Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜேர்மனியில் அங்கெலா மேர்க்கல்லின் கட்சிக்கு புதிய தலைவர் தெரிவானார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் அங்கெலா மேர்க்கல்லின் கட்சிக்கு புதிய தலைவர் தெரிவானார்! |  Athavan News

ஜேர்மனியில் அங்கெலா மேர்க்கல்லின் கட்சிக்கு புதிய தலைவர் தெரிவானார்!

ஜேர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் (CDU) தலைவராக சென்ட்ரிஸ்ட் அர்மின் லாசெட் (Centrist Armin Laschet) இன்று (சனிக்கிழமை) தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய ஜேர்மனி அதிபர் அங்கெலா மேர்க்கலுக்குப் பின்னர், செப்டம்பர் மாதம் கூட்டாட்சித் தேர்தல்களில் அதிபருக்கான வேட்பாளராக அர்மின் லாசெட் போட்டியிடுவார் என சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

ஜேர்மனியின் அதிக மக்கள் தொகை கொண்ட மேற்கு மாநிலமான வடக்கு ரைன்-வெஸ்ற்பாலியாவின் (North Rhine-Westphalia) பிரதமரான லாசெட்டுக்கு ஆதரவாக கட்சியின் ஆயிரத்து ஒரு பிரதிநிதிகளில் 521 பேர் வாக்களித்துள்ளனர்.

இதேவேளை, இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரீட்ரிக் மெர்ஸுக்கு 466 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், மூன்றாவது வேட்பாளர் நோர்பேர்ட் ரோட்ஜென் முன்னைய சுற்றிலேயே வெளியேற்றப்பட்டார்.

ஜேர்மனிய அரசியலில் ஒரு முக்கியமான ஆண்டின் தொடக்கத்தில் இந்த வாக்கெடுப்பு வந்துள்ளது. எதிர்வரும் செப்டெம்பரில் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் அதிபர் அங்கெலா மேர்க்கெல், தனது தற்போதைய நான்காவது பதவிக்காலத்தின் முடிவில் ஓய்வுபெற திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ஜேர்மனியில்-அங்கெலா-மேர்/

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இவரை உலக செய்தியில் காட்டி கொண்டிருந்தார்கள்.
இப்படி தான் தமிழரசு கட்சியிலும் தலைவரை வாக்களித்து தெரிவு செய்கிறவர்களா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரீட்ரிக் மெர்ஸுக்கு 466 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன்,

நான் இவர்தான் வருவார் எண்டு எதிர்பார்த்தனான்.ஆள்  பொருளாத விசயத்திலை கெட்டிக்காரன்.

Rachsüchtiger“ Friedrich Merz: US-Zeitung startet Attacke vor CDU-Parteitag  | Politik

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நான் இவர்தான் வருவார் எண்டு எதிர்பார்த்தனான்.ஆள்  பொருளாத விசயத்திலை கெட்டிக்காரன்.

Rachsüchtiger“ Friedrich Merz: US-Zeitung startet Attacke vor CDU-Parteitag  | Politik

அண்ணை,

கடைசியா உங்கட ஆளும் இல்லை என்ர ஆளும் இல்லை ஆரோ ஒரு புது பாங் மனேஜர் பூந்திட்டார்😀

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

நேற்று இவரை உலக செய்தியில் காட்டி கொண்டிருந்தார்கள்.
இப்படி தான் தமிழரசு கட்சியிலும் தலைவரை வாக்களித்து தெரிவு செய்கிறவர்களா

🤣இதை விட ஜனநாயகமாக தேர்தலே இல்லாமல் நடப்பது என நினக்க்கிறேன்🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

நேற்று இவரை உலக செய்தியில் காட்டி கொண்டிருந்தார்கள்.
இப்படி தான் தமிழரசு கட்சியிலும் தலைவரை வாக்களித்து தெரிவு செய்கிறவர்களா

ஓம். எல்லா வாக்கு சீட்டிலும் சம்பந்தர் என்று தான் எழுதி இருக்கும். Sarcastic Roll Eye Emoji Gif | Emoji, Eyes emoji, Animated emoticons

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அண்ணை,

கடைசியா உங்கட ஆளும் இல்லை என்ர ஆளும் இல்லை ஆரோ ஒரு புது பாங் மனேஜர் பூந்திட்டார்😀

🤣இதை விட ஜனநாயகமாக தேர்தலே இல்லாமல் நடப்பது என நினக்க்கிறேன்🤣

கோஷன் அவர் எங்கள் மாநிலமுதலமைச்சர் CDU கட்சியைச் சேர்த்தவர்.எனது மாநிலம்NRW .ஆகும்😎👍👍👍👍🙏

3 hours ago, விளங்க நினைப்பவன் said:

நேற்று இவரை உலக செய்தியில் காட்டி கொண்டிருந்தார்கள்.
இப்படி தான் தமிழரசு கட்சியிலும் தலைவரை வாக்களித்து தெரிவு செய்கிறவர்களா

இல்லை, இந்தமுறையை ,அவர்கள் விரும்புவதில்லை .காரணம் இம்முறைப்படி தேர்தல் நடத்தால் அவர்கள் தலைவர்களாக, வரமுடியாது.😜😜👍

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kandiah57 said:

கோஷன் அவர் எங்கள் மாநிலமுதலமைச்சர் CDU கட்சியைச் சேர்த்தவர்.எனது மாநிலம்NRW .ஆகும்😎👍👍👍👍🙏

இல்லை, இந்தமுறையை ,அவர்கள் விரும்புவதில்லை .காரணம் இம்முறைப்படி தேர்தல் நடத்தால் அவர்கள் தலைவர்களாக, வரமுடியாது.😜😜👍

சந்தோசம் கந்தையா அண்ணை. ஆள் எப்படி? 

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, goshan_che said:

சந்தோசம் கந்தையா அண்ணை. ஆள் எப்படி? 

இப்போ இருப்பவர் மிகநன்று இவரும் பறுவயில்லை  எதிர்வரும் தேர்தலிலும் இரண்டு  அல்லது மூன்று  கட்சிகள் சேர்த்துதான் ஆட்சியமைக்கவேண்டும் 

{1}CDU+SPD... {2} CDU+GRUNE. [3] CDU+SPD+GRUNE  இந்த மூன்றில் ஒன்று வரலாம் என நினைக்கிறேன். பொறுத்து இருந்து பார்ப்போம்.😜😁

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

இதை விட ஜனநாயகமாக

உலககத்தின் மூத்த குடியினர் எல்லோ இதை விட ஜனநாயகமாக தான் இருப்பார்கள் 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, goshan_che said:

அண்ணை,

கடைசியா உங்கட ஆளும் இல்லை என்ர ஆளும் இல்லை ஆரோ ஒரு புது பாங் மனேஜர் பூந்திட்டார்😀

புதிசாய் வந்தவர் இந்த கொரோனா ரைம்மிலை நல்ல பெயர் எடுத்துட்டார்.எனக்கு பிடிச்சவரை அங்கெலா மேர்க்கலுக்கு கண்ணிலையும் காட்டக்கூடாது.😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.