Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது - 788 காளைகள் பங்கேற்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது - 788 காளைகள் பங்கேற்பு

உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது - 788 காளைகள் பங்கேற்பு

மதுரை,

உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் 788 காளைகளும், 430 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மிகுந்த கவனத்தோடு செய்யப்பட்டுள்ளன.

நாட்டு மாடுகள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க முடியும். கலப்பின மாடுகள் அனுமதிக்கப்படவில்லை. போட்டியில் பங்கேற்கும் மாடுகள் அனைத்திற்கும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்ட பிறகே காளைகள் வாடிவாசலில் களமிறங்குவதற்கு அனுமதிக்கப்படுகின்றன. அவ்வாறு பங்கேற்கும் மாடுகளின் வயது, அவற்றின் திமில், உடல்நிலை உள்ளிட்ட அனைத்தும் பரிசோதனை செய்யப்படுகின்றன.

இன்று காலை 8 மணிக்கு துவங்கி மாலை 4 மணி வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அனுப்பி விடப்பட்டன. அதன் பின்னர் பிற காளைகள் வாடிவாசல் வழியாக திறந்துவிடப்பட்டன. ஒரு மணி நேரத்திற்கு 50 வீரர்கள் என்ற அடிப்படையில் மாடுபிடி வீரர்கள் களமிறக்கப்படுகின்றனர். காளைகளை அடக்கும் வீரர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் அன்பழகன், அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் நிகழ்ச்சியைக் காண வந்துள்ளனர். மேலும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வர இருக்கின்றனர். இன்றைய போட்டிகளுக்கான பாதுகாப்பு பணியில் 2000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2021/01/14083310/The-world-famous-Avaniyapuram-Jallikattu-started.vpf

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 26 காளைகளை அடக்கிய 2 பேர் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 26 காளைகளை அடக்கிய 2 பேர் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முதல் ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையான இன்று அவனியாபுரத்தில் வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது.

வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளின் திமிலை மாடுபிடி வீரர்கள் பிடித்து காளைகளை அடக்க முற்பட்ட காட்சிகள் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. சில காளைகள், வீரர்களின் பிடியில் சிக்காமல் களத்தில் நின்று விளையாடின. 

வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வெளியேறும் காளைகளின் திமிலை வீரர்கள் இறுகப் பற்றிக் கொண்டு காளை மூன்று சுற்றுகள் சுற்றும்வரை பிடித்திருக்க வேண்டும் அல்லது 100 மீட்டர் தூரம் வரை திமிலைப் பற்றிக்கொண்டு செல்ல வேண்டும். இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றைச் செய்தாலும் அந்த வீரர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது. 


 
வீரர்கள் யாரையும் தன் அருகே வரவிடாமல், திமிலை பிடிக்க அனுமதிக்காமல் செல்லும் காளைகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு காளையின் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

இன்றைய ஜல்லிக்கட்டு போட்டிக்கு 788 காளைகள் பதிவு செய்யப்பட்டன. 430 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். 8 சுற்றுகளாக இன்று மாலை வரை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 520 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

திருநாவுக்கரவு, விஜய் ஆகிய இரு இளைஞர்கள் தலா 26 காளைகளை அடக்கி முதல் பரிசு வென்றனர்.

G.R. கார்த்திக் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டது.

 

https://www.maalaimalar.com/news/topnews/2021/01/14164649/2256214/avaniyapuram-jallikattu-two-youths-gets-first-price.vpf

  • கருத்துக்கள உறவுகள்

மிருகவதை என்பது காலாவதியான கலாசாரம் ஆகும், அது உங்களுடைய கலாசாரம் எனில் அதை புதுப்பிப்பது யாவருக்கும் நன்மை பயிக்கும்.பழையன கழிதலும், புதியது புகுதலும்  தமிழனுக்கு புதிதல்ல .

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

மிருகவதை என்பது காலாவதியான கலாசாரம் ஆகும்,

அவர்களுடைய ஜல்லிக்கட்டு கலாச்சாரத்துக்குள் சாதியும் இருக்கிறதாம் ☹️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, zuma said:

மிருகவதை என்பது காலாவதியான கலாசாரம் ஆகும், அது உங்களுடைய கலாசாரம் எனில் அதை புதுப்பிப்பது யாவருக்கும் நன்மை பயிக்கும்.பழையன கழிதலும், புதியது புகுதலும்  தமிழனுக்கு புதிதல்ல .

24 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அவர்களுடைய ஜல்லிக்கட்டு கலாச்சாரத்துக்குள் சாதியும் இருக்கிறதாம் ☹️

இந்த கொடுமையை விட ஜல்லிக்கட்டு பாதிப்பில்லாதது. ஜல்லிக்கட்டு காளைகளை பிள்ளைபோல்தான் வளர்க்கின்றார்கள். இறைச்சிக்கு விற்க மாட்டார்கள்.

Tierschutz: Attraktionen für Touristen oft mit Quälerei verbunden |  Nachrichten.at

Rodeo: Cowboy gegen Cowboy - Sport - Tagesspiegel

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

 

Tierschutz: Attraktionen für Touristen oft mit Quälerei verbunden |  Nachrichten.at

Rodeo: Cowboy gegen Cowboy - Sport - Tagesspiegel

இவை அனைத்தும் மிருக வதையே, ஜில்லிக்கட்டும் இவைகளுக்கு சளைத்தவையாகும். 
உலகல்லாம் உள்ள அநேக  கலாசாரங்களில் மிருகவதைகள்  இருந்தன , அநேகமானவை வழக்கொழிந்து போய்விட்டன,சிலதுகள் மட்டும் தொக்கிநிக்கின்றன. அவைகள் தான் ஜில்லிக்கட்டு, கோழி சண்டை , Bull Fight,Rodeo Riding.
 

1 hour ago, குமாரசாமி said:

இந்த கொடுமையை விட ஜல்லிக்கட்டு பாதிப்பில்லாதது. ஜல்லிக்கட்டு காளைகளை பிள்ளைபோல்தான் வளர்க்கின்றார்கள். இறைச்சிக்கு விற்க மாட்டார்கள்.

காளை மாடும் மிருகம். ஆடும் மிருகம். காளை மாட்டை இறைச்சிக்கு வெட்டமாட்டாத கருணை உள்ளம் கொண்ட கலாச்சாரத்தை கொண்டவர்கள் ஆட்டை கோவிலின் முன் கடவுள் பெயரால்  இரத்த பலியிட்டு அதை கடவுள் பெயரால் கறி சமைத்து உணபார்கள். என்ன கருணை அப்பாடா? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, zuma said:

இவை அனைத்தும் மிருக வதையே, ஜில்லிக்கட்டும் இவைகளுக்கு சளைத்தவையாகும். 
உலகல்லாம் உள்ள அநேக  கலாசாரங்களில் மிருகவதைகள்  இருந்தன , அநேகமானவை வழக்கொழிந்து போய்விட்டன,சிலதுகள் மட்டும் தொக்கிநிக்கின்றன. அவைகள் தான் ஜில்லிக்கட்டு, கோழி சண்டை , Bull Fight,Rodeo Riding.
 

இந்த சித்திரவதைகள் உங்கள் பட்டியலுக்குள் வருமா வராதா?

Sind Tierversuche sinnvoll?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, tulpen said:

காளை மாடும் மிருகம். ஆடும் மிருகம். காளை மாட்டை இறைச்சிக்கு வெட்டமாட்டாத கருணை உள்ளம் கொண்ட கலாச்சாரத்தை கொண்டவர்கள் ஆட்டை கோவிலின் முன் கடவுள் பெயரால்  இரத்த பலியிட்டு அதை கடவுள் பெயரால் கறி சமைத்து உணபார்கள். என்ன கருணை அப்பாடா? 

கோவில்களில் பலி எடுப்பதில் எனக்கு ஈடுபாடில்லை.
 

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, குமாரசாமி said:

இந்த சித்திரவதைகள் உங்கள் பட்டியலுக்குள் வருமா வராதா?

Sind Tierversuche sinnvoll?

 

ஆமாம்.

உடலை வருத்தும் நேர்த்திக் கடன்கள் - முன்னோர்களின் யுக்தியா ?

http://3.bp.blogspot.com/-vF6y5AuiY3U/UQOC7ovIliI/AAAAAAAAOiw/K3rcggldjGk/s200/small boys kavadi.JPG

இதுகும் தான்.

Edited by zuma

51 minutes ago, குமாரசாமி said:

கோவில்களில் பலி எடுப்பதில் எனக்கு ஈடுபாடில்லை.
 

எனக்கும் உங்களைப்போலவே நான்  யாழ்பாணத்தில் இருக்கும்போதே கோவில்களில் பலி எடுப்பதில் அறவே உடன்பாடு இல்லை. அதற்கு தடை வந்த போது மகிழ்ச்சியாக இருந்த‍து.  ஆனால் அது தான் தமிழ் கலாச்சாரம் என்று கூறுவோரும் உள்ளார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:
3 hours ago, குமாரசாமி said:

கோவில்களில் பலி எடுப்பதில் எனக்கு ஈடுபாடில்லை.

நல்லது

எனக்கும் உங்களைப்போலவே நான்  யாழ்பாணத்தில் இருக்கும்போதே கோவில்களில் பலி எடுப்பதில் அறவே உடன்பாடு இல்லை. அதற்கு தடை வந்த போது மகிழ்ச்சியாக இருந்த‍து.  ஆனால் அது தான் தமிழ் கலாச்சாரம் என்று கூறுவோரும் உள்ளார்கள். 

அது தான் தமிழ் கலாச்சாரம் என்று கூறுவோரும் உள்ளார்கள். *

கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுகிறவர்களே இப்படி சொல்லும் போது தான் எனக்கு தலை சுற்றுகிறது இவர்களது மேலான அன்பான சாமி இருக்கும் இடத்தை எப்படி இறைச்சி கடையாக மாற்ற இவர்களால் முடிகிறது 😂

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுகிறவர்களே இப்படி சொல்லும் போது தான் எனக்கு தலை சுற்றுகிறது

சுத்துற சுத்திலை தலை கழண்டு விழுப்போகுது கவனம்..😁

  • கருத்துக்கள உறவுகள்

உலக பிரசித்தி பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று ஆரம்பம் - Polimer  News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி ஆரம்பம்!

உலக பிரசித்தி பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

வாடிவாசலில் சீறிப் பாய காத்திருக்கும் 783 காளைகளை அடக்குவதற்கு 649 மாடுபிடி வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பார்வையாளர்களுக்கு இருபுறமும் வேலிகள் அமைத்து காளைகள் உள்ளே நுழையாமல் இருக்க பாதுகாப்பு வசதிகள், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் சிறந்த காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படவுள்ளது. 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/பாலமேடு-ஜல்லிக்கட்டு-போட/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அசர வைத்த காளைகள்... ஆரவாரத்துடன் அடக்கிய வீரர்கள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அசர வைத்த காளைகள்... ஆரவாரத்துடன் அடக்கிய வீரர்கள்

அலங்காநல்லூர்:

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (சனிக்கிழமை) கோலாகலமாக நடைபெற்றது.

 


மதுரை மாவட்டத்தில் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி பொங்கல் அன்று அவனியாபுரத்திலும், மறுநாள் பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு விமரிசையாக நடைபெற்றது. உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (சனிக்கிழமை) காலை தொடங்கியது.

போட்டியை தொடங்கி வைப்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் காலை 8.25 மணிக்கு வாடிவாசல் முன்புள்ள திடலுக்கு வந்தனர்.

அவர்களுக்கு விழாக்குழு சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து அலங்காநல்லூர் முனியாண்டி கோவில் காளை அழைத்து வரப்பட்டது.

அந்த காளைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் விழா மேடைக்கு வந்தனர். அவர்களுக்கு தொகுதி எம்.எல்.ஏ. மாணிக்கம் பூங்கொத்து கொடுத்தார். அதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பச்சை கொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.

அதன் பிறகு முனியாண்டி கோவில் காளை உள்பட 3 கோவில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. அதனை யாரும் பிடிக்கக்கூடாது என்பதால் காளையர்கள் ஓரங்கட்டி நின்றனர்.

3 காளைகளும் ஜல்லிக்கட்டு திடலை கடந்த பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் கூறியதாவது:-

உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுக்கு இடையூறு வந்தபோது, அந்த ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு அம்மாவின் அரசு தூணாக விளங்கி, மிக எழுச்சியோடும் சிறப்போடும் நடைபெறுவதற்கு காரணகர்த்தாகவாக இருந்து, ஜல்லிக்கட்டு நாயகன் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படக்கூடிய, இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்த, மரியாதைக்குரிய அண்ணன் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்று சிறப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் இந்த மண் அனைவராலும் பாராட்டப்படக்கூடிய மண்ணாகும். இந்த மண்ணிலே பிறந்த அத்தனை இளஞ்சிங்கங்களும், சீறி வருகின்ற காளைகளை பிடித்து அடக்குவதற்கான பக்குவத்தோடு இங்கே நின்று கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு சீறி வருகின்ற காளைகளை அடக்குகின்ற இளைஞர்கள் பட்டாளம் நிறைந்த இந்த ஜல்லிக்கட்டு விழா உலகப் புகழ்பெற்ற விழா என்று சொன்னால் அது மிகையாகாது. உலக மக்கள் அனைவரும் காணக்கூடிய இந்த வீர விளையாட்டை, நம்முடைய கலாச்சார பண்பாட்டை, பாரம்பரியம் மிக்க பண்பாட்டைக் காக்கக் கூடிய ஜல்லிக்கட்டு விளையாட்டை, அம்மாவின் அரசுதான் நிலைநிறுத்துகிறது என்பதைப் பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன்.

இந்த வீர விளையாட்டில் கலந்து கொண்டிருக்கிற அனைத்து இளைஞர் பெருமக்களுக்கும், அதோடு, வீரமிக்க காளைகளை வளர்த்த விவசாயப் பெருங்குடி மக்களுக்கும், வருகை தந்திருக்கின்ற அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதே கருத்தை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் வலியுறுத்தி பேசினார்.

பன்நெடும் காலமாக தொடர்ந்து நடைபெற்று வரும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பெருமையும், பாரம்பரியமும் கொண்டது. இந்த போட்டியினை சிறப்பாக நடத்துவதற்கான அனுமதி அம்மாவின் அரசு சார்பில்தான் கிடைக்கப்பெற்றது என்பதை மறந்து விடக்கூடாது என்று அவர் கூறினார்.
 

அதன் பிறகு வாடிவாசல் வழியாக காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதனை அடக்க ஜல்லிக்கட்டு திடலில் திரண்டிருந்த காளையர்கள் மல்லுக்கட்டினர். சில காளைகள் களத்தில் நின்று விளையாடி வீரர்களை பந்தாடியது. இதேபோல் காளையர்களும் களத்தில் சுழன்று காளைகளின் திமிலை பிடித்து மடக்கினர்.
 
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காளை


இந்த போட்டியை பார்ப்பதற்கு வசதியாக சுமார் 8 அடி உயரத்தில் 200 மீட்டர் நீளத்திற்கு இரும்பு தடுப்புகளுடன் காலரிகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் இருந்தபடி பார்வையாளர்கள் காளையர்களை உற்சாகப்படுத்தி கொண்டிருந்தனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் விழா மேடையில் அமர்ந்து சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்தனர்.

சிறப்பாக காளைகளை பிடித்த வீரர்களை அவர்கள் உற்சாகப்படுத்தினர். மேலும் களத்தில் நின்று வீரர்களை அச்சுறுத்திய காளைகளுக்கும் சபாஷ் கொடுத்தனர்.

போட்டிகளில் வெற்றி பெற்றவீரர்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு கார், தங்க காசுகள், மோட்டார் சைக்கிள், சைக்கிள், பிரிட்ஜ், பீரோ, டி.வி., பித்தளை பாத்திரங்கள், நாற்காலிகள் என பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடக்க விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர், பாஸ்கரன், கே.டி.ராஜேந்திரபாலாஜி, கடம்பூர் ராஜூ, ரவீந்திரநாத் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜன்செல்லப்பா, மாணிக்கம், சரவணன், பெரியபுள்ளான், நீதிபதி, முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம், அலங்கா நல்லூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஜல்லிக்கட்டு விழாவில் முதல்வர், துணை முதல்வர் பங்கேற்றதை முன்னிட்டு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தென் மண்டல ஐ.ஜி. முருகன் மேற்பார்வையில் மதுரை சரக டி.ஐ.ஜி. ராஜேந்திரன், போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தலைமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

முன்னதாக போட்டியில் பங்கேற்ற காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே களத்தில் இறக்கப்பட்டன.

வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முக கவசம் அணிந்த பிறகே களத்தில் இறக்கப்பட்டனர். போட்டியில் பங்கேற்க 750 காளைகள், 550 காளையர்கள் தேர்வாகி இருந்தனர். மாடுபிடி வீரர்கள் சுற்று வாரியாக களத்தில் இறக்கப்பட்டனர். அவர்கள் ஆர்வத்துடன் களம் இறங்கி காளைகளை அடக்கினர்.

உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க திருநெல்வேலி, திண்டுக்கல், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மட்டுமின்றி இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் காளைகள் லாரி, வேன்களில் கொண்டு வரப்பட்டிருந்தன. அவைகளும் களத்தில் நின்று விளையாடி பரிசுகளை தட்டிச்சென்றன.

 

https://www.maalaimalar.com/news/topnews/2021/01/16125901/2266538/Tamil-News-Alanganallur-Jallikattu-750-bulls-participated.vpf

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் வென்ற சிறந்த வீரர்களுக்கும், சிறந்த காளைகளுக்கும் முதல்வர், துணை முதல்வர் பரிசுகளை வழங்கினர்

avaniyapuram-jallikattu-cm-dy-cm-gives-away-prizes  
 

மதுரை

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் சிறந்த வீரர்களுக்கும் சிறந்த காளைகளுக்குமான பரிசுகளை முதல்வர், துணை முதல்வர் வழங்கினர்.

தைப்பொங்கல் அன்று அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு முதல்வர் பெயரில் ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், சிறந்த காளைகளுக்கு துணை முதல்வர் பெயரில் ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா அறிவித்தார்

ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரர்களாக முத்துப்பட்டி திருநாவுக்கரசு, அவனியாபுரம் விஜயனும் தேர்வு செய்யப்பட்டனர். சிறந்த காளையாக வில்லாபுரம் கார்த்திக்கின் காளை தேர்வு செய்யப்பட்டது

இதனைத் தொடர்ந்து மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் வி.வி ராஜன் செல்லப்பா ஏற்பாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டியில் சிறந்த மாடுபிடி வீரர்கள் திருநாவுக்கரசு, விஜயன் ஆகியோருக்கு தலா ஒரு லட்சம் ரூபாயை முதல்வர் ப்ழனிசாமி வழங்கினார். சிறந்த காளைக்கான பரிசினை வில்லாபுரம் கார்த்திக்கு ஒரு லட்சம் ரூபாயை துணை முதல்வர் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் பல்வேறு உதவிகளைச் செய்த முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் நன்றியைத் தெரிவித்தனர்

இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே ராஜூ, வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரை மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் வி.வி.ஆர் ராஜ்சத்யன், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞரணிச் செயலாளர் வக்கீல் ரமேஷ்,
திருப்பரங்குன்றம் ஒன்றிய கழகச் செயலாளர் நிலையூர் முருகன் உட்பட பலர் இருந்தனர்

தங்களுக்குப் பரிசுத் தொகையை வழங்கி இதன் மூலம் ஜல்லிக்கட்டு வீரர்களை கவுரப்வபடுத்திய முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் ஜல்லிக்கட்டு வீரர்கள் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/622704-avaniyapuram-jallikattu-cm-dy-cm-gives-away-prizes-1.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.