Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேதாவியிடம் இருந்து விஞ்ஞான விளக்கம் தேவை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்மை நாட்களாக "யாழ் வழிகாட்டி பகுதியில்" தாயகப்பறவை இணையத்தளம் பற்றி சில கருத்துக்களை எழுதி வந்தேன். தற்பொபொழுது அக்கருத்துக்கள் யாவும் நீக்கப்பட்டுவிட்டன, அண்ணாவி, மேதாவி, விண்ணர் என்று தற்பெருமை பட்டுக்கொள்ளும் வலைஞனினால் அந்த கருத்துக்கள் கடாசப்பட்டது. அதற்கு அவர் கூறிய விஞ்ஞான விளக்கங்கள்....

யாழ் வழிகாட்டி பகுதியில் "தாயகப்பறவைகள் - இணைய மாத இதழ்" என்னும் தலைப்பில் ஆக்கபூர்வமான விமர்சனங்களையோ, கருத்துக்களையோ முன்வைக்காது - கருத்துக்கள உறுப்பினர்களின் தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தமாகவும், சக உறுப்பினர்களைச் சீண்டும் வகையிலும் எழுதப்பட்டவை அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.

அந்த கருத்துகளிலே நான் எவரின் பெயரை நேரடியா குறிப்பிடவில்லை, (ஆனால் சிலர் தங்களுக்கு தொப்பி மிகப்பொருத்தமாக இருந்த படியினால் போட்டுக்கொண்டார்கள் என கேள்வி), ஆனால் நான் குறிப்பிட்டது நாட்டை மட்டுமே. ஒரு நாட்டிலிருந்து எத்தனை உறுப்பினர்கள் வருகிறார்கள்? மேதாவி சாறி மேதகு வலைஞனின் ஞானக்கண்ணுக்கு மாத்திரம் நான் குறிப்பிட்ட நாட்டை, அங்கிருந்து யார் யார் வருகின்றார்கள், எவரை டன் குறிப்பிடுகிறார் என்று தெரிந்து அது தனி நபர் தாக்குதலாகிவிட்டதாம்.

விஞ்ஞான விளக்கத்தில் என்னொமொன்றை மேதகு குறிப்பிட்டுள்ளார், அதாவது தாயகப்பறவைகள் இணைய மாத இதழ் தலைப்பில் ஆக்கபூர்வமான கருத்தை அல்லது விமர்சனத்தை முன்வைக்கவில்லையாம்.

மேதாவி சாரே, அதை நானும் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் நான் குறிப்பிட்டது தான் உண்மை, உண்மையை எப்படி திரித்து எழுதுவது? ஆஹா தாய..... தளத்தில் அந்த மாதிரி கட்டுரைகள் இருக்கின்றன, அங்கே இருக்கும் உறுப்பினர்கள் வித்தியாசமாக சிந்திச்சு எழுதுகிறார்கள், வீண் அரட்டைகள் அங்கு இல்லை, வெட்டி பூசி மெழுகும் கருத்துக்கள் இல்லை, 24 மணி நேரமும் மட்டுறுத்தினர்கள் சுறு சுறுப்பாக இயங்குகின்றனர் என்று எழுதவா??? அது உண்மையா? உங்களின் மனசுக்கு பிடிக்க வேண்டுமென்பதற்காக நான் இங்கு கருத்து எழுதவரவில்லை. ஒரு கருத்து என்பது ஒன்றில் நிறை அல்லது குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டும். என்னை பொறுத்தவரையில் அங்கே நிறை இல்லை, குறைகளே இருக்கின்றது. அகனை சுட்டிக்காட்டினேன்.

பார்க்க போனால் நான் குறிப்பிட்ட குறைகளை நீக்குவதற்கு பதிலாக, அங்கே தாயகப்பறவைகள் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும் கருத்துக்களைத்தான் அகற்றி இருக்கவேண்டும், சொல்லப்போனால் அந்த தலைப்பையே நீக்கி இருக்கவேண்டும். ஓரிரு கட்டுரைகளை போட்டு விளம்பரம் தேடி கருத்தாளர்களை ஏமாற்றுவது அவர்கள், அதனை வெளிப்படையாக விமர்சனம் செய்தமையால் எனது கருத்தை கடாசியது வலைஞனின் அறியாமை, செருக்கு குணம். எனது அந்த கருத்தில் தவறு இருப்பின் அங்கே வந்து அதனை சுட்டி காட்டி இருக்கவேண்டும். அல்லது விவாதம் செய்திருக்க வேண்டும், ஏன் செய்யவில்லை? சும்மா அலட்டல்களுக்கு பலமாக வாதாடும் இவர்களால் ஏன் அதனை செய்யமுடியவில்லை? அவர்களே அதனை ஒத்துக்கொண்டமையால்தானே?

ஆகவே நீக்கப்பட்ட கருத்து சாதரண கருத்து எண்டாலும், அதனை நீக்குவதற்கு மேதாவி குடுத்த விஞ்ஞான விளக்கம் போதுமானதாக இல்லை. வேனுமெண்டு நீக்கப்பட்ட கருத்தாக கருதுகிறேன். மேலதிக விளக்கம் தேவை! :lol::rolleyes:

போதிய விளக்கம் வராதவிடத்து. இங்கே சிலர் அடிக்கடி கூறுவார்களே, அதுதான்பா வெளியேறுறன், வெளியேறப்போறன், வெளியேறிவிட்டான் எண்டு. அதனை நானும் கூறவேண்டி வரும். அதை நான் ஒரு முறை கூறினால் கதம் கதம் தான். :rolleyes:

Edited by Danklas

டங்கு அண்ணா

நீங்கள் கேட்பதிலும் நியாயம் உண்டு...அவர்களின் பக்கமும் பல பிரச்சினைகள் இருக்கலாம் அல்லவா? எனவே முதலில் அவர்களை தனிப்பட்ட மெயிலில் தொடர்பு கொள்வது சிறந்தது. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

"தாயகப்பறவைகள்" இணைய மாதச் சஞ்சிகையை மாதாந்தம் வாசித்து வருகின்றோம். அந்த வகையில்.. இருப்பை நோக்கி தமது பறப்புடன் அந்தப் பறவைகளின் முயற்சியை நிச்சயம் பாராட்ட வேண்டும். குறிப்பாக பெண்களின் நிர்வாகத் தலைமையின் கீழ் ஒரு தளத்தை இயக்கி நடத்தும் போது அது வெளிக்கொணரும் விடயங்களில் ஆண்களின் நிர்வாகத் தலைமையின் கீழ் இயங்கும் தளத்தில் வருவதிலிருந்தான மாறுபட்ட எண்ணக்கருக்களும் வடிவங்களும் சிருஸ்டிப்புக்களும் இருக்க நிறைய வாய்ப்புண்டு. அதற்கு இடமளிப்பது தாயகப் பறவை வாசகர்களின் கடமை.

நிச்சயம் விமர்சனங்கள் வர வேண்டும். நிச்சயம் பல விடயங்களில் தவறுகள் இருக்கலாம். விமர்சகர்களால் மட்டுமே அவற்றைச் சுட்டிக்காட்ட முடியும். ஆனால் விமர்சனங்கள் நிர்வாகத்தை சார்ந்திராமல் ஆக்கங்கள் சார்ந்திருப்பின் குறித்த இணையத்தள நிர்வாகிகள் அறியாத விடயங்களை அறிந்து திருத்தங்களையும் மாற்றங்களையும் கொணர முயல்வர்.

பெண்களின் நிர்வாகத் தலைமையின் கீழ் இயங்கும் தாயகப்பறவைகள் இணையத்தளத்தை நாம் ஒரு புதிய பரிமானத்தின் வெளிப்பாடாகவே காண விரும்புகின்றோம். ஆனால் அது அப்படியான பாதையில் நகர்வதில் இன்னும் நிறையச் செய்ய வேண்டியுள்ளதால்.. நிச்சயமா டன்னின் சில விமர்சனங்கள் கவனத்தில் கொள்ளத் தக்கதே. டன்னின் எழுத்துக்களில் குசும்பு கலந்திருப்பது அவரின் எழுத்தின் தனித்தன்மையாகவே நாம் கருதுகின்றோம்..! ஆனால் கள விதி அந்தத் தன்மைக்கு ஆப்பு வைத்து விட்டதால்.. நிர்வாகமும் விதித்த விதிக்கு மதிப்பளிக்க வேண்டிய நிலையில்.. இந்தத் தணிக்கை என்பதை அவர்களும் நியாயப்படுத்தவே செய்வர்.

எனவே எதிர்வரும் காலத்தில் விமர்சனங்களை கள விதிக்குள் நின்று வைப்பதை அவர்கள் ஊக்கிவிக்க விரும்புகின்றனர் போல் தெரிகிறது. அது நல்ல விடயமும் கூட.

வளர்ச்சிப் படியின் ஆரம்பத்தில் உள்ள தாயக்கப்பறவைகளை ஒரேயடியாக நெகரிவ் திசை நோக்கி விமர்சிக்க முடியாத படிக்கு அவர்களும் சில மாறுபட்ட விடயங்களை வெளிக்கொணர்கின்றனர்.

குறிப்பாக ஈழத்து ஊர்கள்.. மற்றும் பிரசித்தி பெற்ற கலை கலாசார பண்பாட்டு மையங்கள் தொடர்பான விடயங்கள்.. மற்றும் மண்ணுக்காய் தம்முயிர் தந்த எம் உயிரின் மேலான மாவீரர்களை நினைவு கூறுதல் என்று அவர்களின் பரிமானம் பல தளங்களில் காலடி பதிக்க முனைகிறது. இது அவர்களின் ஆரம்ப முயற்சி என்பதால் நிச்சயம் தவறுகள் வழுக்கள் திறமையின்மைகள் நிர்வாக முதிர்சியின்மைகள் வெளிப்படலாம். ஆனால் அவற்றைச் சுட்டிக்காட்டி அவர்களை உற்சாகப்படுத்தி வழிநடத்த வேண்டுமே தவிர அவர்கள் சோர்வடையும் வகையில் விமர்சனங்களை வைப்பதை தவிர்ப்பதும் நன்மையே..! அவர்களுக்கும் சந்தர்ப்பம் அளிக்க வேண்டும்.. முயற்சிகள் முன்னேற..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

போதிய விளக்கம் வராதவிடத்து. இங்கே சிலர் அடிக்கடி கூறுவார்களே, அதுதான்பா வெளியேறுறன், வெளியேறப்போறன், வெளியேறிவிட்டான் எண்டு. அதனை நானும் கூறவேண்டி வரும். .

என்ன டண் நீங்களுமா?

ஒரு விடயம் மட்டும் உண்மை. யாருக்காகவும் வெளியேறத் தீர்மானிப்பது என்பது உங்களின் பலவீனமாகவும், இயலாமையாகவும் தான் காட்டப்படும். உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் வெளியேறுவது தனிப்பட்ட விருப்பம். ஆனால் யாருடைய நடவடிக்கைகளையும் பார்த்து வெளியேறுவது என்பது மற்றவர்களுக்கு வெற்றியைத் தந்து விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

டன் கூறுவது தான் சரி அன்மை காலமாக யாழ் கருத்து களத்தில சுதந்திரமாக கருத்துகளை விமர்சனங்களை வைக்க முடிவதில்லை...தனிமனித தாக்குதல் என்று கருத்துக்கள் பறிக்கப்படுகின்றன ஒருவரை சுட்டி காட்டாமல் கருத்துகளை வைக்க முடியாது இந்த மனிதாகள் கருத்துகளை ஏற்றுகொள்ள பழகவேண்டும் அதைவிட்டு கருத்துகளை தூக்குவது ஏற்று கொள்ள முடியாது டக்குவினடைய கருத்தே சரியானது....

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பண்பாகவும் நாகரீகமாகவும், மற்றவர்களைச் சீண்டாமலும், மனம் நோகாமலும், மனங்கோணாமலும் எழுதுங்கள் என்ற விதியைப் பார்த்தால், ஜால்ராக் கூட்டம் மட்டுமே மிஞ்சும்.. :angry:

சிலரின் எண்ணவோட்டங்களை மாற்றச் சூடான கருத்துக்கள் இடையிடையே தேவை.. அவைதான் சுயவிமர்சனத்தை ஊக்குவிக்கும்.. :rolleyes:

எப்படி இருந்த யாழ்களம் இன்று இப்படியாகிவிட்டதே, ஏன்?

திருநேல்வேலி சந்தை போல கலகலப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருந்த யாழ்களம் இன்று பாழ்பட்ட முற்றவெளி மைதானம் போல காட்சி தருகிறதே, ஏன்?

முன்னர் ஒவ்வோரு சூடான தலைப்பும் 50 கருத்துகளை கடந்து பாய்ந்து செல்லும், இன்றோ 5 கருத்தை தொடுவதே அருமையாக இருக்கிறதே, ஏன்?

எல்லாச்சந்தர்ப்பத்திலும் சரியான கருத்தையும் செயலையும் கொண்ட மனிதர் யாருளர்? ஒருவர் கருத்தினை குறையென கருதி நீக்கிடும் தகுதி யாருக்கு உண்டு?

வெட்டுறுத்தும் மட்டுறுத்துனர் தன் நியாயங்களை அத்தலைப்பிலேயே இடவேண்டும், அதற்கு பதிலளிக்கவும் சமவாய்ப்பு தரவேண்டும்.

Admin Password இனை மட்டும் நம்பியிராது தன் கருத்துக்களை நம்பி களம்குதிக்க ஏன் இன்னும் தயக்கம்?

அன்புடன்,

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி இருந்த யாழ்களம் இன்று இப்படியாகிவிட்டதே, ஏன்?

திருநேல்வேலி சந்தை போல கலகலப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருந்த யாழ்களம் இன்று பாழ்பட்ட முற்றவெளி மைதானம் போல காட்சி தருகிறதே, ஏன்?

முன்னர் ஒவ்வோரு சூடான தலைப்பும் 50 கருத்துகளை கடந்து பாய்ந்து செல்லும், இன்றோ 5 கருத்தை தொடுவதே அருமையாக இருக்கிறதே, ஏன்?

எல்லாச்சந்தர்ப்பத்திலும் சரியான கருத்தையும் செயலையும் கொண்ட மனிதர் யாருளர்? ஒருவர் கருத்தினை குறையென கருதி நீக்கிடும் தகுதி யாருக்கு உண்டு?

வெட்டுறுத்தும் மட்டுறுத்துனர் தன் நியாயங்களை அத்தலைப்பிலேயே இடவேண்டும், அதற்கு பதிலளிக்கவும் சமவாய்ப்பு தரவேண்டும்.

Admin Password இனை மட்டும் நம்பியிராது தன் கருத்துக்களை நம்பி களம்குதிக்க ஏன் இன்னும் தயக்கம்?

அன்புடன்,

சந்தை போல கலக்கலக்காம ஒரு விவாத மேடை போல விசயத்தோட இருக்கனும் என்று விரும்புறாங்க போல..!

சட்டத்தை சனத்தைக் கேட்டுத்தான் அமுல்படுத்தனும் என்றால் ஆளாளுக்கு சட்டம் இயற்ற வேண்டிய நிலைதான் தோன்றும்.

யாழில் தற்போது சீண்டு முடியுறது.. கலகம் பண்ணுறது.. ஒருமைல விளிக்கிறது.. விவாதத்தின் நடுவில் தனிநபர் தாக்குதல் நடத்திறது.. திசை திருப்புறது.. திரிக்கிறது.. வசைபாடுறது.. வால்பிடிக்கிறது. பாரபட்சம் காட்டுறது.. பகிரங்கமாகவே இன்னாரை வெளியேற்றிறன் பார் என்று சவால் விடுறது... இதெல்லாம் இப்ப ரெம்பவே குறைச்சிருக்குது. காரணம் நிர்வாகம் தனது பழைய தவறுகளை திருத்தி கொஞ்சம் காத்திரமா நடவடிக்கை எடுத்திருக்கிறதுதான்.

நாமும் கட்டாக்காலிகளா எப்பவும் இருக்காம.. கொஞ்சம் கட்டுப்பாட்டோடும் இருக்கப் பழகிக்கிறது நல்லம். ஒழுக்கமுள்ள இடத்தில எல்லாம் உயர்வாவே இருக்கும்.. சிந்தனையும் கூட..! :P :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நாமும் கட்டாக்காலிகளா எப்பவும் இருக்காம.. கொஞ்சம் கட்டுப்பாட்டோடும் இருக்கப் பழகிக்கிறது நல்லம். ஒழுக்கமுள்ள இடத்தில எல்லாம் உயர்வாவே இருக்கும்.. சிந்தனையும் கூட..! :P :rolleyes:

ஆயிரத்தில் ஒரு வார்த்தை சொன்னீங்க

:P

விஞ்ஞான விளக்கத்தில் என்னொமொன்றை மேதகு குறிப்பிட்டுள்ளார், அதாவது தாயகப்பறவைகள் இணைய மாத இதழ் தலைப்பில் ஆக்கபூர்வமான கருத்தை அல்லது விமர்சனத்தை முன்வைக்கவில்லையாம்.

அப்படியென்றால் யாழில் பட்டிமன்ற பேச்சாளர்களும், விவாதங்களில் ஈடுபடுவோருமே எழுத வேண்டும். மற்றையவர்கள் கைய கட்டி கொண்டு உக்காந்து படிச்சிட்டு போக வேண்டியதுதானா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்படியென்றால் யாழில் பட்டிமன்ற பேச்சாளர்களும், விவாதங்களில் ஈடுபடுவோருமே எழுத வேண்டும். மற்றையவர்கள் கைய கட்டி கொண்டு உக்காந்து படிச்சிட்டு போக வேண்டியதுதானா?

அட ஆக்கபூர்வமான கருத்தை எழுதுறதெண்டும் நமக்கு கஸ்ரமில்லை. இப்ப உதாரணத்துக்கு நம்ம சோடப்போட்டல்.கொம் உப நிர்வாகி ஹிட்லரை எடுத்துப்பமே. அவரின் செயற்பாடுகளை உள்ளமாதிரி எழுதாமல், உண்மையை திரித்து ஆஹா அவர் அந்த மாதிரி 2048 எம்.பியை யூஸ் பண்ணி சிந்திச்சு முடிவெடுக்கிறார், அவருக்கு பொருத்தமான உப+>>>> நிர்வாகி பதவியைத்தான் வழங்கி இருக்கிறார்கள் என்று புகழ்ந்தால், எனக்கும், அவருக்கு சந்தோசமாகத்தான் இருக்கும், ஆனால் அவரின் செயற்பாடுகளை பார்வையிடுபவர்களுக்கு, டன் தேனி.கொம் ஆசிரியரையே மிஞ்சிவிட்டார் என்ற எண்ணம் தான் உருவாகும். அது தேவையா நமக்கு?? :rolleyes:

Edited by Danklas

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.