Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேறியது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, vanangaamudi said:

இந்தியாவின் இந்த நடவடிக்கை(abstain) அது நடுநிலை வகித்ததாக கொள்ளமுடியாது. வாக்கெடுப்பில் இருந்து விலகியிருந்தது என்றுதான் கொள்ளவேண்டும்.

மனித உரிமைகள் பற்றி வாய்கிழிய கத்தும் ஜப்பான் அடித்தட்டு நாடுகளுடன் கைகோர்த்துக் கொண்டதுதான் பெரிய கோமாளிக்கூத்து.

அதையும் தீர்மானித்தது  தமிழக தேர்தல்?

வெட்கக்கேடு 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

விளங்க நினைப்பவன்..... 
இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானம் நிறைவேறியதன் மூலம், 
நன்மை கிடைக்கின்றதோ  இல்லையோ...

இந்த வாக்கெடுப்பில் நாம் தோல்வியுற்றிருந்தால்,
ஸ்ரீலங்கா அரசு... தான் செய்தது சரி என்று சொல்லி,  
கொண்டாடி... தமிழரை கேலி செய்து, அயோக்கியத்தனம்  செய்ய முற்பட்டு.. 
எம் மீதான அடக்குமுறையும், நில அபகரிப்பும்  படு வேகமாக நடத்த ஆயத்தப் படுத்தியிருக்கும்.

இப்ப நடந்தது... அவர்களின் கொட்டத்தை, கொஞ்சமாவது கட்டுப் படுத்தும்.
இனி, தமிழர் தரப்பு,   மேற்கு உலகத்துக்கு... 
உரிய அழுத்தங்களை கொடுப்பதன் மூலம், 
உரிய பலன் கிட்டும் என நம்புகின்றேன்.

எங்க‌ளின் நில‌ அப‌க‌ரிப்பு ம‌ற்றும்   எம் க‌லாச்சார‌ சீர் கேடு எல்லாத்துக்கும் சிங்க‌ள‌வ‌ர்க‌ளே முக்கிய‌ கார‌ண‌ம்........

சில‌ ச‌மைய‌ம் மெள‌ன‌மாய் அழுகிற‌து.........இப்ப‌டி வாழுற‌துக்கா இத்த‌ன‌ ஆயிர‌ம் மாவீர‌ர்க‌ள் த‌ங்க‌ளின் உயிரை தியாக‌ம் செய்தார்க‌ள் என்று யோசிக்கிற‌து .........

இர‌ண்டு நாளுக்கு முத‌ல் தான் என்ற‌ ந‌ண்ப‌னுக்கு சொல்லி க‌வ‌லைப் ப‌ட்டேன் உல‌கே உண‌க்கு க‌ண்ணில்லையா என்ற‌ பாட‌ல் போல் க‌ட‌வுளுக்கு கூட‌ க‌ருனை இல்லை என்று  , இந்த‌ செய்தி சிறு ஆறுத‌ல‌ த‌ருது சிறி அண்ணா ?

நாங்க‌ள் த‌மிழீழ‌த்தில் வாழ்ந்த‌ கால‌த்தில் க‌ஞ்சா தொட்டு போதை பொருட்க‌ள் தெரியாது.........2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு க‌ஞ்சா போன்ற‌ போதை பொருலுக்கு இப்ப‌த்த‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் அடிமையாய் போய் விட்டின‌ம்...........எல்லாம் ப‌ழைய‌ நிலைக்கு திரும்பும் என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு...........ஒரு போதும் எம‌து உரிமையை சிங்க‌ள‌வ‌னுக்கு விட்டு கொடுக்க‌ கூடாது ? 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

எரித்திரியா

கியூபா

வெனிசுவேலா 

சுமாலியா 

ஒரு இனத்தின் மீதான கொடூரமான அடக்குமுறையை ஆதரிக்கின்றன???

உலகம் எங்கே போகிறது??

தாம் பட்ட வலியை காரணமில்லாமல் மற்றவர் மேல் சுமத்தி ரசிக்கிறார்கள் அல்லது அதே தவறை தாமும் செய்யத் தொடங்கி விட்டார்கள் என்றும் கொள்ளலாம். 

இருந்தாலும்  இலங்கை அரசு சொல்லிப்போட்டுது தீர்மானம் வெற்றியடைந்தாலும் எதுவும் தன்னை செய்ய முடியாது என்று.

8 hours ago, பிழம்பு said:

மனித உரிமைகள் என்ற பெயரில் இவ்வாறான தீர்மானங்கள் மூலம் ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதை தாங்கள் எதிர்ப்பதாக இந்தக் கூட்டத்தில் தெரிவித்த சீன அரசின் பிரதிநிதி, இந்தத் தீர்மானத்தை தாங்கள் ஆதரிக்கவில்லை என்று கூறினார்

பின் எதற்காக மனித உரிமை கூட்டம்  என்று கூடுகினம்? தங்கள் மனித உரிமை மீறல்களை சொல்லி சிலாகிக்கவா?  

1 hour ago, vanangaamudi said:

மனித உரிமைகள் பற்றி வாய்கிழிய கத்தும் ஜப்பான் அடித்தட்டு நாடுகளுடன் கைகோர்த்துக் கொண்டதுதான் பெரிய கோமாளிக்கூத்து.

எரியிற வீட்டில் விறகு பிடுங்கிற சுயநலம். 

நம் அரசியற் தலைவர்கள் பிலிப்பீன், கியூபா போன்ற நாடுகளுடன் பேச்சு வார்த்தைகளை நடத்தி உறவுகளை வளர்ப்பது பின்வரும் காலங்களில் நன்மை பயக்கும். இலங்கை அரசு தமிழருக்கு எதிராக எடுக்கும் எல்லா நடவடிக்கைகளையும் உடனுக்குடன் சர்வதேசத்தின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். 

இதற்காக வருந்தி  உழைத்த அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்.  இன்னும் புது வேகத்துடன் உழைக்க வாழ்த்துக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, satan said:

தாம் பட்ட வலியை காரணமில்லாமல் மற்றவர் மேல் சுமத்தி ரசிக்கிறார்கள் அல்லது அதே தவறை தாமும் செய்யத் தொடங்கி விட்டார்கள் என்றும் கொள்ளலாம். 

இருந்தாலும்  இலங்கை அரசு சொல்லிப்போட்டுது தீர்மானம் வெற்றியடைந்தாலும் எதுவும் தன்னை செய்ய முடியாது என்று.

பின் எதற்காக மனித உரிமை கூட்டம்  என்று கூடுகினம்? தங்கள் மனித உரிமை மீறல்களை சொல்லி சிலாகிக்கவா?  

எரியிற வீட்டில் விறகு பிடுங்கிற சுயநலம். 

நம் அரசியற் தலைவர்கள் பிலிப்பீன், கியூபா போன்ற நாடுகளுடன் பேச்சு வார்த்தைகளை நடத்தி உறவுகளை வளர்ப்பது பின்வரும் காலங்களில் நன்மை பயக்கும். இலங்கை அரசு தமிழருக்கு எதிராக எடுக்கும் எல்லா நடவடிக்கைகளையும் உடனுக்குடன் சர்வதேசத்தின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். 

இதற்காக வருந்தி  உழைத்த அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்.  இன்னும் புது வேகத்துடன் உழைக்க வாழ்த்துக்கள். 

இது  ஆண‌வ‌ம் ?
க‌ட‌ந்த‌ கால‌ உல‌க‌ வ‌ரலாற்றை ப‌ற்றி முர‌ட்டு சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்கு தெரிய‌ வில்லை போல‌ ?

உல‌க‌ம் எப்ப‌வும் ஒரே மாதிரி இய‌ங்காது.......... ம‌கிந்தா தன் ஆட்சியில் இருக்கும் போதே ம‌ர‌ண‌ ப‌ய‌த்தில் உல‌ற‌  தொட‌ங்கின‌வ‌ர் ச‌ர்வ‌தேச‌த்தின் ந‌ட‌வ‌டிக்கையை பார்த்து ?

இந்தியா எம‌க்கு சாதக‌மாய் நின்று இருக்க‌னும் சிங்க‌ள‌ ஆட்சியாள‌ர்க‌ளின் க‌தை  எப்ப‌வோ முடிந்து இருக்கும் ?

கூட‌ நின்று இன‌ அழிப்பு செய்த‌து இந்தியா ? அந்த‌ தைரிய‌த்தில் தான் சிங்க‌ள‌ ஆட்சியாள‌ர்க‌ளின் ஆண‌வ‌ பேச்சு ? இல்லாட்டி பொத்திட்டு க‌ம்ம‌ன்ன‌ இருந்து இருப்பின‌ம் ?

சிங்க‌ள‌வ‌னின் ப‌ல‌ம் ப‌ல‌வீன‌ம் எது என்று எம்ம‌வ‌ர்க‌ள் இருக்கும் போதே நாம் எம் க‌ண்ணால் பார்த்த‌வை தானே 

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tamil paithiyam said:

இப்பத்தான் இங்க வந்து இருக்காங்க. நடக்கட்டும் நடக்கட்டும் 

போர்க்குற்ற (ஒண்ணுக்கும் ஆகாத உள்நாட்டு) விசாரணையை ஆரம்பிக்க சொல்றதுக்கே பத்து வருஷத்துக்கு மேலே …

இப்பவே மயிரெல்லாம் நரைச்சு போச்சு . மிச்சம் உள்ளதும் புடுங்கிகிட்டு போகுது ... கொஞ்சம் நஞ்சம் மிச்சமும் தன்னால உதிர்கிறது ...

ஸ்ஸ்ஸ்ஸ் ... ஒன்னும் சொல்றதுக்கு இல்லை 

வ‌ண‌க்க‌ம் ந‌டுவ‌ரே

2009ம் ஆண்டுக்கு முத‌ல் எம் போராட்ட‌ம் என்றால் இளைஞ‌ர் ம‌த்தியில் பெரிசா தெரியாது ?
2009க்கு பிற‌க்கு கோடிக்கண‌க்கான‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு எம் இன‌ அழிப்பு தொட்டு எம் போராட்ட‌ம் என்றால் என்ன‌ என்று தெரிய‌ வ‌ந்நு இருக்கு ?

த‌மிழ‌க‌த்தில் வ‌சிக்கும் இளைஞ‌ர்க‌ள் ஜ‌ நா ம‌ன்ற‌த்தில் அதிக‌ம் பேசினார்க‌ள்.................

பெரிய‌வ‌ர்க‌ளால் முடியா விட்டால் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் அடுத்த‌ க‌ட்ட‌த்துக்கு எடுத்து செல்வார்க‌ள்..............இதுக்கு வ‌ய‌து முக்கிய‌ம் இல்லை அறிவும் திற‌மையும் உண்மையும் நேர்மையும் இருந்தா போதும் 

இதுக்கு மிஞ்சி உங்க‌ளுக்கு புரிய‌ ப‌டுத்த‌ ஒன்றும் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பையன்26 said:

இது  ஆண‌வ‌ம் ?
க‌ட‌ந்த‌ கால‌ உல‌க‌ வ‌ரலாற்றை ப‌ற்றி முர‌ட்டு சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்கு தெரிய‌ வில்லை போல‌ ?

உல‌க‌ம் எப்ப‌வும் ஒரே மாதிரி இய‌ங்காது.......... ம‌கிந்தா தன் ஆட்சியில் இருக்கும் போதே ம‌ர‌ண‌ ப‌ய‌த்தில் உல‌ற‌  தொட‌ங்கின‌வ‌ர் ச‌ர்வ‌தேச‌த்தின் ந‌ட‌வ‌டிக்கையை பார்த்து ?

இந்தியா எம‌க்கு சாதக‌மாய் நின்று இருக்க‌னும் சிங்க‌ள‌ ஆட்சியாள‌ர்க‌ளின் க‌தை  எப்ப‌வோ முடிந்து இருக்கும் ?

கூட‌ நின்று இன‌ அழிப்பு செய்த‌து இந்தியா ? அந்த‌ தைரிய‌த்தில் தான் சிங்க‌ள‌ ஆட்சியாள‌ர்க‌ளின் ஆண‌வ‌ பேச்சு ? இல்லாட்டி பொத்திட்டு க‌ம்ம‌ன்ன‌ இருந்து இருப்பின‌ம் ?

சிங்க‌ள‌வ‌னின் ப‌ல‌ம் ப‌ல‌வீன‌ம் எது என்று எம்ம‌வ‌ர்க‌ள் இருக்கும் போதே நாம் எம் க‌ண்ணால் பார்த்த‌வை தானே 

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இவர்களின் பொய்யையும், தங்கள் சுயநலத்தையும் முன்னிட்டு சில நாடுகள் உதவி செய்தது உண்மையே. இப்போ இவர்களின் பொய்யும், சுயநலவாதிகளின் தேவையும் வெளுக்கத் தொடங்கி விட்டது. காலம் எல்லா நாளும் ஒரு மாதிரி இருக்காது. இவர்களின் வெற்(று)றி  பேச்செல்லாம் பயத்தினால் வரும் உளறலே. முதலில் வருவது இறுமாப்பு, அடுத்து வருவது அழிவு.

4 hours ago, பையன்26 said:

இந்தியா எம‌க்கு சாதக‌மாய் நின்று இருக்க‌னும் சிங்க‌ள‌ ஆட்சியாள‌ர்க‌ளின் க‌தை  எப்ப‌வோ முடிந்து இருக்கும் ?

 இந்தியா ஒரு வெற்றுப் பாத்திரம் அதை யாரும் கணக்கெடுக்காத நாளை தனக்கு தானே உருவாக்குகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை குறித்து ஆராய ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் புலனாய்வாளர்கள், சட்ட ஆலோசகர்கள் நியமனம்!

இலங்கை குறித்து ஆராய ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் புலனாய்வாளர்கள், சட்ட ஆலோசகர்கள் நியமனம்!

இலங்கை தொடர்பாக  ஆராய ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம் சட்ட ஆலோசகர்களையும் புலனாய்வாளர்களையும் நியமிக்கவுள்ளது

இலங்கை தொடர்பான தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து, ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம், இலங்கையை உன்னிப்பாகக் கண்காணிக்கும் பணியைத் தொடங்கும் என்றும் அதன்படி, இலங்கையில் பணிபுரிய 12 புதிய ஊழியர்களை நியமிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

அவர்களில் சர்வதேச குற்றவியல் நீதி – குற்றவியல் விசாரணைகள் மற்றும் அணியை ஒருங்கிணைத்து ஒரு தகவல் மற்றும் சான்றுகள் சேகரிக்கும் உத்தியுடைய ஆய்வாளர்கள், இரண்டு புலனாய்வாளர்கள்,  மனித உரிமை அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பின் ஆதரவு அதிகாரிகள் ஆகியோரை மேற்பார்வையிடுவதற்கான அனுபவமுள்ள சட்ட ஆலோசகர்கள் உள்ளனர்.

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலின் முன்னேற்றம் உட்பட இலங்கையில் மனித உரிமைகளின் நிலைமை குறித்த அதன் கண்காணிப்பு மற்றும் அறிக்கையை மேம்படுத்த உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் அழைப்பு விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1204335

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and text that says '23/03/2021 2021 முக்கியச் செய்தி ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கை போர்க்குற்ற தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை தந்தி THANTHI TV காங்கிரஸ் மட்டுமே தமிழின விரோதி இல்லடா! பா பா.ஜ.கவும் கவும் தான்.'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தொடர்பான தீர்மானத்தை செற்படுத்த அதிக நிதி தேவைப்படும் – UN

இலங்கை தொடர்பான தீர்மானத்தை செயற்படுத்த அதிக நிதி தேவைப்படும் – UN

இலங்கை தொடர்பான தீர்மானத்தை செயற்படுத்த அதிக நிதி தேவைப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இலங்கை தொடர்பான புதிய தீர்மானத்தை செயற்படுத்த தேவையான நிதி 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இல்லை என ஐ.நாடுகள் சபையின் திட்டமிடல் மற்றும் வரவு செலவுத் திட்டப் பிரிவு இயக்குனர் ஜோஹனேஸ் ஹுஸைமான் (Johannes Huisman) தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக மனித உரிமைகள் பேரவையின் செயலாளர் கோரோ ஒனோஜிமாவுக்கு (Goro Onojima) எழுதிய கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த கடிதத்தில் தீர்மானத்தில் தொடர்புடைய விதிகள் 2021ஆம் ஆண்டிற்கான திட்ட வரவு செலவுத் திட்டத்தின் கீழ் அல்லது 2022ஆம் ஆண்டிற்காக முன்மொழியப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் இணைக்கப்படவில்லை என குறிபிட்டார்.

அதன்படி, வரைவுத் தீர்மானம் A / HRC / 46 / L.1க்கு, கூடுதலாக 2.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் உள்ளிட்ட பல செலவுகளை அவர் அதில் சுட்டிக்காட்டினார்.

https://athavannews.com/2021/1204362

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனீவாவில் எம்மை வெற்றிகொள்ள முடியவில்லை – சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

dinesh.jpg
 33 Views

“ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 47 நாடுகளில் 22 நாடுகளினுடைய ஆதரவினை மாத்திரமே மனித உரிமை பேரவையினால் பெற்றுக்கொள்ள முடியுந்தது. 25 நாடுகளினுடைய ஆதரவினை பெற்றுக்கொள்ள முடியவில்லை. 11 நாடுகள் அந்த யோசனைக்கு எதிராக வாக்களித்தன. ஏனைய 14 நாடுகள் தமது வாக்குகளை பிரயோகிக்கவில்லை” என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருக்கின்றார்.

ஜெனிவா மனித உரிமை பேரவையில் நேற்று மாலை வாக்களிப்பு முடித்தபின்ன ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

“ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அதனுடைய அடிப்படை கொள்கைக்கு புறம்பாகச் செயற்பட முடியாது. ஒரு நாட்டுக்கெதிராக ஐக்கிய நாடுகள் சபையில் பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகள் கொண்டுவந்துள்ள பிரேரணையை நிறைவேற்ற முடியாது. இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை தண்மையற்றவையாகும், ஏனெனில் நாம் முன்னராகவே இது தொடர்பில் கூறியிருந்தோம், இந்த நிலையிலேயே குறித்த பிரேரணை ஜெனீவாவில் நிறைவேற்றபோட்டுள்ளது.

இருப்பினும் ஜெனீவாவினால் எம்மை வெற்றிகொள்ள முடியவில்லை. அத்துடன் கொரோனா நிலைவரத்திலும் கூட இந்த விவகாரம் தொடர்பில் ஏனைய நாடுகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தோம். அதே போன்று மனித உரிமை மீறல்கள் நாட்டில் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பில் முறைப்பாடு செய்ய ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்திருந்தோம்.

அதே போல் ஐ.நாவினால் முன்மொழியப்பட்டுள்ள நிலைபேறான அபிவிருத்தியின் 2023 வது நிகழ்ச்சி நிரலுக்கு அமைய நாம் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து செல்கின்றோம். மேலும் நாட்டிலுள்ள தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களால் வடக்கு தொடக்கம் தெற்கு வரையில் சுதந்திரமாக வசிப்பதற்ககு ஏதுவான உரிமையை பெற்றுக்கொடுத்துள்ளோம்.

விடுதலை புலிகளின் பயங்கரவாதத்தை போன்று எவராலும் நாட்டு மக்களை அடிமைப்படுத்த முடியாத ஒரு சூழலை ஏற்படுத்தியுள்ளோம். இவையனைத்தையும் புறம்தள்ளியே பிரிட்டன் போன்ற நாடு இத்தகையதொரு பிரேரணையை எமது நாட்டிற்கெதிராக முன்வைத்திருக்கின்றது.

இந்த நிலையில் 47 நாடுகளில் 22 நாடுகளினுடைய ஆதரவினை மாத்திரமே மனித உரிமை பேரவையினால் பெற்றுக்கொள்ள முடியுமாக இருந்தது. இவற்றில் 25 நாடுகளினுடைய ஆதரவினை பெற்றுக்கொள்ள முடியாத நிலையாமையேற்பட்டது, ஏனெனில் 11 நாடுகள் அந்த யோசனைக்கு எதிராக வாக்களித்தன. ஏனைய 14 நாடுகள் தமது வாக்குகளை பிரயோகிக்காது சுயாதீனமாக இதிலிருந்து விலகிக்கொண்டன. இதனை நோக்கும் போது பெரும்பான்மையான நாடுகள் இந்த யோசனைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளமையே காணக்கூடியதாவுள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.

https://www.ilakku.org/?p=45310

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை குறித்து ஆராய ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் புலனாய்வாளர்கள், சட்ட ஆலோசகர்கள் நியமனம்!

இலங்கை குறித்து ஆராய ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் புலனாய்வாளர்கள், சட்ட ஆலோசகர்கள் நியமனம்!

இலங்கை தொடர்பாக  ஆராய ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம் சட்ட ஆலோசகர்களையும் புலனாய்வாளர்களையும் நியமிக்கவுள்ளது

இலங்கை தொடர்பான தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து, ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம், இலங்கையை உன்னிப்பாகக் கண்காணிக்கும் பணியைத் தொடங்கும் என்றும் அதன்படி, இலங்கையில் பணிபுரிய 12 புதிய ஊழியர்களை நியமிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

அவர்களில் சர்வதேச குற்றவியல் நீதி – குற்றவியல் விசாரணைகள் மற்றும் அணியை ஒருங்கிணைத்து ஒரு தகவல் மற்றும் சான்றுகள் சேகரிக்கும் உத்தியுடைய ஆய்வாளர்கள், இரண்டு புலனாய்வாளர்கள்,  மனித உரிமை அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பின் ஆதரவு அதிகாரிகள் ஆகியோரை மேற்பார்வையிடுவதற்கான அனுபவமுள்ள சட்ட ஆலோசகர்கள் உள்ளனர்.

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலின் முன்னேற்றம் உட்பட இலங்கையில் மனித உரிமைகளின் நிலைமை குறித்த அதன் கண்காணிப்பு மற்றும் அறிக்கையை மேம்படுத்த உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் அழைப்பு விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1204335

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.