Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"தமிழ்நெட்" இணையத்தளத்தை முடக்கியது சிறிலங்கா

Featured Replies

ஒன்றைத் தடை செய்வதால் அதற்கு ஆதரவைத் தான் பொருக்க உதவும். இதை உணராதவர்களுக்கு என்ன சொல்லியும் புரியப் போவதில்லை.

சாணக்கியா! தமிழ்வின் தடைசெய்யபடவில்லை

ஒன்றைத் தடை செய்வதால் அதற்கு ஆதரவைத் தான் பொருக்க உதவும். இதை உணராதவர்களுக்கு என்ன சொல்லியும் புரியப் போவதில்லை.

தடை செய்வதற்கும் புறக்கணிப்பு செய்வதற்குமுள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நெட் மூலம் வெளி நாட்டு தூதுவர்கள் உண்மைச்செய்திகளை அறிகிறார்கள் என்று அண்மையில்

செய்தி வந்தது.

ஆம் இது உண்மை தான். இரண்டு வருடங்களிற்கு முன் நான் கொழும்பில் உள்ள சுவிசின் எம்பசியில் வேலை பார்க்கும் ஒருவரை சந்தித்தேன். அவரும் தான் தமிழ்நெற் மூலம் தான் செய்திகளை பார்ப்தாக என்னிடம் சொன்னார். அவரைப்போலவே அங்கே வேலை பார்ப்பவர்களும் தமிழ்நெற்றையே பாவிப்பார்கள் என்று நம்பலாம்.

தமிழ்நெற் இணையத்தளத்தை சிதைக்கும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளோம் - ரம்புக்வெல.

தமிழ்நெற் இணையத்தளம் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டு வருவதாக அமைச்சர் ஹேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இன்று பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதி நவீன கணனி தொழிநுட்பங்களை அறிந்தவர்களை வாடககைக்கு அமர்த்தி தமிழ்நெற் இணையத்தளத்தை சிதைக்கும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் அமைச்சர் ஹேகலிய ரம்புக்வெல சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏற்கனவே தமிழ்நெற் இணையத்தளத்தைப் பார்வையிட முடியாதவாறு தமது அரசாங்கம் மேற்கொண்ட நவடிக்கைகள் குறித்து தமக்கு எதுவும் தெரியாது எனவும் ஹேகலிய ரப்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.

-Pathivu-

Edited by யாழ்வினோ

சிறீலங்காவில் தமிழ்நெட் இணையத் தளத்தை இவ்வாறு பார்வையிடலாம்.

சிறீலங்கா அரசாங்கம் தமிழருக்கான போர்வியூகத்தை பலவழிகளிலும் மேற்கொண்டு வந்தது தெரிந்ததே இதன் உச்சகட்டமாக சிறீலங்காவில் தடைசெய்யப்பட்ட முதலாவது இணையத்தளமாக தமிழ்நெட் இணையத்தளம் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்இணையத்தளத்தை பின்வரும் வழிமுறைமூலம் பார்வையிடலாம்

www.freeproxy.ca எனும் இவ் இணையத்தளத்திற்கு சென்று

பின்னர் அங்கு www.tamilnet.com

என ரைப் செய்வதன்மூலம் சிறீலங்காவில் தமிழ்நெட் இணையத்தளத்தை பார்வையிடலாம்.

-Pathivu-

சிறீலங்காவில் தமிழ்நெட் இணையத் தளத்தை இவ்வாறு பார்வையிடலாம்.

சிறீலங்கா அரசாங்கம் தமிழருக்கான போர் வியூகத்தை பலவழிகளிலும் மேற்கொண்டு வந்தது தெரிந்ததே இதன் உச்சகட்டமாக சிறீலங்காவில் தடைசெய்யப்பட்ட முதலாவது இணையத்தளமாக தமிழ்நெட் இணையத்தளம் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ் இணையத்தளத்தை பின்வரும் வழிமுறைமூலம் பார்வையிடலாம்

www.freeproxy.ca எனும் இவ் இணையத்தளத்திற்கு சென்று

பின்னர் அங்கு www.tamilnet.com

என ரைப் செய்வதன்மூலம் சிறீலங்காவில் தமிழ்நெட் இணையத்தளத்தை பார்வையிடலாம்.

-Pathivu-

தமிழ்நெட்.கொம் எவ்வாறு பார்வை இடலாம் என்று கேட்ட சில சிங்கள அன்பர்களுக்கு நான் கொடுத்த இணையத்தளம் www.hidemyass.com (அம்மணத்தை மறையுங்கள்)

சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான பெயர்.

தமிழ் மென்பொருள் பொறியியல் வல்லுனர்களே...... நாம் ஸ்ரீலங்காவின் இணையதளங்களை சிதைத்து... அறிக்கை விடும் ரம்புக்கு பாடம் புகட்ட வேண்டும்

ஒன்றைத் தடை செய்வதால் அதற்கு ஆதரவைத் தான் பொருக்க உதவும். இதை உணராதவர்களுக்கு என்ன சொல்லியும் புரியப் போவதில்லை.

தடை செய்வதற்கும் புறக்கணிப்பு செய்வதற்குமுள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் ஏன் மொட்டந்தலைக்கும் முழந்தாலுக்கம் முடிச்சுப் போடுகின்றீர்கள். நான் இங்கு கருத்துப் பகிர்ந்திருப்பது தமிழ்நெற் தடை பற்றியே. :rolleyes: :angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களப்பெருந்தகைகளின் இயலாமைக்கு இதுவுமொரு அத்தாட்சி :rolleyes:

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நெற் இணையத்தளத்தை சிதைக்கும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளோம் - ரம்புக்வெல.

அல்லது

தமிழ் இனத்தை சிதைக்கும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளோம் - ரம்புக்வெல.

ஒன்று சொன்னது

இன்னொன்று சொல்லாமல் விட்டது

ஆனால் சொல்லத்துடிப்பது???

இப்ப இந்த www.freeproxy.ca ஆகிவிட்டது போல

Now Tri http://proxy.org/cgi_proxies.shtml

தொடர்ந்து முயற்சி செய்வோம்

சாணக்கியா! தமிழ்வின் தடைசெய்யபடவில்லை

தமிழ்வின் தளம் இன்று இரண்டாவது நாளாகவும் நேரடியாக பார்வையிட முடியவில்லை!

இது குறித்து யாழ்களநிர்வாகத்திற்கும் எமக்கும் ஏற்பட்ட குழப்பங்களுக்கு யாராவது தகுந்த பதில் தரமுடியுமா?

தொடர்ந்து இவ்வாறு தன்னிச்சையாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இலங்கை அரசிற்கெதிராக இணையவலையமைப்பு சட்டங்களின் படி நடவடிக்கை எடுக்க முடியாதா?

மேலும் இது மனித உரிமை மீறலும் கூட, அதனால்தான் இலங்கை அரசு இதனை இன்னமும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை!

உரியவர்கள் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் இது மேலும் விரிவடையும்!

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sri Lanka under fire over Internet censorship

http://news.yahoo.com/s/afp/20070621/wl_st...mediacensorship

Sri Lanka urged to stop censoring pro-Tiger Web site

http://today.reuters.co.uk/news/CrisesArti...oryId=COL170487

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழ்நெட் இணையதளம் முடக்கம் - சர்வதேச பத்திரிக்கை சுதந்திர அமைப்பு கடும் கண்டனம்

கொழும்பு: விடுதலைப் புலிகள் ஆதரவு தமிழ்நெட்.காம் இணைய தளத்தை இலங்கை அரசு முடக்கியுள்ளது. இதற்கு சர்வதேச பத்திரிக்கை சுதந்திர அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் தொடர்பான செய்திகள் www.tamilnet.com இணையதளத்தில் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், இந்த இணையதளத்தை இலங்கையில் முடக்கி வைக்க இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. இலங்கையில், இண்டர்நெட் சேவையை வழங்கி வரும் மலேசியாவைச் சேர்ந்த டெலிகாம் மலேசியாவின் ஒரு பிரிவான டயலாக் டெலிகாம் (இதுதான் இலங்கையின் முன்னணி செல்போன் நிறுவனமாகும்), நிறுவனம் இன்று முதல் தமிழ்நெட் இணையதளத்தை முடக்கி வைத்துள்ளது. அரசின் உத்தரவின் பேரில் இந்த இணையதளத்தை முடக்கி வைத்திருப்பதாக அது கூறியுள்ளது. இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு எல்லைகளற்ற சர்வதேச பத்திரிக்கை சுதந்திரத்திற்கான நிருபர்கள் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 10 ஆண்டுகளாக இலங்கையில் நிலவி வரும் இனப் போர் குறித்த முழுமையான தகவல்களை, செய்திகளை தமிழ்நெட்தான் உலக சமுதாயத்திற்கு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் தமிழ் நெட் இணையதளத்தை முடக்கி வைத்திருப்பதும், அதை தணிக்கை செய்ய முயலுவதும் கண்டனத்துக்குரியது. இந்த நடவடிக்கைகளை இலங்கை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நெட் மீதான இலங்கை அரசின் நடவடிக்கை புதிதல்ல. கடந்த 2005ம் ஆண்டு இணையதளத்தின் ஆசிரியர் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை இலங்கை அரசு மறுத்துள்ளது. இதுகுறித்து மீடியா அமைச்சர் அனுரா பிரியதர்ஷனா யாபா கூறுகையில், அரசுக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார் அவர். மற்றொரு அமைச்சரோ, சிலரை வைத்து தமிழ்நெட்டுக்குள் ஊடுறுவி அங்குள்ள தகவல்களை அழிக்க ஆசைப்படுகிறேன் என்று கிண்டலாக பேசியுள்ளார். ஆனால் டயலாக் நிறுவனமோ அரசு சொல்லித்தான் தமிழ்நெட்டை முடக்கியதாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழர் பகுதிகளில் இலங்கை படைகள் கடும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அந்த்த தாக்குதல்கள் குறித்தும், இலங்கைப் படையினரின் அத்துமீறல்கள், அவர்களால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் குறித்த உண்மையான, முழுமையான தகவல்கள், புகைப்படங்களை வெளியுலகினர் அறிந்து விடக் கூடாது என்ற நோக்கில்தான் தமிழ்நெட் இணையதளத்தை இலங்கை அரசு முடக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கை அரசின் கடுமையான கெடுபிடிகள் காரணமாக, போர் நடக்கும் பகுதிகளுக்கு நீண்ட காலமாகவே செய்தியாளர்கள் செல்வதற்கு அனுமதி தரப்படுவதில்லை. மேலும், பல தமிழ் நாளிதழ்கள் கொழும்பிலிருந்து செயல்பட முடியாத நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.-தற்ஸ் தமிழ்

----------------------------------------------------------------------------------------------------------------------

தமிழ்நெட்டுக்கு தடை விதிக்கவில்லை: சிறிலங்கா அரசாங்கம் விளக்கம்

தமிழ்நெட் இணையத்தளம் மீது அரசாங்கம் எவ்விதத் தடையையும் விதிக்கவில்லை. அத்துடன் இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு இது தொடர்பாக எந்தவிதமான உத்தரவுகளும் பிறப்பிக்கப்படவில்லை என்று சிறிலங்கா ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.கொழும்பில் அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கூறியதாவது:புலிகளுக்கு ஆதரவாக இயங்கும் தமிழ்நெட் இணையத்தளத்தை எமது அரசாங்கம் முடக்கியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது ஒரு நியாயமற்ற குற்றச்சாட்டாகும். இதனை யார் செய்தார்கள் என்பது பற்றி எமக்கு தெரியாது.பல வருடகாலமாக தமிழ்நெட் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றது. இதனை யார் இயக்குகின்றனர் என்பதும் அவர்கள் எவ்வாறான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர் என்பது பற்றியும் நாம் அறிந்திருக்கவில்லை என்றார் அவர். தமிழ்நெட் இணையத்தளத்தை முடக்குமாறு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு சிறிலங்கா பாதுகாப்புப் பிரிவினரால் உத்தரவு ஏதும் வழங்கப்பட்டதா என இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்கவிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலலளித்த பிரிகேடியர், தமிழ்நெட் இணையத்தளத்தை முடக்க வேண்டிய தேவை பாதுகாப்புப் பிரிவினருக்கு இல்லை. எனவே அது தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்ளவில்லை என்று கூறினார்.இதனிடையே தமிழ்நெட் இணையத்தளத்தை ஹக்கர்ஸ் எனப்படுவோர் முடக்கியிருக்கக் கூடும் என்று சிறிலங்கா அமைச்சர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தமைக்கு சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இத்தகைய கருத்தை வெளியிட்டிருப்பதன் மூலம் "இணைய பயங்கரவாதத்தை" சிறிலங்கா அரசாங்கம் ஊக்குவிப்பதாகவும் அந்த அமைப்பு இன்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. -புதினம்

Edited by கந்தப்பு

இதனால் தமிழ்நெட்டிற்கு சர்வதேச மட்டத்தில் உள்ள பிரபலம் அதிகரிக்கும். அவ்வளவுதான். வாழ்க கோமாளி ரம்புக்கன். Good coverage has been given by international media about the story of blocking of Tamilnet. I hope this will surely increase the number of viewers for Tamilnet. Thank you Rambuttan-kollaa.

இதுகுறித்து மீடியா அமைச்சர் அனுரா பிரியதர்ஷனா யாபா கூறுகையில், அரசுக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார் அவர்.

மற்றொரு அமைச்சரோ, சிலரை வைத்து தமிழ்நெட்டுக்குள் ஊடுறுவி அங்குள்ள தகவல்களை அழிக்க ஆசைப்படுகிறேன் என்று கிண்டலாக பேசியுள்ளார்.

ஆனால் டயலாக் நிறுவனமோ அரசு சொல்லித்தான் தமிழ்நெட்டை முடக்கியதாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதிலிருந்தே இலங்கை அரசின் செய்திகளின் உண்மைத்தன்மையை சர்வதேச செய்தி நிறுவனங்கள் அறிந்து கொள்ள முடியும். பாரிய மனிதஉரிமை மீறல் சம்பவங்களின் போது அரசின் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சர்வதேச ஊடகங்கள் இதனை கருத்தில் கொள்ள வேண்டும்.

தனியார் நிறுவனத்தின் ஊடாவே இன்று உண்மை நிலை வெளிவந்துள்ளது. இலங்கை ரெலிகொம் போலவே ஏனைய அரச நிறுவனங்கள், அரச பத்திரிகைகள், பொலிசார், நீதிமன்றம், அரசாங்க அதிபர், அரச மருத்துவமனை என அனைத்துமே இலங்கை பயங்கரவாத, ராணுவ அரசின் அழுத்தங்களுக்கு அஞ்சி உண்மை நிலையை வெளிவிடாது, அரசின் மனிதஉரிமை மீறல்களுக்கு துணை போகின்றமை தெளிவானது.

தமிழ்வின் இணையத்தளத்தை இன்றிலிருந்து மீண்டும் நேரடியாக பார்க்கக் கூடியதாகவுள்ளது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.