Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆபத்தான உணவாக இடியப்பங்கள்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆபத்தான உணவாக இடியப்பங்கள்.!

Idiyappam-3.jpg

இடியப்பம் இலங்கையில் பிரபலமாக விற்பனையாகும் அல்லது வீட்டில் செய்யப்படும், எம்மில் பெரும்பாலானோருக்குப் பிடித்த ஆரோக்கியமான காலை, மாலை உணவாகும்.

சுமார் இருபது வருடங்கள் முன் பிரம்பு மற்றும் பனையோலை தட்டுகளில் அவிக்கப்படும் இடியப்பம் உண்மையிலேயே ஓர் பாதுகாப்பான உணவாக இருந்தது.

ஆனால், தற்போது பிளாஸ்டிக் தட்டுகளின் வருகையுடன் அவற்றின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

அண்மையில் கொழும்பில் உள்ள ஓர் சகோதர மொழி பொறியியலாளரான நண்பர் ஒருவர் இடியப்பம் பற்றி வெளியிட்ட கருத்துக்கள் உண்மையில் அதிர்ச்சி தரக்கூடியனவாக இருந்தன.

தினசரி மூன்று வேளை கூட இடியப்பம் விரும்பி உண்ணக்கூடிய அவரின் உறவினர் ஒருவருக்கு வந்த புற்றுநோய்க்கு, பிளாஸ்டிக் இடியப்ப தட்டுக்களும் ஓர் காரணமாக இருக்கலாம் என வைத்தியர்கள் மட்டத்தில் கருத்து நிலவியதாக அவர் கூறினார்.

இதனை நிரூபிக்க இப்போது முடியாவிடினும், நிச்சயமாக நிராகரிக்க முடியாது. பிளாஸ்ட்டிக்கினை உயர் வெப்பத்தில் அவிக்கும் போது நிச்சயம் உடல் நலத்திற்கு தீங்கு தரும்.

ஆகவே இதனை ஓர் முன்கூட்டிய எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு, பிளாஸ்டிக் தட்டுகளுக்கு பதில் பனையோலை மற்றும் பிரம்பு தட்டுகளுக்கு உடனே மாறுவோம்.

கற்பகம் பனம்பொருள் விற்பனை நிலையம் மற்றும் கைப்பணி பொருட்கள் விற்கப்படும் கடைகளில் இயற்கை மூலப்பொருட்களாலான இடியப்ப தட்டுக்களை வாங்கலாம்.

இதனால் நமது உள்ளூர் உற்பத்தியாளர்களும் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

மேலும் இடியப்பம் வாங்கும் நுகர்வோரும், அடுப்பிலிருந்து இறக்கிய சூடான இடியப்பங்களை உடனே பொலித்தீன் பைகளில் போட்டு பெற்றுக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

வீட்டிலிருந்து பிளாஸ்டிக் அல்லாத பாத்திரங்களை அல்லது வாழை இலையை கொண்டு சென்று வாங்கலாம். சில தசாப்தங்கள் முன் இவ்வாறே நாம் வாங்கினோம்.

இடியப்பம் மட்டுமல்லாது,

சூடான பிட்டுக்கு, அதன் முழு நீளத்துக்கும் வாழை இலை போடாமல் நேரடியாக பொலித்தீன் தாளினால் (Lunch Sheets) சுற்றி விற்பனைக்கு வைப்பதையும், சூடான கறி, சாம்பார், சொதி போன்றவற்றை போலித்தீன் பைகளில் கட்டுவதை ஊக்குவிக்காதிருப்போம்.

பெருமளவில் சோறு மற்றும் பிரியாணி சமைப்போர், அரிசி வேகுவதற்கு வாழையிலைக்குப் பதில் பொலித்தீன் போட்டு மூடுவதை தவிர்ப்போம்.

அலுவலகம், பாடசாலை செல்வோருக்கு நேரடியாக பொலித்தீன் தாளில் (Lunch Sheets ) உணவு கட்டிக்கொடுப்பதை தவிர்த்து, வாழை, தாமரை இலை பயன்படுத்துவோம். முடியாவிடின் பிளாஸ்டிக் அல்லாத உணவுப் பெட்டிகளையும், வாகனங்களில், முச்சக்கர வண்டிகளில் செல்வோர் பீங்கான் கோப்பைகளில் சிரமம் பாராது உணவு கொண்டு செல்வோம்.

வாகனங்கள், Racing சைக்கிள், ஸ்கூட்டர், முச்சக்கர வண்டி வைத்திருப்போர், பிளாஸ்டிக் போத்தல்களில் குடிநீர் வைப்பதை முற்றிலும் தவிர்ப்போம். அவற்றுக்குப் பதில் கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் அல்லாத வேறு பாதுகாப்பான போத்தல்களை பயன்படுத்துவோம்.

இன்று நம் அறியாமை மற்றும் சோம்பேறித்தனத்தால், அதீத பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனை மூலம் எம்மையையுமறியாது, கொஞ்சம் கொஞ்சமாக நம் உடலில் விஷமேற்றிக் கொண்டுவருகிறோம் என்பது நிச்சயமான உண்மை.

மாற்று வழிகளைத் தேடுவோம். தெரிந்தே ஆபத்தினுள் வீழ்வதை தவிர்ப்போம்.

இது நம் ஆரோக்கியமான வருங்காலச் சந்ததிகளுக்கும் மற்றும் நமக்குமாக.

https://puthusudar.lk/2021/03/01/ஆபத்தான-உணவாக-இடியப்பங்க/

  • கருத்துக்கள உறவுகள்

எதையோ சொல்லி எதையோ வியாபாரம் பண்ணுகிறார்கள் அங்குள்ள  அரசியல்வாதிகள் அங்கு Asbestos னால்  உருவாகும் mesothelioma வகை  புற்றுநோய் கூடுதலாக காணப்படுகிறது காரணம் தரமற்ற விலைகுறைவான  கல்நார் எனப்படும்  சீமெந்து  கூரை வகைகள் ரஸ்யாவில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள் .

இங்கெல்லாம் பழையகால கார்டனுக்குள் இருக்கும் கராச்  போன்றவைக்கு  வேய்ந்து உள்ளார்கள் அயலவர் ஒருத்தரின் கராச் அப்படியானது திருத்த வேலை செய்யும்போது அந்த Asbestos அகற்றுவதுக்கு கவுன்சிலிலிருந்து ஸ்பெஷல் குரூப் உடம்பை மூடியபடி விண்வெளி வீரர் போல் வந்து கழட்டி எடுத்துக்கொண்டு போனார்கள் காரணம் Asbestos லிருந்து வெளிக்கிடும் கதிரியக்கம் என்கிறார்கள் . ஆனால் ஊரில் மலிவு விலை Asbestos ஆல்  மலிவு புற்று நோய்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

இட்லி தட்டில்கூட பிளாஸ்டிக் பையை வெட்டிப்போட்டு மாவை ஊற்றி அவிக்கிறார்கள். சொன்னால் வரும் பிரச்சினையை விட புற்றுநோய்  பரவாயில்லை என்று சில கணவன்மார் கடந்து போகிறார்கள்.....!  🤔

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

இட்லி தட்டில்கூட பிளாஸ்டிக் பையை வெட்டிப்போட்டு மாவை ஊற்றி அவிக்கிறார்கள். சொன்னால் வரும் பிரச்சினையை விட புற்றுநோய்  பரவாயில்லை என்று சில கணவன்மார் கடந்து போகிறார்கள்.....!  🤔

எனக்கு சுவியர்தான்... அப்படி கடந்து போயிருப்பாரோ என்று சந்தேகமாக இருக்குது. 🤣

இதே போன்று, புலம்பெயர் நாடுகளில், குறிப்பாக கனடாவில் அவிக்கப்படும் இடியப்பமும் ஆரோக்கியமானதல்ல. குளிர் நாடு என்பதால் அவித்த இடியப்பம் விரைவாக காய்ந்து விடும். இதை தவிர்க்க பழைய பாவித்த எண்ணெய்யை விட்டு மாவை குழைக்கின்றனர். இடியப்பம் factory என்று அழைக்கப்படும்  பெரும் எண்ணிக்கையில் இடியப்பம் அவித்து ஏனைய சாப்பாட்டு கடைகளுக்கு வினியோகிக்கும் இடங்களில் இது மோசமாக நடக்கின்றது. மக்டொனால்ட்ஸ் போன்ற இடங்களில் இருந்து பெறப்படும் பாவித்த எண்ணெய்யைக் கூட சில இடங்களில் பயன்படுத்துகின்றனர் என அறிய முடிகின்றது.

வீட்டில் ஒரே அடியாக 30, 40 இடியப்பங்களை அவித்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து அடுத்த நாளும் சாப்பிடும் வழக்கத்தை பல வருடங்களாக நான் கடைப்பிடித்து வருகின்றேன். மனிசி இடியப்பம் புளிய உதவிக்கு கூப்பிடும் போது ஓடிப்போய் வருடத்தில் ஒரு நாள் உதவினாலே போதும், மிச்ச நாட்களை சமாளிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நிழலி said:

இங்கு சைனீஸ் டேக் எவே கடைகளில் சைனீஸ் உணவு வாங்குவதில்லை அதேபோல் துருக்கி கெபாப் கடைகளில் துருக்கி பயலுகள் உணவு வாங்குவதில்லை அங்கு என்னமாதிரியோ தெரியலை ?  இந்த இரண்டு கூட்ட முதலாளிகளிடமும் ஏன் உங்கள் ஆட்கள் உங்கள் கடைகளில் உணவு வாங்குவதில்லை என்று கேட்டால் சிரித்து மழுப்பி கொண்டு நகருவினம் .அவர்களுக்கு அவர்களின் ஆட்கள் உணவு தரமில்லை  என்று தெரிகிறது. நாங்க  பசி தாங்கா  கூட்டம் பழைய எண்ணெய்  மறுபடியும் சூடாக்கி உணவாக எடுப்பது புற்றுநோய் போன்ற கொடிய வியாதிகளுக்கு வழி வகுக்கும் என்று தெரிந்தும்  இடியாப்பத்துக்கு வரிசையில் நிக்கிறம்.😀

நூடில்ஸ் பிழியும் மிசினை இடியப்பத்துக்கு என்று சிறு மாறுதலுடன் கனடாக்காரர்தான் இடியப்ப  மிசின்களை அறிமுகப்படுத்தியவர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, பெருமாள் said:

அதேபோல் துருக்கி கெபாப் கடைகளில் துருக்கி பயலுகள் உணவு வாங்குவதில்லை

துருக்கி பயலுகள், அவர்களது கெபாப் கடைகளில்.... பண்டி இறைச்சி மலிவு என்று அதனையும் கலந்து விடுவதால் அங்கு வாங்குவதில்லை. 

நாமதான்... யானை இறைச்சியை கலந்தாலும் சாப்பிவோமெல்லோ... 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, suvy said:

இட்லி தட்டில்கூட பிளாஸ்டிக் பையை வெட்டிப்போட்டு மாவை ஊற்றி அவிக்கிறார்கள். சொன்னால் வரும் பிரச்சினையை விட புற்றுநோய்  பரவாயில்லை என்று சில கணவன்மார் கடந்து போகிறார்கள்.....!  🤔

இஞ்சை பாருங்கோ சுவியர்! உலகத்திலை உந்த பிளஸ்ரிக் தண்ணி போத்திலை நிப்பாட்ட எல்லாம் சரி வரும் கண்டியளோ. கோலா தொடக்கம் தண்ணிப்போத்தில் வரைக்கும் ஒரே பிளஸ்ரிக். முதல்லை அதை நிப்பாட்ட வேணும்.

நான் ஊரிலையே பள்ளிக்கூடத்துக்கு வாழையிலை,தாமரை இலையிலைதான் சாப்பாடு கட்டிக்கொண்டு போறனான். அதாலை நான் பட்டிக்காட்டான். ஆனால் பிளாஸ்ரிக்ஸ் பொக்ஸ்லை சாப்பாடு கட்டிக்கொண்டு வாறவையள் ......அதை நான் இஞ்சை சொல்ல விரும்பேல்லை. காலத்தின்ரை கோலம் பனங்காட்டான் எண்டு நக்கலடிச்ச கூட்டத்தை பனையோலையிலை பின்னின பைகளை தூக்க வைச்சிருக்கிறான் ஆண்டவன்.🖕🏽

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நிழலி said:

இதே போன்று, புலம்பெயர் நாடுகளில், குறிப்பாக கனடாவில் அவிக்கப்படும் இடியப்பமும் ஆரோக்கியமானதல்ல. குளிர் நாடு என்பதால் அவித்த இடியப்பம் விரைவாக காய்ந்து விடும். இதை தவிர்க்க பழைய பாவித்த எண்ணெய்யை விட்டு மாவை குழைக்கின்றனர். இடியப்பம் factory என்று அழைக்கப்படும்  பெரும் எண்ணிக்கையில் இடியப்பம் அவித்து ஏனைய சாப்பாட்டு கடைகளுக்கு வினியோகிக்கும் இடங்களில் இது மோசமாக நடக்கின்றது. மக்டொனால்ட்ஸ் போன்ற இடங்களில் இருந்து பெறப்படும் பாவித்த எண்ணெய்யைக் கூட சில இடங்களில் பயன்படுத்துகின்றனர் என அறிய முடிகின்றது.

வீட்டில் ஒரே அடியாக 30, 40 இடியப்பங்களை அவித்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து அடுத்த நாளும் சாப்பிடும் வழக்கத்தை பல வருடங்களாக நான் கடைப்பிடித்து வருகின்றேன். மனிசி இடியப்பம் புளிய உதவிக்கு கூப்பிடும் போது ஓடிப்போய் வருடத்தில் ஒரு நாள் உதவினாலே போதும், மிச்ச நாட்களை சமாளிக்கலாம்.

இந்தச் செயல் மிகவும் கண்டிக்கப் பட  வேண்டியதாகும்!
அனேகமாக எமது மூத்த பிரஜைகள் வெள்ளி, செவ்வாய் போன்ற நாட் களில் இன்னும் சைவ உணவையே விரும்பி உண்ணுகின்றனர்!

இந்த இடியப்பங்களை அவர்கள் வாங்கிச் சாப்பிட்டால், அவர்கள், அவர்க்ளையறியாமலே....மாமிசத்தை உண்ணுகின்றார்கள்!
இது அவர்களது மத நம்பிக்கைகளுக்கு முரணானதாகும்...!

குற்றவாளி...மக்டொனால்ட்ஸ் அல்ல!

கடைகளை நடத்துகின்ற...எங்கள் தேவாங்குகள்  தான்.....!

இங்கு இவர்களை உள்ளே போடும் சட்டங்கள் இப்போது உண்டு...!

கலால் எண்டு சொல்லி....சும்மா இறைச்சியை வித்த கொஞ்சப் பேர் உள்ளுக்குள்ள இருக்கினம்!😖

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, suvy said:

இட்லி தட்டில்கூட பிளாஸ்டிக் பையை வெட்டிப்போட்டு மாவை ஊற்றி அவிக்கிறார்கள். சொன்னால் வரும் பிரச்சினையை விட புற்றுநோய்  பரவாயில்லை என்று சில கணவன்மார் கடந்து போகிறார்கள்.....!  🤔

Screenshot-2021-03-04-09-23-53-552-org-m

101 % உண்மை தோழர் .. பல்லை கடித்து சாப்பிட்டு போக வேண்டும்..😢

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

Screenshot-2021-03-04-09-23-53-552-org-m

101 % உண்மை தோழர் .. பல்லை கடித்து சாப்பிட்டு போக வேண்டும்..😢

நாங்கள் சிங்கம் போல கர்சித்துக் கொண்டு அம்மா தம்பி தங்கைகளை வெருட்டிக்கொண்டு திரிந்தோம்.கலியாணக் கட்டியபின் எப்படித்தான் அப்படியொரு பக்குவம் வருகுதோ தெரியவில்லை. காலில அடிவாங்கிய டாக் மாதிரி (நாய் என்று சொல்ல ஒரு மாதிரி இருக்கு) அனுங்கிக் கொண்டு திரிகிறம்.உங்கட நிலைமையையும் பார்க்க கொஞ்சம் ஆறுதலாய் இருக்கு......!  😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.