Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தோழனே....!!!!

Featured Replies

தோழனே....!!!

movgal4118yu8.jpg

நீ எனக்கு நண்பனாக கிடைக்க

நான் ஏது தவம் செய்தேனோ?

கலகலவென நகைக்கும் வயதில்

சலனமில்லாமல் இவ்வளவு சோகமா?

உனக்குள் இருக்கும் சோகத்தை

எனக்குள் இன்றே புதைத்துவிட்டு

கள்ளமின்றிச் சிரித்திட

உல்லாச வானில் பறந்திடு

உன் இலட்சியங்களை நிறைவேற்ற

என்றும் உனக்கு துணையாவேன்

இன்றே விரைந்து புறப்படு

நன்றே நடக்கும் உன்வாழ்வில்

பழையனவற்றை மறந்திடு

புதியதை தேடி விரைந்திடு

சோகத்தை தூக்கி எறிந்திடு

தோழி என் தோளில் தலை சாய்த்திடு

ஆயிரம் உறவுகள் தோன்றியும்

அன்பில்லையே என சலிக்காதே

நட்பைவிட வேறேது இன்பம்

நானிருப்பேன் கலங்காதே

  • Replies 98
  • Views 15.6k
  • Created
  • Last Reply

தோழி நிலையென நிலைத்தால்...

..

இப்ப எல்லாம் சொல்லுவாங்க..

கல்யாணம் ஆனதும்..

தோழமை ஏழ்மையாகும்.. :D

கவிதை அழகு..

சாரம் சாயம்.. :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோழனே....!!!

movgal4118yu8.jpg

நீ எனக்கு நண்பனாக கிடைக்க

நான் ஏது தவம் செய்தேனோ?

கலகலவென நகைக்கும் வயதில்

சலனமில்லாமல் இவ்வளவு சோகமா?

உனக்குள் இருக்கும் சோகத்தை

எனக்குள் இன்றே புதைத்துவிட்டு

கள்ளமின்றிச் சிரித்திட

உல்லாச வானில் பறந்திடு

உன் இலட்சியங்களை நிறைவேற்ற

என்றும் உனக்கு துணையாவேன்

இன்றே விரைந்து புறப்படு

நன்றே நடக்கும் உன்வாழ்வில்

பழையனவற்றை மறந்திடு

புதியதை தேடி விரைந்திடு

சோகத்தை தூக்கி எறிந்திடு

தோழி என் தோளில் தலை சாய்த்திடு

ஆயிரம் உறவுகள் தோன்றியும்

அன்பில்லையே என சலிக்காதே

நட்பைவிட வேறேது இன்பம்

நானிருப்பேன் கலங்காதே

வெண்ணிலா,

எதை எதையோ சொல்லத்தொடங்கி எங்கேயோ முடித்துவிட்டிருக்கின்றீர்

Edited by Thamilthangai

  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிலா மன்னிக்கவும் இங்குள்ளோர் உங்களை அக்கா என்று அழைப்பதாக அறிந்தேன் இருந்தும் உங்களை விட எனக்கு வயது அதிகம் என்பதை உறுதிப்படுத்திய பின்பே அப்படிச் சொன்னேன்.

கவிதையில் தவறு கண்டுபிடிக்குமளவிற்கு எனக்கு அறிவில்லை ஆனால் ரசிப்பேன். பிடிக்காத கருத்துக்கள் என்றால் சுட்டிக்காட்டுவேன். அதன்படி இந்தக் கவிதையின் வரிகள் என்னைக் கவர்ந்துள்ளன..தமிழ்த்தங்கை ஒரு சிறந்த கலைஞர், அவரை நாணறிவேன் கருத்தக்களில், அல்லது சொற்பிழைகளில் யார் தவறு விட்டாலும் மன்னிக்கவே மாட்டா.

நான் கண்டிக்கப்பட்ட அனுபவம் நிறையவுண்டு.

ஆகவேதான் கவிதை என்ற விஷப்பரீட்சைக்கு நான் போவதில்லை.

Edited by Valvai Mainthan

  • தொடங்கியவர்

தோழி நிலையென நிலைத்தால்...

..

இப்ப எல்லாம் சொல்லுவாங்க..

கல்யாணம் ஆனதும்..

தோழமை ஏழ்மையாகும்.. :D

கவிதை அழகு..

சாரம் சாயம்.. :D

கவி தோழி நிலையென நினைத்தால்.................... மிகுதியையும் தொடரலாமே. :rolleyes:

கல்யாணம் ஆனதும் தோழமை ஏழ்மையடையுமா? ஏன் அப்படி சொல்லுறீங்க. நட்பு வேறை திருமணா வாழ்க்கை வேறை. :P

  • தொடங்கியவர்
வெண்ணிலா, எதை எதையோ சொல்லத்தொடங்கி எங்கேயோ முடித்துவிட்டிருக்கின்றீர்

கவிதை அருமை வெண்ணிலா...

தங்கள் நட்பின் உண்மையும் தோழனின் சோகத்தைக்களைந்து அவனுக்கு ஆறுதல் கொடுக்க வேண்டும் எனும் ஆதங்கம் புரிகின்றது.... அதற்காக நீங்கள் சோகமடைந்துவிடாதீங்க சகோதரி அப்புறம் நாங்கள் எல்லாம் பாவமல்லா..? :)

' தோழியின் தோளில் தலைசாய்ப்பது' என்பது சில நெருடல்களை ஏற்படுத்துவதை உணர முடிகிறது. ஆனால், இந்த நிகழ்வு சோகத்தின் கனதியைப் பொறுத்து சமூகத்தால் சாதாரணமாக ஏற்றுக் கொள்ளப்படுவதை நான் சில இடங்கில் கண்டிருக்கிறேன்.

தாயகத்தில் நகரப்புறங்களில் எப்படியோ தெரியவில்லை. ஆனால் கிராமங்களில் திடீரென யாராவது இறந்தால்.. அல்லது விபத்தில் அகப்பட்டால்... செய்திகேட்டு அங்கு கூடும் மக்களை கட்டிப்பிடித்தவாறு இளம்பெண்கள் கதறி அழுவதைக் கண்டிருக்கிறேன். அந்த நிகழ்வு அவர்களுக்கு ஏற்பட்ட சோகத்துக்கு ஒரு ஆறுதலாகப் பார்க்கப்பட்டதே தவிர.. ஒரு இளம்பெண் ஆண்களைக் கட்டிப்பிடிக்கிறாளே என்று பார்க்கப்படவில்லை.

அதேமாதிரியான ஒரு தூய்மையான நிகழ்வை தனது கவிதையில் வீச்சாகக் கூறுவதற்கு சோகத்தை தோளில் சாய்த்து விடு என்ற வரியைப் பாவித்து, வெண்ணிலா அவர்களும் நட்பின் புனிதத்தை வெளிப்படுத்துவதாக கருதுகிறேன்.

வாழ்த்துக்கள் வெண்ணிலா.

Edited by sOliyAn

பழையனவற்றை மறந்திடு

புதியதை தேடி விரைந்திடு

சோகத்தை தூக்கி எறிந்திடு

தோழி என் தோளில் தலை சாய்த்திடு

ஆயிரம் உறவுகள் தோன்றியும்

அன்பில்லையே என சலிக்காதே

நட்பைவிட வேறேது இன்பம்

நானிருப்பேன் கலங்காதே

நிலா அக்கா கவிதை பேஷ் பேஷ் நல்லா இருக்கு...........உங்கள் நட்பை கவிதையில் வாசிக்கும் போது நட்பின் ஆழத்தை அறியமுடிகிறது உங்கள் நட்பு தொடர வாழ்த்துகள்.......நட்பை தூய்மையான கண்ணோட்டத்தில் பார்த்தால் உங்கள் கவியில் ஒரு வித பிழைகளும் இல்லை.நட்பை பற்றி நாங்கள் மற்றவர்களுக்கு சொல்வது மிகவும் கஷ்டம் அதை உணர்ந்தால் தான் சந்தோசமே இருக்கும் அந்த வகையில் உங்கள் கவிதை பிரமாதம்.......

B)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெண்ணிலா மிக்க நன்றி, தங்கள் கவிதையின் கருத்தை நான் தவறென்று சொல்லவில்லை.ஆனால் தோளில் சாய்ந்துவிடு என்று சொல்லுவதில் உள்ள நெருடலைத்தான் குறிப்பிட்டேன்.

தமிழ் பெண்களுக்குத்தான் அச்சம்,மடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கு குணங்களும்(இப்ப இல்லை என்பது வேதனைதான்). உண்டு.

அதில் பயிர்ப்பு என்பது தன்னைக் கொண்டவனைத் தவிர(கணவனைத்தவிர) வேறு ஆண்கள் தொட்டால் உடலில் ஏற்படும் கூச்ச உணர்வு!.

நட்புக்கு களங்கம் ஏற்படக்கூடாது! நட்பு காதலாய் மாறிவிடுவது கூட களங்கம் என நினைப்பவள் நான்.

நட்பு நட்பாகத்தான் இருக்க வேண்டும்!.'அதைக் காமக் கண் கொண்டு பார்ப்பவர்களை எல்லாம் கணக்கில் எடுக்கவே வேண்டாம்"!

சோழியன் அவர்கள் சொன்ன உதாரணம்.'தோளில் சாய்ந்துவிடு என்று சொல்லிக்கொண்டு சாய்வதில்லை"!! அந்த நிகழ்வே வேறு!.

வல்வை மைந்தன் அண்ணா,

இதெல்லாம் ரொம்பவும் அநியாயம்!. நீங்கள் கவிதை எழுதுங்கோ!. " அவரை நான் அறிவேன்(நானறிவேன்) என்று சொல்லிவிட்டு இப்படி அறியாமல் பேசலாமோ அண்ணா? :)

  • தொடங்கியவர்
கவிதை அருமை வெண்ணிலா...தங்கள் நட்பின் உண்மையும் தோழனின் சோகத்தைக்களைந்து அவனுக்கு ஆறுதல் கொடுக்க வேண்டும் எனும் ஆதங்கம் புரிகின்றது.... அதற்காக நீங்கள் சோகமடைந்துவிடாதீங்க சகோதரி அப்புறம் நாங்கள் எல்லாம் பாவமல்லா..? :rolleyes:
நன்றி கெளரிபாலன். எனது ஆதங்கத்தை புரிந்தமைக்கு நன்றிகள்.அதுசரி ஏன் நீங்க இப்போ உங்கள் கவிதைகளை இங்கு பிரசுரிப்பதில்லை? :)
' தோழியின் தோளில் தலைசாய்ப்பது' என்பது சில நெருடல்களை ஏற்படுத்துவதை உணர முடிகிறது. ஆனால், இந்த நிகழ்வு சோகத்தின் கனதியைப் பொறுத்து சமூகத்தால் சாதாரணமாக ஏற்றுக் கொள்ளப்படுவதை நான் சில இடங்கில் கண்டிருக்கிறேன்.தாயகத்தில் நகரப்புறங்களில் எப்படியோ தெரியவில்லை. ஆனால் கிராமங்களில் திடீரென யாராவது இறந்தால்.. அல்லது விபத்தில் அகப்பட்டால்... செய்திகேட்டு அங்கு கூடும் மக்களை கட்டிப்பிடித்தவாறு இளம்பெண்கள் கதறி அழுவதைக் கண்டிருக்கிறேன். அந்த நிகழ்வு அவர்களுக்கு ஏற்பட்ட சோகத்துக்கு ஒரு ஆறுதலாகப் பார்க்கப்பட்டதே தவிர.. ஒரு இளம்பெண் ஆண்களைக் கட்டிப்பிடிக்கிறாளே என்று பார்க்கப்படவில்லை.அதேமாதிரி
  • தொடங்கியவர்

நிலா அக்கா கவிதை பேஷ் பேஷ் நல்லா இருக்கு...........உங்கள் நட்பை கவிதையில் வாசிக்கும் போது நட்பின் ஆழத்தை அறியமுடிகிறது உங்கள் நட்பு தொடர வாழ்த்துகள்.......நட்பை தூய்மையான கண்ணோட்டத்தில் பார்த்தால் உங்கள் கவியில் ஒரு வித பிழைகளும் இல்லை.நட்பை பற்றி நாங்கள் மற்றவர்களுக்கு சொல்வது மிகவும் கஷ்டம் அதை உணர்ந்தால் தான் சந்தோசமே இருக்கும் அந்த வகையில் உங்கள் கவிதை பிரமாதம்.......B)

நன்றி ஜம்மு பேபி. ம்ம் அந்ட்பை உணரெதால் தான் அதன் அர்த்தம் புரியும். :P

  • தொடங்கியவர்

வெண்ணிலா மிக்க நன்றி, தங்கள் கவிதையின் கருத்தை நான் தவறென்று சொல்லவில்லை.ஆனால் தோளில் சாய்ந்துவிடு என்று சொல்லுவதில் உள்ள நெருடலைத்தான் குறிப்பிட்டேன்.

நீங்கள் சொல்லியதில் தவறென்று நானும் குறிப்படவில்லை. ஆனால் நான் நட்பை நட்பாக தான் பார்க்கின்றேன் கவியிலும் குறிப்பிட்டேன். அதைதான் நான் சொன்னேன். உங்கள் கருத்துக்கு நன்றி. இன்னும் ஒவ்வொரு கவிதையிலும் உங்கள் கருத்தை விமர்சனத்தை எதிர்பார்ப்பேன்.

தமிழ் பெண்களுக்குத்தான் அச்சம்,மடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கு குணங்களும்(இப்ப இல்லை என்பது வேதனைதான்). உண்டு.

அதில் பயிர்ப்பு என்பது தன்னைக் கொண்டவனைத் தவிர(கணவனைத்தவிர) வேறு ஆண்கள் தொட்டால் உடலில் ஏற்படும் கூச்ச உணர்வு!.

ம்ம் நிச்சயமாக. அதற்காக இவ்நான்கையும் அப்படியே கொண்டிருக்கணும் என்றில்லை. நாங்க தமிழ் பொண்ணுக தான். அதற்காக அச்சம் கொண்டால் இப்போ இருக்கிற நிலையில் அச்சமே நமக்கு எதிரியாகிடும். அதே போலவெ தான் மடம் நாணம் இவையும். அதிக விளக்கம் தேவையில்லை என நினைக்கின்றேன்.

பயிர்ப்பு நீங்க சொல்வது போல கணவனைத்தவிர வேறு ஆண்கள் தொட்டால் உடலில் ஏற்படும் கூச்ச உணர்வு. அக்கணவனின் தொடுகையில் ஏற்படும் உணர்வு வேறு. வேறு ஆண்கள் என்ற வட்டாரத்துக்குள் சகோதரன்கள் அப்பா இவர்களும் அடங்குவார்கள் தானே. அதே போலவே தான் ஒரு நல்ல தோழனும்.

நட்புக்கு களங்கம் ஏற்படக்கூடாது! நட்பு காதலாய் மாறிவிடுவது கூட களங்கம் என நினைப்பவள் நான்.

நிச்சயமாக. நானும் அப்படித்தான். நட்பு நட்பு தான். அது காதலாகவே மாறாது. நண்பன் எப்போதும் நண்பனாகவே இருக்கணும். உங்கள் கருத்தை நான் இன்முகத்தோடு ஏற்கின்றேன்.

நட்பு நட்பாகத்தான் இருக்க வேண்டும்!.'அதைக் காமக் கண் கொண்டு பார்ப்பவர்களை எல்லாம் கணக்கில் எடுக்கவே வேண்டாம்"!

கண்டிப்பாக. நான் சமுதாயத்தைக் கண்டு பயந்ததேயில்லை. என் மனச்சாட்சிக்கு எது சரி என தோணுகின்றதோ அதை நான் ஏற்றுக்கொள்வேன். சமுதாயம் ஆயிரம் சொல்லும். அவற்ரை எல்லாம் கணக்கிலெடுத்தால் வாழவே முடியாது. நட்பு நட்பு தான்.

சோழியன் அவர்கள் சொன்ன உதாரணம்.'தோளில் சாய்ந்துவிடு என்று சொல்லிக்கொண்டு சாய்வதில்லை"!! அந்த நிகழ்வே வேறு!.

சோழியன் அண்ணா சொன்ன நிகழ்வு வேறாக இருக்கலாம். அதாவது எதிர்பாராவிதமாக ஏற்படும் ஓர் தோள் சாய்வாக இருக்கலாம். அதேபோல தான் என் நண்பன் தன் சோகங்களை பகிரும் போது அவனுக்கு அவ்விடத்தில் என்னாலான ஆறுதலை அளிப்பதில் ஏது தப்பு?

அதற்காக நீங்கள் நினைக்கலாம் எல்லாரும் நண்பர்களெனில் எல்லா நண்பர்களுக்கும் தோளில் இடம் கொடுப்பாயா என. சாதாரணமாக எனக்கு நண்பர்கள் குறைவு. அப்படியானவர்களுள் அக்கா அண்ணா மாமா இபப்டி இருப்பவர்கள் தான் அதிகம். எனது வகுப்பில் கூட 2 நண்பிகள் தான். ஏனையோர் என் வகுப்பு மாணவிகள். அவர்களை எல்லாம் என் நட்பு என சொல்லிக்கொள்வதில்லை. அதே போல தான் எனக்கு இந்த நண்பனும். ஆனால் இந்த நண்பன் எவ்வகையிலும் காதலனாக மாறவே மட்டான். நண்பன் எப்போதும் நண்பன் தான்.

ஒரு நண்பியும் நண்பனும் மனதில் சஞ்சலமின்றி வாழ்ந்தால் அது புனிதமான நட்பாகவே இருக்கும்,. :P

ஓகே நன்றி. தமிழ்த்தங்கை.

  • கருத்துக்கள உறவுகள்

நட்புக்கு எங்க ஆணும் பெண்ணும்..! மனிதத்தின் தன்மை கொண்டு நட்பு இருந்தால் ஆறுதல் தேடி யார் தோளிலும் சாயலாம். அதை பார்க்கிற பார்வையும் நோக்கிற நோக்கமும் தான் சீரானதா இருக்கனும்..! அது இலகுவான சாத்தியமில்லாத உலகு தமிழர்களிடத்தில்...! :D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நட்புக்கு எங்க ஆணும் பெண்ணும்..! மனிதத்தின் தன்மை கொண்டு நட்பு இருந்தால் ஆறுதல் தேடி யார் தோளிலும் சாயலாம். அதை பார்க்கிற பார்வையும் நோக்கிற நோக்கமும் தான் சீரானதா இருக்கனும்..! அது இலகுவான சாத்தியமில்லாத உலகு தமிழர்களிடத்தில்...! :D:D

ஆஹா!! நான் காண்பது கனவா? இல்லை நனவா?!!..நெடுக்ஸ் அண்ணனிடம் இருந்து இப்படி ஓர் வார்த்தையா?!!..." இந்த அங்கதமான இங்கித வார்த்தைகளை அள்ளித் தெளிப்பதில் நெடுக்கண்ணனுக்கு ஈடு இணை தான் யார் :lol::) :)

Edited by Thamilthangai

  • கருத்துக்கள உறவுகள்

நட்பு என்பதிற்கு ஒவ்வொருத்தரும் தங்களது அனுபவரீதியாக விளக்கம் அளித்துள்ளார்கள் என்று நினைக்கின்றேன்.

இதில் ஒரு சிலர் மட்டும் கலாச்சாரம் என்ற வட்டத்திற்குள் சுற்றி சுற்றி வருவதை புரியக்கூடியதாக உள்ளது.

இன்றைய சூழ்நிலையில் கலாச்சாரத்தையும் ,நட்பையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. அப்படிப்பார்த்தால் ஒரு ஆனும் பெண்ணும் நட்பாக இருக்கமுடியாது. தோளில் சாய்வது என்ற விடயம் நடைமுறையில் நட்பைப் பொறுத்தவரை கொஞ்சம் அதிகம் தான்.

இருப்பினும் இந்தக்கவிதையைப் பொறுத்தவரை நிலா நட்பின் ஆழத்தை விபரிப்பதிற்காகத் தான் அந்த வசனத்தை பயன்படுத்தியிருக்கலாம் என்று நான் நினைக்கின்றேன்.

தமிழ்த்தங்கையைப் பொறுத்தவரை கலாச்சாரத்திலும், தமிழ்ப் பண்பாட்டிலும் அதிகமாக ஊறியிருப்பதால் இந்தக் கவிதையின் சில வரிகளை ஏற்றுக்கொள்ள முடியாத மனப்பான்மையில் இருப்பதாக எனக்குத் தோன்றுகின்றது.

நான் நட்பை நட்பாகத் தான் நோக்குபவன் ஆகவே இந்தக் கவிதையில் ரசிக்கக் கூடிய விடயங்கள் நிறைய உண்டு.

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை மிக நன்று சகோதரி.

கவிதையென வரும்பொழுது மிகைப்படுத்தல் என்பது தானாகவே வந்து விடுகிறது. அது இல்லையெனில் கவிதை சோபிக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் உறவுகள் தோன்றியும்

அன்பில்லையே என சலிக்காதே

நட்பைவிட வேறேது இன்பம்

நானிருப்பேன் கலங்காதே

அழகான கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

தோழன் புரிந்துகொள்ளவேண்டும்.. சிலவேளை சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடக்கூடாது என்பதில் உறுதியாய் உள்ளாரோ தெரியவில்லை!

நன்றி கெளரிபாலன். எனது ஆதங்கத்தை புரிந்தமைக்கு நன்றிகள்.அதுசரி ஏன் நீங்க இப்போ உங்கள் கவிதைகளை இங்கு பிரசுரிப்பதில்லை? வேலைச்சுமை கொஞ்சம் கூடியுள்ளது..அத்துடன் சிந்தனை எல்லாம் வேலை வசம் இருக்கும் போது கவி எழுத ஒன்றும் தோன்றவில்லை.... இருந்தாலும் கறுப்பியின் கவிதை அந்தாதியில் எப்பவாவது உடனடிக்கவிதையாய் ஏதோ கிறுக்குவேன்....

நட்புக்கு எங்க ஆணும் பெண்ணும்..! மனிதத்தின் தன்மை கொண்டு நட்பு இருந்தால் ஆறுதல் தேடி யார் தோளிலும் சாயலாம். அதை பார்க்கிற பார்வையும் நோக்கிற நோக்கமும் தான் சீரானதா இருக்கனும்..! அது இலகுவான சாத்தியமில்லாத உலகு தமிழர்களிடத்தில்...!
உங்கள் கருத்துடன் நானும் ஒத்துப்போகின்றேன் நட்பு இனம் மொழி பால் எதுவுமே அறியாதது ....

உண்மையான நட்பு எதுவந்தாலும் என்றுமே நிலைத்து நிற்கும்....இதில் தோளில் சாய்தல் என்பதை எடுத்துவைத்து விமர்சித்தல் நட்பை நன்கு உணராதவர்களாக இருக்கலாம் ...இங்கு எவரிலும் தவறில்லை எமது சமுதாயத்தில் யாரும் யாருடனும் பழகும் போதும் ஏதோ ஒரு இலாபத்துக்காகத்தானே பழகுகின்றார்கள் ...!

இங்கு தன்னலமில்லாத வெண்ணிலாவின் நட்புக் கிடைக்க ... அந்த வெண்ணிலாவின் நண்பன் தான் கொடுத்து வைத்திருக்கவேண்டும்...ஆனால் அந்த நண்பனும் நட்புக்காக தனது சோகத்தில் இருந்து விடுபட வேணும் இல்லையா குருவியாரே...... ?? ..

  • கருத்துக்கள உறவுகள்

நட்புக்கு எங்க ஆணும் பெண்ணும்..! மனிதத்தின் தன்மை கொண்டு நட்பு இருந்தால் ஆறுதல் தேடி யார் தோளிலும் சாயலாம். அதை பார்க்கிற பார்வையும் நோக்கிற நோக்கமும் தான் சீரானதா இருக்கனும்..! அது இலகுவான சாத்தியமில்லாத உலகு தமிழர்களிடத்தில்...! :):huh:

அப்டியா??? :D

உலகதமிழர் இடத்தே இல்லையா? சாறி தலை, மாற்றிக்குங்க உங்க எண்ணத்தை, புலத்து தமிழர்களிடையே அது வேரூன்றி ரெம்ப காலமாகிவிட்டது. :angry:

எனிவே, லேடீஸ் அண்ட் சாறி நொட் ஜெண்டில்மேன், யாரவது சோகமா இருந்தால் டன்னை தொடர்பு கொள்ளவும்! B) ;)

Edited by Danklas

  • கருத்துக்கள உறவுகள்

எனிவே, லேடீஸ் அண்ட் சாறி நொட் ஜெண்டில்மேன், யாரவது சோகமா இருந்தால் டன்னை தொடர்பு கொள்ளவும்!

மேலதிக சேவைகளுக்கு என்னை நாடவும். (24 மணி நேர இலவச சேவை) B)

( டன் கோவிக்காதீர்கள். சும்மா கீரைக்கடைக்கு எதிர்க்கடை போட்டேன் :) )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெண்ணிலா அக்கா கவிதை நன்னாயிருக்கு பேஷ் பேஷ். நீங்க சொன்ன மாதிரி மனதில களங்கமில்லாத நட்புடன் தோளில சாயலாம்.

நண்பன் நண்பன் மட்டும் தான். அவன் காதலனாக மாற முடியாது

  • கருத்துக்கள உறவுகள்

அப்டியா??? :D

உலகதமிழர் இடத்தே இல்லையா? சாறி தலை, மாற்றிக்குங்க உங்க எண்ணத்தை, புலத்து தமிழர்களிடையே அது வேரூன்றி ரெம்ப காலமாகிவிட்டது. :angry:

எனிவே, லேடீஸ் அண்ட் சாறி நொட் ஜெண்டில்மேன், யாரவது சோகமா இருந்தால் டன்னை தொடர்பு கொள்ளவும்! B) ;)

சாயுறாங்க சாயுறாங்க.. பாக்குகள் வழிய பாக்கிறமில்ல..! கொஞ்ச நாள் நட்பு.. அப்புறம்.. அது லவ்வு.. அல்லது டேட்டிங்கு...அப்புறம்.. அதுவே இழவு..! இப்படித்தான் இருக்கு புகலிடத்தில வேரூண்றியுள்ளது "நட்பு..!".

சும்மா சொல்லக் கூடாது புகலிடத்து நட்பு.. பப்.. கிளப்... பாப்.. ராப்..ஆடிற வரைக்கும் போகும்.. அதையும் பெருமையா சொல்லிக்கனும்..! :huh:

நம்மாக்கள் இந்த நட்பு என்றதுக்கு உண்மையான உணர்வு பூர்வமான நிலையை அடையுறது ரெம்பவே தூரத்தில தான் இன்னும் இருக்கு..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கண்ணே, நெற்றியில் அடிச்சாப்போல சொன்னீங்கள்!!

சொல்ல வந்த கருத்தை புரிஞ்சுகொள்ள முற்படாமல்" நட்பைப்பற்றியே தெரியாதவங்க தான் அப்படிச்சொல்லலாம் என்று வேற சாயம் பூசுகினம்,! இவையைச்சொல்லிக் குற்றமில்லைத்தானே!.

எல்லாம் காலம் கலி!!..

"தோழா தோழா தோள்கொடு கொஞ்சம் சாய்ஞ்சுக்கணும்" என்று சொன்ன நட்பு கடைசியில் எங்க வந்து முடிஞ்சுதெண்டு தெரியும் தானே அதுதான் யதார்த்தம். கற்பனையில் சிறகுகட்டிப்பறக்கிறவையோட கருத்தாட முடியாது!

குழந்தையாயிருக்கும் போதுதான் ஆண் பெண் என்ற பேதமில்லாமல் எல்லாரும் கொஞ்சுவினம். பெண் என்ற பருவ நிலைக்கு வந்த உடனேயே அப்பா, அண்ணா, தம்பி என்ற இரத்த உறவுகள் கூட ஓர் இடைவெளியோடு பழகுவதுதான் நம் பண்பாடு!! ஒருவேளை எங்கட வீட்டில் மட்டும்தான் அப்படியோ என்று இப்பத்தான் புரியுது!! :)

'தோளில் சாயுற ஓர் ஆணின் நட்பை ஏற்றுக்கொள்ளும் ஒரு கணவன் கிடைத்தால்!!:D அதன் பிறகு பேசுவோம் :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.