Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
முன்னர் எல்லோராலும் Radio Ceylon என்றே
அழைக்கப்பட்ட "இலங்கை வானொலி "
1967ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 05ஆம் திகதி " இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்" ஆன வேளையில்
அறிவிப்பாளர்கள் நேயர்களுக்குத் தெளிவுபடுத்த சில காலம் " இது இலங்கை வானொலி... இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்" என்று அறிவிப்புகள் செய்தது அந்தக் கால நேயர்களுக்கு
ஞாபகம் இருக்கும்! அது வானொலி நேயர்களுக்கு ஓர் அற்புதமான காலம்..
அந்தக் காலகட்டத்தில் வர்த்தக ஒலிபரப்பில்
பணியாற்றிய ஒவ்வொருவரும் தத்தமது
பாணியில் தனித்துவம் மிளிர நிகழ்ச்சிகள்
படைத்தார்கள் என்றால் மிகையாகாது!
சாமான்ய நேயர்கள் தினம் தினம் தமது பெயர்கள் வானொலியில் ஒலிக்க வேண்டும் என்ற ஆசையில் நீங்கள் கேட்டவை, விடுமுறை விருப்பம் போன்றவற்றுக்குக்
கட்டுக்கட்டாக அஞ்சலட்டைகள் அனுப்பிவிட்டுக் காத்திருப்பார்கள்! எந்தப் பாடல் ஆனாலும் பரவாயில்லை.. பெயர் கேட்டால் போதும் என்ற நேயர்களுக்காக
"பொங்கும் பூம்புனல்" நாள்தோறும் காலையில் அனைவருக்கும் புத்துணர்வூட்டியது!
வெறுமனே பாடல்களை ரசிப்பதோடு நின்றுவிடாமல் தமது ஆற்றலை வானொலி வாயிலாக வெளிப்படுத்த விரும்பிய ஆக்கத்திறன் மிக்க நேயர்கள் கலந்து கொள்ள எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகள் அக்காலத்தில் வர்த்தக சேவையில் ஏராளமாகவே இருந்தன! ஒலிமஞ்சரி, இசையும் கதையும், பொதிகைத்
தென்றல், இசைமாலை, பாட்டும் பதமும்,
தேர்ந்த இசை, பூவும் பொட்டும், வாலிப வட்டம், ஆடவர் அரங்கம், வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி என்றெல்லாம்
நிகழ்ச்சிகள் பல நேயர்களைப் பின்னாளில்
படைப்பாளிகள் ஆக்கின!
இலங்கை வானொலி, இலங்கை ஒலிபரப்புக்
கூட்டுத்தாபனமாகி 54 ஆண்டுகள் கடந்து விட்டன... இந்த வேளையில் 1960களிலும் 70களின் ஆரம்ப காலப்பகுதியிலும் வர்த்தக சேவையில் நாம் முகம் காணாமலேயே நேசித்த அறிவிப்பாளர்கள் சிலரை நிழற்படங்களில் காண்போமா?
 
Image may contain: outdoor
 
S.P. மயில்வாகனன்
சிலோன் ரேடியோவைக் கடல் கடந்த நேயர் மத்தியிலும் புகழ் பெறச் செய்த முன்னோடி!
Image may contain: 1 person
 
SK பரராஜசிங்கம்

ஒலிமஞ்சரி சஞ்சிகை நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியதோடு
நம்நாட்டு மெல்லிசைப் பாடல்கள் வானலைகளில் வலம் வரச் செயல்பட்டவர்!
Image may contain: one or more people
 
ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம்

நல்ல தமிழில் இலக்கியத் தரமிக்க பொதிகைத் தென்றல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கி நேயர்களின் நேசம் வென்றவர்!
 
Image may contain: 1 person
 
சரா இமானுவேல்

இசையும் கதையும் நிகழ்ச்சிப் பிரதிகளை
உணர்வுபூர்வமாக வாசித்து உயிரூட்டியவர்
Image may contain: 1 person
 
சில்வெஸ்டர் பாலசுப்பிரமணியம்
பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சியில் புத்தம் புதுப் பாடல்களை வழங்கியே பேர் பெற்றவர்!
இவர் " நேரம்ம்ம்" என்று கூறும் பாணியே தனி!
 
Image may contain: 1 person, standing
 
 
BH அப்துல் ஹமீத்

இலங்கை வானொலியை உலகளாவிய ரீதியில் பெருமைப்படுத்திவரும் இமாலய
சாதனையாளர்
Image may contain: 1 person
 
 
C.நடராஜசிவம்

அறிவிப்பாளராக மட்டுமன்றி நடிப்பாற்றலால்
புகழ் பெற்றவர்! சிங்கள சின்னத்திரையில்
சாதனை படைத்தவர்!
 
Image may contain: 1 person
 
 
விமால் சொக்கநாதன்

இலங்கை வானொலியில் இவரது 'என் விருப்பம்' தனித்துவமானது! புலம்பெயர்ந்த பின்பும் BBC தமிழோசை மூலம் மனம் கவர்ந்தவர்! இப்போதும் வாராவாரம் "வீரகேசரி" யில் எழுதி வருகிறார்!
 
Image may contain: 1 person
 
 
KS ராஜா

திரை விருந்து உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளையும் புதுமை பொங்கத் தனக்கே உரித்தான உத்திகளைப் பயன்படுத்தி வழங்கி
இன்னும் இலங்கை வானொலி என்றதும்
தன் பெயரைப் பலரும் கூறவைப்பவர்
Image may contain: 1 person
 
R. சந்திரமோகன்

தனது ஒலிபரப்பில் ஜனரஞ்சகமான பாடல்களையே எப்போதும் சேர்த்து வழங்கியதோடு "சந்தனமேடை" மூலம்
ஈழத்து மெல்லிசையை மேம்படுத்த உழைத்தவர்
 
Image may contain: 1 person
 
புவனலோஜினி நடராஜசிவம்

இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பில்
முதலில் ஒலித்த பெண் குரல்களில் ஒன்று!
பூவும் பொட்டும் உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகள் படைத்தவர்!
 
Image may contain: 1 person, closeup
 
யோகா தில்லைநாதன்

மாதர் நிகழ்ச்சிகள் பல வழங்கியதோடு
இலங்கை வானொலி தமிழ்ச்சேவையில்
உயர்பதவி வகித்த பின் புலம்பெயர்ந்து
அங்கும் கலைப் பணிகள் புரிகிறார்!
 
Image may contain: 1 person, standing
 
ராஜேஸ்வரி சண்முகம்

வானொலிக் குயிலாக இன்றும் நேயர் நெஞ்சில் நிலைத்திருப்பவர்!
 
Image may contain: 1 person, sitting and table
 
கோகிலா சிவராஜா

இனிய குரல் வளத்துடன் பல்வேறு நிகழ்ச்சிகள் படைத்த இவர் பாடிய மெல்லிசைப் பாடல்கள் காலத்தால் அழியாதவை! கங்கையாளே, மாலையில் ஒரு மாங்குயில் பாடல்களை மறக்க முடியுமா?
 
Image may contain: 1 person
 
நன்றி முகனூல்
 

Mahdy Hassan Ibrahim

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

’ஈழத்தின் மெல்லிசைப்பாடல்கள்’ என்ற கலைவடிவம் உருக்கொண்டு உயிர் பெற்றுப் பரவ பெரிதும் காரணமாக இருந்தவர்களில் குறிப்பிடத் தகுந்தவர் எஸ்.கே. பரராஜசிங்கம் அவர்கள். ஆக்க சங்கீதம் பற்றிய பிரக்ஞையை விதைத்தவராகவும்; தன் உயிரைப் பிளியும் குரலால் ஈழத்தின் மெல்லிசைக்கு உயிர் கொடுத்தவராகவும் இவரின் ஈழத்துப் பாடல்கள் அமைந்திருந்தன. ஈழத்தின் இசைப்பாரம்பரியங்களையும் வழக்குகளையும் நன்கறிந்து கர்நாடக இசைஞானத்தோடும் ஏனைய நாட்டு இசைப்புலமையோடும் இருந்த பரா, எங்கு இசை அழகுகளைக் கண்ட போதும் அதனை ஈழத்தமிழுக்குக் கொண்டு வர விளைந்தவர். பரிசோதனை முயற்சிகள் பல செய்து ஈழத்து மெல்லிசையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியவர்.  அவர் குறித்த தமிழ்த்தடம் நிகழ்ச்சியை முன்வைக்கிறார்  யசோதா பத்மநாதன் அவர்கள். 

https://www.youtube.com/watch?v=GWs_Bew113Q

 

 

 

 

Edited by அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம் .. ஒலிபதிவு இருந்தால் இணைத்து விடுங்கள்..👌 .. அந்த காலத்திற்கு சென்று வர உதவும்.. 

👍

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.