Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`சீமான் அண்ணனுக்கு நான் சொல்ல விரும்புவது..!' - அ.தி.மு.கவில் இணைந்த கல்யாணசுந்தரம் பேட்டி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கல்யாணசுந்தரம்

கல்யாணசுந்தரம்

''தற்போது நடைபெற்று வரும் நல்லாட்சி தொடரவே அ.தி.மு.கவில் நான் இணைந்தேன்'' என்றவரிடம், பத்திரிகையாளர் முன்வைத்த கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் பின்வருமாறு,

நாம் தமிழர் கட்சியில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பாக விலகிய, அக்கட்சியின் மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் கல்யாணசுந்தரம், நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.கவில் தன்னை இணைத்துக்கொண்டார். திராவிடக் கட்சிகளை கடுமையாக விமர்சித்துவந்த அவர், அ.தி.மு.கவில் இணைந்தது கடுமையான விமர்சனங்களை உண்டாக்கியது. இந்தநிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அவர்.

''தற்போது நடைபெற்று வரும் நல்லாட்சி தொடரவே அ.தி.மு.கவில் நான் இணைந்தேன்'' என்றவரிடம், பத்திரிகையாளர் முன்வைத்த கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் பின்வருமாறு,

''தூத்துக்குடி ஸ்டெர்லெட் போராட்டத்தில், 13 பேரை சுட்டுக்கொன்ற ஆட்சி, உங்களுக்கு நல்லாட்சியா?''

''ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அதற்குச் சரியான தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. விசாரணைக் கமிஷனும் விசாரித்து வருகிறது. பெருந்துறையில் விவசாயிகளை கருணாநிதி அரசு சுட்டுக் கொன்றது. ஆனால், அதுகுறித்து எந்த விசாரணையும் நடைபெறவில்லை. விசாரித்து நீதி வழங்க மறுத்தால்தான் அது அரச பயங்கரவாதம். ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குற்றவாளிகள் கண்டறியப்பட்ட பிறகு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.''

''காங்கிரஸ் இனத்துக்கு எதிரி, பா.ஜ.க மனித குலத்துக்கு எதிரி எனப் பேசிவந்த நீங்கள் இன்று, பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துள்ள அ.தி.மு.கவில் இணைந்துள்ளீர்களே?''

''பா.ஜ.க-வால் தமிழகததுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதை முதல்வர் நிச்சயம் தடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. 7.5 விழுக்காடு மருத்துவ உள் இட ஒதுக்கீடு விவாகரத்தில் ஆளுநரை எதிர்பார்க்காமல் முதல்வர் அரசாணை பிறப்பித்ததைப் போல, தமிழக நலன் சார்ந்த விஷயங்களை அ.தி.மு.க விட்டுக்கொடுக்காது என நம்புகிறேன்''btnClose.png

'' விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை தலைவராக ஏற்றுச் செயல்பட்ட நீங்கள், அவரைத் தூக்கில் போட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றிய, ஜெயலலிதாவின் கட்சியில் இணைந்துள்ளீர்களே?''

''அதே ஜெயலலிதாதான் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை, அந்த அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். ஆனால், 2009-க்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் ஆட்சியில் இருந்த தி.மு.க ஏன் அதுபோன்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றவில்லை. ஏன், ஈழத்தில் இனப்படுகொலை செய்தது காங்கிரஸ் என வைகோ இப்போதும் நாடாளுமன்ற வளாகத்தில் பேசுகிறார். ஆனால், இப்போதும் கூட தி.மு.க அப்படிச் சொல்லவில்லையே. அதனால், ஜெயலலிதாவின் புலிகள் குறித்த நிலைப்பாட்டை கால வரிசையில் பார்க்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு''

''கடந்த காலத்தில், ஜெயலலிதாவை ஊழல் குற்றவாளி எனக் கடுமையாக விமர்சித்த உங்களின் தற்போதைய நிலைப்பாடு என்ன?''

'' நீதிமன்றத் தீர்ப்பை வைத்து நாம் ஒரு முடிவுக்கு வரமுடியாது. அப்படியென்றால் நானும் பல நீதிமன்றத் தீர்ப்புகளை எடுத்து இங்கே பேசமுடியும். ஆனால், நான் தற்போது அவற்றைப் பற்றிப் பேசினால் அது நீதிமன்ற அவமதிப்பாகிவிடும். ஜெ வழக்கில் அ.தி.மு.க அடிப்படை உறுப்பினராக எனது பார்வை வேறானது.''

எழுவர் விடுதலை
 
எழுவர் விடுதலை

''தமிழ்த்தேசியம்தான் உங்களின் கொள்கை எனச் சொல்லிப் பயணித்த நீங்கள் தற்போது மீண்டும் திராவிட இயக்கத்தில் இணைந்திருப்பது பின்னடைவுதானே?''

''தமிழ்தேசியத்துக்கான அரசியலைத்தான் அ.தி.மு.க நடத்துகிறது. ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேர் விடுதலை குறித்து அ.தி.மு.க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இன்றும் அ.தி.மு.க அரசு 7 பேர் விடுதலையை ஆதரித்தே வருகிறது. பேரறிவாளன், ராபர்ட் பயாஸுக்கு க்கு பரோல் வழங்கியது அ.தி.மு.க அரசு. அ.தி.மு.க-வை வலிமைப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.''

''சீமானை நம்பிப் பயணிக்கும் தம்பிகளுக்கு நீங்கள் சொல்லவிரும்புவது என்ன?''

''சீமானை நம்பிப் பயணிப்பவர்களுக்கு நான் சொல்லுவது சுயமாக சிந்தித்து முடிவெடுங்கள் என்பதே''

'சீமானுக்கு நீங்கள் சொல்லவிரும்புவது?''

''நான் அறிவுரை சொல்லி கேட்கும் நிலையில் அண்ணன் சீமான் இல்லை.''

''நாம் தமிழர் கட்சியினர் கொடுத்த அழுத்தம், மிரட்டல்கள் காரணமாகத்தான் நீங்கள் அ.தி.மு.கவில் இணைந்திருப்பதாக உங்கள் நண்பர் குகன்குமார் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறாரே?''

'' என் நண்பராக அவர் சில விஷயங்களைப் பேசியிருக்கிறார். எனக்கு அப்படி எந்த அழுத்தமும் வரவில்லை.''

சீமான்
 
சீமான்

''வெளிநாடுகளில் இருந்து சீமானுக்கு வரும் நிதி, உங்களுக்குக் கைமாறியதால்தான் உங்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறதே?''

''அயல் நாடுகளில் இருந்து நான் பணம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நடு ரோட்டில் நின்று தீக்குளிக்கவும் நான் தயார்''

`சீமான் அண்ணனுக்கு நான் சொல்ல விரும்புவது..!' - அ.தி.மு.கவில் இணைந்த கல்யாணசுந்தரம் பேட்டி!|Kalyanasundaram interview about his joining in admk (vikatan.com)

  • Replies 109
  • Views 11.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்....

இருந்த கொஞ்ச நற்பெயரும் இத்துடன் சரி.

ஒரு அழுத்தமும் இல்லை என்றால் பழையபடி படிப்பிக்க போயிருக்கலாமே?

நாதவில் இருந்து வெளியே வந்தபோது, ஒரு போதும் தமிழ் தேசியத்தை கைவிடேன், இந்துதுவா மனித குல எதிரி, திராவிடம் தமிழின எதிரி என்றார்.

இன்றைக்கு பாஜக கூட்டணி அதிமுகவில் ஐக்கியம்.

அது சரி, B டீமில் கிடந்து மாரடிக்காமல் நேரே A டீம் போக முடிவெடுத்து விட்டார் போலும்🤣

போற போக்கில் ராஜீவ் காந்தி காங்கிரசில் சேர்ந்தாலும் ஆச்சரியமில்லை🤣.

அது சரி பெரியாரின் பேரன் திடீரென முருகனின் கொள்ளுபேரன் ஆக முடியும் என்றால் எதுவும் சாத்தியமே🤣.

#அண்ணன் காட்டிய வழி

  • கருத்துக்கள உறவுகள்

''சீமானை நம்பிப் பயணிக்கும் தம்பிகளுக்கு நீங்கள் சொல்லவிரும்புவது என்ன?''

''சீமானை நம்பிப் பயணிப்பவர்களுக்கு நான் சொல்லுவது சுயமாக சிந்தித்து முடிவெடுங்கள் என்பதே''

👆பிடித்தமான பகுதி இது தான்! சீமான் தம்பிகளைப் பற்றித் தெரிந்து கொண்டு தான் இதைச் சொல்கிறாரா என ஆச்சரியமாக இருக்கிறது! 🤔

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Justin said:

Justin 

சீமான் தம்பிகளை வன்மம் தீர்த்தால்தான் ஆழ்ந்த நித்திரை வரும்போலும்... ☹️

எப்போதிருந்து கல்யாணசுந்தரத்தின் விசிறியானீர்கள்.. 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
Quote

#அண்ணன் காட்டிய வழி

 அண்ணன் என்றால் யார்??

1 hour ago, Justin said:

''சீமானை நம்பிப் பயணிக்கும் தம்பிகளுக்கு நீங்கள் சொல்லவிரும்புவது என்ன?''

''சீமானை நம்பிப் பயணிப்பவர்களுக்கு நான் சொல்லுவது சுயமாக சிந்தித்து முடிவெடுங்கள் என்பதே''

👆பிடித்தமான பகுதி இது தான்! சீமான் தம்பிகளைப் பற்றித் தெரிந்து கொண்டு தான் இதைச் சொல்கிறாரா என ஆச்சரியமாக இருக்கிறது! 🤔

வாத்தி தானே தன் தலையில் மண்ணை போட்டுக்கொண்டார் என எடுக்கலாமா? அல்லது பணம் எனில் நேராக பி.ஜே.பியில் சேர்ந்து இருக்கலாமே?? ஓ அதற்கும் ஒரு படிமுறை உள்ளது போலும்.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kapithan said:

Justin 

சீமான் தம்பிகளை வன்மம் தீர்த்தால்தான் ஆழ்ந்த நித்திரை வரும்போலும்... ☹️

எப்போதிருந்து கல்யாணசுந்தரத்தின் விசிறியானீர்கள்.. 😂😂

விசிறியா? 

காலையில் மாணவர்களுக்கு கற்பித்து விட்டு மாலையில் "ஏனைய மொழிக்காரர் யாருக்கும் தமிழகத்தில் முன்னுரிமை/பதவி கிடைக்கக் கூடாது" என்று வாதக் குணம் காட்டிய க.சு  சீமான் தம்பிகளுள் மோசமான மண்டை கழுவிய தம்பி! 

5 minutes ago, nunavilan said:

 அண்ணன் என்றால் யார்??

வாத்தி தானே தன் தலையில் மண்ணை போட்டுக்கொண்டார் என எடுக்கலாமா? அல்லது பணம் எனில் நேராக பி.ஜே.பியில் சேர்ந்து இருக்கலாமே?? ஓ அதற்கும் ஒரு படிமுறை உள்ளது போலும்.

அட எனக்கு க.சு வின் பேச்சாளர் பதவியே தந்து விட்டார்களா? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Justin said:

விசிறியா? 

காலையில் மாணவர்களுக்கு கற்பித்து விட்டு மாலையில் "ஏனைய மொழிக்காரர் யாருக்கும் தமிழகத்தில் முன்னுரிமை/பதவி கிடைக்கக் கூடாது" என்று வாதக் குணம் காட்டிய க.சு  சீமான் தம்பிகளுள் மோசமான மண்டை கழுவிய தம்பி! 

அப்படியானால் அவர் கூறியதையிட்டு நீங்கள் ஏன் புளகாங்கிதமடைகிறீர்கள். (உங்கள் பார்வையில்) அவர் முன்னர் இருந்தது மோசமான இடம் என்றால்  என்றால், (என் பார்வையில்) அவர் போய் விழுந்தது மிகவும் மோசமான சாக்கடையல்லோ.. ? அப்படியிருக்கையில் அவரை மேற்கோள்காட்டுவது ""எனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுனப் பிழையானால் சரிதான்"" என்கின்ற நிலைப்பாடாகத்தானே இருக்க முடியும்.. 🤥

ஆக..

யார் என்றில்லை, நா த கட்சியினரை யார் திட்டித் தீர்த்தாலும் உங்களுக்கு திருப்தி. அப்படித்தானே..😂😂

இந்த attitude பழைய பென்சனியர்களில் கொஞ்சம் ஆட்கள்,  பிறருக்கு எதிராக எப்போதுமே petition போடும் பழக்கத்தை ஒத்திருக்கிறது (எனது பார்வைக்கு) ...☹️

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, nunavilan said:

அண்ணன் என்றால் யார்??

கருத்துக்கள் வைக்க முடியாமல் கோழைத்தனமாக திரியை மூடிய விண்ணர்கள் இங்கும் வந்து பறக்கினம்  பச்சை குத்துனம் தனி ஒரு கட்சி க்கு விளம்பரம் வேண்டாம் என்றவர்கள் இங்கு இலவச விளம்பரம்  அவர்களை  அறியாமல் கொடுக்கினம் இந்த திரியை நீட்டித்தவர்களுக்கும் இனியும் நீட்டிப்பவர்களுக்கும் நன்றிகள் .😜

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, nunavilan said:

 அண்ணன் என்றால் யார்??

வாழும் நாளிலேயே இசம் படைத்த இமயம் 

இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று திராவிட அதிமுகவிற்கு வாக்கு கேட்ட திராவிட எதிர்ப்பு சிங்கம்.

பெரியார் மேடைகளில் ஏறி முருகனை பழித்து விட்டு, மைக் செட் காரர் வீடு போக முன்னம் முருகனை முப்பாட்டன் ஆக்கிய முதலவன்.

மணல் திருட்டை மேடையில் திட்டி விட்டு மணல் திருடன் வைகுந்தவாசன் வீட்டு கல்யாணத்தில் கை நனைக்கும் ஊழலற்ற போராளி.

பிரபாகரனை தமிழ்நாட்டுக்கு அறிமுகம் செய்ததே நான் தான் எனும் அடக்கத்தின் திரூஉருவம்.

அண்ணன் சீமான் அவர்கள்தான்,

லெட்ப் சிக்னலை போட்டு ரைட்டில் வண்டியை அறம்புறமாக ஓட்டும் கலையில் விற்பனர்.

அவர் காட்டிய வழியில் அன்பு தம்பி கல்யாணமும் நடக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

நன்றி பாஸ் 😄

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

கருத்துக்கள் வைக்க முடியாமல் கோழைத்தனமாக திரியை மூடிய விண்ணர்கள் இங்கும் வந்து பறக்கினம்  பச்சை குத்துனம் தனி ஒரு கட்சி க்கு விளம்பரம் வேண்டாம் என்றவர்கள் இங்கு இலவச விளம்பரம்  அவர்களை  அறியாமல் கொடுக்கினம் இந்த திரியை நீட்டித்தவர்களுக்கும் இனியும் நீட்டிப்பவர்களுக்கும் நன்றிகள் .😜

அப்படியே நாங்கள் விளப்பரம் கொடுத்துட்டாலும் 🤣

நான் எந்த திரியையும் மூடச் சொல்லவில்லை. அந்த திரி மூடியபின் நானே ஒரு செய்தியாக நாம்தமிழர் கோவில் வழக்கு செய்தியை போட்டு நாத விற்கு வாழ்த்தும் சொல்லி இருந்தேன்.

நாம் கட்சி அடிமைகள் இல்லை, ஆகவே எந்த கட்சி பின்னாலும் மந்தை போல் நாம் அலைவதும் இல்லை. 

சுடலை முதல் அண்ணன் வரை எல்லாரையும் தெறிக்க விடுவோம்🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, பெருமாள் said:

கருத்துக்கள் வைக்க முடியாமல் கோழைத்தனமாக திரியை மூடிய விண்ணர்கள் இங்கும் வந்து பறக்கினம்  பச்சை குத்துனம் தனி ஒரு கட்சி க்கு விளம்பரம் வேண்டாம் என்றவர்கள் இங்கு இலவச விளம்பரம்  அவர்களை  அறியாமல் கொடுக்கினம் இந்த திரியை நீட்டித்தவர்களுக்கும் இனியும் நீட்டிப்பவர்களுக்கும் நன்றிகள் .😜

வணக்கம் பெருமாள்! உங்களை விட நான் இன்னும் காரசாரமாக அறுசுவையுடன் கறிவேப்பிலை கமகமக்க எழுதலாம் என நினைத்திருக்கின்றேன்.

இருந்தாலும் இப்போதைக்கு உங்கள் இந்த கருத்து ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதே சரியானது.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

வாழும் நாளிலேயே இசம் படைத்த இமயம் 

இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று திராவிட அதிமுகவிற்கு வாக்கு கேட்ட திராவிட எதிர்ப்பு சிங்கம்.

பெரியார் மேடைகளில் ஏறி முருகனை பழித்து விட்டு, மைக் செட் காரர் வீடு போக முன்னம் முருகனை முப்பாட்டன் ஆக்கிய முதலவன்.

மணல் திருட்டை மேடையில் திட்டி விட்டு மணல் திருடன் வைகுந்தவாசன் வீட்டு கல்யாணத்தில் கை நனைக்கும் ஊழலற்ற போராளி.

பிரபாகரனை தமிழ்நாட்டுக்கு அறிமுகம் செய்ததே நான் தான் எனும் அடக்கத்தின் திரூஉருவம்.

அண்ணன் சீமான் அவர்கள்தான்,

லெட்ப் சிக்னலை போட்டு ரைட்டில் வண்டியை அறம்புறமாக ஓட்டும் கலையில் விற்பனர்.

அவர் காட்டிய வழியில் அன்பு தம்பி கல்யாணமும் நடக்கிறார்.

நல்லது வாயில் வராதா? ( எழுத).  எவ்வளவோ நல்லதெல்லாம் மூளைக்கு தட்டுப்படாதோ??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, goshan_che said:

அப்படியே நாங்கள் விளப்பரம் கொடுத்துட்டாலும் 🤣

நான் எந்த திரியையும் மூடச் சொல்லவில்லை. அந்த திரி மூடியபின் நானே ஒரு செய்தியாக நாம்தமிழர் கோவில் வழக்கு செய்தியை போட்டு நாத விற்கு வாழ்த்தும் சொல்லி இருந்தேன்.

நாம் கட்சி அடிமைகள் இல்லை, ஆகவே எந்த கட்சி பின்னாலும் மந்தை போல் நாம் அலைவதும் இல்லை. 

சுடலை முதல் அண்ணன் வரை எல்லாரையும் தெறிக்க விடுவோம்🤣

அந்த திரி மூடப்படுவதற்கு முழு முக்கிய காரணகர்த்தாக்கள் நீங்களும் உங்கள் யு எஸ் நண்பரும் தான். சிவனே என்று இருந்த திரியை வேண்டாத கருத்துக்களை திணித்து களேபரம் பண்ணி மூடச்செய்தவர்கள்.
தமிழின படுகொலை பாவங்கள் உங்களையும் சேரும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nunavilan said:

நல்லது வாயில் வராதா? ( எழுத).  எவ்வளவோ நல்லதெல்லாம் மூளைக்கு தட்டுப்படாதோ??

மேலே சொல்லி உள்ளேனே கோவில் வழக்கு விடயத்தில் நானே செய்தியை இணைத்து பாராடினேன் என?

நல்லதை மட்டுமே சொல்ல நான் கட்சி உறுப்பினரோ அல்லது பிரச்சாரகரோ அல்லவே.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kapithan said:

அப்படியானால் அவர் கூறியதையிட்டு நீங்கள் ஏன் புளகாங்கிதமடைகிறீர்கள். (உங்கள் பார்வையில்) அவர் முன்னர் இருந்தது மோசமான இடம் என்றால்  என்றால், (என் பார்வையில்) அவர் போய் விழுந்தது மிகவும் மோசமான சாக்கடையல்லோ.. ? அப்படியிருக்கையில் அவரை மேற்கோள்காட்டுவது ""எனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுனப் பிழையானால் சரிதான்"" என்கின்ற நிலைப்பாடாகத்தானே இருக்க முடியும்.. 🤥

ஆக..

யார் என்றில்லை, நா த கட்சியினரை யார் திட்டித் தீர்த்தாலும் உங்களுக்கு திருப்தி. அப்படித்தானே..😂😂

இந்த attitude பழைய பென்சனியர்களில் கொஞ்சம் ஆட்கள்,  பிறருக்கு எதிராக எப்போதுமே petition போடும் பழக்கத்தை ஒத்திருக்கிறது (எனது பார்வைக்கு) ...☹️

சீமானைத் தொழுகிற பலருக்கு இருக்கும் தமிழ் கிரகிப்புப் பிரச்சினை கப்ரனுக்கும் இருக்குது போல!

ஒருவரை மேற்கோள் காட்டினாலே அவர் பற்றிப் புளகாங்கிதமென்றால், சீமான் ஹிற்லரை மேற்கோள் காட்டிய இடத்திலெல்லாம் நாசிசம் பற்றிப் புளகாங்கிதம் அடைந்தார் எனக் கொள்ளலாமோ கப்ரன்? 

 உங்களுக்காக பாலர் தமிழில் சொல்கிறேன்: எனக்கு தமிழகக் கட்சிகள் எல்லாமே சாக்கடை தான், அவர் சின்னதாக இருந்த லோக்கல் சாக்கடையில் இருந்து பெரிய சாக்கடையில் போய் சேர்ந்திருக்கிறார்!  விளங்கா விட்டால் சொல்லுங்கள், இன்னும் ஒரு பத்து வரிகளில் சொல்ல முயற்சிக்கிறேன்! 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

மேலே சொல்லி உள்ளேனே கோவில் வழக்கு விடயத்தில் நானே செய்தியை இணைத்து பாராடினேன் என?

நல்லதை மட்டுமே சொல்ல நான் கட்சி உறுப்பினரோ அல்லது பிரச்சாரகரோ அல்லவே.

நல்ல கருத்தாளரும் இல்லையா??

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பெருமாள் said:

கருத்துக்கள் வைக்க முடியாமல் கோழைத்தனமாக திரியை மூடிய விண்ணர்கள் இங்கும் வந்து பறக்கினம்  பச்சை குத்துனம் தனி ஒரு கட்சி க்கு விளம்பரம் வேண்டாம் என்றவர்கள் இங்கு இலவச விளம்பரம்  அவர்களை  அறியாமல் கொடுக்கினம் இந்த திரியை நீட்டித்தவர்களுக்கும் இனியும் நீட்டிப்பவர்களுக்கும் நன்றிகள் .😜

வைத்த கருத்துகளுக்கு பதில் எழுத முடியாமல் சில சீமான் தம்பிகள் விதிமீறலாக நடந்து கொண்டதால் பூட்டப் பட்டதாக சொன்ன தீர்ப்பு இன்னும் நாற்சந்தியில இருக்குதே? பார்க்கவில்லையோ பெருமாள்? 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

தமிழின படுகொலை பாவங்கள் உங்களையும் சேரும்.

இவ்வளவுதான் ... சொந்த இனத்தின் மரண வலி, உன்னதமான 50,000 பேரின் உயிர் கொடை... ஒரு சக கருத்தாளரை வெட்டி ஆட பயன்படுத்த படும் அவலம்.

இதற்கு ஓர் யாழ்கள நிர்வாகியும் கூட்டு🤦‍♂️.

உங்கள் குழாயடி சண்டைக்கு இனத்தினை கூட்டு வலியை பயன்படுதாதீர்கள்.

4 minutes ago, nunavilan said:

நல்ல கருத்தாளரும் இல்லையா??

அதை நானே சொல்வதா? சீமான் போல ஆகிவிடாதா?🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

வைத்த கருத்துகளுக்கு பதில் எழுத முடியாமல் சில சீமான் தம்பிகள் விதிமீறலாக நடந்து கொண்டதால் பூட்டப் பட்டதாக சொன்ன தீர்ப்பு இன்னும் நாற்சந்தியில இருக்குதே? பார்க்கவில்லையோ பெருமாள்? 

உங்களின் கருத்துக்களுக்கு கருத்து எழுதுவதில்லை என்று சொன்ன பின்பும் என்னுடன் வந்து மல்லுக்கட்டும் திட்டம் என்ன ? படித்த மனிதர் மாதிரியா நடந்து கொள்கிறீர்கள் ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, goshan_che said:

இவ்வளவுதான் ... சொந்த இனத்தின் மரண வலி, உன்னதமான 50,000 பேரின் உயிர் கொடை... ஒரு சக கருத்தாளரை வெட்டி ஆட பயன்படுத்த படும் அவலம்.

இதற்கு ஓர் யாழ்கள நிர்வாகியும் கூட்டு🤦‍♂️.

உங்கள் குழாயடி சண்டைக்கு இனத்தினை கூட்டு வலியை பயன்படுதாதீர்கள்.

அதெப்படி?   நீங்களும் தங்கள் கூட்டுக்களும் கருதெழுதினால் பொன்னானது இமாலயம் போன்றது. ஆனால் உங்களுக்கு பிடிக்காதவர்கள் எழுதினால் குழாயடிச்சண்டை.....
 
Just now, பெருமாள் said:

உங்களின் கருத்துக்களுக்கு கருத்து எழுதுவதில்லை என்று சொன்ன பின்பும் என்னுடன் வந்து மல்லுக்கட்டும் திட்டம் என்ன ? படித்த மனிதர் மாதிரியா நடந்து கொள்கிறீர்கள் ?

ஏவி விட்டால் பாயத்தானே வேணும். 😁

  • கருத்துக்கள உறவுகள்

நான் இங்கே எந்த கருத்தாளரை வெட்டி ஆடவும் என் இனத்தின் உயிர் வலியை ஒரு துருப்பாக பயன்படுத்தியதே இல்லை.

இப்படி எழுதுவதும் முள்ளிவாய்காலில் வீழ்ந்தவர்கள் உடலில் இருந்து நகையை திருடுவதும் ஒன்றுதான்.

இப்படி ஒரு அசிங்கத்தை நான் எழுதினால் எழுதிய என் கையையே வெட்டி எறிவேன்.

1 minute ago, குமாரசாமி said:

அதெப்படி?   நீங்களும் தங்கள் கூட்டுக்களும் கருதெழுதினால் பொன்னானது இமாலயம் போன்றது. ஆனால் உங்களுக்கு பிடிக்காதவர்கள் எழுதினால் குழாயடிச்சண்டை.....
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, goshan_che said:

அதை நானே சொல்வதா? சீமான் போல ஆகிவிடாதா?🤣

சீமான் இன்னும் ஆட்சியே செய்யவில்லை. அதற்குள் இந்த நடுக்கமா? பயப்பிடாதீர்கள் அவர் தனிநாடெல்லாம் பிடித்து தரமாட்டார். தமிழக நலன்கள் மட்டுமே முதலிடம். அதிலும் சமூக நலன் நிறைந்தது. பக்க விளைவுகள் இல்லாதது. சிங்களத்துடன் வழமை போல் நீங்களும் உங்களைப்போன்றவர்களும் உல்லாசமாக கை கோர்த்து வலம் வரலாம்.
திரும்பவும் சொல்கிறேன் பயப்படாதீங்கோ 😜

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

உங்களின் கருத்துக்களுக்கு கருத்து எழுதுவதில்லை என்று சொன்ன பின்பும் என்னுடன் வந்து மல்லுக்கட்டும் திட்டம் என்ன ? படித்த மனிதர் மாதிரியா நடந்து கொள்கிறீர்கள் ?

பெருமாள், ஏற்கனவே சொல்லியிருக்கிறேன், மறைமுகமாக எனக்கு எழுதும் கருத்துக்கு பதில் சொல்வேன்! இதற்கேன் படிப்பு?🤔

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, goshan_che said:

நான் இங்கே எந்த கருத்தாளரை வெட்டி ஆடவும் என் இனத்தின் உயிர் வலியை ஒரு துருப்பாக பயன்படுத்தியதே இல்லை.

இப்படி எழுதுவதும் முள்ளிவாய்காலில் வீழ்ந்தவர்கள் உடலில் இருந்து நகையை திருடுவதும் ஒன்றுதான்.

இப்படி ஒரு அசிங்கத்தை நான் எழுதினால் எழுதிய என் கையையே வெட்டி எறிவேன்.

கோசான் உங்கள் நியாயத்தை பல திரிகளில் பார்த்து விட்டேன். இனியும் கதறாதீர்கள்.😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.