Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோழனே....!!!!

Featured Replies

  • தொடங்கியவர்

சினிமா பாடல் வரிகளாஇ கொணர்கிறீங்களே. ஒரு நண்பன் இருந்தால் ஒரு நண்பன் இருந்தால் வானில் எல்லையை தொட்டுடலாம்...................... வடிவாக தெரியவில்லை. இப்படி ஒரு பாடலும் அதே சினிமாவில் தான் வருகுதே. அது எபப்டி முடிஞ்சுதாம்?

நான் சொன்னது புனிதமான அதாவது காதலற்ற நட்பை பற்றி. நண்பர்கள் காதலர்களாக மாறலாம். இதை பலர் ஏற்கின்றார்கள். ஆனால் இதை நான் என் கவியில் குறிப்பிடவில்லை. இதுவே உண்மை. நான் ஒன்றும் சாயமும் பூசவில்லை. சாணியும் பூசவில்லை. சிலரது நட்பு எப்படியோ போகலாம். ஏன் அது இடையில் கூட முறியலாம். நான் சொல்ல வந்தது தூய்மையான நட்பை பற்றியே. அது சாகும்வரை நட்பாக தான் இருக்குமே தவிர காதலாகவும் மாறாது. இல்லை இடையில் பிரிவும் ஏற்படாது. நட்பை நட்பாக புரிபவர்களுக்கே வெளிச்சம்.

  • Replies 98
  • Views 15.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சினிமா பாடல் வரிகளாஇ கொணர்கிறீங்களே. ஒரு நண்பன் இருந்தால் ஒரு நண்பன் இருந்தால் வானில் எல்லையை தொட்டுடலாம்...................... வடிவாக தெரியவில்லை. இப்படி ஒரு பாடலும் அதே சினிமாவில் தான் வருகுதே. அது எபப்டி முடிஞ்சுதாம்?

நான் சொன்னது புனிதமான அதாவது காதலற்ற நட்பை பற்றி. நண்பர்கள் காதலர்களாக மாறலாம். இதை பலர் ஏற்கின்றார்கள். ஆனால் இதை நான் என் கவியில் குறிப்பிடவில்லை. இதுவே உண்மை. நான் ஒன்றும் சாயமும் பூசவில்லை. சாணியும் பூசவில்லை. சிலரது நட்பு எப்படியோ போகலாம். ஏன் அது இடையில் கூட முறியலாம். நான் சொல்ல வந்தது தூய்மையான நட்பை பற்றியே. அது சாகும்வரை நட்பாக தான் இருக்குமே தவிர காதலாகவும் மாறாது. இல்லை இடையில் பிரிவும் ஏற்படாது. நட்பை நட்பாக புரிபவர்களுக்கே வெளிச்சம்.

வெண்ணிலா,

தப்பாகப்புரிந்து கொண்டுவிட்டீர்களே,

அந்தக்கருத்து உங்களுக்காக முன் வைக்கப்பட்டதல்ல!.

நட்பைப்பற்றித் தெரியாதவராக இருக்கலாம் என்ற ஒரு தோழரை?(!) ப் பற்றி!

எனக்கு ஒன்றுதான் புரியவில்லை, இங்கு கருத்துக்களை வைத்தால் அது திரிபுபடுத்தப்பட்டு இழை திசைமாற்றப்படுகின்றதே அன்றி யாரும் சொல்லப்பட்ட கருத்தின் தாக்கத்தினை உள்வாங்கிக்கொள்பவராகத் தெரியவில்லை.

என் சொற்கள் தங்கள் மனதினைக் காயப்படுத்தி இருந்தால் தயவு செய்து மன்னித்து விடுங்கள் வெண்ணிலா, இதற்கு மேல் நான் இந்த இழையில் எந்தவிதக் கருத்தையும் முன் வைக்க விரும்பவில்லை.

நன்றி.

  • தொடங்கியவர்

இல்லை எல்லோரும் தத்தமக்கு ஏற்ற முறையில் கருத்துக்களை முன் வைக்கிறார்கள். இதில் ஏது தப்பு என் பார்வையில் நடபை சொன்னேன். நீங்கள் உங்கள் பார்வையில் நட்பை சொல்லுறீங்க. அதற்காக மன்னிப்பு கோபம் கருத்துக்கள் எழுத மாட்டேன் என்பதெல்லாம் தேவையற்றவை. :) நான் ஏதும் உங்க மனசை நோகடிப்பது போல சொல்லியிருப்பின் மன்னிக்கவும்

  • கருத்துக்கள உறவுகள்

நட்பு என்பதிற்கு ஒவ்வொருத்தரும் தங்களது அனுபவரீதியாக விளக்கம் அளித்துள்ளார்கள் என்று நினைக்கின்றேன்.

இதில் ஒரு சிலர் மட்டும் கலாச்சாரம் என்ற வட்டத்திற்குள் சுற்றி சுற்றி வருவதை புரியக்கூடியதாக உள்ளது.

இன்றைய சூழ்நிலையில் கலாச்சாரத்தையும் இநட்பையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. அப்படிப்பார்த்தால் ஒரு ஆனும் பெண்ணும் நட்பாக இருக்கமுடியாது. தோளில் சாய்வது என்ற விடயம் நடைமுறையில் நட்பைப் பொறுத்தவரை கொஞ்சம் அதிகம் தான்.

இருப்பினும் இந்தக்கவிதையைப் பொறுத்தவரை நிலா நட்பின் ஆழத்தை விபரிப்பதிற்காகத் தான் அந்த வசனத்தை பயன்படுத்தியிருக்கலாம் என்று நான் நினைக்கின்றேன்.

தமிழ்த்தங்கையைப் பொறுத்தவரை கலாச்சாரத்திலும்இ தமிழ்ப் பண்பாட்டிலும் அதிகமாக ஊறியிருப்பதால் இந்தக் கவிதையின் சில வரிகளை ஏற்றுக்கொள்ள முடியாத மனப்பான்மையில் இருப்பதாக எனக்குத் தோன்றுகின்றது.

நான் நட்பை நட்பாகத் தான் நோக்குபவன் ஆகவே இந்தக் கவிதையில் ரசிக்கக் கூடிய விடயங்கள் நிறைய உண்டு.

நான் ஏற்கெனவே கூறியதை இங்கு ஞாபகப்படுத் விரும்புகின்றேன்.....கவிதை வரிகளில் வருபவை எல்லாம் நிஷம் என்பதுமில்லைத் தானே? இங்கு எல்லோரும் தங்களது சொந்தக் கருத்தைதானே கூறியிருக்கின்றார்கள்...இங்க? யாரும் கோபிப்பதிற்கு ஒன்றுமில்லை. விவாதம் இருந்தால் தானே கவிதையைப் படைத்வருக்கு ஊக்கமளிக்கக் கூடியதாக இருக்கும். ஒற்றுமையாக தொடர்வோம் எங்கள் கருத்துக்களை.

Edited by Valvai Mainthan

நட்பு....

ஆணுக்கும் பெண்ணுக்கும்.. தொடல்..தோள்சாயல்...

நட்பு

ஆணுக்கும் பெண்ணுக்கும்...

சுத்தமாக்..

களங்கமில்லா..

கண்ணியமான.. நட்பு....

நடக்காது..

கிடையாது..முடியாது..

யாராவது..ஆம் முடியும் எங்கள் வாழ்வில் முடிந்தது என்றால்..

உங்கள் நடிப்புக்கு என் பாராட்டுகள்..

உங்கள் கற்பனை மனது பூட்டிக்கிடக்கிறது..

உங்கள் வாய் மட்டும் நடிக்கிறது..

தோள் சாயத்துடிக்கும் நட்பு ஆதரவாய் அணைக்குமா...

அணைத்தால்.. அது தூய்மையா..

அணைத்தால் தவறில்லை என்றால் அது சரியா..

அணைக்கவில்லையா..

அவன் தடுமாறுகிறான்..

அவனுக்குள் தூய்மை இல்லை..

அவள் கோபித்தாளா அவளுக்குள் தூய்மை இல்லை..

இல்லை எங்கள் நட்பு தூய்மை தோள் சாங்ந்தோம்..

தொட்டணைத்தோம் என்று யாராவது நிரூபிக்கமுடிந்தால் நான் அதைக் கேட்க ஆவலாக இருக்கிறான்..

அதற்காக உங்களுக்கு என் செலவில் பாராட்டு விழா நடத்துகிறேன்..

சும்மா தூய்மை..அது இதுன்னு நடிக்காதீங்கோ..

இளமையான ஆட்களாம்.. தூய்மையான நட்பாம்.. தோளில சாய்வாங்களாம்.. ஆதரவா அணைப்பாங்களாம்..

ஹார்மோன் வேலை செய்யாதாம்..

என்ன கொடுமை சார் இது..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விகடகவி உண்மையை தைரியமாக எடுத்து கூறியதற்கு உங்களுக்கு ஒரு ஓ போடலாம்...முதல் தோளிலை சாயல் பிறகு எங்கை போகுமோ...யாராவது தங்கள் மனைமாரை விடுவினமோ ஒரு ஆண் மீது சாய? அல்லது எந்த மனைவி விடுவா ஆண்களை போய் சாய்ந்திட்டு வாங்க ஒரு பெண் மீது என்று....வீட்ட போக அரிவாளோடை தான் மனுசி நிற்கும்.... :lol::):(

  • கருத்துக்கள உறவுகள்

விகடகவி உண்மையை தைரியமாக எடுத்து கூறியதற்கு உங்களுக்கு ஒரு ஓ போடலாம்...முதல் தோளிலை சாயல் பிறகு எங்கை போகுமோ...யாராவது தங்கள் மனைமாரை விடுவினமோ ஒரு ஆண் மீது சாய? அல்லது எந்த மனைவி விடுவா ஆண்களை போய் சாய்ந்திட்டு வாங்க ஒரு பெண் மீது என்று....வீட்ட போக அரிவாளோடை தான் மனுசி நிற்கும்.... :lol::):(

:D

ஒரு ஆணும் பெண்ணும் சிறந்த நண்பர்களாக இருக்க முடியும் என்பது உலகின் மிகப் பெரிய பொய்களில் ஒன்று.

"ஆண் பெண் புனித நட்பு" என்பது ஒரு அழகான கற்பனை. இப்படி ஒரு நட்பு இருக்க வேண்டும் என்கின்ற ஏக்கம் பலர் மத்தியில் உண்டு.

ஆனால் உண்மையில் இது இயற்கைக்கு எதிரானது. நட்பு என்று நடிப்பவர்கள் பலர் உண்டு

காதலையும், காமத்தையும் வெளிப்படுத்த அஞ்சுபவர்கள்தான் நட்பு என்ற போர்வைக்குள் ஒளிந்து கொள்வார்கள்.

:P ம்.. விஜயலட்சுமி பண்டிட்... காந்தி அவருடன் தலையிலிருந்து கால்வரை போர்வையால் மூடியவாறு படுத்திருப்பாராம். ஏன் என்றால் காம அடக்கப் பயிற்சிக்காகவாம்... அது மகாத்மா காந்தி. நாம ஒரு ஆணீனதும் பெண்ணினதும் நட்பை புனீதம்னு சொன்னால் ஒத்துக் கொள்ளவா போறீங்க... :P

  • தொடங்கியவர்

அந்த நீண்ட பயணத்தில்

என் தோளில் நியும்

உன் மடியின் நானும்

மாறி மாறி

தூங்கிக்கொண்டு வந்தோமே

தூங்கு என்று மனசு சொன்னதும்

உடம்பும் தூங்கிவிடுகின்ற

சுகம்

நட்புக்குத்தானே

வாய்த்திருக்கின்றது.

இது அறிவுமதியின் கவிதைகளுள் ஒன்று. ஆண் பெண் எப்படி என தெரியாது. ஆனால் நான் என்கவியில் சொன்னது தோழமை பற்றி. தோழி தோழன் , தோழன் தோழி தோளில் தலை சாய்ப்பது பற்றி. ஏன் நீங்கள் ஆண் பெண் என்று பார்க்கின்றீங்க? உண்மையான நட்புக்குள் ஆண் பெண் இல்லையே. ஆண் பெண் என்ற பேதம் இல்லையேல் அங்கு தப்புக்கு இடமேது.....?

பேரூந்து

நிறுத்தத்திற்குச்

சற்றுத்தள்ளி நின்று

பேசுகின்றவர்கள்

காதலர்கள்.

நிறுத்தத்திலேயே

நின்று

பேசுகின்றவர்கள்

நண்பர்கள்.

ம்ம்ம்ம் நெடுக் அண்ணா சொன்னது போல நண்பர்கள் பார்க் பீச் பப் என ஏன் செல்லணும்? அவர்கள் நண்பர்க்ள் தானெனில் பொது இடங்களிலேயே பேசிக்கலாமே. இல்லை அப்படியே பார்க் பீச் என சென்று பேசிக்கொண்டாலும் உண்மையான நட்பு தளம்பாது. நட்போடேயெ இருப்பார்கள். இருக்கின்றார்கள் உண்மையான நண்பர்கள்.

நண்பர்கள்

என்றவர்கள்

காதலர்களாக

மாறி இருக்கின்றார்கள்

எனக்குத் தெரிய

அண்ணா தங்கை என

பழகியவர்கள் கூட

கணவன் மனைவி என

ஆகி இருக்கின்றார்கள்

ஆனாலும் சொல்கின்றேன்

உண்மையான நட்பு

என்பது

நம்மைப் போல என்றும்

நட்பாகவே இருப்பதுதான்

இதையே தான் நான் என் கவியில் நட்பாக தலை சாய சொன்னேன். நீங்கள் ஏன் பண்பாடு கலாசாரம் என்று சொல்லி வாதாடுறீங்க என தெரியவில்லை. ஓ ஒரு பெண் பருவமடைந்தால் அப்பா அண்ணாமாரிடம் விலகி நடக்கணுமா? ஏன் அவர்களுக்கு தெரியாதா இவள் என் சகோதரி என்று. இல்லை சகோதரிக்கு தான் தெரியாதா இவன் என் சகோதரன் என்று. கூச்சம் என்பது ஒருவனின் ஒருத்தியின் காம உணர்வின் போது தான் வெளிப்படணுமே தவிர எப்போதும் கூச்சம் வெளிப்படின் பெண்ணானவள் இன்றைய காலகட்டத்தில் வாழவா முடியும்? ஒருத்தி பேரூந்தில் பயணிக்கும்போது அவள் அவ்நெரிசலில் எவ்வளவு பேர் அவளை கடந்து முட்டி போகும்போது அது தொடுகை என சொல்லி கூச்சப்படலாமா?

புனிதமான தோழமைக்குள் கலாச்சாரம் பண்பாடு என சொல்லுவது தேவையற்ற ஒன்று என தெரிகின்றது.

காமத்தாலான

இப்பிரபஞ்சத்தில்

நட்பைச்

சுவாசித்தல்

அவ்வளவு

எளிதன்று

ம்ம் இதுவும் அறிவுமதியின் கவிகளுல் எனக்கு பிடித்த வரிகள். ஜம்மு சொன்னது போல புனிதமான நட்பு எவருக்கும் கிடைக்கவும் மாட்டாது. அப்படி கிடைச்சாலும் அதை எவ்வளவு புனிதமாக மதிக்கின்றனரோ தெரியாது. நட்பை என்றும் புனிதமாக வைத்திருப்போருக்கே புரியும். நட்பு அதை மரணிக்கும்வரை நட்பாக நினைப்பவனே உண்மையான நண்பர்கள். அங்கே சாதாரணமாக தோள் சாய்தலில் என்ன தப்பு? ஒரு பெண்ணுக்கு அவளின் கணவனின் பார்வையும் தொடுகையும் தான் தீண்டுதலை தரும். எல்லோராலும் அத்தூண்டுதல் கிடைக்காது.

பால் வாசனையில்

அம்மா

அக்குள்

வாசனையில்

மனைவி

இதயத்தின் வாசனையில்

நட்பு

இதுவும் அவரது கவிதை தான். ஒரு பெண் அப்பா அண்ணாமாரிடம் இருந்து தள்ளி நடக்கணும் எனில் ஒரு ஆண் வயதுக்கு வந்தால் அவனுக்கு அம்மா அம்மா இல்லையென ஆகிடுமா? அம்மாவை விட்டு தள்ளிதான் நடந்திட முடியுமா? இதே போல தான் நட்பும் திருமணாத்தின் முன் இருக்கும் தூய்மையான நட்பும் திருமணத்தின் பின்னும் தொடருமாயின் அதுதான் நட்பு. அதற்காக களங்கமேயில்லாத நட்புக்குள் திருமணத்தின் பின் கணவனோ மனைவியோ கரியைப்பூச நினைத்து உன் நட்பை நிறுத்திக்கொள் என சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளவா முடியும்? நட்பின் புனிதத்தை கணவனுக்கோ இல்லை மனைவிக்கோ உணர்த்துவதில் தான் முனைவார்களே தவிர நட்பை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அப்படி விட்டுக்கொடுத்தால் அது ஏது நட்பு?

இந்த இனிப்பை

நான் உண்கையில்

தவறி விழுந்த

ஒரு துண்டை எடுத்து

வாயில் போட்டுக்கொண்டான்

காதலன்

ஒரு துண்டை எடுத்து

குப்பைக்கூடையில் போட்டான்

நண்பன்.

இதுதான் காதலனுக்கும் நண்பனுக்கும் உள்ள இடைவெளி. நீங்கள் சொல்லும் தப்புக்கும் நட்புக்கும் பொருத்தமான இடைவெளி. நட்பு நட்பு தான். காதல் காதலோ இல்லை சாதலோ யாருக்கு தெரியும்?

தொடாமல் பேசுவது

காதலுக்கு ந்ல்லது

தொட்டுப்பேசுவது

நட்புக்கு நல்லது.

இவ்வரிகள் பிடித்திருக்கு தானே உங்கள் எல்லோருக்கும். அப்போ என் வரியில் தோழமைக்கான தோள் சாய்தல் மட்டும் ஏன் பிடிக்கவில்லை? அதற்காக உங்கள் கருத்துக்கள் எல்லாம் பிழையென சொல்லவில்லை. ஒரு தோழன் தோழி மீது தோள் சய்தல் பிழையென அது தப்பென சொல்லி புனிதமான நட்பைக் கொச்சைபப்டுத்தாதீர்கள் என சொல்ல நினைக்கின்றேன்.

காதலனோடு

பேசிக்கொண்டிருக்கையில்

தாவணியை சரி செய்தேன்

நண்பனோடு

பேசிக்கொண்டிருக்கையில்

தாவணியை சரி செய்தான்.

இதுவும் ஒருவகையில் புனிதமான தோழமையை தான் நினைவூட்டுகின்றன. புரிவோரால் புரியப்படும் என நம்புகின்றேன்.

நள்ளிரவில்

கதவு தட்டும்

ஒலி கேட்டு

வந்து திறந்தேன்

காதலனோடு

சோர்ந்த முகத்தோடு

நின்றாய்

புறப்படுகின்றேன்

அடுத்த கிழமை

பார்க்கலாம்

என்று புறப்பட்ட

காதலனுக்கு

கையசைத்தாய்

என் தோளில் சாய்ந்தபடி.

இது நட்பு. மேற் குறிப்பிட்ட கவிவரிகள் யாவும் அறிவுமதிக்கு சொந்தமானவை.

அதுசரி உங்களில் எவருக்கு "பிரியமான தோழி" படம் பிடிக்கல்லை என சொல்லுங்கோ பார்ப்போம். எல்லாத்துக்கும் மனசு தானுங்கோ. மனசை விட வேறேதும் இல்லை.

தோழனா....!!! இக்கவிதைக்கு உங்கள் பலவிதமான கண்ணோட்டங்களாலான அனுபவரீதியிலான விமர்சனங்களை முன்வைத்தமைக்கு நன்றிகள். ஒரு கவிதைக்கு குறை நிறைகளை சொன்னால்தான் எழுதுபவரை ஊக்குவிக்கும். அந்தவகையில் உங்கள் எல்லோருக்கும் என் நன்றிகள். இனியும் உங்கள் மனசில் எழும் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.

நன்றி வணக்கம்.

ஆண் பெண் எனும் வேட்டைவெறி ஒதுக்கி நட்புப்பண்பாட்டிற்கு முதன்மை தந்து வருகிற நட்பின் நூற்றாண்டே சீக்கிரமே வருக வருக................ (அறிவுமதி)

Edited by வெண்ணிலா

காந்தி அதை புலனடக்கத்திறாகத்தான் செய்தார். காந்திக்கு புலனடக்கத்திற்கான தேவை ஏற்பட்டதற்கான காரணத்தை இதில் நான் எழுத விரும்பவில்லை. எழுதினாலும் யாரும் நம்பப் போவதில்லை.

கஸ்தூரிபாயும் புலனடக்கம் என்று சொல்லி இப்படி படுத்திருந்தால், அதை காந்தி அனுமதித்திருப்பாரா? காந்தி செய்த புலனடக்க விளையாட்டை ஏன் பலர் பெருமையாக பேசுகிறார்கள் என்று தெரியவில்லை.

ஆனால் இதற்கும் நட்புக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. தேவைப்பட்டால் இது பற்றி சற்று விரிவாக பின்பு எழுதுகிறேன்.

ஆண்-பெண் நட்பு ஒரு அழகான கற்பனை என்று சொன்னேன். அது பற்றி ஏக்கமும் பலருக்கு உண்டு.

அதனால்தான் பலர் அதை கவிதை வடித்துள்ளார்கள்.

நான் சொல்வது ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு காமம் என்பது சிறிதும் இல்லை என்பது பொய்.

காமம் இருப்பதை ஏற்றுக் கொண்டு நேர்மையோடு நண்பர்களாக இருப்பதுதான் சிறந்தது.

  • தொடங்கியவர்

ஆணுக்குள்ளும் பெண்ணுக்குள்ளும் காமம் இல்லையென நான் சொல்ல வரவில்லை. புனிதமான தோழமைக்குள் காமம் இல்லையென்பது தான் என் கருத்து.

இள ஆணுக்கும் பெண்ணுக்கும் தோளில் சாயும் தோழமையில்.. தூய்மை என்பதற்கு(காமம் இல்லா) சாத்தியமே இல்லை..

இருக்கிறது என்று நீங்கள் மட்டும் சொன்னால் போதாது.. உங்கள் நண்பனும் சொல்லவேண்டும்.. அது கால வரையரைகள் தாண்டி நிரூபணமாக வேண்டும்..

நடக்கும்?..

மற்றவர்கள்தான் ஏற்றுக்கொண்டதுண்டா..

எப்போதாவது தலைமுறை தொடும்வரை நட்பு தொடர்ந்ததுண்டா..

போங்க காலையிலேயே.. இரத்தஅழுத்தம் கூடுது.. <_<

"புனிதமான" தோழமை என்றால் என்ன?

காமம் அற்ற நட்பு என்று அதற்கு விளக்கம் சொல்வீர்களாக இருந்தால், அது தவறு. ஒரு ஆணும் பெண்ணும் காமம் இல்லாது நண்பர்களாக இருக்க முடியாது. இருவரில் ஒருவருக்காகவாவது காமம் இருக்கம். அப்படி இல்லை என்று சொன்னால் அது மிகப் பெரிய பொய்.

காமம் இருப்பதை உணர்ந்து கொண்டு, அப்படி இருப்பது இயல்பானது என்பதை அங்கீகரித்துக் கொண்டு நட்பாக இருப்பதே உண்மையான நட்பு. அதுதான் புனிதமான நட்பு.

நட்பு

பார்க்கிறவன் பார்வையைப்பொறுத்து அது வேறுபடும்

நீர் எந்த பாத்திரத்தில் இட்டாலும் அந்த பாத்திரத்தின் வடிவத்தை பெறுவதுபோல்தான் நட்|பும்.......

நல்ல கவிதை

சோழியன் அங்கிளின் கருத்தே எனதும்

  • தொடங்கியவர்

ஒரு புனிதமான நட்புக்கு தோள் சாய்தல் பற்றிதான் பேசுறோம். அதைவிட்டு இயற்கை உணர்வுக்கு பூட்டு போடுதல் இதையெல்லாம் ஏன் தோழமைக்குள் கொணர்கின்றீர்கள் என புரியவில்லை.

ஓகே ஒரு வைத்தியசாலைக்கு செல்லும் போது அங்கே டாக்டர் நாடி பிடித்து பார்த்தால் அதுவும் ஓர் தொடுகை தான். அப்போ அதுகூட புனிதமற்ற தொடுகை என ஆர்ப்பரிப்பீர்களா? இல்லை கணவன் தான் டாக்டர் உன் கையைப் பிடித்தாரே என மனைவியை கொடுமைப்படுத்துவானா?

நட்புங்க இது நட்பு. நட்பு என்றால் அதுவும் புனிதமான நட்பு என்றால் என்ன என்பதற்கு சபேசன் விளக்கம் கொடுத்துள்ளாரே அதில் எவ்வளவு புனிதம் இருக்கின்றது என்பதை ஏன் பார்க்கிறீங்க இல்லை.

பரணி அண்ணா சொல்வதும் சரிதான். அதுதான் இங்கும் ஒவ்வோராலும் வைக்கப்படும் கருத்துக்களும் அவர்கள் அவர்களுக்கு ஏற்ற முறையில் வைக்கிறீங்க, ஆனால் புனிதமான நட்புக்குள் களங்கமின்றி வாழலாம்.

நல்ல கவிதை வெண்ணிலா!

எல்லாம் நாம பாக்குறபார்வையில் இருக்கு! மற்றும்படி ஏதும் தவறிருப்பது போல் தெரியவில்லை! நமது நட்பு புனிதமானது என்றால் இதெல்லாம் தெரியாது.

புனிதம்- அப்டின்னா என்ன

எவ்வளவு வலிமை அதுக்கு இருக்கு

அதோட ஆயுள் எவ்வளவு காலம்

நம்ம கலாச்சாரம் பண்பாடு தாண்டி அது வாழந்த அறிகுறி எங்கேயாவது இருக்கா..(புனிதமா)

அம்மா தன்ர பிள்ளையில அன்பை எவ்வளவு தூய்மையா வெளிப்படுத்துறா? எவ்வளவு வலிமை அதுக்கு இருக்கு? அதோட ஆயுள் எவ்வளவு காலம்? நம்மட கலாச்சாரம் பண்பாடு தாண்டி அது வாழ்ந்த அறிகுறி எங்கயாவது இருக்கா?

இதற்கு பதில் உங்களால் சரியாக சொல்ல முடிந்தால்.உங்க கேள்விக்கு பதில் தானாக் கிடைக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

விகடகவி அவர்களே!

இங்கு நட்பை இரண்டு பகுதியாக பிரித்து கருத்துக்களைப் பதிவு செய்கின்றார்கள்...

நீங்கள் சொல்வதில் உண்மைகள் இருந்தாலும், உண்மையான நட்பென்று ஒன்றில்லையா?நட்பின் உச்சத்தில் தான் காதல் உருவாகச் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. காதலின் அடுத்த நகர்வு காமம், அதை யாரும் இங்கே இல்லையென்று சொல்ல வில்லைத்தானே?

அதற்காக வெண்ணிலாவின் கவிதையின் வரிகளை முற்றாக நிராகரித்து விடமுடியுமா? உங்கள் கருத்தின் படி அப்படியான நட்பிற்கு சாத்தியக் கூறுகள் இல்லையா?

அப்போ நட்புக்கு நீங்கள் கூறும் விளக்கம் தான் என்னவோ? சற்று விளக்கமாக கூறமுடியுமா?

Edited by Valvai Mainthan

தாய் பிள்ளை பாசம் வேற...

ஒரு இளம் ஆணுக்கும் இளம் பெண்ணுக்கும் இடையேயான நட்பு வேற...

வார்த்தைகள்எல்லாமே யதார்த்தற்கு பொருந்தாது.... நான் அனுபவப்பட்டவன்.. சொல்லுறேன் அடம் பிடிக்ககூடாது

நீங்க சொல்லுற புனிதமென்று சொல்லக்கூடிய நட்பை நீங்கள் அனுபவித்தீர்களா...

அதை உங்கள் நண்பனும் நம் நட்பு புனிதம் என காட்டிக்கொண்டானா..

ஆம் என்றால்.. நீங்கள்

10வீதம் சித்தி

உங்கள் நட்புக்காலத்தில்.. உங்கள் நண்பன் இருக்க நீங்கள் யாரையாவது காதலித்து

அதன்பின் உங்கள் நட்பு தொடர்ந்ததா அப்படியானால்

20 வீதம் சித்தி

உங்கள் நண்பன் யாரையாவது காதலித்து நெருக்கமாக பழகிக்கூட உங்கள் மனதில் எதுவித உளபாதிப்புமின்றி உங்கள் நட்பு தொடர்ந்ததா

நீங்கள் 30வீதம் சித்தி

வெண்ணிலா கவிதை போல தோள் சாயும் உங்கள் தோழனை உங்கள்(அச்சம்..மடம் நாணம் .பயிர்ப்பு எல்லாம் மீறி)ஆ(இதெல்லாம் என்னென்னு கேட்டீங்கதானே..) அரவணைத்து ஆதரவு அளித்தீர்களா..

நீங்கள் 50வீதம் சித்தி

உங்கள் நட்பு பற்றி உங்கள் வீட்டிலோ உங்கள் சுற்றத்திலோ யாராவது தப்பாக பேசி..

நீங்கள் கோபம் கொள்ளாதீருந்தீர்களா..(தப்பிர

Edited by vikadakavi

  • தொடங்கியவர்

''சூட்டிடுவாய் மலர்ச்சரத்தை''

என்று சொல்லி

கொண்டுவந்தாள் தங்கை...

முடி கொஞ்சம் கலைந்திருக்கே ...?

தலை வாரி பின்னலிட்டு

மலர்ச்சரமும் வைத்துவிட்டேன்...

அழகாக இருக்கேனா..? ''அண்ணா''

அடி போடி

என்னோட தங்கையல்லா...

அழகாகத்தானிருப்பாய்....

கொடுப்புக்குள்

சிரிப்பை வைத்து

கோவிலுக்கு போய் வருவாள்...

வரும் போது

வடையோடு திரு நீறும்..

மோதகமும்.. கொண்டருவாள்

என்னோடு பகிர்ந்துண்டு-தன்

எச்சில் கையால் - எனக்கும்

ஊட்டி வைப்பாள் .....

ஏ.எல் படிக்கும் போதும்

கணக்குப் பாடம்

சொல்லித்தர - என்னைக் கேட்பாள்..

எப்படிச் சொன்னாலும்

இந்த -மர மண்டைக்கு பூராதாம்

குட்டு வைப்பேன் ....!

அழுது முடித்தபின்பு

என் தோழில் தலை சாய்வாள்...!

கல்யாணமான பின்பு

இன்று - அவளோடு

நானில்லை..

ஆனால் எங்கே கண்டாலும்

அன்று போல்தான் இன்றும்

அண்ணா என்றளைத்து

என் கையை பற்றிக் கொண்டு

தோழில் தலை சாய்வாள்.....

என் (தமிழ்) தங்கை அவள்..!

நல்ல கவி வரிகள். நன்றி கெளரிபாலன்.

தாய் பிள்ளை பாசம் வேறு. அப்போ தமிழ்த்தங்கை அப்பா அண்ணா தம்பி இவர்களிடையே கூட கூச்சம் இருக்கு என்று சொன்னா.

நீங்கள் சொல்வது போல விகடகவி எனக்கு ஒரு நண்பன் இருக்கின்றான்.

யெஸ் அவனும் நானும் தினமும் பேசுவோம். அவன் ஒரு பாடகன் ஒரு பூனூல் அணிந்த பிராமணன் கூட. இருந்தும் அவன் எம் நட்பிற்கு எவ்வளவோ புனிதமாக இருக்கின்றான். அதே போலவே நானும்.இருவரும் ஒரு அறையிலேயே இருந்து அவன் பாடிய போது நான் ரெக்கோர்ட் செய்திருக்கின்றேன். அப்போ கூட நம்ம அம்மா அப்பா யாரும் கண்டிச்சதேயில்லை. காரணம் நம் நட்பின் மீதும் நம் மீதும் அவ்வளவு நம்பிக்கை. அவனுக்கு நிச்சயார்த்தம் கூட நடந்திச்சு. அப்போ எல்லாம் என் வீட்டு நிகழ்வு போலவே நான் இருந்தேன். இன்று கூட அப்பெண் எனக்கு எஸ் எம் எஸ் பண்ணுவாள். கண்டால் கதைக்காமல் போனதே இல்லை. என் காதலன் கூட என்னோடு கதைக்கும் போதெல்லாம் என் நண்பன் என்னோடு இருந்தால் அவனோடும் கதைக்கின்றான். ஏன் சிலவேளைகளில் என்னைப் பற்றி அவனிடம் தான் கூட கேட்கின்றான்.

இதெல்லாம் ஏன் அவன் ஒரு பிராமணன் என்பது அறிந்தும் நம்ம வீட்டில் சாப்பிடணும் என அவனை அடம்பிடிச்சு மரக்கறி சாப்பாடு சாப்பிட வைச்சேன். அவனும் சாப்பிட்டான். இதுதான் நட்பு. அவன் மீது அடிக்கடி கோவப்படுவேன். அப்போ எல்லாம் அம்மா அப்பா என்னை திட்டி இருக்கின்றார்கள். ஒரு பிராமணனை திட்டாதே. உனக்கு பாவம் என்று. அவன் செய்யும் தவறுகளுக்கு தான் திட்டினேன் என சொல்லி மீண்டும் சமாதானமாகிடுவோம்.

இக்கவிக்கு வந்த பின்னூட்டங்களைக் கண்டு அவன் கேட்ட கேள்வி அடியேய் நான் உன்னோடு பழகும் போது எனக்குள் எந்த சலனமும் இல்லை. உனக்குள் எப்படிடி என்று. அவனுக்கு நான் சொன்ன ஒரே ஒரு பதில் நீ என்னை நன்கறிவாய் இப்பின்னூட்டங்களை பார்த்து ஏன் இப்படி ஒரு கேள்வி என? அவர்கள் தத்தம் பார்வையில் கருத்துக்களை பதிக்கின்றார்கள் என சொன்னேன். அவனால் தமிழ் எழுத முடியாமையால் அவனால் இக்களத்தில் இணைய முடியவில்லை. அதற்காக அவன் வருந்துகின்றான்.

இப்போது அவனுக்கு வங்கியில் வேலை கிடைத்திருப்பதால் அநேக நேரம் என்னோடு கதைக்க முடியாது விட்டாலும் மறக்காமல் குட் மோர்னிங் சொல்லி குட் நைட் சொல்வதற்கும் சாப்பிட்டியா எனக் கேட்பதற்கும் மறந்ததில்லை. இப்போ என்ன சொல்லுறீங்க?

****எல்லோரோடும் இபப்டி இருக்க முடியாது. நாங்க இருந்தாலும் நீங்க சொல்வது போல மற்றவனால் இருக்க முடியாது. ஆனால் புனிதமான நட்புக்கும் நீங்கள் இப்போ கேட்டதுக்ககாவும் தான் இதை நான் எழுதினேன் விகடகவி******

Edited by வெண்ணிலா

நீங்க இப்பதான் வெண்ணிலா... 20% சித்தி

நீங்க என்னைப்பொறுத்தவரை போட்டிக்குள்ளே நுழையவேயில்லைப் போல..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.