என்ற  மாயையில் இருந்து  முதலில் வெளியே வாருங்கள்!!

நீங்கள் இன்று பெருமளவில் விண்ணப்பிக்காமல் விடுவதால் என்ன நடக்கலாம் என்பதை முதலில் கூறிவிடுகிறேன்!! 
தமிழ் மக்கள் அல்லாதவர்கள் கூட பெருமளவில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணிகளை பெற்றுக்கொண்டு தங்கள் தொழில்களை/விவசாயத்தை முன்னெடுத்து காலப்போக்கில் நிரந்தரமாக அந்த பிரதேசங்களில் குடியேறிவிடவும் கூடும்...
அப்போது வந்து நின்று குத்துது குடையுது என்று கோசம் போடுவீர்கள்!!
இன்று உங்களுக்கு வாய்ப்புகள் தரப்படுகின்றன. அதை நாம் பயன்படுத்தாமல் விடுவதால் வாய்ப்புகளை இன்னொருவர் பறித்துக்கொள்வார் அல்லது பயன்படுத்திக்கொள்வார்!!

முக்கியமாக முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி பகுதிகளில் அதிகம் அரச காணிகள் இருக்கின்றன.
அத்துடன் அரச காடுகளையும் பயன்படுத்திக்கொள்ள மாவட்டங்களுக்கு கடந்த அமைச்சரவை கூட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. காட்டு இலாகாவும் இணைந்து செயற்பட உள்ளது!!
இன்று இந்த வாய்ப்பு தமிழ் இளைஞர்கள் பயன்படுத்தாவிடின் நாளை இதன் விளைவுகள் உங்களுக்கு எதிராகவும் எங்கள் அரசியல் கட்சிகள் இவ்வாறான தேவையான நேரங்களில் அடைகாத்துவிட்டு, பின்னர் மக்களை திரட்டி தங்கள் அரசியலுக்காக கூச்சலிடும் சூழலை மட்டுமே விட்டுவைக்கும்..

சரி யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்??
45 வயதுக்கு உட்பட்ட யாரும் விண்ணப்பிக்கலாம்!!
நீங்கள் எந்த தொழில் செய்துகொண்டிருந்தாலும் பரவாயில்லை!! அந்த தொழிலை செய்து கொண்டே இந்த காணியில் புதிய தொழில் முயற்சிகளை தொடங்கலாம்!! 

இலகுவாக என்ன செய்யலாம்??
தேக்கு மரக்காடுகளை உருவாக்குங்கள்!!
இன்று தென்பகுதிகளில் பல நிறுவனங்கள் அதை மிகப்பெரிய  இலாபம் ஈட்டும் தொழிலாக  செய்கிறார்கள்!!
மிகச்சிறிய முதலிடு!! ஒரு வருடம்( இரண்டு மழைகள்) கவனமாக பராமரித்துவிட்டு அதன்பின் அவ்வப்போது கவனித்தால் போதும்!!
10 வருடங்களில் மிகப்பெரிய இலாபம் ஈட்டலாம்!! தளபாட உற்பத்தி துறை, மர ஏற்றுமதியில் நிறைய வாய்ப்புகள் உண்டு!

தவிர, வேறு விவசாய உற்பத்திகள் உட்பட கரையோர பகுதிகளில் காணிகள் கிடைத்தால், உவர்நீர்/ நன்னீர் மீன்வளர்ப்பு, இறாள் வளர்ப்பு உள்ளிட்ட பல லாபமீட்டும் சுயதொழிலை செய்யலாம்!!
உவர்நீர் இறாள் வளர்ப்பு திட்டங்களுக்கு 50% வரை மிக சிறிய வட்டியுடன் கடன் கிடைக்கிறது.
3-4 வருடங்களில் போட்ட முதலீட்டை மீளப்பெற்று விடும் அளவுக்கு லாபகரமாக செய்யலாம்..

குறிப்பாக எவ்வாறான இடங்களில் அதிகம் விண்ணப்பிக்க வேண்டும்??
யாழ்ப்பாணத்தில் அரச காணிகள் மிகக் குறைவு.. ஆக உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படவும் கூடும்..
பின்வரும் இடங்களை தெரிவு செய்யுங்கள்!!
மாந்தை கிழக்கு
மாந்தை மேற்கு
வவுனியா வடக்கு
ஒட்டிசுட்டான்
நெடுங்கேணி
புதுக்குடியிருப்பு
மாங்குளம்
புதுக்குடியிருப்பு
பூநகரி
மடு
செட்டிக்குளம்
வெள்ளாங்குளம்
பகுதிகளில் அதிகமாக அரசகாணிகள் உள்ளன

விண்ணப்ப முடிவு திகதி நீடிக்கப்பட்டு இன்னும் 5 நாட்களே மீதம் உள்ளன..
நீங்கள் செய்யவேண்டியது இதுதான்.
முதலாவது கொமண்டில் உள்ள விண்ணப்பங்களை நிரப்பி பிரதேச செயலகத்துக்கு அனுப்பிவிடுங்கள்!!

முதலில் காணிகளை பெற்றுக்கொள்ளுங்கள்!! செய்யக்கூடிய வேலைகள் ஏராளம் உள்ளன!!
யாருக்காவது உதவி தேவைப்படின் உட்பெட்டியில் தொடர்புகொள்ளுங்கள்!!

ஒரு சமூகமாக நிலைபேறான பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகர்வோம்

நன்றி
இ.முரளீதரன்
10.11.2020
(காணியுரிமைக்காண மக்கள் அமைப்பின் யாழ்மாவட்ட பிரதிநிதி)

https://drive.google.com/file/d/1be_LnAYYb-kWHDHcKEduqzd6bTz4DfgR/view

நந்தி கடலிடை வந்து தழுவிடும் காற்றிலும் மூச்சிருக்கும் ,அங்கு நாளும் மலர்ந்திடும் தாழை மலர்களில் வந்து முகம் சிரிக்கும்

4 hours ago, சுவைப்பிரியன் said:

இது கடந்த 15 ஆம் திகதியுடன் முடிவடைந்து விட்ட்து. இது பற்றி நான் முன்னேமே இந்த கருது களத்தில் குறிப்பிடடதுடன் அநேகருக்கு WhatsApp மூலமாக விண்ணப்ப படிவத்தையும் அனுப்பி விண்ணப்பிக்க வைத்தேன். காணிகள் எப்படி பகிரப்படப்போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் செய்யப்போகும் அரசியல் என்னவென்று வாக்களிக்கும் முன்பே மக்களுக்கு தெரியும் ,அதை விட அவர்களுக்கு கூத்தமைப்பு தேசிக்காய்களை தவிர்த்து  வேறு தெரிவும் இல்லை , மக்கள் இப்போது ஒவ்வொரு வருட தீபாவளி, பொங்கல்களை தீர்வுடன் கொண்டாடி அலுத்து போய்விட்டார்கள் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.கூத்தமைப்பு தேசிக்காய்கள்  சும்மா இருக்கும் வியாழனை சொறிந்து, தமிழ் தாயையும் விற்று  உசுப்பேத்தாமல் தாங்கள்  எதனை கூறி பதவிக்கு வந்தார்களோ அவற்றில் கவனத்தை செலுத்துவது குறைந்தபட்சம் வாக்களித்த மக்களுக்கு பயனை தரும், வியாழனுடனும் பிள்ளையானுடனும் கொளுவுப்படுவதை விட்டு எமக்காதரவான சக்திகள், ஹிந்திய எசமானர்களுடன் சரசம், முஸ்லீம் சகோதரர்களுக்கு விட்டுக்கொடுப்பு என்று கூத்தாடினால்  மக்களையாவது கொஞ்சம் ஏமாளியாக்கி தாங்களும் எதோ வெட்டிப்பிடுங்குவது போல சீன் போடலாம் 

இன்னுமொன்று... வியாழன் போய் கோத்தாவிடமும் ,மஹிந்தவிடமும் உரிமையை கேட்க வேண்டிய அவசியமில்லை, அவர் அடுத்த தீபாவளியில், பொங்கலில்  தீர்வை பெற்று தருவேன் என்று வாய்ச்சவடால் உறுதிமொழி அளித்தவரல்ல, அவரதும் பிள்ளையானினதும் அரசியலே அபிவிருத்தி, மொத்த அதிகாரமும் குவிந்து கிடக்கும் மையத்திடம் காலில் விழுந்து தான் எதையாவது பெறவேண்டும் அதனை தான் அவர்கள் செய்கிறார்கள்,  இலங்கை தீவில் நமது நிலை புரியாது உரிமை உரிமை என்று புலம்புவது கூட ஒரு வித தற்கொலை தான்   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.