Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐசக் நியூட்டனும் - 17ம் நூறாண்டின் லொக்டௌனும் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐசக் நியூட்டனும் - 17ம் நூறாண்டின் லொக்டௌனும் 

Image may contain: 1 person, outdoor

ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள அவரது சிலை.

இப்போது நாம் ஒரு பெரும் லொக்டௌன் னினுள்  முடங்கப்பட்டுளோம்.

17ம் நூறாண்டில், இதேபோன்ற ஒரு முடக்கத்தில் தான், விஞ்ஞான உலகத்துக்கு, நியூட்டன் எனும் சிறந்த விஞ்ஞானி கிடைத்தார்.

தனது தந்தையார் இறந்து, மூன்று மாதங்களின் பின்னரே நியூட்டன் பிறந்தார். அவர் ஒரே ஒரு பிள்ளை என்பதால், இறந்த தந்தையின் பெயரே அவருக்கு இடப்பட்டது. 

அவரது தாயார் மறுமணம் செய்து, மூன்று பிள்ளைகளை பெற்றுக் கொண்டார். நியூட்டனுக்கும், அவரது, மாற்றுத் தந்தைக்கும் ஒத்து போகாததால், தனது பாட்டியின் கவனிப்பில் வளர்ந்தார் அவர்.

வடக்கு இங்கிலாந்தின், கிராந்தம் பகுதியில் உள்ள கிங்ஸ் பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தார் அவர். தீடீரென அவரது மாற்றுத் தந்தை இறந்து விட, தவித்துப்போன தாய்க்கு உதவியாக அவருடன் வாழ  தொடங்கினார் நியூட்டன். 

குடும்பத்தின் பண கஷடம் காரணமாக, படிப்பினை நிறுத்தி, விவசாய வேலைகளுக்கு போக வேண்டும், என தாயார் வற்புறுத்தினர்.

ஆனாலும், அவரது பாடசாலை ஆசிரியர், கல்வியினை முடித்து, பின்னர் வேறு வேலைக்கு போகலாம் என வலியுறுத்தியதால் அவர் கல்வியினை தொடர்ந்தார். 

பாடசாலையில், இவரை தொடர்ந்து தொந்தரவு செய்த, (bully) இன்னோரு மாணவனுக்கு, தான் அவனிலும் பார்க்க படிப்பில் சிறந்தவன் என காண்பிக்க, உண்டான போட்டியே அவரை சிறந்த மாணவனாகியது.

1661 யூன் மாதம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக டிரினிட்டி கல்லூரிக்கு  BA படிக்க சென்றார் அவர். அங்கே, சாப்பாட்டு செலவுக்கு, சமையல் கூடத்தில் சிறிய வேலைகளை செய்தார். சிறப்பாக படித்ததால் 1664ம் ஆண்டில், மேலும் நான்கு வருடங்கள் MA படிக்க கூடிய வகையில் ஸ்காலர்ஷிப் கிடைத்தது.

எனினும் 1965 ம் ஆண்டில், ஆகஸ்ட்  மாதத்தில், ஒரு பெரும் தொற்று நோய் பரவல் காரணமாக பல்கலைக்கழகம் மூடப்பட்டது.

ஏப்ரல் 1667 ல், மீண்டும் திறக்கும் வரை அவர் வீட்டிலேயே முடங்கி இருந்தாலும், பல விடயங்களை படித்து தம்மை மெருகேற்றிக் கொண்டார்.

விந்தரோப் எனும் பகுதியில் இருந்த வீட்டில் தங்கியிருந்த போதே, ஆப்பிள் விழுந்ததும், அவரது சிந்தனை விரிந்ததும், புவியீர்ப்புக் கொள்கை உருவானதும் நடந்தது.

Image may contain: tree, grass and outdoor

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இன்று காணப்படும், நியூட்டன் ஆப்பிள் மரத்தின்.... வாரிசு.

Image may contain: tree, plant, outdoor and nature

மீண்டும் பல்கலைக்கழகம் திரும்பிய அவர், ஐசக் பர்ரோவ் எனும் பேராசியரின் கவனத்தினை ஈர்த்தார்.

அதன் காரணமாக, 1669 ல் அந்த பேராசிரியர் ஓய்வு பெறும் போது, MA பட்டம் எடுத்திருந்த நியூட்டன், பேராசிரியர் ஆகி அவரது இடத்தினை எடுத்துக் கொண்டார்.

விஞ்ஞானத்தில் ஆர்வம் கொண்டிருந்த, இரண்டாம் சார்லஸ் மன்னரால் 1662ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டிருந்த Royal Society யின் உறுப்பினராகவும் பின்னர் அதன் தலைவராகவும் விளங்கினார். இன்றுவரை இயங்கும்,பழமை மிக்க  ஒரு விஞ்ஞான அமைப்பு Royal Society ஆகும்.

https://royalsociety.org/about-us/history/

நியூட்டன், ஒரு பௌதிகவியலாளரும், கணிதவியலாளரையும் இருந்தார்.

புதிய பௌதிக கொள்கைகளையும், இயக்க விதிகள் மூன்றினையும் தந்த நியூட்டன், 17ம் நூறாண்டின் ஈடு இணையில்லாத விஞ்ஞான பெருமகன் ஆக கொண்டாடப்படுகின்றார்.

லொக்டௌன் காலத்தில் வீட்டில் இருந்த போதே, அவர் பல விடயங்கள் குறித்து ஆய்வு, சிந்தனை செய்து எழுதி உலகுக்கு தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1687ல் புவிஈர்ப்பு குறித்து எழுதி தனது அவதானிப்பினை வெளியே சொன்னார். 

1705ம் ஆண்டில், விஞ்ஞான உலகுக்கு அளப்பரிய சேவைகள் செய்தமை காரணமாக, அரசி ஆன் அவரை கவுரவம் செய்ததன் மூலம் சார் பட்டம் கிடைத்தது.

லண்டனில், காசுத்தாள், நாணயங்களை அச்சிடும், றோயல் மின்ட் இல் பதவி வகித்த அவர், 1727ம் ஆண்டு மார்ச் மாதம் 27ம் திகதி தனது உறக்கத்தில் மரணம் அடைந்தார்.

திருமணமே செய்து கொள்ளாத அவர், கடைசி காலத்தை, தனது அரை சகோதரியின், மகள் வீட்டிலேயே (பேத்தி) களித்தார். 

Image may contain: 1 person, indoor

No photo description available.

Edited by Nathamuni

  • Nathamuni changed the title to ஐசக் நியூட்டனும் - 17ம் நூறாண்டின் லொக்டௌனும் 
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

திருமணமே செய்து கொள்ளாத அவர், கடைசி காலத்தை, தனது அரை சகோதரியின், மகள் வீட்டிலேயே (பேத்தி) களித்தார்

Image may contain: 1 person, indoor

No photo description available.

நல்ல கட்டுரை முனியர்.நானும் இந்த லொக்டவுன்நேரத்திலை ஏதாவது கண்டுபிடிக்கலாம் என்றுநினைக்கிறன் ஆனால் முடியுதே இல்லை. அது சரி சகோதரியின் மகள் எப்பிடி பேத்தி ஆகும் மருமகளல்லோ?

  • கருத்துக்கள உறவுகள்

சேர். ஐசக் நியூட்டனின் சிறிய ஆனால் சிறப்பான கட்டுரை.....!  👍

நன்றி நாதம்ஸ் .....!  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாதவூரான் said:

நல்ல கட்டுரை முனியர்.நானும் இந்த லொக்டவுன்நேரத்திலை ஏதாவது கண்டுபிடிக்கலாம் என்றுநினைக்கிறன் ஆனால் முடியுதே இல்லை. அது சரி சகோதரியின் மகள் எப்பிடி பேத்தி ஆகும் மருமகளல்லோ?

மகளின் வீட்டில் பேத்தியின் கவனிப்பில் இருந்தார்.

காசு இருந்ததே.... 🤑

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு வரலாற்று கட்டுரை 👍🏽

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Nathamuni said:

மகளின் வீட்டில் பேத்தியின் கவனிப்பில் இருந்தார்.

காசு இருந்ததே.... 🤑

சரி சரி  😁

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை முடிந்து விட்டது 
ஒன்று கடனாக வைத்து கொள்ளவும் 

On 15/1/2021 at 11:54, Nathamuni said:

லொக்டௌன் காலத்தில் வீட்டில் இருந்த போதே, அவர் பல விடயங்கள் குறித்து ஆய்வு, சிந்தனை செய்து எழுதி உலகுக்கு தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Time & space இரண்டும் creativityக்கு அவசியம் என எங்கோ கேட்ட ஞாபகம். Lockdownல் கால அவகாசமும், சக மனிதரது  சிந்தனைகள், கருத்துக்களால் ஆக்கிரமிக்கப்படாத தனிமையான ஓர் இடமும் நியூட்டனின் சிந்தனாசக்தி தங்குதடையின்றித் தொழிற்பட்டு உலகிற்குப் பயனுள்ள விடயங்களைக் கண்டுபிடிக்க உதவியிருக்கிறது. 

இன்னொரு விதத்தில், உலகத்தின் தேவையும், நியூட்டனின் சிந்தனாசக்தியை ஏதோ வழியில் பயன்படுத்தவேண்டும் என்ற அவருக்கான தேவையும் தகுந்த இடம், நிறைவான கால அவகாசம் இவற்றின் துணையோடு அவரைத் தூண்டியிருக்கும் என்றும் கொள்ளலாமோ! 

என்னைச் சிந்திக்கவைத்த பதிவுக்கு நன்றி நாதமுனி. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மல்லிகை வாசம் said:

இந்தவகை கண்டுபிடிப்பாளர்கள் முக்கியமான ஒரு நுட்பம் உள்ளதாக வாசித்தேன்.

அது, big picture view. ஒரு முழுமையான bird eye view இருந்தால் மட்டுமே கண்டு பிடிப்புகள் சாத்தியமாகலாம். எது, எது, எவ்வாறு... ஒரு பெரிய puzzle  இல் பொருந்திக் கொள்கிறது என்பதே big picture view.

இந்த இடத்தில திருகினால், அங்கே.. உதைக்கும், அல்லது இவ்வாறான விளைவுகள் உண்டாகும் என்னும் பரந்த பார்வை. அது வாசிப்பதன் மூலம் சாத்தியமாகலாம்.

இந்த சுவிச்சை போட்டால், அங்க தண்ணி பாயும் எண்டு தெரியாமலே  அதை தொட்டு, இப்ப பார் என்ன நடந்திருக்கெண்டு... போ, போய் ... அடியை வாங்கி கட்டு என்பார்களே 
 
இது big picture view ன் எதிர் நிலை.

சில சிறந்த வைத்திய நிபுணர்கள் இத்தகைய வியூ கொண்டதால் தான் மருந்துகளை சரியாக கொடுத்து, கைராசி மருத்துவர் என்கிறோம்.

இதை கொடுத்தால், அது நடக்கும்... ஆனால் இவருக்கு இன்ன கொம்பிலிகேஷன் இருப்பதால் பேதி வரும்... அதாலை, ஒரு முறை கொடுத்து, நிறுத்தி.... நிலைமை பார்த்து, இதை கொடுங்கள்.... அந்த ரியாக்ஷன் இல்லாவிடில், இதனையே மீண்டும் கொண்டுங்கள் என்று தாதிகளுக்கு எழுதி வைப்பதும் big picture view தான்.

என்னுடன் ஒரு இந்திய IT காரர் வேலை செய்தார்.... அவரே எனக்கு, கணக்கியலில் இருந்து IT  பாய உந்துதலாக இருந்தார்.

டேட்டாபேஸில் எதாவது கேட்டால், இரண்டு நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு இருந்து விட்டு, சில sql கோடிங் எழுதுவார். எங்கோயோ இருந்து, லபக் என்று தரவுகள் வந்து விழும். இதுவும் big picture view தான்.

இதனையே, big picture view இல்லாத வேறு ஒருவராயின், திருப்பி, திருப்பி எழுதி, அரைமணி நேரம் எடுத்துக் கொள்வார்கள்.

அரசியலில், இதுவே, மகிந்தா , ரணில் அரசியலுக்கு இடையே உள்ள வித்தியாசம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Nathamuni said:

முயற்சி செய்து பார்ப்போம் 

20 hours ago, Nathamuni said:

நான் முன்னர் குறிப்பிட்ட time & space போன்ற புறக்காரணிகள் தவிர்த்து / அவற்றை விடவும் முக்கியமானது நீங்கள் குறிப்பிட்ட big picture view. அல்லாவிடின் lockdownல இருக்கும் எல்லாரும் ஏதோ ஒன்றைக் கண்டுபிடித்திருப்பார்கள்! (நியூட்டன் ஆராய்ச்சியில் மூழ்கிக் கண்டுபிடித்தார்; ஆனால் lockdownஆல் பலர் மன அழுத்தத்துக்குள்ளாகி வேறு பல பாதகமான முடிவுகளைத் தேடினர்!)

கல்வி, வளர்ப்பு, அனுபவங்கள் இவை தவிரவும் ஒருவரின் பிறப்பிலும் இது எழுதப்பட்டிருக்க வேண்டும் என நான் கருதுகிறேன். சில திறமைகள், குணாதிசயங்கள் பெற்றோர் மற்றும் முன்னைய மூதாதையர் மூலம் கடத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது என் எண்ணம். Big picture viewம் பிறப்பாலும், வளர்ப்பு, கல்வி, அனுபவங்கள் மூலமாகவும் ஒருவருக்குக் கிடைத்திருக்கலாம். இந்தப் பார்வையுடன், கடின உழைப்பும், timeம், spaceம் சேர்ந்தால் நமக்குப் பொருத்தமான துறையில் நாம் பிரகாசிக்கலாம் என்று கொள்ளலாமா! 😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மல்லிகை வாசம் said:

அப்படி இல்லையே. பிறக்கும் போது யாருமே திறமையுடன் வருவதில்லை. வளர்த்துக் கொள்வது.

பிரிட்டிஷ் பணக்காரர், ரிச்சர்ட் பிரான்சன், தந்தை நீதிபதி, படித்த குடும்பம். அவர் 15 வயதில் சாதாரண தரம் கூட முடிக்காமல் வெளியேறினார். சுஜமாக உழைத்தார். இன்று உலகின் 10 சிறந்த பிராண்டுகளில் ஒன்றான வர்ஜின் பிராண்டின் உரிமையாளர். ஆனால் மகள் டாக்டர். பிரிட்டனின் சிறந்த பல்கலைக்கழகத்தில் படித்தார். 

****

IT துறையில் இருப்பதால், இணைய தளம் உருவாக்குத்தல், அது தொடர்பான, டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்த ஒரு புரிதல் உண்டு.

ஒரு தமிழ் இளைஞர், பெரும் பணம், செலவு செய்து விளம்பரம் செய்துள்ளார். இணைய தளங்களை வடிவமைத்து தருவதாக. அந்த அன்பருடன் எதுவும் தெரியாதது போல பேசினேன்.

உண்மையிலேயே, அவருக்கு எதுவுமே தெரியவில்லை. ஈமெயில் மார்க்கெட்டிங் செய்ய உதவுவீர்களா என்றால், அவருக்கு தெரியவில்லை. ஜிமெயில், ஹொட்மெயிளிலும் பார்க்க நல்லது.... 15gb  பிரீ ஸ்பேஸ் தருவார்கள். ஈமெயில் மார்கெட்டிங் சிறப்பாக செய்யலாம். என்கிறார், எந்த வித புரிதலும் இல்லாமல்.

சரி... வாடிக்கையாளர்கள் மெயில் ஐடி இல்லாமல், யாருக்கு, எப்படி அனுப்புவது என்றால், பதில், அப்பாவியாக வருகிறது. உங்களுக்கு தெரிஞ்ச ஆட்களுக்கு தானே அனுப்புவியல்....

அசந்து போய் விட்டேன் என்பதிலும் பார்க்க, அவர் குறித்து கவலை தான் வந்தது. முதலில், வாடிக்கையாளர்கள், கையில் மொபைலுடன், காதில் ஹெட் செட் உடன் இருக்கிறார்கள். அவர்களை ரேடியோ, டிவி மூலம் அணுக முடியுமா என்ற புரிதலே இல்லாவிடில் எப்படி? 

இதனை தான், ஒரு வியாபாரத்தின், big picture  view  இல்லாத நிலை என்பேன்.  

Edited by Nathamuni

41 minutes ago, Nathamuni said:

அப்படி இல்லையே. பிறக்கும் போது யாருமே திறமையுடன் வருவதில்லை. வளர்த்துக் கொள்வது.

பிரிட்டிஷ் பணக்காரர், ரிச்சர்ட் பிரான்சன், தந்தை நீதிபதி, படித்த குடும்பம். அவர் 15 வயதில் சாதாரண தரம் கூட முடிக்காமல் வெளியேறினார். சுஜமாக உழைத்தார். இன்று உலகின் 10 சிறந்த பிராண்டுகளில் ஒன்றான வர்ஜின் பிராண்டின் உரிமையாளர். ஆனால் மகள் டாக்டர். பிரிட்டனின் சிறந்த பல்கலைக்கழகத்தில் படித்தார். 

நீங்கள் கூறியதில் 'திறமை வளர்த்துக்கொள்வது' என்ற கருத்துடன் உடன்படுகிறேன். நிச்சயமாகக் கடின உழைப்பின் மூலம் வளர்க்கப்பட வேண்டிய ஒன்று தான் திறமை.

நான் சொல்லவந்தது, பிறப்பினால் கிடைத்த திறமைக்கான அடிப்படைக் காரணிகளைப் பற்றி. ரிச்சர்ட் பிரான்சனை எடுத்துக்கொண்டால், அவர் பெரிதாகப் படிக்காவிட்டாலும் கூட படித்த குடும்பத்தில் பிறந்தமையால் திறமைக்கான சில காரணிகள் அவருக்குப் பிறப்பிலேயே இயற்கையாகக் கிடைத்திருக்கக்கூடும். அதற்காகத் தந்தை போல நீதிபதியாக வேண்டிய அவசியமில்லை. சட்டத்துறையில் அவருடைய தந்தைக்கு big picture view இருந்திருக்கக்கூடும். அவருடைய மகளுக்கு மருத்துவத்துறையில் இந்தப் பார்வை இருக்கக்கூடும். பிரான்சன் வியாபாரத்தில் அந்தத் திறமையைப் பயன்படுத்தினார். இதனுடன் உழைப்பின் அளவும், கிடைத்த வாய்ப்புக்களும், timingம் ஒவ்வொருவரின் வெற்றியின் அளவைத் தீர்மானிக்கும். ஏனைய திறமைகள் அவருடைய தாயார் மூலமோ, பாட்டன், முப்பாட்டன் மூலமோ பிறப்பினால் வந்து அவையும் அவருக்குக் கைகொடுத்திருக்கும். ஒரு திறமையை வளர்க்க அது மரபணு மூலம் ஒருவருக்குக் கிடைத்திருக்க வேண்டும் என்பதும், அப்படிக் கிடைக்காத ஒன்றை வளர்க்க முடியாது என்பதும் எனது கருதுகோள். (உயிரியல் விஞ்ஞானத்தில் வல்லவர்கள் யாராவது இதைப் பற்றித் தெளிவுபடுத்தவும். தவறென்றால் சொல்லவும்.). 

ஆகவே, எனது கண்ணோட்டத்தில், பிறப்பால் வராத ஒரு திறமையை வளர்க்க முடியாது; பிறப்பில் இயற்கையாக வந்தது என்பதற்காக அதை உழைப்பின் மூலம் வளர்க்காவிட்டாலும் அது தானாக வெளிப்படாது. பிறப்பால் பல திறமைகள் கலவைகளாக ஒவ்வொரு மனிதனிடத்திலும் உள்ளன; ஆனாலும் எல்லோரிடமும் எல்லாத் திறமையும் இருப்பதில்லை. கலவைகளாகப் பல திறமைகள் இருந்தாலும் கல்வி, அனுபவம், உலகத்துக்கு அவற்றுக்கான தேவை, கிடைத்த வாய்ப்புக்கள், பெற்றோரின் வளர்ப்பு இவையெல்லாம் சேர்ந்தே அவற்றில் எந்தத் திறமைகள் தனியாகவோ, கலவையாகவோ வளர்க்கப்பட்டு ஒருவரைப் பிரகாசிக்கச் செய்யும் என்பது எனது நம்பிக்கை. இது நான் வாசித்து, அனுபவபூர்வமாக உணர்ந்து, பிற மனிதர், குடும்பங்களை அவதானித்து உருவாக்கிய கருதுகோள். 

மீண்டும், யாராவது உயிரியல் நிபுணர்களின் உதவி இங்கு தேவை. தெரிந்தால் இதற்கு மேலும் வெளிச்சம் போட்டுக் காட்டவும். நன்றி 😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, மல்லிகை வாசம் said:

இங்கை ஒரு பரியாரியார் இருக்கிறார்.... பைடன் பதவி ஏற்ற பின்னர் வந்து விளக்கம் தருவார். அதுவரை பொறுப்போம். 😁

1 hour ago, Nathamuni said:

அவர்களை ரேடியோ, டிவி மூலம் அணுக முடியுமா என்ற புரிதலே இல்லாவிடில் எப்படி? 

இதனை தான், ஒரு வியாபாரத்தின், big picture  view  இல்லாத நிலை என்பேன்.  

புரிகிறது நாதமுனி. 

வியாபாரத்தில் மட்டுமல்ல, எந்தத் துறையிலும் இந்தப் பார்வை உடையோருக்கு அவர்கள் தம்மையும் தாம் சார்ந்த துறையையும் வளர்த்துக்கொள்ளப் பெரிதும் உதவும். அரசியல்வாதிகள், கலைஞர்கள், எழுத்தாளர், பத்திரிகையாளர், பொருளாதார நிபுணர், மருத்துவர் எனப் பட்டியல் நீண்டு செல்லும்!

12 minutes ago, Nathamuni said:

இங்கை ஒரு பரியாரியார் இருக்கிறார்.... பைடன் பதவி ஏற்ற பின்னர் வந்து விளக்கம் தருவார். அதுவரை பொறுப்போம். 😁

பல நாள் யோசித்த விடயங்கள். பல வினாக்கள். நிச்சயம் அவர் மூலம் இந்த சந்தேகங்கள் தீருமென நம்புவம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.