Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேரள கன்னியாஸ்திரீ கொலை வழக்கு: பாதிரியார், கன்னியாஸ்திரீக்கு ஆயுள் தண்டனை விதித்த சிபிஐ நீதிமன்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

28 ஆண்டுகளாக நடந்து வந்த கேரள கன்னியாஸ்திரீ அபயா கொலை வழக்கில் பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரீ ஸ்டெபி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது கேரள மாநில சிபிஐ நீதிமன்றம். சிறை தண்டனையுடன் சேர்த்து பாதிரியார் தாமஸ் கோட்டூருக்கு ரூ. 6.50 லட்சமும் கன்னியாஸ்திரீ ஸ்டெபிக்கு ரூ. 5.50 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் 49 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 1992ம் ஆண்டு கொலை நடந்தபோது கன்னியாஸ்திரீ அபயாவுக்கு வயது 19 மட்டுமே.

கேரளாவில் மிக நீண்டகாலம் விசாரிக்கப்பட்ட கிரிமினல் வழக்காக இந்தக் கொலை வழக்கு வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. சகோதரி அபயாவின் உடல், அவர் தங்கியிருந்த விடுதியின் கிணற்றில் கண்டுபிடிக்கப்பட்ட 28 ஆண்டுகள் கழித்து, பாதிரியாரும், கன்னியாஸ்திரியும் தான் கொலைக்குக் காரணம் என்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கண்டுபிடித்துள்ளது.

இந்த வழக்கில் கோட்டூர் (69) மற்றும் சகோதரி செபி (55) ஆகியோருக்கான தண்டனை விவரத்தை நாளை அறிவிப்பதாக, திருவனந்தபுரம் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ். சனல் குமார் கூறியுள்ளார். கொலை செய்தது மற்றும் தடயங்களை அழித்த குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது நிரூபிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் கோட்டூர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

கோட்டயத்தில் கனன்யா கத்தோலிக்க தேவாலயம் நடத்தி வரும் பியஸ் கான்வென்ட் விடுதியில் தங்கி, பட்ட நிலைக்கு முந்தைய கல்வி பயின்று வந்தவர் கன்னியாஸ்திரீ அபயா. அவருடன் விடுதியில் தங்கியிருந்த மற்றொரு கன்னியாஸ்திரீ ஷெர்லி 1992 மார்ச் 26 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு தேர்வுக்குப் படிப்பதற்காக எழுந்தபோது கடைசியாக அபயாவை பார்த்திருக்கிறார். குளிர் நீரில் முகம் கழுவ அபயா சமையலறைக்குச் சென்றிருக்கிறார்.

அப்போது பாதிரியார் கோட்டூர், கன்னியாஸ்திரீ செபி, பாதிரியார் புட்ரிகயல் ஆகியோர் உறவில் ஈடுபட்டிருந்த காட்சியை சகோதரி அபயா பார்த்ததாக வழக்கில் கூறப்பட்டுள்ளது. இதை சகோதரி அபயா வெளியில் சொல்லிவிடுவார் என்ற பயத்தில், அவருடைய கழுத்தை பாதிரியார் கோட்டூர் நெரிக்க, அபயாவை கோடாரியால் சகோதரி செபி தாக்கிக் கொன்றதாகவும், பிறகு மூவரும் சேர்ந்து உடலை கிணற்றில் வீசிவிட்டதாகவும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டது.

``தீர்ப்பு பற்றிய செய்திகள் பரவியபோது, மகிழ்ச்சி அடைவதா சோகம் கொள்வதா என எனக்குத் தெரியவில்லை. இரண்டு உணர்வுகளுமே தோன்றின. நீதிமன்றம் இன்றைக்கு தீர்ப்பு கூறும் என நான் எதிர்பார்க்கவில்லை. இந்த தீர்ப்பால் என் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். சொர்க்கத்தில் இருந்து அவர்கள் இதைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்று நிச்சயமாக நம்புகிறேன். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, நான்கு மாத இடைவெளியில் இருவரையுமே நான் இழந்துவிட்டேன்'' என்று அபயாவின் சகோதரர் பிஜு தாமஸ் துபையில் இருந்து பிபிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

``அபயா என்னைவிட இரண்டு வயது இளையவர். அவருக்கு 14 அல்லது 15 வயது இருந்தபோது, கன்னியாஸ்திரீ ஆக வேண்டும் என்று அழுவாள். என் தந்தை திட்டுவார். ஆனால் கன்னியாஸ்திரீகளும், பாதிரியார்களும் எங்கள் வீட்டுக்கு வரும் போது தரப்படும் மரியாதைகளைப் பார்த்து அவள் ஈர்க்கப்பட்டாள்'' என்று பிஜூ தெரிவித்தார். இப்போது அவர் ஓட்டல் துறையில் பணியாற்றி வருகிறார்.

கன்னியாஸ்திரீ

பட மூலாதாரம்,NURPHOTO

சகோதரி அபயாவை இழந்த போது, ``அது கொலை என்று என் பெற்றோர் கூறினர். பலம் மிக்கவர்களை எதிர்த்துப் போராட முடியாத ஏழையாக நாங்கள் இருந்தோம். எங்களுக்காகப் போராட நிறைய பேர் முன்வந்தனர். ஆக்ஷன் கவுன்சிலும் அதில் ஒன்றாக இருந்தது'' என்றார் பிஜு.

தற்கொலையா அல்லது கூட்டுக் கொலையா?

``நிச்சயமாக இது கூட்டுக் கொலைதான். தலையில் தாக்கியுள்ளனர். அவர் இறந்துவிட்டார் என்று நினைத்து உடலை கிணற்றில் வீசியுள்ளனர். இந்த வழக்கு மத்தியப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு மாற்றப்பட்ட போது நான் தான் முதலாவது விசாரணை அதிகாரியாக இருந்தேன்'' என்று அப்போது காவல் துறை துணை கண்காணிப்பாளராக இருந்த வர்கீஸ் பி. தாமஸ், பிபிசி இந்தி பிரிவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கான்வென்ட் மதர் சுப்பீரியர் தலைமையில், கன்னியாஸ்திரிகள் குழு அளித்த மனுவின் அடிப்படையில் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற அப்போதைய முதல்வர் கே. கருணாகரன் உத்தரவிட்டார். ஆரம்பத்தில் உள்ளூர் காவல் துறையினரும், பின்னர் குற்றப் பிரிவு காவல் துறையினரும் இந்த வழக்கை சரியாக விசாரிக்கவில்லை என்று கருதினர். அது கொலையாக இருக்கும் என்று சந்தேகித்ததால் முதல்வரிடம் மனு அளித்தனர்.

1993ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ. எடுத்துக் கொண்டது. அந்த ஆண்டின் இறுதியில் இது கூட்டுக் கொலை என்று தாமஸ் மற்றும் அவரது விசாரணைக் குழுவினர் முடிவுக்கு வந்தனர். ``நிலுவை வழக்குகள் எதுவும் இருக்கக் கூடாது என மேலதிகாரி விரும்பியதால், தற்கொலை என்று கூறி வழக்கை முடித்துவிடுமாறு கூறினார். அதை ஏற்க மறுத்து, நான் பணியில் இருந்து ராஜிநாமா செய்துவிட்டேன்'' என்று 76 வயதான தாமஸ் தெரிவித்தார்.

ஆனால், ``எந்த முடிவுமே எடுக்காமல் வழக்கை முடிப்பதற்கு அதிகபட்ச எண்ணிக்கையில் முயற்சிகள் எடுக்கப்பட்டதால் இது வரலாற்றில் இடம் பெறும் வழக்காக இருக்கும். உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகுதான் இதன் விசாரணை முறைப்படி நடைபெற்றது. ஆதாரங்களை சீர்குலைக்க பல முயற்சிகள் நடந்தன. உண்மை கண்டறியும் பரிசோதனை பதிவுகளை மாற்ற முயற்சி நடந்தது. அதை உயர்நீதிமன்றம் ஏற்கவில்லை'' என்று இந்த வழக்கில் தொடர்பில்லாத வழக்கறிஞர் சந்தியா ராஜூ பிபிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அபயா தற்கொலை செய்து கொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கிறார், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று குறைந்தது மூன்று சமயங்களில் சிபிஐ குழுக்கள் கூறியுள்ளன. சிபிஐ அறிக்கைகளை நீதித்துறை நடுவர் நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் ஏற்க மறுத்துவிட்டன. சிபிஐ-க்கு மூன்று மாதங்கள் அவகாசம் தருவதாக 2008ல் உயர்நீதிமன்றம் அறிவித்தது.

சந்தர்ப்ப சாட்சியங்கள்

புகார் கூறியுள்ள கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிற கன்னியாஸ்திரிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

1992 மார்ச் 26 ஆம் தேதி இரவு கான்வென்ட் வளாகத்தில் பாதிரியார் கோட்டூரை பார்த்ததாக, கான்வென்ட் அருகில் வசிக்கும் சஞ்சு மாத்யூ என்பவர் 164வது பிரிவின் கீழ் சிபிஐ-யிடம் சாட்சியம் அளித்த போது திருப்பம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கோட்டூர், கன்னியாஸ்திரீ செபி, பாதிரியார் புட்ரிகயல் ஆகியோரை சிபிஐ கைது செய்தது.

கான்வென்ட் விடுதியில் இரு பாதிரியார்களையும் பார்த்ததாக, திருட்டு தொழில் செய்து வந்த அடக்கா ராஜூ என்பவரும் சிபிஐயிடம் தெரிவித்தார்.

``ஆரம்பத்தில் இருந்தே இது தற்கொலை அல்ல என்பது தெளிவாகத் தெரிந்தது. சமையலறையில் போராட்டம் நடந்திருப்பதற்கான அடையாளங்கள் இருந்தன. அபயாவின் செருப்புகள் சமையலறையில் இரண்டு இடங்களில் கிடந்தன. படிப்பதற்காக அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்கக் கூடியவருக்கு, தற்கொலை என்ற எண்ணம் முதலில் வராது. ஏதோ குழப்பம் இருக்கிறது என்று உணர்வதற்குப் போதிய ஆதாரமாக அது இருந்தது'' என்று குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி முயற்சிகள் மேற்கொண்ட ஆக்ஷன் கவுன்சிலைச் சேர்ந்த ஜோமன் புதென்புரக்கல் பிபிசி இந்தி பிரிவிடம் தெரிவித்தார்.

``கேரளாவில் மிக நீண்டகாலம் நடந்த கிரிமினல் வழக்குகளில் ஒன்றாக இது இருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது'' என்று சந்தியா ராஜூ கூறினார்.

குற்ற வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களை தேவாலய நிர்வாகம் எப்படி அணுகுகிறது என்ற கேள்வியையும் இந்தத் தீர்ப்பு எழுப்பியுள்ளது.

``குற்றவாளிகள் தொடர்ந்து பாதிரியார்களாக செயல்பட்டு வந்துள்ளனர். அவர்களை தேவாலய நிர்வாகம் நீக்கவில்லை. குறைந்தபட்சம் பாதிரியார் பணியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்திருக்கலாம். குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டால், அப்போது மீண்டும் சேர்த்துக் கொண்டிருக்கலாம்'' என்று எங்கள் சகோதரிகளைப் பாதுகாத்திடுங்கள் என்ற அமைப்பின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரான பாதிரியார் அகஸ்டின் வட்டொல்லி கூறியுள்ளார்.

ஜலந்தர் மறைமாவட்டத்தில் பிஷப் பிரான்கோ முலக்கால் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார் என்று ஒரு கன்னியாஸ்திரீ காவல் துறையில் புகார் கொடுத்த சில நாட்களில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது.

கேரள கன்னியாஸ்திரீ கொலை வழக்கு: பாதிரியார், கன்னியாஸ்திரீக்கு ஆயுள் தண்டனை விதித்த சிபிஐ நீதிமன்றம் - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

28 ஆண்டுகளாக நடந்து வந்த கேரள கன்னியாஸ்திரீ அபயா கொலை வழக்கில் பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரீ ஸ்டெபி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது கேரள மாநில சிபிஐ நீதிமன்றம். சிறை தண்டனையுடன் சேர்த்து பாதிரியார் தாமஸ் கோட்டூருக்கு ரூ. 6.50 லட்சமும் கன்னியாஸ்திரீ ஸ்டெபிக்கு ரூ. 5.50 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தண்டனை இவர்களுக்குப் போதுமானதல்ல. மதகுரு என்ற போர்வையில் ஒளிந்துகொண்டு கலவியில் ஈடுபட்ட பாதிரிக்கும் ஸ்டெபி ஆண்டிக்கும் தூக்குத் தண்டனை கொடுக்கப்படவேண்டும். இந்தப் பாதிரி இன்னும் எத்தனை கன்னியாஸ்திரி ஆண்டிளுடன் தொடர்பில் இருந்தானோ!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

இவங்களுக்கு பாவ மன்னிப்பு வழங்க ஆள் இல்லையெப்பா வாலி

எல்லா மதங்களிலும் இவை நடக்கிறது வெளிவரும் தீர்ப்புக்களும் வழங்கப்படும் ஆனால் அவைகளை மதவாதிகள் ஏற்றுக்கொள்ள மறுப்பதால் அதே பிரச்சினை மீண்டும் எங்கோர் மூலையில் நடந்தேறுகிறது 

பல வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் இருக்கு அதை எழுதினால் இங்கு மத பிரச்சினையாக வந்து நிற்கும் இந்த திரி . 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாலி said:

இந்த தண்டனை இவர்களுக்குப் போதுமானதல்ல. மதகுரு என்ற போர்வையில் ஒளிந்துகொண்டு கலவியில் ஈடுபட்ட பாதிரிக்கும் ஸ்டெபி ஆண்டிக்கும் தூக்குத் தண்டனை கொடுக்கப்படவேண்டும். இந்தப் பாதிரி இன்னும் எத்தனை கன்னியாஸ்திரி ஆண்டிளுடன் தொடர்பில் இருந்தானோ!

என்னைப் பொறுத்தவரைக்கும் அவர்கள் பரஸ்பர சம்மதத்துடன் 3sumசெய்ததில் தவறில்லை . அது மனிதர்களால் உருவாக்கப்பட்ட  கோட்பாடுக்களுக்கு மட்டுமே எதிரானது. ஆனால் ஒருவரை கொலை செய்தமையும், அதில் இருந்து தப்பிக்க எல்லாவிதமான வழிகளையும் பயன்படுத்தியமையும் தான் தவறானது. இந்த தண்டனை போதுமானது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிழம்பு said:

இவர்கள் என்ன கண்றாவியையும் செய்துவிட்டுப் போகட்டும். ஆனால் மதகுரு கன்னியாஸ்திரி என்ற போர்வைக்குள் ஒளிந்திருக்கும் ஓநாய்களைத் தான் எதிர்கின்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வாலி said:

இவர்கள் என்ன கண்றாவியையும் செய்துவிட்டுப் போகட்டும். ஆனால் மதகுரு கன்னியாஸ்திரி என்ற போர்வைக்குள் ஒளிந்திருக்கும் ஓநாய்களைத் தான் எதிர்கின்றேன் .

எங்கட சாமிகளையும் பக்தைகளையும் விட்டுவிட்டீர்களே 😂😍

  • கருத்துக்கள உறவுகள்

சிஸ்டர் அபயா கொலை- குற்றாவாளிகளை பாதுகாத்த திருச்சபை!

28 ஆண்டுகளுக்கு முன்னர் கேரளாவையே உலுக்கியது அந்த நிகழ்வு. 19 வயதே நிரம்பிய கத்தோலிக்க பெண் துறவி அபயா 1992-ஆம் ஆண்டு மார்ச் 27-ஆம் தேதி மாலை அவர் தங்கியிருந்த புனித பியூஸ் கான்வென்ட் வளாக கிணற்றுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டார். கேரளாத்தை மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவையுமே உலுக்கிய அந்த நிகழ்வில் இது கொலையா? தற்கொலையா என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம் கேரள அரசுக்கு இருந்தது. அன்று கேரளத்தை ஆட்டி செய்த காங்கிரஸ் அரசுக்கு இது நெருக்கடியாக மாறிய போதும் கத்தோலிக்க திருச்சபைகளின் அழுத்தங்களை மீறி கேரள போலீசால் இவ்வழக்கை நேர்மையாக நடத்த முடியவில்லை.

ஓராண்டு முடிவில் இந்த வழக்கை கைவிடும் நிலைக்கு வந்த கேரள போலீஸ் அபயா கிணற்றுக்குள் கிடந்தது போல இந்த வழக்கையும் கிணற்றுக்குள் போட்டது. ஆனால், தாமஸ் கோட்டூர், சிஸ்டர் செஃபி இருவர் மீதும் சந்தேகம் இருந்தாலும் அந்த வழக்கு அதற்கு மேல் முன்னேறவில்லை.

1993-ஆல் ஆண்டு 25 வயதே நிரம்பிய கத்தோலிக்கரான ஜெமோன் புத்தன்புரைக்கல் ஏன்ற மனித உரிமை ஆர்வலர். அபயா கொலை செய்யப்பட்டுள்ளார். சிபிஐ இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராடினார். அபயாவின் பெற்றோரும் அவருடன் இணைய மீண்டும் இந்த வழக்கு சூடு பிடிக்க கேரள அரசு சிபிஐ வசம் வழக்கை ஒப்படைத்தது.
சிபிஐ விசாரணை அதிகாரியாக பி.தாமஸ் என்ற கத்தோலிக்கர் நியமிக்கப்பட்டார். ஆரம்பத்திலேயே இது கொலை என்பதை உணர்ந்த தாமஸ் “அபயா கொல்லப்பட்டிருக்கிறார். ஆனால், சில இடங்களில் நிலவும் மவுனங்களால் இதை நிரூபிக்க போதுமான ஆதரங்கள் கிடைக்கவில்லை” என்றதோடு எப்படியாவது குற்றவாளிகள் எனத் தெரிந்த தாமஸ் கோட்டூர் மற்றும் சிஸ்டர் செஃபியை கைது செய்ய முயன்றார். ஆனால், எங்கிருந்தோ வந்த அழுத்தம் அவரை பணி செய்ய விடாமல் தடுக்க நேர்மையான விசாரணை அதிகாரியான பி.தாமஸ் பதவியை விட்டே சென்றார்.

பின்னரும் அந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டு வந்தது. அபயா பிணமாக மீட்கப்பட்டுவதற்கு முந்தைய நாள் அபயாவை கடைசியாகக் கண்ட அறைத் தோழியும் துறவியுமான ஷெல்லி முதலில் சாட்சி சொன்னார். பின்னர் பிறழ் சாட்சியாக மாறினார். ஆனால், அந்த கான் வெண்டில் அருகில் வசித்த ஒருவர் பிணமாக மீட்கப்பட்ட அன்று அதிகாலை பெண் துறவியர் இல்லத்திற்குள் அருட்தந்தை தாமஸ் கோட்டூரைப் பார்த்ததாக சாட்சியம் அளித்தார்.

இன்னொரு பக்கம் இந்த வழக்கை சிதைக்க தாமஸ் கோட்டூர் வேணுகோபால் நாயர் என்ற வழக்கறிஞருக்கு லஞ்சல் கொடுக்க அவரும் விசாரணை ஆணையத்தில் உண்மையைச் சொல்ல தாமஸ்கோட்டூரும், சிஸ்டர் செஃபியும் கைது செய்யப்பட்டார்கள். 2008-ஆம் ஆண்டில்தான் இருவரும் கைது செய்யப்பட்டார்கள்.
நடந்தது இதுதான்!

spacer.pngகொலையாளிகள் தாமஸ்கோட்டூர் ம|ற்றும் செஃபி

கேரள மாநிலம் கோட்டயத்தில் இருக்கும் சிரியன் கத்தோலிக்கர்களுக்குச் சொந்தமான புனித பியூஸ் கான்வெண்டின் சமையலறையில் வைத்து அருட்தந்தை தாமஸ் கோட்டூரும் ம் சிஸ்டர் செஃபியும் பாலியல் உறவு கொள்கிறார்கள். அதை அதிகாலை தண்ணீர் அருந்தச் சென்ற அபயா பார்த்து விடுகிறார். பெரும் அர்ப்பணிப்போடும், சேவை மனப்பான்மையோடும் துறவு வாழ்வுக்குச் சென்ற இளம் பெண்ணான அபயாவுக்கு இது அதிர்ச்சியாக இருக்க அந்த அறையிலேயே சுத்தியாலால் தாக்கப்பட்டு அபயா கொல்லப்படுகிறார். அவரது உடலை கிணற்றுக்குள் தள்ளுகிறார்கள். இதுதான் நடந்தது.

அருட்தந்தையு பெண் துறவியல் இல்லத்தில் இருந்ததை பார்த்த சாட்சியங்கள் இருக்க அவர்கள் உறவு கொண்டார்கள் என்பதற்கு சாட்சியம் இல்லையா? ஆமாம் இருந்தது. அந்த சம்பவம் நடந்த அதே அதிகாலை அடக்கா ரவி என்ற திருடன் அந்த துறவியர் இல்லத்தின் மேலே இருந்த செம்பு இடிதாங்கியை திருடச் செல்கிறான். அவன் தாமஸ் கோட்டூரும், செஃபியும் உறவு கொண்டதை பார்க்கிறான். அவந்தான் கடைசி வரை பிறழ் சாட்சியாக மாறாமல் சிஸ்டர் அபயாவின் மரணத்திற்கு நீதி வழங்குகிறான்

இந்த அடங்கா ராஜு என்ற திருடனை கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்க முயல்கிறார்கள். அவன் சொல்கிறான் “என் தேவைகள் மிகச்சிறியவை அதற்கு திருட்டுத் தொழிலே போதும். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் அவர்களை கரையேற்றி விட்டால் போதும். ஆனால் அதற்கான என் மகள் வயதுடைய அபயாவின் கொலைக்காக பணம் பெற மாட்டேன்” என அனைத்து சித்திரவதைகளையும் தாங்குகிக் கொள்கிறான்.

கேரள போலீசார் பல நாட்கள் அடங்கா ராஜுவை போலீஸ் காவலில் வைத்து சித்திரவதை செய்தும், பண ஆசை காட்டியும் விலை போகாமல் உன்னதமான மனிதனாக அடங்கா ராஜு கடைசி வரை இருந்ததுதான் இந்த வழக்கின் சிறப்பு.

ஆனால், 28 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது அபயா வழக்கில் தாமஸ் கோட்டூருக்கும் சிஸ்டர் செஃபிக்கும் ஆயுள் தண்டனை வழங்கி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்த 28 ஆண்டுகளில் கத்தோலிக்க திருச்சபை அபயாவைக் கொன்ற கொலையாளிகளை பாதுகாக்க இந்தியாவின் உயர்ந்த வழக்கறிஞர்களை வைத்து நீதிமன்றங்களில் வாதாடியது.

குற்றம் புரிந்தவர்கள் இவர்கள்தான் என்பது தெரிந்தும் அவர்களை சபையை விட்டு நீக்காமல் பாதுகாத்தது. இதோ நீதி கிடைத்திருக்கிறது. இந்த தீர்ப்புக்குப் பின்னர் இரண்டு வாக்குமூலங்கள் நம்மை கசிய வைக்கிறது. இந்த வழக்கை ஆரம்பத்தில் விசாரித்த சிபிஐ விசாரணை அதிகாரி பி.தாமஸ் சொல்கிறார். “என்னோடு பணி செய்தவர்கள் டி.ஐ.ஜி போன்று பெரும் பதவிகளுக்குப் போய் விட்டார்கள். நான் என் பணியில் இருந்து விலகிக் கொண்டேன். நான் இறப்பதற்குள் அபயாவுக்கு நீதி கிடைக்காதோ என கவலைப்பட்டேன். இப்போது ஆறுதலாக இருக்கிறது” என கண்ணீர் கசிய சொல்கிறார்.
அந்த திருடன் அடக்கா ராஜு சொல்கிறார். “நான் இன்று இரவு குடித்து விட்டு நிம்மதியாக உறங்குவேன். அவள் என் மகள் நான் அடைந்த சித்திரவதைகள் கொஞ்ச நஞ்சமல்ல, இப்போது நாம் சந்தோசமாக இருக்கிறேன்” என்கிறார்.

இந்த கொலையில் நீதிக்காக இந்துக்களும், கத்தோலிக்கர்களும் இணைந்தே போராடியிருக்கிறார்கள். ஆனால் திருச்சபைதான் பாவத்திற்கு மேல் பாவம் செய்திருக்கிறது 28 ஆண்டுகளாக…!

https://inioru.com/சிஸ்டர்-அபயா-கொலை-குற்றா/

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கிருபன் said:

அடங்கா ராஜு நீங்கள் மனிதருள் மாணிக்கம். திருச்சபை காமக் கொடூரர்களைப் பாதுகாக்க முனைந்தது கொடூரம்!

  • கருத்துக்கள உறவுகள்
On 23/12/2020 at 17:58, உடையார் said:

எங்கட சாமிகளையும் பக்தைகளையும் விட்டுவிட்டீர்களே 😂😍

எங்கள் சாமிகளும் பக்தைகளும் நன்கு நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்புகள் அல்ல. ஆதலால் அவர்களின் எந்த நன்மையான / தீமையான நடவடிக்கைகளும் சமூகத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் இந்த அமைப்புக்களின் எண்ணிக்கைகளும் அவர்களின் செயற்பாடும் அதிகரிக்கும்போது பாதிப்புக்களின் அளவில் மாறுபாடு ஏற்படலாம்.

ஆனால் கத்தோலிக்க திருச்சபை போன்ற நன்கு நிறுவன மயப்படுத்தப்பட்ட அமைப்புக்களின் ஒவ்வொரு செயற்பாடும் அதிக அளவில் சமூகத்தின் மீது பாதிப்பை உண்டுபண்ணும்.

1 hour ago, வாலி said:

அடங்கா ராஜு நீங்கள் மனிதருள் மாணிக்கம். திருச்சபை காமக் கொடூரர்களைப் பாதுகாக்க முனைந்தது கொடூரம்!

கள்ளன் எப்போதாவது நான்தான் களவெடுத்தேன் என்று கூறியதுண்டா....😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.